பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

March 20, 2010

இட்லி + நெய் + ஜீனி 20/03/2010


நான் இன்றைக்கு இத்தனை பெரிய படிப்பாளியாக (??????!!!!!!!) இருக்க நான் படித்த ஔவையார் பள்ளியும் முக்கிய காரணம் என பதிவுலகம் நன்கு அறிந்ததே. என் பள்ளி வாழ்க்கையை அங்கு தான் ஆரம்பித்தேன். இதை கேள்விப்பட்டோ என்னவோ நகராட்சி அந்த பள்ளியை மூடிவிட முடிவு செய்து ஒரு நல்ல நாள் பார்த்து மூடுவிழா நடத்தி என் மீது உள்ள கோவத்தை தீர்த்து கொண்டது. அத்தோடு விட்டார்களா நகராட்சியினர். ஒரு வாரம் முன்பாக அங்கே இருந்த நூலகத்தில் சுவாரஸ்யமாக நித்யானந்தா லீலைகள் படிச்சு கிட்டு இருந்த போது ஔவையார் பள்ளியில் ஏதோ விஷேம் மாதிரி கொடி தோரணம் எல்லாம் கட்டி பிளக்ஸ் போர்டு எல்லாம் வைத்தனர். சரி பள்ளி கூடத்தை திரும்ப திறக்க போகின்றனர் என நினைத்தால் தெருநாய்களுக்கு லுல்லா ஆபரேஷன் செய்யும் விழாவாம். வண்டி வண்டியாக நாய்களை பிடித்து வந்து குடும்ப கட்டுப்பாடு செய்துகிட்டு இருந்தாங்க. சில பேர்வீட்டு நாய்களையும் கூட்டி வந்து நசுக்கி போனார்கள். இதல்லாம் விஷயமில்லை.

இது நடந்தது காலை ஒன்பது மணி இருக்கும். அப்போது ஒட்டன்காலனியில் "மூட்டை"அடித்து விட்டு பிரசவ ஆஸ்பத்திரி மரநிழலில் படுத்து கிடந்த ஒரு மூட்டை பார்ட்டி நாய்களின் சத்தம் தாங்காமல் எழுந்து வந்து என்ன எதுன்னு விசாரிச்சுட்டு போனது. கொஞ்ச நேரம் கழிச்சு தன் மேல் துண்டால் ஒரு தெரு நாயை கட்டி தரதரன்னு இழுத்து கிட்டு வந்தது. நகராட்சி ஊழியர் பேர் என்னன்னு கேட்டதுக்கு அது சொன்ன பதில் "நித்யானந்தா".அடுத்த வேளை மூட்டை அடிக்க காசு இல்லைன்னாலும் அக்குரும்பு பாருங்க.

அங்கு இருந்த எல்லாரும் ஒரு நிமிஷம் குபீர்ன்னு சிரிக்க நான் கேட்டேன் அவனிடம் "ஏன் நித்யானந்தா மேல இத்தனை கொலவெறி?"ன்னு. அதுக்கு அவன் "என் பொண்டாட்டி கோவிச்சுகிட்டு போயிட்டா. அந்த காலிபயலுக்கு நித்தம் ஒரு நடிகை கேக்குதா? அதான் கோவமாயிடுச்சு". ஆக பாருசவேதிதா முதல் இந்த பாமர குடிகாரன் வரை நித்யானந்தா மேல பொறாமை தானே தவிர வேற ஒரு புண்ணாக்கும் இல்லை என்பதே நிதர்சனம். வாழ்க கலாச்சாரம்.

*****************

மயிலாடுதுறை காவிரி பாலத்தை இடித்து புதிதாக கட்ட போகிறார்கள். நூறு வருடம் மேல் ஆகிவிட்டது அந்த பாலம் கட்டி. ரொம்ப சிரமமமாகிவிட்டது அதை இடிக்க. இத்தனைக்கும் அந்த பாலம் நடுவே ஒரு துண்டு இரும்பு கூட இல்லை. வெறும் செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவை தான். JCB வைத்து தட்டி விடலாம் என நினைத்த பொறியாளர்கள் ஏமாந்து போய் பின்னர் வெடி வைத்து தகர்க்கும்படி ஆனது. அந்த காலத்தில் அன்பநாதபுரம் வகையறா கார்காத்தார் பிள்ளைமார்கள் கடைத்தெருவுக்கு வண்டி கட்டி வருவதற்க்காக தங்கள் சொந்த செலவில் கட்டிய பாலம் என்று பேசிகொண்டார்கள். சரி இடிச்சாச்சு? எப்போ கட்டுவாங்க? இடிக்க மட்டும் தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது இன்னும் கட்ட நிதி வரலைன்னு சொல்லாம இருந்தா சரிதான்.

*********************




நேபாலின் தலைநகரம் போபால், அமலாவை கண்டுபிடித்தவர் ராஜேந்தர் போன்ற எந்த G.K வும் படிக்காமல் நட்ராஜை அழைத்து கொண்டு அபி ஸ்கூல்க்கு போனேன். வரும் ஜூன் மாதம் திறக்க இருக்கும் பள்ளிக்கு இப்போதே அட்மிஷன். தம்பி கிட்ட சொன்னால் வீண் தகராறு வரும் எனக்கும் அவனுக்கும். அதனால் சொல்லாமல் அழைத்து போனேன். வண்டியை வெளியே நிப்பாட்டி விட்டு தம்பியை பார்த்தால் அவன் சீமாச்சு அண்ணா வீடு வரைக்கும் ஓடிகிட்டு இருந்தான்.அவனை துரத்திகிட்டு அபிஅம்மா ஓடிகிட்டு இருந்தாங்க. ரெண்டு பேரையும் நான் துரத்திகிட்டு ஓடி கடைசியாக நட்டுவை கோழி அமுக்குவது போல அமுக்கினா அவன் "அய்யோ அம்மா கொல்றாங்களே"ன்னு உச்சஸ்தாயில் கத்தி சம்பவம் நடந்த இடத்திலிருந்து ஒரு கி.மீ தூரத்தில் இருந்த அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் பல் விளக்காமல் முரசொலி படித்து கொண்டு இருந்த உடன்பிறப்புகள் "என்னது கலைஞரை திரும்பவும் அரஸ்ட் பண்னிட்டாங்களான்னு அவசரமாக டீவி பக்கம் தலை திருப்பினார்கள்.

ஒரு வழியாக ஆளுக்கு ஒரு கையை பிடித்து இழுத்து (இழுத்து தான்) வந்தா கால் இரண்டும் மண்ணில் தேய்த்து கொண்டே வந்தான். பத்தாததுக்கு கொஞ்சம் மணலில் புரண்டும் வந்தான். பிரின்சிபால் மேடம் முன்னே அவனை நிறுத்தும் போது விசயகாந்து படத்தில் வரும் பாகிஸ்தானி வில்லன் கிளைமாக்ஸ்ல வருவது போல இருந்தான். ஒத்தை காலில் ஷூவை காணும். சிரிக்க சிரிக்க பேசி என்னை ஏமாத்தி இங்க கூட்டி வந்துட்டியேடா பாவி. நான் என்ன நீ திங்கிற சோத்தில் மண்ணா அள்ளி வச்சேன் என்றெல்லாம் அவன் பாஷையில் திட்டினான்.

பின்னே அந்த பிரின்சிபால் "அடடா என்னங்க உங்களுக்கு பசங்க சைக்காலஜியே தெரியலை. என் கிட்ட விட்டுட்டு போங்க போய் அபியை பார்த்துட்டு வாங்க. இப்படியா rough handle பண்ணுவாங்கன்னு சொன்னாங்க. நானா rough handle பண்ணினேன்.நடந்த கலவரத்தில் என் சட்டையில் கூடத்தான் நாலு பட்டன் போயிடுச்சு. சேதாரம் இரண்டு பக்கமும் தான்.

*************

நான் அபி வகுப்புக்கு போன உடனே அவங்க மேடத்துக்கு ஏக சந்தோஷம்.என்னை தான் எதிர் பார்த்துகிட்டு இருந்தாங்கலாம். அபி பிசிக்ஸ் வகுப்பில் அத்தனை சிரத்தை இல்லையாம். 89 மார்க் தான் வாங்கினாலாம். கவனம் பத்தாதாம்.(என்னை விட பத்து மடங்கு அதிகமாக மார்க் அபி வாங்கியதுக்காக அவளை நான் கண்டிக்க வேண்டும் என நினைத்து கொண்டேன்) அப்படியாக ஒரு பதினைந்து நிமிடம் அபியை பத்தி புகார் படலம் படிச்சாங்க. பின்ன நான் "ஆமாம் மேடம். ஸ்டீல் விலை தினமும் தங்கம் மாதிரி ஏறிகிட்டே போகுது. சிமெண்ட் சொல்லவே வேண்டாம். மரம் விஷம் மாதிரி எகிறுதுன்னு சொல்லிகிட்டே போக மேடம் ரொம்ப குழப்பமாக "நான் என்ன பேசிகிட்டு இருக்கேன் நீங்க சிமெண்ட், கம்பின்னு உளறிகிட்டு இருக்கீங்களே"ன்னு கேட்க நான் "ஆமாம் மேடம்.வேற வேற தொழில் பார்க்கும் இரண்டு பேர் சந்திக்கும் போது அவங்க அவங்க தொழில்ல இருக்கும் சிரமங்களை பேசி மனசை தேற்றிப்பது சகஜம் தானே. நீங்க உங்க தொழில்ல இருக்கும் பிரச்சனை சொன்னீங்க நான் என் தொழில்ல இருக்கும் பிரச்சனை சொன்னேன்"ன்னு சொல்ல மேடம் "ங்கே" ஆகிட்டாங்க.அனேகமாக அடுத்த தடவை அபிக்கு பிசிக்ஸ் மார்க் பிச்சிக்கும். ஹை ஜாலி.

*****************

கொஞ்ச நேரம் கழிச்சு அந்த பிரின்சி நட்ராஜை அழைத்து வந்தாங்க. பாவம் எந்திரன் படத்துக்கு கியூவிலே நின்னு டிக்கெட் எடுத்த மாதிரி அத்தனை ஒரு பாவமா இருந்தாங்க. என்னன்னு கேட்டதுக்கு "பாவம் இந்த வயசுல குழந்தையை ஸ்கூல்ல போடனுமா? ஒரு பத்து வருஷம் பின்ன போட கூடாதா"ன்னு கேட்டாங்க. அது என்ன கணக்கு பத்து வருஷம்? ஓ அவங்களுக்கு சர்வீஸ் இன்னும் பத்து வருஷம் இருக்கும் போலருக்கு.

**************

உலக கனிமொழி மாநாடு எல்லாம் நடக்க போவுது. என் பங்குக்கு எதுனா கொளுத்தி போட்டா நல்லா இருக்குமேன்னு நினச்சுகிட்டே இருந்தேன். தமிழ் தாத்தா உ.வெ சாமிநாதய்யருக்கு சொந்த வீடுன்னு ஒன்னு இருந்துச்சு மாயவரத்திலே. இப்போ மணிகூண்டு அருகே இருக்கும் வெரைட்டிஹால் ஜவுளி கடை தான் தாத்தாவோட வீடு. ஒரு சேட் அதை வாங்கி ஜவுளி கடை நடத்தி வர்ரார். அந்த வீட்டை மாநாட்டின் ஒரு அம்சமாக அரசு வாங்கி ஒரு மணி மண்டபம் கட்டி நாலுபேர் வந்து காதலிக்கும் இடமா (சென்னை காந்தி மண்டபம் மாதிரி) ஆக்கினா சந்தோஷம். இதை நான் சொன்னதா வெளியே சொல்லிடாதீங்கப்பூ. பின்ன எல்லா சேட்டும் என்னை குண்டுகட்டா ஔவையார் ஸ்கூலுக்கு கூட்டி போயிடுவாங்க! ( அப்பாடா பத்த வச்சாச்சு. இன்னிக்கு நிம்மதியா தூங்குவேன்:-))

************

19 comments:

  1. சூப்பர்! பழைய அபி அப்பா டச் அப்படியே இருக்கு!

    ReplyDelete
  2. 100 வருஷம் ஆன பாலத்தை எப்படி இடிச்சாங்க... இதை யாருமே கண்டுக்கலையா... கொடுமையடா சாமி..

    நட்டு உங்களை ரொம்பவே பெண்டு எடுக்கின்றார் என்பதை கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு..

    அபி மார்க் குறைந்ததற்கு காரணம் நீங்கதானா? ஊருக்கு வரும்போது மண்டகபடி இருக்குங்க..

    ReplyDelete
  3. இனிமே ஸ்கூல் ச்சும்மா அதிரும்ல
    :)))))))))

    ReplyDelete
  4. நட்ட ஸ்கூல்ல சேத்தாச்சா?
    :)

    ReplyDelete
  5. ஹா.. ஹா.. ஹா..

    அண்ணே... அமர்க்களமான நகைச்சுவை..!

    எங்கண்ணே ரொம்ப நாளா ஆளையே காணோம்..?

    நீங்களும் நட்டுகூட அதே ஸ்கூல்ல சேர்ந்து மறுபடியும் மொதல்ல இருந்து படிக்க ஆரம்பிச்சீங்கன்னா நல்லாயிருக்கும்ணே..!

    டெய்லி இது மாதிரி நிறைய பதிவு எங்களுக்குக் கிடைக்கும்ணே..!!!

    ReplyDelete
  6. ஒளவையார் பள்ளி மூடிய சம்பவம் தொடர்ந்து அது நூலகமாக மாற்றபடும் என்ற எதிர்பார்ப்பு அதையும் சுத்தமாய் இப்படி ஆக்கிவிட்டார்களா? :(

    ReplyDelete
  7. //பாருசவேதிதா முதல் இந்த பாமர குடிகாரன் வரை நித்யானந்தா மேல பொறாமை தானே தவிர வேற ஒரு புண்ணாக்கும் இல்லை என்பதே நிதர்சனம்//
    நித்தியானந்தா கதை படிச்சிங்களா?
    http://nizampakkam.blogspot.com/2010/03/57niththiyaananthaa.html

    //இடிக்க மட்டும் தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது இன்னும் கட்ட நிதி வரலைன்னு சொல்லாம இருந்தா சரிதான்.//
    இப்படியெல்லாம் நீங்களே அவிய்ங்களுக்கு நீங்களே ஐடியா கொடுக்கலாமா?

    //நான் என்ன நீ திங்கிற சோத்தில் மண்ணா அள்ளி வச்சேன் என்றெல்லாம் அவன் பாஷையில் திட்டினான்.//
    வளமான எதிர்காலத்திற்கு நல்ல அறிகுறி தெரிகிறது.

    // நீங்க உங்க தொழில்ல இருக்கும் பிரச்சனை சொன்னீங்க நான் என் தொழில்ல இருக்கும் பிரச்சனை சொன்னேன்//
    ஆகா ரெண்டு பேருமே குண்டப்பா மண்டப்பாதான்!

    ReplyDelete
  8. //அது என்ன கணக்கு பத்து வருஷம்? ஓ அவங்களுக்கு சர்வீஸ் இன்னும் பத்து வருஷம் இருக்கும் போலருக்கு.//

    மேடம் அவ்வளவு வயசானவங்களா?

    ReplyDelete
  9. //வெரைட்டிஹால் ஜவுளி கடை தான் தாத்தாவோட வீடு. ஒரு சேட் அதை வாங்கி ஜவுளி கடை நடத்தி வர்ரார்//

    அந்த வீட்டின் (கடையின்)ஃபோட்டோ போடுங்க, தல.
    சீக்கிரமே அந்த கடை ஓனர் உங்க வீட்டுக்கு வருவார்.

    //உலக கனிமொழி மாநாடு எல்லாம் நடக்க போவுது//

    'கனிமொழி'ன்னு யாரோ தப்பா சொல்லியிருக்காய்ங்க.
    அது 'தமிழ் (செம்)மொழி.'

    ReplyDelete
  10. இன்னிக்கு இட்லி நெய் சீனி சுப்பர்ப் அபி அப்பா

    ReplyDelete
  11. Nattuvukku admission okvaa? Paavam LKG teacher. My best wishes to Nattu & his teacher. Yaanai kulipathu ponra ulaga nadappukalai padithukkondirunda Nattuvukku ippa yedhukku avasarama school?
    Shobha

    ReplyDelete
  12. :))))))))))))) ப்ரின்ஸி பாவம் அபிஅப்பா :)

    ReplyDelete
  13. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    //நீங்களும் நட்டுகூட அதே ஸ்கூல்ல சேர்ந்து மறுபடியும் மொதல்ல இருந்து படிக்க ஆரம்பிச்சீங்கன்னா நல்லாயிருக்கும்ணே..!

    டெய்லி இது மாதிரி நிறைய பதிவு எங்களுக்குக் கிடைக்கும்ணே..!!!//

    அதே:))!

    நட்டுவுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. Nice information( palam idippu , jananayaga karuthy ) + comic ( nithyanandha matter)+tragedy( nattu va school poga sonnathukaga)+ sentiment( abikku mark koranjathu) + action ( sandaila kiliyatha satta yethu) = so over all very good movie ( padadhuku thalaippum top :)

    ReplyDelete
  15. Nice information ( samudhya kadamai unarchi about palam) + Comedy ( nithyanandha matter ) + tragedy ( Nattuva school poga soldrathu ) + comedy ( Sandaila kiliyatha sattai irruka) + sentiment ( Abikku mark koranjathu ) = So mothathil unga blog top :)

    ReplyDelete
  16. :)))

    நட்டு கலக்கறான்.. :)

    ReplyDelete
  17. Enna anna romba naala aala kaanum... Namma ooru police station la complaint kudukalamnu irundan.... Late ah vandalum latest ah vandhu irukinga... Nalla padhivu... Idha padichutu irukum pothu ellorum enna oru madri pathanga... Avlo siripu...

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))