பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

April 19, 2010

சூடான இட்லி+ நெய்+ ஜீனி 20/04/2010

குட்டி குழைத்து நாய் தலையிலே வைப்பது என்பது இது தான். கொச்சிக்கு ஒரு டீம் வேண்டும் என ஆசைப்படுவது தப்பே இல்லை. அது கிடைச்ச அன்னிக்கே ஸ்ரீசாந்து கொச்சன் பஞ்சாப் டீமில் ஆடிகிட்டு இருந்தவன் "ச்சேட்டன் சசியேட்டனுக்கு நன்னி நன்னி"ன்னு கூவியிருந்திருக்க வேண்டாம். அது தவிர "ஞான் அடுத்த பிராயஷம் எங்க கொச்சி டீமுக்காகத்தான் டான்ஸ் ஆடுவேனாக்கும். ஈ தள்ளிபுளி டீமுக்கு ஆடமாட்டேன்"ன்னு ஸ்டேட்மெண்ட் விட்டது தான் ஜூப்பரு.

போன தடவை பாஜி விட்ட அறையை நினைச்சா எனக்கே இப்பவும் வலிக்குது. சொரனை கெட்ட ஸ்ரீசாந்து குட்டனுக்கு ஓர்மையில்லை. ஏற்கனவே ட்விட்டர், ஃபேஸ்புக், பிளாக்குன்னு சசிதரூர் நாத்தம் தாங்கலை. போதாகுறைக்கு சீனியர் மினிஸ்டர் எஸ்.எம். கிருஷ்ணா எல்லாம் "வாயை வச்சிகிட்டு ஒழுங்கா இருடா கம்முனாட்டி. உனக்கு M.K. நாராயணன் மாமாவா இருந்தா எனக்கு என்ன! மூஞ்சிய பேத்துடுவேன்"ன்னு செல்லமா சொல்லி பார்த்தும் கேட்டானா அந்த மைனர் மங்குனிபாண்டி! அதான் இன்னிக்கு பிரதமர் "கொஞ்சம் பின்னால திரும்பு"ன்னு சொல்லி உதைச்சு அனுப்பினார்.


****************





மயிலாடுதுறை பாலம் இடிச்சதை எழுதின உடனே சீமாச்சு அண்ணன் போன் செஞ்சு "அய்யய்யோ நான் அங்க வந்தா எப்படி நம்ம ஸ்கூலுக்கு போவேன்"ன்னு உணர்ச்சி வசப்பட நானு கொஞ்சம் ஆடித்தான் போயிட்டேன். அவர் அதிர்சி அடைந்ததுக்கு கான்கிரீட் காரணம் இருக்கு.

வரும் வெள்ளிகிழமை மயிலாடுதுறை - சென்னை ரயில் நிப்பாட்டிட்டு வெள்ளியோட வெள்ளி எட்டு நாளைக்குள்ளே அகலமா ரயில் விடுவோம்ன்னு சொல்லி அது ஆச்சு 236 வெள்ளி ஆச்சு. எந்த அதிகாரிகிட்டயாவது ரயில் என்னாச்சுன்னு கேட்டா கட்டை விரலை ஒரு மாதிரியா வச்சு காமிக்கிறாங்க. ஆனா பாலம் விஷயம் அப்படி இல்லை போலிருக்கு. போட்டோ பாருங்க. வேலை நடக்குது. சந்தோஷம்.


*******************



பதிவர் மாயவரத்தான் இந்த போஸ்ட்டரை பார்த்து நாக்கை பிடுங்கிகிட்டா அதுக்கு நீடூர் நிஜாமுதீன் மீது சத்தியமாக நான் காரணம் இல்லை . போஸ்டர் கிடக்கட்டும். ஒரு சிட்டிசன் அதுக்கு கீழே "அப்ப நான் என்ன குறிஞ்சிப்பாடியா?"ன்னு எழுதியிருந்ததை பார்த்து குபீர்ன்னு சிரித்துவிட்டேன். ஓடிப்போய் கேமிரா எடுத்து வரலாம் என நினைத்த போது "மயிலாடுதுறை பேருந்து நிலையத்துக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை"ன்னு ஒரு கம்யூனிஸ்ட் தோழர் அதன் மேல் ஒட்டி போஸ்டர் ஒட்டி விட்டார். நான் என்ன செய்ய? அதான் இருந்த ஒரு போஸ்ட்டரை எடுத்தேன். பார்த்து மகிழ்க!

****************

குமுதம் ரிப்போர்ட்டரில் சாரு எழுதும் நித்யானந்தா தொடரில் "நான் ராகசுதாவை மிரட்டினேன் அது பற்றி பிறகு சொல்கிறேன்" "நித்யானந்தா ஒரு திருநங்கை அதை பிறகு சொல்கிறேன்" " நித்யானந்தா ஒரு காம பிசாசு அதை பற்றி பிறகு சொல்கிறேன்" " நான் கேரளாவில் லாடுலபக்கு தாஸ் அது பற்றி பிறகு சொல்கிறேன்" என ஒரு கட்டுரைக்கு குறைந்த பட்சம் நான்கு "பிறகு சொல்கிறேன்"ன்னு சொல்கிறார். அநேகமாக 500 வாரம் வரும் போல இருக்கு. அதுக்குள்ள வேற சாமியார் வந்து சூப்பர் குத்தாட்டம் போட்டு சாருவின் போஜனத்துக்கு வேட்டு வைத்து விட போகிறார். எனக்கு ஒரு சந்தேகம். யோவ் இத்தனை வாரம் அவனை பத்தி எழுத செய்தி வச்சிருக்கியே! அதல்லாம் அவன் மாட்டின பின்ன தான் எழுதனும்ன்னு தோனுச்சா? மனசாட்சி இல்லாத எழுத்தாளன் நீ!

*************

மயிலாடுதுறையின் அடுத்த சட்டமன்ற உறுப்பினர் இவர் தான் என நான் எழுதிய பதிவுக்கு வந்த ஒரு பின்னூட்டத்தில் தற்போதைய எம்.பி ஓ.எஸ்.மணியன் பத்தி ஒருத்தர் கேட்டிருந்தார். நான் என்னத்த சொல்ல? அவர் தன் சொந்த கட்சிகாரர்களிடம் அடிவாங்குவதாக இருந்தாலும் வேதாரண்யத்தில் போய் தான் அடி வாங்குகிறார். அந்த பாக்கியத்தை கூட மயிலாடுதுறைக்கு கொடுப்பதில்லை என்பதை வருத்தமுடன் பதிவு செய்கிறேன்.

************

ஏப்ரல் 2ம் தேதி கொல்லுமாங்குடியில் வெற்றிகொண்டான் மீட்டிங். நண்பன் வரத.கோ.ஆனந் கூப்பிட்டதுக்காக போனேன். அவர் மீட்டிங்ல பேசினது ஒரு மணி நேரம் தான் எனினும், தனியாக பேசி கொண்டிருந்த போது எனக்கு சிரித்து சிரித்து வயிறு வலித்தது ஒரு மறக்க முடியாத அனுபவம்.

"காங்கிரஸ் பசங்க எல்லாரும் நல்ல பசங்க தான். இந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோ தம்பி தான் எதுனா உளறிகிட்டே இருக்கும். பாவம் அதும் ஜெயிச்சிருந்தா வாயை மூடிகிட்டு இருந்திருக்கும். அரசியல் பண்ணனுமா இல்லையா? அதான் ராகுல் தம்பி வரும் போதெல்லாம் "காங்கிரஸ் தனியா நிக்கினும் தனியா நிக்கினும்"ன்னு சொல்லிகிட்டு இருந்துச்சு. சரின்னு அந்த தம்பியும் தனியா நிக்க சொல்லி தேர்தலும் வந்துச்சு. நாம அதில இத்தனை இடம் வேணும்ன்னு கேட்கவும் இல்லை. அவங்களும் தரலை. பிரசாரத்துக்கும் நாம போகலை. அத்தனை ஏன் ஓட்டு போட கூட நாம போகலை. இதான் கூட்டனி தர்மம்" ன்னு அவர் சொல்லி கொண்டே போக எல்லாருக்கும் திகைப்பு. மேலும் அவர் " அட ஆமாய்யா. இளைஞர் காங்கிரஸ் தேர்தல் தானய்யா சொல்றேன்"ன்னு சொன்ன போது அந்த இடத்தில் வெடிச்சிரிப்பு. பாருங்க இத்தனை நாள் இதை நான் யார் கிட்டயும் சொல்லலை ஆனா ஆனந்த விகடன்ல நானே கேள்வி நானே பதில் பகுதியிலே யாரோ எழுதி பெயர் வாங்கிட்டு போயிட்டாங்க!

**********************

என்னது இந்த இட்லி நெய் சூடாக இருக்கின்றது??

தம்பி நட்டு சோபாவில் உட்காந்து ஏதோ சாப்பிட்டு கொண்டு இருந்தான். வழக்கம் போல நானும் அபியும் சோபாவின் கீழே உட்காந்து டீ வி பார்த்து கொண்டிருந்தோம். அவன் கால் நல்ல வாகாக அபியின் முகத்துக்கு இருந்தது. சும்மா ஜாலியா ஒரு உதை விட்டான். நிலைகுலைந்து கீழே விழுந்த அபி செம கோவத்துடன் அவனை அடிக்க கை ஓங்க அன்று காலையில் தான் பாத்ரூமில் விழுந்து தம்பி நெற்றி அடிபட்டு ரத்தம் வந்து மருந்து போட்டிருந்த காரணத்தால் அவனை அடிக்க மனம் வராமல் கோவித்து கொண்டு ரூம் போய் கதவை சாத்தி கொண்டாள்.
நடந்த சம்பவத்துக்கான முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நான் அமைதியாக இருக்க நம்ம அக்கியூஸ்ட் கொஞ்சம் பயந்து போய் எப்படியும் அம்மாவிடம் அடி விழும் என நினைத்து அவனே ஒரு பொய் அழுகை அழுது அவன் அம்மாவிடம் கிச்சனுக்கு போய் "அம்மா என் (உள்ளங்)கால்ல அக்கா மூஞ்சிய வச்சு இடிச்சுட்டா"ன்னு அழ அது சரியா புரியாத அபிஅம்மா "அடடா தங்கம், இனிமே எங்கயும் இடிச்சுக்காதடீ இரு மருந்து போடுறேன்"ன்னு சொல்லி காலில் மருந்து தடவ எனக்கு ஏமாற்றமாக போய் விட்டது. சின்ன அக்காவை உதைத்து எத்தனை தடவை அம்மாகிட்ட அடி வாங்கியிருப்பேன். இப்படியும் மாத்தி சொல்லலாமோ???

****************

16 comments:

  1. அடடே! இன்னும் அரசியல் எதுறியளே அபிஅப்பா!

    வெ(ற்)றி கொண்டான் வரும் போது ஏன் தனியே பேசிக்கொண்டுருந்தீர்கள்!?

    அடிக்கடி எழுதுங்க அபி அப்பா!

    ReplyDelete
  2. //அம்மா என் (உள்ளங்)கால்ல அக்கா மூஞ்சிய வச்சு இடிச்சுட்டா"//

    lol ;)))))))))))))

    பாலம் ஆரம்ப வேலைகள் ஜரூராத்தான் இருக்கும் நல்லபடியா முடிஞ்சா புது பாலத்து மேல ஏறி வள்ளலாரை தரிசிக்க வரணும்ன்னு வேண்டிகிடுங்க :) சீக்கிரம் ஆகட்டும் !

    ReplyDelete
  3. ஆயில்யா நன்னி!!! வாப்பா வா! பலிக்கட்டும்!!!

    ReplyDelete
  4. இஃகி இஃகி இஃகி! ஜோதிபாரதி!

    உங்க பின்னூட்டத்தை பார்க்கும் யாராவது நான் ஏதோ தோற்ற கட்சின்னு நினைச்சுக்க போறாங்க!

    அரசியல் என் ரத்தம்!அதிலும் திமுக என் உயிர்! இதை எங்க வேண்டுமானாலும் சொல்வேன்.

    ReplyDelete
  5. Appo ozhunga paalam katti muduchuduvanganu solluringala? Pappom...

    ReplyDelete
  6. ////அம்மா என் (உள்ளங்)கால்ல அக்கா மூஞ்சிய வச்சு இடிச்சுட்டா"//

    அட! இப்படியும் சொல்லலாமோ? ரொம்பத்தான் மாத்தி யோசிச்சிருக்கான். ‘முள்ளு வந்து என் கால்ல குத்திடுச்சு’ன்ன மாதிரி.

    ReplyDelete
  7. //அம்மா என் (உள்ளங்)கால்ல அக்கா மூஞ்சிய வச்சு இடிச்சுட்டா"//

    வாரிசு!!

    ReplyDelete
  8. என்னதான் நெறையாப் பல்பு வாங்கினாலும் நீர் கொஞ்சூண்டு புத்திசாலின்னு நினைச்சேன்.

    //மனசாட்சி இல்லாத எழுத்தாளன் நீ!//

    சுத்தம் இதத் தெரிஞ்சுக்க இம்மாம் நாளாச்சாவே?.

    ReplyDelete
  9. //சின்ன அக்காவை உதைத்து எத்தனை தடவை அம்மாகிட்ட அடி வாங்கியிருப்பேன்//

    நல்லாவே தெரியுதுங்கோ, எத்தனை தடவைன்னு
    கணக்கில்லாமல் உதைத்து, அந்த வழக்கில்
    அம்மாகிட்ட அடி வாங்கினீங்கள் என்று
    உங்க வாயாலயே ஒப்புதல் வாக்குமூலம்
    கொடுத்திட்டீங்கள்.
    இதெல்லாம் பாவமில்லையா?
    உங்க அக்கா பாவமில்லையா?
    மனசாட்சி இல்லாத எழுத்தாளன் (பிளாகர்)
    நீர்! அவமானம்?
    (மயிலாடுதுறையில் வெய்யில் நல்லா
    ஜில்லுனு இருக்கா?)

    ReplyDelete
  10. //பதிவர் மாயவரத்தான் இந்த போஸ்ட்டரை பார்த்து நாக்கை பிடுங்கிகிட்டா அதுக்கு நீடூர் நிஜாமுதீன் மீது சத்தியமாக நான் காரணம் இல்லை . //

    மாயவரத்தானும் நீங்களும் சேர்ந்து 'என்' தலையை
    ஏன் உருட்டுறீங்கனு தெரியலையே!? (ஏதேனும்
    உள்குத்து???)

    ReplyDelete
  11. //அநேகமாக 500 வாரம் வரும் போல இருக்கு. //

    அவ்வளவு சீக்கிரமா முடிஞ்சிடுமா?!?!

    ReplyDelete
  12. //அரசியல் என் ரத்தம்!அதிலும் திமுக என் உயிர்! இதை எங்க வேண்டுமானாலும் சொல்வேன்//

    உடனே ஐஸ்லாந்துக்கு டிக்கெட் புக் செய்யவும்.
    அங்கு சென்று எரிமலையின் உச்சியில் நின்று,
    சொல்லிவிட்டு வரவும். (சீரியஸ்)

    ReplyDelete
  13. //உடனே ஐஸ்லாந்துக்கு டிக்கெட் புக் செய்யவும்.
    அங்கு சென்று எரிமலையின் உச்சியில் நின்று,
    சொல்லிவிட்டு வரவும். (சீரியஸ்)//

    நிஜாமுத்தீன்.. அபிஅப்பா மாதிரி கழகக் கண்மணிகளைக் கிளப்பி விடாதீங்க. நெஜம்மாலுமே கெளம்பினாலும் கெளம்பிடுவாங்க..

    அங்கே போயி அந்த எரிமலைக்கு கலைஞர் பெயரோ அல்லது அஞ்சா நெஞ்சர் பெயரோ வெக்கச் சொல்லிக் கடிதம் எழுதினாலும் எழுதிடுவாங்க.

    ஜாக்கிரதை :)

    ReplyDelete
  14. //ஆனா பாலம் விஷயம் அப்படி இல்லை போலிருக்கு. போட்டோ பாருங்க. வேலை நடக்குது. சந்தோஷம்...
    //

    அபிஅப்பா, அக்டோபர் மாசம் நான் வரும் போது திறப்பு விழா வெச்சிருவமா?

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))