பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

April 12, 2010

வேர் ஈஸ் த பார்ட்டி! அட எங்கூட்டுல பார்ட்டி!!!

இது முழுக்க முழுக்க நட்ராஜ் அப்டேட்ஸ் தான்



சிம்பு பாட்டுன்னா ரொம்ப ஆசை. உடனே டான்ஸ் தான். அதிலும் வேர் ஈஸ் த பார்ட்டி, நலந்தானா எல்லாம் டி வியிலே போட்டா செம டான்ஸ் தான். அபிக்கு பத்தாம் தேதி முதல் கோடை விடுமுறை ஆரம்பித்த அன்று வேர் ஈஸ் த பார்ட்டிக்கு அதே காஸ்ட்டியூம்ல கலக்கினான்.
****************


"அப்பா ஒரு கதை சொல்லு"

அவன் வழக்கம் போல என்னை கதை சொல்ல சொல்லி பின்னே அவன் சொல்லி அதிலேயே நான் தூங்கி போவதும் அவன் ஓடி போய் பாத்டப்பில் தண்ணீர் பிடித்து தொம் தொம்ன்னு விழுந்து அவன் அம்மாவிடம் தொம் தொம்ன்னு அடி வாங்கி தூங்குவதும் வழக்கம் தான்.

"அப்பா ஒரு கதை சொல்லு"

"ஒரு ஊர்ல நட்ராஜ்ன்னு ஒரு பையனாம்"

"மாயவரமா?"

"ஆமாம். அவன் யூனிபாஃர்ம் எல்லாம் போட்டு கிட்டு ஸ்கூல் போனானாம்"

"அய்யே ஆய் கதை. அது வேனாம்.நல்ல கதை சொல்லு"

"சரி ஒரு ஊர்ல ஒரு ஸ்கூலாம்"

"அப்பா அசிங்க அசிங்கமா பேசாதே. உனக்கு கதையே தெரியலை. நான் சொல்லட்டுமா?"

"சொல்லு"

"ஒரு ஊர்ல அவயாம்பான்னு ஒரு யானையாம்"

"மாயவரமா?"

"ஆமா. நம்ம அவயாம்பா யானை தான். அது நேத்து வீட்டுக்கு வந்துச்சுப்பா. நம்ம அப்பா எங்கன்னு கேட்டுச்சு"

அதுக்கும் நான் தான் அப்பாவா? அடராமா!

"நீ என்ன சொன்ன?"

"அப்பா தூங்குறாங்க அப்புறமா வான்னு சொன்னேன். அது கேக்கலை. கேட்டை திறந்து கிட்டு வந்துச்சு. நான் அது வாலை பிடிச்சு சொய்ங் சொய்ங்ன்னு சுத்தி மாடிக்கு தூக்கிகிட்டு வந்து மாடில இருந்து கிரவுண்டுல தூக்கி போட்டேன். அது தொபக்கடீன்னு விழுந்துச்சு. அப்புறமா நின்னு அழுதுகிட்டே இருந்துச்சு. நான் போய் ஒரு உதை டமால்ன்னு. அது குடுத்தேன். அது அழுதுகிட்டே ஓடிடுச்சு"

அபிஅம்மாவுக்கு சரியான கோவம். "என்ன ஒரு கற்பனை. பிளாக் ஆரம்பிச்சு குடுங்க. அபிதம்பின்னு பேர்ல எழுதட்டும். தமிழ்மணம் தழைச்சு வளரும்"ன்னு கடுப்படிச்சுட்டு தூங்கினாங்க. பொறாமை!

*************

எல்லா அப்பா அம்மாவும் எல்லா பிள்ளைகளிடமும் கேட்கும் அந்த கேள்வியை நான் ஏண்டா நட்ராஜிடம் கேட்டோம் என ஆகிவிட்டது.

"தம்பி பின்னால எனக்கு சோறு போடுவியா?"

"மாட்டேன்"

"ஏண்டா?"

"வாயில தான் போடுவேன்"

எனக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்.

****************



என் வீட்டுக்கு எதிரே கிரவுண்ட். எல்லா பள்ளியும் கோடை விடுமுறை விட்டாச்சு. கிரவுண்டு முழுக்க வானரம் ஆயிரம். அதிலே நட்ராஜ் ஆயிரத்தில் ஒருவன். ஐந்து நிமிடம் கூட வெய்யிலை வேஸ்ட் பண்ணுவதில்லை. கிரிக்கெட் பிட்ச் மூணு போட்டுட்டானுங்க. காலை ஆறு மணிக்கு ஆரம்பமாகும் விளையாட்டு இரவு ஏழு வரை தொடர்ந்து ஆட்டம் தான்.

நேற்று மாலை 5 மணிக்கு ஒரே சத்தம். பசங்க அடிச்சிகிறாங்க போலருக்குன்னு ஓடி பார்த்தேன். திக்குன்னு ஆச்சு. ஒரு 5 அடி நீள பாம்பு. நல்ல பாம்பு. அதல்லாம் எப்போதும் அந்த கிரவுண்டுக்கு பின்புறம் உள்ள வயலிலிருந்து கிரவுண்டு வழியா வந்து என் வீட்டுக்கு பின் பக்கம் உள்ள அதன் அத்தை மாமா வீட்டுக்கு வந்து குசலம் விசாரிப்பதும், நம்ம பக்கம் உள்ள பாம்புகள் "பையா" படம் பார்த்தியா? தமண்ணா எப்படின்னு கேட்க அந்த பக்கம் போய் வருவதும் சகஜம் தான். ஆனா பசங்க விளையாடும் போதெல்லாம் வரமாட்டாங்க. இது ஏதோ விருந்தாளி பாம்பு போல இருக்கு. பழக்க வழக்கம் பத்தலை. பசங்க விளையாடும் போது தைரியமா பிட்ச் வழியா வர இந்த பசங்க அதை அடித்தும் கொல்லாமல் விரட்டியும் விடாம அதை பப்பூன் ரேஞ்சுக்கு வாலை பிடித்து சுழட்ட அது குவாட்டர் அடிச்ச கோயிந்தன் மாதிரி ஆகிடுச்சு.


அதல்லாம் எனக்கு பிரச்சனையே இல்லை. அந்த வானர கூட்டத்தில் நட்டு பண்ணின அடம் தான் எனக்கு வயித்தில் புளி கரைத்தது. அவனும் தூக்கி தட்டாமாலை சுத்தனும்ன்னு அடம். பாம்பு போடும் முன்னே அபிஅம்மா அவனை முதுகில் ரெண்டு போட்டு தூக்கி வந்தாங்க. எனக்கு தான் கால் நடுக்கம் நிற்க அரை மணி ஆகியது.


********************

வீட்டில் மர வேலை செய்யும் போது தம்பியை மிரட்ட ஒரு அழகான தேக்கு மர குச்சி நல்ல இழைத்து வாங்கி வைத்து கொண்டேன். அதை காட்டி மிரட்டலாமென நினைத்து. ஏண்டா அப்படி ஒரு குச்சி செய்தோம் என ஆகிவிட்டது எனக்கு.


அவன் எதுக்காவது அழுது அடம்பிடித்தால் "என்னங்க அந்த குச்சியை எடுத்து மிரட்டுங்க அப்ப தான் சிரிப்பான்" என அபிஅம்மா சொல்லும்போது எனக்கு தான் அழுகை வருகின்றது. "நீங்க அதை எடுத்து மிரட்டும் போது எனக்கே சிரிப்பு சிரிப்பா வருது"ன்னு அவங்க சொல்லும் போது எனக்கு பத்திகிட்டு வருது. நான் அந்த குச்சியை எடுத்தாலே ஒட்டுமொத்த குடும்பமும் கெக்கெபிக்கேங்குது. என்னை பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்குதாம். அடுத்த ஜென்மத்திலாவது விருமாண்டி மீசையோட பிறக்கனும்.

*********************

இப்போதெல்லாம் தமிழ் வார்த்தைகள் எதுவாக இருந்தாலும் தனி தனியாக ஸ்பெல்லிங் (தப்பாகத்தான்) சொல்லி தானே பழக்குகிறான். அம்மா என்றால் அ, மா அம்மா, அப்பா என்றால் அ, பா அப்பா, சாப்பாடு என்றால் சா, பா, டு என்று தானே சொல்லி பார்த்துப்பான். அதிலும் லேட்டஸ்ட் ட்ரண்ட் word jumping தான்.

உண்மை தமிழன்ன்னு சொல்லுன்னு சொன்னா தன்மை உமிழன்னு சொல்றான். குசும்பன் சரவணன்ன்னு சொல்ல சொன்னா சசும்பன் குரவணன் என்கிறான். தொல்காப்பியன் என சொல்ல சொன்னால் கால் தொப்பியன் என்கிறான். நல்ல வேளை இன்னும் ஆத்தி சூடி சொல்லி கொடுக்கவில்லை.
****************

17 comments:

  1. //நான் அது வாலை பிடிச்சு சொய்ங் சொய்ங்ன்னு சுத்தி மாடிக்கு தூக்கிகிட்டு வந்து மாடில இருந்து கிரவுண்டுல தூக்கி போட்டேன்///

    பயகுட்டி இப்பவே இம்புட்டு பில்ட்-அப்போடத்தான் பேசுதா? ரைட்டு :)

    ReplyDelete
  2. //"என்னங்க அந்த குச்சியை எடுத்து மிரட்டுங்க அப்ப தான் சிரிப்பான்" என அபிஅம்மா சொல்லும்போது எனக்கு தான் அழுகை வருகின்றது.//


    :)))))))))))))))

    ReplyDelete
  3. “அபி தம்பி” ஆகா. ப்ளாக் ஆரம்பிச்சுக் கொடுத்திடுங்க சீக்கிரமா:)!!

    ReplyDelete
  4. //உண்மை தமிழன்ன்னு சொல்லுன்னு சொன்னா தன்மை உமிழன்னு சொல்றான். குசும்பன் சரவணன்ன்னு சொல்ல சொன்னா சசும்பன் குரவணன் என்கிறான். தொல்காப்பியன் என சொல்ல சொன்னால் கால் தொப்பியன் என்கிறான். நல்ல வேளை இன்னும் ஆத்தி சூடி சொல்லி கொடுக்கவில்லை.//

    //எல்லா அப்பா அம்மாவும் எல்லா பிள்ளைகளிடமும் கேட்கும் அந்த கேள்வியை நான் ஏண்டா நட்ராஜிடம் கேட்டோம் என ஆகிவிட்டது.

    "தம்பி பின்னால எனக்கு சோறு போடுவியா?"

    "மாட்டேன்"

    "ஏண்டா?"

    "வாயில தான் போடுவேன்"

    எனக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்.//இந்த பதிவு முழுக்க படித்து சிரிச்சு மாளலை...இன்னும் சிரித்துக்கிட்டேதான் இருக்கேன்...

    ReplyDelete
  5. ஐயோ முருகா..!

    பாவம் அபியம்மா..!

    வீடல ஒரு கெரகம் இருந்தாலே சமாளிக்கிறது கஷ்டம்.. இதுல இந்தக் குட்டி வேறய்யா..!

    ரொம்பக் கஷ்டமப்பா..!

    ReplyDelete
  6. மொத ரெண்டுபோட்டோவுக்காவே சுத்தி போடணுங்க...

    ReplyDelete
  7. என்ன தொல்ஸ் துபாய் வர ஐடியா இல்லையா ?
    எப்பொழுதும் அன்புடன்
    லியோ

    ReplyDelete
  8. \\"வாயில தான் போடுவேன்"\\\\\

    குட் குட் ஐ லைக் ட் ;))

    ReplyDelete
  9. ஜாடிக்கேத்த மூடி
    அப்பனுக்குத் தப்பாத பிள்ளை
    ம்..ம்..இன்னும் என்னத்தச்சொல்ல
    ஆனாலும் உங்காளு உங்களை விட தைரியசாலிதான்
    கொடுத்து வைத்தவரையா நீர்.
    வாழ்த்துக்கள்.
    அன்புடன்
    சந்துரு

    ReplyDelete
  10. //"என்னங்க அந்த குச்சியை எடுத்து மிரட்டுங்க அப்ப தான் சிரிப்பான்" என அபிஅம்மா சொல்லும்போது எனக்கு தான் அழுகை வருகின்றது.//


    )))))))))))))

    +1

    ReplyDelete
  11. இதுக்குப் பேருதான் 'நடராஜ லீலை(?)கள்'னு பேரா?
    இப்பவே கண்ணக் கட்டுதே... உங்களுக்கு. (எனக்கில்லைங்கோ)

    ReplyDelete
  12. //நான் அது வாலை பிடிச்சு சொய்ங் சொய்ங்ன்னு சுத்தி மாடிக்கு தூக்கிகிட்டு வந்து மாடில இருந்து கிரவுண்டுல தூக்கி போட்டேன். அது தொபக்கடீன்னு விழுந்துச்சு. அப்புறமா நின்னு அழுதுகிட்டே இருந்துச்சு. நான் போய் ஒரு உதை டமால்ன்னு. அது குடுத்தேன். அது அழுதுகிட்டே ஓடிடுச்சு//அப்படியே அப்பா மாதிரியே ஒரே builduppu . பய தேரிடுவான்

    //அடுத்த ஜென்மத்திலாவது விருமாண்டி மீசையோட பிறக்கனும்// வீரம் என்ன மீசைலைய இருக்கு?. அபி அப்பா பேசாம உங்களுக்கு வரதையே செயுங்க, வேறென்ன சிரிப்பு தான் .... hahahahaha

    “உரையிலே தக்காரு”
    நகைச்சுவை நடிகர்களின் ஜாம்பவான் N.S. கிருஷ்ணன் அவர்கள் ஒரு படத்தில் “தரையிலே உக்காரு’’ என்று சொல்வதற்குப் பதில் “உரையிலே தக்காரு” என்று முதல் எழுத்துகளை மாற்றிச் சொல்வார். இதேபோல் இன்னும் ஓரிரண்டு சொற்றொடர்களையும் மாற்றிச் சொல்வார் என்று ஞாபகம். இந்த உத்தியை ஆங்கிலத்தில் ஸ்பூனரிஸம் (spoonerism) என்பார்கள்.
    இப்பவே புது விசயங்கள கத்துக்கும் நட்டுவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. //எனக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்//

    ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  14. //ல்ல வேளை இன்னும் ஆத்தி சூடி சொல்லி கொடுக்கவில்லை//
    :))

    ReplyDelete
  15. rajan thotam pakkadhula unga veeda. ohh nan niraya nall anga irundhurukan. by suresh . s.sivasuresh84@gmail.com

    ReplyDelete
  16. //தம்பி பின்னால எனக்கு சோறு போடுவியா?"
    வாயில தான் போடுவேன்" //
    //நான் அது வாலை பிடிச்சு சொய்ங் சொய்ங்ன்னு சுத்தி மாடிக்கு தூக்கிகிட்டு வந்து மாடில இருந்து கிரவுண்டுல தூக்கி போட்டேன். அது தொபக்கடீன்னு விழுந்துச்சு. அப்புறமா நின்னு அழுதுகிட்டே இருந்துச்சு. நான் போய் ஒரு உதை டமால்ன்னு. அது குடுத்தேன். அது அழுதுகிட்டே ஓடிடுச்சு"/
    அந்த குட்டி தலைவருக்கு என் சார்பா ஒரு உம்மா குடுத்துருங்க அண்ணாத்தை

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))