பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 15, 2010

அன்னை சோனியாவின்...............


நான் என்ன சொல்றது இதுக்கு மேல. சரி சரி அனாவுக்கு ஆனா எல்லாம் சரி ஆனா எல்லா இடத்திலயும் சரியா வருமா? ரனாவுக்கு ரானா அதாங்க ரஜினி ரசிகர்கள் கிட்ட கேட்டா எதுனா எதுகை மோனையா சொல்லி அசத்தி இருப்பாங்க.

*******************

மாயவரம் பஸ்ட்டாண்டு எல்லாம் பிரச்சனை முடிஞ்சு போனதா நினைக்கும் பாமர மக்களே! ஹய்யோ ஹய்யோ உலக வரலாற்றிலே முதன் முறையாக இது வரை மயிலாடுதுறை நகராட்சியில் எட்டு முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எங்க ஊர் பேருந்து நிலையத்துக்காக மட்டுமே. மயிலாடுதுறை நகராட்சி என்பது ஒரு காமடி பீஸ். அப்படி ஆக்கியது அபுல்ஹாசன் முதல் தேன்மொழி வரை எல்லாருமே. ஏன்னா திருப்பூர் கூட மாநகராட்சியாம்? ஆனா 125 வருஷ பழமை வாய்ந்த அந்த ஆங்கிலேயர் ஆட்சியிலேயே மிக சிறந்து விளங்கிய மயிலாடுதுறை இன்னும் நகராட்சியாம். போகட்டும். ஆனா ஒரு தீர்மானத்தை கூட நிறைவேற்றாத ஒரு நகராட்சியை என்ன செய்யலாம்?

நேத்திக்கு அமைச்சர் பெரிய கருப்பன் பேசுறார் "கோவில்நிலத்தை எடுப்பது தப்பு"ன்னு. ஆனா பரிமள ரங்கநாதர் என்ன அனாமத்தா? சரி எடுங்க. செய்யுங்கன்னா அதுக்கு எங்க எம் எல் ஏ பொது மக்களுக்கு இடைஞ்சல் வராம ஒரு ஒதுக்குபுறமா பேருந்து நிலையம் வரனும்ன்னு துணை முதல்வருக்கு அறிக்கை விடுறார். என்ன கொடுமை. அதை சட்ட சபையிலே பேச வேண்டியது தானே? எனக்கு குருதி அழுத்தம் அதிகமாகுது. இந்த விஷயம் வேண்டாம். நாளை நான் விளக்கமாக ஒன்லி பேருந்து நிலையம் பத்தி மட்டும் பதிவு எழுதறேன்!

எனக்கு கொஞ்சம் அவசர வேலை இருப்பதால் சின்ன பதிவா முடிக்கிறேன்!

3 comments:

  1. //ஹய்யோ உலக வரலாற்றிலே முதன் முறையாக இது வரை மயிலாடுதுறை நகராட்சியில் எட்டு முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எங்க ஊர் பேருந்து நிலையத்துக்காக மட்டுமே. //

    எட்டு ராசி இல்லாத நம்பர்... அதனால இன்னொரு முறை தீர்மானம் போடுவாங்கன்னு எதிர் பார்க்கலாமா?

    ReplyDelete
  2. //மயிலாடுதுறை நகராட்சி என்பது ஒரு காமடி பீஸ்.//

    நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.

    நாளைக்கும் 'ப்ஸ் ஸ்டாண்ட்' இடுகை இருக்கா?
    நல்லா காரமா சாப்பிட்டுட்டு வாங்க.

    ReplyDelete
  3. ச்ச ச்ச ச்ச....நம்மாளுங்களை அடிச்சுக்க ஆளே இல்லைங்ணா. இந்த மாதிரியெல்லாம் தமிழை வளர்க்க கஷ்டப்படறப்படறதை நினச்சா ஒரே ஃபீலிங்கா இருக்குங்ணா. வாழ்க வாசன். வாழ்க தமிழ். வாழ்க போஸ்டர் புரொடக்சன் கம்பெனீஸ்

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))