பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 23, 2010

வண்டிகார தெரு மாரியம்மன் கூட ஒரு சவால்!!!

எங்க ஊர்ல பஸ்ட்டாண்டு பக்கத்திலே இருக்கும் வண்டிகாரதெரு மாரியம்மன் ரொம்ப பவர் புஃல் அப்படீன்னு சொல்லுவாங்க. ஆனா பொதுவாவே எனக்கும் அதுக்கும் ஒரு பனிப்போர் ரொம்ப வருஷமாவே. நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது அப்பா வாங்கி கொடுத்த ஒரு செருப்பை அடுத்த நாளே அந்த கோவிலில் இழந்திருக்கேன். அதன் பிறகு செருப்பு காணாமல் போனதை கிட்ட தட்ட ஆறு மாதம் வரை மறைத்து வச்சிருந்தேனென்றால் அதுக்கு என் சாமர்த்தியம் தான் காரணம்(?) பின்னே அது தெரிந்து வேற ஒரு நல்ல செருப்பால் அடி வாங்கினேன். அதிலிருந்தே அந்த கோவில் பக்கம் போனாலே செருப்பை கழட்டி போட்டு அதன் மேல் ஏறி கொண்டு சாமி கும்பிடுவேன். "அதுக்கு பேசாம போட்டுகிட்டே கும்பிட்டு தொலைக்கலாம்"ன்னுமுனுமுனுத்து போன பெருசை பார்த்து "போய்யா வெள்ரு, இந்த அம்பாள் செமத்தியான பவர்ய்யா, செருப்பு போட்டு கிட்டு கும்பிட்டா கணக்கிலே சுழி தான் கிடைக்கும்" என நினைத்து கொண்டேன். (இல்லாட்டியும் சுழி தான் கிடைக்கும்)அதுக்காக அந்த அம்மனை கும்பிடாமல் இருந்தது கிடையாது.

பின்னே ராதா என் செருப்பை பார்த்துப்பான், நான் போய் கும்பிட்டு வருவேன். பின்னே அவன் போய் கும்பிட்டு வருவான். அங்கே செருப்பு காணாம போவது ரொம்ப சர்வ சாதாரணம். அனேகமா மயிலாடுதுறை பதிவர் எல்லோருமே காணா அடிச்சிருப்பாங்க. கேட்டு பாருங்க.இத்தனை ஏன் ஒரு தடவை செருப்பின் மீது நின்று கொண்டிருக்கும் போதே ஒரு செருப்பு திருடன் "கொஞ்சம் தள்ளிக்கோ"ன்னு பக்தி பழமா நான் கும்பிட்டு கிட்டு இருக்கும் போது செருப்பை தள்ளி கிட்டு போனான். அதிலிருந்து அந்த அம்மன் மேல் எனக்கும் என் மேல் அம்மனுக்கும் செல்ல சண்டை ஆரம்பமாகியது.

விதி வலியது. இன்றைக்கு மயிலாடுதுறையின் ரங்கநாதன் தெரு என அழைக்கப்படும் வண்டிகார தெருவில் ஒரு உறவினர் வீட்டு காது குத்தல்.(நான் வந்த பிறகு இது எத்தனையாவது குத்தல்ன்னு கணக்கு போட்டு பார்க்கனும்) காதுகுத்தல் நம்ம சண்டைக்கார அம்மன் கோவில்ல. சாப்பாடு அவங்க வீட்டிலே. இதை கேட்டவுடனே என் பார்வை பரிதாபமாக என் செருப்பு மீது போச்சு. இரண்டு நாள் முன்ன தான் 499.95 க்கு வாங்கினேன். மீதி 5 பைசாவை டிப்ஸாக கொடுத்து வாங்கின செருப்பு. இந்த தடவை ஏமாற மாட்டேன். நானா அம்மனான்னு பார்த்துடுவோம்னு மனசுக்குள்ள ஒரு வைராக்கியமே வந்துடுச்சு. காலை காதுகுத்தலுக்கு கிளம்பும் போதே சரியா ஸ்கெட்ச் போட்டுட்டேன் மனசுக்குள்ளே. அந்த பூக்கார அம்மாவுக்கு பத்து ரூபாய் கொடுத்து ஸ்பெஷலா பார்த்துக்க சொல்லனும் என்றெல்லாம்.

ஆச்சு காலை 9- 10.30க்கு காது குத்தல். ஜபர்தஸ்த்தா போனேன். அம்மனை ஒரு அலட்சிய பார்வை பார்த்தேன். கோபிநாத் மாதிரி "நீயா நானா?"ன்னு மனசிலே நினைச்சுகிட்டேன். பூக்கார அம்மா கிட்ட பத்து ரூபாய் வெட்டினேன். அது செருப்பை எடுத்து தனியா பாதுகாப்பா வச்சிகிடுச்சு.கோவில் உள்ளே போனவன் திரும்ப வந்து மளிகை கடை பையன் கிட்ட ஒரு ஐந்து ரூபாய் கொடுத்தேன் பார்த்துக்க சொல்லி. திரும்பவும் ஒரு அலட்சிய பார்வை அம்மன் மேலே.

காதுகுத்தல் நடக்கும் போது இரண்டு தடவை வந்து பார்த்தேன். இருந்தது. எனக்கு ஒரு கெட்ட குணம். போட்டின்னு வந்துட்டா ஜெயிக்கனும். அதிலேயே வெறியா இருப்பேன். இன்னிக்கு வீட்டுக்கு இதே செருப்போடத்தான் போவேன்."பார்த்தியா நான் ஜெயிச்சுட்டேன்"ன்னு ஒலிம்பிக் மெடல் மாதிரி செருப்பை தூக்கி பொண்டாட்டி கிட்ட காமிப்பேன். காது எப்ப குத்தினாங்கன்னு எல்லாம் கவலையே படாமல் மனசு செருப்பு மேலயே இருந்துச்சு. விழா முடிந்தது. எல்லாருக்கும் முன்னாடி ஓடி வந்து செருப்பை பார்த்தேன். அப்பாடா ஜெயிச்சாச்சு. அந்த பூக்கார அம்மாவுக்கு இன்னும் ஐந்து ரூபாய் கொடுத்தேன். மளிகை கடை பையனுக்கு இன்னும் ஐந்து ரூபாய் அடித்து விட்டேன். இந்த தடவை ரொம்ப இளக்காரமாக அம்மனை பார்த்தேன். என்னை நினைத்து எனக்கே பெருமையாக இருந்துச்சு.(எடுத்த காரியத்தில் ஜெயிக்க வேண்டும் என்பது இந்த பதிவை படிப்பவர்களுக்கு ஒரு மெஸேஜாக சொல்லிக்கிறேன்)

மெதுவா வீடு வந்து சேர்ந்தேன். சைக்கிள் சாவியை சாவி ஸ்டேண்டில் மாட்டினேன்.

"என்னங்க ஏன் டல்லா இருக்கீங்க? செருப்பை தொலைச்சாச்சா"ன்னு கேட்டுகிட்டே வாசல் பக்கம் ஓடினாங்க. செருப்பு இருந்துச்சு.

"பின்ன ஏன் டல்லா இருக்கீங்க?"

"அந்த தெருவிலே கூட்டம் அதிகமா இருக்கும். பார்க் பண்ண முடியாதுன்னு வண்டி வேண்டாம். சைக்கிள்ல போங்கன்னு நீ தான சொன்ன?"

"ஆமாம் அதுக்கு என்ன இப்போ?"

"சைக்கிள் காணாம போச்சு. கோவில் வாசல்ல"

22 comments:

 1. kalakkal post

  pl sumbit in tamilish too

  rahu

  ReplyDelete
 2. பொறுப்பான மனுஷன்னா இப்படித்தான் இருக்கோணும்..!

  ReplyDelete
 3. சமத்து!! யாருக்கு வரும் இப்படி சாமர்த்தியம்!!

  ReplyDelete
 4. அது சரி. நமக்கு முன்னாடி நம்ம அதிர்ஷ்டம் ஓடிகிட்டு இருக்கு.

  ReplyDelete
 5. ஆமா...வண்டிக்காரத் தெரு மாரியம்மன் கோயில்ன்னா எது? பஸ்ஸாண்டிற்கு பக்கத்தில் உள்ள கோயிலா? அது வண்டிக்காரத் தெருவிற்கு எதிர்க்க அல்ல இருக்கும்!

  வர வர... நம்ம ஊரில் உள்ள தெருப் பெயர் எல்லாம் மறந்துட்டே வருது.

  ஊரை விட்டு தொலைதூரம் வந்தா... இப்படிப்பட்ட பிரச்னையெல்லாம் வரும்தான் போலிருக்கு.

  உங்க கவலை உங்களுக்கு, என் கவலை எனக்கு.

  ReplyDelete
 6. எடுத்த காரியத்தில் ஜெயிக்க வேண்டும் ரொம்ப கரெக்டு.

  ReplyDelete
 7. சவால் என்றால் இது அல்லவோ சவால்:))!!

  ReplyDelete
 8. போனாப் போவுது ராஜா. கலைஞர் இலவச சைக்கிள் திட்டத்துல வாங்கின பச்சைக் கலர் சைக்கிள் தானே. எல்லா சைக்கிளும் ஒரே கலர்ல இருக்குறதாலே மக்கள் யாராவது மாத்தி எடுத்திட்டுப் போயிருப்பாங்க..

  இந்த வண்டிக்காரத்தெரு மாரியம்மன் கோயில்ல நானும் 10 ஜோடி செருப்பு தொலைச்சிருக்கேன்.. ஹூம்ம்ம்ம்


  சீமாச்சு...

  ReplyDelete
 9. ஹாஹா.. அல்ட்டிமேட் கதை!
  அவ்ளோ டேஞ்சரஸ் கோவிலா? நான் தொலைச்சதில்லைன்னு தான் நினைக்கறேன். முதல்ல மாயவரம் போன செருப்பே போட்டுக்கறதில்லை. ரூம்லேயே வெச்சுட்டு நடந்தே தான் ஊர் சுத்தறது! ஆனாலும் இனி ஜாக்கிரதையா இருப்பேன். கடைசியில ஜனகராஜ் கனவு மாதிரி ஆயிடுத்தே! அருமையான நரேஷன்!

  ReplyDelete
 10. "ஹெ ஹே ஹே..." அந்த அம்மனே சிரிச்ச மாதிரி ஒரு ஃபீலிங்கு....!!

  ReplyDelete
 11. ஹெ ஹே ஹே...அந்த அம்மன் சிரிச்ச மாதிரி ஒரு ஃஃபீலிங்கு!!

  ReplyDelete
 12. சூப்பர் கோவிலா இருக்கே .... சைக்கிள் தொலைச்சதுக்கு நடந்த மண்டகப்படிய தனி பதிவா போடுங்க அண்ணா

  ReplyDelete
 13. //மெதுவா வீடு வந்து சேர்ந்தேன். சைக்கிள் சாவியை சாவி ஸ்டேண்டில் மாட்டினேன்.//


  தலைவா...
  "நீங்க சைக்கிள்னு சொன்னது,
  பைசைக்கிள் இல்ல; அது
  மோட்டர் சைக்கிள்" அப்படின்னு
  எனக்கு, மாயவரத்தான் மெயிலே
  அனுப்பிட்டாரு, தலைவா...

  ReplyDelete
 14. வருகை தந்த அனைவருக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 15. நானெல்லாம் சின்னபுள்ளையா இருக்கறச்ச வாரா வாரம் ஞாயித்துகிழமை ஒரு ஜோடி ஸ்லிப்பர் தொலைச்சுட்டு வண்டிக்கார தெருவுல புதுசா வாங்கி மாட்டிக்கிட்டு போன பய அண்ணே ! :)

  சில வருடங்களுக்கு முன்பு டெய்லி காலையில மாரியம்மன் கோவிலுக்கு பயமே இல்லாமே போனவனாச்சே - கால்ல செருப்பு போட்டிருந்தாத்தானே பயமே வரும் :)

  ReplyDelete
 16. கவுண்டமணி ஒரு திரைபடத்தில் காது குத்து விழாவிற்கு சென்றுவிட்டு கடா வெட்டினீங்களா என்பாரே, அது போலவே இருக்கிறது. (ஹி ஹி ஹி)

  ReplyDelete
 17. அபி அப்பாவ்!

  டெம்ப்ளேட் ஜூப்பர்!

  சிரிக்கவச்சே மயக்குறீங்களே!

  ReplyDelete
 18. சூப்பர் பதிவு அபிப்பா..
  கலக்குக்குங்க,,.


  www.narumugai.com

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))