பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

June 20, 2010

எம் மொழி எம் மொழி செம்மொழியே!!!!




நான் அபி எழுதுகிறேன். என் அப்பா ஒரு மொழியையே கொலை செய்தார். (ஆமாம் தமிழை தானே செய்தார், அத்தனை எழுத்து பிழை என கீதா பாட்டி வந்தால் மன்னிக்கவும் இது வேற விஷயம் கீதா பாட்டி வேற கொலை)

என் தம்பி ஆறு மாதம் முன்பு வரை ஒரு அழகான மொழி பேசினான். அதை இந்த ஆறு மாதத்தில் என் அப்பா கொஞ்சம் கொஞ்சமாக கொலை செய்ததை தான் நான் இங்கே சொல்கிறேன்.

நம் தமிழ் மொழிக்கு ஆதியும் இல்லை அந்தமும் இனி இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் நம் தமிழ் மொழியில் இருந்து பிரிந்து வந்த கிளை மொழிகள் எத்தனை எத்தனை. ஆனால் இப்போது நடக்கும் அந்த செம்மொழி மாநாட்டில் பாதுகாக்கின்றோமா என நினைத்து பார்த்தால் என்னை கேட்டா இல்லை என்றே சொல்வேன்.

ஒரு மொழி உருவாவது எத்தனை சிரமம். அதை உருவாகியவனே அந்த மொழியை விட்டு வேற்று மொழியை பேசுவது எத்தனை சிரமம்.

என் தம்பியின் மொழியில் இலக்கணம் உண்டு, இலக்கியம் உண்டு, கவர்சியும் உண்டு, இத்தனை ஏன் கடமை , கண்ணியம், கட்டுப்பாடு போன்ற இன்ன பிற கந்தாயங்களும் கூட உண்டு.

என் அப்பா இங்கு வரும் போது அவன் பேச்சை மொழிமாற்றம் செய்யும் "துபாஷ்" நான் மட்டுமே. இன்னும் சொல்ல போனால் எனக்கு தான் செம்மொழி மாநாட்டில் விருது கொடுக்க வேண்டும். ஏனனில் முதல் முறையாக அந்த மொழியை தமிழாக்கம் செய்தது நான் மட்டுமே. அதற்காகவேணும் எனக்கு ஒரு "கம்பவுண்டரேட்" விருதாவது கொடுத்தல் தமிழுக்கு நீங்கள் செய்யும் நல்ல காரியம். "காரியம்" என்றால் அந்த "காரியம்" இல்லை.

உதாரணமாக "அம்மா எனக்கு குளிப்பாட்டி விட்டு டிரஸ் போட்டு ஷாப்பிங் அழைத்து போ" என்கிற சிரமமான ஒன்பது வார்த்தைகளை "இங்கிலிபிடியா நானே பிட்கு" என அழகாக மூன்று வார்த்தைகளில் சொல்லும் அழகு தமிழுக்கு இருக்கின்றதா?

"அக்கா என்னை அடிக்கிறா" என்பதை "பீலிட்டிடான்னுவாடா" என ஒரே வார்த்தையில் சொல்ல தமிழில் வார்த்தை உண்டா?

"வாடில்லாபிஸ்கி"ன்னு சிரிச்சா "அக்கா முகத்தை வச்சு என் உள்ளங்காலில் இடிச்சுட்டா"ன்னு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு.

இதில் எங்கே இலக்கணம் வந்ததுன்னு நீங்க கேட்பது தெரிகின்றது. 'வாடில்லா புஸ்கோ" என கூறினால் "அக்கா முகம் என் காலில் இடிக்க போகின்றது" என அர்த்தம். அதாவது எதிர்காலம்.

"ச்சூமுச்சுரா சந்து போத்ரா" என்றால் "அக்கா நல்லபடியா ஸ்கூல் போய் படி"ன்னு அர்த்தம். அதாவது கடமை.

"டீசுவானா பல்லிமா" என்றால் " வீட்டுக்கு வரும் எலக்ட்ரிகல் மீட்டர் ரீடிங் குறிக்க வருபவர் வரை உள்ளே வந்து உட்கார சொல்லும் பண்பு என்னும் கண்ணியம்.

"வருசாலாமென்னுடா" என்றால் "நீ வரும் வரை நான் சமத்தா இருப்பேன்" என்று பொருள். அதாவது கட்டுப்பாடு.

ஒரு மொழி என்று எடுத்து கொண்டால் சில குறைகளும் இருக்கும். ஆம் "N" என்கிற ஆங்கில எழுத்துக்கு "கட்டாங்கால்" என சொல்லப்படும். இது கொஞ்சம் அதிகம் தான். அது போல சில எழுத்துகள் ஒரு பத்தி எழுதும் அளவுக்கு பெரிதாய்கூட இருக்கும். இதல்லாம் பெரியவர் நன்னன் போன்றவர்களை வைத்து புட்டி பார்த்து டிங்கரிங் போன்ற சீர்திருத்தம் செய்து கொள்ளப்படக்கூடிய விஷயங்கள் தான்.

ஒரு முறை அப்பாவுக்கும் என் தம்பிக்கும் நடந்த சில வேண்டத்தகாத வன்முறை சம்பவத்தில் அவன் அப்பாவை பார்த்து "லே மடிசண்டா சூமாண்ட்டா" என சொல்லிய போது என் அப்பா என்னிடம் அவன் "என்ன சொல்கிறான்?" என கேட்ட போது நான் குடும்பத்தில் குழப்பம் வருமே என சொல்லாமல் விட்டு விட்டேன். பாவம் அவங்க கிட்ட 'உங்க அம்மாவை திட்டுகிறான்" என சொன்னால் அவங்களுக்கு கோவம் வரத்தானே செய்யும்.

சில சமயம் அப்பா கேட்கும் பழைய பாடல்கள் கூட ரீமிக்ஸ் செய்யப்படும். " வானென்னகோவோ யாசெமரோ" என்பது தில்லானா மோகனாம்பாள் படத்தின் "நலந்தானா" பாட்டு. இப்படியாக சங்க இலக்கியம் முதல் சகல இலக்கியங்களும் இந்த மொழியில் உண்டு.

ஆனால் அப்பா இந்த மொழியை அழிக்க இந்த கிளை மொழியை கொலை செய்ய பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.போகாத ஊர் இல்லை. ஏறாத கோவில் இல்லை. எந்த கோவில்ல தீமிதி நடந்தாலும் அங்க போய் "மாரியாத்தா இப்ப தீ மிதிக்கும் 96 பேரும் என் மகன் தமிழ் பேசனும்ன்னு நினைச்சு வேண்டிகிட்டு தீ மிதிப்பதா நினைச்சுக்கோ"ன்னு வேண்டிப்பதும், "பழனி முருகா வரும் தை பூசத்தில் உனக்கு நடக்கும் அபிஷேகம் எல்லாம் நானே என் மகன் தமிழ் பேசுவதற்காக செய்யும் அபிஷேகமா நினைச்சுக்கோ" என உருகி உருகி வேண்டிப்பதும், சிதம்பரத்தில் போய் 'நடராஜா வருஷத்துக்கு இரண்டு முறை மார்கழி மாதமும், ஆனி மாதமும் உனக்கு குளிர குளிர அபிஷேகம் செய்ய சொல்றேன்" என வேண்டிப்பதும்....எல்லா கடவுளும் மீட்டிங் போட்டு "இவன் நினைச்சுக்கோ, வச்சுக்கோ, செய்ய சொல்றேன் என ரொம்ப ரப்சர் பண்ணிட்டு இருக்கான். அப்பா முருகா அவன் கேட்ட தமிழை அவன் மகனுக்கு அருள் பாலிச்சுடு" என முடிவெடுத்து அருள் பாலிக்கப்பட்டு ஒரு சுபயோக சுபதினத்தில் காலை எழுந்த என் தம்பி "அம்மா, அப்பா, முருக்கு, சீடை, எலந்த அடை, பீசா, பர்கர், கோலிசோடா, கில்லி, சுறா,நஷ்டம், பத்துகோடி, சங்கம்,கேபிள், பையா, தமண்ணா, பள்ளிகூடம், பைக், தமிழ் தமிழ்...."ன்னு கத்தி கொண்டே சரஸ்வதி சபதம் பாட்டுக்கு பதிலாக ஒசானா ஒசானா பாட்டெல்லாம் பாட ஆரம்பிச்சுட்டான்.

இப்படியாக ஒருவழியாக அந்த நட்ராஜ் மொழி போய் இப்போ தமிழ் வந்துவிட்டது. ஒரு மொழிக்கொலை செய்த மந்தகாசத்தில் அப்பா. ஹூம்.. இந்த கிளை மொழியை பரப்பி அதை செம்மொழியாக்கி, A.R. ரஹ்மானை விட்டு டியூன் போட சொல்லி எதாவது லூசுதேவ்மேனனை விட்டு இயக்கி (ஆனா ஸ்ருதி கமல் பாடுவது காதிலேயே கேட்கலை இன்னும் கொஞ்சம் சத்தமா பாட சொல்லனும்) கோவையிலே இடம் கிடைக்காட்டியும் பரவாயில்லை அட்லீஸ்ட் திருப்பூர்லயாவது ஒரு மாநாடு நடத்திடலாம்ன்னு நினைச்ச என் கனவிலே மண்.

இப்ப நான் மட்டும் தனியே பாடிகிட்டு இருக்கேன்.... "லாலம்மா லேடுப்பா லே லேம்மா லேம்மா லேம்மா".... கிட்ட வந்து தம்பி சொல்றான் "அய்யோ அக்கா அது 'நம்மொழி நம்மொழி செம்மொழியேயேயேயேயே".....போடாங்..............

14 comments:

  1. //இப்ப நான் மட்டும் தனியே பாடிகிட்டு இருக்கேன்.... "லாலம்மா லேடுப்பா லே லேம்மா லேம்மா லேம்மா".... கிட்ட வந்து தம்பி சொல்றான் "அய்யோ அக்கா அது 'நம்மொழி நம்மொழி செம்மொழியேயேயேயேயே".....போடாங்//

    :))))))))))))))))))))))

    ReplyDelete
  2. 'வேண்டுதல்' பார்ட் ரகளை:))!

    ReplyDelete
  3. வாப்பா ஆயில்ஸ்! வருகைக்கும் உங்க சிரிப்பானுக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  4. வாங்க பிரண்ட்!
    மிக்க நன்றி!!

    ReplyDelete
  5. பின்னூட்ட கயமை இந்த பின்னூட்டம்.

    ஆனா இப்ப உள்ள லேட்டஸ்ட் ட்ரண்ட் படி

    "for comments follow up" ்னு போட்டுக்கறேன்.(ஆமா அப்படியே வந்து வண்டி வண்டியா குமிஞ்சுகிட்டு இருக்குது இதுல இது வேறயா?)

    ReplyDelete
  6. உண்மையில் இப்படி போட்டிருக்க வேண்டும்:(((

    ReplyDelete
  7. ஆமாம் தமிழை தானே செய்தார், அத்தனை எழுத்து பிழை என கீதா பாட்டி வந்தால் மன்னிக்கவும் இது வேற விஷயம் கீதா பாட்டி வேற கொலை)//

    அக்கிரமமா இருக்கே? நட்டுவே என்னை ஆண்டினு கூப்பிடறச்சே அபிக்கு நான் பாட்டியா?

    அபி அப்பா உண்மையைச் சொல்லுங்க, இந்த இடத்திலே ஆண்டியைப் பாட்டியாக்கினது நீங்க தானே? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :P:P:P

    ReplyDelete
  8. ம்ம்ம் என்ன இருந்தாலும் மழலைச் சொல் மழலைச் சொல்தான். அதுக்குள்ளே என்ன அவசரமோ ஸ்கூலிலே சேர்க்கிறதுக்கு. கோபத்திலே தான் அந்தப் பதிவுக்கு நான் படிக்கவே வரலை! :)

    ReplyDelete
  9. அபி அப்பா .. செம்மொழி மாநாட்டுக்கு ரெடி ஆகிட்டார்.. அங்கேயே இந்த ரகளைன்னா அம்மாடி தமிழ் நாட்டுல இருந்தா தாங்காது..:))

    ReplyDelete
  10. அபி, இதிலே ஒரு பாகம் மட்டும்தானா???
    இரண்டாம் பாகம் போடவும்.

    ReplyDelete
  11. ஹையோ.... ஹையோ... அபி சொல்றாப்ல மழலை எப்பவும் அழகு தான்..... அதை ஏன் தட்டி பறிச்சீங்க... ஆன அபி தம்பியோட language க்கு அநியாயத்துக்கு அட்டகாசமா மீனிங் எல்லாம் குடுக்கறாங்க.... அந்த தீமேதி narration ஜஸ்ட் hilarious .... சூப்பர்.... (வீட்டுக்கு வீடு இப்படி செம்மொழி வளத்தினா அப்புறம் பெரியவருக்கு வேலை இல்லாம செஞ்சுடாதீங்கப்பா.....ஹா ஹா ஹா)

    ReplyDelete
  12. செம்மொழி மாநாடு நல்லபடியா நடந்தா அபிஅப்பா மொட்டை போட்டுக்குவார்ன்னு நானும் முருகனை வேண்டிக்கிட்டேன்:-)

    ReplyDelete
  13. சரி, உங்க மொழி மாநாடு எப்போ? பிரியாணி, போக்குவரவு செலவு, பேட்டா எல்லாம் உண்டுதானே?

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))