பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

December 21, 2011

"அடடே! நீங்க தானே அபிஅப்பா!!!" - ஈரோடு சங்கமம் தொகுப்புகள்!

ஈரோடு சங்கமம் நிகழ்சிக்கு போய் வந்ததை பற்றி அழகாக எழுத வேண்டும் என நினைத்தேன். எது எழுதுவதென்றாலும் எனக்கு எப்போதும் தயக்கம் இருந்ததில்லை. ஆனால் சங்கமம் நிகழ்வு ..... கொஞ்சம் யோசித்து தான் எழுத வேண்டும் எதை எழுதினாலும். ஏனனில் அங்கே கலந்து கொண்டது ஒரு 200 எழுத்தாளர்களுக்கும் மேலான ஒரு சங்கமம். மிகச்சமீபத்தில் ஒரே இடத்தில் இத்தனை எழுத்தாளர்கள் (அஃப்கோர்ஸ் இணையத்தில் எழுதினாலும் எழுத்தாளர்கள் என்று நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் எழுத்தாளர்கள் என எழுதிவிட்டேன் நண்பர்களே) ஒருசேர கூடிய ஒரு மாபெரும் கூட்டம் அது. திரும்பிய பக்கம் எல்லாம் ஜாம்பவான்கள். எப்போதுமே என்னுடன் கூட இருக்கும் கூச்சத்துடன் கடைசி வரிசையில் இடம் தேட கிட்ட தட்ட எல்லோருமே துணைக்கு கூச்சத்தை கொண்டு வந்திருந்தனர். அரவிந்தன் கிருஷ்ணமூர்த்தி அருகே போய் அமர்ந்து அமைதியாக விழாவினை கவனிக்க ஆரம்பித்தேன்.

என் அருகே லக்கி, அதிஷா (அது என்னப்பா லக்கின்னு எழுதினா அதிஷாவும் தானா டைப் ஆகுது) ஜாக்கி, மணிஜி, கே ஆர் பி செந்தில், உனாதானா, ஜீவ்ஸ், பிலாசபி பிரபாகரன், என எல்லோரும் அமர அழகாய் விழா தொடங்கியது. நாம இப்ப இங்க கட் பண்றோம். மாயவரத்தை காட்டுறோம்.
=================================================================
ஊகூம் இதல்லாம் சரிபட்டு வராதுடா அபிஅப்பா... ஒரே இழுவையா இருக்கு. எல்லாரும் பதிவு போட்டு முடிஞ்சாச்சு. நடையை மாத்து......
=================================================================
விந்தைமனிதன் ராஜாராம், அவரது தம்பி ஆகியோர் வெள்ளுடை வேந்தராகவும், அரவிந்தன் கிருஷ்ணமூர்த்தி பட்டுவேட்டி மைனராகவும் (வார்த்தை உபயம் மணிஜி) வந்திருந்தனர்.

மலர்வனம் லெஷ்மி அவர்கள் தல பாலபாரதியையும் இண்டக்ஷன் ஸ்டவ்வையும் அழைத்துக்கொண்டும் கூடவே கனிவமுதனை தூக்கிக்கொண்டும் வந்திருந்தாங்க.

கனிவமுதனை ஐந்து நிமிடம் ஒரே இடத்தில் ஐந்து நிமிடம் சமாளிச்சு உட்கார வச்சா ஆயிரம் ரூபாய் பரிசு என தல அறிவிப்பு செய்தும் உயிரை கொடுத்து ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் ஆசை யாருக்கும் இல்லாமையால் நைசாக கழண்டு கொண்டனர்.

அரவிந்தன், தருமி சார்,ஜீவ்ஸ், வானம்பாடிகள் வாசு அண்ணன், சி பி செந்தில்குமார், பிலாசபி போன்றவர்களை முதல் முதலாக நான் பார்த்தேன் எனினும் என்னவோ பலகாலமாக பழகியது போல கூகிள் பஸ், +ல் விட்ட இடத்தில் இருந்தே பேச்சை தொடங்கிக்கொண்டோம்.

எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்து அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது எனினும் வானம்பாடிகள் வாசு அண்ணன் போன்றவர்களை பின் பக்கத்தில் இருந்தே பார்த்து பலரும் அடையாளம் கண்டு கொண்டது கூகிள் பஸ்ஸின் தாக்கம் பரவலாக இந்திருப்பதை உணரச்செய்தது.

விருது கொடுக்கும் முன்னம் விருது வாங்குபவர்கள் பற்றிய தொகுப்பை மேடையில் சொல்லிகொண்டு இருக்கும் போது "... இவர் +2 பொதுத்தேர்வில் தோல்வி கண்டவராயினும்.." என சொன்ன போது ஒட்டு மொத்த கூட்டமும் "லக்கி லக்கி என ஆர்பரித்ததை அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் பார்த்திருப்பாரேயானால் "கிரேஸ் மார்க் போட்டாவது பாஸ் பண்ணி தொலைச்சி இருக்கலாம்" என நொந்து போயிருப்பார்.

"உங்களைப்பற்றிய பெருமைகளை எழுதித்தாருங்கள்" என விருது குழுவினர் லக்கியிடம் கேட்ட போது "+2 பெயில் என்பதை தவிர வேறு என்ன பெருமை என நான் தான் எழுதி கொடுத்தேன்" என சொன்ன போது "ங்கொயால"ன்னு யாரோ திட்டினாங்க.

"இவர் இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேஷியா..." என மேடையில் சொன்ன போதே கே ஆர் பி செந்திலை மேடைக்கு தள்ளி விட்டோம்.

அடுத்த பிட்டு பட போட்டிக்காக ,ஜீவ்ஸ் தன்னைப்போலவே முழ நீட்டு கேமிராவை வைத்துக்கொண்டு இருந்த இன்னும் ஏழெட்டு பேரிடம்முழு நிலவை எப்படி படம் எடுப்பது என பாடம் நடத்திக்கொண்டு இருந்தார். வானம்பாடிகள் வாசு அண்ணன் "இதோ வந்துட்டேன்" என யாரிடமோ சொல்லிவிட்டு முன்பக்கம் வேகமாக சென்ற பின் அந்த பாடம் பாதியிலேயே நின்றுவிட்டது.

அதிஷா மதுஒழிப்பு பிரச்சாரத்தில் தீவிரமாக இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கண்டு திருந்தவும்.

கூட்ட அரங்கினில் உள்ளே நுழையும் முன்னே ஆளுக்கு ஒரு "பேட்ச்" கொடுத்து அதிலே அவங்க அவங்க புனைப்பெயரை எழுதி மாட்டிக்க சொன்னாங்க. மணிஜி "எனக்கு ஒரு ஐந்து பேட்ச் கொடுங்க" என கேட்க "ஒன்னு போதும் மணிஜி வாங்க" என விந்தைமனிதன் அவசரமாக இழுத்துக்கொண்டு உள்ளே போனார்.

என் கூட வந்த ஒரு புது பதிவர் தன் பேட்ஜில் "மயிலாடுதுறை புலி" என தன் புனைப்பெயரை எழுதி வைத்திருக்க அதை பார்த்த எல்லோரும் டீஃபால்டாக கேட்ட ஒரு கேள்வி அந்த புதுபதிவரை "இனியும் வலைப்பூ எழுதவேண்டுமா?" என யோசிக்க வைத்தது.:-)

கோவைப்பதிவர் விஜியும், கோபியும் இலக்கியம் பேசியே ஆகவேண்டும் என ஒரே அடம். பாவம் சித்தூர் தமிழரசி தான். அனேகமாக 19ம் தேதி இலக்கியத்துக்கு பால் முடிந்திருக்கும்.

டாக்டர் ரோகினி: பல் பற்றிய ஒரு அவேர்னஸ் பஸ்ஸில் "நீங்கள் கடைசியாக பிரஷ் மாற்றியது எப்போது?" என கேட்க நான் "மூன்று நாட்களுக்கு முன்பாக. என் மனைவி பிரஷ் கலரும் என் பிரஷ் கலரும் ஒரே கலர் என்பதால் அந்த தப்பு நடந்து போச்சு" என பின்னூட்டமிட்டேன். அப்போது "உங்க கிட்டே இனி பல் பத்தி பேசவே மாட்டேன்" என சொல்லிட்டாங்க. என்னை ஈரோடு சங்கமம் நிகழ்வில் பார்த்ததும் அது நியாபகம் வந்து தொலைத்திருக்கும் போலிருக்கு அவங்களுக்கு. அதனால் பல் பற்றி எதும் பேசக்கூடாது என இருந்து விட்டார்கள். ஆனாலும் பாருங்க விதி வலியது. மேடையில் ஒரு பெண் பொதிகையிலே செய்தி வாசிக்கும் பெண் பேசிக்கொண்டு இருந்தது. நான் டாக்டர் ரோகினியிடம் கொஞ்சம் ஜாலியாக சொன்னேன். "சரியான வாயாடி போல" என. அதற்கு டாக்டர் "வாயாடலாம் தப்பில்லை. பல்லாடக்கூடாது" என சொல்லி என் கிட்டே மாட்டிகிட்டாங்க.# தொழில் பக்தி!

காலையில் மண்டபம் உள்ளே நுழைந்ததும் காலை உணவை சாப்பிட்டு கொண்டு இருந்தாங்க தேனம்மை அவர்களும் லெஷ்மனன் அவர்களும். நான் "நீங்க தானே தேனம்மை" என கேட்டேன். பதிலுக்கு அவங்க "ஆமாம். நீங்க அபிஅப்பா தானே, நான் உங்க பதிவை எல்லாம் படிச்சுருக்கேன். நாம் மட்டும் அல்ல. எங்க வீட்டிலே எல்லாரும் படிச்சு இருக்காங்க. ஒரு ஆட்டோகிராப் போடுங்களேன்" என சொல்வாங்கன்னு இதை படிக்கும் நீங்க யாராவது நினைச்சா.... சாரி ... நீங்க இன்னும் வளரனும். அவங்க "ஆமா நான் தான் தேனம்மை. நீங்க யாரு?"ன்னு கேட்டாங்க.

தோனி முடியை தடவிப்பார்த்த முஷரப்பு போல கிட்டத்தட்ட பிரபா ஒயின் ஷாப் ஓனர் பிலாசபி பிரபாகரன் முடியை தடவிப்பார்த்தனர். பையன் ஒரு 22 அல்லது 23 வயசு இருக்கும். ஆனால் என்றும் பதினாறு மார்தான்டேயன் மாதிரி இருந்தான் பையன். ஆனா அவனுக்குள் பல பதிவர்கள் ஒழிஞ்சு இருப்பதை கண்டு எல்லோரும் வியந்தோம். நைஸ் பாய்.

நான் முதல் நாள் அரங்கினில் நுழையும் போதே ஈரோடு கதிரும், தாமோதரன் சந்துருவும் வரவேற்கும் போது தாமோதர் சந்துரு "நான் உங்களை ஃபாலோ பண்றேன்" என சொன்ன போது "வாழ்வியலிலா" என மனதில் நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டேன். என்னவோ மனசைப்படிச்ச மாதிரி அவசரமாக "ஃபேஸ்புக்கிலேங்க" என சொன்னார்.

"நீங்க தான் வானம்பாடிகள் வாசு சாரா" என கேட்டு தன் அருகில் வரும் பதிவர்களுக்கு அவர்களின் அடுத்த கேள்வியாக தன் பதிவுகளை பத்தி தான் கேட்பாங்க என நினைத்து பதில் சொல்ல எத்தனிக்க " சார் ஈரோட்டிலே இருந்து சென்னை போக எத்தனை மணிக்கு நல்ல ரயில் இருக்கு" என்ற வகையிலான கேள்விகளை கேட்க மனுஷன் முதன் முதலாக இரயில்வேயில் வேலைக்கு சேர்ந்தது பற்றி வருத்தப்பட்டார். அதில் ஹைலைட் என்னான்னா ஒருத்தர் வந்து "நான் இதே ஈரோடு தான். இந்த பழைய பாளையத்தில் இருந்து பஸ்டாண்டு போக எதுனா ரயில் இருக்கா" என கேட்டது தான்.

யாரோ ஒருவர் கேபிள் சங்கருக்கு போன் போட்டு "யோவ் எதுக்கிட்டே இருக்க? நீ பங்கஷனுக்கு வர்ர தானே?" என கேட்டார். கொழுப்பு... தட்ஸ் ஆல்... அனேகமாக ஈரோடு கதிருக்கும் இதே போல சென்னையில் இருந்து போன் வந்திருக்கலாம். யார் கண்டது?

விருது பெற்றவர்கள் நன்றி சொல்லும் போது தல பாலபாரதி சொன்ன டீச்சர் கதை, ஊக்குவித்தல் பற்றிய கதைக்கு எல்லோரும் கைதட்டும் போது மலர்வனம் லெஷ்மி கண்ணிலே மட்டும் கண்ணீர். ஆமாம் அப்போது தான் கனிவமுதன் லெஷ்மி காதை கடித்துவிட்டிருந்தான்.

சாப்பாடு: பொதுவாக நான்- வெஜ் சாப்பாடுன்னா ஒரு பிரியானி, சிக்கன், மட்டன் இப்படி தான் இருக்கும். ஆனா இந்த சாப்பாடு வீட்டில் சமைப்பது போல நீர்த்த மட்டன் எலும்பு குழம்பு என ஆரம்பித்து நீண்ட பட்டியலாக இருந்தது. நான் கொஞ்சமும் கூச்சப்படாமல் வீட்டில் சாப்பிடுவது போல அனைத்து விரல் கொண்டும் பிசைந்து உருட்டி அடித்தேன். பாவம் எதிரே ஒரு பெண்... சபை மரியாதை நிமித்தமாக மூன்று விரல் கொண்டு நாசுக்காக சிரமப்பட்டது. அந்த புள்ளய்க்கு ஒரு எடுப்பு சாப்பாடு கேரியர்ல கட்டி கொடுத்தா நடு ஹால்ல சம்மனம் போட்டு உட்காந்து ஈரோடு சங்கமம் நீடூடி வாழ்கன்னு சொல்லிகிட்டு முழங்கை வரை நக்கி அருமையா சாப்பிட்டு இருக்கும்:-)

சாப்பிட்டு விட்டு பேசிக்கொண்டு இருந்த போது ஒரு ஆகிருதியான நண்பர் வந்து மணிஜியிடம் "நீங்க தானே மணிஜி" என கேட்ட போது தாடியை தாண்டி மணிஜிக்கு வெட்கம் வழிந்தது. இருங்க வாசகர்களே, இந்த கூட்டம் முடிந்து நான் வீட்டுக்கு போய் சேரும் முன்னே யாராவது "நீங்க தானே அபிஅப்பா" என கேட்பாங்க. நானும் எழுதி பெருமைப்படத்தான் போறேன்.

வால்பையன்... ஒரு வெளிப்படையான மனுஷன். ஐ லைக் ஹிம். படபடன்னு பேச்சு. மனதில் நினைப்பதை படார்ன்னு பேசும் ஒரு குணம். ஐ லைக் ஹிம். மழைக்குழந்தைகள் நலமான்னு கேட்டேன். ரொம்ப நலம். நல்லா வாயாடுறாங்க பசங்கன்னு சொன்னார்.

சங்கவி: ஈரோட்டில் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நன்றாக கவனித்து கொண்டார் என கிட்ட தட்ட 250 பதிவர்களும் எழுதும் படியாக எல்லா இடத்திலும் வியாபித்து இருந்தார். என்ன ஒரு கனிவான கவனிப்பு. அருள்பாலிக்கும் முகம். பல பேர் வீட்டுக்கு வந்து ASL டைப் அடித்த காரணத்தால் விரலை நசுக்கியிருப்பர்:-) அதே போல பாலாசி... ஒரு கூட்ட ஒருங்கிணைப்புன்னா அதை ஈரோடு சங்கமம் குழுவினர் கிட்டே தான் கத்துக்கனும்யா...

தருமி சார்.... ஜிப்பா, கண்ணாடி எல்லாம் போட்டுகிட்டு ஜம்முன்னு வந்திருந்தார். பக்கத்தில் இருந்த பிரபல பதிவர் ஒருத்தர் கிட்டே "இது யார் தெரியுதா" என கேட்டேன். "ம்.. தெரியுமே சிங்கை மணற்கேணி விருது வாங்க போன போது என்னவோ குனிஞ்சு பார்த்து கிட்டு இருந்தாதே... தெரியாதா பின்ன"ன்னு சொன்னாரு. அட மகாபாவிங்களா, அவரு எத்தனை நல்ல பதிவு எழுதியிருக்காரு. அது எல்லாம் ஞாபகம் இல்லையாம். இது மாத்திரம் ஞாபகம் இருக்குதான். கெட்ட உலகமடா சாமீ:-)

மிகுந்த நன்றியோடு இரவு ஒரு மணி மைசூர் எக்ஸ்பிரஸ் பிடிச்சு மாயவரம் பயணமானோம். விந்தையும் அவர் தம்பியும் ஜங்சனில் இருந்து திருத்துரைப்பூண்டி நோக்கி பயணமாக நான் வீட்டுக்கு காலை 7 மணிக்கு வந்தேன். வாசலில் ஒரு பெண் நின்று கொண்டு காலிங் பெல் அடித்து கொண்டிருந்தாங்க. என்னைப்பார்த்ததும் "அடடே, நீங்க தான அபிஅப்பா" என கேட்டாங்க. ஜென்மசாபல்யம் ஆச்சுது. ஈரோட்டில் இருந்து துரத்தி வந்த ரசிகை போலிருக்கு!

"ஆமாங்க நான் தான். என் பதிவு எல்லாம் படிச்சு இருக்கீங்களா? ரொம்ப நன்றிங்க" என சொன்ன போது அவங்க "ங்ஏ" ஆகி "என் பொண்ணு அபிகூட படிக்கிறா. அவ நோட்ஸ் காணாம போயிடுச்சு. அதான் அபிகிட்டே வாங்கிட்டு போகலாம்ன்னு வந்தேங்க"

நான் இன்னும் வளரனும் தம்பி!!!!



47 comments:

  1. பதிவின் இறுதியில் உங்க டச்சிங்!

    ReplyDelete
  2. தாங்கள் வந்து நிகழ்ச்சியை சிறப்பித்ததில் மிக்க மகிழ்ச்சி பங்காளி...

    ReplyDelete
  3. ஆஹா..ஈரோடு சங்கமத்துக்கு நீங்க வந்திங்களா..?!அமுக்கமா இருந்திட்டிங்களே தல...உங்கள பாக்காம மிஸ் பண்ணிட்டனே..!! பாத்திருந்தா ஆட்டோகிராப்பும்,போட்டோகிராப்பும் கிடைச்சிருக்கும். :)

    ReplyDelete
  4. ஒரு சில பதிவர்கள் பற்றி (மட்டுமே) எழுதிருக்கீங்க. மற்றவர்கள் பற்றியும் அடுத்த பாகம் வருமா?

    ReplyDelete
  5. அற்புதம்.வழக்கம் போல உங்கள் பாணி சூப்பர்.

    ReplyDelete
  6. உங்கள் பாணியில் தொகுத்து வழங்கியிருக்கும் விதம் அருமை:)!

    ReplyDelete
  7. உங்களுடைய புகைப்படக்காரர் உங்கக்கூட
    வரலையா?
    பதிவு
    ஒரே
    வறட்சி
    வாத்...யாரே!

    ReplyDelete
  8. அண்ணே மொத நாள் இரவு பாத்துட்டு மறுநாள் காலையில் நீ எப்படா வந்தேன்னு கேட்டத்தையும் எழுதிருக்கலாம் ...

    கலக்குறீங்க அபி அப்பா :)))

    ReplyDelete
  9. நல்ல் பயணக் கட்டுரை ;)

    ReplyDelete
  10. கலைஞர் பாணியில் நகைச்சுவை கலந்த படைப்பு, அருமை நன்றிகள்

    ReplyDelete
  11. ஏண்ணே, முதல் நாள் இரவு என்னுடைய ரூமுக்கு மணிஜியை நீங்களும் பிரபாவும் சேர்ந்து தூக்கிட்டு வந்து போட்டு, பிறகு அவர் எழுந்ததும் என்னிடம் பேசிக் கொண்டிருந்ததை எழுதவில்லையே, போதையில் மறந்து விட்டீரே, நானும் திருவாரூர் தான்யா.

    ReplyDelete
  12. சார் வெகுவாய் இருக்கு சிரிச்சிக்கிட்டே இருந்தேன்..கடைசியில் அட்டகாசம் பாவம் உங்க மனசை தேத்த கடவுள் அனுப்பிய பிரதிநிதியா கூட இருக்கலாம்...

    ReplyDelete
  13. யோவ், இந்த மாதிரி தொடர்ந்து எழுதித் தொலைத்தால் என்னவாம்? அதகளம்.

    ReplyDelete
  14. //"ஆமாங்க நான் தான். என் பதிவு எல்லாம் படிச்சு இருக்கீங்களா? ரொம்ப நன்றிங்க" என சொன்ன போது அவங்க "ங்ஏ" ஆகி "என் பொண்ணு அபிகூட படிக்கிறா. அவ நோட்ஸ் காணாம போயிடுச்சு. அதான் அபிகிட்டே வாங்கிட்டு போகலாம்ன்னு வந்தேங்க"//

    தேவையா? :)

    ReplyDelete
  15. ரொம்ப ரசனையான பதிவு சார். இப்படி உங்கள யாருமே கேக்கலயேன்னு வருத்தமா இருக்கு. முன்னமே சொல்லியிருந்தா நானாச்சும் “ நீங்கதான் அபி அப்பாவா”னு கேட்டிருப்பேன்.

    அந்த பாக்கியத்தை இழந்துட்டேனே :))))

    ReplyDelete
  16. ஈரோடு சங்கமத்தில் ரசனையாக பங்கேற்றோம். அருமை.

    ReplyDelete
  17. //கெட்ட உலகமடா சாமீ:-)//

    ஆமாங்க .. ஆமாங்க ..!

    ReplyDelete
  18. சங்கமத்தில் பங்கேற்றுச் சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  19. கலக்கல் தொல்ஸ்...

    ஜாக்கியை இருட்டடிப்பு செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  20. கலக்கல், அபி அப்பா ;))

    ReplyDelete
  21. அன்பின் தொல்ஸ் = நலமா = மாயவரத்தில் பார்த்தது. ஆயில்ஸ் கல்யாணத்தில் - இங்க எப்படி ஈரோட்ல பாக்க முடியாமப் போச்சு - பெரிய கூட்டமுல்ல - ம்ம்ம்ம் = நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  22. அருமையான பதிவு. நல்ல நகைச்சுவை நடை. மிகவும் ரசித்துப் படித்தேன்.
    மனப்பூர்வ வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. Arumaiya, Vithiyasama eluthi irukkinga.
    Tamilmanam vote 11.

    ReplyDelete
  24. //வால்பையன்... ஒரு வெளிப்படையான மனுஷன். ஐ லைக் ஹிம். படபடன்னு பேச்சு. மனதில் நினைப்பதை படார்ன்னு பேசும் ஒரு குணம். ஐ லைக் ஹிம். மழைக்குழந்தைகள் நலமான்னு கேட்டேன். ரொம்ப நலம். நல்லா வாயாடுறாங்க பசங்கன்னு சொன்னார்.//


    உங்க டைமிங் காமெடியையும் நான் வெகுவாக ரசித்தேன்!, மீண்டும் சந்திக்க ஆவலாக உள்ளேன், விரைவில் மயிலாடுதுறையிலேயே சந்திப்போம்!

    ReplyDelete
  25. அபி அப்ப சார் ,,,,
    இந்த நாய் நக்ஸ்----நக்கீரன
    மறந்துட்டீங்களே ?????

    ReplyDelete
  26. NIZAMUDEEN said...
    பதிவின் இறுதியில் உங்க டச்சிங்!
    மிக்க நன்றி நிசாம்!
    December 21, 2011 3:17 PM
    சங்கவி said...
    தாங்கள் வந்து நிகழ்ச்சியை சிறப்பித்ததில் மிக்க மகிழ்ச்சி பங்காளி...
    அடடே நாங்க தான் நன்றி சொல்லனும்!
    December 21, 2011 3:17 PM
    சேலம் தேவா said...
    ஆஹா..ஈரோடு சங்கமத்துக்கு நீங்க வந்திங்களா..?!அமுக்கமா இருந்திட்டிங்களே தல...உங்கள பாக்காம மிஸ் பண்ணிட்டனே..!! பாத்திருந்தா ஆட்டோகிராப்பும்,போட்டோகிராப்பும் கிடைச்சிருக்கும். :)
    சேலம் தேவாவை பார்த்தேன். ஆனால் பேசவில்லை:-))
    December 21, 2011 3:21 PM
    NIZAMUDEEN said...
    ஒரு சில பதிவர்கள் பற்றி (மட்டுமே) எழுதிருக்கீங்க. மற்றவர்கள் பற்றியும் அடுத்த பாகம் வருமா?
    இல்லை நிசாம், நான் இரு நாட்களாக உடல் நலமில்லை. இது எழுதியதே பிரண்ட் ராமலெஷ்மி "உங்க பார்வை என்ன?"ன்னு கேட்டதால தான். உடல் நலம் சரியான பின்னே எழுத முயல்கிறேன்!
    December 21, 2011 3:21 PM
    RAVI said...
    அற்புதம்.வழக்கம் போல உங்கள் பாணி சூப்பர்.
    நன்றிங்க!
    December 21, 2011 3:24 PM
    ராமலக்ஷ்மி said...
    உங்கள் பாணியில் தொகுத்து வழங்கியிருக்கும் விதம் அருமை:)!
    மிக்க நன்றிங்க!
    December 21, 2011 3:24 PM
    NIZAMUDEEN said...
    உங்களுடைய புகைப்படக்காரர் உங்கக்கூட
    வரலையா?
    பதிவு
    ஒரே
    வறட்சி
    வாத்...யாரே!
    இல்லை என் புகைப்பட கருவி பழுது என்பது ஒரு விஷயம். பலர் எடுத்தனர், அதை எடுத்தும் போடலாம். ஆனால் எழுத்தை விட அவர்கள் புகைப்படம் அதிக தாக்கம் ஏற்படுத்தும் என்னும் பொறாமை தான். ஏனனில் அனைவரும் அருமையான புகைப்பட வித்தகர்கள்.
    December 21, 2011 3:25 PM
    வானம்பாடிகள் said...
    =))))).அட்டகாசம்
    அண்ணே உங்கள் பங்களிப்பால் தான்!
    December 21, 2011 3:35 PM
    கே.ஆர்.பி.செந்தில் said...
    அண்ணே மொத நாள் இரவு பாத்துட்டு மறுநாள் காலையில் நீ எப்படா வந்தேன்னு கேட்டத்தையும் எழுதிருக்கலாம் ...
    கலக்குறீங்க அபி அப்பா :)))
    செந்தில்!:-)) பல விஷயம் ஆஃப் தி ரெக்காட்:-))

    December 21, 2011 3:36 PM
    வி.பாலகுமார் said...
    நல்ல் பயணக் கட்டுரை ;)
    நன்றிங்க!
    December 21, 2011 3:40 PM
    ராம்ஜி_யாஹூ said...
    கலைஞர் பாணியில் நகைச்சுவை கலந்த படைப்பு, அருமை நன்றிகள்
    ஆகா ராஜரிஷி வாயால் வசிஷ்டர் பட்டம். குமாரு இருக்கான் கடவுளே:-)) என்பது போல!
    December 21, 2011 3:50 PM

    ReplyDelete
  27. ஆரூர் முனா செந்திலு said...
    ஏண்ணே, முதல் நாள் இரவு என்னுடைய ரூமுக்கு மணிஜியை நீங்களும் பிரபாவும் சேர்ந்து தூக்கிட்டு வந்து போட்டு, பிறகு அவர் எழுந்ததும் என்னிடம் பேசிக் கொண்டிருந்ததை எழுதவில்லையே, போதையில் மறந்து விட்டீரே, நானும் திருவாரூர் தான்யா.
    ஆனா மூனா செந்திலு! இதல்லாம் நேக்கு தெரியாதே! :-))
    December 21, 2011 4:27 PM
    தமிழரசி said...
    சார் வெகுவாய் இருக்கு சிரிச்சிக்கிட்டே இருந்தேன்..கடைசியில் அட்டகாசம் பாவம் உங்க மனசை தேத்த கடவுள் அனுப்பிய பிரதிநிதியா கூட இருக்கலாம்...

    தமிழரசி! ஆனா ரொம்ப பாவம்ப்பா நீ! :-)))
    December 21, 2011 4:37 PM
    அனுஜன்யா said...
    யோவ், இந்த மாதிரி தொடர்ந்து எழுதித் தொலைத்தால் என்னவாம்? அதகளம்.
    நான் என்ன வச்சுகிட்டா வஞ்சனை பண்றேன்:-)) நீங்க எல்லாம் வந்து இதுக்கு பின்னூட்டம் போடுவீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லைங்க.
    December 21, 2011 4:55 PM
    கவிதா | Kavitha said...
    //"ஆமாங்க நான் தான். என் பதிவு எல்லாம் படிச்சு இருக்கீங்களா? ரொம்ப நன்றிங்க" என சொன்ன போது அவங்க "ங்ஏ" ஆகி "என் பொண்ணு அபிகூட படிக்கிறா. அவ நோட்ஸ் காணாம போயிடுச்சு. அதான் அபிகிட்டே வாங்கிட்டு போகலாம்ன்னு வந்தேங்க"//
    தேவையா? :)
    கவிதா! என்ன ஒரு சந்தோஷம்:-))
    December 21, 2011 5:06 PM
    கோவிந்தராஜ்,மதுரை. said...
    உங்கள் பாணியில் தொகுத்து வழங்கியிருக்கும் விதம் அருமை!
    நன்றிங்க!
    December 21, 2011 5:34 PM
    Gopi Ramamoorthy said...
    :-)))
    நன்றி கோபி!
    December 21, 2011 5:35 PM
    கோமாளி செல்வா said...
    ரொம்ப ரசனையான பதிவு சார். இப்படி உங்கள யாருமே கேக்கலயேன்னு வருத்தமா இருக்கு. முன்னமே சொல்லியிருந்தா நானாச்சும் “ நீங்கதான் அபி அப்பாவா”னு கேட்டிருப்பேன்.
    அந்த பாக்கியத்தை இழந்துட்டேனே :))))
    அடடே, கோமாளி செல்வா! நோ பிராப்ளம்! அடுத்த சங்கமத்தில் பார்ப்போம்!
    December 21, 2011 5:48 PM
    மாதேவி said...
    ஈரோடு சங்கமத்தில் ரசனையாக பங்கேற்றோம். அருமை.

    நான் உங்களை பார்க்கவே இல்லியே?
    December 21, 2011 6:07 PM
    தருமி said...
    //கெட்ட உலகமடா சாமீ:-)//
    ஆமாங்க .. ஆமாங்க ..!
    அட ஆமாம் சார்!
    December 21, 2011 7:04 PM
    தாமோதர் சந்துரு said...
    சங்கமத்தில் பங்கேற்றுச் சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி.

    உங்களுக்கு எங்கள் நன்றி சார்!
    December 21, 2011 7:20 PM
    sriram said...
    கலக்கல் தொல்ஸ்...
    ஜாக்கியை இருட்டடிப்பு செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்
    பாஸ்டன் ஸ்ரீ! சத்தியமாக நான் ஜாக்கியை நான் மறந்தே போனேன். ஏனனில் அவர் என் கூடவே இருந்தார் என்பதால்! நான் வேறு அவர் வேறுன்னு நினைக்கவில்லை. இதை ச்சேட்லயும் சொல்லிட்டேன் உங்க கிட்ட. இதுக்கு பேர் தான் சொல்வதா "தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்"ன்னு?
    December 21, 2011 7:40 PM
    pon.vasudevan said...
    அருமையான பதிவு
    நன்றி வாசு! உங்களை பத்தி அருவி செல்வம் பத்தி அதிகம் எழுத விசயம் இருக்கு. அடுத்தடுத்த பதிவிலே எழுதனும்
    December 21, 2011 8:59 PM
    Rathnavel said...
    அருமையான பதிவு. நல்ல நகைச்சுவை நடை. மிகவும் ரசித்துப் படித்தேன்.
    மனப்பூர்வ வாழ்த்துகள்.
    மிக்க நன்றி ரத்னவேல்!
    December 21, 2011 9:02 PM
    துரைடேனியல் said...
    Arumaiya, Vithiyasama eluthi irukkinga.
    Tamilmanam vote 11.
    மிக்க நன்றிங்க!
    December 21, 2011 9:10 PM
    வால்பையன் said...
    //வால்பையன்... ஒரு வெளிப்படையான மனுஷன். ஐ லைக் ஹிம். படபடன்னு பேச்சு. மனதில் நினைப்பதை படார்ன்னு பேசும் ஒரு குணம். ஐ லைக் ஹிம். மழைக்குழந்தைகள் நலமான்னு கேட்டேன். ரொம்ப நலம். நல்லா வாயாடுறாங்க பசங்கன்னு சொன்னார்.//
    உங்க டைமிங் காமெடியையும் நான் வெகுவாக ரசித்தேன்!, மீண்டும் சந்திக்க ஆவலாக உள்ளேன், விரைவில் மயிலாடுதுறையிலேயே சந்திப்போம்.\\
    கண்டிப்பா வாலு! உன்னை மாயவரத்திலே அதிகம் எதிர்பார்கிறேன். நாம அடுத்து மாயவரத்திலே சந்திப்போம்!

    ReplyDelete
  28. அடுத்த சந்திப்புகளில், ஐட்டீ ஆப்பிசர் போல, கழுத்தில் மாட்டிக் கொள்ள ஐ.டி. கார்ட் தரச்சொல்லலாம். அப்ப யாரும் கேக்கலைன்னாலும் கவலையில்லல்ல!! :-)))))))

    ReplyDelete
  29. நானும் கேக்குறேங்க நீங்க தான அபி அப்பா?

    ReplyDelete
  30. நடந்த சுவாரஸ்யங்கள் ,உங்கள் எள்ளல் கலந்த நடையில் இன்னும் சுவாரஸ்யம்.நான் வராததை உங்கள் பதிவு எல்லாம் பார்க்கும் போது ஈடு செய்வதாக இருக்கிறது.

    ReplyDelete
  31. அபி அப்பா, முன்னைக்கு இப்போத் தமிழ் எழுதறது பரவாயில்லை; ஆனால் கடைசியிலே கோட்டை விட்டிருக்கீங்களே?

    "ஙே" ஒழுங்கா எழுதவேண்டாம்? "ங்ஏ"னா எழுதறது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் லக்ஷம் முறை இம்பொசிஷன் எழுதுங்க. :))))

    ReplyDelete
  32. தொகுத்த விதமும் நகைச்சுவையும் அருமை.. நல்ல எழுத்து நடை.. இதை வெச்சிக்கிட்டு எங்கேயோ போகலாம்....

    அங்க நம்ம ஊரைப்பத்தியும் ஸ்கூலைப் பத்தியும் யார்கிட்டேயாவது பேசினியா ராஜா...

    அன்புடன் சீமாச்சு...

    ReplyDelete
  33. //அனேகமாக 19ம் தேதி இலக்கியத்துக்கு பால் முடிந்திருக்கும்.//

    //எல்லோரும் கைதட்டும் போது மலர்வனம் லெஷ்மி கண்ணிலே மட்டும் கண்ணீர். ஆமாம் அப்போது தான் கனிவமுதன் லெஷ்மி காதை கடித்துவிட்டிருந்தான்.//

    //"வாயாடலாம் தப்பில்லை. பல்லாடக்கூடாது" //

    //ஈரோட்டில் இருந்து துரத்தி வந்த ரசிகை போலிருக்கு!//

    இப்படி....பதிவு முழுக்க நகைச்சுவையா எழுதிவிட்டு, ‘லேபிள்’-ல ஏன் பாஸ் ‘ நகைச்சுவை’-ன்னு போடாம விட்டீங்க?

    குறிப்பா காது கடிபட்ட... எல்லள் சிரிப்பை அடக்க முடியல.

    ReplyDelete
  34. உங்களுக்கே உரித்தான நடையில் சுவாரஸ்யமான பகிர்வு..

    ReplyDelete
  35. அருமை அபி அப்பா..............உங்கள் எழுத்துப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  36. அருமை அபி அப்பா அவர்களே ..............உங்கள் எழுத்துப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  37. அருமை அபி அப்பா அவர்களே ..............உங்கள் எழுத்துப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  38. Abi Appa

    Very Nice. 1 lac time imposition. Really I feel very sorry.
    இந்த மாதிரி தொடர்ந்து எழுதித் தொலைத்தால் என்னவாம்? அதகளம். Repeatuuuuu
    Anbudan
    Nalina

    ReplyDelete
  39. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
    எனது ப்ளாக்கில்:
    பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
    புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
    A2ZTV ASIA விடம் இருந்து.

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))