தமிழகத்தின் ஒரு சாராதரண நகரம் மயிலாடுதுறை. அதன் இன்றைய மின்வெட்டு நிலவரம் என்பது காலை 6 முதல் 9 வரை, மதியம் 12 முதல் 3 வரை, மாலை 6.30 முதல் 7.30 வரை, இரவு 9 முதல் 10 வரை. ஆக அறிவிக்கப்பட்ட மின்வெட்டு எட்டு மணி நேரம் கணக்கு சரியாகிவிட்டது. ஆனால் அதன் பின்னர் நடப்பதை கூட எந்த பத்திரிக்கையும் எழுதுவதில்லை. யாரும் அதைப்பற்றி சிந்திப்பதும் இல்லை. அதை இதோ சொல்கிறேன். இரவு 10 மணிக்கு வரும் மின்சாரம் 11 மணிக்கு போய்விடும். இது எந்த கணக்கில் வரும். மேலே சொல்கிறேன் கேட்கவும். இரவு 11 முதல் 12 வரை இருக்காது. பின்னர் 12. 30 முதல் 1 மணி வரை, பின்னர் 2 முதல் விடியல்காலை 3 வரை, பின்னர் 4 முதல் 5 வரை இருக்காது. ஆக இரவில் மூன்றரை மணி நேரம். ஆக மொத்தம் 11.30 மணி நேரம். இது தவிர போனஸ் நேரமாக அப்பப்போ பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை. அது ஒரு முப்பது நிமிடம். ஆக ஒரு முழு நாளில் இருக்கும் 24 மணி நேரத்தில் 12 மணி நேரம் மின்சாரம் இல்லை. இல்லாத மின்சாரத்துக்கு மாதம் ஒரு முறை முழு மின்வெட்டு. அது பராமரிப்புக்காகவாம்.
நாம் எந்த காலத்தில் இருக்கின்றோம்? கிட்டத்தட்ட எல்லோருமே மின்சார வாழ்கைக்கு பழகியாகிவிட்டது. இன்வர்டர் வைத்து கொள்ளும் வசதி இந்த தமிழகத்தின் ஒன்னரை முதல் இரண்டு கோடி குடும்பத்தில் எத்தனை ஆயிரம் பேரிடம் இருக்மும்? சுமாராக பத்தாயிரம் முதல் இருபத்தி ஐந்து ஆயிரம் குடும்பங்கள்? வேண்டாம் ... நாம் அது ஒரு பத்து லட்சம் குடும்பங்களிடம் இருப்பதாகவே கொள்வோம். சரி அப்படியே இன்வர்டர் வைத்து கொண்டாலும் ஒரு லைட், ஒரு ஃபேன் என ஒட்டு மொத்த குடும்பமே அதில் தான் உழண்டு கிடக்க வேண்டும். இதிலே படிக்கும் மாணவர்களுக்கு அந்த ஒரு லைட் வசதியை கொடுப்பதா? அல்லது குடும்ப தலைவிக்கு சமைக்க வெளிச்சம் கொடுப்பதா? அப்படி பார்த்தாலும் இன்வர்டர்களுக்கு ஃபீடிங் அதாவது அது வாழ தேவையான மின்சாரம் மீதி நேரம் கிடைக்கின்றதா என்றால் அதும் இல்லை.சரி இன்வர்டர் வைத்து கொள்பவர்களின் நிலை இது என்றால் இல்லாத மீதி ஒன்னேமுக்கால் கோடி குடும்பத்தின் நிலை என்ன?
இங்கே எங்கள் பகுதியில் முக்கிய வாழ்வாதாரமே விவசாயம் மட்டுமே. இங்கே முப்போகம் விளைந்தால் மட்டுமே தமிழகம் முழுவதும் , ஏன் தமிழகம் தாண்டியும் சுபிட்சம் இருக்கும். முப்போகம் விளைய நாங்கள் காவிரியை மட்டும் நம்பி இருக்க முடியாது. போர்செட் இல்லாமல் எதுவும் நடக்காது. 24 மணி நேரம் மின்சாரம் கண்டிப்பாக வேண்டும். இப்போது என்ன நடக்கின்றது? விவசாயம் நசிந்து விட்டது. விவசாயிகள் நடுத்தெருவில் நிற்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அடுத்த ஆறு மாதத்தில் இவன் விளைவிக்காமல் போன நெல்லால் அரிசி பஞ்சம் வருமே, அரிசி விலை ஏறுமே அது எந்த கணக்கில் வரும். இவன் விளைவிக்காமல் போன கரும்பு காரணமாக ஜீனி கிடைக்காதே, அப்படியெனில் வரும்காலம் கருப்பட்டி காப்பி தானா தமிழகத்தில். நான் மீண்டும் பழங்காலம் நோக்கி பயனிக்கட்தான் வேண்டுமா? இது தான் ஒரு ஆளும் கட்சி ஆளும் அரசு தனக்காக ஓட்டு போட்ட மக்களுக்கு செய்யும் நன்றியா?
நசவுத்தொழில் அந்த காலம் போல காலை கையை ஆட்டி தறி போடுவது என்பது எல்லாம் போயே போச். இப்போது எல்லாமே மின் மோட்டார் சகிதம் தான், எல்லாமே விசைத்தறி தான். கூறைநாடு, திருபுவனம், கும்பகோணம் இங்கெல்லாம் பட்டு தொழிலை நம்பி இருக்கும் மக்கள் வயிற்றில் மண். அதே போல துகிலி, கஞ்சனூர் எல்லாம் கைத்தறி நசவாளர்கள் கோவிந்தா கோவிந்தா. சிறு மற்றும் குறுந்தொழில்கள் எல்லாம் மூடப்பட்டு வருகின்றன.
அத்தனை ஏன்? மீன்பிடி தொழில்..... எங்கள் மாவட்டத்தை எடுத்து கொண்டால் திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகத்தில் ஆரம்பித்து பூம்புகார், சின்னங்குடி, தரங்கம்பாடி, பொறையாறு பின்னே காரைக்காலை விடுத்து அடுத்து அக்கரைப்பேட்டை, நாகை, வேதாரண்யம், பின்னர் அடுத்த மாவட்ட பகுதிகள் பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் எல்லாம் மீன் பிடித்தொழில் மட்டுமே பிரதானம். மீன் பிடிக்க மின்சாரம் எதுக்கு எனகேட்கும் மக்களே, மீனை பிடித்து கொண்டு வந்து எங்கே கொட்டுவாங்க. நான் மேலே சொன்ன எல்லா ஊர்களிலும் ஐஸ் பேக்டரி... அது இயங்காவிட்டால்... மீன் கரைக்கு வந்து என்ன பிரயோசனம்? ஐஸ் தயாரிக்க 12 மணி நேர மின்சாரம் பத்தாது. பத்தவே பத்தாது. ஜெனரேட்டர் வைத்து கொள்ளும் வசதி படைத்த ஐஸ் கம்பனிகள் மட்டும் ஐஸ் உற்பத்தி செய்கின்றது. ஆக சின்ன சின்ன ஐஸ் கம்பனிகள் அவுட். அந்த பெரிய கம்பனிகள் வைத்தது தான் விலை. அதை வாங்கும் மீனவர்கள் அந்த விலை ஏற்றத்தை மீன் தலையில் வைக்க ஒட்டு மொத்த மீன் விலையும் கொடிகட்டி பறக்கின்றது. அப்படியே ஆகினும் அந்த கம்பனிகளால் ஓரளவுக்கு மேல் ஐஸ் சப்ளை செய்ய இயலவில்லை. அதனால் மீன் பிடிக்க போகும் முன்னே ஐஸ்க்கு பதிவு செய்து கொண்டு போனவர்களுக்கு மட்டும் தான் ஐஸ். எனவே மற்ற மீனவர்கள் கடலுக்கு போவதில்லை. அவர்கள் வயிற்றில் ஈரத்துணி.மீன் வரத்து குறைந்து போய் அவர்களும் தாங்கள் பிடித்த மத்தி மீன்களை கேரளத்துக்கு மட்டும் அனுப்பி விட்டு இங்கே அசைவ ஹோட்டல்கள் எல்லாம் அதீத விலையேற்றம். அனுபவித்து பார்தவர்களுக்கு வலி புரியும்.
ஆக விவசாயம், நசவு, மீன்பிடி, சிறு மற்றும் குறுந்தொழில் எல்லாம் போயாச்சு. சரி கடைத்தெரு என எடுத்து கொண்டால் ஒரு ஜெராக்ஸ் (போட்டோகாப்பி) கடை, டைலர் கடை,அச்சகம், ஜூஸ்கடை என எதை தொட்டாலும் மின்சாரம் தேவைப்படுது. அவர்கள் வாழ்கை தொலைந்து போய்விட்டது.
சரி மாணவர்கள் நிலை? யாரும் படிக்க இயலவில்லை. +2 படிப்பவன் அவன் பெற்றோர் எல்லாம் இப்போது என்ன செய்வது என கையை பிசைந்து கொண்டிருக்க, அதை விட கொடுமை இப்போது செய்முறை தேர்வும் நடந்து கொண்டிருக்க இயற்பியல், வேதியல், கம்பியூட்டர் சயின்ஸ் என எதை தொட்டாலும் மின்சாரம் தேவை. அவர்கள் பழகி பார்க்க மின் தட்டுப்பாடு காரணமாக நேரிடையாக தேர்வுக்கு சென்று ..... இந்த கஷ்டம் எல்லாம் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், அதிலே படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கும் தான். கொஞ்சம் வசதி படைத்தவர்கள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்க வைத்த காரணத்தால் அங்கே ஜெனெரேட்டர் வசதி இருக்கு. (அதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகின்றது) . ஆக இந்த மே மாதம் ரிசல்ட் பார்த்தால் கிராமப்புற மாணவர்கள் நகர மாணவர்களின் தேர்சி சதத்தைவிட குறைவாக இருப்பர். பத்தாவது மாணவர்கள் கதி அதோகதி ஆகிவிட்டது. ஏற்கனவே அவர்களுக்கு மூன்று மாதம் புத்தகம் இல்லாமல் செய்துவிட்டது இந்த அரசு. இப்போது இந்த கொடுமையும் சேர்ந்து விட்டது.
போகட்டும், அரசு மருத்துவமனை எல்லாம் என்ன லட்சனத்தில் இருக்கின்றது? மெழுகுவத்தி வைத்து கொண்டு குடும்பகட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடைபெறுவதாக பத்திரிக்கை செய்தி.பகலிலேயே பசுமாடு தெரியாது. இதிலே இருட்டிலே எப்படி எருமை மாடு தெரியும்? விளங்கிடும்.... எதை நறுக்கி தொலைக்க போகின்றனரோ?
எல்லாம் போகட்டும்.... எல்லாம் போகட்டும்..... இந்த கட்டுரையில் என் கேள்வி என்பதே இங்கே தான் தொடங்குகின்றது. இப்படி தமிழகத்தில் ஒட்டு மொத்த பொருளாதாரத்தை காணடிக்க செய்யும் அளவு பூதாகரமாக ஒரு பிரச்சனை வந்துவிட்டது. மின்சாரம் தயாரிப்பது என்பது மத்திரத்தில் மாங்காய் காய்க்க வைக்கும் நிகழ்வு அல்ல. ஆனால் நம் தமிழகத்தின் ஒட்டு மொத்த மின் தேவை என்பது எத்தனை மெகாவாட் ஒரு மாதத்துக்கு? தற்போதைய உற்பத்தி எத்தனை மெகாவாட்?பற்றாக்குறை எவ்வளவு? அதை சரி கட்ட என்ன செய்தோம்,அல்லது மின்சிக்கனம் செய்ய என்ன செய்யக்கூடாது? என்றெல்லாம் இந்த தமிழக அரசு யோசித்து பார்த்ததா என்றால் ஒரே பதில் இல்லை என்பது மட்டுமே.
கடந்த திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அதிமுகவை ஆட்சியில் அமரவைக்க நினைத்த பத்திரிக்கைகள் தேர்தலின் போது ஒட்டு மொத்தமாக கூப்பாடு போட்டது மின்வெட்டு பிரச்சனைக்காக தான். அப்போது தமிழகத்தில் மின்வெட்டு என்பது மொத்தம் இரண்டு மணி நேரம் மட்டுமே. அதும் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் ஒரே நேரத்தில் போகாது. மாதம் ஒரு முறை சுழற்சி முறையில் இரண்டு மணி நேரம் அறிவிப்பு செய்துவிட்டு நிறுத்தம் செய்யப்பட்டது. தவிர சென்னைக்கு மின்வெட்டு கிடையாது. கிடையாது என்றால் கிடையவே கிடையாது. ஏப்ரல் 13ம் தேதி 2011 அன்று தேர்தல் முடியும் வரை சென்னைக்கு மின்வெட்டு இல்லை. அதன் பின்னர் தேர்தல் முடிவு வெளியான மே 13 2011 வரை தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே சென்னைக்கு மின்வெட்டு. சென்னைக்கு மட்டும் ஏன் மின்வெட்டு இல்லை என காரணம் கேட்ட போது "தமிழகத்தின் ஒட்டு மொத்த அரசின் மற்ற மற்ற பிரிவுகளின் தலைமையகமும் இங்கே தான் இருக்கின்றது. தவிர தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டவர்கள் இங்கே மின்வெட்டால் பாதிக்க கூடாது" என்றெல்லாம் காரணம் சொல்லப்பட்டது. ஆனாலும் ஊடகங்கள் "தமிழக மந்திரிகள் எல்லோரும் சென்னையில் இருப்பதால் மின்வெட்டு இல்லை" என கூவின.
ஆனால் இப்போது... தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு என்பது எட்டு மணி நேரம். அறிவிக்காமல் ஒரு நான்கு மணி நேரம். சென்னையில் இன்றுவரை ஒரு மணி நேரம். நாளை முதல் அதை அதிகப்படுத்தப்போவதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் எந்த ஒரு பத்திரிக்கையும் இது பற்றி வாயை திறந்தது போல தெரியவில்லை. மாறாக வாய்கூசாமல் திமுக ஆட்சியில் மின்சார உற்பத்திக்கு எதும் செய்யவில்லை என கோயபல்ஸ் பிரச்சாரம் செய்து கொண்டு உள்ளன.
ஆனால் உண்மை நிலவரம் என்ன என்று பார்த்தால் 2001 முதல் 2006 வரை ஆட்சியில் இருந்த அதிமுக ஆட்சிகாலத்தில் எவ்வித மின் உற்பத்தி திட்டமும் ஆரம்பிக்கவில்லை. ஒரு சிறு துரும்பும் கிள்ளிப்போடவில்லை. ஆனால் 2006ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் அதாவது 2006 - 2011 வரையிலான திமுக ஆட்சியில் வருங்கால மின் தேவைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை பார்ப்போம்.
1) எண்ணூர் அனல் மின் நிலைய இணைப்பு முலமாக 600 மெகவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஒன்று 8-12-2006 யில் 3 ஆயிரத்து 136 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது; அதன் உற்பத்தி 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் தொடங்கும்
2) மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 3 ஆயிரத்து 100 கோடி மதிப்பீட்டில், 600மெகவாட் மின்சாரம் தயாரிக்ககூடிய ஒரு திட்டம் 2-5-2007ல் தொடங்கப்பட்டது; அதன் உற்பத்தி விரைவில் இயக்கத்திற்கு வரும்.
3) வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகவாட் மின்சாரம் தயாரிக்ககூடிய வகையில் 2 ஆயிரத்து 475 கோடி மதிப்பீட்டில் ஒரு திட்டம் 26-6-2007 ல் தொடங்கப்பட்டது; அதன் உற்பத்தி விரைவில் நடைமுறைக்கு வரும்
4) உடன்குடியில் பி எச் ஈ எல் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் இணைந்து கூட்டுத் திட்டத்தின் கீழ்; ஒவ்வொன்றும் 800 மெகவாட் மின் உற்பத்தி செய்யகூடிய இரண்டு திட்டங்கள் 15-10-2007 ல் 8 ஆயிரத்து 362 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டன. இதில் ஓர் அலகு 2013 ஆம் ஆண்டு மார்ச் திங்களிலும்; மற்றொரு அலகு 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் நடைமுறைக்கு வந்து உற்பத்தியை தொடங்கும்
5) வடசென்னை அனல் மின் நிலையத்திலேயே மேலும் 600மெகவாட் மின்சாரம் தயாரிக்க கூடிய ஒரு திட்டம் 2 ஆயிரத்து 475 கோடி மதிப்பீட்டில் 14-7-2008 ல் தொடங்கப்பட்டது.
6) ஆயிரத்து 126 கோடி செலவில், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆளைகளில்ருந்து 183 மெகவாட் இணை மின்சாரம் தயாரிக்ககூடிய திட்டம், 14-12-2009 ல் தொடங்கப்பட்டது.
7) மொத்தம் 4183 மெகவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் தி மு கழக ஆட்சியில் தொடங்கப்பட்டன.
8) 2006 யில் தி மு கழக ஆட்சி அமைந்த பிறகு, வருங்கால தேவையை கருத்தில் கொண்டு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக
2010-2011யில் 1400 மெகவாட் மின்சாரமும்
2011-2012யில் 3316 மெகவாட் மின்சாரமும்
2012-2013யில் 1222 மெகவாட் மின்சாரமும்
2013-2014யில் 1860 மெகவாட் மின்சாரமும்
ஆக மொத்தம் 7798 மெகவாட் மின்சாரமும் பல்வேறு மின் திட்டங்களின் முலமாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.
ஆக இதை எல்லாம் மூடி மறைத்து ஊடகங்கள் திமுக ஆட்சியை கீழே தள்ள வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக மின்வெட்டு என்பதை ஊதிப்பெரிதாக்கி அதிமுகவை ஆட்சியில் அமர வைத்தது. இலவச வண்ண தொலைக்காட்சியால் மின்சாரம் எல்லாம் போய்விட்டது என சொன்ன அதே பத்திரிக்கைகள் இன்று மிக்சி, கிரைண்டர், ஃபேன் ஆகியவைகள் என்னவோ சூரியசக்தியில் இயங்குவதாக நினைத்து கொண்டு வாய்மூடி கிடக்கின்றன.இது தான் பத்திரிக்கை தர்மமா?
ஆனால் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசோ, தமிழகத்தின் எதிர்கால மின் தேவைகளுக்காக இன்றைய தேதி வரை எத்தனை மின் திட்டங்கள் கொண்டு வந்தன என்பதை பட்டியலிட முடியுமா? போகட்டும் 2001 - 2006 வரை எதும் செய்யவில்லை. போகட்டும். ஆனால் 2011 சட்டமற்ற தேர்தலில் அதிமுக வெற்றிக்கு முக்கிய பிரச்சாரமாக மின்வெட்டு பிரச்சனையை பயன் படுத்திக்கொண்டதே அந்த நன்றிக்காகவாவது இந்த எட்டு மாதத்தில் ஒரே ஒரு மின் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததா என்றால் அதுவும் இல்லை.
ஆனால் ஊடகங்களோ அதிமுக ஆட்சிக்கு வந்ததும் "குஜராத்தில் இருந்து குதித்து வரும் மின்சாரம்" என தலைப்பிட்டு தன் அதிமுக பாசத்தை அறிவித்து கொண்டன. இன்றளவும் அந்த புழுகுமூட்டை பத்திரிக்கைகள் அதிமுக அரசின் மின் வெட்டு பிரச்சனை பற்றி வாயை திறந்தது உண்டா? இல்லை. அவர்களுக்கு தேவை திமுக அரசு வீட்டுக்கு போக வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோளேயன்றி மக்களுக்காக அரசிடம் இடித்துரைத்து திட்டங்கள் பெற்றுக்கொடுப்பது இல்லை என்பது வெட்ட வெளிச்சம் ஆகின்றது.
அதிமுக அரசுக்கு நிர்வாக திறன் என்பது ஒரு சதம் கூட இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான் எனினும் இங்கே சிலவற்றை குறிப்பிட்டே ஆக வேண்டும். ஏனவில் இப்போது சில அடிமட்ட அதிமுக பேச்சாளர்களும், அவர்களுக்கான பிரச்சார ஊடகங்களும் "திமுக ஆட்சியில் எல்லோருக்கும் தொலைக்காட்சி பெட்டி கொடுத்து எல்லாரும் அதை பயன்படுத்தி மின்சாரம் விரயமாகி போய்விட்டது" என்று வழக்கம் போல பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதே போல அந்த பத்திரிக்கைகள் அப்போது திமுக ஆட்சியில் இலவசங்கள் அதிகம் கொடுத்து கொடுத்து பணம் இல்லாமல் செய்து விட்டனர். அதனால் தனியாரிடம் இருந்து கூட மின்சாரம் வாங்க காசு இல்லை" என சொன்னது.
திமுக ஆட்சியில் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிக்கான திட்ட மதிப்பீட்டு தொகை 4500 கோடி ரூபாய். அதும் நன்கு திட்டமிடப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கும் பகிர்ந்து ஐந்தாம் ஆண்டு முடிவில் எல்லோருக்கும் தொலைக்கட்சி பெட்டி போய் சேரும் அளவிலான திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி வருடம் 900 கோடி மட்டுமே அதற்கான செலவு.
ஆனால் அதிமுக ஆட்சியில், ஒன்றரை வருடங்களில் 1.85 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் மூன்றும் தர வேண்டும். இதற்கான தேவை 9880 கோடி ரூபாய். வருடத்திற்கு 1500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மடிக்கணினி இலவசமாக வழங்க வேண்டும், ஒரு ரூபாய் அரிசியை இலவசமாக தருவதால் ஏற்பட்ட கூடுதல் செலவாக மட்டும் 6000 கோடி ரூபாய்கள். அதாவது இதுவரை அறிவித்துள்ள புதிய இலவச திட்டங்களுக்காகவே இந்த வருடம் கிட்டத்தட்ட 17500 கோடி ரூபாய்கள் வரையிலும் துண்டுவிழும்.
அது என்ன கணக்கு? அதாவது பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கொடுக்கவேண்டுமாம். என்னே ஒரு கரிசனம் தமிழக மக்கள் மீது! தேர்தல் வெற்றிக்காக மட்டுமே ஆட்சி இங்கே. ஆனால் அங்கே 4500 கோடி ரூபாய்க்கான இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிக்கு வருடத்துக்கு ஆகும் செலவே 900 கோடி மட்டுமே. இப்போது போல விலையில்லா அரிசி இல்லை. கிலோ ஒரு ரூபாய். அதனால் அப்போது அரசுக்கு அதிக இழப்பு இல்லாமல் போனது .அதாவது மாதம் 500 கோடி , வருடத்துக்கு 6000 கோடி ரூபாய். எதை வேண்டுமானாலும் விலை இல்லாமல் கொடுக்கலாம். ஆனால் ஒருவனுக்கு அவன் சாப்பிடும் அரிசியை விலையில்லாமல் கொடுத்தால் அது அவன் வயிற்றுக்கு சோறு போடும் பிச்சை. அந்த அளவு மாதம் 20 இந்திய ரூபாய் சம்பாதிக்க வக்கில்லாதவன் அல்ல நம் நாட்டு மக்கள் என்பதை திமுக அரசு உணர்ந்தது. அதனால் ஒரு ரூபாய் விலை என நிர்ணயம் செய்தது. அதனால் இப்போது தமிழக அரசுக்கு மாதம் தோறும் ஏற்படும் 500 கோடி இழப்பு அப்போது திமுக அரசுக்கு இல்லை.
இப்படியாக ஒரு இலவச திட்டம் அறிவித்தால் கூட அதை ஐந்து வருடத்துக்குமாக பேலன்ஸ் செய்து கைப்பிடிப்பு இல்லாமல் பட்ஜெட் போட்டு செலவு செய்து , மின்சாரம் தனியாரிடம் விலைக்கு வாங்கி ஒரு நாளைக்கு இரண்டு மணி நேர மின்வெட்டு என்கிற நிலையில் வைத்து இருந்த திமுக அரசு நிர்வாக திறமை வாய்ந்த அரசா அல்லது மேலே இருக்கும் பாராவில் இருப்பது போல தான்தோன்றித்தனமாக செயல்படும் அதிமுக அரசு நிர்வாகத்தில் சிறந்த அரசா?
இப்போது ஒரு புதுக்கதை விட்டுக்கொண்டு இருக்கின்றனர் அதிமுகவினரும் அவர்களின் அச்சு ஊடகங்களும். அது என்ன தெரியுமா? கூடங்குளம் மின் திட்டம் செயல்பட்டால் ஒட்டு மொத்த நமது மின் தேவையும் தீர்த்து விடுமாம். அதை அந்த பகுதி மக்கள் செயல்படுத்த விடாமையால் தான் இத்தனை பிரச்சனைக்கும் காரணமாம். இது என்ன கூத்து என்று தெரியவில்லை. அப்படியே கூடங்குளம் திட்டத்தால் கிடைக்கும் மின்சாரம் முழுக்க முழுக்க தமிழ்நாட்டுக்கே என மத்திய அரசு கூறினால் கூட இப்போது இருக்கும் 12 மணி நேரம் மின்வெட்டு என்பது 11.30 மணி நேரமாக மட்டுமே ஆகும் என்பதை யாராவது அதிமுக அரசுக்கு காதில் போடுவார்களா? ஆனால் மத்திய அரசு முழு மின்சாரத்தையும் தமிழகத்துக்கு மட்டுமே கொடுக்கவே கொடுக்காது. மத்திய அரசோடு ஒத்து போகும் திமுக அரசு இருந்தால் ஒருவேளை இது சாத்தியம். ஆனால் அதிமுக அரசு என்பது எல்லோரிடமும் சண்டைக்கோழி. அதன் தலைமைக்கு விட்டுக்கொடுக்கும் தன்மை என்பது எப்போதும் கிடையவே கிடையாது.
சரி, அந்த மக்கள் அங்கே கூடங்குளம் மின் திட்டம் செயல்படுவதில் பயம் கொள்கின்றனர் என்பது தானே அங்கே பிரச்சனை. உடனே தமிழக அரசு என்ன செய்து இருக்க வேண்டும். தன் நிலைப்பாட்டை சொல்லி இருக்க வேண்டும். "கூடங்குளம் வேண்டும் அல்லது வேண்டாம்" இதை சொல்லி இருக்க வேண்டும். ஆனால் இதில் மத்திய அரசு மாத்திரம் மக்களுடன் போராடி கொண்டு இருக்கும் போது நீங்கள் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டு காலம் தாழ்த்திக்கொண்டு இருப்பது ஏன்? கூடங்குளம் மின்சாரம் மட்டும் வந்தால் பிரச்சனை எல்லாம் தீரும் என நீங்கள் சொல்லும் போது கூடம்குளம் மின் திட்டம் வருவதில் உங்களுக்கு எதிர்ப்பு இல்லை என்று தானே பொருள். அப்படி என்றால் நீங்கள் என்ன செய்து இருக்க வேண்டும்?
அந்த மக்களின் பிரச்சனையை அதாவது பயத்தை நீக்கும் பொருட்டு "தமிழக சட்டமன்றம் இனி குளிர்கால கூட்ட்த்தொடர் அங்கே ஒரு கட்டிடம் கட்டி அதிலே நடத்தப்படும். அந்த காலங்களில் தமிழக முதல்வரும், அமைச்சர்களும் அங்கேயே தங்கி பணிபுரிவர், இனி தமிழ்நாட்டுக்கு வரும் முக்கிய வெளிநாட்டு விருந்தினர்கள் எல்லாருக்கும் ஒரு பத்து நாட்கள் தங்குவது போல இருந்தால் கூடங்குளம் பகுதியில் தமிழக அரசு விருந்தினர் மாளிகை கட்டி அங்கே தங்க வைக்கப்படுவர், தமிழக அளவிலான மாநில விளையாட்டுப்போட்டிகள் கூடங்குளத்தில் நடத்தப்படும், அத்தனை ஏன் தமிழக முதல்வர் இனி ஓய்வெடுக்க கொடநாட்டுக்கு போகாமல் கூடங்குளம் மட்டுமெ போவார்" என சொல்லிப்பாருங்கள். அந்த மக்கள் தெளிவடைந்து உங்களுக்கு மின்சாரம் உற்பத்திக்கு வழி விடுகின்றார்களா என பார்ப்போம். அதை செய்ய தமிழக அரசு தயாரா?
இதே நேரத்தில் இந்த கட்டுரை மின்சார தட்டுப்பாடு என்பதால் மத்திய அரசுக்கும் அதே வேண்டுகோள் தான் விடுக்கின்றோம். மக்களுக்கு அவேர்னஸ் கொடுக்கின்றோம் என்கிற பெயரில் கோடி ரூபாய் கொட்டி தொலைக்காட்சியில் விளம்பரம் கொடுப்பதற்கு பதிலாக இப்படி சொல்லிப் பாருங்களேன்,
1. ஓய்வு பெற்ற ஜனாதிபதிகள், பிரதமர்களுக்கு இனி அரசாங்க சார்பாக கொடுக்கப்படும் வீடுகள் இனி கூடங்குளம் பகுதியில் கொடுக்கப்படும். அதற்கு முன்னோடியாக நாளை முதல் திரு அப்துல்கலாம் அங்கே வசிக்க ஆரம்பிப்பார்.
2. இனி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், டெஸ்ட் மேட்சுகள் குறிப்பாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போட்டிகள் கூடங்குளத்தில் ஒரு அருமையான மைதானம் கட்டி அதிலே நடத்தப்படும்.
3. குடியரசு தின , சுதந்திர தின வெளிநாட்டு விருந்தினர்களுக்கு ஜனாதிபதி கூடங்குளத்தில் விருந்தளிப்பார்.
4. வெளிநாட்டில் இருந்து தொழில் தொடங்க வரும் தொழிலதிபர்கள் சந்திப்புகள் இனி கூடங்குளத்தில் மட்டுமே நடைபெறும்.
5. கூடங்குளம் பிரச்சனைக்காக உழைத்த மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கும், முன்னாள் ஈ வி கே எஸ் இளங்கோவனுக்கும் கூடங்குளம் மின் உற்பத்தி தொழிற்சாலை வளாகத்தின் உள்ளேயே அருமையாக நட்சத்திர அந்தஸ்து கூடிய வீடு ஒதுக்கப்படும்....
6.ஊட்டியில், கொடைக்கானலில் நம் தமிழக ஆளுனருக்கு "ராஜ்பவன்" இருப்பது போல ஆளுனருக்கும் கூடங்குளத்தில் ஆளுனர் மாளிகை கட்டப்படும். அதில் அவர் வருடத்துக்கு 3 மாதமாவது தங்கி தன் பணிகளை கவனிப்பார்.
இப்படி எல்லாம் சொல்லிப்பாருங்கள். அந்த பகுதி மக்களை சமாதானம் செய்துவிட்டு விரைவில் உற்பத்தி செய்யுங்கள். நீங்கள் சொன்னது போல ஒட்டு மொத்த தமிழக மின் தேவைகளை கூடங்குளம் தீர்த்துவிடுகின்றதா என பார்ப்போம். எங்களுக்கு தேவை மின்சாரம் மட்டுமே.....
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் வசித்து கொண்டு எங்களை எல்லாம் எல்லா தேவைக்கும் மின்சாரத்துக்கு பழக்கிவிட்டு இப்போது பாதி நேரம் மின்சாரம் இல்லை என்று சொல்ல அரசே உங்களுக்கு வெட்கம் இல்லையா? அதற்கு துணை போகும் அதிமுக அரசின் ஆதரவு பத்திரிக்கைகளே இந்த பிழைப்பு தேவையா உங்களுக்கு?????
சில புள்ளி விபரங்கள் கொடுத்து உதவிய தோழர் ஜே பி பிரகாஷ் அவர்களுக்கு நன்றி. நன்றி நன்றி
ReplyDeleteAdutha election la nikkarathunnu mudivu panniyachu pola irukku, Parliament aa illai assembly aa? :)
ReplyDeleteShobha
செம:))
ReplyDeleteநல்ல புள்ளி விபரம் அண்ணா . அப்படியே இப்போது இருக்கும் மின் வெட்டு பிரச்சனைக்கு எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் என்று சொல்லவும்.
ReplyDeleteதிமுக ஆட்சிகாலத்தில் போட்ட மின் திட்டத்திற்கான ஆதாரத்துடன் பதிவு போட்டு இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
நல்ல புள்ளி விபரம் அண்ணா . அப்படியே இப்போது இருக்கும் மின் வெட்டு பிரச்சனைக்கு எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் என்று சொல்லவும்.
ReplyDeleteதிமுக ஆட்சிகாலத்தில் போட்ட மின் திட்டத்திற்கான ஆதாரத்துடன் பதிவு போட்டு இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
அபியப்பா பின்னி பெடலெடுத்திட்டீங்களே. சரியான நேரத்தில் வந்துள்ள அருமையான உங்கள் எண்ணங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteபத்திரிகைகாரனுகல்லாம் மக்கள் துரோகிகளா மாறி ரொம்ப நாளாச்சு :)
//பத்திரிகைகாரனுகல்லாம் மக்கள் துரோகிகளா மாறி ரொம்ப நாளாச்சு :)//
DeleteVERY PERFECT COMMENT
//பத்திரிகைகாரனுகல்லாம் மக்கள் துரோகிகளா மாறி ரொம்ப நாளாச்சு :)//
DeletePERFECT COMMENT
Nalla pathivu valthukal
ReplyDeleteமிகவும் யோசித்து.. தக்க தகவல்களுடன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து உள்ளீர்கள். கடைசி வரிகள் நான் அடிக்கடி நண்பர்களின் விவாதத்தில் கடைசியாக வைக்கும் வாதம். அமைச்சர்கள், குறிப்பாக காங்கிரஸ் எம்பிக்கள் குறைந்தது 6 மாத காலம் அப்பகுதியில் வசிக்க வேண்டும்.!
ReplyDeleteஅரசு முன்வந்து பல சிக்கன நடவடிக்கைகளை அதிகாரபூர்வமாக அமுல் படுத்தினாலே ஒரளவு தட்டுபாட்டை குறைக்கலாம் என்பதும் நிதர்சனம்!!
மிகவும் யோசித்து.. தக்க தகவல்களுடன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து உள்ளீர்கள். கடைசி வரிகள் நான் அடிக்கடி நண்பர்களின் விவாதத்தில் கடைசியாக வைக்கும் வாதம். அமைச்சர்கள், குறிப்பாக காங்கிரஸ் எம்பிக்கள் குறைந்தது 6 மாத காலம் அப்பகுதியில் வசிக்க வேண்டும்.!
ReplyDeleteஅரசு முன்வந்து பல சிக்கன நடவடிக்கைகளை அதிகாரபூர்வமாக அமுல் படுத்தினாலே ஒரளவு தட்டுபாட்டை குறைக்கலாம் என்பதும் நிதர்சனம்!!
yellaam very correct. But DMK voda compare panradhu yennu puriyala. Every educated person knows that there cannot be another (kevlamana) birth like karuna and he cannot do any good thing to anyone. Oru samudhayathaye seeralitha perumai, ottu motha tamilnataayum thalai kuniya veitha keeltharamaana katchi DMK. Hence, sonnaaal orru motha arasiyalayum sonnaal ok. Or ADMK mattum kurai sonnaalum nandru. Soru nalla illainu pee thinga (DMK Aatchi) mudiyumaa.
ReplyDeleteகடைத்தெரு என எடுத்து கொண்டால் ஒரு ஜெராக்ஸ் (போட்டோகாப்பி) கடை, டைலர் கடை,அச்சகம், ஜூஸ்கடை என எதை தொட்டாலும் மின்சாரம் தேவைப்படுது. அவர்கள் வாழ்கை தொலைந்து போய்விட்டது.
ReplyDeleteநாடே வேதனைப்படுகிறது.
நல்ல பதிவு.
ottu pottavargalukku ithuvum venum innamum venum! (tamilana alikka pathirikkai kal pothum) ver yaarum vendam
ReplyDelete\\வாழ்கை தொலைந்து போய்விட்டது.// - சரியான பதிவு. ஓட்டை போடும்போது கண்ணை மூடிக்கொண்டு போட்டால் அவஸ்தைகளை அனுபவிக்கத்தான் வேண்டும். azifair-sirkali blogspot.com
ReplyDeleteஇதை தினமலர் அண்ணணுக்கு அனுப்புங்க
ReplyDeleteDMK........DMK is the best Management tu na.... why they allowed Hyundai with free current? what did we earn from Hyundai? income through tax? who is getting rich? nearly 30% - 45% of industrialist are attract toward Tamil Nadu because they had been given subsidiary in electricity! why we should..... attract industrialist for money while we can earn more in agriculture. Coming to agriculture DMK Government or whom ever it may be... they don't care about agriculture. Nearly 25% - 50% of agriculture land has been promote industries and real state owners.......in past 5yrs.! for why? and please don't forget to aware people in right way........ I am not saying you are wrong..... you are guiding the people and running an innocent camp for DMK. In DMK government period in Chennai almost the EB supply cut is 4-8hrs. what plan they did for 5yrs.? the same thing will be done by this government..... You know why...... 60% of people Bought money for their Vote...... now tell me who is the problem the people or the government both are inter linked.... I am not trying to hurt any one..... we must aware...... we must plan..... we must act...... and only we can...... Thanks for your article... and stop the innocent camp for DMK! and for your information I am not with any of political party......
ReplyDeleteDMK........DMK is the best Management tu na.... why they allowed Hyundai with free current? what did we earn from Hyundai? income through tax? who is getting rich? nearly 30% - 45% of industrialist are attract toward Tamil Nadu because they had been given subsidiary in electricity! why we should..... attract industrialist for money while we can earn more in agriculture. Coming to agriculture DMK Government or whom ever it may be... they don't care about agriculture. Nearly 25% - 50% of agriculture land has been promote industries and real state owners.......in past 5yrs.! for why? and please don't forget to aware people in right way........ I am not saying you are wrong..... you are guiding the people and running an innocent camp for DMK. In DMK government period in Chennai almost the EB supply cut is 4-8hrs. what plan they did for 5yrs.? the same thing will be done by this government..... You know why...... 60% of people Bought money for their Vote...... now tell me who is the problem the people or the government both are inter linked.... I am not trying to hurt any one..... we must aware...... we must plan..... we must act...... and only we can...... Thanks for your article... and stop the innocent camp for DMK! and for your information I am not with any of political party......
ReplyDeleteநல்ல பதிவு ....
ReplyDeleteமின்வெட்டா ....? மின்சாரமா .....? - பரிதாப தமிழகம்
http://naanoruindian.blogspot.in/2012/02/blog-post_08.html
செமையான கட்டுரை சார் !
ReplyDeleteநீ என்ன எழுதினாலும் அந்தக் கருணாநிதி கட்சி இனிமேல் ஆட்சிக்கு வரமுடியாது.
ReplyDeleteகருணாநிதியால் நாறடிக்கப்பட்ட நிர்வாகத்தைச் சீராக்க 40 ஆண்டுகள் தேவைப் படலாம்.
இதை கருணாநிதியிடம் கேட்கவேண்டும். பல ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்டு என்ன கிழித்தாய் என்று? அடிப்படைத் தேவையைக் கூட தீர்க்க முடியாத கருணாநிதி பதவிக்காக இத்தாலி சோனியாவின் காலடியில் விழுந்து கிடப்பதைப் பார்த்து வெட்கப்படவேண்டும்.
ராவணன் சார்..... இன்னும் கொஞ்சம் விளக்க நல்லா தூக்கி புடிங்க சார்! இவ்வளவு தெளிவா எழுதியும் உங்களுக்கு புரியலேன்னா...என்ன சொல்றது? தூங்கறவன எழுப்பலாம். தூங்குற மாதிரி நடிக்கிறவன எழுப்ப முடியாது!
Deleteராவணன் சார்.... விளக்க இன்னும் கொஞ்சம் தூக்கி புடிங்க சார்! இவ்வளவு தெளிவா சொல்லியும் உங்களுக்கு புரியலன்னா., உங்கள எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை!
Deleteதூங்குறவன எழுப்பலாம். தூங்குவது போல நடிக்கும் உங்களை 40 அல்ல.....400 ஜென்மம் எடுத்தாலும் எழுப்ப முடியாது!
நாட்டு மக்கள் தினம் தினம் இவ்வளவு சிரமத்தை அனுபவித்து கொண்டு இருக்க , உங்களுக்கு அதிமுகவை புகழ வேண்டும் என்று எப்படி தோன்றுகிறது. ?
Deleteசக மனிதர்கள் இப்படி வதை பட்டு கொண்டிருக்க எதையும் செய்யாத அரசை தூக்கி பேசினால் சரியாகிவிடுமா?
இதிலும் ஜால்ரா அடித்து, மேலும் இந்த அரசு தூங்கி, மக்களை வதைக்க துணை போவது சரியா?
சூப்பர் தல....
Deleteவணக்கம். நீங்கள் இங்கே சொல்லி இருக்கும் பலவற்றை மறுக்கவும் இந்த பதில். அதற்காக என்னை அ.தி.மு.க என்று நினைக்க வேண்டாம். இந்த முட்டாள்தனமான ஆட்சியை நான் ஆதரிப்பவன் அல்ல.
ReplyDeleteமுதலில் திட்டம் எதுவும் இந்த ஆட்சியில் வரவில்லை என்பது பொய்.
29.11.11 அன்று Bhavani Kattlai Barrage-2 இது ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.
மின்சாரத் தட்டுப்பாடு மட்டும் தான் தி.மு.க வின் தோல்விக்கு காரணம் என்றால், கருணாநிதியே ஒத்துக் கொள்ளமாட்டார். போக்குவரத்து துறையில் எவ்வளவு நஷ்டம், ஈழத்தில் மக்கள் கொல்லப் பட்ட போது நடந்து கொண்ட விதம், விலைவாசி உயர்வு (மத்திய அரசின் தோல்வி), நில மோசடிகள், அடிப்பொடிகளின் ஆட்டம், அலைக்கற்றை ஊழல், புதிய வாக்காளர்களை ஆட்சியின் மீது வெறுப்பு கொள்ள வைத்தது,காங்கிரஸ் உடன் கூட்டணி, வாரிசு அரசியல் என்பதை குடும்ப அரசியல் என மாற்றியது என இன்னும் போடலாம் கமா.
கூடங்குளம் செயல்பட்டாலும் பலன் இல்லை, சரி கூடங்குளம் போராட்டம் தான் 1989 இல் இருந்தே நடக்கிறதே கருணாநிதி கடந்த ஆட்சியில் என்ன செய்தார்? இப்போது அது செயல் பாட்டுக்கு வரவும் தான் நீங்கள் ஆளும்கட்சி மீது குற்றம் சாட்டுகிறீர்கள். மத்தியில் ஆட்சியில் இருப்பது தி.மு.க கூட்டணி தானே? அவர்களால் கேட்க முடியாதா?
மொத்ததில் இரண்டும் உருப்படி இல்லை. இவர்கள் வந்தும் ஒன்றும் கிழிக்க வில்லை. ஆனால் மின்சாரத் தட்டுப்பாடுக்கு இவர்களை மற்றும் குறை கூறி என்ன பலன்?
இரண்டு முட்டாள்களை வைத்துக் கொண்டு தமிழகம் ஆதி காலத்தை நோக்கி வீறுநடை போடுகிறது.
Mr. prabhu
DeleteThe above said plan bhavani kattlai barrage-2 is initialized in DMK Period. on 29-11-2011 production is started..
உங்கள் பெயரை சொன்னால் பதில் சொல்ல வசதியாய் இருக்கும். சார் தான் தி.மு.க காரங்க எல்லாம் தைரியசாலி என்று சொன்னாரே. அப்படி இல்லாட்டியும் பேர் சொல்லாத ஆளுக்கு பதில் சொல்வது செவுத்துக் கூட பேசறது போல இருக்கு.
DeleteMr Prabhu
DeleteName is not an important matter to say the correct statement.My name is shankar.
அருமையாக உள்ளது...முதலில் மக்கள் படும் கஷ்டங்களை விவரித்து பிறகு அதற்கு காரணமும் சொல்லி அப்படியே கூடங்குளம் பற்றியும் எழுதி உள்ளீர்கள் ..நல்ல பதிவு
ReplyDeleteநீங்கள் சொல்வது உண்மை. நிலைமை மிக கேவலமாகத்தான் இருக்கிறது. மொத்த மின்சாரம் எவ்வளவு இருக்கிறது அதை விட அதிகமாக தேவையை வளர்த்தது தான் இந்த பிரச்சனைக்கு ஊற்றுக்கண். இதற்கு இரண்டு ஆட்சிகளுமே பொறுப்பு. நிர்வாகத்திறமை இருவருக்குமே இல்லை என்பதுதான் உண்மை!
ReplyDeleteகொடுமை அபிஅப்பா.
ReplyDeleteகடைசியாகத் தந்துள்ள ஆலோசனைகள்... நச்
கொடுமை அபிஅப்பா.
ReplyDeleteகடைசியாகத் தந்துள்ள ஆலோசனைகள்... நச்
ஏதோ நல்ல விஷயம் என படித்தால் கடைசியில் இதுவும் கட்சி விஷயம் தானா...
ReplyDeleteஅபி அப்பாவுக்கு ரொம்ப ஆசை. நீங்க சொன்ன வி.ஐ.பி எல்லோருக்கும் கூடங்குளத்துல கெஸ்ட் ஹவுஸ் வேணாம், இனி ரெஸ்ட் ஹவுஸ்தான் வேணும், எல்லோரையும் அணு உலையில் (நம்ம கழக தலைவனையும் சேர்த்து) போட்டு வேலைய முடிங்க.
ReplyDeleteசிறப்பான கட்டுரை. பாரபட்சமில்லாமல் உண்மையை துணிந்து விளக்குகிறது.
ReplyDeleteதேவைகளும் மக்கள் தொகையும் பெருகி கொண்டே போகும். இது இயற்கை விதி. மனிதனால் மாற்றி வெல்ல முடியும்.
மின்சார பிரச்சனையை தீர்க்க தொலை நோக்கும் திட்டங்களும் தேவை.
செய்ததை உடைத்து ஒழிக்கவே இவர்கள் முனைப்பாக இருக்கும் போது, பிரச்சனைகள் எப்படி தீரும்.
இவர்கள் செய்ததை அடுத்தவர் பின் உடைத்தால் எப்படி கொதித்து எழுவார்கள்.
நன்றாக தூங்கி விட்டு, எதிர்கட்சிகளை திட்டிவிட்டு, ஜால்ரா பத்திரிகைகளை பேச விட்டால் எப்படி தீரும்.
கொடநாடும், கோவிலும் சரி செய்யுமா ? வெற்று அரசியல் தீர்வாகுமா?
தேவையற்ற விசயங்களில் நுழைந்து நீதி மன்றத்தால் திட்டு வாங்கி அதில் பொழுதை கழிப்பதை விட்டு, திட்டங்களை உடனடியாக செயல் வடிவம் கொடுக்க சில வருடங்களில் சரியாகும். அதற்கு ஆட்சியாளர்கள் தொடர்ந்து உழைக்க வேண்டும். வாய் சவடால் வேலையகுமா?
ஆட்சிக்கு வர ஆசைபடுவதில் தவறில்லை. ஆனால் வந்த பின் பிரச்சனைகளை தீர்க்க முடியவில்லை, திறமையில்லை என்றால் ஏற்று கொள்வது சிறப்பான பண்பு. ஏன் எனில் சிரமபடுவது மக்கள், அவர்கள் வாழ்வின் ஆதாரம். அதற்கு உண்மையான அக்கறை, உழைப்பு தேவை. மற்றவர்களை விட அதிகம் உழைத்து, சிறப்பான திட்டங்கள் தீட்டி, தொடர்ந்து கட்டமைப்புகள் செய்து வர மக்களிடம் நற்பெயர் கிடைக்கும்.
மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரத்தை ஆளும் மத்திய அரசில் இருக்கும் திமுக வாங்கி கொடுக்கலாமே !!
ReplyDeleteஎன்ன சார் இது புது மின் திட்டம் தொடங்கி உள்ளார்கள், தி.மு.க-வின் தோல்விக்கு மற்ற காரணங்கள் என்று நான் போட்ட கமெண்ட் இன்னும் காணோம்.
ReplyDelete//இந்த பிழைப்பு தேவையா உங்களுக்கு?????// இது யாருக்கு என்று சந்தேகம் வருகிறது.
தம்பி பிரபு கிருஷ்ணா, முதல்ல எனக்கு மின்சாரம் வேண்டும் நான் பதில் போட. அப்படியே பதில் போடும் அளவு நீங்க ஒன்னும் புத்திசாலித்தனமான பதிலும் சொல்லவில்லை. இருங்க பதில் சொல்றேன்.
ReplyDelete\\ முதலில் திட்டம் எதுவும் இந்த ஆட்சியில் வரவில்லை என்பது பொய். 29.11.11 அன்று Bhavani Kattlai Barrage-2 இது ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. \\
வாஸ்தவம். இது எத்தனை மெகாவாட் திறன் கொண்டது என்பது உங்களுக்கு தெரியுமா? 100 மெகாவாட் மின்சாரம் தான். இது ஒரு பெரிய பிராஜக்ட் திட்டம் இல்லை. ஆனால் நான் திமுக ஆட்சியில் மேற்கொண்ட திட்டங்களால் 7000 மெகாவாட்க்கும் மேலான திட்டங்கள் பத்தி சொல்லியிருக்கேன். அதோடு கம்பேர் செய்யும் போது இது நெக்லிஜிபில் என்பது ஏன் உங்களுக்கு புரியவில்லை. அப்படியே ஆனாலும் அது செயல்பாட்டுக்கு வரும் தேதி என்னன்னு கொஞ்சம் பார்த்து சொல்ல இயலுமா? சும்மா பேச வந்துட்டீங்க பேச்சு.
\\ மின்சாரத் தட்டுப்பாடு மட்டும் தான் தி.மு.க வின் தோல்விக்கு காரணம் என்றால், கருணாநிதியே ஒத்துக் கொள்ளமாட்டார். \\
கருணாநிதி ஒத்துக்கொள்வார் மாட்டார் என்பது பத்தி எனக்கு கவலை இல்லை.
\\ போக்குவரத்து துறையில் எவ்வளவு நஷ்டம்,\\
முட்டாள் தனமாக பேசக்கூடாது. ஒரு முறை கூட பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை. மக்கள் அதனால் பாதிக்கப்படவில்லை என்கிற போது அரசே மக்களுக்காக அதன் சுமையை ஏற்றுக்கொள்ளும் போது இதை விட சிறந்த நிர்வாகம் இல்லை என்பதே பொருள். ரேஷன் ஜீனி, அரிசி எல்லாம் வாங்குறீங்க தானே? அதிலும் தான் அரசுக்கு இழப்பு வருது. அப்ப மட்டும் வாயை மூடிகிட்டு போறீங்க. அரசியல் பேச தெரியாம வந்து பேசினதும் இல்லாம வந்து பதில் சொல்லலைன்னு மட்டும் கோவம் வருதே. அடத்தூ... இந்த பிழைப்புக்கு நீங்க...
\\ ஈழத்தில் மக்கள் கொல்லப் பட்ட போது நடந்து கொண்ட விதம்,\\
அதனால் தமிழக மக்களுக்கு எதும் பாதிப்பு இல்லை. ராஜீவ் கொல்லப்பட்டபோது குய்யோ முறையோன்னு கத்த தெரிஞ்சுதுல்ல உங்களுக்கு. அவனுங்க எடுத்த அர்சியல் நிலைப்பாட்டால் அழிஞ்சானுங்க. உங்க வேலையை பாருங்க புத்திசாலி.
\\ விலைவாசி உயர்வு (மத்திய அரசின் தோல்வி), \\
இப்போ அதை விட அதிகம். 4500 கோடிக்கு வரிபோட்டு இன்னும் பலமடங்கு ஏறிடுச்சு.
\\ நில மோசடிகள்,\\ எது? சிறுதாவூர், கொடநாடு, டான்சி பத்தி பேசுரீங்களா?
\\ அடிப்பொடிகளின் ஆட்டம்,\\ சசிகலா, இளவரசி, தினகரன், திவாகரன், மகாதேவன், பாஸ்கரன், சுந்தரவதனம், ராவணன், மிடாஸ் மோகன், நடராசன்சசிகலா, சோ, மோடி , சோவின் மகன் கார்த்தி, .... யப்பா யப்பா லிஸ்ட் பெரிசா ஆகுதே...
\\ அலைக்கற்றை ஊழல்,\\
நீங்க என்ன சுப்ரீம் கோர்ட் ஜட்ஜா? அதுக்குள்ள ஊழல்ன்னு தீர்ப்பு எழுதிட்டீங்களே?
\\ புதிய வாக்காளர்களை ஆட்சியின் மீது வெறுப்பு கொள்ள வைத்தது,காங்கிரஸ் உடன் கூட்டணி, வாரிசு அரசியல் என்பதை குடும்ப அரசியல் என மாற்றியது என இன்னும் போடலாம் கமா. \\ முடியல... முடியல... உங்களுக்கு பதில் சொல்லும் நேரம் எனக்கு மின்சாரம் போய்டும்..
\\ இரண்டு முட்டாள்களை வைத்துக் கொண்டு தமிழகம் ஆதி காலத்தை நோக்கி வீறுநடை போடுகிறது.\\ இல்லை இல்லை இல்லவே இல்லை. தன்னை புத்திசாலியா நினைச்சுகிட்டு அடிமுட்டாளாக இருக்கும் உங்களைப்போல மட்டமான ஆட்களால் தான் இன்று தமிழகம் அதிமுக கையில் மாட்டிகிட்டு இருட்டில் கிடக்கு. இதிலே பேச்சுவேற ... நான் அதிமுக விசுவாசி இல்லைன்னு. திமுககாரன் வெளிப்படையா சொல்லுவான், தான் ஒரு திமுககாரன்னு. ஆனா அதிமுக காரன் தான் தன்னை ஒரு வேசிகட்சி மாதிரி நினைத்து கொண்டு நான் அதிமுக விசுவாசி இல்லைன்னு பம்முவான்.
இந்த பிழைப்புக்கு நீங்க நாண்டுகிட்டு சாகலாம். குட் பை..
நன்றி ஸார், உங்க நேர்மைக்கு. என் அடுத்த கமெண்ட்டை கூட உங்களால் போட முடியவில்லையே. இது தான் வெளிப்படையோ?
Deletegood reply for prabhu
Deleteமூன்றாவது கமெண்ட் மட்டும் காணோமே சார். திரும்ப வேண்டும் என்றால் சொல்லுங்கள். மறுபடி போடுகிறேன்.
Deletearumayana pathivu ...arimayana pathilgal in the above comment...keep up the good work Abi Appa..
ReplyDeleteThanks
Venkateshkumar Manoharan
கரண்ட் ஷாக் அடிக்கும்!
ReplyDeleteஇப்ப நினைச்சாலே ஷாக் அடிக்குது!!
தி.மு.க விற்கு நன்றாக வக்காலத்து வாங்குகிறீர்கள். எத்தனை ஆயிரம் கோடிகளை தி.மு.க குடும்பத்தினர் அள்ளி உள்ளார்கள். அதை எல்லாம் வைத்து ஒரு மிக பெரிய அணு மின் நிலையமே தமிழ் நாட்டில் உருவாக்கலாமே. தமிழ நாடு முழுவதற்கும் இதனை வைத்துக்கொண்டு மின் விநியோகம் செய்யலாம். அடித்த கொள்ளைகள் கொஞ்சமா நஞ்சமா? கணக்கிடமுடியுமா? இந்த கொள்ளைகளை கண்டுகொள்ளாமல் தி.மு.க. என்ற கட்சிக்கு சாமரம் வீசுவது சரியா? தமிழனை குட்டிச்சுவராக்கிவிட்டார்கள்.
ReplyDeleteசார் இத சொன்னா அவர் நீங்க அதிமுக ஆளுன்னு சொல்வார்.
DeleteGood post wishes
ReplyDeleteதிரு. பிரபு கிருஷ்ணா, உங்க முதல் பின்னூட்டத்துக்கு மதிப்பு கொடுத்து பதில் சொன்னேன். அதன் பிறகும் நீங்க பைத்தியக்காரத்தனமா கேள்வி கேட்பீங்க. அதை வெளியிட்டு மத்தவங்களும் குழம்பனுமான்னு தான் அதை வெளியிடவில்லை. இப்ப நீங்க போடும் அடுத்தடுத்த பின்னூட்டங்கள் பார்த்து மத்தவங்க "ஆகா புத்திசாலித்தனமா கேட்டிருக்கார் போலிருக்கு"ன்னு நினைச்சுக்க கூடாதுன்னு தான் இந்த பதில் போடுறேன். போங்க போய் வேற வேலை எதுனா இருந்தா பாருங்க. இல்லாட்டி வீட்டிலே யாராவது பெரியவங்க இருந்தா வர சொல்லுங்க..
ReplyDeleteநல்ல மழுப்பல். உண்மையை ஒத்துக் கொள்ள முடியாததை இப்படியும் சொல்லலாம்.
Delete(இந்தப் பதிலை கூட நீங்கள் வெளியிட தேவையில்லை.வெளியிட்டால் நான் புத்திசாலி என்று சொல்வீர்களோ? )
Hey, thanks! You mayy see all the schools I'm visiting by going
ReplyDeletefor the "Calendar" pasge of this site ... hopefully, we'll run into each other
at some point. If not, take care, and thanks again.
Have a look at my page: nike air huarache