பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

March 7, 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் - ஒரு சின்ன பார்வை!!!

சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் - ஒது திமுகவுக்கு ஒரு சவாலா இல்லியா, நம்ம வெற்றி நிலவரம் என்ன? அங்க ஆளும்கட்சி அராஜக வெற்றி பெறுமா?..... இது பற்றி எல்லாம் எந்த திமுகவினரும் கவலைப்படவில்லை. வழக்கம் போல தேர்தல் கணக்குகள் கூட திமுகவினர் போட்டு பார்த்து, கூட்டி கழித்து பெருக்கி வகுத்து எல்லாம் சிரமப்படவில்லை. மாறாக இதற்கெல்லாம் மாறாக கர்ம சிரத்தையாக தத்தமது வேலையை செய்து கொண்டு இருக்கின்றனர். அங்கே திமுகவினர் பார்க்கும் தேர்தல் வேலை கொஞ்சம் வித்யாசமாய் இருக்கின்றது இந்த முறை..


அங்கே முக்குலத்தோர் ஓட்டுகள் 45 ஆயிரம் இருக்கு, அதற்கு அடுத்து தலித் மக்கள் ஓட்டுகள் ஒரு 35 ஆயிரம் இருக்கு, நாயக்கர் ஓட்டு 35 ஆயிரம் இருக்கு, நாடார் ஓட்டு 12 ஆயிரம் இருக்கு, முதலியார் ஓட்டுகள் 17 ஆயிரம் இருக்கு, இஸ்லாமியர் ஓட்டுகள் 5 ஆயிரம் இருக்கு, ஆனா முக்குலத்தோர் சசிகலா பிரிவால் ஒரு 20 ஆயிரம் பேர் அதிமுகவுக்கு போடமாட்டாங்க, பரமக்குடி துப்பாக்கி சூட்டால் அதிலே முக்கால்வாசி பேர் அதிமுகவுக்கு போட மாட்டாங்க, முதலியாரில் எல்லாரும் விசைத்தறிகாரங்க. இப்ப மின்சாரம் இல்லை அதனால் அதிமுகவுக்கு போடமாட்டாங்க, இஸ்லாமியர் எப்போதும் அதிமுகவுக்கு போடமாட்டாங்க. நாயக்கர் ஓட்டை மதிமுகவுக்கு போகாம பாதி விசயகாந்து கட்சி பிரிச்சிடும்..... இப்படியாக இப்படியாக இப்போது எந்த திமுகவினரும் வெட்டிக்கணக்கு போடவில்லை.


மாறாக அங்கே தொகுதியில் தமிழகம் முழுமைக்கும் இருக்கும் திமுகவினர், நகரகழகம், ஒன்றிய கழகம், பேரூர் கழகம் சார்பாக சாரை சாரையாக சங்கரங்கோவில் நோக்கி பயணப்பட்டு உள்ளனர். யாரும் யாரையும் துணைக்கு அழைத்துக்கொள்ளவில்லை. கும்பல் சேர்த்துக்கவில்லை. அது கேளிக்கைக்கு போய்வர கொடைக்கானல் இல்லை. வானம் பார்த்த பூமி, அங்கே பகல், இரவு என பார்க்காமல் கடும் மின்வெட்டு. பொட்டல் வெய்யில். அங்கே என்ன பொழுது போக்க இயலும். அங்கே போகும் திமுகவினர் உணர்வு பூர்வமாக போய் தனக்கான தெரு, தனக்கான வார்டு, தனக்கான பிரச்சாரக்களம் என தேர்ந்தெடுத்தோ அல்லது அவர்களின் நகர, ஒன்றிய, மாவட்ட கழகம் ஒதுக்கும் இடத்திலோ வீடா வீட்டுக்கு செல்கின்றனர்.தமிழக இன்றைய நிலையை அந்த பகுதி மக்களுக்கு ஞாபகப்படுத்துகின்றனர். தமிழக இன்றைய நிலையை விளக்கி சொல்கின்றனர்.


இத்தனைக்கும் அங்கே அதிமுகவால் தமிழக அரசின் இலவசப்பொருட்கள் (ஒ அது இப்போது "விலையில்லாப்பொருட்கள்" என ஆகிவிட்டது. அதே போல திமுக ஆட்சியில் இருந்த இரண்டு மணி நேர மின்வெட்டு என்னும் வார்தை கூட "மின்விடுமுறை" ஆகிவிட்டது... எல்லாம் புரட்சி மயம்)எல்லாம் வினியோகம் ஆகிவிட்டன. ரோடுகள் பளபளா ஆகிவிட்டது. எல்லாம் சரியான பின்னே தான் தமிழக அரசு "ரைட் ரைட்" விசில் கொடுத்து பிரவீணாபோன குமார் தேர்தல் வண்டியை எடுத்தார்.
நிலைமை இப்படி இருக்க.... இருங்க ...


இப்ப வேற ஒரு விஷயத்தையும் பார்ப்போம். உத்தரப்பிரதேசம். காங்கிரசை பொருத்தவரை உத்தரப்பிரதேசம் என்பது உத்தர சிரச்சேதம் ஆகிவிட்டது! காரணம் ராகுல் காந்தியா? இல்லை. சர்வ நிச்சயமாக ராகுல் காரணம் இல்லை. அவருடைய உழைப்பு நல்ல உழைப்பு. யாரும் மறுப்பதற்கில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அவர் டெல்லியில் இருந்த நாட்களை விட உத்தரப்பிரதேசத்தில் உழைத்த நாட்களே அதிகம் என்று கூட சொல்லலாம். மாயாவதியின் ஆட்சியின் அவலங்களை கடைக்கோடி உத்தரப்பிரதேசவாதிகள் காதில் கொண்டு சேர்த்த பெருமை ராகுல்காந்திக்கு மட்டுமே சொந்தம். மாயாவதி தனக்கு சிலை வைத்தார். மக்கள் அவர் ஆட்சிக்கு உலை வைத்து விட்டனர். ராகுல் மாயாவதிக்கு எதிராக அடித்த சிக்சர் எல்லாம் சமாஜ்வாடிப்பக்கம் திசை திரும்பி அவங்க கணக்கில் வரவு வைக்கப்பட்டது என்றே சொல்லலாம். ஆக அங்கே மக்கள் மாயாவதி ஆட்சியின் அவலங்களை எதிர்த்து ஓட்டளிக்க முடிவு செய்து விட்ட நிலையில், அப்படி எதிர்த்து ஓட்டு போட்டால் அதை தனக்கு சாதகமாக ஆக்க என்னவெல்லாம் செய்ய இயலுமோ அதை சமாஜ்வாடி, முலாயம்சிங் மகன் அகிலேஷ் சிங் யாதவ் என்னும் இளைஞரை வைத்து அழகாய் வாக்குகளை தள்ளிக்கொண்டு போனது. அங்கே சமாஜ்வாடிக்கு மாபெரும் வெற்றி கிட்டியது. ராகுலும், காங்கிரசும் எங்கே தப்பு நடந்தது என்ற ஆராய்சியில் இறங்கி விட்டனர். அது அவர்கள் கவலை. அது நமக்கு தேவையில்லை. அதை விடுங்கள்.


நாம் மீண்டும் இங்கே வருவோம். இங்கே தமிழகத்தில் கடந்த பத்து மாதமாக ஒரு கேடுகெட்ட ஆட்சி நடந்து வருகின்றது. சமச்சீர் கல்வி குழப்பத்தில் ஆரம்பித்து, தன் சொந்த ஈகோ காரணமாக புதிய தலைமைச்செயலகம் அலைக்கழிப்பு, அண்ணா நூலகத்தை அழித்தொழிக்க எடுத்த முயற்சி, செம்மொழி நூலகம் தரைமட்டமாக்குதல், பட்ஜெட்க்கு முன்னராக 4000 கோடிக்கு வாட் வரி விதிப்பு, அதனால் ஏறிய விலைவாசிகள், மத்திய அரசோடு இனக்க நிலையின்மை, தொடரும் மீனவர் படுகொலைகள், பால்விலை ஏற்றம் இரண்டு மடங்காக, பேருந்து கட்டணம் உயர்வு இரண்டு மடங்காக, இப்போது இந்த இடைத்தேர்தல் முடிந்தவுடன் ஏற இருக்கும் மின்சார கட்டணம்(அது அனேகமாக நான்கு மடங்கு இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாம்) மிக மிகக்கடுமையான மின்வெட்டு, தமிழகம் முழுமைக்கும் 8 முதல் 13 மணி நேர மின்வெட்டு, அதை தீர்க்க நடவடிக்கை எடுக்காமை, தொழிற்சாலைக்கு வாரம் இருநாட்கள் மின்விடுமுறை ( ஒரு நாள் அறிவிக்கப்பட்ட இன்னும் ஒரு நாள் அறிவிக்கப்படாத மின்விடுமுறை) அதனால் தொழிலாளிகள் வேலை இழப்பு, தொழில் முடக்கம், சிறு மற்றும் குறுந்தொழிலதிபர்கள் வங்கிகளுக்கு மாதத்தவணை செலுத்த இயலாத நிலை, கோவையில் அதை கண்டித்து கூடிய கூட்டம் மீது போலீஸ் தடியடி, இன்று திருப்பூர் பகுதிகளில் ஆயிரம் தொழிற்சாலைகளை பூட்டி சாவியை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க இருத்தல், தலித்துகளை சுடுதல், இருளர் இனப்பெண்கள் கற்பழிக்கப்பட்டாலும் நீதிமன்றத்தில் அவர்கள் கற்பழிக்கப்படவில்லை என அரசே பொய்சாட்சி கூறுதல், தினம் தினம் நடக்கும் வங்கிக்கொள்ளைகள், தினசரி திருட்டுகள், நூலகங்களுக்கு பல மாதங்களாக புத்தகங்கள் வாங்காமல் இருந்தல் (இது இன அழிப்புக்கான முக்கிய ஆயுதம்), இப்படி இப்படி சங்கரன் கோவில் மக்களிடம் திமுகவினர் நேரடி பிரச்சாரம் செய்து வரும் இந்த நேரத்தில்......

இங்கே ஜூனியர் விகடன் போன்ற பத்திரிக்கைகளை நன்றாக கவனித்தால் ஒரு விஷயம் புலப்படும். நன்றாக கூர்ந்து கவனியுங்கள் மதிமுகவையும், அதன் வைக்கோவையும் ஓரளவுக்கு மேலாக தூக்கி வைத்து கொண்டாடிக்கொண்டு இருப்பர். தினமலர் என்னும் பத்திரிக்கையும் ஓரளவுக்கு மேலாகவே இந்த காரியத்தை செய்து வருகின்றது.

அதாவது மாயாவதி அரசுக்கு எதிராக ராகுல் செய்த பிரச்சாரத்தின் பலனை எப்படி ராகுல்காந்திக்கு செல்ல விடாமல் மக்களிடம் "பகுஜன் சமாஜ் சரியில்லைன்னா, அடுத்து ஜெயிக்கிற கட்சி சமாஜ்வாடி தான்" என்று மக்களிடம் மனதில் பதிய வைத்த ஊடகங்கள், அதை நம்பிய மக்கள் "சரி ஜெயிக்கிற கட்சிக்கே ஓட்டுப்போட்டு இந்த மாயாவதி அரசின் மீதான வெறுப்பை காட்டலாம்" என முடிவெடுத்தது போல..... அதே போல இங்கே இப்போது நம் ஊடகங்கள் மூலமாக மதிமுக என்னும் இறந்துவிட்ட கட்சிக்கு உயிர்கொடுக்கும் வேலைகள் கனகச்சிதமாக ஆரம்பித்து செயல்பட ஆரம்பித்து விட்டன. நடுநிலைவாதிகள் தான் இப்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிவை கையில் வைத்து இருக்கின்றனர் என்பதால் ஊடகங்கள் அவர்களை மட்டும் மதிமுக பக்கம் திசைதிருப்பி விட்டால் போதும் அதிமுகவை வெற்றிபெற வைத்துவிடலாம் என்னும் முடிவை எடுத்துவிட்டதாகவே இன்றைய ஜூவி, ரிப்போர்டர், தினமலம் வகையறாக்களை பார்த்தால் தெரிகின்றது.


ஆனால் இதை எல்லாம் அங்கே சங்கரன்கோவில் பகுதியில் பிரச்சாரம் செய்து வரும் திமுகவினர் நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர். அதற்கேற்ப தன் பிரச்சார வியூகங்களை அங்கே செயல்படுத்தி வருகின்றனர் என்றே அங்கிருந்து செய்திகள் வருகின்றன. மக்கள் மௌனப்புரட்சிக்கு தயாராகிவிட்டனர். நேற்று முதல் சங்கரன்கோவில் பகுதிகளில் திமுகவினரின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர் அணியினரின் வேலைகள் பிரம்மிக்க வைப்பதாக அங்கிருக்கும் நமது தோழர்கள் கூறுகின்றனர். நம் கடமையை சரியாக செய்வோம். பலனையும் எதிர்பார்ப்போம்.


இன்றைய தமிழக கேடுகெட்ட அரசின் பால் விலை உயர்வு,பேருந்து, மின்கட்டண உயர்வுகள்,கடுமையான மின்வெட்டு, தொழில் முடக்கம், அதனால் தொழிலாளிகளின் வேலை முடக்கம் இவைகளுக்கு முன்னர் முக்குலத்தோர், தலித்துகள், நாயக்கர்,முதலியார், நாடார், இஸ்லாமியர், கிருத்தவர் என்னும் கணக்குவழக்குகள் காணாமல் போவது மட்டும் நிச்சயம். நிச்சயம் நல்லது நடக்கும். நடந்தால் நாட்டுக்கு நல்லது. நடக்கின்றதா என பார்ப்போம்.

23 comments:

  1. அண்ணே ஜெயிக்கிறது திமுக தான்

    ReplyDelete
  2. ஆண்டிகள் கூடி மடம் கட்டபோகிறார்களா? இடைதேர்தலில் ஆளும் கட்சி தோற்ப்பதாக கனவு காண ஊமை இந்தியன் இன்னுமா இருக்கிறான்?
    திருமங்கலம் பார்முலா வுக்கு முன்னமே சாத்தான்குளம் பார்முலா கண்டவர்கள் ,ஞாபகம் இருக்கட்டும்.

    ReplyDelete
  3. ம தி மு கவுக்கு ரெண்டாவது இடம் நிச்சயம்

    ReplyDelete
  4. Vetri vaikovuku thaan , setha katchi d m k thaan

    ReplyDelete
  5. உங்கள் விளக்கம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் மிக மிக குறைந்த வாக்குவித்தியாசத்தில் நிச்சயம் அதிமுக வெற்றியை தக்க வைத்துகொள்ளும் என்றும் இரண்டாவதாக மதிமுக வரும் அடுத்தாக திமுக வரும் என்று நினைக்கிறேன் இதை நான் பல பத்திரிக்கைகளை படித்ததினாலும் மற்றும் நண்பர்களிடம் போனில் பேசிய போது அவர்களின் பேச்சு முலம் அறிந்து கொண்ண்டேன். ஆனால் நம் மக்களை நம்ம முடியாது. என்னை பொறுத்தவரை திமுக அல்லது மதிமுக வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறேன்

    ReplyDelete
  6. மீண்டும் கேடு கெட்ட, கேட்பாரற்ற தி.மு.க ஆட்சி வேண்டுமா? இபோதைய அ.தி.மு.க ஆட்சி, மத்தியில் உள்ள மட்டிகளின் உதவி இன்றி, காலி செய்யப்பட்ட கஜானாவை வைத்துக் கொண்டு நடத்தப் படும் ஆட்சி...சில 'குறைகளை' களைந்துவிட்டுப் பார்த்தால் இது சிறப்பான ஆட்சியே..

    ReplyDelete
    Replies
    1. yes you are right. no bone can't able to forget 2G

      Delete
  7. IF U WISH FOR DMK TO WIN, WRITE THAT. INSTEAD U HAVE NO RIGHT TO SAY THAT MDMK IS "IRANTHUVITTA KATCHI" WHERE DID THE DMK GONE AFTER LOSS IN ASSEMBLY ELECTION(TO TIHAR AND OTHER JAILS IN TAMIL NADU) BUT MDMK EVENT IF NOT CONTESTED IN ASSEMBLY ELECTIONS, STOOD AT STREETS FOR PEOPLE CAUSE LIKE STERLITE, MULLAI PERIYAR, TO SAVE 3 TAMILIANS, TN FISHERMEN PROBLEMS ETC. SO U THINK BEFORE WRITING . DO U KNOW THAT DURING LOSS OF DMK IN 1991 ELECTIONS, VAIKO WAS THE ONLY LEADER WHO CAMPAIGNED FOR EGMORE AND HARBOUR CONTITUENCIES BYE ELECTIONS. YOUR SO CALLED LEADERS WERE NOT IN THE SCENE. HE WAS THE ONLY LEADER ROAMING AROUND CHENNAI IN THE CAR WITH DMK FLAG. ANJA NENJARUM THALAPATHIYUM ENGAE PONARGAL ENDRU YARUKKUM THERIYATHU.U DONT KNOW THE WORKS DONE BY VAIKO DURING HIS TENURE IN DMK.

    ReplyDelete
  8. though JJ is worse.but MK.......?Within ten months karunanithi became MAHATHMA!.........wat to say?

    ReplyDelete
  9. //கடமையைச் சரியாகச் செய்வோம். பலனையும் எதிர்பார்ப்போம்//
    ஹே... இது ரஜினிகாந்து சொன்னதாச்..சே!

    ReplyDelete
  10. கேடுகெட்ட ஆட்சியாகவே இருக்கட்டும்....ஆனால் கேடுகெட்ட கருணாநிதி கும்பல் இனி ஆட்சிக்கு வரமுடியாது

    ReplyDelete
  11. /அங்கே தொகுதியில் தமிழகம் முழுமைக்கும் இருக்கும் திமுகவினர், நகரகழகம், ஒன்றிய கழகம், பேரூர் கழகம் சார்பாக சாரை சாரையாக சங்கரங்கோவில் நோக்கி பயணப்பட்டு உள்ளனர்.///

    கடந்த 5 வருடமாக சம்பாரித்தார்கள் அதனால போய்த்தான ஆகனும்...

    ReplyDelete
  12. //இடைத்தேர்தல் முடிந்தவுடன் ஏற இருக்கும் மின்சார கட்டணம்//

    இதைச் சொல்றீங்க சரி.. நீங்க கூட்டணி ஆட்சியில் இருக்கும் மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் பெட்ரோல் கட்டணத்தை உயர்த்தும் போது நீங்கள் கேட்டு 1 பைசா குறைத்த சம்பவம் உண்டா???

    ReplyDelete
  13. //நிச்சயம் நல்லது நடக்கும். நடந்தால் நாட்டுக்கு நல்லது. நடக்கின்றதா என பார்ப்போம்.///

    கடந்த 5 வருடம் நடந்த உங்கள் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி எதிர்கட்சி கூட இல்லாமல் ஆக்கியச்சு... இன்னும் 4 அரை வருடத்துக்கு பதிவு எழுதிகிட்டே இருங்க... வேற என்ன செய்யமுடியும்...

    ReplyDelete
  14. அங்கே வைகோவின் பலம் நிரூபிக்க படவேண்டும்...!!!!!! வைகோ ஒருவரே நம் திராவிடத்தின் கடைசி கையிருப்பு.....அவர் தோற்றால் தமிழகம் இழப்பை சந்திக்கும்.....

    ReplyDelete
  15. ஜெயிக்கப்போகும் எம்.எல்.ஏ.முத்துச் செல்வி
    இடைத் தேர்தல் தேதி அறிவிக்குமுன்பே வேட்பாளராகிவிட்டவரின் படம்தான் இது. பெயர் முத்துச் செல்வி. 27 வயதாகும் இவர் பி.இ.பட்டதாரி. தொகுதி நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில்.

    இவரது தந்தை சங்கரலிங்கம் 1964 முதல் 1987 வரை எம்.ஜி.ஆர். ஆட்சியின் போது இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.. ஆகத் தொடர்ந்து இருந்தவர். இந்த ஊர்க்கோவிலின் சாமி பெயர் சங்கர லிங்கம் என்பதும் ஒரு சிறப்பு.

    இவரது கணவர் முத்து மாரியப்பன் பல்லடத்தில் ஒரு கார்மெண்ட் கம்பெனியில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு ஐந்து வயதிலும், இரண்டரை வயதிலும் இரண்டு மகன்கள்.

    ஏற்கனவே இவர் சங்கரன்கோவில் நகராட்சித் தலைவியாக இருக்கின்றார். இடைத் தேர்தல் எம்.எல்.ஏ. வேட்பாளராக இருப்பதால் அந்தப் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். எனவே இரண்டு தேர்தல்கள் நிச்சயம். இவரது ஆதரவும் நகராட்சித் தேர்தல் வேட்பாளருக்கு வேண்டும். எனவே அவரும் இணைந்து ஒத்துழைப்பார் சட்டமன்றத் தேர்தலில்.

    அ.தி.மு.க. வேட்பாளரை அறிவித்து விட்டதால் வழக்கம் போல் தலைமை அறிவித்த நபரை முழுமையான மனதுடன் வேட்பாளராக ஏற்றுக் கொண்டு உற்சாகமாக ஆயத்தப்பணிகளைத் துவக்கிவிட்டனர் கழகக் கண்மணிகள்.இந்தத் தொகுதியில் உள்ள சிறப்பு உட்கட்சிக் குழப்பங்கள் கிடையாது. அதுவும் படித்த பெண் வேட்பாளரை எதிர்த்து எவர் எந்தக் கூட்டணி அமைத்தாலும் வேறு யாரும் வெற்றி பெற முடியாது.

    ஊர்காவலன் என்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ அந்தக் காலத்தில் இருந்தார். அதன்பின்பு தி.மு.க/அ.தி.மு.க. தான் மாறி மாறித் தொகுதியைக் கைப்பற்றியிருக்கின்றது. இது ஒரு ரிசர்வ் தொகுதி. வேட்பாளர் எந்தக் கட்சியில் இருந்தாலும் அவர் குணநலன்களைப் பொறுத்தே வெற்றி தோல்வி அமையும். ஏனெனில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெரும்பாலும் உறவினர்களாகவே இருப்பர்.

    ஜெயிக்கப்போகும் எம்.எல்.ஏ.முத்துச் செல்வி என்பதை யாரும் மறுத்துச் சொல்ல முடியாது.

    வெற்றி வேட்பாளரைத் தேர்ந்தெடுத்த முதல்வரின் சாமர்த்தியத்திற்கு "ஜே" போடலாம், மறைந்த முன்னாள் இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாணியில்!
    Posted 24th January by சீராசை சேதுபாலா
    Labels: சிறப்புத் தகவல்கள்
    0
    Add a comment
    24-01-2012-எழுதியது நடக்கும் ஜெயிக்கப்போவது பி.இ.பட்டதாரியான முத்துச் செல்விதான்!

    ReplyDelete
  16. U WISH FOR DMK TO WIN, WRITE THAT. INSTEAD U HAVE NO RIGHT TO SAY THAT MDMK IS "IRANTHUVITTA KATCHI" WHERE DID THE DMK GONE AFTER LOSS IN ASSEMBLY ELECTION(TO TIHAR AND OTHER JAILS IN TAMIL NADU) BUT MDMK EVENT IF NOT CONTESTED IN ASSEMBLY ELECTIONS, STOOD AT STREETS FOR PEOPLE CAUSE LIKE STERLITE, MULLAI PERIYAR, TO SAVE 3 TAMILIANS, TN FISHERMEN PROBLEMS ETC. SO U THINK BEFORE WRITING . DO U KNOW THAT DURING LOSS OF DMK IN 1991 ELECTIONS, VAIKO WAS THE ONLY LEADER WHO CAMPAIGNED FOR EGMORE AND HARBOUR CONTITUENCIES BYE ELECTIONS. YOUR SO CALLED LEADERS WERE NOT IN THE SCENE. HE WAS THE ONLY LEADER ROAMING AROUND CHENNAI IN THE CAR WITH DMK FLAG. ANJA NENJARUM THALAPATHIYUM ENGAE PONARGAL ENDRU YARUKKUM THERIYATHU.U DONT KNOW THE WORKS DONE BY VAIKO DURING

    ReplyDelete
  17. உங்க கட்சியோட கொள்கைபரப்பு செயலளார் ராஜா வை பிரசாரத்துக்கு அழைச்சிட்டு வாங்க தலைவா ..கண்டிப்பா வெற்றி உங்களுக்கு தான் .......அப்படியே அண்ணன் ஆற்க்காட்டரே யும்

    ReplyDelete
  18. தலைவா உங்க கட்சியோட கொள்கை பரப்பு செயலாளர் ராஜா வே பிரசாரத்துக்கு அழைச்சிட்டு போங்க வெற்றி உங்களுக்கு தான் ..அப்படியே ஆற்காட்டரே யும் ......சரியா ........அது என்ன செத்த கட்சி ......... அப்போம் நீங்க ...? அண்ணே விஜயகாந்த் தானே எதிர்கட்சி தலைவர் ....ஏண்ணே .உங்க வாழுற கட்சி யால முடியல...

    ReplyDelete
  19. neengal padithavar thana? ulaga tamilina kolaikaran ungal thalaivan

    ReplyDelete
  20. வாழ்த்துகள். அருமையான கட்டுரை. பார்ப்பன ஊடகங்கள் சதியை அழகாக அம்பலப்படுத்தியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  21. தமிழ்நாட்டிற்கு மீண்டும் விடிவுகாலம் வருவதற்கு உங்களைப்போன்றவர்கள் இம்மாதிரியான விழிப்புணர்வுக்கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டு மீண்டும் தமிழன் ஆட்சி அதிகாரம் பெற்று தமிழ்நாடு சிறப்பாக முன்னேற வேண்டும். உங்கள் பணி சிறந்த தொண்டு.

    ReplyDelete
  22. //கடந்த 5 வருடம் நடந்த உங்கள் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி எதிர்கட்சி கூட இல்லாமல் ஆக்கியச்சு... இன்னும் 4 அரை வருடத்துக்கு பதிவு எழுதிகிட்டே இருங்க... வேற என்ன செய்யமுடியும்...//

    What you did for the past 5 years - Same thing he is going to do it. It is a circle -

    Subu

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))