பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 8, 2013

"முதல் மரியாதை! " - கொஞ்சம் தாமதமான விமர்சனம்!



தமிழகத்தின் தென்மாவட்டத்தில்   இருக்கும் ஒரு ஊர்ல ஆதிக்க சாதியை சேர்ந்த ஒருத்தர் இருந்தாரு. அவரு பெரும் பணக்காரரு. அவருக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒரு பொண்ணு. பேரு பொன்னத்தா.  அந்த பொண்ணு தன் பருவ வயசை அடைஞ்சதும் ஒரு ஜீன்ஸ், கூலிங் கிளாஸ், தொப்புள் அளவுக்கான  டைட் சட்டைல்லாம் போட்டுக்காத அந்த காலத்தில் இருந்த மாடர்ன் டிரஸ்ஸான பட்டாப்பட்டி டவுசர், நலுமுழம் வேட்டி, பெரிய மீசை சகிதம் இருந்த ஒரு வேத்து சாதி பையனை லவ்ஸ் பண்ணுது. ஒரு கட்டத்திலே தப்பு தண்டா நடந்து வவுத்துல புள்ளய வாங்கிடுச்சு. இது தெரிஞ்ச அந்த லவ்பாய் அதை கூட்டிகிட்டு பக்கத்து ஊர்ல இருக்கும் ஒரு வைத்தியர் வூட்டுக்கு அழைச்சுகிட்டு போறாரு. அந்த வைத்தியனோ அந்த பொன்னாத்தாவின் அப்பனுக்கு வத்தி வச்சுடறார். இது தெரிஞ்ச அந்த லவ்ஸ்பாய் பக்கத்தில் கிடந்த ஒரு அருவாளை எடுத்து வைத்தியரை  ஒரே போடா போட்டுட்டு ஜெயிலுக்கு போய்டுறான்.


"வேத்து சாதிலயா லவ்ஸ் அடிச்சு வவுத்துல புள்ளய வாங்கிட்டு வந்துட்ட சிறுக்கி மொவளே, இப்ப ஒன்னய என்ன பண்றேன் பாரு"ன்னு அந்த ஆதிக்க சாதி அய்யா குதி குதின்னு குதிச்சுட்டு தன் சாதில மாப்ள பார்க்குறாரு. இந்த லெவல்ல வயித்து புள்ள வளர ஆரம்பிச்சு வயிறு காட்டி கொடுக்குது பொன்னாத்தாவுக்கு. அந்த ஆதிக்க சாதில வயித்த தள்ளிகிட்டு போனா மாப்ள புடிக்க முடியுமா? யோசிச்சாரு அந்த அய்யா. ஒடனே தன் அக்கா மொவன் ஒருத்தன் வெட்டியா ஒரு துறுபிடிச்ச தொரட்டு குச்சி வச்சுகிட்டு 20 வெள்ளாடு மேய்ச்சிகிட்டு இருந்தான். அவனை கூட்டி வந்து "மாப்ள மாப்ள, எனக்கு பொன்னாத்தாவோட காதலை விட என் சாதி மேல இருக்கும் காதல் தான் அதிகம். அவளை வேத்து சாதில கட்டி கொடுத்தா என் மானம் மருவாதி எல்லாம் புட்டுகிட்டு போய்டும். நாள பின்னக்கி நான் மந்தைல ஒக்காந்து சொம்பிலே தண்ணி குடிச்சு கிட்டு ஜட்ஜ்மெண்ட் எல்லாம் சொல்ல முடியாம போய்டும். நீ என் பொன்னாத்தாவ கட்டிக்க. அதுக்கு பர்த்தியா நான் என் சொத்து பத்து எல்லாம் ஒன் பேருக்கு எழுதி வச்சிடுறேன். அவ வயித்துல வளர்ர புள்ளய ஒம் புள்ளன்னு இனிசியல் வச்சிக்க மாப்ள, அத்தோட என் ஜட்ஜ் போஸ்டை எனக்கு பொறவு நீயே வச்சிக்க. ஆக மொத்தம் ஒரு 'மிச்சர்' மாப்ளயா இரு மாப்ள"ன்னு சொல்ல அந்த டீலிங் பிடிச்சு இருந்துச்சு அந்த மாப்ளக்கி. இந்த டீலிங் பேசுனப்ப செங்கோடன்னு ஒரு செருப்பு தைக்கும் ஆளு பார்த்துடறான். இந்த மிச்சர் மாப்ள தன்னோட மாமன் தன் கால்ல மேல போட்டிருந்த செருப்பு படும் படி கால்ல விழுந்து கேட்டதால இனி இந்த மானம்கெட்ட செருப்பை போட மேட்டேண்டா போ"ன்னு வீரசபதம் எடுக்க செருப்பு தைக்கும் செங்கோடனுக்கு ஒரு கஸ்டமர் போயிட்டாரேன்னு கெதக்குன்னு ஆகிப்போச்சுது. அப்பப்ப அதனால செங்கோடன் வந்து "அய்யா ஒங்க காலுக்கு நான் ஒரு செருப்பு தைச்சு போடனும்" ன்னு சொல்லும் போது அந்த மிச்சர் மாப்ளக்கி பயத்துல ஒன்னுக்கு வந்துடும். "இந்த ஆளுக்கு உண்மை தெரிஞ்சு போச்சுதே"ன்னு பயந்து வரும்.


இப்படியா அந்த மிச்சர் மாப்ள தன் மாமா கிட்டே "நான் ஒன் சொத்து பத்தும், ஒன் பொண்ணு பொன்னாத்தாவையும் வச்சுக்கறேன். நீ ஜட்சு போஸ்ட்டை வச்சுக்கோ" ன்னு மானத்தோட வாழ்ந்து கிட்டு இருக்கும்போது அந்த மாமாவும் மண்டைய போட அந்த ஜட்ஜ் போஸ்டும் மிச்சர் மாப்ளக்கி வந்துடுச்சு. இது நடுவே அந்த மிச்சருக்கு ஒரு ஒன்னுவிட்ட அக்கா மொவன் ...அவன் ஒரு ரெண்டுங்கெட்டான். ஆடு மேய்க்கத்தான் லாயக்கு. அவனையும் தன் கூடவே வளர்த்து வராரு மிச்சர் மாப்ள.


ஆனா பொன்னாத்தா இருக்காளே பொன்னாத்தா... அவளுக்கு சம காண்டு இந்த மிச்சர் மாப்ள மேல. தன்னோட காதலே இந்த ஆளால கெட்டுப்போச்சுதேன்னு நினைச்சாளோ, இல்லாட்டி ஒருத்தன் கூட படுத்துட்டு இன்னுமொருத்தன் கூட வாழனுமான்னு நினைச்சாளான்னு தெர்ல. ஆனா மிச்சர் மாப்ள கூட படுக்குறதில்லை. மனுசனா கூட மதிக்கிறது இல்லை. தான் காதலிச்ச மவராசனை மனசிலே வச்சிகிட்டு ஒரு துறவி மேரி வாழ்ந்து கிட்டு கிடக்கா.


மிச்சர் மாப்ள, தான் இனிசியல் கொடுத்த பொன்னாத்தாவுக்கு பொறந்த அந்த பொண்ணுக்கு ஏனோ தானோன்னு ஒரு கேடுகெட்டவனுக்கு தன் சாதிலயே பார்த்து கட்டி கொடுக்குறாரு. தனக்கு பொறந்த பொண்ணா இருந்தா இப்படி நடந்துப்பாரா மிச்சர் மாப்ள. இதையும் நாம கவனிக்கனும். கட்டிக்கொடுத்தவன் ஒரு களவாணிப்பயபுள்ள. இந்த நிலமையிலே அந்த ஊருக்கு வேற சாதிய சேந்த ஒரு நாடோடி பொண்ணு தன் அப்பனோட பரிசல் ஓட்ட வருது. இந்த மிச்சர் மாப்ளக்கு 50+ வயசு ஆனாலும் கன்னிகழியாம கெடக்குல்ல... இதும் அந்த பொண்ணை... அதுக்கு பேர் குயிலு... அதை லைட்டா சீண்டி கிட்டு இருக்காரு. ஊர்ல சும்மா இருப்பானுங்கலா??? கண்ணு மூக்கு வச்சு பேச ஆரம்பிச்சானுங்க.


அங்க விட்டுட்டு இங்க வாங்க... அந்த மிச்சர் மாப்ளக்கி ஒரு மருமொவன் தெண்டம் இருந்தானே ஆடு மேய்க்கும் அறிவாளி...அவனுக்கு லவ்ஸ் வருது. யார் கூட வேத்து சாதி செருப்பு தைக்கும் செங்கோடன் மொவ கூட. மிச்சர் மாப்ளக்கி என்னா செய்றதுன்னு தெரியலை. கட்டி கொடுக்காட்டா செங்கோடன் சொம்மா இருக்க மாட்டான். மாப்ள எப்படி மிச்சர் மாப்ள ஆனாரு என்பதை ஊருக்குள்ள சொல்லிடுவான்னு பயந்து போன மிச்சர் ... ஆடு மேய்ச்ச மாரியும் ஆச்சுது, அண்ணனுக்கு பொண்ணு பார்த்தது மாரியும் ஆச்சுது"ன்னு கணக்கா "எனக்கு, வேத்து சாதில என் மருமொவனுக்கு கண்ணாலம் கட்ட இஷ்டம் தான். நான் அந்த சாதிக்கு பாதுகாவலன்" ரேஞ்சில டயலாக்கை வுட்டுட்டு கண்ணாலம் கட்டி வைக்கிறரு. இது பொன்னாத்தாவுக்கு புடிக்குமா? "அட நாறப்பயலே,இதைத்தானடா நானும் அந்த காலத்திலே சொன்னேன்,  நானு அந்த காலத்திலேவேத்து சாதி  ஒருத்தன் கிட்ட லவ்ஸ்ம் பண்ணி, படுத்தும் எந்திரிச்சு ஒரு புள்ளய வவுத்துல வாங்கிட்டு வந்த பொறவும் கூட சாதி..கூ ன்னு பேசிட்டு இப்ப ஒன் மருமொவனுக்கு மட்டும் டயலாக்கவுட்டுட்டு திரியிறயே ன்னு பொன்னாத்தாவுக்கு செம கடுப்பாகிடுச்சு.


பொன்னத்தாவின் மருமகப்பய தான் ஒரு களவாணிப்பயன்னு ஏற்கனவே சொன்னோமில்ல. அவன் அந்த செங்கோடன் மொவளை கொண்டு போட்டு காதுல மூக்குல இருந்ததை களவாண்டு போலீஸ்ல மாட்டிகிறான். அது கெடக்கட்டும்... அது இப்போ முக்கியமில்லே...


இந்த நெலமையிலே தான் மிச்சர் மாப்ள, பரிசல்கார பொண்ணு கூட கும்மாளம் அடிக்கும் சேதி வந்து பொன்னாத்தாவோட தண்டட்டி போட்ட காதிலே விழுந்துச்சு. வுடுமா பொன்னாத்தா? தன் சாதி சனம் எல்லாத்தையும் கூட்டி கெடா வெட்டி சாராயம் குடுத்து மிச்சர் மாப்ளயோட அட்டகாசத்தை கேக்க சொல்லுது. அவனுங்களும் அந்த பரிசல்கார குயிலு குடிசைய கொளுத்துறேன்னு போக அதுக்கு மின்னாடியே மிச்சர் மாப்ள அந்த பொண்ணை நான் வச்சிருக்கேன் ன்னு பானையை போட்டு ஒடைக்கிறமாரி சொல்லிட்டு குடிசைக்கு காவலுக்கு போவசொல்ல... அங்கிட்டு அந்த குயிலு ஊரை விட்டே போலாம் போ.. இந்த மிச்சரை நம்பி என்ன பிரயோசனம்னு கெளம்புது. பரிசலை ஓட்ட ரெடியா இருக்கும் போது தான் பொன்னாத்தாவின் பழைய லவ்வர் செயில் வாழ்க்கை முடிஞ்சு பொன்னாத்தாவையும் தனக்கு பொறந்த பொண்ணையும் பார்க்க வரான்.


வர்ரவன் பரிசல்ல வரும் போது குயிலு கிட்டே நடந்த பழைய கதை எல்லாம் சொல்றான். இந்த குயிலுக்கு தேவையில்லாத வேலையை பார்த்துபுடுது அந்த புள்ள. அந்த அப்பாவி காதலனை ஒரே போடா போட்டு தள்ளிட்டு செயிலுக்கு போவுது. பின்ன என்ன ஆச்சுது? மிச்சர் மாப்ள என்ன ஆனாரு? என்பதுல்லாம் வெள்ளி திரையிலே பார்த்துகுங்க.


 கதாநாயகனாக "காதலன்" வேடத்தில் சத்தியராஜும், கதாநாயகி பொன்னாத்தாவாக "வடிவுக்கரசி"யும், மிச்சர் மாப்ளயாக நடிகர் திலகம் சிவாஜிகணேசனும், பரிசல் கார குயிலாக ராதாவும் நடிச்சு இருக்காங்க.


கதாநாயகனாக சத்தியராஜ் இருப்பினும் அவரை விட மிச்சர் மாப்ள கேரக்டரில் நடிச்ச நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பு தான் எல்லார் நடிப்பை விட தூள். அது போல பரிசல்கார குயிலும் தன் பாத்திரம் அறிந்து நடித்து இருக்கின்றார். பொன்னாத்தாவாக வரும் வடிவுக்கரசி அய்யா சிவாஜி கணேசனுக்கு போட்டி போட்டு பிய்த்து உதறி இருக்கார். ஆக மொத்தம் சாதி வெறி ஏத்தும் சூப்பர் படம் இது. கண்டிப்பாக தென் மாவட்டங்களில் சூப்பராக ஓடும். அனால் ஒட்டப்பிடாரம் போன்ற ஊர்களில் படத்தை வெளியிடாமல் இருந்தால் முதல்வர் சட்டம் ஒழுங்கை காப்பத்தலாம். இந்த படத்தை ஒரு சில வசனங்கள் மாற்றி ஆதிக்க சாதி பெயர்களை கொஞ்சம் லைட்டா பட்டி டிங்கரிங் பார்த்து வட மாவட்டங்களில் வெளியிடலாம். ஒரே தமிழ் படத்தை தமிழகத்தின் வேறு வேறு பகுதிகளில் ரீமேக் செய்த முதல் படம் என்னும் பெருமையை பெறலாம். அப்படி வெளியிடும் போது மரக்காணம் போன்ற ஊர்களில் மறக்காம தடை செஞ்சுடனும்.


ஆக மொத்தம் படம் இப்போதைய சூழலில் வெளிவந்தா அது பல அப்பாவிகளுக்கு "இறுதி மரியாதை" ஆகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது!


குறிப்பு 1: இது சத்தியமாக ஒரு காமடிப்பதிவு மட்டுமே. நானும் ஒரு தீவிர சிவாஜி ரசிகர் என்பதை கூறிக்கொள்கிறேன். அதில் பெருமையும் கொள்கிறேன். கோவம் வந்தால் தனி மடலில் திட்டவும். பொதுவெளியில் வேண்டாம். அஜக்........ ஒஜக்...........நஜக்.......... அஜக்....ஒஜக்.... நஜக்..... அஜக். ஒஜக்.நஜக். அஜக் ஒஜக் நஜக் அஜகொசநஜக்....... போதும்... நெக்ஸ்ட் ரெஸ்ட்....


குறிப்பு 2: இப்படி கேணைத்தனமாக மாத்தி யோசிப்பதுக்கு... ஒண்ணுமில்லை... வேண்டம் வுட்டுடுங்க..

15 comments:

  1. அடி நீங்கதானா அந்தக் குயில்?

    ReplyDelete
  2. வடிவுக்கரசிMay 8, 2013 at 6:54 PM

    நன்றி தலைவரே

    ReplyDelete
  3. சத்யராசுMay 8, 2013 at 6:55 PM

    அடுத்து நம்ம அமைதிப்படை பார்ட் டூவுக்கும் இதே மாதிரி ஒரு பதிவு பதிவு எழுதிடுங்ணா..

    ReplyDelete
  4. நான் புதுசா பாராட்ட ஏதும் இல்லை வழக்கம் போலவே ....., நான் சொல்ல வேண்டியதை செஞ்சி காட்டுறேன்.

    ReplyDelete
  5. // நானும் ஒரு தீவிர சிவாஜி ரசிகர் என்பதை கூறிக்கொள்கிறேன். அதில் பெருமையும் கொள்கிறேன். //

    அந்த பயம் இருக்கட்டும் :)

    செம எழுத்துண்ணே!

    ReplyDelete
  6. // நானும் ஒரு தீவிர சிவாஜி ரசிகர் என்பதை கூறிக்கொள்கிறேன். அதில் பெருமையும் கொள்கிறேன். //

    அந்த பயம் இருக்கட்டும் :)

    செம எழுத்துண்ணே!

    ReplyDelete
  7. அடடா இது திரைமணத்திற்குள் சென்று விட்டது. மகுடத்திற்கு வராம போச்சே.

    ReplyDelete
  8. பரதேசி படத்தில் பத்தே நிமிடத்தில் செயற்கை கிராமம் செயற்கை நாயகன் செயற்கை நாயகியை உணர்வோம்
    இப்படத்தில் இரண்டே நிமிடத்தில் இயற்கை கிராமம் இயற்கை நாயகன் இயற்கை நாயகியை உணர்வோம்

    ஆதிக்க சாதி வாழ்க்கை முறையை
    பார்ப்பவர் ஒவ்வொருவரையும் உணர வைத்தவர் அல்லவா
    அந்த மாடசாமித் தேவர் .
    தேவரைத் தூக்கிச் சாப்பிடும் விதத்தில் ரசிகர்களோடு கலந்த
    ராதாவிற்கு 70 அடியில் கட் அவுட் மருதை
    பெரியார் பஸ் ஸ்டாண்ட் எதிரில் .

    ReplyDelete
  9. சண்முகசுந்தரம்May 8, 2013 at 11:24 PM

    இந்தப் படத்துல நமக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்காமப் போச்சே! இல்லாட்டி "அக்க்க்க்காஆஆஆ, மாமா தப்பு பண்ணிடாரேக்காஆஆஆஆ தப்பு பண்ணிட்டாரேன்னு" உருகி இருப்பேனே

    ReplyDelete
  10. கெளதமிMay 8, 2013 at 11:25 PM

    நல்லவேளை, இந்த மானங்கெட்ட தேவர்மகன் என்னைய விட்டுட்டு ரேவதியை கட்டிக்கிட்டாரு.

    ReplyDelete
  11. நல்லா கட்டுடைச்சீட்டீங்க அபிஅப்பா

    ReplyDelete
  12. அட்டகாசம். நெத்தியடி. இதே போல பதினாறு வயதினிலே என்ற படத்தைப் பற்றியும் நேர்மையான விமர்சனம் செய்யுங்களேன்.

    ReplyDelete
  13. என் இனிய இணைய மக்களே,
    மண் வாசனையுடன் உருண்டு புரண்டு, மண்காற்றை சுவாசிக்கும் இந்த பாரதிராஜா, சுமார் 30 ஆண்டுகளுக்கு நான் இயக்கிய இந்த "முதல் மரியாதை"யை, டிடிஎஸ் பதிப்பில் வெளியிட ஆசை கொண்டுள்ளேன். தமிழ் மக்களும் இணைய மக்களும் கலந்து, "முதல் மரியாதை" டிடிஎஸ் பதிப்புக்கு உங்கள் மண்வாசனை வீசும் ஆதரவைத் தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.
    உங்கள் பாத மண்ணைத் தொட்டு
    இயக்குநர் பாரதிராஜா.

    ReplyDelete

  14. ஒரு சிறிய உதவி..

    மின்சாரம் பற்றிய ஒரு இடுகை இட்டிருரிக்கிறேன்.

    படித்து பார்த்து ஆவன செய்யுங்கள்

    http://kannimaralibrary.co.in/power9/
    http://kannimaralibrary.co.in/power8/
    http://kannimaralibrary.co.in/power7/
    http://kannimaralibrary.co.in/power6/
    http://kannimaralibrary.co.in/power5/
    http://kannimaralibrary.co.in/power4/
    http://kannimaralibrary.co.in/power3/
    http://kannimaralibrary.co.in/power2/
    http://kannimaralibrary.co.in/power1/

    நன்றி,
    வினோத்.

    ReplyDelete

  15. ஒரு சிறிய உதவி..

    மின்சாரம் பற்றிய ஒரு இடுகை இட்டிருரிக்கிறேன்.

    படித்து பார்த்து ஆவன செய்யுங்கள்

    http://kannimaralibrary.co.in/power9/
    http://kannimaralibrary.co.in/power8/
    http://kannimaralibrary.co.in/power7/
    http://kannimaralibrary.co.in/power6/
    http://kannimaralibrary.co.in/power5/
    http://kannimaralibrary.co.in/power4/
    http://kannimaralibrary.co.in/power3/
    http://kannimaralibrary.co.in/power2/
    http://kannimaralibrary.co.in/power1/

    நன்றி,
    வினோத்.

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))