பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 27, 2013

எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரிய கலக்டர் சொக்கலிங்கம்!


இடமிருந்து வலமாக வெள்ளை உடையில் திரு. சொக்கலிங்கம்


இவருடைய பெயர் சொக்கலிங்கம். மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் வழுவூர் மெயின் ரோட்டை அடுத்து சுந்தரப்பன்சாவடி என்னும் கிராமம்(அதே மெயின் ரோட்டிலேயே) இவருடையது. உடையார் சமூகத்தை சேர்ந்தவர். பக்கத்து கிராமங்கள் எல்லாம் அதாவது பண்டரவாடை, மங்கைநல்லூர், நெய்க்குப்பை, வழுவூர் இங்கெல்லாம் இவருடை சமூகத்தினர் அதிகம். அவர்கள் பெரிய நிலக்கிழார்களாக இருப்பினும் இவர் ஏழை. தன் தாய் தந்தையர்களுக்கு ஒரே மகன்.இவரது தந்தையார் இவருடைய சிறு வயதிலேயே காலமாகிவிட்டார். அம்மாவும் மகனும் மட்டும் தான் வீட்டில். இவரோ வயல் வேலைக்கு சென்று தான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலையெனினும் இவர் அங்கிருந்து தினமும் எட்டு கிலோ மீட்டர் நடந்தே வந்து மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படித்தார்.


தன் குடும்ப ஏழ்மை நிலையிலும் அண்ணாமலை பல்கலைகழகத்துக்கு சென்று பட்டப் படிப்பும் படித்தார். பின்னர் I.A.S தேர்வு எழுதி தேர்வாகி (தமிழ்நாடு கேடர்) தமிழக அரசின்  முதலமைச்சராக 1967ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சி.என்.அண்ணாதுரை அவர்களுக்கு நேர்முக உதவியாளர் ஆக பணியமர்த்தப்பட்டார். அண்ணாவின் மறைவுக்கு பின்னர் தமிழகத்தின் கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியராக இருந்து பணியாற்றினார். தன் வருமானத்தில் தன் தந்தையாருக்கு (அதே சுந்தரப்பன் சாவடி மெயின் ரோட்டில்) தன் வீட்டுக்குள் (மெயில் ரோட்டை பார்த்து இருக்கும் கொல்லையில்) சிலை வைத்து கோவில் கட்டினார். அவர் எங்கு பணியாற்றினாலும் இங்கே தன் சொந்த கிராமத்துக்கு வந்து தான் விடுமுறையை கழிப்பார்.


அண்ணாவின் மீது அதீத  பற்று கொண்டவர். ஒரு முறை அண்ணா முதல்வராக இருக்கும் போது மயிலாடுதுறை வழியாக திருவாரூர் செல்லும் வழியில் தன் வீட்டில் மதிய உணவு உண்ண வேண்டும் என அண்ணாவை இவர் கேட்டுக்கொள்ள அண்ணாவும் சம்மதித்தார். ஆனால் இவரது தாயார் சிறிது மனநலம் குன்றி விட்ட நிலை அது. அண்ணாவுக்காக வித விதமாக சமைத்து வைக்க சொல்லி இவர் தன் தாயாருக்கு கடிதம் எழுதியும் அவர் அதை செய்யவில்லை. புளிக்குழம்பும், சுட்ட அப்பளமும் மட்டுமே வைத்து இருந்ததைக்கண்டு சொக்கலிங்கம் அதிர்ந்தார். ஆனால் அண்ணாவோ (முதல்வர்) இனிய முகத்தோடு "நான் நீண்ட நாளாக புளிக்குழம்பும், சுட்ட அப்பளமும் சாப்பிட வேண்டும் என நினைத்து இருந்தேன். என் தொத்தா( அண்ணாவின் வளர்ப்பு தாய்) அவர்களுக்கு மட்டுமே எனக்கு இது பிடிக்கும் என தெரியும். மிஸ்டர் சொக்கலிங்கம் உங்கள் அம்மாவின் உருவில் என் தொத்தாவை காண்கிறேன்" என அண்ணா இவரை தேற்றினார். ஆனாலும் அன்று தனக்கு ஏற்பட்ட அவமானத்தால் அன்று முதல் திரு. சொக்கலிங்கம் மதிய உணவை சாப்பிடும் பழக்கத்தையே விட்டு விட்டார். அத்தனை பக்தி அண்ணா மீது இவருக்கு.



தன் பணிக்காலத்தில் மிகவும் கண்டிப்பானவர் என்னும் பெயரைப்பெற்றார். எம் ஜி ஆர் அவர்கள் முதல்வராக இருந்த போது தமிழக அரசின் தலைமை செயலர் என்னும் உயரிய அந்தஸ்து பெற்றார். எம் ஜி ஆர் அவர்களின் கடைசி காலத்தில் உடல் நலம் குன்றிய போது  அமரிக்க புரூக்ளின்  மருத்துவமனை சென்ற போது அவருடன் சென்ற சிலரில் தலைமைச்செயலர் திரு. சொக்கலிங்கம் அவர்களும் உண்டு. அப்போதைய முதல்வர் எம் ஜி ஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் திரு.சொக்கலிங்கம் அவர்கள்.


பின்னர் பணி ஓய்வு பெற்ற பின்னர் தன் சொந்த கிராமத்துக்கு வந்து தன் வீட்டு கொல்லைப்பக்கம்  இன்றைய நாகரீகத்துக்கு ஏற்றது போல கான்கிரீட் வீடு ஒன்றை சிறியதாக கட்டிக்கொண்டு தன் வீட்டை சுற்றிலும் தோட்டங்கள், தென்னை மரங்கள் சூழ அமைதியான வாழ்க்கை நடத்தினார் தன் தாயாருடன். (அது வரை அவரது தாயாரும் இருந்தார்) அனால் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் உயர் கல்வி கற்று அமரிக்க நாட்டிற்கு சென்று விட்டனர். இவரும் ஆறு மாதத்துக்கு ஒரு முறை அமேரிக்கா சென்று சில நாட்கள் தன் குடும்பத்துடன் வசித்து விட்டு மீண்டும் தன் கிராமத்துக்கு வந்து விடுவார். பின்னர் தன் தாயார் இறந்த பின்னர் தன் தந்தையாருக்கு கட்டிய கோவிலுக்கு பக்கத்தில் தாயாருக்கும் சிலை வைத்து தனிக்கோவில் கட்டினார்.


தான் சுந்தரப்பன் சாவடியில் வாழ்ந்த கடைசி காலத்தில் தனக்கு வரும் ஓய்வூதியப்பணம் மற்றும் தன் கொல்லையில் காய்க்கும் தேங்காய்களை விற்று வரும் வருமானம் இவைகளை கொண்டு நிம்மதியான வாழ்வு வாழ்ந்தார். ஒரு ரூபாய் கூட விரய செலவு செய்ய மாட்டார். அவரால் மயிலாடுதுறைக்கு பெருமை. அவரால் அவர் படித்த நகராட்சி மேல் நிலைப்பள்ளிக்கு பெருமை. அவரால் அவர் கிராமத்துக்கு பெருமை. சுற்றி இருந்த கிராமங்களுக்கு பெருமை.

இரு தினங்கள் முன்பாக அமரிக்கா சென்றிருந்த போது உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். அவரது ஆசைப்படி அவரது உடல் சொந்த ஊருக்கு வருகின்றதாம். அமேரிக்கா சென்று இறந்தாலும் தான் நேசித்த மண்ணில் வந்து அமைதியாக உறங்கட்டும் திரு. சொக்கலிங்கம் அய்யா அவர்கள்!


"பத்திரிக்கா உலக" நியதிப்படி செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் சூதாட்டம் மற்றும்  கூட்டிக்கொடுக்கும் தொழிலதிபர்  குருநாத் மெய்யப்பன் இடம் பெற,திரு.சொக்கலிங்கம் அவர்கள் எட்டாம் பக்கத்தில் இரண்டு இன்ச் ஆக சுருங்கி போயிருந்தார்.



திரு. சொக்கலிங்கம் அவர்களுக்கு மயிலாடுதுறை மக்கள் சார்பாக அஞ்சலிகள் :-(

15 comments:

  1. ஆழ்ந்த இரங்கல்கள் ...காவேரியின் புதல்வனுக்கு ..

    ReplyDelete
  2. ஆழ்ந்த இரங்கல்கள்.....

    என்பதுகளில் விடுமுறை நாட்களில்அவரிடம் சென்று (அவர் தலைமைச் செயலராக இருந்த போதே) பேரம் பேசி எட்டணாவுக்கு தேங்காய் வாங்கி வந்து மாயவரத்தில் முக்கால் ரூபாய்க்கு விற்று அப்போதைய பாக்கெட் செலவுகளுக்காக சம்பாதித்திருக்கிறேன். எனக்கு ஒரு ரோல் மாடலாக விளங்கியவர்.

    ReplyDelete
  3. //கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))

    No கருத்து

    ReplyDelete
  4. Aalntha irangalai theriviththu kolkiren

    ReplyDelete
  5. Aalntha irangalai theriviththu kolkiren

    ReplyDelete
  6. நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது, (இன்றைய அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுடன்) ஒன்றுபட்ட பெரிய மாவட்டமாக இருந்த எங்கள் திருச்சி மாவட்டத்திற்கு கலெக்டராக இருந்தவர் திரு.சொக்கலிங்கம். கல்லூரி படிப்பின் சமயம் அவரது பணியில் அவருக்கிருந்த நேர்மை, உழைப்பை பற்றியும் அறிஞர் அண்ணாவிடம் அவருக்கிருந்த மதிப்பைப் பற்றியும் கேள்விப் பட்டு இருக்கிறேன்.

    கலெக்டர் சொக்கலிங்கம் அவர்களைப் பற்றிய அதிக தகவல்களை தங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். தங்களுக்கு நன்றி!

    // இரு தினங்கள் முன்பாக அமரிக்கா சென்றிருந்த போது உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். அவரது ஆசைப்படி அவரது உடல் சொந்த ஊருக்கு வருகின்றதாம். அமேரிக்கா சென்று இறந்தாலும் தான் நேசித்த மண்ணில் வந்து அமைதியாக உறங்கட்டும் திரு. சொக்கலிங்கம் அய்யா அவர்கள்! //

    அவரது ஆன்மா அமைதியாகட்டும்! அன்னாருக்கு எனது கண்ணீர் அஞ்சலி!






    ReplyDelete
  7. He is one of the High Official of Tamilnadu who had good reputation both with Public & his Adminstrators ( Ministry).

    ReplyDelete
  8. He is one of the Retired Officials who had good reputation both with Publc & Adminstrators ( Govt). A memorable personality.

    ReplyDelete
  9. ஆழ்ந்த இரங்கல்கள்.....

    ReplyDelete
  10. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.

    ReplyDelete
  11. ஆரூர். மு. அஜ்மல்கான் ஜபருல்லாஹ்May 28, 2013 at 12:44 AM

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி’ஊன்...

    ReplyDelete
  12. அவரது ஆன்மா அமைதியாகட்டும்! அன்னாருக்கு எனது கண்ணீர் அஞ்சலி!

    ReplyDelete
  13. திரு சொக்கலிங்கம் பற்றிய தெரியாத தகவல்கள்... நன்றி அபி அப்பா!

    அவரது குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்திப்போம்!

    ReplyDelete
  14. ஒரு நல்ல மனிதரை அறியச் செய்தமைக்கு நன்றி! ஆழ்ந்த இரங்கல்கள்!

    ReplyDelete
  15. ஒரு நல்ல மனிதரை அறியச் செய்தமைக்கு நன்றி....

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))