இது எங்கள் இனிய நண்பர் கேபிள் சங்கர் அவர்கள் இப்போது இயக்கி வரும் "தொட்டால் தொடரும்" சினிமாவின் பாடல் ப்ரமோ வீடியோவின் சின்ன விமர்சனம். நண்பர்களே தியேட்டருக்கு சென்று இந்த படத்தை பாருங்கள். இப்போது இந்த பட்டை கேளுங்கள். உங்கள் அன்பான ஆதரவை தாருங்கள் இந்த படத்துக்கு!
*****************
பாட்டை கேட்டேன் கேபிள்ஜி! பாட்டு மட்டும் ஓடிகிட்டு இருக்கு. ஆனால் மனசு மட்டும் எங்கோ பறந்து கிட்டு இருக்கு. இந்த சினிமா உலகில் ஜெயிக்க நீங்க நடத்திய போராட்டம், உழைப்பு, அர்ப்பணிப்புகள், இழப்புகள், வேதனைகள், உங்களை சினிமாவுக்கு நேர்ந்து விட்டு ஒத்துழைப்பு கொடுத்த உங்கள் குடும்பம், நீங்க சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்கிற உங்க அப்பாவின் ஆசைகள், இன்று இதை பார்க்க அப்பா இல்லியே என்னும் வருத்தம் இன்னும் எத்தனையோ எத்தனையோ மனசுல ஓடுது கேபிள்ஜி! உங்களின் இந்த முதல் இயக்குனர் ஆகும் இந்த தருணம் என்னால் விமர்சனத்துக்கு அப்பாற்ப்பட்டது என்றே நினைக்கிறேன். ஏனனில் "பிடிக்குது... நல்லா இருக்கு... ஆஹா... ஓஹோ... சூப்பர்" என மனதில் முன்முடிவோடுத்தான் பாட்டை பார்த்தேன்.... அதனால் மட்டுமல்ல .... உண்மையாகவே பாட்டு பிடிச்சிருக்கு.... பாடல்களும் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்று தியேட்டரில் அதன் 100வது நாளில் நாங்கள் தியேட்டர் டிக்கெட் கிழிப்பவரிடம் "கேபிள்ஜி எங்க நண்பர் தான் தெரியுமா" என பெருமை அடித்துக்கொள்ள வேண்டும். அதைக்கேட்ட அந்த டிக்கெட் கிழிப்பவர் "எனக்கு கூடத்தான் சிவாஜி கணேசன் நண்பர்... பேசாம போய்யா படம் பார்க்க உள்ளே"ன்னு சலிச்சுக்கனும்.... நடக்கும் கேபிள்ஜி... இப்படி நடக்க வேண்டும்! என் அன்பான வாழ்த்துக்கள்!
பாட்டு உண்மையிலேயே நல்லா இருக்கு. நல்ல ஹிட் ஆகும். வாழ்துக்கள் கேபிள்ஜி.
ReplyDeleteஆனா அபிஅப்பாவோட அலப்பரைதான் தாங்கமுடியல...
நண்பரின் படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்!
ReplyDeleteகாண்டுல இல்ல, நடுநிலையா தான் சொல்றேன். நாங்க ஏன் தியேட்டர்ல போய் படம் பார்க்க போறோம் எத்தனை படங்களுக்கு அவர் விமர்சணம் எழுதி, நிறைய பேரை தியேட்டருக்கு போக முடியாதபடி எழுதியிருக்கிறார். படம் வரட்டும். கேபிள் எங்களுக்கு இத்தனை வருடம் எங்களுக்கு எடுத்த வகுப்பின் படி, படத்தை அலசி, ஆராய்ந்து, அதை சில பல உலக திரைப்படங்களோடு ஓப்பிட்டு டிவைன்னா இருந்தா பார்க்கலாம்... இல்லைனா திருட்டு டிவிடி தான். அது கூட விமர்சணம் எழுதத் தான்.. முற்பகல் செய்யின்.....
ReplyDelete