பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

January 31, 2007

போஸ்டர் ஒட்டுவது எப்படி???

இதுக்கெல்லாம் ஒரு பதிவான்னு காறி துப்ப தோணுச்சுன்னா... ஸ்டாப். பக்கத்துல ஒரு வாளி வச்சிருக்கேன் அதுலதான் துப்பனும் என் மூஞ்சில வெளாடப்படாது. ஆமா சொல்லிட்டேன்.கார்த்தாலதான் பகுடர் போட்டு பள பளன்னு வந்துருக்கேன்.

காறி துப்ப நினைப்பவர்களே போஸ்டர் ஒட்டுவதை ப்ற்றி கொஞ்சம் நினைத்து பாருங்கள் அல்லது டிரை செய்து பாருங்கள். அந்த கஷ்டம் புரியும்.

போஸ்டர் ஒட்டி முன்னேறி தான் மந்திரி ஆகனும் என்பதால் முதலில் 'மந்திரியாவது எப்படி' என்றுதான் தலைப்பு வைத்தேன். தயாநிதி,அண்புமணி என்று கூட்டமா வந்து கும்மியடிச்சிடுவீங்களேன்னுதான் தலைப்பை மாத்திட்டேன். ரெடி ஸ்டாட்.

1 கிலோ மைதா மாவு வாங்கிக்கனும். பிறகு 20 லிட்டர் தண்ணிய ஒரு பெரிய அலுமினிய அண்டாவுல ஊத்தி அதில மைதா 1 கிலோவையும் கட்டியில்லாம கரைக்கனும்.

இப்போ அடுப்ப பத்த வச்சி நல்லா கொதிக்க வைக்கனும். 10 நிமிஷம் ஆன பின்ன....இருங்க 10 நிமிஷத்ல நாஷ்டா முடிச்சிட்டு வந்திர்ரேன். அதுவரை நல்லா கிண்டிகிட்டு இருங்க.
1
2
3
4
5
6
7
8
9
10
ஆச்சா, இப்ப பதக் பதக்ன்னு கொப்பளம் வருதா. ஒரு தினமலரை கீழே பிரிச்சு வச்சி அதன் மேல இறக்கி வச்சி ஒரு தட்டுல 5 கரண்டி எடுத்து வச்சி அதுல கொஞ்சம் உப்பு போட்டு கலந்து தனியா மூடி வச்சிட்டு வேர்வைய தொடச்சிகிட்டே வாசலுக்கு போய் முருங்கமரத்தோடு சைக்கிள் செயினால பூட்டியிருக்குற தட்டுவண்டிய ரிலீஸ் செஞ்சி வாசலுக்கு நேரா நிறுத்துங்க.

இப்போ பசை அண்டாவ தூக்கிட்டு போய் வண்டில வச்சிட்டு நேரா போய் A-0 சைஸ் போஸ்டர (உதாரணத்துக்கு 100 Nos) கலெக்ட் பண்ணிகிட்டு, 150 ரூபா தருவாங்க அதையும் வாங்கிகிட்டு நேரா டாஸ்மார்க்குக்கு வண்டிய வுடுங்க. நீங்க ஒன்னியும் முயற்ச்சி பண்ண வேனாம் வண்டி தானா போவும்.

நமக்கு ஜாஸ்தி நேரம் இல்ல. பத்து தெரு போவனும். அதனால வெளியே நின்னுகிட்டே ஒரு மானிட்டர் 90 கட்டிங்+1 தண்ணி பாக்கெட் வாங்குறோம். பாட்டில தலைய திருகிட்டே பாக்கெட்ட ஒரு மொனய கடிச்சு பிசிரு பிளாஸ்டிக்க துப்பிட்டு இப்போ நல்லா அண்ணாந்துகிட்டு வாய நல்லா பொளந்துகிட்டு 2 லிக்குடையும் ஒரே நேரத்துல உள்ள ஊத்துறோம். 8 செகண்டுதான் ஆவும். 2 எம்டியையும் கீழே கடாசிட்டு ரெண்டு கையாலயும் கல்லாவுல இருக்கிறவன் தலைய புடிச்சி குனிய வச்சி நல்லா மோந்துக்கறோம்.(சைடு டிஷ்)

சரி. வண்டிகிட்ட போய் வேலய அங்கிட்டேர்ந்தே ஆரம்பிக்கிறோம். இப்போதான் தலைப்புக்கே வாறோமா?

போஸ்டரை பிரிச்சு பார்தா இஞ்சி இடுப்போட சிம்ரன்!!! இப்போ வலது கையில 4 வெரலால பசைய அள்ளி பக்கத்து செவுத்தில அப்பி அதில சிம்ரன் இடுப்பை அதாவது போஸ்டரின் நடு பாகத்தை ஒட்டி இன்னொரு கை பசை அள்ளி போஸ்டரின் வலது மூலையில் ஆரம்பித்து சர்ர்ர் இப்போ அங்கிருந்து கீழ் முனைக்கு சர்ர்ர். திரும்ப ஒரு கை அள்ளி விட்ட இடத்திலிருந்து இடது கை கீழ் மூலைக்கு சர்ர்ர்ர்ர். அங்கிருந்து மேல் இடது மூலைக்கு சர்ர்ர்ர்.

இப்போது ஒரு கை அள்ளி இடது மேல் மூலை டு வலது கீழ் மூலை சர்ர்ர்ர். பின்பு வலது மேல் மூலை டு இடது கீழ் மூலை சர்ர்ர். முடிஞ்சுதா.

இது முக்கியம். நன்கு கவனிக்கவும். இப்போ மேல் ரெண்டு முனையையும் ரெண்டு கையாலயும் பிடித்து போஸ்டரை செவுத்திலிருந்து பிரித்து எடுத்து அப்படியே ப்ந்து போல் கண்னா பின்னான்னு சுருட்டவும். டைட்டாக இல்லை சும்மா பொதுக்குன்னு சுருட்டவும். பின்பு அந்த பந்தை கீழே உள்ள மண்னில் விட்டெறிந்து காலால் லைட்டாக ஒரு 5,6 அடிக்கு அப்பால உருண்டு போகுமாறு உதைக்கவும்.

இப்படியாக 10 உருண்டை செய்த பின் அதையெல்லாம் பொருக்கி நம் தட்டு வண்டியில் போட்டுக்கவும். பிறகு நகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட இடத்திற்கு சென்று அந்த இடத்தில் ஏற்கனவே ஒட்டப்பட்ட போஸ்டரை கிழித்துவிட்டு(கிழிக்காமல் ஒட்டினால் மறு நாள் பத்தையாக வந்துவிடும்) முதல் பந்தை எடுத்து ஏதாவது ரெண்டு முனையை பிடித்து நன்றாக உதறவும். பயப்பட வேண்டாம். கிழியாது. மண்ணில் போட்டு பிரட்டியதால் முன்னெ பின்னெ ஒட்டிக்காது.

இப்போது உதரறிய போஸ்டரை ஒட்டவும். பிறகு பரவலாக போஸ்டரை ரெண்டு கையாலும் நன்கு தடவவும். இது தொழில் முறை தடவல். பிறகு போட்ட கட்டிங் ஜிவ்வுனு ஆகி போனதால் எக்ஸ்ட்ரா தடவல். இப்படியாக 10 தெரு போய் 80 ஒட்டி விட்டு (20 வீட்டுக்கு) திரும்பவும் வண்டில ஏறி உக்காந்தா அது நேரா டாஸ்மாக் போகும்.

திரும்ப வீட்டுக்கு வந்து 20 போஸ்டரையும் ஏற்கனவே சேத்து வச்சிருக்கறது மேல வச்சிட்டு( ஆச்சு இதுவர 100. நாளைக்கு பாய் கடைல போடுனும்) கை,கால கழுவிட்டு மூடிவச்ச மைதா கூழை(இப்போது அதை பசைன்னு சொல்லக்கூடாது) சாப்டுட்டு குப்புறடிச்சு தூங்கனும். காலைல சீக்கிரம் எந்திரிச்சி கெலம்புனும். சத்யம்ல system administrator postக்கு ஒரு interview இருக்கு.

பதிவ படிச்சாச்சா? நானும் எனக்கு பக்கத்துல வாளியும் ரெடி.

15 comments:

  1. //90 கட்டிங்+1 தண்ணி பாக்கெட் வாங்குறோம். பாட்டில தலைய திருகிட்டே//

    குவார்ட்டர் வாங்கினா தலைய திருகணும்,கட்டிங் வாங்கினா தலைய திருகவே தேவையில்லையே ஏற்கனவே திருகித்தான குடுப்பாங்க! :))

    உடனே பெரிய அனுபவம் போலன்னு நினக்காதிங்க!

    எல்லாம் கேள்வி ஞானம்தான்!

    //காரி துப்ப நினைப்பவர்களே கொஞ்சம் நினைத்து பாருங்கள் அல்லது டிரை செய்து பாருங்கள். அந்த கஷ்டம் புரியும்.//

    வாழ்த்துக்கள்!

    போதுமா!

    ReplyDelete
  2. //குவார்ட்டர் வாங்கினா தலைய திருகணும்,கட்டிங் வாங்கினா தலைய திருகவே தேவையில்லையே ஏற்கனவே திருகித்தான குடுப்பாங்க! :))//

    இல்ல தம்பி, மானிட்டர் 90ml தனி பாட்டிலே இருக்குதாம். 19 ரூபாயாம். பேசிக்கிட்டாங்க.

    ReplyDelete
  3. message from திரு. செந்தழல் ரவி

    //ஏனுங்க அது வாளி, வாலி கிடையாது...வாலின்னா ராமாயண கேரக்டர்...கொஞ்சம் காமிடியாத்தான் எழுதறீங்க...தமிழ்மணம் / தேன்கூட்டுல சேருங்க தலை.... ஆட்டத்துல உங்களையும் சேர்த்தாச்சு...:))))))))) //

    வாங்க திரு. ரவி,என்னோட பெரிய பிரச்சனையே எழுத்துப்பிழைதாங்க. கூடிய சீக்கிரம் சரி செய்துக்கறேன். உங்க வருகைக்கு நன்றி.

    (கத்துக்குட்டியான நான் தவறி உங்க பின்னூட்டத்தை டெலேட் செய்துவிட்டேன். அதனால்தான் இந்த ஒட்டு வேலை)

    ReplyDelete
  4. ஆஹா...அருமை..உங்க போஸ்டர் பதிவு ஒரு கிக்காதான் இருக்கு அபி அப்பா...நல்ல நகைச்சுவை தான்..

    \\2 எம்டியையும் கீழே கடாசிட்டு ரெண்டு கையாலயும் கல்லாவுல இருக்கிறவன் தலைய புடிச்சி குனிய வச்சி நல்லா மோந்துக்கறோம்.(சைடு டிஷ்)\\\

    எதுக்கு தலைய புடிச்சிக்கிட்டு...பக்கத்து இலையில கையைவச்சிடா வேண்டியாது தான்..அனுபவம் எல்லாம் இல்ல சாமி நம்மபய ஒருத்தன் சொன்னான்...

    ReplyDelete
  5. //எதுக்கு தலைய புடிச்சிக்கிட்டு...பக்கத்து இலையில கையைவச்சிடா வேண்டியாது தான்..அனுபவம் எல்லாம் இல்ல சாமி நம்மபய ஒருத்தன் சொன்னான்...
    //

    வாங்க கோபி!
    நம்ப ஆளுக்கு பக்கத்துல இலை வச்சிருக்க்கவன் கிட்ட எல்லாம் நேரமில்லை. பத்து தெரு போவனுமில்ல? பொருப்பு சாஸ்தி.

    ReplyDelete
  6. அபி அப்பா... இருங்க அபிக்கிட்ட சொல்லி கொடுக்குறேன்... உங்கள, நல்லா வேலை செய்ய வைப்பா(ன்)...

    அப்புறம், இதுவரையும் மத்தவங்க வாளிலதான் விளையாடிட்டு இருந்தீங்க... இப்ப, நீங்களே ரெடி பண்ணிட்டீங்களா... வாங்க... வாங்க... ஆட்டத்துக்கு ரெடியாயிட்டீங்க...

    ReplyDelete
  7. அபி அப்பா,
    இது என்ன நமக்கு சொல்லாம கடைய திறந்துட்டீங்க...

    நம்ம வந்து ரிப்பன் வெட்டலாம்னு பார்த்தா தம்பி மாதிரி பெரிய ஆளுங்க எல்லாம் நமக்கு முன்னாடியே வந்துட்டாங்க...

    இன்னும் பட்டைய கிளப்ப வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  8. //அபி அப்பா... இருங்க அபிக்கிட்ட சொல்லி கொடுக்குறேன்... உங்கள, நல்லா வேலை செய்ய வைப்பா(ன்)...//

    வாங்க வாங்க ஜி! 'வைப்பாள்' தான்.


    //அப்புறம், இதுவரையும் மத்தவங்க வாளிலதான் விளையாடிட்டு இருந்தீங்க... இப்ப, நீங்களே ரெடி பண்ணிட்டீங்களா... வாங்க... வாங்க... ஆட்டத்துக்கு ரெடியாயிட்டீங்க... //

    ஆமா, பொங்குறத கொட்ட வாளி ரெடி செஞ்சாச்சு.

    ReplyDelete
  9. //அபி அப்பா,
    இது என்ன நமக்கு சொல்லாம கடைய திறந்துட்டீங்க...

    நம்ம வந்து ரிப்பன் வெட்டலாம்னு பார்த்தா தம்பி மாதிரி பெரிய ஆளுங்க எல்லாம் நமக்கு முன்னாடியே வந்துட்டாங்க...

    இன்னும் பட்டைய கிளப்ப வாழ்த்துக்கள்!!!//

    வாங்க வாங்க வெட்டி தம்பி!! வருகையினால ரொம்ப சந்தோஷம். உங்களுக்கு தெரியுமா? க.பெ வழியாக உங்கள் வலைப்பூ முகவரி கிடைத்தது. அதன் பின் உங்கள் மூலமாய்தான் இங்கே உலவ ஆரம்பித்து இன்று நானும் ஒரு பிளாக்கர்ன்னு ஆகிப் போச்சு.அடிக்கடி வாங்க வெட்டி தம்பி.

    ReplyDelete
  10. ஹ்ம்ம்ம்.........

    துபாய்ல என்ன பண்ணிட்டு இருக்கீங்கன்னு இப்பதான் தெரியுது....

    அபிகிட்ட போட்டு குடுக்கறேன் இருங்க....

    ReplyDelete
  11. //அபிகிட்ட போட்டு குடுக்கறேன் இருங்க.... //

    ஐய்யய்யோ, கிழிஞ்சிது கிஷ்ணகிரி, அம்மாவும் பொண்னும் குடும்பத்தோட வந்து குமுறி குமுறி கும்மியடிச்சிட்டு போய்டுவாங்க..வுட்டுடும்மா ...எஸ்கேப்...

    இன்னிக்கு 'தம்பி' 50வது பதிவு போட்டுருக்கார். வாழ்த்து போஸ்டர் வேல பாக்கியிருக்கு...வர்டா...

    ReplyDelete
  12. :)))

    அண்ணே

    எனக்கும் ஒரு வேலை போட்டு குடுங்கண்ணே :))

    ReplyDelete
  13. //நமக்கு சொல்லாம கடைய திறந்துட்டீங்க//

    அதானே!!

    அப்புறம்.. போஸ்டர் ஒட்டி ஒட்டி ரொம்ப அனுபவம் போல! :-D

    ReplyDelete
  14. //அண்ணே

    எனக்கும் ஒரு வேலை போட்டு குடுங்கண்ணே :)) //

    வாங்க கப்பி தம்பி, முதல் வருகைக்கு நன்றி. இந்த பிளாக் ஆரம்பிக்க நீங்களும் உதவி செய்ததை இந்த உலகம் அறியட்டும்.

    ReplyDelete
  15. //அதானே!!

    அப்புறம்.. போஸ்டர் ஒட்டி ஒட்டி ரொம்ப அனுபவம் போல! :-D //

    அது ஒரு கலைங்க.

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))