என்னால ஒரு விஷயம் முடியலைன்னா அத அப்டியே விட்டுடற ஆளு இல்ல நானு.
அப்டிதான் நா 10ம்பு படிக்கும் போது பால் வாங்க போன வீட்டுல 'ஆசை இருக்கு தாசில் பண்ன அதிஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க' ன்னு அந்த் வீட்டு ஓனர் என்னய அவமானப்படுத்த(அவர் நாற்காலியில் உக்காந்த காரணத்தால்) உடனே சபதம் போட்டாச்சு மனசுல. தாசில்தார் என்ன பிசாத்து..கலெட்டராவே ஆயிடுறதுன்னு. பாலை வாங்கிட்டு வீட்டுக்கு வந்த உடனேயே அதை மறந்து போயிட்டேன். அத்தன சீக்கிரம் மறந்துபோனது தப்பு தான்.
காலம் உருண்டு போச்சு. தோ...அபி குட்டிய ஸ்கூல்ல போட வேண்டிய நேரமும் வந்தாச்சு. அபி அம்மாவும் நானும் என்ன படிக்க வைக்கலாம்னு பயங்கர ஆலோசனை.
பாழா போன I.A.S மாத்திரம் மனசுக்குல்ல வரலை. அதை தவிர கிட்டத்தட்ட எல்லா படிப்புமே ஆலோசனை வட்டத்துக்குள் வந்துவிட்டது. நான் சொல்வதை அபி அம்மாவும் அவங்க சொல்வத நானும் ரிஜக்டட் ரிஜக்டட் ன்னு சொல்லிகிட்டே வந்தோம்.
ஒரு கட்டத்துல வெறுத்து போய் நானு 'புண்னாக்கு B.A' ன்னு சொல்ல 'இஜக்டட்'ன்னு சின்ன குரல் கேக்குது. பாத்தா எங்க குட்டி வாயில விரல் போட்டுகினு குந்தினு இருக்கு.
சரி அப்பாவும் அம்மாவும் ரிஜக்டட் ரிஜக்டட் ன்னு ஏதோ விளையாடுறாங்க நாமளும் ஆட்டைல கலந்துபோமேன்னு அதுவும் கூவியிருக்கு.
சரி, குட்டிம்மாவயே கேட்டுடுவோம்னு அவளிடம் "பாப்பா என்ன படிக்க போறீங்க???"
படார்ன்னு பதில் வந்துச்சு.."L.K.G"
அதுவும் சரிதான். பத்தாவது ஸ்டேட் பஸ்ட் வந்த பயபுள்ள எவனுமே"மேல என்ன படிக்கபோறீங்க?"ன்னு தினத்தந்தி நிருபர் கேட்டாக்க டாக்டரு,இஞ்ஜினீரு,சுக்குனீருன்னு சொல்லுவானுங்கல தவிர 11வது படிக்க போறேன்னு சொல்லமாட்டான்.
ஆனா அபி பாப்பா என்னய பாத்து 'லூசு பையா, அதுக்கு மொதல்ல L.K.G படிக்கனும்டா'ன்னு சொல்லாம சொன்னது போல இருந்துச்சு. அவ இஷ்டப்பட்ட மாதிரியே L.K.G சேக்க முடிவு செஞ்சோம்.
நல்ல ஸ்கூலா பாத்து பாப்பாவ தூக்கிட்டு கெளம்பிட்டோம். அபிஅம்மா தூக்கிட்டே வர பாப்பா வழக்கம் போல வாயில விரல போட்டுக்கிட்டே வந்தா. அழுது அடம்புடிக்க போறான்னு 5 ஸ்டார்லாம் ஸ்டாக் வச்சிருந்தேன். அதுக்கெல்லாம் தேவையே இல்லாம போச்சு. அப்பாக்கு 5 ஸ்டார் புடிக்கும்னு பாப்பாவுக்கு தெரியாதா என்ன!!
பணமெல்லாம் கட்டி முடிச்சவுடனே பேக்,புஸ்தகம், நோட்டு, பென்சிலு எல்லாமே வஞ்சனையே இல்லாம நெறய கொடுத்தாங்க.
பாப்பாகுட்டி ஜென்டிலா ஒரு பென்சில மாத்திரம் கைல வச்சிகிட்டு இடுப்பல உக்காந்து வெரல் சப்பிக்கிட்டே வந்தா. நா தேமேன்னு எல்லாத்தையும் தூக்கிகிட்டே பிரின்சிபால் ரூமுக்கு மரியாதை நிமித்த சந்திப்புக்கு போனோம்.
"வாங்க...உக்காருங்க...உங்க பேரு என்ன?..வாயில விரல் வைக்கக்கூடாது. கெட்ட பழக்கம்" இது பிரின்ஸ்.
"என் பேரு தங்கால பிட்டா(நா செல்லமா கூப்பிடுவது). வெரல எடுத்தா அழுவன்" - இது அபி. இத எதுக்கு தூண்டிவிட்டுகிட்டுன்னு அடுத்த கேள்விக்கு போயிட்டாங்க.
"சரி, நாளைலேர்ந்து யூனிபாஃமெல்லாம் போட்டுகிட்டு வறீங்களா?"ன்னு கேட்டாங்க. அபி குட்டி சொன்னாலே ஒரு பதில். இப்ப நெனச்சா கூட 'சொரக்'குங்குது.
"ஊணிபாம் எனிக்கு பத்ல அப்பா போட்டுட்டு வர்வாங்க" ...மெதுவா வெளிய வந்துட்டோம்.
அபிஅம்மா நற நறங்கறாங்க. 'நல்லா பொறந்துறுக்கு அப்பனுக்கு தப்பாம..புஸ்தகத்த தூக்க ஒரு ஆளு, யூனிபாஃம் போட ஒரு ஆளு,இதல்லாம் பத்தாம அவுங்கள தூக்க ஒரு ஆளு... நல்லதா போச்சு என்னய போட்டுட்டு வான்னு சொல்லாம போச்சு...அதென்னங்க உங்கள மாதிரியே தட்டி கழிச்சு பக்கத்துல உள்ளவங்க தலையிலேயே போடுறது....யூனிபாஃம் விஷயத்திலுமா??? யூனிபாஃம் விஷயத்திலுமா??? யூனிபாஃம் விஷயத்திலுமா??? '
புத்தருக்கு போதி மரத்தடியில வந்த மாதிரி எனக்கு படார்ன்னு ஞானம் வந்துச்சு. 10 வது படிக்கும் போது நா எடுத்துகிட்ட சபதம் எல்லாம் ஞாபகம் வந்துச்சு. சரி விஷயத்துக்கு வருவோம்.
கண்டக்டர், டிரைவர், இஞ்சினீயர்,டாக்டர்,நர்ஸ்,பைலட்,லேபர்,போலீஸ்,மிலிட்டரி,போராளி,கைதி,வக்கீல்,நீதிபதி,தீவிரவாதி,சாமியார்,பாதிரியார். இப்படியாக எல்லாருமே அவங்க அவங்க தன்னோட யூனிபாஃமை அவங்களே போட்டுக்கும் போது நம்ம கலெக்டர் மட்டும் தன்னோட யூனிபஃம போட்டுக்க மாட்டங்குரார்.
பின்ன அவர எப்டிதான் கண்டுபிடிக்குறது??? அவர் பக்கத்துல டபேதார் போட்டுகிட்டு வருவார். தலப்பா,சிகப்பு கிராஸ் பெல்ட், பட்டயம் இத்யாதி இத்யாதி எல்லாம் டபேதாருக்குதான். கலெக்டரு ஹாயா டி ஷர்ட், ஜீன்ஸ் கூட போட்டுகிட்டு வந்துடுவார். உலகத்துலயே பக்கத்துல உள்ளவங்களுக்கு யூனிபாஃம் போட்டு தன்னை அடையாளம் காட்டுவது நம்ம கலெக்டர் ஐயாதானுங்கோ......
கண்டுபுடிச்சிட்டேன் அபி பாப்பாவுக்கு ஏத்த படிப்பு இ.ஆ.ப தானுங்கோ. சரி அபிகிட்டயே கேட்டுடுவோம்னு "தங்கம் எதுக்கும் இருக்கட்டும் I.A.S படிச்சுடுடா செல்லம்'' என்றேன்.
"சழி, அப்பாவாழ்ழம் ழானும் பழிக்கிழேன்"(சாக்லெட் உள்ளெ போய்கிட்டு இருந்தது).
"செழ்ழம்..அப்ழீல்லாம் அபழகுழமா பேஷ கூழாது". (நானும் சாக்லெட்) என்றேன்.
"அப்பாவாட்டம் படிச்சா அதுக்கு பேர் பில் கலெக்டர். உண்மையிலேயே நல்லா படிக்கனும்" இது அபிஅம்மான்னு சொல்லி தெரிய வேண்டியதில்லை உங்களுக்கு.
so இன்னும் 13,14 வருஷத்துல ஒரு கலெக்டர் ரெடி நம்ம வீட்டுல.
// அப்பாவாட்டம் படிச்சா அதுக்கு பேர் பில் கலெக்டர். உண்மையிலேயே நல்லா படிக்கனும்
ReplyDelete//
ஹ்ம்ம்ம்.....
கொஞ்சம் கொஞ்சமா பல உண்மைகள் வெளில வரும் போல இருக்கு....
நடத்துங்க நடத்துங்க :)))
//ஹ்ம்ம்ம்.....
ReplyDeleteகொஞ்சம் கொஞ்சமா பல உண்மைகள் வெளில வரும் போல இருக்கு....
நடத்துங்க நடத்துங்க :)))//
வாழ்ங்க, வழக்கம். எழு வேனாழும் சொழ்ழுங்க, தொழச்ஷிட்டு போழிட்டே இழுப்பேன்.
தமிழ்மணத்துல மறுமொழியப்பட்ட இடத்தில தெரியுது பாருங்க உங்கள் வலைப்பூ!
ReplyDeleteஅடிச்சி ஆடுங்க சாமி!
அபி அப்பா,
ReplyDeleteகலக்கறீங்க சார்,
வாழ்த்துக்கள்
லியோ சுரேஷ்
துபாய்
//தமிழ்மணத்துல மறுமொழியப்பட்ட இடத்தில தெரியுது பாருங்க உங்கள் வலைப்பூ!
ReplyDeleteஅடிச்சி ஆடுங்க சாமி!//
ரொம்ப நன்றி தம்பி. எல்லாம் உங்களால் தான்.
//அபி அப்பா,
ReplyDeleteகலக்கறீங்க சார்,
வாழ்த்துக்கள்
லியோ சுரேஷ்
துபாய்//
வாங்க லியோ, முதல் முறையா வார்ரீங்க.. இருந்து சாப்டுட்டுதான் போகனும். வயித்த கலக்கினா...
தொலைபேசி அழைப்புக்கு நன்றி...!!!!
ReplyDeleteநல்ல புத்திசாலியா இருப்பா போல அபி.அபிராமி இ.ஆ.ப வுக்கு இப்பவே வாழ்த்துக்கள்.அப்புறம் மயிலாடுதுறையை கொஞ்சம் கவனிக்க சொல்லனும்.
ReplyDelete//தொலைபேசி அழைப்புக்கு நன்றி...!!!! //
ReplyDeleteவாங்க வஷிஷ்டரே, பட்டமளிப்பு எப்போது?இன்னும் ரொம்ப தொலைவு இருக்கோ??
சிறு முயற்சி செஞ்சு இங்க வந்ததுக்கு ரொம்ப டேங்ஸுங்க லெஷ்மி.
ReplyDelete//நல்ல புத்திசாலியா இருப்பா போல அபி.//
எங்க அம்மாகூட என்னை அப்டிதான் சொல்வாங்க. அப்டீயே என்னய கொண்டு இருக்கு!!!!! அபி பாப்பா.
//அபிராமி இ.ஆ.ப வுக்கு இப்பவே வாழ்த்துக்கள்.//
ரொம்ப நன்றி. குழந்தைக்கு உங்க ஆசீர்வாதம் வேணும்.
குட்டி கலெக்டருக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஆகா..
ReplyDeleteநான் தான் லேட்டா.. (இன்னும் சம்பளம் வரவரைக்கும் கொஞ்சமாவது ஆணி புடுங்கனுமே..)
கலக்கறீங்க...
\\"அப்பாவாட்டம் படிச்சா அதுக்கு பேர் பில் கலெக்டர். உண்மையிலேயே நல்லா படிக்கனும்" இது அபிஅம்மான்னு சொல்லி தெரிய வேண்டியதில்லை உங்களுக்கு.\\
அட ..இதெல்லாம் வாழ்க்கையில சகாஜமாப்பா...
அப்படியே..சூனா..பனா ன்னு போயிக்கிட்டே இருக்கனும்..
//குட்டி கலெக்டருக்கு வாழ்த்துக்கள்//
ReplyDeleteவாழ்த்துக்கு மிகவும் நன்றி நன்பி சேதுக்கரசி.
//நான் தான் லேட்டா.. (இன்னும் சம்பளம் வரவரைக்கும் கொஞ்சமாவது ஆணி புடுங்கனுமே..)//
ReplyDelete"ஆணி புடுங்குவது எப்படி?"ன்னு ஒரு பதிவு யாராவது போட்ட தேவலை கோபி தம்பி.
நல்ல பொண்ணு நல்ல அப்பா.:-)
ReplyDeleteஅபி 5 ஸ்டார் போதாது. இன்னும் ப்ரமாத ஷாகலேட்டெல்லாம் வந்து இருக்கு. அப்பாவை வாங்கித்தர சொல்லு.:-)
//நல்ல பொண்ணு நல்ல அப்பா.:-)
ReplyDeleteஅபி 5 ஸ்டார் போதாது. இன்னும் ப்ரமாத ஷாகலேட்டெல்லாம் வந்து இருக்கு. அப்பாவை வாங்கித்தர சொல்லு.:-)//
வாங்க வாங்க வல்லி சகோதரி, வருகைக்கு நன்றி.
அவளுக்கு பல் விழுந்தமைக்கு காரணமே சாக்லெட் தான் என அபி அம்மா சதி செய்த காரணத்தால் அபிபாப்பா இப்போ சாக்லெட் சாப்பிடுவதில்லை. 'அபிபாப்பா' இப்போ "அஃபி ஃபாஃபா"
அபி அப்பா, வாய் விட்டு சிரிக்க வெச்சுட்டீங்க.
ReplyDeleteஅதுக்கெல்லாம் முதலில் LKG படிக்கணமுன்னு தத்துவமெல்லாம் குழந்தைகள் கிட்ட இருந்துதான் வரும். ஆனாலும் தங்கமணி வாரரது எல்லாம் இப்படி பப்ளிக்காவா போட்டு உடைக்கிறது?
அபி பாப்பா IAS ஆபிசராக என் வாழ்த்துக்கள் மற்றும் என் பிரார்த்தனைகள்!!!
ReplyDeleteஆனா சகவாசம் தான் சரியில்லைனு அபி அம்மாக்கிட்ட நான் சொன்னதா சொல்லிடுங்க :-)
//அபி அப்பா, வாய் விட்டு சிரிக்க வெச்சுட்டீங்க.
ReplyDeleteஅதுக்கெல்லாம் முதலில் LKG படிக்கணமுன்னு தத்துவமெல்லாம் குழந்தைகள் கிட்ட இருந்துதான் வரும். ஆனாலும் தங்கமணி வாரரது எல்லாம் இப்படி பப்ளிக்காவா போட்டு உடைக்கிறது? //
வாங்க வாங்க கொத்ஸ்,
கை பழுக்குற அளவுக்கா ஆணி புடுங்குறது??
வார்ராங்கன்னு ஊருக்கே தெரிஞ்சுபோச்சு. இனிமே பப்ளிக் என்ன பிரைவேட் என்ன....
//அபி பாப்பா IAS ஆபிசராக என் வாழ்த்துக்கள் மற்றும் என் பிரார்த்தனைகள்!!!
ReplyDeleteஆனா சகவாசம் தான் சரியில்லைனு அபி அம்மாக்கிட்ட நான் சொன்னதா சொல்லிடுங்க :-)
//
வாங்க வெட்டி தம்பி, பிரார்த்தனைக்கு நன்றி.
இப்டி கலாய்ச்சா அழுதுடுவேன்.
மென்மையான நகைச்சுவை மனதை வருடிக் கொடுக்கிறது.
ReplyDelete//மென்மையான நகைச்சுவை மனதை வருடிக் கொடுக்கிறது//
ReplyDeleteவாங்க வாங்க ஜாலி, முதல் வருகைக்கு நன்றி.அடிக்கடி வாங்க.ஆன அடிக்க வந்துடாதீங்க பதிவு நல்லாயில்லைன்னா.
//உலகத்துலயே பக்கத்துல உள்ளவங்களுக்கு யூனிபாஃம் போட்டு தன்னை அடையாளம் காட்டுவது நம்ம கலெக்டர் ஐயாதானுங்கோ......//
ReplyDeleteஅட ஆமாம்.. :))))
சென்ஷி
வாங்க சென்ஷி, முதல் முதலாக வருகின்றீர்கள். மிக்க நன்றி.
ReplyDeleteவருங்கால கலெக்டருக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteகெலெக்டர் அபிராமியோட அப்பாக்கு (நல்லா சுவாரஸ்யமா எழுதியிருக்காரே
அதுக்கு)பெரி...ய டாப்லரான் ச்சாக்லெட்
பரிசு!.
- அபி அம்மா
(அட.. இது இன்னொரு அபிங்க):))
உங்களுக்கு எப்படிங்க spontaneous நகைச்சுவை வருது?
ReplyDeleteமுதன் முறை வந்தேன்.. இனி அடிக்கடி வருவேன்..;-)
//வருங்கால கலெக்டருக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteகெலெக்டர் அபிராமியோட அப்பாக்கு (நல்லா சுவாரஸ்யமா எழுதியிருக்காரே
அதுக்கு)பெரி...ய டாப்லரான் ச்சாக்லெட்
பரிசு!.
- அபி அம்மா
(அட.. இது இன்னொரு அபிங்க):))//
வாங்க வாங்க மீனா,
வாழ்த்துக்கு நன்றி. உங்க "காத்திருப்பு" கவிதைய முதல்ல "காத்து கருப்பு"ன்னு படிச்சுட்டு உள்ள இருக்குற மேட்டருக்கும் காத்துகருப்புக்கும் என்ன சம்மந்தம்னு குழம்பி போயிட்டேன்.
கவிதை சூப்பர்.
// அபி அம்மா
ReplyDelete(அட.. இது இன்னொரு அபிங்க):)) //
உங்கவீட்டு அபியும் I.A.S ஆக வாழ்த்துக்கள்.
//உங்களுக்கு எப்படிங்க spontaneous நகைச்சுவை வருது?
ReplyDeleteமுதன் முறை வந்தேன்.. இனி அடிக்கடி வருவேன்..;-) //
எல்லாம் தானா பொங்குறதுதான்.
கண்டிப்பா அடிக்கடி வாங்க!!
அபி கலெக்கடர் ஆன உடனே முதல் அப்பாயின்ட்மென்ட் எனக்கு தான்.. இப்பவே சொல்லிடேன், மனு நிறைய வச்சிருக்கேன்..
ReplyDelete//ப்ளாக்கர் பாக்யராஜ் ஆயிடுவீங்க போலிருக்கே.
ReplyDeleteநிறைய பெண்கள் உங்க பதிவுக்கு பின்னூட்டம் குடுத்திருக்காங்க//
ஆஹா, கிளம்பீட்டிங்களா? அது அப்படீயில்லை.
1.பெண்குழந்தையாய் இருந்தால் - கருவிலேயே அழி-இது ஒரு வகை ஆண்வர்க்கம்
2.ஆண்குழந்தைதான் வேண்டும் - பெண்ணாக பிறந்துவிட்டால் கொல்ல மாட்டேன் - இது ஒரு வகை ஆண்வர்க்கம்
3.ஆணோ/பெண்ணோ எது பிறந்தாலும் சரி.நான் இந்த உலகிற்கு ஆண்மைத தண்மை உடையவன் என்பதை நிரூபித்துவிட்டேன்.இது ஒரு வகை ஆண்வர்க்கம்
4.ஆணோ/பெண்ணோ எது பிறந்தாலும் சரி என் குழந்தைதானே - இது ஒரு வகை ஆண்வர்க்கம்
5. எனக்கு பெண்குழந்தைதான் வேண்டும் கடவுளே என வரம் வாங்கி ஒரு பெண் குழந்தையை பெற்று, அதன் பொருட்டே நான் உலகத்தின் முன் முன்னிறுத்தப்பட வேண்டும். - இது நான்.
இதனால் கூட இருக்கலாம் திரு.மு.உமாசங்கர் அவர்களே, மற்றபடி உங்கள் பெயரில் ஒரு நேர்மையான I.A.S (அவருக்கு முதல் போஸ்டிங் மயிலாடுதுறை) அவர் ஞாபகம் வந்து விட்டது எனக்கு.
//அபி கலெக்கடர் ஆன உடனே முதல் அப்பாயின்ட்மென்ட் எனக்கு தான்.. இப்பவே சொல்லிடேன், மனு நிறைய வச்சிருக்கேன்.. //
ReplyDeleteவாங்க மங்கை, வருகைக்கு நன்றி. கண்டிப்பாக உங்களுக்கு இல்லாமலா??
//எனக்கு பெண்குழந்தைதான் வேண்டும் கடவுளே என வரம் வாங்கி ஒரு பெண் குழந்தையை பெற்று, அதன் பொருட்டே நான் உலகத்தின் முன் முன்னிறுத்தப்பட வேண்டும். - இது நான்.//
ReplyDeleteநானும் தான்...பெண் குழந்தை தான் வேண்டும் என்று நான் மனதில் நினக்காத நாள் இருந்தில்லை...
கர்ப்பமாக இருந்த பொழுது அப்பா தவறி விட்டதால், (அவரிடம் அதிகமாக ஒட்டிக்கொண்டவள்) எல்லோரும் எனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று சொல்ல, நான் தந்தையிடமே வேண்டிகொண்டேன், எனக்கு பெண் குழந்தைதான் வேண்டும் என்று..
நல்ல கருத்துக்கள் அபி அப்பா..
அபி பல உயரங்களை தொட மனதார ஆண்டவனை வேண்டுகிறேன்..
//நானும் தான்...பெண் குழந்தை தான் வேண்டும் என்று நான் மனதில் நினக்காத நாள் இருந்தில்லை...
ReplyDeleteகர்ப்பமாக இருந்த பொழுது அப்பா தவறி விட்டதால், (அவரிடம் அதிகமாக ஒட்டிக்கொண்டவள்) எல்லோரும் எனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று சொல்ல, நான் தந்தையிடமே வேண்டிகொண்டேன், எனக்கு பெண் குழந்தைதான் வேண்டும் என்று..//
மனதுக்கு மிகுந்த கஷ்டமாக இருக்கிறது. கவலைப்படாதீர்கள்.
-:))))
ReplyDelete:-))))))))))))))
ReplyDeleteஇது அபிகுட்டிக்கு!!
பின்னூட்டத்துக்கையும் சிரிப்பா. "யார் அங்கை கொல்லு கொல்லெண்டு சிரிக்கிறது. பிரக்கடிக்கப்போகுது.. சாமம் ஒண்டேகாலாகுது. படுக்கலாம்."
ReplyDeleteஅபி அப்பா
ReplyDeleteரொம்பவே நல்லா இருக்குங்க. நீங்களும் உங்களுக்கு எழுதுறதுக்கு ஊக்கமா இருக்கிற அபிக்கும் வாழ்த்துக்கள்.
அபி அப்பா & மங்கை - உங்க ரெண்டுபேரையும் விட நான் டபுள் லக்கி.
அபி அப்பா
ReplyDeleteதினமும் ஒரு பதிவா? நடந்தே வந்து உங்க பி.எம் மை பாக்க வேண்டி இருக்கும்..
:)))
அய்யனார்,
ReplyDelete//தினமும் ஒரு பதிவா?//
என்ன இப்படிக் கேட்டுப்புட்டீங்க? தினமும் ஒரு மொக்கைப் பதிவா-ன்னில்ல கேட்ருக்கணும்? ;-) (அபி அப்பா தப்பா நினைக்காதீங்க.. சரியா? :-))
அபி கந்திப்பா ஐ.ஏ.எஸ். ஆகணும். நாமக்கம் மாவத்தத்துக்கு கலெக்த்ரா வரணும்!
ReplyDeleteஅபி கந்திப்பா ஐ.ஏ.எஸ். ஆகணும். நாமக்கல் மாவத்தத்துக்கு கலெக்த்ரா வரணும்!
ReplyDelete