February 22, 2007
"வீராசாமி" விமர்சனம்!!!
தமிழ்நாடு,ஆற்காட்டில் குப்பிடிச்சாத்தம் என்னும் குக் கிராமத்தில் 21/04/1937 ம் ஆண்டு பிறந்த இவரின் பெயர் வீராசாமி. பள்ளி இறுதிவரை படித்த இவர் திருமணம் ஆனவர். 1 மனைவியும் 3 மக்களும் உடையவர்.
.
.
இவருடைய தொழில் விவசாயம்.
.
.
தற்போது 39, 'A' பிளாக், அண்ணா நகர், சென்னை - 600102 (044-26263643/044-26263647(இ)) என்னும் விலாசத்தில் வசித்துவரும் இவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் பதவியில் இருந்து வருகிறார்.
.
.
1967-71 வரை, 1971-76 வரை, 1989-91 வரை, 1996-2001 வரை - இந்த காலகட்டங்களில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவர் தற்போதைய சட்டமன்றத்திலும் உறுப்பினர் மற்றும் மின்துறை அமைச்சராகவும் இருக்கிறார். மேலும் 1977-83 வரை சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
.
.
மின்துறை அமைச்சராக, யூனிட் கட்டணம் உயராமை, பவர் கட் இல்லாமை, மின் கசிவு குறைப்பு, உற்பத்தி திறன் அதிகரிப்பு, சிறு தொழில் மின் கட்டண சலுகைகள், விவசாயத்துக்கு இலவச மின்சாரம் போன்ற இவரின் பணிகள் சிறப்பாகவே உள்ளது என்றாலும் 1% கூட அந்த துறையின் ஊழலை இவரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை.
.
.
"அமைச்சர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் மேம்பாட்டுக்காக பாடுபட்டு நாட்டை முன்னேற்ற பாடுபட வேண்டுமே தவிர 24 மணி நேரமும் முதல்வர் கலைஞர் கூடவேயிருந்து துதிபாடிக்கொண்டிருக்க கூடாது அதிலும் குறிப்பாக ஆற்காடு வீராசாமி போன்றவர்கள் இதை உணர வேண்டும்" என்று கலைஞரின் மனசாட்சியான மறைந்த திரு. முரசொலி மாறன் அவர்களால் பாராட்டுப்பெற்றவர் இவர்.
.
.
இன்றளவும் அந்த பாராட்டை மனதில் இருத்தி, அதிலிருந்து கிஞ்சித்தும் மாறாமல் நடந்து வருகிறார் திரு. ஆற்காடு வீராசாமி அவர்கள்.
.
.
தற்போது திரைத்துறையை கலக்கிக்கொண்டிருக்கும் ஒரு படத்தால் தனது பெயர் உலகலாவில் புகழடைந்தது குறித்து தான் மிகவும் நெகிழ்ந்து போயிருப்பதாக தன் நண்பர்களிடம் அவர் குறிப்பிட்டதாக ஒரு செவிவழி செய்தியும் உண்டு
Subscribe to:
Post Comments (Atom)
வீராசாமி விமர்சனம் போட்டாச்சு. கும்முறவுங்க வந்து கும்முங்க. ஆனா வரிசையா வரனும்..சொல்லிபுட்டேன்.
ReplyDeleteஒரு முடிவோடத்தான் கிளம்பியிருக்கீங்கன்னு சொல்லுங்க..
ReplyDeleteசெந்தழல் ரவி
நான் லைன்ல நிக்குறேன்ல.
ReplyDeleteசென்ஷி
வாங்க செந்தழலாரே!! ஏன் அனானியா இருக்கீங்க. (இது ஒரிஜினல் தானா!!!)
ReplyDeleteஆஹா................... (வடிவேலு style-ல் படிக்கவும்)
ReplyDeleteஉக்காந்து யோசிப்பீங்களோ??????????????
//நான் லைன்ல நிக்குறேன்ல//
ReplyDeleteசாரி சென்ஷி, அவ்வளவா கூட்டமிருக்கு. நா உங்களுக்கு "சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்றேன். கவலபடாதீங்க!!!
//உக்காந்து யோசிப்பீங்களோ??????????????//
ReplyDeleteவாங்க பிரசன்னா! just நடந்துகிட்டுதான்.
விவகாரமான ஆளா இருப்பீங்க போலிருக்கே! செ.ரவி சொன்னது மாதிரி கொஞ்சம் தள்ளித்தான் நிக்கனும்.
ReplyDelete//விவகாரமான ஆளா இருப்பீங்க போலிருக்கே! செ.ரவி சொன்னது மாதிரி கொஞ்சம் தள்ளித்தான் நிக்கனும்.//
ReplyDeleteஅப்டீல்லாம் இல்லீங்கண்ணாவ்!!!!
யோவ் இது விமர்சனம் இல்லைய்யா, புரொபைல்.
ReplyDeleteடெய்யிலி ஒரு கலக்கல் பதிவு போடறீங்களே, நல்லா இருங்க.
லியோ சுரேஷ்
//யோவ் இது விமர்சனம் இல்லைய்யா, புரொபைல்.//
ReplyDeleteநல்லா உத்து பாருங்க லியோ, 5 வது பாராவுல தம்மாத்தூண்டு விமர்சனம் இருக்கும்.
நானேதான்..
ReplyDeleteசெந்தழல்
அடுத்து சிவாஜி விமர்சனம்னு ஒரு பதிவு போடக்கூடாத்துன்னு இப்பவே எச்சரிக்கிறேன்.
ReplyDeleteஇவரு ஆற்காடு வீராசாமி, அவரு அவரு அறுவை போடும் வீராசாமி,
ReplyDeleteஎது கத்துக்கறிங்க்ளோ இல்லியோ தலைப்பு வைக்க விவகாரமா வைக்க கத்துகிட்டிங்க!
//இன்றளவும் அந்த பாராட்டை மனதில் இருத்தி, அதிலிருந்து கிஞ்சித்தும் மாறாமல் நடந்து வருகிறார் திரு. ஆற்காடு வீராசாமி அவர்கள்.//
ReplyDeleteபோன வாரம் வரை நீதிமன்ற தீர்ப்பு அவமதிப்பு சம்பந்தமாக பத்திரிக்கைகள் இவரைத்தான் வைத்து காமெடி செய்திருந்தார்கள், எதிர்க்கட்சிகள் கூட சொல்லிக்கொள்கிற மாதிரி எதையும் அறிக்கை விடவில்லை இதுதான் காமெடியின் உச்சக்கட்டம்.அவங்கமட்டும் மதிக்கறாங்களா என்ன?
/நானேதான்..
ReplyDeleteசெந்தழல்//
அப்ப கோட்வேர்டு என்ன சொல்லுங்க?(சிம்புவின் அடுத்த படம் பேரு என்ன? இதுதான் கோட் கேள்வி)
//அடுத்து சிவாஜி விமர்சனம்னு ஒரு பதிவு போடக்கூடாத்துன்னு இப்பவே எச்சரிக்கிறேன்.//
ReplyDeleteகிடேசன்------பார்க் சங்க தலைவர் தீர்ப்புக்கு கட்டுபடுகிறோம்.
//அடுத்து சிவாஜி விமர்சனம்னு ஒரு பதிவு போடக்கூடாத்துன்னு இப்பவே எச்சரிக்கிறேன்.//
ReplyDeleteகிடேசன்------பார்க் சங்க தலைவர் தீர்ப்புக்கு கட்டுபடுகிறோம்.
//அடுத்து சிவாஜி விமர்சனம்னு ஒரு பதிவு போடக்கூடாத்துன்னு இப்பவே எச்சரிக்கிறேன்.//
ReplyDeleteகிடேசன்------பார்க் சங்க தலைவர் தீர்ப்புக்கு கட்டுபடுகிறோம்.
//இவரு ஆற்காடு வீராசாமி, அவரு அவரு அறுவை போடும் வீராசாமி,
ReplyDeleteஎது கத்துக்கறிங்க்ளோ இல்லியோ தலைப்பு வைக்க விவகாரமா வைக்க கத்துகிட்டிங்க!//
செந்தழலாரின் லேட்டஸ்ட் பதிவு பார்க்கவும்.
நற..நற...........பல்லைக் கடிக்கிறேனாக்கும்.ஏதோ கெஞ்சறீங்களே வரிசையில் வரச் சொல்லின்னு ஒரே மக்காவா இருக்கிற எடத்துக்கு துணிஞ்சி வந்து பின்னூட்டம் போட வந்தா 'வீராச்சாமி' இவரா?
ReplyDeleteஅபி அப்பா எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்கிறிங்க....
ReplyDeleteகலக்கல்....சும்மா நச்சுன்னு இருக்கு...உங்க வீரசாமி விமர்சனம்...
நாளை இந்த வேலை...என்ன??????
ரொம்பத் தான் நக்கலு...உங்கள் நக்கல்களெல்லாம் நன்றாக இருக்கின்றன.
ReplyDeleteபோன பதிவு மிக நன்றாக இருந்தது.
உம்ம குசும்புக்கு அளவே இல்லாம போயிடிச்சு..
ReplyDeleteமொதல்ல அபிக்கிட்டச் சொல்லி உங்கள கவனிக்கச் சொல்லணும் ;)))
ஆமா.. எக்க்ச்சக்க போஸ்டு போட்டுட்டீங்களோ??? தமிழ்மணம் முகப்புல குறிச்சொற்கள்ல உங்க பேரும் வந்து நிக்குது.....
ReplyDelete//நற..நற...........பல்லைக் கடிக்கிறேனாக்கும்.ஏதோ கெஞ்சறீங்களே வரிசையில் வரச் சொல்லின்னு ஒரே மக்காவா இருக்கிற எடத்துக்கு துணிஞ்சி வந்து பின்னூட்டம் போட வந்தா 'வீராச்சாமி' இவர//
ReplyDeleteவாங்க கண்மணி!!!! இவர் கூட வீராசாமிதான!!
வசிஷ்டர் வாயாலே பிரம்ம ரிஷி! டுபுக்குவே வந்து பாராட்டிட்டார், கலக்குங்க! :-)
ReplyDeleteவசிஷ்டர் வாயாலே பிரம்ம ரிஷி! டுபுக்குவே வந்து பாராட்டிட்டார், கலக்குங்க! :-)
ReplyDelete//நாளை இந்த வேலை...என்ன??????//
ReplyDeleteசும்மா தூங்கி ரெஸ்ட் எடுத்தேன். கோபி தம்பி அடுத்த வாரம் கிடேசன் பார்க் உண்டா???
//ரொம்பத் தான் நக்கலு...உங்கள் நக்கல்களெல்லாம் நன்றாக இருக்கின்றன.
ReplyDeleteபோன பதிவு மிக நன்றாக இருந்தது.//
நான் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறேன். இதற்காகத்தான் இத்தனை நாள் காத்திருந்தேன். வாங்க வாங்க டுபுக்கு ஐயா!!! அடிக்கடி வாங்க. உங்கள் வருகைக்கு மிகவும் நன்றி. மிகவும் சந்தோஷத்தில் என்ன டைப் செய்வது என்றே தெறியாமல் ஏதோ அடிக்கிறேன்.
/உம்ம குசும்புக்கு அளவே இல்லாம போயிடிச்சு..
ReplyDeleteமொதல்ல அபிக்கிட்டச் சொல்லி உங்கள கவனிக்கச் சொல்லணும் ;)))//
//ஆமா.. எக்க்ச்சக்க போஸ்டு போட்டுட்டீங்களோ??? தமிழ்மணம் முகப்புல குறிச்சொற்கள்ல உங்க பேரும் வந்து நிக்குது.....//
வாங்க ஜி!!! ஆமா ஜி, நானும் இப்பதான் பாத்தேன்.
அபிகிட்ட சொல்லி காதை கடிக்க விடனும்ன்னு செ.ரவி ஏற்கனவே துடிக்கிறார். இப்ப நீங்களுமா??
//வசிஷ்டர் வாயாலே பிரம்ம ரிஷி! டுபுக்குவே வந்து பாராட்டிட்டார், கலக்குங்க! :-) //
ReplyDeleteஆமாம் மேடம்!! நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்.
ஐய்யையோ...நானும் சின்னப் பையன் தாங்க....கீதா மேடம் வேற ஏதோ சொல்லி ஏத்தி விடறாங்க...கொஞ்ச நாளா வீட்டுல கட்டுமான வேலை நடந்துகிட்டு இருக்கு அதான் வலைப்பதிவுகள் பக்கம் வர முடியல...
ReplyDeleteகீதா மேடம்...ரொம்ப கோவம் போல என்மேல :) (ஆனா உங்க மதிப்புக்கு ரொம்ப நன்றி)
பின்னூட்ட கயமைப்பதிவு வழியாக வந்து இந்தப் பதிவைப் படித்துவிட்டு ஒரு :-) யும் போட்டாச்சு
ReplyDelete//பின்னூட்ட கயமைப்பதிவு வழியாக வந்து இந்தப் பதிவைப் படித்துவிட்டு ஒரு :-) யும் போட்டாச்சு //
ReplyDeleteவாங்க
வினையூக்கி! முதல் வருகை. மிக்க நன்றி. அப்போ பதிவு கயமை நல்லா வேளை செய்யுதுன்னு தெறியுது!!! பரவாயில்லயே!!:-)))
அடுத்ததா மொழி விம்ர்சனம் எதிர்பாஇக்கிறோம்( தமிழ் மட்டும்)வேலைக்கு போறிங்கலா? இல்லை இதுமாறி யோசிக்கிற்துதான் வேலையா?
ReplyDelete//அடுத்ததா மொழி விம்ர்சனம் எதிர்பாஇக்கிறோம்( தமிழ் மட்டும்)வேலைக்கு போறிங்கலா? இல்லை இதுமாறி யோசிக்கிற்துதான் வேலையா?//
ReplyDeleteநான் இன்னும் மொழி பாக்கல. பாத்த பிறகு போடுகிறேன். ஆக வேலை செய்ய விடுவதில்லைன்னு முடிவு செங்சாச்சு!! செய்யுங்க செய்யுங்க!!
அடுத்து என்ன 'தசாவதாரம்' விமர்சனமா? ஒரு எக்ஸ்க்ளூஸிவ் போட்டுடவேண்டியதுதானே!
ReplyDelete//மின்துறை அமைச்சராக, யூனிட் கட்டணம் உயராமை, பவர் கட் இல்லாமை, மின் கசிவு குறைப்பு, உற்பத்தி திறன் அதிகரிப்பு, சிறு தொழில் மின் கட்டண சலுகைகள், விவசாயத்துக்கு இலவச மின்சாரம் போன்ற இவரின் பணிகள் சிறப்பாகவே உள்ளது//
ReplyDeletemmmmmmmmmmmmm
Ithukku meala poruma kidaiyathu!!!!
Auto-va anupidavendiyathuthan