பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 28, 2007

ஒரு முக்கிய அறிவிப்பு!!!

மக்களே! இது ஒரு முக்கிய அறிவிப்பு. தமிழ்மணத்திலே என்னை காணவில்லை. காரணம் என் சமீபத்திய பதிவுகள் 30 மார்க் தாண்டி போயிடுச்சு.

தமிழ்மணத்திலே ஏதாவது பெயர் தெரிஞ்சாதான் 4 பேர் வந்து துப்பிட்டு போவாங்க. கொத்ஸ், வெட்டிதம்பி,தேவ் பொன்ஸக்கா எல்லாரும் வந்து ஒரு ஒரு ஐடியா குடுத்துகிட்டு இருக்காங்க.

நான் என்ன சொல்றன்னா... இது ஒரு பதிவுன்னு நெனச்சுகாதீங்க. தலைப்ப பாத்துட்டு வந்ததுதான் வந்தீங்க நம்ம பிளாக்குக்கு.. அப்டீயே சிரமத்த பாக்காம என் மத்த பதிவுக்கு போய் பாத்துட்டு பின்னூட்ட பிச்சை போடுறதா இருந்தா அங்க போடுங்க.

இந்த பதிவுக்கு ஸாரி...அறிவுப்புக்கு பின்னூட்டாதீங்க. அதை நானே பாத்துக்கறேன். அடிக்கடி வந்து ஒரு ஸ்மைலி போட்டுக்கறேன். இது மத்த பதிவுக்கான அழைப்பு மட்டுமே!

அடுத்த பதிவு ரெடியானா இந்த அறிவிப்பை நானே தூக்கிடறேன்.

மக்களே இந்த ஐடியா பரவாயில்லயான்னு கருத்து சொல்லுங்க...

பி.கு: இதுவரை பின்னூட்ட கயமை செஞ்சிகிட்டு இருந்தானுங்க. இப்ப பதிவு கயமை ஸ்டாட் பண்ண ஆரம்பிச்சுட்டானுங்களேன்னு தமிழ்மண நிர்வாகிகள் நினைப்பது புரிகிறது. இது சும்மா ஒரு ஜாலி பதிவு.

14 comments:

  1. lollu thanga mudiyallai!!!

    ReplyDelete
  2. திருந்தவே மாட்டீரா நீர்.30 தாண்டிட்டவுடனே அறிவிப்பு பதிவா.
    நாலு நாள் கழிச்சி வந்து பார்த்தா தமிழ் மணம் இனிப்பான ஷாக் தருது.ஹி..ஹி..ஆஹா..ஆஹா..இனி அபி அப்பா பதிவு 30 க்கு மேல கண்ணுக்குத் தெரியாதே [110 வாங்கி என் வயித்தெரிச்சலை கொட்டினீங்க இல்ல]...[சும்மா டமாசு டோன்ட் பீ சீடியஸ்]

    ReplyDelete
  3. லேட்டா வந்தீங்களோ லேட்டஸ்டா
    வந்தீங்களோ
    சதம் அடிச்சீங்க.பின்னூட்ட பணக்காரர்..நாங்கள்ளாம்
    பின்னூட்டம் இல்லாம
    ஈ ஓட்டறோம் ...

    பின்னூட்ட ஏழைகள் ...

    ReplyDelete
  4. மக்கா! பதில் சொல்லலைன்னு கோவிக்காதீங்க. அடுத்த பதிவு வரை தமிழ்மணத்தில இருக்க வேணாமா? நாளை பதில் சொல்கிறேந்:-))))

    ReplyDelete
  5. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கைய்யா???

    ReplyDelete
  6. //இந்த பதிவுக்கு ஸாரி...அறிவுப்புக்கு பின்னூட்டாதீங்க. அதை நானே பாத்துக்கறேன். அடிக்கடி வந்து ஒரு ஸ்மைலி போட்டுக்கறேன்.//

    உங்களுக்கெதுக்கு வீண் சிரமம்.. நானே செஞ்சிடறேன்:

    :)
    :) :)
    :) :) :)

    ReplyDelete
  7. என்னாது இது???

    வர வர உங்க லொல்லு தாங்கல...

    ReplyDelete
  8. அடடா.வெறும் பத்தோட நிக்குதேன்னு நானும் ஒண்ணு சொல்லிட்டுப்போறேன்.

    உங்க பாரதிக்கும் பாரதமாதாவுக்கும் பதிவை எங்க கோபாலுக்குப் பரிந்துரைச்சேன்.
    மனுஷர் படிச்சுட்டு அப்படிச் சிரிச்சாருன்னா பாருங்க.

    ரொம்ப நல்லா எழுதறாருன்னு பாராட்டினார்கூட!

    இதுவரை என் பதிவைப் பத்தி மனுஷர் ஒண்ணும் சொன்னதெ இல்லை(-:

    ReplyDelete
  9. இது மேட்டர்!

    ஒரு அறிவிப்பு பதிவு போட்டு அதுல உங்களோட பதிவுக்கு லிங்க் போட்டுர்றலாம். வரவங்கள அப்படியே ஒரிஜினல் பதிவுக்கு தள்ளிட்டு போயிடலாம்.

    ஆனா ஒரு பிரச்னை... தலைப்பு ஈர்க்கற மாதிரி இருக்காது.

    'ஷில்பா ஷெட்டியும் சிக்கன் சூப்பும்' அப்படினு தமிழ்மண முகப்புல தெரிஞ்சாத்தான் எல்லோரும் வருவாங்க.

    அதுனால நீங்க ரெண்டு வர்ஷன் வச்சிகுங்க... ஷார்ட் வெர்ஷன் தமிழ்மண முகப்புக்கு. அதில லாங் வெர்ஷன் -க்கு ஒரு லிங்க் கொடுத்திட்டிங்கனா... அப்படியே மக்கள்ஸ் ஜம்ப் ஆயிடுவாங்க.

    இது எப்படி???

    ReplyDelete
  10. வாங்க சென்ஷி!! என்ன சிரிப்பு!!

    *************************

    அனானி அண்ணாச்சிங்களே நன்றி

    **********************************
    தமிழ் பார்க்!! நீங்க கிடேசன் பார்க் பக்கம் வந்ததுக்கு நன்றி

    *****************************

    கண்மணி அம்மனி!! அது 110 இல்ல 132. ஐய் இப்ப என்ன பண்ணுவீங்க!! கவலைப்படாதீங்க எங்க குருநாதிக்கு அந்த 132. எடுத்துக்கோங்க!!

    ***************************

    லேட்டாதான் வந்திருக்கேன். லேட்டஸ்டா வரலை. நீங்க ஒரு பதிவுல சொன்ன மாதிரி இது என்னக்கி அலுத்து போவதோ அது வரை விளையாட்டு தொடரும்.

    *****************************

    ஜி! போர்ன்னு வந்துட்டா நம்ம சைடுல ஒரு கல்லாவது வுடுனுமே அதான்.

    *****************************

    சேதுக்கரசி! எப்டியெல்லாம் தனி தனி பதில் சொல்லி மார்க்க ஏத்துன என் பாடு இப்போ இப்புடி ஆகி போச்சு

    **********************************

    கோபி தம்பி!! அது நம்ம உடன்பிறப்பு

    ********************************

    வாங்க டீச்சர்! நீங்க பட்ட கஷ்டம் கோபால் சாரும் படனும்ன்னு நெனச்ச உங்க மனசு யாருக்கு வரும்!!

    ******************************

    வாங்க ஸ்ரீதர்!! முதன் முதலான வருகை. நன்றி. உங்க ஐடியா நல்லா இருக்கு. இன்னைக்கு போட்ட பதிவின் தலைப்பு உங்க ஐடியாபடிதான்.

    ***************************

    ReplyDelete
  11. நல்லா யோசிக்கிறீங்க.

    ReplyDelete
  12. //நல்லா யோசிக்கிறீங்க.//

    நன்றி சகோதரி!

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))