பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

March 1, 2007

மன்மோகன்சிங்கும் மன்னார்குடி குரூப்பும்....

இங்கே வெள்ளிகிழமை லீவ். வியாழன் இரவு தூக்கம் ரொம்ப ஜோர். காலைல சீக்கிரம் எழுந்திரிக்க வேண்டாம். அப்டியே காலை 10 மணி வரை தூங்கலாம். அப்போ போன் வந்தா செம கோவம் வரும்.

போன வெள்ளி அதுபோல சந்தோஷமா தூங்கிகிட்டு இருந்தேன். அப்பதான் அந்த போன் வந்துச்சு. சரியான கடுப்புல எடுத்தேன். அப்போ 6 மணி.

"மாப்ள நா யாரு தெரியுதா? கண்டுபிடி பாப்போம்"

நான், "தெரியலை. யார்"ன்னு கேட்டேன்.

"கண்டுபிடிடா.என்னய தெரியலையா?"

"இல்லீங்க. நெசமா தெரியல"ன்னேன்.

"என்னடா வாங்க போங்கன்னு. உன்னய யாரு மாப்ளன்னு சொல்வாங்க. இந்த க்ளூ போதுமா. இப்ப கண்டுபிடி"

என்னய என் மாமனார்தான் மாப்ளன்னு சொல்லுவாங்க. காலைல உயிர எடுக்கறானே மகாபாவி. வெள்ளிகிழமை வீணா போச்சேன்னு நெனச்சுகிட்டு " தெரியாது. நீங்களே சொல்லுங்க"ன்னு சொன்னேன்.

"நாமெல்லாம் சேந்து கொடைகானல் போனோமெ! இப்ப கண்டுபிடி. ராஸ்கல் இந்த தடவ கோட்ட விட்டீன்னா குரவலைய கடிச்சுடுவேன்"

தூக்கம் போன கோவம். குரவலைய காப்பாத்திகனும்ற பயம் எல்லாம் சேந்து போனை கட்பண்ணீட்டேன்.

திரும்பவும் கால் வந்துச்சு. "நாயே ஏண்டா கட் பன்ற"ன்னு குரல் கொஞ்சம் காட்டமா வந்துச்சு. பட்டுன்னு கட் பண்ணிட்டேன். போனை ஆஃப் செய்யவும் கூடாது. திடீர் திடீர்ன்னு ஆணி புடுங்க அழைப்பு வரும்.

தூக்கம் சுத்தமா போனதால நொந்து போய் எழுந்துட்டேன். ஒரு அரை மணிக்கு பின்ன அதே போன். அதே நம்பர்.

என் தூக்கத்த கெடுத்தவனே வந்துட்டன்டா. என் குரவலையா கடிப்ப, என்னயா நாயேன்னு திட்டுற, வச்சிகிறண்டா என் கச்சேரியன்னு நெனச்சுகிட்டு போனை எடுத்தேன்.

"ஏன்டா கட் பன்ற. இது கடைசி சான்ஸ். இப்ப ஒரு க்ளூ தரேன். நாம எட்டாவது படிக்கும் போது தமிழ் பரிட்சைல நீ பிட் அடிச்சத நா மாட்டிவுட்டனே, இப்ப ஞாபகம் வருதா?" ன்னு அடுத்த க்ளூ வேற. இவ்ளோவ் தூரம் ஞாபகம் இருந்தா "தம்பி""கைப்ஸ்" க்விஸ்கெல்லாம் பதில் சொல்ல மாட்டனா! இந்த நாயி நா 8வது படிக்கும்போது என்னய மாட்டி வேறவுட்டிருக்கு. நாம சும்மா உடலாமா?

"நானும் கடைசியா சொல்றேன். உங்களை எனக்கு தெரியாது ப்ளீஸ் சொல்லுங்க"ன்னு கடைசி கருணை மனுவும் போட்டேன்.

"சொல்லமுடியாது. கண்டுபுடி" ன்னு சொல்லிட்டு ஒரு நிசப்தம். எனக்கு கவுண்டவுன் கொடுத்தாராமா!!

நா உடனே "சார். கண்டுபுடிச்சுட்டேன். நீங்க சன் டி.வி அடையாறு ஆனந்தபவன் காமடிடைம் சிட்டிபாபு தானே.ஐயோ எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. எங்க லெட்டர் கெடச்சுதா சார்"ன்னேன்.

"டேய் என்னடா உளர்ர"ன்னான் தூக்கம் கெடுத்த சண்டாளன்.

"சார் அந்த லெட்டர்ல இருக்குற போட்டோவில வலது பக்க கடைசில இருக்கிறது நாதான் சார். ஒரு தடவ காமிரா முன்னால காமிச்சுடுங்க சார். நீங்க இப்ப அதுதான் செஞ்சுகிட்டு இருப்பீங்க. எனக்குதெரியும்" இது நான். அந்த பக்கம் பிரஷர் எகிர்வது நல்லா தெரிஞ்சுது.

"இல்லடா மாப்ள நா ராதாடா..ராதாகிஸ்னா"

"போங்க சார். அந்த போட்டோல எனக்கு பக்கத்துல இருக்கானே அவந்தான் ராதா. அவன் பேரயும் சொல்லிடுங்க சார். அவன் கூட கூடிய சீக்கிரம் துபாய் வர்ரான் சார். சார் பட படங்குது. நா டி.வில முத தடவ பேசறேன் சார். பக்கத்துல அர்ச்சனாமேடத்துகிட்ட போன குடுங்க சார்" ன்னு சொல்லிட்டு ஹாயா சோபாவுல சாஞ்சுகிட்டு டீயை சாப்பிட ஆரம்பிச்சுட்டேன்.

"இப்ப அர்ச்சனா இல்ல. அதுக்கு பதிலா சுப்ரியா"ன்னு சொன்னான்.

"பத்தீங்களா! அப்டீ ஒத்துகோங்க நீங்க தான் சிட்டிபாபுன்னு! சார் பரவாயில்ல அந்த சுப்ரியா கிட்ட குடுங்க. சார் அதுக்கு முன்ன நா ஒரு பாட்டு பாடவா. ஆனா ஒரு கண்டிசன். நா பாடும் போது நீங்களும், சுப்ரியாவும் கிண்டல் செஞ்சு ஆடக்கூடாது"ன்னு சொல்லிட்டு "நெஞ்சாங்கூட்டில் நீயே நிக்கிறாய்ய்ய்ய்ய். நெஞ்சாங்கூட்டில் நீயே நிக்கிறாய்ய்ய்ய்ய்....சார் இப்பதான சொன்னேன் ஆடக்கூடாதுன்னு. போங்க சார் நா பாடமாட்டேன்"ன்னு சொன்னேன்.

"மாப்ள நா ராதாதாண்டா. சிட்டிபாபு இல்லடா. குரங்குராதாடா. கீழவீதி ராதாடா. நேத்துதாண்டா இங்க வந்தேன். உங்க அம்மாகிட்டதான் உன் நம்பர் வாங்கியாந்தேன்."ன்னு கதறினான்.

நாதாறி நீ யாரு நீ யாருன்னு எத்தன தடவ கதறினேன் நானுன்னு நெனச்சுகிட்டு "சார் இப்ப அசத்த போவது யாருலயும் வந்து கலக்குறீங்க. சரி சார் சுப்ரியாகிட்ட போன குடுங்க சார். அது சரி அது எப்டி சார் ஒவ்வொரு தடவயும் ஒவ்வொறு மாதிரி வணக்கம் வக்கிறீங்க. இன்னிக்கு எப்படி சார் வைக்க போறீங்க. "ன்னேன்.

"என்னடா மாப்ள போனதடவ ஊருக்கு வந்தப்பகூட நாம மன்மோகன்சிங்லேர்ந்து மன்னார்குடி குரூப் வரைக்கும் பத்தி பேசிகிட்டு இருந்தோமேடா. நா ராதாதாண்டா..ராதாடா..மாப்ள மாப்ள ன்னு கூப்டுப்போமேடா அந்த ராதாதாண்டா" கொஞ்சம் வுட்டா அழுகிற நிலைக்கு வந்துட்டான்.

"சார் வள வளன்னு பேசாம சுப்ரியாகிட்ட போன குடுங்க சார். அவுங்ககிட்ட ஒரு கேள்வி கேக்கணும்"

போன் துண்டிக்கப்பட்டது. அப்பா என் தூக்கத்தை கெடுத்தவன் பிச்சுகிட்டு அலையுறான்.

ஒரு 5 நிமிஷம் கழித்து திரும்பவும் போன் வந்தது. "சார் என்னா கட்டாயிடுச்சு. நல்ல காமடியா போடுங்க சார். அந்த நாய்சேகர் ஜோக்கு போடுங்க சார். என்னக்கி சார் இத டி.வில போடுவீங்க" கட். திரும்பவும் போன் கட்டாயிடுச்சு.

63 comments:

  1. ஹைய்யா...எனக்கு மயிலாடுதுறையில இப்போ எந்த வேலையும் இல்ல.


    நான் ஆரம்பிச்சு வச்சுட்டேன்.
    30 தாண்டிடுச்சுன்னு என்னை தொல்லை பண்ணக்கூடாது சொல்லிட்டேன் (133லயும் நாந்தான் ஃபர்ஸ்ட்)

    சென்ஷி

    ReplyDelete
  2. //நான் ஆரம்பிச்சு வச்சுட்டேன்.
    30 தாண்டிடுச்சுன்னு என்னை தொல்லை பண்ணக்கூடாது சொல்லிட்டேன் (133லயும் நாந்தான் ஃபர்ஸ்ட்//

    ஆமா சென்ஷி!! நானே சொல்லனும்னு இருந்தேன். ரொம்ப சந்தோஷம் வருகைக்கு!!

    ReplyDelete
  3. தொல்ஸ்,
    ஒரு மார்க்கமாய் தான் இருக்கீரு, நடக்கட்டும், நடக்கட்டும்.
    லியோ சுரேஷ்

    ReplyDelete
  4. //தொல்ஸ்,
    ஒரு மார்க்கமாய் தான் இருக்கீரு, நடக்கட்டும், நடக்கட்டும்.
    லியோ சுரேஷ் //

    வாங்க லியோ! நாளை லீவ்தானே! அதனாலதான்..-:)))

    //:-)))))

    only 27 left :-)//

    என்ன டீச்சர் இதல்லாம் ஒரு பதிவான்னு சிரிப்பா இருக்கா!!
    30 இப்போ 40 ஆயிடுச்சு

    ReplyDelete
  5. அருமையா இருக்கு சார், இதென்ன உண்மை சம்பவமா?...இல்லை கற்பனையா?

    ReplyDelete
  6. யப்பா நீர் ஒரு விவகாரமான் ஆள்தான் போலிருக்கு. :)

    கலக்குரீங்க சார் நீங்க. நான் தொலைபேசும்போது இதுமாதிரி ஏடாகூடமா எதுவும் பண்ணிடாதீங்க சார்

    ReplyDelete
  7. அப்பா,
    ராதா அங்கிள் போன் பண்ணாரா?

    ReplyDelete
  8. இந்த வாரம் பார்க் திறக்கப்படமாட்டாது.

    ReplyDelete
  9. தம்பி எங்கே?

    ReplyDelete
  10. இன்று முதல் துபாயில் 'அபி அப்பா முன்னேற்ற கழகம்' தொடங்கப்பட்டு செயல்படும் என அறிவிக்கப் படுகிறது.

    ReplyDelete
  11. தொல்ஸ்
    //வாங்க லியோ! நாளை லீவ்தானே! அதனாலதான்..-:)))//
    நாளை லீவு தான்.கிடேசன் பார்க் சந்திப்பு இருப்பதாக நம்பத்தகுந்த சதுரங்கள் தெரிவிக்கின்றன.
    லியோ சுரேஷ்

    ReplyDelete
  12. மாப்ள,
    என்ன வச்சி காமெடி பண்ணதுக்கு ரொம்ப தாங்க்ஸ்டா. ஆனால் இன்னொரு வாட்டி அந்த மாதிரி பண்ணாதடா.

    ReplyDelete
  13. அம்பிகளா, என்னை ஏண்டா வம்புக்கு இழுக்குரேள்?

    ReplyDelete
  14. அப்போ நான் வர்ட்ட்ட்ட்ட்ட்டா!!!!

    ReplyDelete
  15. யாரையாவது கலாய்க்கனும்னா எப்படித்தான் ஐடியா தோணுமோ !!!

    ReplyDelete
  16. உங்கள் பதிவு முதல் முறை படிக்கிறேன்..

    மிகவும் அருமை..

    -

    ReplyDelete
  17. //இன்று முதல் துபாயில் 'அபி அப்பா முன்னேற்ற கழகம்' தொடங்கப்பட்டு செயல்படும் என அறிவிக்கப் படுகிறது.//

    ஆக அபிஅப்பா இன்னும் முன்னேறவில்லை என்பதற்கு உள்குத்தா கும்மி தம்பி!! சரி இன்னிக்கு துபாய்தானா! நாளைக்கு லீவுன்னு கும்மி குரூப் துபாய் விசிட்டா? அப்புடி போடு!

    ReplyDelete
  18. :-) பாவம் உங்க நண்பர்கள்,
    பதிலுக்கு பதில் .பழிக்கு பழியா?

    ஆங்..
    கண்டு பிடிச்சிட்டேன்,
    இது என்ன
    இப்படி கட்டகடைசியில் தான்
    தலைப்பு காரணமே தெரியுது.

    ReplyDelete
  19. செம காமெடி...:)))

    தேபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி.

    http://www.desipundit.com/2007/03/01/naanyaru/

    ReplyDelete
  20. //:-) பாவம் உங்க நண்பர்கள்,
    பதிலுக்கு பதில் .பழிக்கு பழியா?

    ஆங்..
    கண்டு பிடிச்சிட்டேன்,
    இது என்ன
    இப்படி கட்டகடைசியில் தான்
    தலைப்பு காரணமே தெரியுது.//

    வாங்க! பழிக்கு பழில்லாம் இல்லை. சும்மா டமாஸுக்கு...

    ReplyDelete
  21. சூப்பர்...கலக்கிட்டீங்க...

    எனக்கும் இது மாதிரி கால் வரும். டென்ஷன் ஆகிடுவேன்.

    //இப்படி கட்டகடைசியில் தான் தலைப்பு காரணமே தெரியுது.//

    எனக்கு இன்னும் பிரியலையே!!!

    ReplyDelete
  22. இதே மாதிரி உங்க ரூம் ஆள விட்டு என்கிட்ட இந்தியில பேச சொன்னீங்களே ஞாபகம் இருக்கா?

    அன்னிக்க்கு எனக்கு இப்படிதான் கடுப்பு வந்துச்சு. பின்ன என்னங்க எனக்கு சாயா, கெய்சா ஹே, அச்சா, டீக்கே இந்த வார்த்தைகள விட்டா ஒண்ணுமே தெரியாது எங்கிட்ட இந்தியில பேசினா எப்படி இருக்கும்.
    பாவம் உங்க ரூம்மேட் தான் கடுப்பாயிட்டார்.

    ReplyDelete
  23. நீரும் ஒரு மார்க்கமா தான் இருக்கீர்.

    எங்கள் ஜோதியில் ஐக்கியம் ஆக கட......

    ReplyDelete
  24. ஆஹா... அபிய நெனச்சாத்தான் பாவமா இருக்குது :-((((

    ReplyDelete
  25. அபி அப்பா...கலக்கல்...

    உங்களுக்கு லீவா???? அதுக்கு இப்படியா??? பின்னிட்டிங்க...

    \\தொல்ஸ்
    //வாங்க லியோ! நாளை லீவ்தானே! அதனாலதான்..-:)))//
    நாளை லீவு தான்.கிடேசன் பார்க் சந்திப்பு இருப்பதாக நம்பத்தகுந்த சதுரங்கள் தெரிவிக்கின்றன.
    லியோ சுரேஷ்\\

    இதை பற்றி எனக்கு ஒன்னும் சொல்லவில்லையே....வர வர சங்கதத்துல ஒன்னும் சரியில்ல...அபி அப்பா நேருல இருக்கு உங்களுக்கு....

    ReplyDelete
  26. //செம காமெடி...:)))

    தேபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி.

    http://www.desipundit.com/2007/03/01/naanyaru///

    மிக்க நன்றி குருநாதா!! desipunditங்குற விஷயமே இப்பதான் தெறியும். அங்க துளசி டீச்சர் படமெல்லாம் இருக்கே!! உங்க பேரை நா கெடுக்குற மாதிரி இருந்தா லைட்டா சுட்டி காமிங்க ...திருத்திக்கறேன்..

    ReplyDelete
  27. //யாரையாவது கலாய்க்கனும்னா எப்படித்தான் ஐடியா தோணுமோ !!! //

    வாங்க செந்தழலாரே!! உக்காய்ந்து ஓசிப்போம்ல..

    ReplyDelete
  28. //உங்கள் பதிவு முதல் முறை படிக்கிறேன்..

    மிகவும் அருமை..//

    வாங்க லக்கி லுக்! உங்க பார்வை நம்ம மேல பட்டது ரொம்ப சந்தோஷம். அடிக்கடி வாங்க!!

    ReplyDelete
  29. //யப்பா நீர் ஒரு விவகாரமான் ஆள்தான் போலிருக்கு. :)

    கலக்குரீங்க சார் நீங்க. நான் தொலைபேசும்போது இதுமாதிரி ஏடாகூடமா எதுவும் பண்ணிடாதீங்க சார்//

    லொடுக்குதம்பி!! உங்ககிட்ட இதுமாதிரி செய்வேனா!! கிடேசன் பார்க் மெம்பர்ஸ் கிட்ட இதுமாதிரி நடந்துக்க மாட்டோம்.

    ReplyDelete
  30. ////இப்படி கட்டகடைசியில் தான் தலைப்பு காரணமே தெரியுது.//

    எனக்கு இன்னும் பிரியலையே!!!
    //

    எனக்கும் இன்னும் பிரியலைங்க.. யாராவது கொஞ்சம் சொல்லிட்டு போங்க

    ReplyDelete
  31. //எனக்கு இன்னும் பிரியலையே!!! //

    வாங்க சீனு! முதல் வருகை. அடிக்கடி வாங்க. இன்னும் ஒருமுறை படிச்சுபாருங்க புரியும்.

    ReplyDelete
  32. //இதே மாதிரி உங்க ரூம் ஆள விட்டு என்கிட்ட இந்தியில பேச சொன்னீங்களே ஞாபகம் இருக்கா?

    அன்னிக்க்கு எனக்கு இப்படிதான் கடுப்பு வந்துச்சு. பின்ன என்னங்க எனக்கு சாயா, கெய்சா ஹே, அச்சா, டீக்கே இந்த வார்த்தைகள விட்டா ஒண்ணுமே தெரியாது எங்கிட்ட இந்தியில பேசினா எப்படி இருக்கும்.
    பாவம் உங்க ரூம்மேட் தான் கடுப்பாயிட்டார்.//

    கிழிஞ்சுது கிஸ்ணகிரி!!! அது உருது...தம்பீ தம்பீ...

    ReplyDelete
  33. //நீரும் ஒரு மார்க்கமா தான் இருக்கீர்.

    எங்கள் ஜோதியில் ஐக்கியம் ஆக கட...... //

    புலிகுட்டிதம்பி! ஆயாச்சு..ஆயாச்சு..

    ReplyDelete
  34. //ஆஹா... அபிய நெனச்சாத்தான் பாவமா இருக்குது :-(((( //

    ஜி! என்னய நெனச்சு பாவப்படுங்க!! அபியின் அட்டகாசங்கள் அப்டீன்னு ஒரு பதிவே போடலாம்.

    ReplyDelete
  35. //இதை பற்றி எனக்கு ஒன்னும் சொல்லவில்லையே....வர வர சங்கதத்துல ஒன்னும் சரியில்ல...அபி அப்பா நேருல இருக்கு உங்களுக்கு.... //

    பொறி தின்னுகிட்டே பொறி படம் பாத்ததால நம்ம கிடேசன் பார்க் செயலர் கோபிதம்பி உடம்புக்கு முடியாம இருப்பதால் அடுத்த வெள்ளிக்கு ஒத்தி வைக்கப்படுது!!

    ReplyDelete
  36. //எனக்கும் இன்னும் பிரியலைங்க.. யாராவது கொஞ்சம் சொல்லிட்டு போங்க //

    வாங்க வாங்க மணிகண்டன்!! முதல் வருகை! மிக்க நன்றி! திரும்ப படிங்க ...பிரியும்

    ReplyDelete
  37. //என்னடா மாப்ள போனதடவ ஊருக்கு வந்தப்பகூட நாம மன்மோகன்சிங்லேர்ந்து மன்னார்குடி குரூப் வரைக்கும் பத்தி பேசிகிட்டு இருந்தோமேடா.//

    ஆகா இப்ப புரிஞ்சிடுச்சுங்க!! இப்பதான் நிம்மதியா தூக்கம் வரும்:)

    ReplyDelete
  38. //ஆகா இப்ப புரிஞ்சிடுச்சுங்க!! இப்பதான் நிம்மதியா தூக்கம் வரும்:)//

    ஆஹா! தூக்க மாத்திரயா ஆக்கிபுட்டீங்களேயப்பு நம்ம பதிவ!!!

    ReplyDelete
  39. //எங்கள் ஜோதியில் ஐக்கியம் ஆக கட......//

    எந்த ஜோதி???????????

    ReplyDelete
  40. ////எங்கள் ஜோதியில் ஐக்கியம் ஆக கட......//

    எந்த ஜோதி???????????//

    வாய்யா பாதி மனுஷா! 40 அடிச்சு என்னய வெளியே தள்ளன்னே வந்துருக்க போல!! நடத்து நடத்து..

    ReplyDelete
  41. // நா உடனே "சார். கண்டுபுடிச்சுட்டேன். நீங்க சன் டி.வி அடையாறு ஆனந்தபவன் காமடிடைம் சிட்டிபாபு தானே.ஐயோ எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. எங்க லெட்டர் கெடச்சுதா சார்"ன்னேன். //


    [வடிவேலு ஸ்டைலில்..] ஆஹா.. அவனா நீ??

    ReplyDelete
  42. உங்க ஃபிரண்ட் கெஞ்ச கெஞ்ச பெண்டு நிமித்திட்டீங்க போல.. உங்க கிட்ட கொஞ்சம் ஜாக்கிரத்தயாத்தான் இருக்கனும் போல..

    ReplyDelete
  43. அபி, உங்க அப்பா ரொம்ப மோசம்.. நீயே பாரேன்.. உன் பேருல அவரே ககமெண்டு போட்டுக்கிடாரு.. :-P

    ReplyDelete
  44. ஹிஹிஹி, சிரிக்கிற மாதிரி வச்சுக்குங்க!

    ReplyDelete
  45. நீங்க மன்மோகன்சிங்கா ? மன்னார்குடி குரூப்பா ?

    தெரியலேப்பா என்று நாயகன் போலச் சொல்லக்கூடாது :-)))

    ReplyDelete
  46. முதல் முறை இங்கே...

    சூப்பர் காமெடியா சொல்லியிருக்கீங்க..

    //சார். கண்டுபுடிச்சுட்டேன். நீங்க சன் டி.வி அடையாறு ஆனந்தபவன் காமடிடைம் சிட்டிபாபு தானே//
    இது தான் டாப்பு

    பதிவ படிச்சி வி.வி.சி :-)

    ReplyDelete
  47. //[வடிவேலு ஸ்டைலில்..] ஆஹா.. அவனா நீ??//

    அவனேதான் மைஃபிரன்ட்-:)))

    //உங்க ஃபிரண்ட் கெஞ்ச கெஞ்ச பெண்டு நிமித்திட்டீங்க போல.. உங்க கிட்ட கொஞ்சம் ஜாக்கிரத்தயாத்தான் இருக்கனும் போல.. //

    ஹி..ஹி..-:))))

    ReplyDelete
  48. //ஹிஹிஹி, சிரிக்கிற மாதிரி வச்சுக்குங்க! //

    மேடம் அப்ப நெசமா சிரிக்கலை!! அப்படிதானே!!

    ReplyDelete
  49. //நீங்க மன்மோகன்சிங்கா ? மன்னார்குடி குரூப்பா ?//

    ஆஹா! தேர இழுத்து தெருவில விட பாக்குறீங்களே!!

    ReplyDelete
  50. //முதல் முறை இங்கே...

    சூப்பர் காமெடியா சொல்லியிருக்கீங்க..//

    வாங்க அருன்! முதல் வருகை. மிக்க சந்தோஷம். அடிக்கடி வாங்க!!

    ReplyDelete
  51. //முதல் முறை இங்கே...

    சூப்பர் காமெடியா சொல்லியிருக்கீங்க..//

    வாங்க அருன்! முதல் வருகை. மிக்க சந்தோஷம். அடிக்கடி வாங்க!!

    ReplyDelete
  52. போன்ல எலிக்குட்டி சோதனை புலிக்குட்டி சோதனை அப்படின்னு எதாவது பண்ணி போன் பண்ணி சோதனை பண்ணற பார்ட்டி யாருன்னு கண்டுபிடிக்க முடியாதா? :)))

    ReplyDelete
  53. //போன்ல எலிக்குட்டி சோதனை புலிக்குட்டி சோதனை அப்படின்னு எதாவது பண்ணி போன் பண்ணி சோதனை பண்ணற பார்ட்டி யாருன்னு கண்டுபிடிக்க முடியாதா? :)))
    //

    வாங்க கொத்ஸ்! இப்ப நா செஞ்ச பதிவு கயமையால் தமிழ்மண முகப்புல தெறிஞ்சதால நீங்க வந்தீங்க!! என்னத்த சொல்ல!! இப்டி ஆகிபோச்சே!!

    ReplyDelete
  54. கலக்கல் அண்ணா...

    நல்ல காமெடி... :)))))))))))))

    ReplyDelete
  55. அபி அப்பா,

    தலைவை வைத்து படிக்காமல் தவறவிட்டதில் இந்த பதிவும் ஒன்று.

    இப்பதான் படித்தேன் முழுநீள காமெடி நெடி கலக்கிட்டிங்க !

    :)

    ReplyDelete
  56. சிசிவவ (சிரிச்சு சிரிச்சு வயித்து வலி)

    உங்களுக்கு "ஐடியா அபியப்பா"ன்னு பேர் வைக்கலாமா? இனிமே போன்ல யாராவது நான் யாருன்னு guess பண்ணுன்னு கடுப்படிச்சா என்ன செஞ்சு அவங்களை பதிலுக்குக் கடிப்படிக்கிறதுன்னு சொல்லிக்கொடுத்திருக்கீங்களே.. ஆகா நன்றி நன்றி.

    ReplyDelete
  57. உங்க பதிவுல பின்னூட்டம் நிறையதுல

    கிடேசன் பார்க்
    கிடேசன் பார்க்
    கிடேசன் பார்க்
    கிடேசன் பார்க்

    அப்படின்னு வருதே.. அது என்ன?

    ReplyDelete
  58. //கலக்கல் அண்ணா...

    நல்ல காமெடி... :))))))))))))) //

    வாங்கம்மா! லேட்டா வந்துருக்கீங்களே!!

    ReplyDelete
  59. //அபி அப்பா,

    தலைவை வைத்து படிக்காமல் தவறவிட்டதில் இந்த பதிவும் ஒன்று.

    இப்பதான் படித்தேன் முழுநீள காமெடி நெடி கலக்கிட்டிங்க !

    :) //

    வருகைக்கு நன்றி கோவி.கண்ணன்!! அடிக்கடி வாங்க! உங்க கருத்தை சொல்லுங்க!

    ReplyDelete
  60. //சிசிவவ (சிரிச்சு சிரிச்சு வயித்து வலி)

    உங்களுக்கு "ஐடியா அபியப்பா"ன்னு பேர் வைக்கலாமா? இனிமே போன்ல யாராவது நான் யாருன்னு guess பண்ணுன்னு கடுப்படிச்சா என்ன செஞ்சு அவங்களை பதிலுக்குக் கடிப்படிக்கிறதுன்னு சொல்லிக்கொடுத்திருக்கீங்களே.. ஆகா நன்றி நன்றி.//

    வாங்க சேதுக்கரசி! சும்மா ஜாலிக்குதான் கலாய்ச்சேன்!

    ReplyDelete
  61. //உங்க பதிவுல பின்னூட்டம் நிறையதுல

    கிடேசன் பார்க்
    கிடேசன் பார்க்
    கிடேசன் பார்க்
    கிடேசன் பார்க்

    அப்படின்னு வருதே.. அது என்ன? //

    அதை பத்தி ஒரு பதிவே போட ஐடியா இருக்கு..

    ReplyDelete
  62. //சார். கண்டுபுடிச்சுட்டேன். நீங்க சன் டி.வி அடையாறு ஆனந்தபவன் காமடிடைம் சிட்டிபாபு தானே//


    செம டமாஸ்

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))