ஒரு சாதாரண டெலிபோன் பேச்சு சில சமயம் சுவாரஸ்யமாக அமைந்துவிடும். சில சமயம் ஒரு பதிவே போடுவது மாதிரி நல்ல விவாதமாகவே அமையும். அப்படித்தான் நான் என் தம்பியுடன் 2 நாள் முன்பு பேசியது கூட.
அபிஅப்பா: என்னடா எப்டியிருக்க!
அபிசித்தப்பா: ம்.. நல்லா. அப்புறம் உன் பிளாக் எல்லாம் படிச்சேன். நல்லாயிருக்கு.
அ அ: என்ன இப்டி பொத்தாம் பொதுவா சொல்ற?
அ.சி: வேற என்னத்த சொல்ல. நல்லா சிரிக்கும்படி இருக்கு. ஆனா எனக்கு இப்போ அலுத்துபோனது மாதிரி எல்லாருக்கும் இன்னும் 1 மாதமோ அதிகபட்சமாக 6 மாதமோ அலுத்து போக வாய்ப்பு இருக்கு.
அ.அ: என்னடா இப்டி சொல்ற. எல்லாரும் நல்லா காமடியா இருக்கு காமடியா இருக்குன்னு சொல்றாங்களே?
அ.சி: அந்த நேரம் சிரிச்சவுடனே உடனே பாராட்ட தோனும். டக்குன்னு ஒரு பின்னூட்டம் போட்டு பாராட்டிவிட்டு போயிடுவாங்க. நீயும் அந்த சின்ன புகழ் போதையிலேயே இதுதான் உன் வழின்னு அப்டியே கண்டின்யூ பண்ணுவ. ஒரு 6 மாசம் கழிச்சு வேற யாராவது கொஞ்சம் வேறமாதிரி எழுதுனா எல்லாரும் அங்க போயிடுவாங்க.
அ.அ: அதுக்கு என்ன செய்யலாம். வாங்க வாங்கன்னு கைய புடிச்சா இழுக்கமுடியும்.
அ.சி: உன்ன யாரு கைய புடிச்சு இழுக்க சொன்னாங்க. வெரைட்டி எழுது. சீரியஸ் எழுது. ஒரு மொக்கை போடு. அய்ய இவன் இப்டிதானான்னு அவங்க யோசிக்கும் போதே திடீர்ன்னு "துணை நகரம் தேவையா?" அப்டீன்னு ஒரு ச்மூக கட்டுரை போடு. நா உன்னை இப்போ கேக்கிறேன், துணை நகரம் தேவையா?
அ.அ: கண்டிப்பா தேவை. ஆனா பா.ம.க தான் எதுக்குதே.
அ.சி: ஏன் எதுக்குது?
அ.அ: விளை நிலங்கள் குறைந்தால் அப்டீங்குற பிரச்சனை வருதே.
அ.சி: சரி. நம்ம மயிலாடுதுறை எடுத்துக்கோ. சுப்ரமணியபுரம், சீனிவாசபுரம், காந்திநகர், திருவள்ளுவர் நகர், அப்டீ இப்டீன்னு பல்லாயிரக்கணக்கான விளை நிலங்கள் இன்று நகராயிப்போச்சே, உனக்கும் எனக்கும் தெரிந்து அதெல்லாம் எப்படி செழிப்பா இருந்துச்சு. நம்ம ஊர்லயும் பா.ம.க இருக்கு. இதெல்லாம் கண்ணுக்கு தெறியலையா?
அ.அ: நீ என்னை அரசியலுக்கு இழுக்கற. நா வரலை.
அ.சி: இல்லை. இது அரசியல் இல்லை. சமூக அக்கறை. சரி விடு. பா.ம.கவையும் சமாளிச்சு துணநகரமும் அமைய உன்கிட்ட ஏதாவது ஐடியா இருக்கா?
அ.அ: நான் என்ன மினிஸ்டரா? என் ஐடியாவை கவர்மெண்ட் கேக்க போவுதா? ஆனால் என்னிடம் சில கருத்துகள் உண்டு.
அ.சி: கேக்கும். புதுவை எம்.பி. ராமதாஸ் ஒரு முறை மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்த போது ஒரு 'மாதிரி' பட்ஜெட் போட்டு அனுப்பி வைத்தார். அதிலே 40% அளவுக்கு ஏத்துக்கப்பட்டது. அப்போது அவர் சாதாரண புரஃபஸ்ர் தான். அப்போ அவர் அரசியல்வாதிகூட இல்லை. துணை நகரம் சம்மந்தமாக உன்னிடம் உள்ள கருத்தை பதிவாக்கு.
அ.அ:யார் வந்து படிப்பாங்க?
அ.சி: உனக்கு பின்னூட்டம் போட்டவங்க மாத்திரம்தான் உன்னை படிப்பவர்களா? படிக்க தெரிந்த அத்தனபேருக்கும் பின்னூட்டம் போட தெரியனும்ங்கர அவசியம் இல்ல. ஏன் எனக்கே தெரியாது. ஆனால் நான் படிக்காத தமிழ் பிளாக்கே இல்லை. அதனால்தான் சொல்கிறேன், உன்னை அலுத்துபோகாமல் இருக்க வேண்டுமானால் நீ வெரைட்டியாக எழுது.
அ.அ: "அந்தரங்கம் விற்பவர்களை செருப்பால் அடி" ன்னு ஒரு ஆத்திரத்தை எழுதினேன். யாவாரம் சரியா ஆகலை.
அ.சி: தப்பு அது உன் களம் இல்லை. தவிர நீ சொல்லவந்ததை ஒருவித பயத்தில் சரியா சொல்லலை. தலைப்பில் இருந்த காரம் உள்ளே இல்லை. அதுதவிர வந்த புதுசு. உன்னை கவனிக்க ஆளே அப்போது இல்லை. உனக்கு தெரிந்த விஷயங்கள் நிறைய இருக்கு. அதை எழுது. "பெயர் வைக்கலாம் வாங்க"ன்னு ஒரு மொக்கை பதிவு படிச்சேன். அது ஒரு நல்ல விஷயம் சொல்லக்கூடிய பதிவு. திடீர்ன்னு அதை மொக்கையாக்கிட்டு அடுத்த காமடிக்கு போயிட்ட. அதுதவிர நல்ல விவாதங்களில்கூட நீ போய் கலந்துப்பதில்லை. போனாலும் ஏனோ தானோன்னு வருகை பதிவு மாத்திரம் செய்யுற.
அ.அ: எப்போ அப்டீ நடந்துச்சு!
அ.சி: இப்போ ரீஸண்டா, உஷா மேடம் பதிவுல ஒரு நல்ல வாக்குவாதம் நடந்தது. அவங்க அதான் பிரேமலதா உள்ள வந்தவுடன். கொத்ஸும், நாகை சிவாவும் நடத்திய களேபரத்தில் நீ சும்மா பாத்துகிட்டு மட்டும் இருந்தாய்.
அ.அ: இல்லியே! அவங்க சேதுக்கரசியை மறந்தவுடன் வந்து ஞாபகப்படுத்தினேனே!
அ.சி: வெரிகுட். நல்ல விஷயம். அதே போல் பிரேமலதா வந்தவுடன் சூடுபிடித்ததே அப்போது நீ உள்ளே நுழைத்திருக்க வேண்டும். சேதுக்கரசியை ஞாபகப்படுத்திய நீயும் கொத்ஸும் இம்சை அரசியை மறந்தது ஏன்? அதும் கொத்ஸ்கூட வ.வ.ச வில் இருக்காங்க. இந்த நிமிஷம் வரை நீங்கள் யாரும் வாய் திறக்கவில்லை. அதுபோல் பெண்கள் ஒத்துமை என கூவி கூவி கும்மாளமாக இருந்த எந்த பெண்களும் இம்சை அரசி பத்தி வாய் திறக்கவில்லை. இது ஏன்?
அ.அ: டேய் டேய் வேண்டாம். நா இங்க கொஞ்சம் மரியாதயா இருக்கேன். ஒரு வார்த்தை உஷா மேடத்துகிட்ட சொன்னா சேத்துக்க போறாங்க. அவங்ககுள்ள சண்டை போட வச்சிடாதடா. நா இந்த நிமிஷம் வரை நெசமாவே மறந்துவிட்டேன்.
அ.சி: ஆமாம். இருக்கலாம். ஆனா கொத்ஸ் ஞாபகமா மறந்துட்டார்.
அ.அ: சரி. அந்த விஷயத்த விடு. நா வேனுமின்னா பின்நவீனத்துவம் எழுதவா?
அ.சி: முதல்ல பின்நவீனத்துவம்ன்னு ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுது. பின்ன பின்நவீனத்துவம் எழுதலாம். அது போல லக்கியின் பதிவு, வெட்டி பதிவு, கொத்ஸ், பின்நவீனத்துவத்துல பின்னி பெடலெடுக்கற மிதக்கும் வெளி, தம்பி, முத்துகுமரன், சமீபத்துல ஒரு கவிதை நிலவு நண்பன் இத பத்தியெல்லாம் பேசலாம். மீதி அடுத்த வாரம் பேசலாம்.
அ.அ: என்னடா இது என் பதிவு போலயில்லையே!
அ.சி: அது போகட்டும். எனக்கு ஒரு நோக்கியா 5300 வாங்கி அனுப்பு!
அ.அ: உன்கிட்டதான் அந்த மாடல் இருந்துச்சே?
அ.சி: அது உடைஞ்சு போச்சு. நான் பாப்பாவ கலாய்க்க கூப்பிட்டேன். வந்தா. நா ஒரு வேளையும் சொல்லாம பேப்பர் படிச்சுகிட்டு இருந்தேன். அவ ரொம்ப நேரம் நின்னு கிட்டு இருந்தா. பிறகு"என்ன சித்தப்பா வேளை செய்யனும்"ன்னு கேட்டா. அதுக்கு நான் "இங்க வான்னுதான் சொன்னேன், வேளை இருக்குன்னு சொன்னனா?" ன்னு சொன்னேன். சரின்னு போயிட்டா. சாயந்திரம் வந்து "சித்தப்பா உங்க போனை தூக்கிபோடுங்க"ன்னு சொல்லிகிட்டு கையை குவிச்சு வச்சுகிட்டா. நானும் போட்டேன். அவ பிடிக்காம விட்டுட்டு போயிட்டா. போன் கீழே விழுந்து உடஞ்சுடிச்சு. அதுக்கு அவ "போனை போடுங்கன்னுதான சொன்னேன். பிடிக்கிறேன்னு சொன்னனா?"ன்னு சொல்றா.
அ.அ: இப்போதான் என் பதிவு மாதிரி இருக்கு. சரி அடுத்த வாரம் பேசுவோம்.
தொல்ஸ்,
ReplyDelete//"போனை போடுங்கன்னுதான சொன்னேன். பிடிக்கிறேன்னு சொன்னனா?"ன்னு சொல்றா.//என்னதான் வித்தியாசமாக எழுத நினைத்தலும் உங்க டிரேட் மார்க் உங்களையும் அறியாமல் வந்து விடுகிறது.
புது முயற்சிக்கு வாழ்துக்கள்
லியோ சுரேஷ்
அப்போ ஒரு முடிவோட இருக்கீங்க. ஒரு கிரிக்கெட் பதிவொன்னு போடுங்க. நல்ல வியாபாரம் ஆவும். உ.கோ நேரம் வேற. சச்சினை திட்டி ஒன்னு போடுங்க. தல ஆட்களாகிய நாங்களெல்லாம் வந்து கும்மியடிப்போம்.
ReplyDeleteஅண்ணா இந்த போஸ்ட் படிக்கலை.. படிச்சாலும் புரியாது...கமென்ட்ஸ் மட்டும் தான் படிச்சேன்..
ReplyDeleteஅண்ணா சச்சின் பத்தி அப்படி எல்லாம் எழுதாதீங்கண்ணா
Plsss...
அப்புறம் டைகர், ஜூலி, அபி, அவந்தி எல்லாரும் படை எடுப்போம்
போனைப் போடச் சொன்னது அவங்க மகளா, உங்க மகளா?
ReplyDeleteஇல்லை குடும்பமே கடிச்சுவையோடு திகழுதேனு பார்த்தேன்.:-)
புது முயற்சிகளுக்கு நல் வாழ்த்துக்கள்.
//என்னதான் வித்தியாசமாக எழுத நினைத்தலும் உங்க டிரேட் மார்க் உங்களையும் அறியாமல் வந்து விடுகிறது.
ReplyDeleteபுது முயற்சிக்கு வாழ்துக்கள்
லியோ சுரேஷ் /
வாங்க லியோ! இது சும்மா வாரா வாரம் மட்டும்தான். (ஒரு சீரியஸ் பதில் போட்டேன் "தம்பி" பதிவில். அபி அப்பான்னாவே சரியான காமடிதான் அப்டீங்குரார் - ஆக வர வர இதுவும் காமடியா மாற்னாலும் மாறும்).
//உ.கோ நேரம் வேற. சச்சினை திட்டி ஒன்னு போடுங்க. தல ஆட்களாகிய நாங்களெல்லாம் வந்து கும்மியடிப்போம். //
ReplyDeleteவாங்க fast bowlar நீங்களே நொந்து நூலா இருக்கீங்க. இதுல சச்சின திட்டி போடனுமா?
//அண்ணா சச்சின் பத்தி அப்படி எல்லாம் எழுதாதீங்கண்ணா
ReplyDeletePlsss...
அப்புறம் டைகர், ஜூலி, அபி, அவந்தி எல்லாரும் படை எடுப்போம் //
சச்சின் ரொம்ப மோசம். நம்ப வசு கழுத்தை அறுத்டிட்டார். எவ்ளோவ் நம்பினோம். நேர்ல பாத்தா அப்டியே கடிச்சுடுவேன்.
முன்ன எப்டி பர்பாஃர்ம் செய்தார். எப்டி இருந்த அவர் இப்டி ஆயிட்டார். ஆனா ஒளிப்பதிவு பரவாயில்ல. கதாநாயகி ஜெலீனாவும் ஓக்கே. ஆனா சச்சின் வேஸ்ட்.
டைகர், ஜூலி, அபிபாப்பா, அவந்திகா, யாருக்கும் ஐயா பயப்பட மாட்டேன். :-))))))
ஒன்னும் புரியலை..
ReplyDelete//போனைப் போடச் சொன்னது அவங்க மகளா, உங்க மகளா?
ReplyDeleteஇல்லை குடும்பமே கடிச்சுவையோடு திகழுதேனு பார்த்தேன்.:-)
புது முயற்சிகளுக்கு நல் வாழ்த்துக்கள்//
மேடம்! அது அபிபாப்பாதான். ஆனா குடும்பமே கல கலதான். எங்க அம்மா சும்மா ஒரு கனைப்பிலேயே நக்கல் புகுந்து விளையாடும். தஞ்சை நக்கல்.
என்ன இருந்தாலும் உஷா மேடம் இம்சைஅரசியை மறந்திருக்க கூடாதுதானே? ஐயோ பாவம்:((
//ஒன்னும் புரியலை.. //
ReplyDeleteநீங்க கேட்டுகிட்ட மாதிரி நான் சச்சின் தெண்டுல்கரை திட்டலை. நான் திட்டியது "சச்சின்" விஜய் நடிச்ச படம். இப்போ புரியுதா? :-)))
ha ha ha..அண்ணா, எனக்கும் படத்துக்கும் ரொம்ப தூஊஊஊஊஊஊஊரம்..அதான் புரியலை
ReplyDeleteநல்ல தொடக்கம் அபி அப்பா....வாழ்த்துக்கள் ;-)
ReplyDelete\\அதுபோல் பெண்கள் ஒத்துமை என கூவி கூவி கும்மாளமாக இருந்த எந்த பெண்களும் இம்சை அரசி பத்தி வாய் திறக்கவில்லை. இது ஏன்?\\
ReplyDeleteஉங்க அண்ணன், தங்கச்சி பாசத்துக்கு பதிவை எல்லாம் போட்டு கலக்குறிங்க...இம்சை அரசி நீங்க கொடுத்து வச்ச தங்கச்சி தான்.
//நல்ல தொடக்கம் அபி அப்பா....வாழ்த்துக்கள் ;-) //
ReplyDeleteநன்றி கோபிதம்பி:-))
அண்ணா,
ReplyDeleteசரியான நேரத்தில் விஷயத்தை புரிந்து கொண்டீர்கள்...
வெரைட்டி தான் நமக்கு தாரக மந்திரம். உள்ள என்ன இருக்குனு தெரியக்கூடாது. நான் சில சமயம் உங்க பதிவ படிக்காமவிடறதும் காரணம் இதுதான்.
மனசு கொஞ்சம் கஷ்டமா இருக்கும் போது படிக்கலாம்னு படிக்காம விட்டுடுவேன். ஆனா அப்பறம் கண்டிப்பா படிப்பேன். இவ்வளவு லேட்டா கமெண்ட் போட்டா நல்லா இருக்காது விட்டுடுவேன்.
நான் நம்ம அரை பிளேடுக்கு சொன்னதும் இதுதான். வெரைட்டி கொடுங்கனு தான்...
அனுபவக்கட்டுரைகளுக்கு என்றுமே வரவேற்பு உண்டு. சமுதாய கோபம்னு திட்றத விட நம்ம துறைல இருக்குற பிரச்சனை எதுக்காவது சரியான தீர்வு நம்மால் சொல்ல முடியுமானு பார்க்கலாம். தீர்வு சொல்லலைனா கூடப்பரவாயில்லை, பிரச்சனை இதுதான்னாவது சொல்லனும்.
பிரச்சனை இதுதான்னு சில சமயம் சரியாக இனம் கண்டு கொள்ளப்பட்டால் தீர்வை எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.
ஒரு சின்ன மேட்டர்
ReplyDeleteஇம்சை அரசியோட இரண்டு நாவல்கள் கண்மணியில் வந்திருக்கிறது. அவர் அதை துவக்கத்தில் போட ஆரம்பித்தார். பின்னர் அதை அப்படியே விட்டுவிட்டார். ஏனோ தெரியவில்லை.
என்ன சொல்றதுன்னே தெரியல..
ReplyDeleteஹாலிவுட் படத்துல கிளைமேக்ஸ் எதிர்பாக்காதமாதிரி முடிவு இருக்கும். இதிலயும் அப்படித்தான்...
:)
கலக்குங்க...
இனிமே அ.அ. என்ன எழுதுனாலும் ரகளைதான். ரகளை பண்ண நாங்களும் ரெடிதான் :))
சென்ஷி
//பின்நவீனத்துவத்துல பின்னி பெடலெடுக்கற மிதக்கும் வெளி, தம்பி, முத்துகுமரன்,//
ReplyDeleteஎன்னது தம்பி பின் நவீனத்துவத்துல பின்னி பெடலெடுக்கறானா???
ஐயோ சாமி... தாங்க முடியலைப்பா. என்னை யாராவது கைத்தாங்களா கூப்பிட்டு போங்க...
//வாங்க லியோ! இது சும்மா வாரா வாரம் மட்டும்தான். (ஒரு சீரியஸ் பதில் போட்டேன் "தம்பி" பதிவில். அபி அப்பான்னாவே சரியான காமடிதான் அப்டீங்குரார் - ஆக வர வர இதுவும் காமடியா மாற்னாலும் மாறும்).//
ReplyDeleteஇந்த பதிவுக்கும் அவன் தான் காரணமா???
இது பரவாயில்லை. நான் எழுதுன லிப்ட் ப்ளீஸ்னு ஒரு த்ரில்லர் கதையயே காமெடியாக்கிட்டாங்க :-(
////பின்நவீனத்துவத்துல பின்னி பெடலெடுக்கற மிதக்கும் வெளி, தம்பி, முத்துகுமரன்,//
ReplyDeleteஎன்னது தம்பி பின் நவீனத்துவத்துல பின்னி பெடலெடுக்கறானா???//
இல்ல தப்பாயிடுத்தே, இது இப்டி இருக்கனும்
பின்நவீனத்துவத்துல பின்னி பெடலெடுக்கற மிதக்கும் வெளி)}>////// தம்பி, முத்துகுமரன்,
நடுவே முடிந்தால் நம்ம இலவச கொத்ஸ் ஒரு சுவர் கட்டி கொடுக்கவும்:-)
//இது பரவாயில்லை. நான் எழுதுன லிப்ட் ப்ளீஸ்னு ஒரு த்ரில்லர் கதையயே காமெடியாக்கிட்டாங்க :-( //
ReplyDeleteதெரியும். பின்னூட்டத்துல கதறினீங்க, இது த்ரில்லர் இது த்ரில்லர்ன்னு. இப்போ போட்ட உகாதி பதிவுக்கு கூட யாராவது வந்து "வெட்டி! கலக்கலான காமடி பதிவு, என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியலை:-))" அப்டீன்னு போட போறாங்க!
அன்பு நண்பர் அபிஅப்பா அவர்களுக்கு,
ReplyDeleteநான் தங்களின் சமீபத்திய பதிவுகளையும்,பின்னூடங்களையும் ரசித்துப் படித்திருக்கின்றேன்,தங்களின் நகைச்சுவை பதிவிற்கு நானும் ரசிகன்,
அபியின் பள்ளி விளையாட்டு போட்டிக்கு தாங்கள் சென்றதையும் அங்கு நடந்த கலோபரத்தையும் படித்து சிரித்தேன் பின்னூட்டமிடாமைக்கு மன்னிக்கவும்,
இந்தப் பதிவில் நான் மிகவும் ரசித்தது அந்தப் பின்நவீனத்துவத்திற்கான தங்களின் தவறான ஸ்பெல்லிங், படித்ததும் சத்தம் போட்டு உடனே சிரித்து விட்டேன்,
தங்களை புதியவர் என்ற அலட்சியத்தால் படிக்கவில்லை , இனி தொடர்ந்து படிப்பேன், சங்கத்தின் பக்கமும், பல பதிவர்களின் பக்கமும் தங்களின் பின்னூட்டத்தைப் பார்த்து சரி ஆளுகிட்ட விசயம் இருக்கு என்று உணர்ந்து தங்களின் பதிவுகளைப் படிக்கின்றேன்,சீரியஸாக எழுத பலர் உண்டு காமெடியாகவே தொடர்ந்து எழுதவும்...
அன்புடன்...
சரவணன்
விதவிதமா விஷயங்களை எப்படி எழுதினாலும்
ReplyDeleteஅடுத்தவங்கள திட்டாமல்
நகைச்சுவை கலந்து நீங்கள் எழுதினால்
படிக்க பின்னூட்டமிட நிறைய
பேர் இருக்கோம்.
காமெடி எழுதினா போரடிக்கும்
என்பதோ இல்லாட்டி படிச்சுட்டு
மறந்துடுவாங்கன்னு மட்டும் நினைக்காதீங்க.
எப்படி "அடப்பாவி"ன்னுவிவேக் சொன்னதும் "என்னது சின்னப்புள்ளத்தனமா இருக்கு"ன்னு
வடிவேலு சொன்னதும் இன்னைக்கு
நம்ம வாழ்க்கையில் அங்கமா மாறிட்டதோ அது மாதிரி பசு பேர் வச்சா பொண்ணு பத்மா சுப்ரமணியன்
ஆவாங்கறது மாதிரி நீங்க எழுதற நகைச்சுவை வலைப்பதிவில் நிலைச்சு நிக்கும்.
//அதுபோல் பெண்கள் ஒத்துமை என கூவி கூவி கும்மாளமாக இருந்த எந்த பெண்களும் இம்சை அரசி பத்தி வாய் திறக்கவில்லை. இது ஏன்?//
ReplyDeleteஅபி அப்பா, இதுல ரெண்டு மூணு விசயம் சொல்லணும். பெண் பதிவர்கள் பட்டியல் என்பது ரொம்பவும் கவனத்தோடு செய்ய வேண்டியது. சுலபமா ஒரு ஆண் பெண்பெயரில் பதிவு தொடங்கி உள்ளே நுழைந்து வம்பு செய்யும் வாய்ப்பு இருக்கிறது. எனவே genuinenessஉக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதிருக்கு. இம்சை அரசி என்னும் supposed-to-be பெண் பதிவர், மற்ற பெண் பதிவர்களுடன் பின்னூட்டங்களிலோ, பதிவுகளிலோ நட்பாக இருந்திருந்தால் சுலபமாக எல்லாருக்கும் நினைவிருந்திருக்கும்.
அதோட, உங்க தம்பி (நீங்களும் தான்:) ) மதி பதிவைப் படிக்க மாட்டாரு போலிருக்கு. முழுமையான பட்டியல் அங்க தான் இருக்கு. முடிந்தால் பார்க்கச் சொல்லுங்க. உஷா கூட அங்கிருந்து தான் எடுத்து கடைசியா அப்டேட் செய்தாங்க.
இந்தப் பதிவில் இம்சை அரசி பெயரைச் சேர்த்திருந்தோம். ஆரம்பத்தில் விட்டுப் போய், பின்னூட்டங்கள் மூலமாக வந்தது அதுவும். அவங்களைப் பற்றிய பின்னூட்டங்களையும் நீங்களும் அபி சித்தப்பாவும் படிக்கவேண்டும்னு கேட்டுக்கிறேன்.
இம்சை அரசி என்பவரின் genuinenessஐக் கூட ஜி.ரா ஒரு முறை பேசும் போது, அவங்க ஜிராவுக்கும் வெட்டி பாலாஜிக்கும் collegue என்ற முறையில் தான் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றபடி, அவங்க தன்னுடைய ப்ளாக் உண்டு தான் உண்டுன்னு தனி ராஜ்ஜியமா அமைச்சிகிட்டு இருக்கிறதையே விரும்பும்போது, தொல்லை செய்ய நாங்கள் விரும்புவதில்லை என்பதையும் நீங்க புரிஞ்சிக்கிடணும். இதில் ஒத்துமை குறைவு எங்கிருந்து வருது என்று தெரியலை.
மற்றபடி, உங்க பதிவுகள் பற்றி, அபி சித்தப்பா சொல்வது ரொம்ப சரியாக இருக்கு. என்னைக் கேட்டால் அவரே கூட தனி ப்ளாக் தொடங்கி எழுதலாம் :))
வெ.ப பாலாஜி சொல்வது போல் இந்தப் பதிவையே 'காமெடி பதிவு தானே, அப்பால பார்த்துக்கலாம்'னு ஒதுக்கிவச்சி தாமதமாத் தான் பார்த்தேன். ஒரு டெம்ப்ளேட் பதிவா போயிடக் கூடாது. வெரைட்டி தேவைதான் :)
//சித்தப்பா உங்க போனை தூக்கிபோடுங்க"ன்னு சொல்லிகிட்டு கையை குவிச்சு வச்சுகிட்டா. நானும் போட்டேன். அவ பிடிக்காம விட்டுட்டு போயிட்டா. போன் கீழே விழுந்து உடஞ்சுடிச்சு. அதுக்கு அவ "போனை போடுங்கன்னுதான சொன்னேன். பிடிக்கிறேன்னு சொன்னனா?"ன்னு சொல்றா.
ReplyDelete///
:) :-)
பெரிய புன்னகையுடன் ஒரு பின்னூட்டம்.
//என்ன சொல்றதுன்னே தெரியல..
ReplyDeleteஹாலிவுட் படத்துல கிளைமேக்ஸ் எதிர்பாக்காதமாதிரி முடிவு இருக்கும். இதிலயும் அப்படித்தான்...
:)
கலக்குங்க...
இனிமே அ.அ. என்ன எழுதுனாலும் ரகளைதான். ரகளை பண்ண நாங்களும் ரெடிதான் :))
சென்ஷி //
வாங்கய்யா சென்ஷி! அ.அ அப்டீன்னா அபிஅப்பா, அ.சி ன்னா அபிசித்தப்பா.
எப்டியோ மக்கள்ஸ் சந்தோஷமா இருந்தா சரிதான்:-)))
யோவ், உம்ம பதிவுக்கு எல்லாம் வந்து ரெகுலரா பின்னூட்டம் எல்லாம் போட்டுக்கிட்டுதானே இருக்கேன். அப்புறம் ஏன்யா என்னை மாட்டி விட்டு வேடிக்கை பாக்கறீரு? நம்ம பதிவுக்கு அடிக்கடி வர சேதுக்கா பேரை காணும் சொன்னேன். அந்நேரத்தில் தோணுனது அம்புட்டுதான். அப்புறம்தான் நம்ம வேலையே மாறிப் போச்சே!!
ReplyDelete//அவ ரொம்ப நேரம் நின்னு கிட்டு இருந்தா. பிறகு"என்ன சித்தப்பா வேளை செய்யனும்"ன்னு கேட்டா. அதுக்கு நான் "இங்க வான்னுதான் சொன்னேன், வேளை இருக்குன்னு சொன்னனா?" ன்னு சொன்னேன். சரின்னு போயிட்டா.//
முக்கியமான சொல்லான வேலை என்பது வேளை என ஆகிப் போச்சு பாருங்க.
//அ.அ: சரி. அந்த விஷயத்த விடு. நா வேனுமின்னா பின்நவீனத்துவம் எழுதவா?
அ.சி: முதல்ல பின்நவீனத்துவம்ன்னு ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுது. பின்ன பின்நவீனத்துவம் எழுதலாம். அது போல லக்கியின் பதிவு, வெட்டி பதிவு, கொத்ஸ், பின்நவீனத்துவத்துல//
நீங்க சொன்ன ஸ்பெல்லிங்தான் உங்க தம்பியும் சொல்லறார். என்னவோ போங்க. ஐயாம் தி டோட்டல் கன்பியூஷன்.
கொஞ்சம் எழுத்துப் பிழை எல்லாம் கூட ஒரு முறை படிச்சு சரி பண்ணிப் போடப்பா.
//யோவ், உம்ம பதிவுக்கு எல்லாம் வந்து ரெகுலரா பின்னூட்டம் எல்லாம் போட்டுக்கிட்டுதானே இருக்கேன். அப்புறம் ஏன்யா என்னை மாட்டி விட்டு வேடிக்கை பாக்கறீரு? //
ReplyDeleteகொத்ஸ்! இதுல என் கருத்து எதுவுமேயில்லை! ஒரு நல்ல சண்டைக்கு நான் அடித்தளம் போடவில்லை(இதில் உள்குத்து இல்லை:))
//நீங்க சொன்ன ஸ்பெல்லிங்தான் உங்க தம்பியும் சொல்லறார். என்னவோ போங்க. ஐயாம் தி டோட்டல் கன்பியூஷன்.//
போன்ல அவன் சொல்கிறான். ஆனா டைப்பியது நாதானே! ஒருவேளை அவன் பெரிய ன சின்ன ன அப்டீன்னு சொன்னாகூட நான் font size தான் மாத்தியிருப்பேன். அந்த அளவு ஞானம்:-)
எனக்கு மட்டும்தான் எங்க வீட்டிலே இந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக் வியாதி:-))
உங்க தம்பி கூட நிறைய பேசுவீங்க போலிருக்கு.. பதிவு நீளமாயிடுச்சே?
ReplyDeleteஅண்ணா,
ReplyDeleteபிரச்சனையே இதுதான்...
பாருங்க... நான் காமெடியா போட்ட ரெண்டு பின்னூட்டத்துக்கும் பதில் சொல்லிட்டீங்க... சீரியஸா போட்ட ஒரு பின்னூட்டத்தை டீல்ல விட்டுட்டீங்க.. அதே மாதிரி பொன்ஸக்கா சீரியஸா போட்டதையும் டீல்ல விட்டுட்டீங்க :-)
அப்பறம்
//அதுபோல் பெண்கள் ஒத்துமை என கூவி கூவி கும்மாளமாக இருந்த எந்த பெண்களும் இம்சை அரசி பத்தி வாய் திறக்கவில்லை. இது ஏன்?//
இது என்ன அநியாயம்? ஞாபகம் வந்தா சொல்ல போறாங்க. நீங்க பார்த்து சொல்லி சேர்க்காம போனாங்களா???
எல்லாரும் நம்ம பேர் இருக்கானு தான் பார்ப்பாங்க. அதே மாதிரி நமக்கு நெருக்கமானவங்க பேர் இருக்கானு தான் பார்ப்பாங்க...
உங்க பாசமலர் பேர் இல்லைனா நீங்க தானே சொல்லியிருக்கனும்??? ;)
(இ.அரசி... தப்பா எடுத்துக்க மாட்டீங்கனு நினைக்கிறேன்)
பொன்ஸக்கா,
மதி அக்கா பதிவுல உங்க பின்னூட்டத்தையே கானோம் :-(
கொத்ஸ்.. சேதுக்கா-ன்னா அழுதுருவேன் :-(
ReplyDeleteஎல்லாருக்கும் நம்ம தலைய உருட்டுறதே வேலையாப் போச்சுப்பா. அபி அப்பா நீங்களும் தான்.
சரி, சரி, சீரியஸ் பதிவு போடறது இருக்கட்டும், முதல்லே அண்ணனும், தம்பியும் தமிழை ஒழுங்கா எழுதக் கத்துக்குங்க. நீங்க எழுதற தமிழை விட மோசமா இருக்கு அவர் பேசற தமிழ். எல்லாரும் "வேலை" தான் கொடுப்பாங்க செய்ய. உங்க தம்பி உங்க அபி பாப்பாவுக்கு "வேளை" இல்லை கொடுக்கிறார்.என்னோட தலையிலே நானே குத்திக் குத்திப் புண்ணாயிடுச்சுங்க!!!!!!! :))))))))))
ReplyDelete//இம்சை அரசி என்னும் supposed-to-be பெண் பதிவர், மற்ற பெண் பதிவர்களுடன் பின்னூட்டங்களிலோ, பதிவுகளிலோ நட்பாக இருந்திருந்தால் சுலபமாக எல்லாருக்கும் நினைவிருந்திருக்கும். //
ReplyDeleteபொன்ஸக்கா...
மறப்பது சாதரண மனித இயல்புதான். அதுக்காகத்தான் பின்ன்னூட்டத்துல மக்கள சேத்துக்கச் சொல்லி சொன்னாங்க உஷாக்கா.
அவுங்க உண்டு அவுங்க ப்ளாக் உண்டுன்னு இருந்தா கண்டுக்க மாட்டோம்னு சொல்றத மட்டும் நான் ஒத்துக்க மாட்டேன்.
ஆனாலும் உங்களோட Genuineness பரிசோதிக்கும் விதத்த நான் ரெண்டு முறை பாத்திருக்கேன்.
http://imsaiarasi.blogspot.com/2006/12/blog-post_26.html#comment-7023151306064187951
http://koluvithaluvi.blogspot.com/2007/03/blog-post_06.html#c1050144937956228830
ஆண் பதிவா இருந்தா அப்படியே ஃப்ரீயா விட்டுடலாம்னு நெனச்சுத்தான் அப்படி கேட்டீங்களோன்னு நெனச்சேன்... இப்பத்தான் புரியுது நீங்க Genuineness செக் பண்றதுக்காக அப்படி கேட்டீங்கன்னு.. :))))
//அண்ணா,
ReplyDeleteசரியான நேரத்தில் விஷயத்தை புரிந்து கொண்டீர்கள்...//
//பாருங்க... நான் காமெடியா போட்ட ரெண்டு பின்னூட்டத்துக்கும் பதில் சொல்லிட்டீங்க... சீரியஸா போட்ட ஒரு பின்னூட்டத்தை டீல்ல விட்டுட்டீங்க.. அதே மாதிரி பொன்ஸக்கா சீரியஸா போட்டதையும் டீல்ல விட்டுட்டீங்க //
வெட்டிதம்பி! கொஞ்சம் விரிவா சொல்லாம்ன்னு இருந்தேன். நேத்து துபாய் டைம் 5.30 மாலை உ.கோ இருந்ததால் ஓடிவிட்டேன்.
அதுதவிர பொன்ஸ்க்கு பதில் நான் சொல்வதைவிட மற்றவர்களோ அல்லது இம்சைஅரசியோ வந்து சொன்னால் அது நல்லாயிருக்கும் என நினைத்தேன். இப்போ பாருங்க நம்ம ஜி வந்து அருமையான பதில் சொல்லியிருக்கார். அது தவிர மதி பதிவில் நீங்க சொன்ன மாதிரி ஏதும் கமெண்ட்ஸ் இல்லை, அதனாலும் எனக்கு குழப்பம்.
வெட்டி, ஜி, அபி அப்பா,
ReplyDelete//மதி பதிவுல உங்க பின்னூட்டத்தையே கானோம் //
அது ஒரு கொடுமைங்க.. அவங்களது வோர்ட் பிரஸ் பதிவா, ரெண்டு மூணு பின்னூட்டம் ஒட்டுக்க போட்டா, நம்மளை ஸ்பாம்னு ப்ளாக் பண்ணிடுது.. நம்ம வேற ஆர்வக் கோளாறுல ஒவ்வொரு பெயரா போட்டு நிறைய பின்னூட்டமாகிடுச்சு அன்னிக்கு! செந்தில் என் பின்னூட்டத்தை எடுத்து ஒட்டிருக்காரு பாருங்க.. அப்படித் தான் உங்களுக்குப் புரியலாம்..
//ஆண் பதிவா இருந்தா அப்படியே ஃப்ரீயா விட்டுடலாம்னு நெனச்சுத்தான் அப்படி கேட்டீங்களோன்னு நெனச்சேன்.//
புரியலையே ஜி? அப்படி ஒண்ணும் ஆண் பதிவர்களுக்குப் பின்னூட்டம் போட மாட்டேன்னு எங்கையும் சொன்ன நினைவில்லையே?!
இத்தினி கத பேசுறவங்க, நுனிப்புல்லுல வந்து ஒத்த வார்த்த சொல்லியிருக்கலாம் இல்லே. நல்லவேளை உங்க பதிவு கண்ணுல பட்டுச்சே! ஏதோ எம் மனசுக்கு இம்சை அரசி, ஆண் ஆனால் பெண் பெயரில் எழுதுகிறார் என்று நினைப்பு. மேலும் அவங்க எழுதியதை அதிகம் படித்ததில்லை.
ReplyDeleteஅபி அப்பா, உங்க தம்பிக்கு கிட்ட ஒரு தாங்ஸ் நா சொன்னதா சொல்லிடுங்க. எம் பதிவு எல்லாம்
படிக்கிறாரே அதுக்கு.
////ஆண் பதிவா இருந்தா அப்படியே ஃப்ரீயா விட்டுடலாம்னு நெனச்சுத்தான் அப்படி கேட்டீங்களோன்னு நெனச்சேன்.//
ReplyDeleteபுரியலையே ஜி? அப்படி ஒண்ணும் ஆண் பதிவர்களுக்குப் பின்னூட்டம் போட மாட்டேன்னு எங்கையும் சொன்ன நினைவில்லையே?! //
பொன்ஸ்!நீங்க ஜி சொன்னதை சரியா புரிஞ்சுகலை. பின்னூட்டம் போடுவது பற்றி அவர் சொல்லவில்லை. ஒரு வேளை ஆண் பதிவரா இருந்தா அச்சச்சோ என்ன பண்றதுன்னு நீங்க லிஸ்டுல இருந்து விட்டத பத்திதான் ஜி சொல்றார்.
ஜி என்ன சொல்றார்ன்னா ஆண்களே உள்ளே வரக்கூடாத அற்புத தீவுக்கு டூர் போகவா லிஸ்ட் போடுறீங்க - இல்லியே, அது தவிர அவங்க தானுண்டு தன் பிளாக் உண்டுன்னு இல்லியே, வ.வ.ச வுல கூட உண்டே அப்டீன்னுதான் ஜி சொல்கிறார். அப்படிதானே ஜி!
//இத்தினி கத பேசுறவங்க, நுனிப்புல்லுல வந்து ஒத்த வார்த்த சொல்லியிருக்கலாம் இல்லே. நல்லவேளை உங்க பதிவு கண்ணுல பட்டுச்சே! ஏதோ எம் மனசுக்கு இம்சை அரசி, ஆண் ஆனால் பெண் பெயரில் எழுதுகிறார் என்று நினைப்பு. //
ReplyDeleteவாங்க உஷா மேடம்! செய்திருக்கலாம். ஒரு வேளை தான் அவமானப்பட்டதாக கூட நினைத்திருக்கலாம். இப்டி நினச்சு பாருங்க அவங்க ஒரு ஆணாக இருந்து எல்லாரையும் ஏமாத்தவோ அல்லது சும்மா ஜாலிக்காகவோ பெண் பெயரில் எழுதுவதாக வைத்துகொண்டால் பெயர் விட்டுபோனது தெரிந்ததும் முதல் ஆளாக நுனிப்புல்லுக்கு வந்து" ஐயோ மேடம் என்னய மறந்துட்டீங்களே"ன்னு சொல்லி லிஸ்ட்டிலே வந்திருப்பாங்க இல்லியா?
என் தம்பி மட்டுமல்ல இன்னும் என் நண்பர்கள் நிறைய பேர் இப்போ படிக்கிறாங்க!
//இத்தினி கத பேசுறவங்க, நுனிப்புல்லுல வந்து ஒத்த வார்த்த சொல்லியிருக்கலாம் இல்லே. நல்லவேளை உங்க பதிவு கண்ணுல பட்டுச்சே! ஏதோ எம் மனசுக்கு இம்சை அரசி, ஆண் ஆனால் பெண் பெயரில் எழுதுகிறார் என்று நினைப்பு. //
ReplyDeleteவாங்க உஷா மேடம்! செய்திருக்கலாம். ஒரு வேளை தான் அவமானப்பட்டதாக கூட நினைத்திருக்கலாம்//
அபி அப்பா, நான் சொன்னது இம்சையரசியை அல்ல, உங்களை இல்லே திட்டினேன் :-)
நாந்தான் சொன்னேனே நான் நிஜமாகவே மறந்து விட்டேன், கொத்ஸ் ஞாபகமா மறந்துவிட்டார்:-)
ReplyDeleteஇன்னா நாப்பதுக்கு மேலேயும் இங்கேயே நிக்குது ?
ReplyDelete//கொத்ஸும், நாகை சிவாவும் நடத்திய களேபரத்தில் நீ சும்மா பாத்துகிட்டு மட்டும் இருந்தாய்.//
ReplyDeleteஏன் இந்த கொலைவெறி, அங்க நடந்தது களேபரம் முடிவே பண்ணிட்டிங்களா....
நம்ம வாய புடுங்குற மாதிரியே கமெண்ட் எல்லாம் வந்து இருக்கு. இங்க வாய குடுத்தா அப்பால ஆணி புடுங்க முடியாது. அந்த ஆணி எல்லாம் கடப்பாரை மாறி என் நெஞ்சுல குத்தும். அதனால ஐ'ம் எஸ்கேப்.....
ReplyDeleteரெண்டு மூனு நாளா ப்ளாக் பக்கமே வரலை.. அதுக்குள்ள கூடி கும்ம்பியடிச்சி 43 ஆகியிருச்சே!
ReplyDeleteதலைப்பை பார்த்ததும், சிட்டி பாபு காமேடி டைம் கதைதான் ரிபீட்ட் ஆகுதுன்னு வந்து பார்த்தேன்..
ReplyDeleteஅபி சித்தப்பா எண்ட்ரீ ஆகியிருக்கார் .. ஹீஹீஹீ..
நீங்க ஃபுல்லா காமேடியா எழுதினாலும் உங்களுக்கு சப்போர்ட் பண்ண எங்களை போல் நிறைய ரசிகர்கள் இருக்கோம். உங்க காமேடி பதிவுகளை நான் பி.டி.எஃ வடிவங்களில் மாற்றி சேமித்து வைத்திருக்கிறேன். ;-)
ReplyDelete//"பெயர் வைக்கலாம் வாங்க"ன்னு ஒரு மொக்கை பதிவு படிச்சேன். அது ஒரு நல்ல விஷயம் சொல்லக்கூடிய பதிவு. திடீர்ன்னு அதை மொக்கையாக்கிட்டு அடுத்த காமடிக்கு போயிட்ட. //
ReplyDeleteஆமாங்க அபி அப்பா.. நீங்க இதை பாதியிலேயே விட்டுட்டு போயிட்டீங்க.. :-(
//அதுக்கு அவ "போனை போடுங்கன்னுதான சொன்னேன். பிடிக்கிறேன்னு சொன்னனா?"ன்னு சொல்றா.//
ReplyDeleteஅதானே! எங்க அபி அப்பா தச்சுன்னு பார்த்தேண். கடைசியா நல்லா சிரிக்க வைச்சுட்டீங்க.. :-)
//கொத்ஸ் ஞாபகமா மறந்துவிட்டார்:-) //
ReplyDeleteஅவரு இந்த விசயத்தில் ரொம்பவே தெளிவு. ஞாபகமாக மறுந்து விடுவார். ;-)
//நீங்க ஃபுல்லா காமேடியா எழுதினாலும் உங்களுக்கு சப்போர்ட் பண்ண எங்களை போல் நிறைய ரசிகர்கள் இருக்கோம். உங்க காமேடி பதிவுகளை நான் பி.டி.எஃ வடிவங்களில் மாற்றி சேமித்து வைத்திருக்கிறேன். ;-) //
ReplyDeleteதொல்ஸ், உங்களுக்கும் மை பிரண்டுக்கும் ஏதும் பிரச்சனையா என்ன?
//நீங்க ஃபுல்லா காமேடியா எழுதினாலும் உங்களுக்கு சப்போர்ட் பண்ண எங்களை போல் நிறைய ரசிகர்கள் இருக்கோம். உங்க காமேடி பதிவுகளை நான் பி.டி.எஃ வடிவங்களில் மாற்றி சேமித்து வைத்திருக்கிறேன். ;-) //
ReplyDeleteகா"மேடி", கா"மேடி" உங்களை கலாய்ச்சி இருக்காங்களே...Mad தான் maddy னு ஸ்டைலா கூப்பிடுறாங்க இப்ப... அதான் கேட்டேன்.
என்னமோ போங்க, எனக்கு ஏன் வம்பு. அரை சதம் ஆச்சு நான் ஜுட்...
ஒரு 3 நாள் லீவுல போயிட்டு வரதுக்குள்ள என்னை வச்சு இவ்ளோ பிரச்சினையா???
ReplyDeleteஎனக்காக இவ்ளோ care எடுத்து சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ் அண்ணா...
// கோபிநாத் said...
உங்க அண்ணன், தங்கச்சி பாசத்துக்கு பதிவை எல்லாம் போட்டு கலக்குறிங்க...இம்சை அரசி நீங்க கொடுத்து வச்ச தங்கச்சி தான்.
//
இவர் சொல்ற மாதிரி உண்மையிலேயே நான் குடுத்து வச்ச தங்கச்சிதான் :)))
// பொன்ஸ் said...
ReplyDeleteஇம்சை அரசி என்னும் supposed-to-be பெண் பதிவர், மற்ற பெண் பதிவர்களுடன் பின்னூட்டங்களிலோ, பதிவுகளிலோ நட்பாக இருந்திருந்தால் சுலபமாக எல்லாருக்கும் நினைவிருந்திருக்கும்.
//
பொன்ஸ் அக்கா நீங்க இப்படி சொன்னது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் actually 2006 passout. வேலைல join பண்ணியே 7 மாதம்தான் ஆகுது. எனக்கு net timing 5 to 7 தான். அதும் இப்ப project pressure அதிகமானதால என் blog-ஐக் கூட என்னால பாக்க முடியறதில்ல. அதனாலதான் என்னால அதிகம் blogs பாக்க முடியறது இல்ல. நான் blog ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே வெட்டி, வ.வா.ச n உங்க blogsதான் மொதல்ல படிச்சேன். உங்களோட "பதிவுலகில் பெண்கள்" (http://poonspakkangkal.blogspot.com/2006/11/blog-post_116472055242688256.html) பதிவுக்கு ஜெயந்தின்ற பேர்ல வந்த comment நான் போட்டதுதான். பதிவுலகத்துல நான் மொதல்ல போட்ட comment இதுதான். உங்களுக்கு இதெல்லாம் தெரியாது. இருந்தாலும் உங்க genuineness சந்தேகத்துக்கு விளக்கம் கொடுக்கணும்னுதான் நான் இதையெல்லாம் சொல்றேன்.
என்னோட பேர் ஜெயந்தி ஜெயராஜ். இதுல ஜெயராஜ்ன்றது எங்க அப்பா.
//Anonymous said...
ReplyDeleteஒரு சின்ன மேட்டர்
இம்சை அரசியோட இரண்டு நாவல்கள் கண்மணியில் வந்திருக்கிறது.
//
யார் போட்டதுனு எனக்கு தெரியாது. கண்டிப்பா எனக்கு தெரிஞ்சவங்களாதான் இருக்கணும். இது உண்மைதான். நான் ஒரு நாவலாசிரியர். நான் படிச்சிட்டு இருந்தப்ப என்னோட 2 நாவல்கள் கண்மணில வந்திருக்கு. அதுக்கப்புறம் எழுத time இல்லாம போயிடுச்சு. நான் ஒரு jollyக்காகதான் blog எழுத ஆரம்பிச்சேன். இந்த விஷயம் தெரிஞ்சா எல்லாரோட expectationம் வேற மாதிரி ஆயிடும்னுதான் நான் சொல்லவே இல்ல.
//அவர் அதை துவக்கத்தில் போட ஆரம்பித்தார். பின்னர் அதை அப்படியே விட்டுவிட்டார். ஏனோ தெரியவில்லை.
//
அதை type பண்ண எனக்கு time கிடைக்கல anony. அதனாலதான் நிறுத்தி வச்சிருக்கேன். அதுவும் இல்லாம ஏற்கனவே அதை படிச்ச சிலர் காப்பியடிக்காதனு வந்து ரொம்ப திட்டிட்டுப் போனாங்க :))))
// ramachandranusha said...
ஏதோ எம் மனசுக்கு இம்சை அரசி, ஆண் ஆனால் பெண் பெயரில் எழுதுகிறார் என்று நினைப்பு.
//
இப்போ clear ஆயிடுச்சா உஷாக்கா???
மக்களே! இப்போ ஓக்கேயா! இப்போ என்ன சொல்றீங்க, எனக்கு கொஞ்ஜம் வேலை இருக்கு,(ஏன்னா இன்னிக்கு அப்ரைசல் fill பண்ண கூப்பிட்டார் எங்க P.M.)
ReplyDelete//நான் ஒரு நாவலாசிரியர். நான் படிச்சிட்டு இருந்தப்ப என்னோட 2 நாவல்கள் கண்மணில வந்திருக்கு.//
ReplyDeleteஇம்சை ஜெயந்தி, கலக்குறீங்க.. முதல்ல பிடியுங்க வாழ்த்துக்களை :)
//பொன்ஸ் அக்கா நீங்க இப்படி சொன்னது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. //
ஜெயந்தி, உங்களோட இத்தனை நீளமான விளக்கங்கள் பார்த்து எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு! , 'இம்சை அரசி பெயர், ஒரு பதிவில் விட்டுப் போனதால், பெண்களிடையே ஒற்றுமை இல்லை'ன்னு குறை சொல்றவங்க, கூடி இருந்து வேடிக்கை பார்க்கையில், நீங்க என்னவோ, உங்க பெயரை (மற்ற பாசமலர்கள் மாதிரி இல்லாம) நினைவா சொல்லியவளுக்கு, (என்னுடைய புரிதலில் ஏதோ பிழை மாதிரி), பெரிய அளவில் விளக்கம் கொடுக்கிறது ரொம்ப வருத்தமா இருக்கு! என்னமோ போங்க.. :(
அதான் ஜி.ரா ஆபீஸ்னு எனக்கு முன்னமே தெரியுமே! நான் தெளிவாத் தான் எழுதி இருக்கிறதா நினைக்கிறேன். மத்தவங்களுக்கு வேணும்னா உங்க விளக்கம் பயனளிக்கலாம்!
//ஒரு வேளை தான் அவமானப்பட்டதாக கூட நினைத்திருக்கலாம்.//
இம்சை அரசி பின்னூட்டத்தை வைத்து, அவங்க அப்படி எதுவும் நினைச்சதாகத் தெரியலை.. இருந்தாலும், இதுக்கு பதிலை ஜி அருமையா சொல்லி இருக்காரு:
//மறப்பது சாதரண மனித இயல்புதான். அதுக்காகத்தான் பின்ன்னூட்டத்துல மக்கள சேத்துக்கச் சொல்லி சொன்னாங்க உஷாக்கா.//
ஜி, அபி அப்பா,
//ஜி என்ன சொல்றார்ன்னா ஆண்களே உள்ளே வரக்கூடாத அற்புத தீவுக்கு டூர் போகவா லிஸ்ட் போடுறீங்க//
அப்படி வரீங்களா? சரிதான். ஒரு பொண்ணு பேரு விட்டுப் போனதுக்கே அங்க வந்து சொல்லாம, ஒத்துமையப் பத்திக் கதை பேசப் பயன்படுத்திக்கிறீங்க. இதில ஒரு ஆண் பதிவரை நாங்க மட்டும் தப்பித் தவறி உள்ள சேர்த்திட்டம், அப்புறம் அதுக்கு வேற ஏதாவது வந்திருக்கும். அதான் கவனமா இருக்கிறது!
[எப்படியோ, விவாதங்களை அவாய்ட் செய்யும் அபி அப்பா பதிவிலும் ஒரு காரசார விவாதம் செய்தாச்சு ;) ]
//புரியலையே ஜி? அப்படி ஒண்ணும் ஆண் பதிவர்களுக்குப் பின்னூட்டம் போட மாட்டேன்னு எங்கையும் சொன்ன நினைவில்லையே?! //
ReplyDeleteநான் அப்படி சொல்ல வரல பொன்ஸ்... நீங்க இது மாதிரி 'ஆணா பெண்ணா?'னு அடிக்கடி கன்ஃபார்ம் பண்றதால எனக்கு வந்த சந்தேகம்.
நானே சிலப் பதிவுகள கண்டிப்பா படிக்கணும், சிலத நேரம் கெடச்சா படிக்கணும், சிலத படிக்கவே வேண்டாம்னு வகைப்படுத்தி வச்சிருப்பேன். அதுமாதிரி நீங்களும் பெண்கள் பதிவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்னு நெனச்சுத்தான் இப்படியெல்லாம் கன்ஃபார்ம் பண்றீங்களோன்னு இதுவரை நெனச்சேன்.
//ஜி என்ன சொல்றார்ன்னா ஆண்களே உள்ளே வரக்கூடாத அற்புத தீவுக்கு டூர் போகவா லிஸ்ட் போடுறீங்க - இல்லியே, அது தவிர அவங்க தானுண்டு தன் பிளாக் உண்டுன்னு இல்லியே, வ.வ.ச வுல கூட உண்டே அப்டீன்னுதான் ஜி சொல்கிறார். அப்படிதானே ஜி! //
ReplyDeleteபொன்ஸ்...
நீங்க ஏற்கனவே இம்சை அரசியிடம் கேட்டுயிருந்தீங்க, அவுங்க 'அரசியா அரசனா?'னு. அதுக்கும் அவுங்க விளக்கம் அளிச்சாங்க. அது போக அவுங்க எழுதியிருக்குற பதிவுகள பாத்தாளே உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் நிச்சயமா அவுங்க பெண் பதிவர்தான்னு.
எந்த பிரச்சனைக்கும் போக வேண்டாம்னு இருக்கும் பல பதிவர்களை மாதிரி அவுங்களும் ஒரு நாவலாசிரியரா இருந்தும்கூட சண்டை மூட்டாத பதிவாத்தான் போட்டுக்கிட்டு இருக்காங்க. அதுனால, அவுங்க பெண் பதிவரா இருக்காதுன்னு நீங்க assume பண்றதத்தான் நான் தப்புன்னு சொல்றேன்.
பெண் பதிவரென்றால் எப்போதுமே, பெண்களை மையமாக வைத்திருக்கும் பதிவைத்தான் போடணுமா என்ன??
போடுறதுக்கு மறந்திடிச்சுன்னு சொன்னீங்கன்னா ஒத்துக்கலாம். ஆனா நீங்க சொன்ன விளக்கம் அதற்கு சரியில்லைன்னுதான் சொல்றேன்.
கீதா மேடம் பதிவில், மை பிரண்ட் பதிவில், நாகை சிவா பதிவில், என்னுடிய பதிவில் என்று பல முறை உங்களின் பின்னூட்டங்கள் வழியாக உங்களை கண்டிருந்தாலும் இன்று தான், முதன் முதலாய் இங்கே, அபி அப்பா..
ReplyDeleteஇது சும்மா உள்ளேன் ஐயா தான்.. அப்புறமா படிச்சிட்டு வர்றேன் அபி அப்பா
ReplyDelete//Anonymous said...
ReplyDeleteஒரு சின்ன மேட்டர்
இம்சை அரசியோட இரண்டு நாவல்கள் கண்மணியில் வந்திருக்கிறது. அவர் அதை துவக்கத்தில் போட ஆரம்பித்தார். பின்னர் அதை அப்படியே விட்டுவிட்டார். ஏனோ தெரியவில்லை. //
அனானி! இதுக்கு இம்சை அரசியே பதில் சொல்லியாச்சு பாருங்க
//சீரியஸாக எழுத பலர் உண்டு காமெடியாகவே தொடர்ந்து எழுதவும்...
ReplyDeleteஅன்புடன்...
சரவணன் //
வாங்க வாங்க சரவணன்! முதல் வருகை, மிக்க நன்றி! கண்டிப்பாக எழுதுகிறேன். அடிக்கடி வாங்க!
//விதவிதமா விஷயங்களை எப்படி எழுதினாலும்
ReplyDeleteஅடுத்தவங்கள திட்டாமல்
நகைச்சுவை கலந்து நீங்கள் எழுதினால்
படிக்க பின்னூட்டமிட நிறைய
பேர் இருக்கோம்.//
வாங்க முத்துலெஷ்மி! மிக்க நன்றி! யாரையும் காயப்படுத்தி எனக்கு பழக்கமேயில்லை. அதனால் தான் காமடி மாத்திரம் எழுதுகிறேன்.
//இதில் ஒத்துமை குறைவு எங்கிருந்து வருது என்று தெரியலை.//
ReplyDeleteஇது நான் சொல்லவில்லை. என் தம்பிதான். நான் எந்த வம்புக்கும் போகாத அப்பாவி:)
/மற்றபடி, உங்க பதிவுகள் பற்றி, அபி சித்தப்பா சொல்வது ரொம்ப சரியாக இருக்கு. என்னைக் கேட்டால் அவரே கூட தனி ப்ளாக் தொடங்கி எழுதலாம் :))//
அவனுக்கு தூங்க நேரம் கிடப்பதே 5 மணி நேரம் தான். அதிலும் தமிழ்மணம் படிப்பதில் 1 மணி போயுடும்.அதனால் தான்!
//பின்நவீனத்துவத்துல பின்னி பெடலெடுக்கற மிதக்கும் வெளி, தம்பி, முத்துகுமரன்,//
ReplyDelete%*%Q#*#@!(#&^#*#
%^$@#&%#@&#!@(*#
//ஐயோ சாமி... தாங்க முடியலைப்பா. என்னை யாராவது கைத்தாங்களா கூப்பிட்டு போங்க... //
ReplyDeleteஉனக்கே அதிர்ச்சி தாங்கமுடியல, சம்பந்தபட்ட எனக்கு எப்படி இருக்கும்னு நினைச்சி பாருப்பா வெட்டி.
\\இது உண்மைதான். நான் ஒரு நாவலாசிரியர். நான் படிச்சிட்டு இருந்தப்ப என்னோட 2 நாவல்கள் கண்மணில வந்திருக்கு. \\
ReplyDeleteஅட...நாவலாசிரியரா....வாழ்த்துக்கள் ;-))
\\
ReplyDeleteமு.கார்த்திகேயன் said...
இது சும்மா உள்ளேன் ஐயா தான்.. அப்புறமா படிச்சிட்டு வர்றேன் அபி அப்பா\\
தலைவா இங்கையுத் ஆரம்பிச்சிட்டிங்களா ;-))))
ஜி,
ReplyDeleteஇந்தப் பதிவில் இனிமேல் இது குறித்து எழுத வேண்டாம்னு நினைச்சேன். ஆனா, உங்க பின்னூட்டம் சுண்டி இழுக்குது :-D
// அவுங்க எழுதியிருக்குற பதிவுகள பாத்தாளே உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் நிச்சயமா அவுங்க பெண் பதிவர்தான்னு. ....
அதுனால, அவுங்க பெண் பதிவரா இருக்காதுன்னு நீங்க assume பண்றதத்தான் நான் தப்புன்னு சொல்றேன். //
மன்னிக்கணும், இம்சை அரசி பெண்ணா இல்லையா என்ற சந்தேகம் இருக்கிறதா நான் எங்கயும் சொல்லலை. அவங்க இடுகையில் ஜாலியா கேள்வி கேட்டு, அவங்க பதில் சொல்லி, அப்பால அவங்க தைரியமா, "நாங்க நாலு பேரு, பயமே கிடையாது, நாங்க சமைச்சதை நாங்களே சாப்பிடுவோம்"னு எழுதியபோதே தெளிவாத்தான் பின்னூட்டம் போட்டுகிட்டிருந்தேன். நீங்களும், அபி அப்பாவும், அபி சித்தப்பாவும் சாதிப்பது போல், நாங்க அவங்களை மறக்கவும் இல்லை.
உஷா பெண்பதிவர்களுடனான தனிப்பட்ட அனுபவங்களுடன் கூடிய பதிவை எழுதி இருந்தாங்க. அங்க போய் இ.அரசி பெயரை எழுதி, அவங்க, "இவங்களை நான் படிச்சதில்லை; ஆண் என்று நினைத்திருந்தேன்" என்று சொன்னாங்கன்னா அது ஒரு சங்கடமான நிலையா இருக்கும்- இ.அரசிக்கும், உஷாவுக்கும், எனக்கும். இதெல்லாம் இல்லாமல், பொதுவாக பட்டியலிடப்பட்ட பதிவில் போட்டிருந்தோம். ஒரு முறை அதைக் கொஞ்சம் பார்த்துவிட்டு நீங்க மேற்கொண்டு பேசினால் நல்லா இருக்கும்.
//எந்த பிரச்சனைக்கும் போக வேண்டாம்னு இருக்கும்...//
நானும் அதைச் சொல்லி இருப்பதாகத் தான் நினைக்கிறேன்.
"அவங்க தன்னுடைய ப்ளாக் உண்டு தான் உண்டுன்னு தனி ராஜ்ஜியமா அமைச்சிகிட்டு இருக்கிறதையே விரும்பும்போது, தொல்லை செய்ய நாங்கள் விரும்புவதில்லை என்பதையும் நீங்க புரிஞ்சிக்கிடணும்."
இப்ப கூட என்னுடைய முதல் பின்னூட்டத்திலிருந்தே, எனக்கு 'இ.அரசி பெண் என்று தெரியும்; நம்புறேன்' என்ற அளவில் எழுதி இருப்பதாகத் தான் நினைக்கிறேன். அவங்களை விட, அவங்க பெயரைப் பயன்படுத்தி "பெண்களுக்கிடையில் ஒற்றுமை இல்லை" என்று சந்தில் சிந்து பாட விரும்புகிறவர்களுக்கான பின்னூட்டம் அது. அதை அவங்களும் புரிந்து கொள்ளவில்லை; புரிந்து கொள்ள அவகாசமும் இல்லை . :(
//பெண் பதிவரென்றால் எப்போதுமே, பெண்களை மையமாக வைத்திருக்கும் பதிவைத்தான் போடணுமா என்ன??//
அப்படி எங்காவது சொல்லி இருக்கோமா? என்னுடைய பழைய பதிவுகளைப் பார்த்திருக்கீங்களா? பார்த்துவிட்டுப் பேசினால் நல்லா இருக்கும். இன்னிக்கு கூட முதல் முதல் எனக்குப் பின்னூட்டம் இடுபவர்கள் என்னை ஆண் பதிவர் என்று நினைத்து இடுவதுண்டு. அது பற்றி எந்தப் பிரச்சனையும் இல்லை.
எழுதுவதை வைத்துப் பெண்ணா ஆணா என்று பிரிக்க உண்மையில் அவசியமும் இல்லை. மகளிர் தினம், மகளிர் சக்தி என்று பிரத்யேகமான கொண்டாட்டங்களின் போது மட்டும் தான் இதைப் பார்க்கிறோம். சில விஷமிகள்(டிஸ்கி: இங்க பேசிய, பின்னூட்டமிட்ட யாரையும் இது குறிக்கலை!), சில சமயம் பெண் என்பதை வைத்து தொல்லை செய்வதுண்டு. அது பற்றி என்னுடைய நட்சத்திர வாரத்தில் "பதிவுலகில் பெண்கள்" இடுகையில் தேவையான அளவு எழுதியாச்சு. அப்படியான பிரச்சனைகள் வரும் பொழுதும் பெண் பதிவர் என்பது உறுதியாகத் தெரிவது புரிதலுக்கும் உதவிக்கும் அவசியமாக இருக்கும். அவ்வளவு தான்.
// போடுறதுக்கு மறந்திடிச்சுன்னு சொன்னீங்கன்னா ஒத்துக்கலாம். ஆனா நீங்க சொன்ன விளக்கம் அதற்கு சரியில்லைன்னுதான் சொல்றேன். //
மறந்து போனவங்க இதைச் சொல்லிட்டாங்க, மறக்காதவங்களுக்கிடையில் ஒற்றுமை இல்லைன்னு நீங்க எல்லாம் நிரூபிக்கக் கிளம்புவதைத் தான் தவறென்று நான் சொல்லுறேன்.
// இம்சை ஜெயந்தி, கலக்குறீங்க.. முதல்ல பிடியுங்க வாழ்த்துக்களை :)
ReplyDelete//
thank u பொன்ஸ் அக்கா
// ஜெயந்தி, உங்களோட இத்தனை நீளமான விளக்கங்கள் பார்த்து எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு!
இம்சை அரசி பெயர், ஒரு பதிவில் விட்டுப் போனதால், பெண்களிடையே ஒற்றுமை இல்லை'ன்னு குறை சொல்றவங்க, கூடி இருந்து வேடிக்கை பார்க்கையில், நீங்க என்னவோ, உங்க பெயரை (மற்ற பாசமலர்கள் மாதிரி இல்லாம) நினைவா சொல்லியவளுக்கு, (என்னுடைய புரிதலில் ஏதோ பிழை மாதிரி), பெரிய அளவில் விளக்கம் கொடுக்கிறது ரொம்ப வருத்தமா இருக்கு! என்னமோ போங்க.. :(
//
நான் அங்க பாத்தேன். நீங்க சொல்லிதான் என் பேரை சேத்துருக்காங்க. இது என் மேல சந்தேகப்பட்டவங்களுக்கான விளக்கம்தான். எல்லா சண்டையும் பாத்து எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. அதனாலதான் :)
//ஒரு வேளை தான் அவமானப்பட்டதாக கூட நினைத்திருக்கலாம்.//
இம்சை அரசி பின்னூட்டத்தை வைத்து, அவங்க அப்படி எதுவும் நினைச்சதாகத் தெரியலை..
//
அப்படி எதுவும் நினைக்கலை. எல்லாரும் ஞாபகம் வச்சுக்கற அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய ஆள் இல்லயே. இதுல அவமானப்பட்டதா நினைக்க என்ன இருக்கு...
பொன்ஸ்! நான் இன்று காலையில் "உலககோப்பை ஓர் அலசல் - இந்தியா vs பர்மூடா" ன்னு ஒரு பதிவு போட்டேன். தமிழ்மணத்தில பதிவுக்கு பக்கத்துல என் பெயர் தெறியலை. ஏன்?
ReplyDeleteபுரியுது! புரியுது! உனக்கு உன் விஷயம்தான் முக்கியமா போச்சு, என் பின்னூட்டத்துக்கு பதில் எங்கே?ன்னு கேக்க வர்ரீங்க!
வெட்டிதம்பி சொன்னமாதிரி என் பாசமலர் ஜெயந்திதான் பதில் சொல்லிட்டாங்களே:-)) அதனால நான் சொல்லலை. :-)
பொன்ஸ்...
ReplyDeleteநான் கூட இதுக்கு மேல இதுல எழுத வேண்டாம்னுதான் இருந்தேன். இருந்தாலும் நான் எண்ணிய விளக்கங்கள நீங்க சரியாத்தான் புரிஞ்சிக்கிட்டீங்களான்னு தெரியல. அதுனால ஒரே ஒரு பின்னூட்டம் மட்டும் போட்டுக்கிறேனே... :)))
பதிவுலக பெண்களின் ஒற்றுமையைப் பற்றி நான் எதுவுமே பேசவே இல்ல. நிஜவாழ்க்கையில் நான் பார்த்த வகையில் பல பெண்கள் ஒற்றுமையில்லாமல் இருந்திருக்கிறார்கள். எல்லாருமே அப்படித்தான்னு சொல்ல வரல. ஆனால் பதிவுலக பெண்களின் ஒற்றுமையைப் பார்த்து பிரமிப்படைந்த பல நபர்களுள் நானும் ஒருவன்.
நான் எதற்காக அப்படி விளக்கம் கொடுத்தேன்னு இங்கே பாருங்க.
//இம்சை அரசி என்னும் supposed-to-be பெண் பதிவர்//
இதனால் நான் புரிந்து எழுதியது. தப்பா கூட இருக்கலாம்.
//நீங்க ஏற்கனவே இம்சை அரசியிடம் கேட்டுயிருந்தீங்க, அவுங்க 'அரசியா அரசனா?'னு. அதுக்கும் அவுங்க விளக்கம் அளிச்சாங்க. அது போக அவுங்க எழுதியிருக்குற பதிவுகள பாத்தாளே உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் நிச்சயமா அவுங்க பெண் பதிவர்தான்னு. //
//அவங்க தன்னுடைய ப்ளாக் உண்டு தான் உண்டுன்னு தனி ராஜ்ஜியமா அமைச்சிகிட்டு இருக்கிறதையே விரும்பும்போது, தொல்லை செய்ய நாங்கள் விரும்புவதில்லை என்பதையும் நீங்க புரிஞ்சிக்கிடணும்.//
இதுக்கு
//எந்த பிரச்சனைக்கும் போக வேண்டாம்னு இருக்கும் பல பதிவர்களை மாதிரி அவுங்களும் ஒரு நாவலாசிரியரா இருந்தும்கூட சண்டை மூட்டாத பதிவாத்தான் போட்டுக்கிட்டு இருக்காங்க. அதுனால, அவுங்க பெண் பதிவரா இருக்காதுன்னு நீங்க assume பண்றதத்தான் நான் தப்புன்னு சொல்றேன்.//
எனது புரிதல் தப்பா, இல்ல உங்கள் விளக்கம் தப்பான்னு எனக்கு தெரியல. :)))
மு.கா
ReplyDeleteஇன்னிக்கு தான் இந்தப் பக்கம் வரீங்களா? அபி அப்பாவோட பழைய பதிவுகள்லாம் படிங்க (இப்ப தான் எழுத ஆரம்பிச்சிருக்கார், அதனால கொஞ்சம் தான் இருக்கும் :-)) வயித்து வலி கியாரண்டி :-)
//தமிழ்மணத்தில பதிவுக்கு பக்கத்துல என் பெயர் தெறியலை. ஏன்?//
ReplyDeleteசில சமயம் இப்படி ஆகிடுது அபி அப்பா, இன்னொரு பதிவு போடும்போது சரியாகிடலாம். இல்லையின்னா, தமிழ்மணம் அட்மினுக்கு ஒரு வரி எழுதிப் போடுங்க.. :)
யப்பப்பா... அபி அப்பா...
ReplyDeleteஇதான் முதல் தடவை உங்க பதிவுக்கு நான் வர்ரது...
நக்கலா... நகைச்சுவையா எழுதுறவங்கள... அவ்வளவு சீக்கரம்... யாரும் மறந்துட மாட்டாங்க...
இனி அடிக்கடி உங்களோட பதிவுகளைப் படிப்பேன்...