இந்த கோழி இருக்கே கோழி அது மண்ணுல கொத்தி கொத்தி எதுனா சாப்டுகிட்டே இருக்கும். ஒரு சிமெண்ட் தரையா பாத்துச்சுன்னா சர் புர்ன்னு மூக்கை(அலகை) தேய்ச்சு கூர்மையா ஆக்கிகிட்டு திரும்பவும் மண்ணுக்கு போய் கொத்தி கொத்தி திங்க ஆரம்பிச்சுடும்!
அதுபோல கொஞ்சம் மூக்கை தீட்டிக்கலாமேன்னு இந்த மொக்கை. நாம படிச்ச பள்ளி, செக்.ஷன், வாத்தியார் பேர் இதல்லாம் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கும். முதல்ல எனக்கு இருக்கான்னு பாப்போம்.
* 1 வது C - லெஷ்மி டீச்சர் - தேசிய ஆரம்ப பள்ளி
* 2 வது B - காமாட்சி டீச்சர் - "
* 3 வது C - குண்டு சார் - "
* 4 வது C - தியாகராஜன் சார் - "
* 5 வது A - மனசுல இருக்கு வரமாட்டங்குது - "
* 6 வது F - விசாலம் டீச்சர் - தேசிய உயர் நிலைப்பள்ளி
* 7 வது B - சரோஜா டீச்சர் - D.B.T.R.தேசிய மேல்நிலைப்பள்ளி
* 8 வது B - அதே சரோஜா டீச்சர் - "
* 9 வது F - சந்தான கோபாலன் சார்- "
* 10 வது C - N. வெங்கட்டராமன் சார் - "
* 11 வது A - K.ராஜேந்திரன் சார் - "
* 12 வது A - K. பத்மநாதன் சார் - "
அப்பாடா!
அதுபோல கொஞ்சம் மூக்கை தீட்டிக்கலாமேன்னு இந்த மொக்கை. நாம படிச்ச பள்ளி, செக்.ஷன், வாத்தியார் பேர் இதல்லாம் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கும். முதல்ல எனக்கு இருக்கான்னு பாப்போம்.
* 1 வது C - லெஷ்மி டீச்சர் - தேசிய ஆரம்ப பள்ளி
* 2 வது B - காமாட்சி டீச்சர் - "
* 3 வது C - குண்டு சார் - "
* 4 வது C - தியாகராஜன் சார் - "
* 5 வது A - மனசுல இருக்கு வரமாட்டங்குது - "
* 6 வது F - விசாலம் டீச்சர் - தேசிய உயர் நிலைப்பள்ளி
* 7 வது B - சரோஜா டீச்சர் - D.B.T.R.தேசிய மேல்நிலைப்பள்ளி
* 8 வது B - அதே சரோஜா டீச்சர் - "
* 9 வது F - சந்தான கோபாலன் சார்- "
* 10 வது C - N. வெங்கட்டராமன் சார் - "
* 11 வது A - K.ராஜேந்திரன் சார் - "
* 12 வது A - K. பத்மநாதன் சார் - "
அப்பாடா!
உங்களுக்கு ஞாபகம் இருந்தா சொல்லுங்க atleast section மட்டுமாவது!!
இப்ப நாங்களும் கோழியா மாறனும்ன்னு சொல்றீங்களா அபி அப்பா?
ReplyDeleteஎழுதுனா பின்னூட்டம் ரொம்ப ரொம்ப நீட்டா இருக்குமே! அதுக்கு ஒரு பதிவா போட்டுடலாமா அபி அப்பா?
ReplyDeleteஇதுவும் அந்த Tag கேமைபோல, நீங்க Tag செய்யலாமே? interesting-ஆ இருக்கும். :-)
// .:: மை ஃபிரண்ட் ::. said...
ReplyDeleteஎழுதுனா பின்னூட்டம் ரொம்ப ரொம்ப நீட்டா இருக்குமே! அதுக்கு ஒரு பதிவா போட்டுடலாமா அபி அப்பா?
இதுவும் அந்த Tag கேமைபோல, நீங்க Tag செய்யலாமே? interesting-ஆ இருக்கும்//
செய்யலாம். உங்க கைராசி, நீங்களே செய்யலாமே தோழி!!
//இப்ப நாங்களும் கோழியா மாறனும்ன்னு சொல்றீங்களா அபி அப்பா?//
தோழி கோழியா? ஐய்:-))
எனக்கு குரு நீங்கதான் அபிஅப்பா.
ReplyDeleteஅபி அப்பா, Tag போஸ்ட் போட்டாச்சு.. ;-)
ReplyDeletehttp://engineer2207.blogspot.com/2007/03/173.html
இது நல்லா இருக்கே... ஆனா தமிழ்மணத்துல கொசுவர்த்திசுருள் பார்டிங்க ஜாஸ்தி-னு நினைக்கிறேன். நிறைய பேரு பழைய ஸ்கூல் போட்டோ எல்லாம் போட்டு போட்டி கூட வச்சாங்க.
ReplyDelete2 - ஒரு வயசான Anglo-Indian Teacher. பேரு ஞாபகம் இல்ல. உருவம் மட்டும்தான் ஞாபகம் இருக்கு.
3 - கிரேஸ் மிஸ். கண்ணாடி போட்டுகிட்டு துறுதுறுனு நம்ம நடிகை ரேவதி மாதிரி இருப்பாங்க.
4 A - டட்லி மிஸ். அது அவங்க குடும்ப பெயர். முழு பெயர் தெரியாது. அவ்வளவு மரியாதையாத்தான் கூப்பிடுவோம்.
5 A - லட்சுமி மிஸ். இவங்கள விட 5 B-ல லீனா மிஸ்-னு ஒருத்தங்க இருந்தாங்க. அவங்களுக்கு எல்லாரும் பயப்படுவோம் ரொம்ப.
6 A - சுப்ரமண்யம். படிய தலை வாரிட்டு வருவார்.
7 A - ராமசாமி. அவர்கிட்ட ட்யூஷன் படிச்சா மன்த்திலி டெஸ்ட்-ல எப்படியும் நூத்துக்கு நூறு வாங்கிடுவாங்க (மொழி பாடங்களிலும்). பிப்ரவரி மாதத்துல முழு கிளாசுமே அவர்கிட்ட ட்யூஷன் படிச்சது - என்னைத் தவிர. போனால் போகட்டும்னு மார்ச் மாசம் பரீட்சையில (ஏப்ரல் annual exam) எனக்கும் எல்லா பாடத்துக்கும் நூத்துக்கு நூறு போட்டார்.
8A - சோமநாராயணன். கத நல்லாவே சொல்வார். ரிடையர் ஆனபிற்பாடு 'பாகவத பஜனை' அப்படின்னு இறங்கிட்டார். ராமசாமி ட்யூஷன் வச்சார்னா, இவர் சீட்டு கம்பெனி நடத்தினார். நிறைய வாத்தியார்ஸ் இவர்கிட்ட சீட்டு போட்டாங்க.
9A - சோமநாராயணன் தான். எங்களோட சேர்ந்து அவரும் புரமோஷன் வாங்கி வந்துட்டார். கூடவே சீட்டு கம்பெனி லெட்ஜரும்.
10A - மாதவன். பாதியில உடம்பு சரியில்லாம போயி இன்னொரு வாத்திஸ் வந்தார்.
11A - பாலசுப்ரமணியம். என்னோட அப்பாவோட க்ளாஸ்மேட் இவர். இதுனாலேயே என்னை ஸ்பெஷலா 'ஓட்டுவார்'.
12A - பாலசுப்ரமணியனேதான். இரண்டு வகுப்புகளையும் அவர்தான் மேய்த்து வந்தார்.
அய்யோ என் நியாபகசக்தி அநியாயம்.
ReplyDeleteஎன்னால இவ்வளவு எல்லாம் நினைவுக்கு கொண்டுவரமுடியாது. சின்ன கிளாஸ்
டீச்சரோ , தோழிகளோ...கஷ்டம் தான். ரொம்ப யோசிக்கணும்.
// Fast Bowler said...
ReplyDeleteஎனக்கு குரு நீங்கதான் அபிஅப்பா. //
எதுக்கு பாஸ்ட் பவுலர்? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க?
//அபி அப்பா, Tag போஸ்ட் போட்டாச்சு.. ;-)//
ReplyDeleteஇதுல்ல புள்ள! வேகம்ன்னா இப்டிதான் இருக்கனும்:-))
//11A - பாலசுப்ரமணியம். என்னோட அப்பாவோட க்ளாஸ்மேட் இவர். இதுனாலேயே என்னை ஸ்பெஷலா 'ஓட்டுவார்'. //
ReplyDeleteவாங்க ஸ்ரீதர்! 11 வது படிக்கும் போது பி.ராமசாமி(H.M)சார் தான் ஆங்கிலம் வாத்தியார். அவர் என் அப்பாவுக்கும் வாத்தியார் என்பதால் என் மீது அலாதி பாசம். அடிக்கடி பொங்குவார்:-))
//முத்துலெட்சுமி said...
ReplyDeleteஅய்யோ என் நியாபகசக்தி அநியாயம்.
என்னால இவ்வளவு எல்லாம் நினைவுக்கு கொண்டுவரமுடியாது. சின்ன கிளாஸ்
டீச்சரோ , தோழிகளோ...கஷ்டம் தான். ரொம்ப யோசிக்கணும்.//
கொஞ்சம் கஷ்டமா? கஷ்டப்பட்டு யோசிங்க.:-))
ஆஹா! இப்படு உக்கார்ந்து யோசிக்க வெச்சுட்டீங்களே!! நமக்கெல்லாம் அம்புட்டு ஞாபக சக்தி இல்லைன்னு சொல்லி இப்போதைக்கு விட்டுக்கிறேன் ஜூட்!!
ReplyDeleteமை பிரண்ட், கோழியா மாறுங்க. ஆனா இன்னிக்கு நிலமையில் நாயாவோ கரடியாகவோ மட்டும் வேண்டாம். விஷயம் தெரிஞ்சுக்க இங்க வாங்க.
ReplyDeleteஅபி அப்பா, இதுக்கெல்லாம் கோச்சுக்கக் கூடாது. ஹிஹி..
//இதுல்ல புள்ள! வேகம்ன்னா இப்டிதான் இருக்கனும்:-))//
ReplyDelete:-)
//வாங்க ஸ்ரீதர்! 11 வது படிக்கும் போது பி.ராமசாமி(H.M)சார் தான் ஆங்கிலம் வாத்தியார். அவர் என் அப்பாவுக்கும் வாத்தியார் என்பதால் என் மீது அலாதி பாசம். அடிக்கடி பொங்குவார்:-))//
ReplyDeleteநான் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது பள்ளி தலைமையாசிரியரா இருந்தவர் என் அம்மா படிக்கும்போது அவருடைய வாத்தியார். என்னை அவர் பார்க்கும்போதெல்லாம் "அம்மா மமாதிரி நல்லா படிக்கனும் பொண்ணு!"ன்னு சொல்லிக்கிட்டே இருப்பார்..
அபி அப்பா, ஒரு கிளாசுக்கு ஒரு டீச்சர்தானா? அவங்களே எல்லா பாடமும் எடுப்பாங்களா? வித்தியாசமான பள்ளியா இருக்கய்யா உங்க பள்ளி.
ReplyDelete//நாம படிச்ச பள்ளி, செக்.ஷன், வாத்தியார் பேர் இதல்லாம் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கும்.//
பூனைக்குட்டி வெளிய வந்திருச்சே. வாத்தியார் என்று சொல்லிய உங்களுக்கும் எனது ஆ.ஆ.ப.தில் பங்கு தருகிறேன்.
ப்பூ....இது என்ன பிரமாதம், அம்புட்டும் சொல்வோம்... கூட படிச்ச புள்ளையில் இருந்து சைட் அடிச்ச புள்ளைக வரைக்கும் ஞாபகம் இருக்கு.... ஆனா வாத்தி னா அதுவும் மேட்டர் இல்ல, சொல்லிட்டா போச்சு... இந்த 1,2 தான் இடிக்குது. இருங்க கொஞ்சம் தள்ளி வச்சுட்டு வரேன்
ReplyDelete//எழுதுனா பின்னூட்டம் ரொம்ப ரொம்ப நீட்டா இருக்குமே! //
ReplyDeleteநாங்க எல்லாம் பின்னூட்டம் நீட்டா இருந்தா ரொம்ப சந்தோஷப்படுவோம். எல்லா பின்னூட்டம் நீட்டா இருக்கனும்.
நீட் னா அழகு, சுத்தம் என்ற நீட் தானே...
//அய்யோ என் நியாபகசக்தி அநியாயம்.
ReplyDeleteஎன்னால இவ்வளவு எல்லாம் நினைவுக்கு கொண்டுவரமுடியாது. சின்ன கிளாஸ்
டீச்சரோ , தோழிகளோ...கஷ்டம் தான். ரொம்ப யோசிக்கணும். //
விடுங்க முத்து லஷ்மி, வயசு ஆனாலே இப்படி தான், எல்லாம் மறந்துடும்.... இதுக்கு எல்லாம் வருத்தப்பட முடியுமா சொல்லுங்க....
//நாம படிச்ச பள்ளி, செக்.ஷன், வாத்தியார் பேர் இதல்லாம் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கும். //
ReplyDeleteஏனுங்க தொல்ஸ், ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு வாத்தில வருவாங்க, ஏகப்பட்ட பெயர் ஞாபகத்துக்கு வருதே! என்ன பண்ணட்டும் சொல்லுங்க....
வா.... வா.... கூரியர் சர்வீஸ் எல்லாம் விட வேண்டியது.....
ReplyDeleteவந்தா பதில் சொல்லுறது கிடையாது, போன பின்னூட்டத்துக்கு பதில் சொல்லுங்க... அப்பால வந்து நான் விளக்கமா சொல்லிட்டு போறேன்....
எப்படி எப்படி இப்படி எல்லாம்!.. ஒவ்வொரு வகுப்பையும் இப்படி ஞாபகம் வச்சு அடிக்கிறீங்க அபி அப்பா..
ReplyDeleteபழசை எல்லாம் திரும்பி பார்த்த மாதிரி இருக்கும்ல.. பாத்துட்டா போச்சு!
அபி அப்பா ஒத்துக்கிறேன்
ReplyDeleteஉங்களுக்கு ஞாபகசக்தி அதிகம்ன்னு ;-))))
enna abiappa idu??
ReplyDeleteintha mathiri ellam poda solreenga..
enaku ippothiki nyabagam varala
vanthathuku appuram podaren
ok va
நீங்க எழுதுனதைப் படிச்சு எனக்கும் கொசுவர்த்தி சுருள் சுத்துனுச்சு..எங்க கதை எப்படியிருக்கு...?
ReplyDeleteஎன்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லாத தொல்ஸின் போக்கை வன்மையாக கண்டிக்குறேன்.
ReplyDeleteதமிழ்மணத்தில் நீடித்து இருக்க வேண்டும் என்ற சுயநல போக்கில் என் மனதை காயப்படுத்திய கும்மாரின் போக்கை கன்னா பின்னானு கண்டிக்குறேன்.
அபி அப்பா இது சரியா?
ஆணி அதிகம்,
ReplyDeleteகுண்டூ ஊசி குத்திடுச்சு
கடப்பாரை கடமையை செய்த விடாமல் குறுக்கிட்டு விட்டது என்று எந்த சமாதானம் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளப்படாது....
எல்லா வகுபிலேயும் ஒரு வருசம்தான் படிச்சீங்களா, ஷேம், ஷேம், பப்பி ஷேம்.
ReplyDelete//இலவசக்கொத்தனார் said...
ReplyDeleteஆஹா! இப்படு உக்கார்ந்து யோசிக்க வெச்சுட்டீங்களே!! நமக்கெல்லாம் அம்புட்டு ஞாபக சக்தி இல்லைன்னு சொல்லி இப்போதைக்கு விட்டுக்கிறேன் ஜூட்!!//
யாருக்கு உமக்கா ஞாபக சக்தியில்ல, புலி சொல்வது போல அட அநியாய ஆபீஸர்களா:-))
லேட்டா வந்ததுக்கு மன்னிச்சுக்குங்க.
ReplyDelete3 நாள் தமிழ்மணத்த எட்டிப்பாக்கல.. அதுக்குள்ள ஏகப்பட்ட மேட்டரு நடந்திருக்கு. :))
நம்ம பேரும் சரித்திர பின்னூட்டத்துல வரணுமுல்ல. அதுக்குதான் இது..
சென்ஷி
நல்லவேளை நான் கொஞ்ச நாள் வெளியூர் போனதால பதிவெல்லாம் பார்க்கமுடியல. இல்லைன்னா இந்தத் தலைப்பைப் பார்த்தே அழுதுருப்பேன் :-D
ReplyDeleteஅபி அப்பா பழசையெல்லாம் கிளறி விட்டுட்டீங்க.. இந்த மாதிரி நான் இதுவரைக்கும் யோசிச்சதில்லை. இப்பத்தான் யோசிக்கிறேன். ஆனாலும் ஒண்ணும் சிக்க மாட்டேங்குது.. நான் படிச்ச திண்டுக்கல் டட்லி துவக்கப் பள்ளியில் 1,2,3ம் வகுப்பு டீச்சர்கள் ஞாபகம் வரவே மாட்டேங்குதுப்பா.. ஆனால் நாலாங்கிளாஸ் டீச்சர் மட்டும் நல்லா ஞாபகம் இருக்கு. ஏன்னா அவுங்க காதுல ஓட்டை போடுறதுல ஸ்பெஷலிஸ்ட். அதான் இன்னமும் ஞாபகமிருக்கு. 5-ம் கிளாஸ் St.Mary's ஸ்கூல்ல படிச்சேன். அங்க வாத்தியார் ஆரோக்கியசாமி. ஆறாம் கிளாஸ் பேர் வர மாட்டேங்குது. ஆனா அவர்தான் ஸ்கூல்ல என்.சி.சி. வாத்தியார். 7-ம் கிளாஸ் மதுரை ஞானஒளிவுபுரம் பிரித்தோ ஸ்கூல்ல படிச்சேன். வாத்தியார் பேர் தொண்டைல நிக்குது.. வர மாட்டேங்குது.. 8-ம் கிளாஸ¤க்கு போதகர் கிளாஸ் டீச்சர்.. திரும்பவும் 9ம் கிளாஸ் திண்டுக்கல் St.Mary's. இங்க யாருன்னா.. ஐயோ ஞாபகமில்லையே.. ஆனா பத்தாம் கிளாஸ¤க்கு ஜென்டில்மேன் ராபர்ட் ஸார் வாத்தியார்.. அருமையான மனிதர்.. இத்தோட நம்மளை ஸ்கூல்ல இருந்து துரத்திட்டாங்கப்பா.. அப்புறம் திண்டுக்கல் ஐ.டி.ஐல படிச்சன்னா.. வாழ்க்கையோட ஒவ்வொரு சப்ஜெக்ட்டையும் சொல்லிக் கொடுத்த அனுபவஸ்தர், நல்ல மனுஷன் வாத்தியாரா எங்களுக்கு அமைந்தார்.. திரு.ராதாகிருஷ்ணன்..
ReplyDeleteஅப்பாடா.. அபி அப்பா.. ரொம்ப தேங்க்ஸ்.. ஆசிரியர்களை நினைவுபடுத்த வைத்ததற்கு எனது மனமார்ந்த நன்றிகள்..
ஹி..ஹி .நமக்கு சின்ன வயசுல இருந்து கூடப்படிச்ச பொண்ணுங்க பேருதான் ஞாபகம் வருது.வாத்தியார் பேரு ஞாபகமே வரமாட்டேங்குது.:-)
ReplyDelete5A மஹாலெஷ்மி டீச்சர்
ReplyDeleteஎனக்கு மட்டும் ஏன் மிஸ் பேரெல்லாம் ஞாபகம் வரமாட்டேங்குது ஆனா எல்லா க்ளாஸிலும் யாரெல்லாம் enemies இருந்தாங்கன்னு correctஆ ஞாபகம் வருது??
ReplyDeleteஆஹா யாரது அன்னு? ஆளே இல்லாத டீக்கடையிலே டீ ஆத்திகிட்டு???
ReplyDelete