அப்போ நான் 9 வது படித்து கொண்டிருந்தேன். நாங்கள் ஒரு 6 பேர் ஒரு குரூப்பாதான் திரியுவோம். அதிலும் நானும் குரங்கு ராதாவும் அப்டி என்னதான் பேசிப்போம்னே தெரியாது அவ்ளோவ் பேசுவோம்.
ஞாயித்து கிழமையானா கூட அப்டி பேசுவோம். என் வீட்டுக்கும் அவன் வீட்டுக்கும் நடுவேதான் எங்க ஸ்கூல் கிரவுண்ட். கிரவுண்டு சுத்தியும் புளிய மரங்கள் இருக்கும். நட்ட நடுவே ஒரு மாமரம். அது ஒரு பட்ட மரம். ஏற வசதியா இருக்கும். ஏறினா கிளைக்கு இடையே நாங்க உக்காந்துக்க வசதியா இரண்டு பள்ளம் மாதிரி இடம் இருக்கும்.
அதுல ஏறி உக்காந்தா அந்த கிரவுண்ட் முழுவதும் பாக்கலாம். அவனவன் ஏதோ விளையாட நாங்க மட்டும் சினிமாவில் ஆரம்பித்து மாலா, பாமா வரை பேசுவோம். எங்களை ஒரு பயலும் சீண்ட மாட்டானுங்க.
ஒரு சில கஞ்சா பார்டிங்க மட்டும் எப்பவாவது வந்து "டேய் கீழ வாங்கடா"ன்னு குரல் விட்டுட்டு அவனுங்க மேல ஏறி கஞ்சா அடிக்க ஆரம்பிச்சுடுவானுங்க.
ஒரு ஞாயித்து கிழமை காலை 10 மணிக்கு அப்படிதான் நானும் கு.ராதாவும் உக்காந்து பேசிகிட்டு இருந்தப்ப கஞ்சா குடிக்கி விட்டுட்டு போன தீப்பெட்டி மர பொந்தில் இருந்துச்சு. சரின்னு நானும் கு.ராவும் சும்மா பேசிகிட்டே அங்க கைக்கு எட்டும் தூரத்தில இருந்த குச்சியெல்லாம் சும்மா ஒடிச்சு ஒடிச்சு அந்த பொந்துக்குள்ள போட்டு பத்தாததுக்கு சருகு வேற போட்டு எரியுதான்னு பாக்க தீக்குச்சியால பத்த வச்சோம். அது லேசுல பத்துவது மாதிரி தெரியல.
சரின்னு நாங்க கிளம்பி போயிட்டோம். கொஞ்ச நேரம் நடந்த பின்ன திரும்பி பாத்தா, அந்த மரதில இருந்து குபு குபுன்னு புகை. நாங்க பயந்து போய் அங்க ஓடினோம். பக்கத்துல தண்ணி ஏதும் கிடைக்காததால் ரெண்டு பேரும் சேந்து அதுல உச்சா அடிச்சுட்டு(பெரிய ஃபயர் சர்வீஸ்ன்னு நெனப்பு!) சரி எல்லாம் சரியாயிடும்ன்னு வீட்டுக்கு போயிட்டோம். போய் நல்லா எண்ணெய் குளியல் போட்டுட்டு நான் தூங்கிட்டேன்.
மதியம் 3 மணிக்கு ராதா சிக்னல் குடுத்தான். வந்து நேரா கூப்பிட்டா எங்க அம்மா அவனை திட்டுவாங்க. அது போல் நான் அவனை எப்போ கூப்பிட்டாலும் எனக்கு அவங்க அம்மாகிட்ட செம திட்டு கிடைக்கும். அதுக்காகவே பல சிக்னல் வச்சிருப்போம்.
சிக்னல் வந்த உடனே நான் வெளியே போய் பாத்தா, ராதா ரொம்ப பயந்து போய் பேயரஞ்ச மாதிரி இருந்தான்.
"டேய் நம்ம போலீஸ் தேடுதுடா, எங்கயாவது ஓடிடுவோம். ஒரு 10 வருஷம் பின்ன வந்தா எல்லாம் சரியாயிடும், ஒரு பையில டிரஸ் எடுத்துகிட்டு வாடா"ன்னு பர பரப்பா சொன்னான்.
அய்யப்பன் ஹோடடலுக்கு போய் புரோட்டா சாப்பிட போவோம் வா ன்னு கூப்புடுறது மாதிரி கூப்புடுறானேன்னு நெனச்சுகிட்டு "என்னடா என்ன ஆச்சு"ன்னு கேட்டேன்.
"டேய் நாம பத்த வச்ச மரம் பத்திகிட்டு எரியுதுடா, நம்ம H.M , P.R சார்ல ஆரம்பிச்சு ஆரோக்கியசாமி வரை அங்க தான் இருக்காங்கலாம். அது தவிர ஃபயர் சர்வீஸ், போலீஸ் எல்லாரும் இருக்காங்கலாம். இப்போ போலீஸ் விசாரணை ஆரம்பிச்சாச்சாம், நம்ம காந்திமதிநாதன் சொன்னாண்டா"ன்னு கார்த்தி சொன்னான்.(மக்களே நல்லா படிக்கவும் காந்திமதிநாதன்...காந்திமதிகாதன் இல்லை)
சரி நிலைமைய நேரில் போய் ஆராய்வோம்ன்னு ரெண்டு பேரும் கிளம்பி அப்டியே பிரசவ ஆஸ்பத்திரி வழியா போனோம். தூரக்க இருந்து பாத்தா ஃபயர் வண்டி, போலீஸ் ஜீப், H.M ல இருந்து பியூன் வரைக்கும் அது தவிர தெரு மக்கள்ஸ் ஒரு பெரிய கும்பலே நிக்குது.
கச்சேரி பிள்ளையாருக்கு 10 பைசா, தர்காவுக்கு 10 பைசா(சம தர்மம்) உண்டியல்ல போடுவதா வேண்டிகிட்டு கிட்டக்க போனோம். கரக்டா P.T சிவனேசன் சார் கிட்ட மாட்டினோம். "டேய் இங்க வாங்கடா, ஒரு வெளயாட்டும் வெளயாடாம இந்த மரத்துலயே குந்திகிட்டு இருப்பீங்களே, உங்கள்ல எவன்டா பத்த வச்சது"ன்னு கேட்டார்.
பதறி போய்ட்டோம். ராதா சொன்ன மாதிரி ஓடி போயிட்டு 10 வருஷம் பின்ன வந்திருக்கலாமோன்னு நெனச்சுகிட்டேன். ராதா ஒன்னுக்கே போயிட்டான்.
ஒரு போலீஸ்கார் எங்க கிட்ட வந்து "யார்டா பத்த வச்சது, நீங்க பாத்தீங்களா, உண்மைய சொல்லுங்க"ன்னு ஒரு அதட்டல் போட்டாரு. அதுக்கு எங்க H.M "சார், இவனுங்க பத்த வச்சிருக்க மாட்டானுங்க, இவனுங்க அதுக்கு கூட லாயக்கு இல்லை சோப்பேறி பசங்க"ன்னார்.
கிராப்ட் சார்"டேய் சொல்லிடுங்கடா, இல்ல போலீஸ் புடிச்சுட்டு போயிடும்"ன்னு பயம் காட்டுரார். ஒரு ஃபயர் ஆபீசர் "H.M சார், மரத்து மேல ஏரி பொந்துகுள்ள நெருப்பு வச்ச மாதிரி தான் தெரியுது"ன்னு சொல்ல ஒட்டு மத்த கும்பல் பார்வையும் எங்க மேல தான்.
அநியாய ஆபீஸர் வச்சுட்டாரே ஆப்புன்னு நெனச்சுகிட்டு இருக்கும் போதே P.T சார் ரெண்டு பேரையும் கழுத்த பிடிச்சு குனியவச்சு முதுக விரிய வச்சுட்டார். நான் டக்குன்னு கச்சேரி பிள்ளையாருக்கும் தர்காவுக்கும் 10 பைசா ரேட் ஏத்திடேன்.
அப்புறம் ராதாவையும் என்னையும் அந்த போலீஸ்கார் தனியா கூப்பிட்டு போய் "தம்பிகளா, கூட்டத்துல சொல்ல வேண்டாம் இப்ப சொல்லுங்க"ன்னார்.
சாமி மேல பாரத்த போட்டுட்டு இன்னும் 10 பைசா ஏத்திட்டு(இன்னும் அந்த நேர்த்தி கடன் பாக்கியிருக்கு) ரெண்டு பேரும் கோரஸா "சார் அந்த கஞ்சாகுடிக்கி கென்னடிதான் சார் காலைல மரத்து மேல உக்காந்து இருந்தான்"ன்னு சொன்னோம்.
ஒரு வழியா பிரச்சனை முடிஞ்சுச்சு. அதுக்கு பிறகு கொஞ்ச நாள் கழிச்சு கென்னடி அடுத்த லொக்கேசன் கண்டிபிடிச்சுட்டான். பிரசவ ஆஸ்பத்திரி மாமரம். நாங்க அந்த பக்கமே போவதில்லை. மரம் ஏறுவதை விட்டாச்சு.
ராதா பேச்சை கேட்டு ஓடிபோயிருந்தா இந்நேரம் உங்களையெல்லாம் "பிளாக்"மெயில் செஞ்சுகிட்டு இல்லாமல் எங்கியாவது பிளாக் டிக்கெட் வித்துகிட்டு இருந்திருப்பேன்.
இந்த விஷயம் ரொம்ப நாள் உறுத்திகிடே இருந்துச்சு. என் கல்யாணத்துக்கு இப்போ உள்ள H.M புஷ்பவள்ளி டீச்சர் வந்தப்போ "டீச்சர் அந்த மரத்தை நான் தான் பத்த வச்சேன்"ன்னு சொன்னப்ப அவங்க தங்கமணிய பாத்து "இங்க பாரும்மா, நீ ரொம்ப குடுத்து வச்சவ, தொல்ஸ் கூட இருந்தா சிரிச்சுகிட்டே இருக்கலாம். என்னமா சிரிக்காம அடிக்கிறான் ஜோக்கு"ன்னாங்க.
நல்லதுக்கே காலமில்லை சாமி!!
ப்ளாக்கர் ப்ராப்ளம் தீந்துடுச்சா :))
ReplyDeleteசென்ஷி
வாப்பா சென்ஷி தம்பி! ஒரு வழியா தீந்துச்சு. ஆனா நான் டிராஃப்டில் போட்டு வச்ச 2 பதிவு தான் கானும், பரவாயில்ல திரும்ப டைப்பிகலாம். இந்த பின்னூட்டம் வராம கை நடுக்கம் வந்துடுச்சு:-))
ReplyDeleteஅபிபாப்பா போட்டோ அழகாயிருக்குது..
ReplyDelete//
இந்த பின்னூட்டம் வராம கை நடுக்கம் வந்துடுச்சு:-))
பின்னூட்டம் நீங்க போடுங்க :))
சென்ஷி
hello abi appa
ReplyDeleteippavum antha mathiri ethukkavathu saamikku vendikra palakkam irrukiratha - kadvulea intu en wife tittakoodathu etc.paravai illappa, however escaped.
arun
\\உங்களையெல்லாம் "பிளாக்"மெயில் செஞ்சுகிட்டு இல்லாமல் எங்கியாவது பிளாக் டிக்கெட் வித்துகிட்டு இருந்திருப்பேன்.//
ReplyDeleteநல்லவேளை ..தப்பிச்சது ப்ளாக் உலகம்.
pasumai niraintha ninaivukalae... paadi thirintha paravaikalae...
ReplyDeleteantha kurangu radhvaiyum blog ezutha sollunga... aana enna, ungala fieldla irunthu verattiruvaaru :)))))
அருமையான பதிவு. சிறப்பாக எழுதுகிறீர்..
ReplyDeleteநல்லதொரு மொக்கை...மொக்கை அணியின் கொ.ப.செ வா போடலாம் உங்களை.
ReplyDeleteஎன்னை தமிழ்மணத்திலிருந்து நீக்கினாலும் உங்கள் பதிவுகளை மட்டும் தொடர்ந்து படித்து வருகிறேன்.
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteநல்லதொரு பதிவு அபி.அப்பா. நன்றாக ரசித்து சிரிக்கும்படி இருந்தது.
ReplyDelete//அபிபாப்பா போட்டோ அழகாயிருக்குது..//
ReplyDeleteஅப்டியே என்னய கொண்டிருக்கு:-))
//paravai illappa, however escaped.
ReplyDeletearun //
வாங்க அருண், இப்பல்லாம் ஐயா திட்டு, அடியெல்லாம் வாங்குவது இல்லையாக்கும்,நல்ல பிள்ளையாயிட்டேன்:-))
//antha kurangu radhvaiyum blog ezutha sollunga... aana enna, ungala fieldla irunthu verattiruvaaru :))))) //
ReplyDeleteவாங்க ஜி! இந்தியா போயாச்சாமே, சரி, என்னய விரட்ட இத்தன ஆர்வமா:-))
//முத்துலெட்சுமி said...
ReplyDelete\\உங்களையெல்லாம் "பிளாக்"மெயில் செஞ்சுகிட்டு இல்லாமல் எங்கியாவது பிளாக் டிக்கெட் வித்துகிட்டு இருந்திருப்பேன்.//
நல்லவேளை ..தப்பிச்சது ப்ளாக் உலகம்//
வாங்க முத்து லெஷ்மி!
எங்க தப்பிச்சது பிளாக் உலகம், நான் தான் இருக்கேனே:-))
//லக்கி லூக் said...
ReplyDeleteஅருமையான பதிவு. சிறப்பாக எழுதுகிறீர்..//
வாங்க வாங்க லக்கிலுக்!! உங்களையெல்லாம் பார்க்கனும் என்று ரொம்ப ஆர்வமா லியோ சுரேஷ் வந்திருக்கார். வலைப்பதிவர் சந்திப்பு சூப்பரா இருக்கனும்:-))வாழ்த்துக்கு நன்றி!
\\எங்க தப்பிச்சது பிளாக் உலகம், நான் தான் இருக்கேனே:-)) //
ReplyDeleteதமிழ்கூறும் ப்ளாக் நல்லுலகம் நீங்க இல்லாம கஷ்டப்படாம இப்ப ப்ளாக் எழுதுவதால் தப்பித்ததுன்னு சொல்லவந்தேன்.
பத்த வெச்சுட்டியே பரட்டை!
ReplyDeleteஇது உம்மைப் பார்த்துச் சொல்லணுமா இல்லை உம்மை போட்டுக் குடுத்த வாத்தியை பார்த்துச் சொல்லணுமா?
அதெல்லாம் போகட்டும் ஒரு பட்ட மரத்துக்கு எதுக்கும் இம்புட்டு ஆர்ப்பாட்டம்?
//செந்தழல் ரவி said...
ReplyDeleteநல்லதொரு மொக்கை...மொக்கை அணியின் கொ.ப.செ வா போடலாம் உங்களை. //
செந்தழலாரே! நா.சிபி மொக்கை போட உங்க கிட்ட ஆசி வாங்கரார், உங்க லிமிட் கிட்ட நாங்க வர முடியுமா தல:-))
செ.ரவி! ரொம்ம நக்கல் பேர்வழிய்யா நீர். விடாது கருப்பு, விட்டது சிகப்பு...ஒத்துமையா இருக்க நீர் செஞ்ச டெக்னிக் சூப்பர்:-))
ReplyDelete//இரவுக்கழுகார் said...
ReplyDeleteநல்லதொரு பதிவு அபி.அப்பா. நன்றாக ரசித்து சிரிக்கும்படி இருந்தது.//
வாங்க வாங்க இரவு கழுகாரே! முதல் வருகை, அடிக்கடி வாங்க, வருகைக்கு நன்றி:-))
//தமிழ்கூறும் ப்ளாக் நல்லுலகம் நீங்க இல்லாம கஷ்டப்படாம இப்ப ப்ளாக் எழுதுவதால் தப்பித்ததுன்னு சொல்லவந்தேன். //
ReplyDelete:-))))
//அதெல்லாம் போகட்டும் ஒரு பட்ட மரத்துக்கு எதுக்கும் இம்புட்டு ஆர்ப்பாட்டம்? //
ReplyDeleteஅந்த மரம் பட்ட மரமாக இருந்தாலும் மிக பெரிய மரம். அது கிரவுண்டுக்கு இடஞ்சலா இருக்குன்னு அதை ஏலம் விட்ட சமயத்தில் தான் இது நடந்தது. ஏலத்தில் ஜெயித்து பணம் ஸ்கூலுக்கு கட்டியவன் தான் கேஸ் குடுத்தான். அதுவும் யார் மேல தெரியுமா? ஏலத்தில் தோத்தவன் மேல. இதல்லாம் எங்களுக்கு தெரியாது:-))
அண்ணாத்த ப்ளாக்கர் பிரச்சனை எல்லாம் போயிடுச்சா ;-))
ReplyDelete\\இன்னும் அந்த நேர்த்தி கடன் பாக்கியிருக்கு) \\
ReplyDeleteஇதுக்கு எதுக்கு கவலைப்பட்டுக்கிட்டு.....அடுத்த சந்திப்புல ரெண்டு ஏழைகளுக்கு (கோபிதம்பி, கதிருதம்பி) கிடேசன் பார்க்கில் விருந்து கொடுங்க எல்லா கடனும் சரியாகிடும் ;-)))
//கோபிநாத் said...
ReplyDelete\\இன்னும் அந்த நேர்த்தி கடன் பாக்கியிருக்கு) \\
இதுக்கு எதுக்கு கவலைப்பட்டுக்கிட்டு.....அடுத்த சந்திப்புல ரெண்டு ஏழைகளுக்கு (கோபிதம்பி, கதிருதம்பி) கிடேசன் பார்க்கில் விருந்து கொடுங்க எல்லா கடனும் சரியாகிடும் ;-)))//
கோபிதம்பி!இது ரொம்ப ஓவர்:-))
//நான் தான் பத்த வச்சேன்...ஒத்துகிறேன்!!!" //
ReplyDeleteஎம்புட்டு நாள் கழிச்சு.... சே எம்புட்டு வருசம் கழிச்சு.....
பண்ண அயோக்கியத்தனத்தை எப்படிங்க உங்களால ஒரு சிறு குற்ற உணர்ச்சிக்குட இல்லாமல் சொல்ல முடிகிறது.....
தொல்ஸ், உங்கள நல்லவன் நினைச்சேன்... அது ரொம்ப தப்புனு இப்ப தான் தெரியும்... புரியுது...
//இதுக்கு எதுக்கு கவலைப்பட்டுக்கிட்டு.....அடுத்த சந்திப்புல ரெண்டு ஏழைகளுக்கு (கோபிதம்பி, கதிருதம்பி) கிடேசன் பார்க்கில் விருந்து கொடுங்க எல்லா கடனும் சரியாகிடும் ;-)))////
ReplyDeleteஇதுக்கு பெயர் தான் சைட்ல கிடா வெட்டுறது... நல்லா இருங்கடே... நல்லா இருங்க.....
//டேய் நம்ம போலீஸ் தேடுதுடா, எங்கயாவது ஓடிடுவோம். ஒரு 10 வருஷம் பின்ன வந்தா எல்லாம் சரியாயிடும், ஒரு பையில டிரஸ் எடுத்துகிட்டு வாடா"ன்னு பர பரப்பா சொன்னான்.//
ReplyDeleteமின்னல் வேகத்துல ப்ளான் போடறாருப்பா கொரங்கு ராதா
ஆமா மரம் இருக்கறது கிரவுண்டுல அந்த மரம் எரிஞ்சா பேருசா பக்கத்துல ஆபத்து இருக்க வாய்ப்பில்ல எதுக்கு அப்புறம் இவ்ளோ பில்டப்பு.
கோபிநாத் said...
ReplyDelete\\இன்னும் அந்த நேர்த்தி கடன் பாக்கியிருக்கு) \\
இதுக்கு எதுக்கு கவலைப்பட்டுக்கிட்டு.....அடுத்த சந்திப்புல ரெண்டு ஏழைகளுக்கு (கோபிதம்பி, கதிருதம்பி) கிடேசன் பார்க்கில் விருந்து கொடுங்க எல்லா கடனும் சரியாகிடும் ;-)))
நானும்.. நானும்..யோவ் கோபி
என்ன வுட்ட பாத்தியா?
:)
வூட்டுக்கு போலயா???
ReplyDeleteஓவர்டைம் ஓவர்டைம்னு இப்படி குந்திகிட்டு அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டு இருக்கீறா!!
// எங்க H.M "சார், இவனுங்க பத்த வச்சிருக்க மாட்டானுங்க, இவனுங்க அதுக்கு கூட லாயக்கு இல்லை சோப்பேறி பசங்க"ன்னார்
ReplyDelete//
ஹி... ஹி...
ஆனாலும் இப்போ அதை தைரியமா ஒத்துக்கறீங்களே ரொம்ப பெரிய மனசு அண்ணா...
நீங்க ரொம்ப நல்லவரு அண்ணா :)))
அப்படியே ஓடிபோயிருந்தா போட்டியில்லாம இருந்திருக்கும்.புளாக்கர் வேறு சரியாயிடுச்சா இனி எல்லாரும் உம்ம பதிவுலதான்.நான் ஈ இல்ல கொசு அடிக்க வேண்டியதுதான்.
ReplyDeleteஉங்க பதிவுகளை படிச்சிருக்கேன்.. இப்போ தான் பின்னூட்டம் போடறேன்.. அப்போ மரத்த கொளுத்தனீங்க.. இப்போ ப்ளாக கொளுத்தறீங்க.. (சூப்பரா எழுதறீங்கன்னு சொன்னேன்..)
ReplyDelete//இதுக்கு எதுக்கு கவலைப்பட்டுக்கிட்டு.....அடுத்த சந்திப்புல ரெண்டு ஏழைகளுக்கு (கோபிதம்பி, கதிருதம்பி) கிடேசன் பார்க்கில் விருந்து கொடுங்க எல்லா கடனும் சரியாகிடும் ;-)))//
ReplyDeleteநண்பர்களே, வழக்கமா அய்யனாருக்குதான் நம்ம படையல் வைப்போம், ஆனால் வரும் 13 தேதி அய்யனாரே நமக்கு படையல் வைக்க போறாராம்.
அனைவரும் வாரீர்
அய்யனார் அருள் பெறுவீர்.
யோவ் தம்பி
ReplyDeleteஉன் பாசத்துக்கு எல்லையே இல்லையா
:)
தொல்ஸ் அண்ணே,
ReplyDeleteபோஸ்ட் சூப்பர்...
//தொல்ஸ், உங்கள நல்லவன் நினைச்சேன்... அது ரொம்ப தப்புனு இப்ப தான் தெரியும்... புரியுது...//
புலி,
அது ஒண்ணுமில்ல... இந்த தம்பி, கோபி கூட எல்லாம் தினமும் பேசறாராம். அதான்சேர்க்கை சரியில்லை...
அட, எனக்கும் ஒரு 'ராதா'கிருஷ்ணன் இருந்தான் பள்ளி காலத்துல.
ReplyDeleteநாங்க வெறும் சைக்கிள்ள காத்து எறக்கிவ்டரதோட நிறுத்திட்டோம்.
உங்கள மாதிரி மரத்துல ஏறி bad boys ஆகல :)
//ஆமா மரம் இருக்கறது கிரவுண்டுல அந்த மரம் எரிஞ்சா பேருசா பக்கத்துல ஆபத்து இருக்க வாய்ப்பில்ல எதுக்கு அப்புறம் இவ்ளோ பில்டப்பு.
ReplyDelete//
தம்பி,
ஜோக்கு சொன்னா சிரிக்கனும். ஆராயக்கூடாது ஆமா.
போலிகள் நடமாட்டம் அதிகமா தெரியுதே!
ReplyDelete//எம்புட்டு நாள் கழிச்சு.... சே எம்புட்டு வருசம் கழிச்சு.....
ReplyDeleteபண்ண அயோக்கியத்தனத்தை எப்படிங்க உங்களால ஒரு சிறு குற்ற உணர்ச்சிக்குட இல்லாமல் சொல்ல முடிகிறது.....//
புலி!
ஹி..ஹி அரசியல்ல இதல்லாம் ஜகஜமப்பா..:))
//இதுக்கு பெயர் தான் சைட்ல கிடா வெட்டுறது... நல்லா இருங்கடே... நல்லா இருங்க..... //
ReplyDeleteஆமா புலியாரே! இலவசமா கிடச்சா இழுத்து வைத்து இஸ்திரி போடும் கோபியை கண்டித்து எதிர் வரும் 13 ம் தேதி அய்யனார் நமக்கு கொடுக்கும் படையலுக்கு அழைப்பு விடுகிறேன்:-))
//ஆமா மரம் இருக்கறது கிரவுண்டுல அந்த மரம் எரிஞ்சா பேருசா பக்கத்துல ஆபத்து இருக்க வாய்ப்பில்ல எதுக்கு அப்புறம் இவ்ளோ பில்டப்பு.//
ReplyDeleteஎனக்கு தெரியும் தம்பி, நீங்க இப்டி கேப்பீங்கன்னு, கொத்ஸ்க்கு பதில் சொல்லியிருப்பேன் பாருங்க:-))
சூப்பரான மலரும் நினைவுகள் அபி அப்பா.. சின்ன வயசு அட்டகாசங்களை நினச்சு பாத்த எப்பவுமே ஒரு இனம் புரியாத சந்தோசம் மனசுகுள்ள வந்திடுது..
ReplyDelete//அது ஒண்ணுமில்ல... இந்த தம்பி, கோபி கூட எல்லாம் தினமும் பேசறாராம். அதான்சேர்க்கை சரியில்லை...//
ReplyDeleteதோ பார்ரா!
எங்க கிட்ட பேசறாதில்லப்பா அவர் இப்ப எல்லாம் ஏதோ கண்டத்துக்கு போன் பண்றதா கேள்விப்பட்டேன்.
//அது ஒண்ணுமில்ல... இந்த தம்பி, கோபி கூட எல்லாம் தினமும் பேசறாராம். அதான்சேர்க்கை சரியில்லை...//
ReplyDeleteதோ பார்ரா!
எங்க கிட்ட பேசறாதில்லப்பா அவர் இப்ப எல்லாம் ஏதோ கண்டத்துக்கு போன் பண்றதா கேள்விப்பட்டேன்.\\
அப்படி போடு அருவளா ;-)))) நன்றி கதிர்
\\அய்யனார் said...
ReplyDeleteகோபிநாத் said...
\\இன்னும் அந்த நேர்த்தி கடன் பாக்கியிருக்கு) \\
இதுக்கு எதுக்கு கவலைப்பட்டுக்கிட்டு.....அடுத்த சந்திப்புல ரெண்டு ஏழைகளுக்கு (கோபிதம்பி, கதிருதம்பி) கிடேசன் பார்க்கில் விருந்து கொடுங்க எல்லா கடனும் சரியாகிடும் ;-)))
நானும்.. நானும்..யோவ் கோபி
என்ன வுட்ட பாத்தியா?
:)\\
அய்யனார் உங்களை எப்படி இந்த ஏழைங்க லிஸ்டுல சேர்த்துக்கிறது.....நீங்கதான் எங்களுக்கு படையல் வைக்க போறிங்கல்ல ;-)))
//அவங்க தங்கமணிய பாத்து "இங்க பாரும்மா, நீ ரொம்ப குடுத்து வச்சவ, தொல்ஸ் கூட இருந்தா சிரிச்சுகிட்டே இருக்கலாம். என்னமா சிரிக்காம அடிக்கிறான் ஜோக்கு"ன்னாங்க.
ReplyDelete//
தன்னடக்க செம்மலா நீங்க?
நெஜமாவே சொன்னாங்களா? இல்ல பில்டப்பா? சொல்லுங்க அபி அப்பா
//// எங்க H.M "சார், இவனுங்க பத்த வச்சிருக்க மாட்டானுங்க, இவனுங்க அதுக்கு கூட லாயக்கு இல்லை சோப்பேறி பசங்க"ன்னார்
ReplyDelete//
கலக்கிட்டிங்க அபிஅப்பா. நல்லா எழுதி இருக்கிங்க.
ஒரு ஹால்ஃப் சென்ழுரி அடிச்சு ஆரம்பிக்கிறேன் அபி அப்பா. ;-)
ReplyDeleteபத்த வச்சது நீங்கதான் நீங்கதான்!!!!! ;-)
ReplyDeleteAda paavingala ...neeengathaana athu !!
ReplyDeleteகஞ்சாகுடிக்கி கென்னடி