இதுவும் ஒரு கொசுவத்தி பதிவுதான். நான் அப்போ 9ம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். வருஷ முடிவிலே முழு பரிச்சைக்கு படிப்பதை விட ஆண்டு விழா கொண்டாட்டம் தான் அதிகமா இருக்கும். போர்டுல அறிவிப்பு போட்டுட்டாங்க, இராமாயணத்துல வர்ர ஒரு காட்சி தான் நாடகம். நாடகத்தின் பேர் "சீதையின் அ"சோக" வனம்". மறுநாள் பெயர் கொடுக்கணும்.
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்னு ஜீப்ல ஏறிக்கும் கேஸ் ஆச்சா, அது தவிர அப்போ ஐயாவுக்கு கலைதாகம் வேற அதிகமா இருந்துச்சா, அதனால பேர் குடுக்க முடிவு செஞ்சுட்டேன். அந்த நிமிஷத்துல இருந்து ஒரே கனவுதான். ராமர் வேஷத்துல மனசுகுள்ளேயே கலக்கிகிட்டு இருந்தேன். எத்தன அப்ளாஸ் எத்தன அப்ளாஸ், அந்த அப்ளாஸ் சமயத்துல எப்டி அதை ஏத்துகனும், அப்போ டயலாக் டெலிவரி கூடாது, கைதட்டல் சவுண்டில டயலாக் மங்கி போயிடும் அப்டீன்னெல்லாம் நெனச்சுகிட்டேன்.
மறுநாள் பேர் குடுக்க போனா ஒரு 100 பேர் அந்த கிளாஸ்ல நிக்கிறானுங்க, பாவிமக்கா என் கலை தாகத்தை தீத்துக்க விட மாட்டானுங்க போலன்னு நெனச்சுகிட்டு உக்காந்து இருந்தேன். பக்கத்துல ராதா வேற என்கிட்ட "டேய் செலக்ஷன் பண்ண போறது யாரு தெரியும்ல, அந்த சார் எங்க அப்பாவுக்கு பிரண்ட், அப்பா நேத்திக்கே அவர் கிட்ட பேசிட்டாங்க நீ வேற எதுக்கு வேஸ்டா உக்காந்து கிட்டு இருக்க, போய் பரிச்சைக்கு படி போ"ன்னு வெறுப்பேத்தரான்.
ஒவ்வொருத்தரா போய் சார் கிட்ட செலக்ஷன்க்கு போனோம்.சார் என்கிட்ட உனக்கு என்ன வேஷம்டா வேணும்ன்னு கேக்க அதுக்கு நான்"ராமன் வேஷம் தாங்க சார்"ன்னு பவ்வியமா கேக்க அதுக்கு அவரு"நல்ல வேளை நான் தப்பிச்சேன், நீ பாட்டுக்கு ஹனுமன், சீதைன்னு, அரக்கின்னு கேட்டு தொலைச்சிடுவியோன்னு பயந்துட்டேன்"ன்னு சொன்னார். எனக்கு ஒரே குழப்பம், ராமர் தான ஹீரோ சர்வசாதாரணமா எனக்கு அந்த ரோல் குடுத்துட்டு இப்டி சொல்ராரேன்னு! வெளியே வந்து ராதாகிட்ட உனக்கு என்னடா ரோல்ன்னு கேட்டேன். அதுக்கு அவன் அழுதுகிட்டே அனுமன்னு சொன்னான்."டேய் என்னவோ அப்பா ஆட்டுகுட்டின்னு கதை விட்டியே இப்ப பாத்தியா நான் தான் ராமர், என் முகத்தில ராமர் கலை தாண்டவமாடுதே அத பாத்துட்டு படார்ன்னு நீ தான் ராமர்ன்னு சொல்லிட்டார்டா"ன்னு அவனை வெறுப்பேத்திவிட்டேன்.
மறுநாள் அவங்கவங்க டயலாக் வாங்கிக்க சார் கிட்ட போனோம். எல்லாருக்கும் குடுத்தார் எனக்கு மட்டும் தரலை. "எங்க சார் என் டயலாக்"ன்னு கேட்டேன். அதுக்கு அவர் நீ தான் ராமர், ஆனா வேஷ்ம் கிடையாது, மேடைக்கு வரவேண்டாம் இன்னும் சொல்லப்போனா நீ வீட்டிலேயே இருக்கலாம், ஆனா நீதான் ராமர்"ன்னு சொன்னார். தலைல இடிய போட்டுட்டார். " டேய் லூசு பையா, இது அசோக வனத்து சீதை, இதுல மெயின் ஹீரோவே அனுமன் தாண்டா, ராமர் அப்போ ராமேஸ்வரத்துல குந்திகிட்டு இருக்கார், போ போய் வேலைய பாருடா"ன்னார். இதை கேட்டுகிட்டு இருந்த ராதாவுக்கு வந்த சந்தோஷத்தை பார்க்கனுமே!
சார் சார்ன்னு அவர் பின்னாலேயே போய் "எனக்கு அட்லீஸ்ட் அரக்கி வேஷமாவது தாங்க சார்"ன்னு அரிச்சேன். "எங்க சட்டைய கழட்டு"ன்னார். படார்ன்னு சட்டைய கழட்டிட்டு டிராயரையும் கழட்டவா சார்ன்னு கேட்டேன். அதுக்கு அவர்"டேய் இங்க என்ன மிலிட்டரிக்கா ஆள் எடுக்குது, உன் உடம்ப நீயே பார்டா, எலும்புகூடுக்கு சட்டை மாட்டிவிட்டமாதிரி இருந்துகிட்டு அரக்கி வேஷம் வேணுமா"ன்னு கடுப்படிச்சார். நான் அப்படியும் விடாம அவரை அரிச்சேன். அதுக்கு அவர் "சரி உனக்கு ஒரு சூப்பர் வேலை தர்ரேன், கிட்டத்தட்ட அஸிஸ்டண்ட் டைரக்டர் மாதிரி"ன்னார். நானும் மனச தேத்திகிட்டு சரி கமல் மாதிரி ஆக முடியாட்டியும் பாலசந்தர் மாதிரி ஆயிடலாம்ன்னு விட்டுட்டேன்.
K.R சார், கிராஃட் சார், டிராயிங் சார், N.V சார் இவங்கல்லாம் நாடகத்துக்கான வேலை எல்லாம் செய்ய நான் அசிஸ்டண்ட் டைரக்டரா சும்மா சுத்தி சுத்தி வேலை பார்த்தேன். டீ, வெத்தலை வாங்கி வருவது, கம் போட்டு அனுமன் வால் செய்வது மாதிரியான அசிஸ்டண்ட் டைரக்டர் வேலையை அமர்களமாக செய்தேன்.இதுல KR சாருக்கு புதுசு புதுசா ஐடியாவெல்லாம் பொங்குது. அனுமன் அந்தரத்துல பறந்து வந்து சீதை அருகே குந்தனும். அதுக்கு சூப்பர் ஐடியா பண்ணிட்டார். கிணத்துல தண்ணி எடுக்கும் சகடையை வச்சு.
மேடைக்கு பின்னால உயரத்துல அந்த சகடை கட்டி அனுமார் முதுகிலே சேஃப்டி பெல்ட் போட்டு கயிர் கட்டி அந்த கயிர் மேடைக்கு பின்னால் என் கையில். இப்படி ஒரு செட்டப்.
அதுக்கிடையே டிராயிங் கணேசன்சார் ரொம்ப சிரத்தையா அனுமார் வால் அவங்க ஆத்து மாமியின் குஞ்சம் எல்லாம் வச்சு கட்டி அட்டகாசமா உருவாக்கிட்டு அந்த வால்தான் ஹீரோ மாதிரி பீத்திகிட்டு இருந்தார்.
ஆண்டு விழா நாள் வந்தது. அனுமன் ஜெக ஜோதியா இருந்தார். சும்மா ஜல் ஜல்ன்னு சலங்கையோட சுத்தி சுத்தி வர்ரார். நான் தான் அசிஸ்டண்ட் டைரடக்கருன்னு நானும் எல்லார் கிட்டயும் போய் மார்தட்டிகிறேன், ஒரு பயலும் சீந்த மாட்டங்குரான். நாடகம் ஆரம்பமாச்சு. சீதை பொண்ணு தலைய விரிச்சு போட்டுகிட்டு நடுவே உக்காந்து இருக்க ஸ்பீக்கர்ஸ் டெஸ்க் மேல நம் ராதா பாய தயாரா உக்காந்து இருக்க நான் கயித்த புடுச்சிகிட்டு மேடைக்கு பின்னால நிக்கிறேன்.
இதுல யாருமே கவனிக்காத ஒரு விஷயம் என்னோட வெயிட்டும், ராதாவோட வெயிட்டும் தான். அவன் நல்லா புசு புசுன்னு அனுமார் மாதிரி இருப்பான், நானோ நோஞ்சான் குஞ்சு.
சார் எனக்கு சிக்னல் குடுத்தவுடனே நான் கயிர் இழுக்கனும், அப்போ ராதா அந்த ஸ்பீக்கர் டெஸ்கிலேர்ந்து மேலே பறப்பது போல் போவான். பின்ன சார் சிக்னல் குடுத்த உடனே நான் கொஞ்ச கொஞ்சமா கயிரை விடனும். அவன் அப்போ சீதைக்கு அருகே வந்து குந்துவான். இதுதான் பிளான்.
சார் சிக்கல் குடுத்தார். நானும் என் பலம் முழுதும் கொண்டு இழுக்க ராதா மேலே பறக்க விசில் சத்தம் காது கிழிஞ்சுது. எனக்கு கை கிழிஞ்சுது. ஓரளவுக்கு மேல என்னால ராதா வெயிட் தாங்க முடியலை. அந்தரத்தில பறந்த ராதா என் கைங்கரியத்தால் சீதாதேவிக்கு பக்கத்திலே பொத்துன்னு விழ படார்ன்னு ஒரு சத்தம். அவன் வாயில் கவ்வியிருந்த சின்ன ஆப்பிள் பலூன் படார்ன்னு வெடிக்க, சீதை அரக்கிகள் சகிதமாக கூட்டத்துக்குள்ள புகுந்து ஓட, இந்த களேபரத்துல கணேசன் சார் செஞ்ச வாலின் முனையிலுள்ள குஞ்சம் ஸ்பீக்கர் டெஸ்கில் எங்கியோ சமத்தியா மாட்டிக்க அது சாஞ்சு ராதாவின் பக்கத்தில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தது.
ராதாவுக்கு உள்ளி மூக்கு உடைஞ்சு ரத்தம் கொட்ட, பல் உதட்டில் குத்தி அங்கியும் ரத்தம். எல்லாரும் கிட்ட போய் பாத்தா ராதா ஞ்சா..ஞ்சா, ஞ்சான்னு ஏதோ சொல்றான். அதுக்கு சார் "இன்னும் அந்த பலூன் கருமத்த ஏன் வாயில கவ்விகிட்டு இருக்க துப்பிட்டு சொல்லுடா"ன்னு சொல்ல அவனும் துப்பிட்டு இப்போ அவன் வாயிலேர்ந்து ஞ்சா ஞ்சா ஞ்சா போய் ங்கா ங்கா ங்கா ன்னு வந்துச்சு.
சரின்னு ஃபஸ்ட் அய்டு ரூம்க்கு தூக்கிட்டு போகலாம்ன்னு பார்த்தா அந்த வால் ஸ்பீக்கர் டெஸ்கிலே நல்லா கழட்ட வராம மாட்டிகிச்சு.இந்த கணேசன் சார் ராதாவபத்தி கவலைபடாம வாலை பாத்து அழுதுகிட்டு இருக்கார். அந்த வாலை அறுத்தாதான் ராதாவை தூக்கிட்டு போக முடியும். "சார் எப்டியாவது வாலுக்கு சேதாரம் வராம பாத்துகுங்க"ன்னு கணேசன் சார் K.R சார்கிட்ட சொல்ல, ராதா ங்கா ங்கா ங்கான்னு கத்துறான்.
அதுக்கு சார் என்கிட்ட அவன் என்னடா சொல்றான்ன்னு கேக்க "என் மூஞ்சியே சேதாரமாயிட்டுது அவருக்கு வால் சேதாரம்தான் முக்கியமா"ன்னு கேக்குறான் சார்ன்னு சொன்னேன். பின்ன கணேசன் சார் சொன்ன மாதிரியே டெஸ்க்கை 2 பேர், ராதாவை 2 பேர்ன்னு ஃபஸ்ட் அய்டு ரூம்க்கு தூக்கிகிட்டு போக நடுவே ராமர் பாலம் மாதிரி ராதவுக்கும் டெஸ்க்குக்கும் வால். அதை ஜாக்கிரதையா தாங்கி பிடிச்சுகிட்டு கணேசன் சார். பின்ன பாலுசார் தலையிட்டு அந்த வாலை அறுத்துவிட்டு ஃபர்ஸ்ட் அய்டு ஆரம்பிச்சுது.
அதுக்கு பின்ன அந்த காயங்களினால் ராதா வாயை குரங்கு மாதிரி வச்சிகிட்டு திரிஞ்சான் கொஞ்சநாள். குரங்குராதா குரங்கு ராதான்னு யாராவது கூப்பிட்டா விரட்டி விரட்டி அடிப்பான். அடிச்சுட்டு என்கிட்ட வந்து "அந்த கயிர விட்டவன் யாருன்னு தெரிஞ்சா அன்னிக்கு இருக்கு அவனுக்கு"ன்னு புலம்புவான். நானும் ரொம்ப நாள் கயிர விட்டவனை அவன் கூட சேர்ந்து தேடிகிட்டே இருந்தேன்.
இப்போ சமீபத்துல தங்கமணி கிட்ட இருந்து போன். விஷயம் இதுதான். அவன் என் அட்ரஸ் வாங்க வீட்டுக்கு போயிருக்கான். அப்போ வாசலில் விளையாடிகிட்டு இருந்த அபிபாப்பாகிட்ட "போய் பாட்டிய கூப்பிடும்மா"ன்னு சொல்ல, பாப்பா "நீங்க யாரு"ன்னு கேக்க அவன் "ராதா"ன்னு சொல்ல, பாப்பா எந்த ராதான்னு கேக்க இவன் "குரங்கு ராதா"ன்னு சொல்ல அதுக்கு அபிபாப்பா "பாட்டி, அப்பா கயித்தவிட்டு மூஞ்சிய உடைச்ச குரங்கு ராதா அங்குள் உங்களை பாக்கனுமாம்"ன்னு சொன்னாலாம்.
இனிமே இதே போல சம்பவங்களை குழந்தைங்ககிட்ட சொல்லகூடாதுடா சாமீ!!
//இதே போல சம்பவங்களை குழந்தைங்ககிட்ட சொல்லகூடாதுடா சாமீ!! //
ReplyDeleteகூடவே இருந்து குழி பறிச்சுட்டு அபி பாப்பா மேல பழி போடுவது நல்லாவா இருக்கு
ராதாவை குரங்கு ராதாவாக ஆக்கிய கதைனு தலைப்பு வச்சு இருக்கனும்.
ReplyDeleteஅப்பவே உங்களுக்கு என்ன ஒரு வில்லத்தனம்....
//கூடவே இருந்து குழி பறிச்சுட்டு அபி பாப்பா மேல பழி போடுவது நல்லாவா இருக்கு //
ReplyDeleteஇப்போ ராதா என்னய தேடுவது போல ஆயிடுச்சேன்னுதான்:-))
//அப்பவே உங்களுக்கு என்ன ஒரு வில்லத்தனம்.... //
ஹய்யோ! அபிஅப்பாவி:-))
////அப்பவே உங்களுக்கு என்ன ஒரு வில்லத்தனம்.... //
ReplyDeleteஹய்யோ! அபிஅப்பாவி:-)) //
அதையேத்தான் நானும் சொல்றேன்
அபி அப்-பாவி
காலையில் இருந்து ப்லாக் எல்லாம் சரியா வேலை செய்யலை...என்ன காரணம் யார் செய்த தோரணம் ?
ReplyDeleteசெந்தழல் ரவி
//ராதாவை குரங்கு ராதாவாக ஆக்கிய கதைனு தலைப்பு வச்சு இருக்கனும்.
ReplyDeleteஅப்பவே உங்களுக்கு என்ன ஒரு வில்லத்தனம்....
//
ரிப்பிட்டே..
// நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்னு ஜீப்ல ஏறிக்கும் கேஸ் //
//சரி கமல் மாதிரி ஆக முடியாட்டியும் பாலசந்தர் மாதிரி ஆயிடலாம்ன்னு விட்டுட்டேன்.
//
:-)))))))
கலக்குறீங்க..
:-))) இதுவரை வந்ததுல நான் படிச்சதுல இதான் டாப்..
பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்..
//காலையில் இருந்து ப்லாக் எல்லாம் சரியா வேலை செய்யலை...என்ன காரணம் யார் செய்த தோரணம் ?//
ReplyDeleteஇவராத்தான் இருக்கும்.. :-)))
//அபி அப்-பாவி //
ReplyDeleteஅபி அப்பா பாவி??
laughing laughing, yesterday saw "mozhi" picture also. Anantha Padmanaban ninaippu vere vanthu sirippai adakka mudiyalaiyee sami, thaniya vere sirikkiren.:))))))))))))))))))))))))
ReplyDeleteAdvanced Congratulations.
:)))))))))
ReplyDeleteஎன்ன ஒரு வில்லத்தனம்???
பரிசு கிடைக்க வாழ்த்துக்கள் அண்ணா :)))
:)))
ReplyDelete//ராதாவை குரங்கு ராதாவாக ஆக்கிய கதைனு தலைப்பு வச்சு இருக்கனும்.//
ReplyDeleteரிப்பீட்டு :-)
பாப்பா மாதிரி நல்ல பசங்க இருக்கறதால தான் நாட்டுல நல்லதே நடக்குது :-))
ReplyDeleteஅட்ரஸ் கொடுத்துட்டாங்களா:-)
ReplyDeleteதப்பும் சேஞ்சிட்டு,
குழந்தைகிட்டயும் சொல்லிட்டு
இப்போ புலம்பலா?
நேத்திக்கே எமிரட்ஸ்ல டிக்கட் வாங்கிட்டதா கேள்வி.
இப்படியே ஜன்னல் வழியா தாடி வச்சுட்டு வெளில போயிடுங்க.!!
நல்ல காமெடி. விறுவிறுப்பு குறையாம எழுதி இருக்கீங்க.
ஒரு பேருக்குள்ள இத்தனை பெரிய
ReplyDeleteகதையா?
அப்ப போட்டி களைகட்டி வருது போல? எங்களுக்குத்தான் கொண்டாட்டம் படிக்க நிறைய கிடைக்குதே. ஆல் த பெஸ்ட்.
ராதா...இல்ல இல்ல குரங்குராதா கைல மாட்டினீங்களா இல்லயானு சொல்லவே இல்ல :-)
ReplyDelete/ராதா...இல்ல இல்ல குரங்குராதா கைல மாட்டினீங்களா இல்லயானு சொல்லவே இல்ல :-) /
ReplyDeleteஅப்புறம் அடுத்த வார பொழப்ப எப்படி ஓட்டுறது ..:))
பரிசை தட்டாம போக மாட்டீர் போலிருக்கே!! பலே பலே! நல்ல இருக்கு குரங்கு ராதா பெயர்க் காரணம்.
ReplyDeleteஅபிஅப்பா கலக்கிட்டிங்க போங்க. அபி பாப்பா ஒரு நல்ல வேலை செஞ்சி இருக்கு. ராதாவை குரங்கு ராதா ஆக்கினிங்க அவரு மேட்டார் தெரிஞ்ச உடனே உங்களை என்னவா மாத்தினாரு.
ReplyDeletekurangu radha kaila maati enna aaneenganu solli iruntha innum super comedya irunthuirukum
ReplyDeleteதல வழக்கம் போல கலக்கல் ;-))
ReplyDeleteவாழ்த்துக்கள் ;-)))
\\அய்யனார் said...
ReplyDelete/ராதா...இல்ல இல்ல குரங்குராதா கைல மாட்டினீங்களா இல்லயானு சொல்லவே இல்ல :-) /
அப்புறம் அடுத்த வார பொழப்ப எப்படி ஓட்டுறது ..:))\\
தல எதுக்கு கிடேசன் பார்க் மேட்டரை எல்லாம் இங்கே சொல்றிங்க.....பாவம் அபி அப்பா :(
//அதையேத்தான் நானும் சொல்றேன்
ReplyDeleteஅபி அப்-பாவி //
சென்ஷி தம்பி!
அபி அப்பாவி
அபிஅப்பா அப்ப பாவி
அபிஅப்பா இப்ப அப்பாவி
அதனால அபிஅப்பவி
எப்டி நம்ம கவிதை:-)
ஆஹா அபிஅப்பா... நீங்கெல்லாம் இப்படி காமெடிய அள்ளித் தெளிச்சீங்கன்னா, ஒரு பயலும் போட்டிக்கு போஸ்ட் போட மாட்டாங்க...
ReplyDeleteஇப்படி அநியாயத்துக்கு சாதா ராதாவ குரங்கு ராதா ஆக்கிவிட்டுட்டு, இப்ப அவரே குரங்கு ராதான்னு சொல்ற அளவுக்கு ஆக்கிட்டீங்களே...
நல்ல இருக்குங்க நகைச்சுவை பதிவு.. வெற்றி பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteஇன்னக்கி தான் உங்க பதிவ வாசிச்சேன். சத்தமா சிரிச்சதுல பக்கத்து சீட்ல இருந்தவன் ஒரு மாதிரி லுக் விடுறான்... அவன புறங்கையால தள்ளிட்டு மீண்டும் வாசிக்க ஆரம்பிச்சா... குபுக்... சிரிப்பு தான். கண்ணுல தண்ணி வர்ற மாதிரி சிரிப்பு... பக்கத்து சீட்காரனுக்கு பொறுக்கல போங்க. பக்கத்துல வந்துட்டு, ஒரே தொண தொணப்பு.... கதைய ஆங்கிலத்துல சொல்ல சொல்லுறான். காப்பி ரைட் உங்ககிட்ட இருக்கும் போது... நான் எப்படி.... உங்கள் புகழ பரப்புறது...
ReplyDeleteதலை, கலக்குறீங்களே
ReplyDelete//எங்க சட்டைய கழட்டு"ன்னார். படார்ன்னு சட்டைய கழட்டிட்டு டிராயரையும் கழட்டவா சார்ன்னு கேட்டேன்.//
ReplyDeleteஉங்களின் படீர்னு படிச்சதும் எனக்கு சடார்னு சிரிப்பு! சத்தம்போட்டு சிரித்துவிட்டேன் பெரியப்பூ...
//எனக்கு கை கிழிஞ்சுது. ஓரளவுக்கு மேல என்னால ராதா வெயிட் தாங்க முடியலை. //
இது நம்பும்படியாகா இல்லையே! முன்னமே பக்காப் பிளான் பண்ணி செய்ததுபோல் உள்ளது!:)
//"சார் எப்டியாவது வாலுக்கு சேதாரம் வராம பாத்துகுங்க"ன்னு கணேசன் சார் //
பாவம் அவர் பிரச்சனை அவருக்கு!
//அதுக்கு அபிபாப்பா "பாட்டி, அப்பா கயித்தவிட்டு மூஞ்சிய உடைச்ச குரங்கு ராதா அங்குள் உங்களை பாக்கனுமாம்"ன்னு சொன்னாலாம்.
//
இது அபி:))))))))
உலகத்தமிழ்வலைப்பதிவர்கள் மாநாடு நடைபெறும் பொழுது போடப்படும் நாடகத்தில் ஹனுமன் வேசம் உங்களுக்கு அந்தக் கயிறைப் பத்திரமாகா நான் பிடித்துக் கொள்கிறேன்!
நல்ல நகைச்சுவைப்பதிவு! வெற்றிபெற வாழ்த்துக்கள்!
அன்புடன்...
சரவணன்.
//காலையில் இருந்து ப்லாக் எல்லாம் சரியா வேலை செய்யலை...என்ன காரணம் யார் செய்த தோரணம் ?
ReplyDeleteசெந்தழல் ரவி //
எங்க வந்து எதை பத்த வக்கிறீங்க செந்தழல்? 4 பேர் பார்த்தா நான் தான் காரணம்ன்னு நெனச்சுக்க மாட்டாங்களா?:-))
ராமனாய் வேஷம் கட்டனும்ன்னு சொல்லி ராவனனாய் ராதாவை குரங்காக்கிட்டீங்க..
ReplyDeleteஅபி பாப்பா அபி பாப்ப்பாதான்..
ReplyDeleteஎன்னா சமத்து.. என்னா சமத்து!
கூட்.. கீப் இட் அப் செல்லம்.. :-)
டாப் டக்கர். வெற்றி பெற வாழ்த்துக்கள்...
ReplyDelete//:-))) இதுவரை வந்ததுல நான் படிச்சதுல இதான் டாப்..
ReplyDeleteபரிசு கிடைக்க வாழ்த்துக்கள்.. //
நன்றி மனதின் ஓசை:-))
//இவராத்தான் இருக்கும்.. :-)))//
ஆஹா:-))
அண்ணே,
ReplyDeleteஇந்த பதிவு சங்கத்தோட ஆண்டுவிழா போட்டியிலே பரிசு வென்றமைக்கு வாழ்த்துக்கள் :)
போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!! :-)
ReplyDeleteபோட்டியில கலக்கிட்டீங்க.
ReplyDeleteஎன் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!
வாழ்த்துக்கள்..
ReplyDeletei like ur sense of humour
ReplyDelete