நேத்து எனக்கு லீவ். மதியம் 1.15க்கு ஒரு போன் வந்தது. பெண் குரல். என்னை தெரியுதான்னு கேட்டாங்க.
"ஊகூம் தெரியலை" நீங்க சன் டி.வி அர்ச்சனாதானன்னு கேட்ட்க நினைத்து அந்த குரலில் உணரப்பட்ட கண்ணியத்தால் நாக்கை அடக்கி கொண்டேன்.
"நான் வலைப்பதியும் உங்கள் நண்பி தான்"
என் மர மண்டைக்கு அப்போதும் புரியவில்லை.
"நான் தான் ராமச்சந்திரன் உஷா"
"ஆஆஆ, கொஞ்சம் இருங்க மேடம் இங்கே ரேஞ்ச் கிடக்கலை"ன்னு சொல்லிகிட்டே மொட்டை மாடிக்கு ஓடினேன். அவங்க கிட்டே பேசனும் என்பதை விட என் ஜீனியஸ் தனத்தை காட்டி அசத்தனும் என்கிற கேவலமான மனப்பான்மை தான் அப்போது இருந்தது எனக்கு.
ஒரு வழியாக மொட்டை மாடிக்கு வந்து பேச ஆரம்பித்ததும், அவங்க "நான் இந்தியா திரும்ப போகிறேன், அதனால் தான் உங்க எல்லார் கிட்டயும் போய் வருகிறேன் என்று சொல்லிக்கதான் போன் செய்தேன்"ன்னு சொன்னாங்க.
அவங்க 1 மாதம் முன்னயே இந்தியா திரும்பி விட்டதாக யாரோ சொன்ன ஞாபகம் எனக்கு. அதனால் "நீங்க இன்னும் போகலையா?"ன்னு கேட்டேன்.
"ஏன், நா போறதுல அவ்வளவு ஆர்வமா?"
முதல் பாலிலேயே நான் அவுட். ஜீனியஸ் அபிஅப்பா ஓடியே போய்ட்டார். அந்த இடத்தில் ஒரிஜினல் அபிஅப்பா வந்து குந்திகிட்டார்.
"அய்யோ அப்படியில்லை, நா அந்த அர்த்தத்துல சொல்லலை, ஸாரி"ன்னு வழிஞ்சுட்டு சாதாரணமா பேச ஆரம்பிச்சாச்சு.
"என்னை மாயவரத்து மருமகள் ன்னு சொல்லுவாங்க"
இந்த வார்த்தை போதாதா எனக்கு. அவங்க எழுத்தின் காரணமாக எனக்கு இருந்த பயம் போய் ஒரு அன்னியோன்யம் வந்து விட்டது.
மாயவரத்துல எங்கன்னு ஆரம்பிச்சு அபிபாப்பா, ஆணாதீக்கம், தமிழ்மனம் எல்லாத்த பத்தியும் நல்ல தெளிவா கருத்து சொன்னாங்க.
ஆணாதீக்கம் பத்தி பேசும் போது நான் அவசரகுடுக்கையாக"நான் என் தங்கமணிக்கு முழு சதந்திரம் கொடுத்துள்ளேன்"ன்னு சொன்னேன்.
"பத்தீங்களா கொடுக்கும் இடத்தில் நீங்க இருக்கீங்கன்னு சொல்றீங்க, அப்படீன்னா எப்போ வேண்டுமானாலும் திருப்பி எடுத்துக்கலாம் அப்படிதானெ அர்த்தம்"
எனக்கு வியர்த்து விட்டது.(நான் தான் சொன்னேனே மொட்டை மாடியில் இருக்கேன்ன்னு)
"நாய் சேகரிய நான் ரொம்ப கேட்டதா சொல்லுங்க, இப்போ புடிங்க இந்த அருள் வாக்கை"ன்னு சொல்லிட்டு ஒரு அருள் வாக்கு தந்தாங்க. சிரிச்சு கிட்டே வாங்கிகிட்டேன்.
"சரி 12 வருஷ்ம் துபாய்ல குப்பை கொட்டியாச்சு, போய் வருகிறேன்" ன்னு சொல்லிட்டு போனை வச்சுட்டாங்க.
மனசு பாரமா இருந்துச்சு. ஏதோ என் நெருங்கிய சொந்தம் விருந்தாளியா வந்துட்டு ஊருக்கு போகும் போது ஏற்படும் உணர்வில் இருக்கேன்.
போய் வாருங்கள் அண்ணியாரே, ஆனால் எங்களை மறந்து விடாதீர்கள்.
திஸ்கி: இதென்ன அண்ணியாரேன்னா, அவங்க கணவரின் தம்பியும் நானும் நண்பர்கள், இது அவங்க பேசிகிட்டு இருக்கும் போதுதான் தெரிந்தது.
நாந்தான் ஃபர்ஸ்ட்டா?
ReplyDeleteஅபி அப்பா = ஜீனியஸ் அப்பா OR
ReplyDeleteஅபி அப்பா = காமேடி அப்பா?
நீங்க தான் ஃபர்ஸ்ட், குட் நல்ல பிள்ளை.
ReplyDelete//அபி அப்பா = ஜீனியஸ் அப்பா OR
அபி அப்பா = காமேடி அப்பா? //
நான் சாதாரண அபிஅப்பாதான். இல்லாத ஜீனியஸ்தனத்தை இருப்பது போல் காட்டிகிட்டா கிலீன் போல்டுதான்:-))
:))
ReplyDelete//ஆணாதீக்கம் பத்தி பேசும் போது நான் அவசரகுடுக்கையாக"நான் என் தங்கமணிக்கு முழு சதந்திரம் கொடுத்துள்ளேன்"ன்னு சொன்னேன்.
ReplyDelete"பத்தீங்களா கொடுக்கும் இடத்தில் நீங்க இருக்கீங்கன்னு சொல்றீங்க, அப்படீன்னா எப்போ வேண்டுமானாலும் திருப்பி எடுத்துக்கலாம் அப்படிதானெ அர்த்தம்"
//
அட! கரெக்டாத்தான் கலாய்ச்சிருக்காங்க!
//"ஏன், நா போறதுல அவ்வளவு ஆர்வமா?"
ReplyDelete//
உண்மையைத்தானே கேட்டிருக்காங்க! அதை சொல்றதுக்கு உங்களுக்கு ஏன் தயக்கம். தைரியமா ஆமான்னு உண்மையைச் சொல்லி இருந்தீங்கன்னா அடுத்த பந்து போட்டிருக்க மாட்டாங்கள்ள!
//முதல் பாலிலேயே நான் அவுட். ஜீனியஸ் அபிஅப்பா ஓடியே போய்ட்டார். அந்த இடத்தில் ஒரிஜினல் அபிஅப்பா வந்து குந்திகிட்டார்.
//
:))
:))
// தம்பி said...
ReplyDelete:)) //
என்ன சிரிப்பு தம்பி!
\\மனசு பாரமா இருந்துச்சு. ஏதோ என் நெருங்கிய சொந்தம் விருந்தாளியா வந்துட்டு ஊருக்கு போகும் போது ஏற்படும் உணர்வில் இருக்கேன்.\\
ReplyDeleteம்ம்ம்.....நானும் கேள்விப்பட்டேன் ;-(
மீண்டும் சந்திப்போம்.....சென்னையில் ;-)))
ஆணாதிக்கம் பத்திப் பேச நான் கோச்சிங் கிளாஸ் ஆரம்பிக்கப் போறேன். சேர்ந்துக்கறீங்களா? எனக்கு என்ன தகுதியா? பாடல் பெற்ற திருத்தலம் மாதிரி ப்ரொபைலிங் செய்யப்பட்ட அ.ஆ.வாதி ஐயா நான்!
ReplyDeleteஅது சரி. அருள்வாக்கு என்னன்னே சொல்லலையே!:))
//அட! கரெக்டாத்தான் கலாய்ச்சிருக்காங்க! //
ReplyDeleteசிபி என்னய கலாய்சா என்ன ஒரு கொண்டாட்டம்:-))
//உண்மையைத்தானே கேட்டிருக்காங்க! அதை சொல்றதுக்கு உங்களுக்கு ஏன் தயக்கம். தைரியமா ஆமான்னு உண்மையைச் சொல்லி இருந்தீங்கன்னா அடுத்த பந்து போட்டிருக்க மாட்டாங்கள்ள!//
:-))))
//ம்ம்ம்.....நானும் கேள்விப்பட்டேன் ;-(
ReplyDeleteமீண்டும் சந்திப்போம்.....சென்னையில் ;-))) //
ஆமாம் கோபி, சென்னையில் சந்திப்போம்!
//சிபி என்னய கலாய்சா என்ன ஒரு கொண்டாட்டம்//
ReplyDeleteயாரைக் கலாய்ச்சாலும் எனக்கு கொண்டாட்டம்தான்.
கலாய்க்குறது எனக்கு ரொம்ப பிடிக்கும்!
ஆனா கலாய்க்குறது நானா இருக்கணும்!னு கொஞ்ச நாள் புரொஃபைல்ல கூட போட்டிருந்தேன்!
//இதென்ன அண்ணியாரேன்னா, அவங்க கணவரின் தம்பியும் நானும் நண்பர்கள், இது அவங்க பேசிகிட்டு இருக்கும் போதுதான் தெரிந்தத// உலகம் மிக சிறுசு. //மனசு பாரமா இருந்துச்சு// காமெடி அபி அப்பாக் கூட சிரியஸாவீங்களா? சரி உஷா மேடம் போய்டாங்களா? எப்ப போறாங்க? ஏன் போறாங்க?
ReplyDelete//இலவசக்கொத்தனார் said...
ReplyDeleteஆணாதிக்கம் பத்திப் பேச நான் கோச்சிங் கிளாஸ் ஆரம்பிக்கப் போறேன். சேர்ந்துக்கறீங்களா? எனக்கு என்ன தகுதியா? பாடல் பெற்ற திருத்தலம் மாதிரி ப்ரொபைலிங் செய்யப்பட்ட அ.ஆ.வாதி ஐயா நான்!
அது சரி. அருள்வாக்கு என்னன்னே சொல்லலையே!:)) //
ந்ந்ப்239ச்ம்2ஒஃஒச்ச்ஜ்ச்ம் ந்ட்ச்/ச்' இதுதான் என் பதில் எப்டி! மாட்டிவிட பாத்தா மாட்டிடுவோமா?:-))
அருள் வாக்கு எனக்கு மட்டுமே, உங்களுக்கு ஏற்கனவே கிடச்சாச்சு:-))
இதுக்குதானய்யா மாயவரத்து ஆளுங்கக்கூட சகவாசமே வெச்சிக்கூடாது என்னுறது. மாயவத்து குசும்பு தலைப்பை பார்த்தா நான் என்னவோ எழுதுவதையே நிப்பாட்டுறேனு சொல்லுகிறா மாதிரி இருக்கு. ஊரை விட்டு தானே போறேன்னு சொன்னேன், இதையே
ReplyDeleteபோஸ்டரா அடிச்சி கரோமா பார்க் வாசலாண்ட வெச்சா சரியா இருக்கும். போதா குறைக்கு கவிஞர் தம்பி, வேற புன்சிரிப்பு சிரிக்கிறார். மதியம் பன்னிரெண்டரை மணிக்கு போன் அடிச்சா, அவர் குரலில் தாக்கத்தைப் பார்த்து ஒரு வேளை பாதி ராத்திரி
பன்னிரெண்டரைக்கு போன் போட்டுவிட்டேனோ என்று குழம்பிப் போய்ட்டேன்.
இலவசம், அபி அப்பா வர வர சிறந்த படைப்பாளி ஆகிவருகிறார் என்பதை அவரின் கற்பனை வளம் மிகுந்த இந்த பதிவு சொல்கிறது. அவரிடம் ஆ/பெ ஆதிக்க கருத்துகளுக்கு நான் சொன்ன ஓரே பதில், இதையெல்லாம் திருமதி. அபி அப்பாவிடம் பேச வேண்டிய விஷயங்கள் என்று சொல்லி முடித்துவிட்டேன்.
பி.கு அ. அ! எங்கும் ஸ்மைலி போடவில்லை என்பதை கவனிக்கவும் :-))))
எங்கே வழக்கமான எழுத்துப்பிழைகளை கானோம்...ஏதாவது ஆள் வெச்சு எழுதறீங்களா ?
ReplyDeleteஅண்ணிக்கிட்ட பன்னு வாங்கியதை இப்படி ஊரறிய சொல்லி சொ.செ.சூ வா...
நடத்துங்க..
பெண்"ணீ"யம் அப்படின்னு சில பேர் எழுதறாங்க..
ReplyDeleteஅப்படிப் பார்த்தா ஆணா"தீ"க்கம்.. ஹை இது கூட நல்லாருக்கே :-)
//மாயவரத்துல எங்கன்னு ஆரம்பிச்சு அபிபாப்பா, ஆணாதீக்கம், தமிழ்மனம் எல்லாத்த பத்தியும் நல்ல தெளிவா கருத்து சொன்னாங்க.//