நண்பர் திரு. பொதக்குடியான் இங்கே ஒரு பதிவு போட்டிருந்தார். அது பற்றிய மேல் விபரங்கள் என்னிடம் இருக்கிறது தருகிறேன் இன்னும் கொஞ்சம் விளக்கமாக போடுங்கள் என்று பின்னூட்டமிட்டேன். அவரும் சரியென்றார். ஆனால் அந்த வீடியோ(கிராஃபிக்ஸ்) 116 MB யாக இருப்பதால் யூடியூபுக்குள் திணிக்க முடியவில்லை, மெயிலிலும் அனுப்ப முடியவில்லை. அதனால் கொஞ்சோண்டு இங்கே தருகிறேன்.
.
.
இதோ நிக்குதே "புர்ஜ் துபாய்" என்னும் இந்த கட்டிடம்...2008 ல் கட்டி முடிச்சவுடன் இப்படிதான் இருக்கும்.
இதோ நிக்குதே "புர்ஜ் துபாய்" என்னும் இந்த கட்டிடம்...2008 ல் கட்டி முடிச்சவுடன் இப்படிதான் இருக்கும்.
.
இந்த ஒப்பீட்டை பாருங்கள்!
.
கனாரி வாஃர்ப்-லண்டன் - உயரம் 235 மீட்டர்(771 அடி)
.
எம்பயர் ஸ்டேட்- நியூயார்க் - உயரம் 381 மீ(1250 அடி)
.
சியர்ஸ் டவர் - சிக்காக்கோ - 442 மீ(1450 அடி)
.
பெட்ரோனாஸ் டவர் - கோலாலம்பூர் - 452 மீ(1483 அடி)
.
தேய்பே டவர் - ஜப்பான் - 509 மீ(1671 அடி)
.
ஆனால் நம்ம புர்ஜ் துபாய் 800மீட்டர் உயரம் (2625 அடி)
.
06/03/2007 இன்று 117வது மாடிக்கு காங்கிரீட் ஓடிக்கொண்டிருக்கிறது.
மொத்தம் 160 மாடிகள்.
.
இதெல்லாம் விஷயமில்லை. இந்த கட்டிடம் இந்தியாவில் இருந்து நமது அரசாங்கம் " இந்த தமிழ் பிளாக்கர் எல்லாம் ரொம்ப நல்லவங்க, அவிங்க யாராவது பேர் வைக்கட்டும்"ன்னு ஒரு சான்ஸ் நமக்கு குடுத்தா நீங்க என்ன பேர் வைப்பீங்க கட்டடத்துக்கு - அது தான் கேள்வி.
.
நீங்கள் வைக்கும் பெயரையும் சொல்லுங்க, உங்கள் வலை நண்பர்கள், மற்றவர்கள் வைத்தால் இன்ன பெயரைதான் வைப்பார்கள் என்பதையும் சொல்லுங்கள்.
.
உதாரணத்துக்கு நண்பர் செந்தழலார் வச்சா - "வீராசாமி டவர்" இப்டியாக...
.
வந்து குமுறுங்க...ஸ்டாட் மீசிக்...
விபரமான தகவலுக்கு மிக்க நன்றி திரு.அபி அப்பா.அது சரி பெயர்தான் புர்ஜ் துபை என்று வைத்துள்ளார்களே?
ReplyDelete(ஏரியா பெயராக இருக்குமோ)
சரி பெயரை பிடித்து கொள்ளுங்கள்
WISDOM TOWER
வாங்க திரு.பொதக்குடியான்!! இந்த டவருக்கு பெயர் வச்சாச்சு"புர்ஜ் துபாய்". நான் சொல்வது நம்ம நாட்டிலே இந்த கட்டிடம் இருந்தால்... நமக்கு பெயர் வைக்க அனுமதி குடுத்தா..அப்டீன்னுதான். வருகைக்கு மிக்க சந்தோஷம்.
ReplyDeleteதல : பாகச அகம்
ReplyDeleteபொன்ஸ் : ரெஸ்ட் ஹவுஸ்
வரவணை : பின்நவீனத்துவ பெரிய விடுதி
அப்புறம்...
அபி அப்பா : துபையில் என் வீடு
(அபிஅப்பாவிடம்) மாட்டிக்கிட் டவர்
ReplyDelete;-)
அபி அப்பா...காலையில பேசின விஷயத்தை அதுக்குள்ளவா மறந்துட்டீங்க...வாழ்க உங்கள் ஞாபகசக்தி...
ReplyDeleteசரி...பதிவுக்கு வருவோம்...
"கிடேசன் டவர்"...
//தல : பாகச அகம்
ReplyDeleteபொன்ஸ் : ரெஸ்ட் ஹவுஸ்
வரவணை : பின்நவீனத்துவ பெரிய விடுதி
அப்புறம்...
அபி அப்பா : துபையில் என் வீடு//
வாங்க சென்ஷி! நல்லாதான் இருக்கு நம்ம வீடு:-)))
//(அபிஅப்பாவிடம்) மாட்டிக்கிட் டவர்
ReplyDelete;-) //
வாங்க பாலராஜன் கீதா! "மாட்டிகிட்" டவர்....நச்சுன்னு இருக்கு
//சரி...பதிவுக்கு வருவோம்...
ReplyDelete"கிடேசன் டவர்"...//
கோபி! அசத்தல் போங்க, நம்ம சங்கத்துக்கு இம்மாம் பெரிய கட்டிடமா?? good
மொக்கைனு நீங்களே சொல்லிட்டீங்க, இருந்தாலும் இதை விட மொக்கையை இன்னும் பார்க்கலை! மொக்கையோ மொக்கை! :P
ReplyDeleteஅப்புறம் கோபிநாத் சொன்னதை நான் வழி மொழிகிறேன். சொல்ல ஆவலுடன் ஓடி வந்தால் ஏற்கெனவே சொல்லித் தொலைச்சிருக்கார். தலைவி வந்து திட்டிட்டுப் போனதாச் சொல்லி வைங்க அவர்கிட்டே! :)))))))
//மொக்கைனு நீங்களே சொல்லிட்டீங்க, இருந்தாலும் இதை விட மொக்கையை இன்னும் பார்க்கலை! மொக்கையோ மொக்கை! :P//
ReplyDeleteமேடம்! நா ஒழுங்கான பதிவுதான் ஆரம்பித்தேன். போட்டோஸ் புகுத்த முடியலை. கிராஃபிக்ஸ் வீடியோ புகுத்த முடியலை. ஏகப்பட்ட intruptions.. நல்ல பசிவேற.. பார்த்தேன் டக்குன்னு மொக்கையா ஆக்கிட்டு கிளம்பிட்டேன்.
1 வாரம் முன்ன 113 வது மாடி காங்கிரீட் ஓடிகிட்டு இருந்தப்ப போனேன். லிப்ட் சும்மா ஜிவ்வுன்னு கிளம்பி 6 நிமிஷத்துல போய் சேந்துச்சு.
அந்த அனுபவத்தையே ஒரு பதிவா போடலாம்!!
என்னய்யா தொல்ஸ், தமிழ் பிளாக்கரிடம் பெயர் கேட்டா என்னஎன்னமோ பெயர் வைக்கிறாங்க.
ReplyDeleteதமிழ் கோபுரம்.
லியோ சுரேஷ்
அபி அப்பா, இந்தாங்க லிஸ்ட்டு.. எது வேணுமோ பிடிச்சுக்கோங்க..
ReplyDelete1- நிக்குமோ நிக்காதோ
2- உயருமோ உயராதோ
3- போட்டிக்கு போட்டி
4- ஒட்டக (சிவிங்கி) டவர்
5- Great Tower (Wall) of Dubai(China)
இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம்.. அபி பாப்பா கிட்டெ ஒரு வார்த்த கேலுங்க.. ஓ கே வா??
Complan Tower
ReplyDeleteஆமா, எனக்கு ஒரு டவுட்டு. இந்த கோபுரம் 40-க்கு மேலே போக அனுமதிப்பாங்களா? இல்லை பக்கத்துல ஒரு கோபுரம் கட்டி வழி காண்பிக்கனுமா?
ReplyDelete40 மாடிக்கு மேலே கட்டறதே தப்பு ..160 மாடியா..
ReplyDeleteபதிவராக இப்போதைய ட்ரெண்டிற்கு
தகுந்தாப்பல...
எல்லைமீறிய கோபுரம்.
//ஆமா, எனக்கு ஒரு டவுட்டு. இந்த கோபுரம் 40-க்கு மேலே போக அனுமதிப்பாங்களா? இல்லை பக்கத்துல ஒரு கோபுரம் கட்டி வழி காண்பிக்கனுமா?//
ReplyDelete:)))))))))))))
//பாலராஜன்கீதா said...
(அபிஅப்பாவிடம்) மாட்டிக்கிட் டவர்
;-) //
ஏகபோகமா முடிவு செஞ்சாச்சு..
இதுதான் பேரு...
வச்சிருங்க :))
சென்ஷி
ENTHA TAVARUKU ABITAR TAWARU VAIKKALAM. VADIVEL PARAMAKUDI.
ReplyDeleteமொக்கையிலா டவர்
ReplyDeleteM
இந்த உயரத்தை முறியடிக்க சீனா
ReplyDeleteமுயற்சி மேலும் விபரம் இங்கே
http://anony-anony.blogspot.com/2007/05/blog-post.html
ReplyDeleteஅபி அப்பா ,துபைல பார்க்கிறதுக்கு இன்னோரு இடம் வந்துடுத்தா.
ReplyDeleteநல்லா இருக்கே. நீங்க அதில ஏறி வேற பார்த்துட்டீங்களா!!!!
நான் வச்சா சௌகார்ஜானகி டவர்
துளசி வச்சா ஜிகே டவர்
அபி அப்பா வச்சா பாப்பா டவர்
ரவி வச்சா மாதவி டவர்
கொத்ஸ் வச்சா டிஸ்கி டவர் .
சும்மா புலம்பரதனாலே சிங்கம் எனக்கு வச்ச பேரை உங்களுக்கு இலவசமா கொடுக்கறேன்:-))))))))
துபைல பார்க்கிறதுக்கு இன்னோரு இடம் வந்துடுத்தா.
ReplyDelete//
ஆனா நிக்கிறத்துக்குதான் இடம் இல்லை
அவ்வளவு நெரிசல் அதுவும் சம்மர் ஐய்யயோ தாங்கல
மின்னல் வச்சா கும்மி டவர்
ReplyDelete