நான் வீட்டுக்குள் நுழையும் போது பாப்பாவும் டைகரும் ஓடி புடுச்சி விளையாடிக்கிட்டு இருந்தாங்க. என்னய பாத்ததும் "அப்பா எங்க மிஸ் உங்கள அவுங்களுக்கு போன் பண்ண சொன்னாங்க"ன்னு சொன்னா. பாப்பா நல்லா படிக்கிறதால ஏதாவது பண முடிப்பு தரப்போறாங்களோன்னு நெனச்சுகிட்டு போன் பண்ணினேன்.
"மிஸ் நா அபிஅப்பா. போன் செய்ய சொன்னீங்களாமே?" ன்னு கேட்டேன். அதுக்கு அவங்க "ஆமா, நாளைக்கு 'ஸ்போர்ட்ஸ் டே' அபி 3 ஈவண்டுக்கு சேத்துருக்கோம். பன் சாப்பிடுற போட்டி, சாக்கு ரேஸ், அப்புறம் லெமன்-ஸ்பூன் ரேஸ்" அப்டீன்னாங்க.
"சரி மிஸ் என்னன்ன எடுத்துகிட்டு வரணும்"ன்னு கேட்டேன். அதுக்கு அவங்க"சாக்கு ரேஸ்க்கு சாக்கு, லெமன்-ஸ்பூன் ரேஸ்க்கு லெமனும் ஸ்பூனும்"ன்னு சொன்னாங்க. நான்" பன்னு சாப்பிட என்ன கொண்டு வரனும்"ன்னு கேக்க "ம். வாயிதான்"ன்னு சொல்லி போன வச்சுட்டாங்க. ரொம்பதான் மிஸ்சுக்கு வாய்ன்னு நெனச்சுகிட்டு தங்கமணி கிட்ட விஷயத்த சொல்லிட்டு கிடுகிடுன்னு உபகரணங்களை ரெடிபண்ண ஆரம்பிச்சுட்டோம்.
பாப்பாவ பெரிய ஸ்போர்ட்ஸ் ஸ்டாரா அஞ்சு ஜார்ஜ் மாதிரி மாத்தணும்னு முடிவு செஞ்சாச்சு. அதுக்கு அந்த கெட்டப்ல மாத்தணும்னா டிராக் சூட், ஸ்போர்ட்ஸ் ஷு வாங்கணும்ன்னு 3அடி உயர சூட்டுக்கும், 4.5 இன்ச் ஷுவுக்கும் அலஞ்சி திரிஞ்சி வாங்கிட்டோம். தலை முடியெல்லாம் அஞ்சு மாதிரி குதிர வால் போட்டு கலக்கியாச்சு.
நான் போய் சாக்கும் ரெடி பண்ணிட்டேன். தன் பங்குக்கு பாப்பா கொல்லையில் இருந்து எலுமிச்சம் பழம் பொறுக்கிகிட்டு கிச்சன் போய் ஸ்பூனும் எடுத்துகிட்டு தன் ஸ்கூல் பேக்கில் வச்சுகிட்டா.
மறுநாள் காலையிலேயே கோயிலுக்கு போயிட்டு தேங்காய உடச்சிட்டு பாப்பாவ தூக்கிகிட்டு தங்கமணி, டைகர் சகிதமா களத்தில் குதிக்க கெலம்பியாச்சு.
முதல்ல பன்னு துன்ற போட்டி. பாப்பாவும் ஜாம்பவான் ஜாம்பவிகள் மத்தியில சும்மா கலக்கலா குந்திகிட்டு இருக்கு. அதோட கெட்டப்ப பாத்தா 10 பன்னு சாப்பிட்டுட்டு ப்த்தாதுன்னு கேக்கும் போலயிருக்கு. கண்டிப்பா பாப்பா இந்த ஈவன்ட்ல கலக்கப்போறா!
போட்டி ஆரம்பிச்சுது. தங்கமணி ஒரு பன் எடுத்து பாப்பாவுக்கு ஒரு வாய் டைகருக்கு ஒரு வாய்ன்னு அரை மணி நேரம் ஊட்டி விட்டுட்டு(வீட்டில் அப்டி ஊட்டினாதான் கொஞ்சமாவது சாப்பிடும்) "ஐ நான் ஜெயிச்சாச்சு. பாப்பாவ சாப்பிட வச்சாச்சு"ன்னு சந்தோஷப்பட்டுகிட்டாங்க.
பக்கத்து வீட்டு ராமனாதன் பையன் 5 சாப்பிட்டு 6 வது வேணும்னு அடம் புடிக்கிறான். சரி..இந்த ஈவண்ட் அவுட்டு. அடுத்ததுல பாத்துப்போம்னு சாக்கு ரேஸ்க்கு தயாராயிடோம்.
லைன்ல போய் நின்னு சாக்கை பிரித்தா அது சும்மா 5 அடிக்கு அவங்க மிஸ்ஸ உள்ள போட்டு கட்டலாம் போல இருக்கு. பிரிச்சு பாப்பாவ உள்ள இறக்கிவிட்டா தக்கினியூண்டு உள்ள கிடக்குறா. சாக்கு ரேஸ்ன்னா என்னான்னே தெறியாத பாப்பாவுக்கு இந்த முஸ்தீபுகளிள் பயங்கர சந்தோஷம். பெரிய சாக்கு எடுத்துட்டு வந்ததால நாதான் தங்கமணிகிட்ட..
இப்ப என்ன செய்யறதுன்னு யோசிச்சுகிட்டு இருந்தப்ப அவங்க பிரின்சிபால் மைக்கிலே"குழந்தைகளுக்கு அவங்க அவங்க பேரன்ட்ஸ் ஹெல்ப் செய்யலாம்"ன்னு சொன்னாங்க. அப்பதான் உயிரே வந்துச்சு.
ரெடி ஸ்டாட் சொன்னதும் நான் ஒருபக்க சாக்கின் வாயை பிடிச்சுகிட்டும் தங்கமணி ஒரு பக்கமாவும் பிடிச்சு தூக்கிகிட்டு ஓட ஆரம்பிச்சுட்டோம். பாப்பா ஏதோ பால்கனி கைப்புடிய பிடிச்சுகிட்டு தெருவ வேடிக்க பாக்குற மாதிரி ஜாலியா வருது. கூடவே டைகரும் ஓடி வருது. எனக்கே மூச்சு வாங்குது. இதுல பாப்பா என்னய பாத்து"அப்பா டைகர் பாவம்பா, அதையும் தூக்கி உள்ள போடுப்பா"ங்குது.
பய புள்ளங்க என்னமா ஓடுது. பாப்பா ஒழுங்கா நின்னுகிட்டு வராம பக்கத்துல வர்ர அவ ஃபிரன்ட் கிட்ட "பிரியா! நா புதுசா ஷு வாங்கிருக்கேனே"ன்னு சொல்லிகிட்டு காலை தூக்குறேன்னு பொதக்கடீன்னு சாக்கு உள்ளயே விழுந்துட்டா. சரி ஜெயிச்ச பிறகு தூக்கிப்போம்ன்னு வேர்க்க வேர்க்க இரண்டாவதா வந்து ஜெயிச்சோம்.
பரிச வாங்க போனா "போங்க போங்க அடுத்த கிரவுண்ட பாத்து"ன்னு பிச்சகாரன வெரட்டுற மாதிரி வெரட்டுராங்க பிரின்ஸ். "குழந்தைங்க கீழே விழுந்தா தூக்கி விட்டு ஹெல்ப் பண்ண சொன்னா நீங்களே தூக்கிகிட்டு ஓடுறீங்களே"ன்னு திட்டு வேற.
பாப்பா இத பத்தியெல்லாம் கவலைப்படாம அடுத்த ஈவண்ட்க்கு தயாராயிட்டா. தன் பேக்க எடுத்துகிட்டு ஸ்பூன் லெமன் சகிதமா கிளம்பிட்டா. நாங்க வந்தாதான் சொதப்பிகுதேன்னு அவளை தனியா விட்டாச்சு.
போன 3நிமிஷத்துலேயே "அப்பா நா இஜக்டட்"ன்னு சொல்லிகிட்டு திரும்பிட்டா. வர வர இந்த டீச்சர்களின் அட்டகாசங்கள் தாங்கலையேன்னு நேரா மிஸ்கிட்ட போய்"ஏன் அபி ரிஜக்டட்"ன்னு கேட்டேன். அவங்க பாப்பா பேக்க திறந்து எடுத்து காட்டினாங்க. ஒரு பெரீய்ய சாம்பார் குழி கரண்டியும், சுண்டைகாய் சைசுக்கு ஒரு லெமனும் இருந்துச்சு. சரிதான். பரவாயில்ல சின்ன குழந்ததானன்னு அனுமதிச்சு இருக்கலாம். மோசமான ஸ்கூலு.
ஆக ஒரு வழியா பாப்பா ஸ்போர்ட்ஸ் டேயை முடிச்சுகிட்டு வீட்டுக்கு வர்ர வழியில ஒரு கடைல ஒரு சோப்பு டப்பா, ஒரு எவர் சில்வர் தட்டு, ஒரு பென்சில் பாக்ஸ் வாங்கி பாப்பா கைல குடுத்து "பாட்டி கேட்டா நீ ஜெயிச்சு வாங்குனன்னு சொல்லனும்னு" சொல்லி குடுத்து வீட்டுக்கு கூட்டி வந்தா உள்ள நுழைச்ச உடனே அம்மாகிட்ட"பாட்டி நானு கிரவுண்டுல ஜெயிச்சதால அப்பா இதல்லாம் கடைல வாங்கி குடுத்தாங்க"ன்னு போட்டு உடச்சுட்டா.
நான் இன்னும் கொஞ்சம் வெவரமா சொல்லிகுடுத்து கூட்டி வந்திருக்கலாமோ!!!
நீரு ஒரு முடிவோடதேன் எழுத ஆரம்பிச்சிருக்கீரு போலும்.போமய்யா சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணி.'கோலங்கள் அபிக்காக' கூட நான் இவ்ள்ளோ தண்ணி வுடல.
ReplyDeleteஅபி அப்பா வாழ்க உமது சேவை.
[ரொம்பத்தான் நெனச்சிக்கிடாதேயும் அப்பத்தேன் நீரு எமக்கு பதில் போடுவீரு]
ரியல்லி நைஸ்
//நான் இன்னும் கொஞ்சம் வெவரமா சொல்லிகுடுத்து கூட்டி வந்திருக்கலாமோ!!! //
ReplyDeleteஉம்ம வெவரந்தான் அபிகுட்டி ஒவ்வொரு போட்டியிலும் சொதப்பும் போது தெரியுதே
சாக்குப் பை போட்டிக்கும் அஞ்சு ஜார்ஜுக்கும் என்ன சம்மந்தம்.
தொல்ஸ்,
ReplyDelete//நான் இன்னும் கொஞ்சம் வெவரமா சொல்லிகுடுத்து கூட்டி வந்திருக்கலாமோ!!!//
இல்லாதத பத்தியெல்லாம் பேசிகிட்டு.. என்ன இது சின்னபுள்ள தனமாயில்ல இருக்கு :-)
லியோ சுரேஷ்
//நான்" பன்னு சாப்பிட என்ன கொண்டு வரனும்"ன்னு கேக்க "ம். வாயிதான்"ன்னு சொல்லி போன வச்சுட்டாங்க.
ReplyDelete//
:)
//இந்த முஸ்தீபுகளிள் பயங்கர சந்தோஷம். பெரிய சாக்கு எடுத்துட்டு வந்ததால நாதான் தங்கமணிகிட்ட..
//
:))))))
//சொல்லி குடுத்து வீட்டுக்கு கூட்டி வந்தா உள்ள நுழைச்ச உடனே அம்மாகிட்ட"பாட்டி நானு கிரவுண்டுல ஜெயிச்சதால அப்பா இதல்லாம் கடைல வாங்கி குடுத்தாங்க"ன்னு போட்டு உடச்சுட்டா.
//
அப்பனுக்கு தப்பாம பொறந்துருக்கு. :)
யோவ்... என்னய்யா இது.. இதுக்கு ஒரு முடிவே இல்லையா? தாங்கலய்யா.... சிரிச்சு சிரிச்சு வயிறு வலி தாங்கல...
ஆமா. வெள்ளிக்கிழமை பள்ளிக்கூடத்து வர்ரேன்னு சொல்லிட்டு ஏன் வரலை? வைரமுத்து ரொம்ப கோவிச்சுகிட்டாரு. :(
ReplyDeleteஇந்த விவரத்துக்கே உங்களோடயும் உங்க மகளோடயும் "லொள்ளு" தாங்கலை! இன்னும் விவரமாவா? வேண்டாம், சாமி, வயிறு வலிக்குது, விட்டுடுங்க! :))))))))))))))))))))))
ReplyDeleteஒண்ணு சொல்லறேன், உம்ம பொண்ணு எடுத்துக்கிட்ட ஸ்பூன்(!) சைஸிலிருந்தே தெரியுது. நம்ம நாட்டின் அடுத்த தலைவிகள் லிஸ்டில் பேரு போல்ட் எழுத்துக்களில் இருக்குன்னு!
ReplyDeleteஉக்காந்து யோசிப்பாய்ன்ங்களோ.... முடியல...
ReplyDeleteடெலிகேசி.
நல்லா இருக்கு...
ReplyDeleteரொம்ப நல்லா...
பேஷ் பேஷ்...
என்ன ஓய் அசத்திட்டேல் காணும்..
நல்லா இருக்கு...
ReplyDeleteரொம்ப நல்லா...
பேஷ் பேஷ்...
என்ன ஓய் அசத்திட்டேல் காணும்..
நான் இன்னும் கொஞ்சம் வெவரமா சொல்லிகுடுத்து கூட்டி வந்திருக்கலாமோ!!!
ReplyDelete"வெவரமா" நமக்கும் அதுக்கும்தான் ஸ்நானப்பிராப்தியே கிடையாதே இதுக்கு தங்கமணிபேச்சையாவது ஒழுங்கா கேட்டிருந்தா மானத்தை கொஞ்சமாவது காப்பாத்தியிருக்கலாம்.
அதுசரி வயத்துவலி மருந்து ஒரு பாட்டில் அனுப்பிவைய்யும் உடனே.
சூப்பர் எக்ஸ்பீரியன்ஸ் :-)
ReplyDeleteநல்ல நகைச்சுவையா சொல்லீயிருக்கீங்க....
//
அதோட கெட்டப்ப பாத்தா 10 பன்னு சாப்பிட்டுட்டு ப்த்தாதுன்னு கேக்கும் போலயிருக்கு
//
LOL :-)
//
"பாட்டி நானு கிரவுண்டுல ஜெயிச்சதால அப்பா இதல்லாம் கடைல வாங்கி குடுத்தாங்க"
//
செம காமிடி... வயிறு வலிக்குது !!!
vizhunthu vizhunthu sirichchen.. engke adi padduccunnu kEdkappadaathu..
ReplyDeleteReally nice.. Vazhga ngal ezuththu.. niraiya ezuthungka.. :-D
சின்னப் பிள்ளைக்கு பொய் சொல்ல
ReplyDeleteகத்துக்குடுக்க நினைச்ச பாவம் உங்கள
சும்மாவிடாது சொல்லிட்டேன்.
என்னய்யா இது? எங்க நான் போட்ட பின்னூட்டம்?
ReplyDelete//யோவ்... என்னய்யா இது.. இதுக்கு ஒரு முடிவே இல்லையா? தாங்கலய்யா.... சிரிச்சு சிரிச்சு வயிறு வலி தாங்கல...//
ReplyDeleteRepeattu..
அபி அப்பா...
ReplyDeleteஎன்னத்தச் சொல்ல....
ஒவ்வொரு போஸ்டும் அப்படியே எல்லாத்தையும் சுண்டி இழுக்குற மாதிரில்லா இருக்குது....
அப்படியே கண்டினிவ் பண்ணுங்க அண்ணாச்சி...
கண்மணி:
ReplyDelete//சாக்குப் பை போட்டிக்கும் அஞ்சு ஜார்ஜுக்கும் என்ன சம்மந்தம்//
நான் நினைக்கிறேன்.. "தலை முடியெல்லாம் அஞ்சு மாதிரி குதிர வால் போட்டு கலக்கியாச்சு." அப்படின்னு பதிவுல சொல்லிருக்காருல்ல, அதான் இப்படித் தலைப்பு வச்சு பதிவு போட்டுட்டாருன்னு நினைக்கிறேன். (சரி, அஞ்சு ஜார்ஜுன்னா யாரு? :-( )
//சாக்கை பிரித்தா அது சும்மா 5 அடிக்கு அவங்க மிஸ்ஸ உள்ள போட்டு கட்டலாம் போல இருக்கு//
-- ஹாஹா...
//இதுல பாப்பா என்னய பாத்து"அப்பா டைகர் பாவம்பா, அதையும் தூக்கி உள்ள போடுப்பா"ங்குது.//
-- ஐயோ சிரிப்பு வெடி :-D
//காலை தூக்குறேன்னு பொதக்கடீன்னு சாக்கு உள்ளயே விழுந்துட்டா. சரி ஜெயிச்ச பிறகு தூக்கிப்போம்ன்னு வேர்க்க வேர்க்க இரண்டாவதா வந்து ஜெயிச்சோம்.//
-- சிரிச்சு சிரிச்சு வயித்து வலி போங்க! :-)))))))
//பிச்சகாரன வெரட்டுற மாதிரி வெரட்டுராங்க பிரின்ஸ். "குழந்தைங்க கீழே விழுந்தா தூக்கி விட்டு ஹெல்ப் பண்ண சொன்னா நீங்களே தூக்கிகிட்டு ஓடுறீங்களே"ன்னு திட்டு வேற.//
-- ஆமா நீங்க செஞ்ச காரியத்துக்கு ஏன் வெரட்டமாட்டாங்க? :-D
//அம்மாகிட்ட"பாட்டி நானு கிரவுண்டுல ஜெயிச்சதால அப்பா இதல்லாம் கடைல வாங்கி குடுத்தாங்க"ன்னு போட்டு உடச்சுட்டா.//
-- பின்ன.. உங்க புள்ளையாச்சே? :-D
அபி அப்பா...
ReplyDelete\\ேக்க "ம். வாயிதான்"ன்னு சொல்லி போன வச்சுட்டாங்க.\\
தலைவா பின்னிட்டிங்க....சிரிச்சு சிரிச்சு வயிறு எல்லாம் வலி
நீங்க நிறுத்த மாட்டிங்க போல...ம்ம்ம்...இந்த பதிவும் எப்படியும் 100ஐ தாண்டிடும்.
\\லொடுக்கு said...
ReplyDeleteஆமா. வெள்ளிக்கிழமை பள்ளிக்கூடத்து வர்ரேன்னு சொல்லிட்டு ஏன் வரலை? வைரமுத்து ரொம்ப கோவிச்சுகிட்டாரு. :(\\
சார்..சார் அபி அப்பா புளியம்பழம் எடுக்க போயிட்டாரு சார்...
அசத்தறீங்க போங்க...
ReplyDeleteஅகஸ்தியன் என்று ஒரு எழுத்தாளர் இப்படித்தான் தன் 'குடும்ப அனுபவங்களை' காமெடியாக எழுதி கொண்டிருந்தார்.
தொடர்ந்து எழுதுங்கள்.
அபி குட்டிக்கு எங்கள் ஸ்பெஷல் அன்பு :-)
சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் ஆக ஒரே ஒரு விஷயம் தான் பாக்கி..
ReplyDeleteஸ்பெல்லிங் மிஸ்டேக்...
உடனே கோவை வாத்தியாரை பிடித்து, ஒவ்வொரு போஸ்ட்டையும் அவர் ஒரு முறை பார்த்து அனுப்புமாறு கேட்கவும்...
:)))
மற்றபடி அன்னைக்கு நீங்க போனடிச்சப்போ ஒரு ஈட்டிவாயனோட பேசிக்கிட்டிருந்தேன்...அதான் பேசமுடியல...மன்னிக்கவும்...யார் அந்த ஈட்டிவாயன்னு கேட்கறீங்களா? அது சொல்லமுடியாது...
என்ன கொடுமை சரவணன்! லொடுக்கு தம்பி கேட்ட கேள்விக்கு கோபிதம்பி பதில் சொல்றார். கண்மணிக்கு சேதுக்கரசி பதில் சொல்றாங்க!! ஒரு 2 நாள் தமிழ்மணத்துல தங்கிட்டு அடுத்த பதிவுக்கு போகலாம்னு பாத்தேன். அதனால பதில் சொல்ல கொஞ்சம் தாமதம். ஸாரி. தோ கிளம்பிட்டேன்.
ReplyDelete***********************************
//[ரொம்பத்தான் நெனச்சிக்கிடாதேயும் அப்பத்தேன் நீரு எமக்கு பதில் போடுவீரு]//
வாங்க கண்மணி! வருகைக்கு நன்றி! பாராட்டு சும்மானாச்சுக்கும் தானா!! போச்சுடா!!
//சாக்குப் பை போட்டிக்கும் அஞ்சு ஜார்ஜுக்கும் என்ன சம்மந்தம்.//
என்ன குதிர வால், டிராக் சூட். ஸ்போர்ட்ஸ் ஷு இதல்லாம்தான்...இப்டீ தலைப்பு வச்சாதான் பேர் வர்ரீங்க!!!
**********************************
//இல்லாதத பத்தியெல்லாம் பேசிகிட்டு.. என்ன இது சின்னபுள்ள தனமாயில்ல இருக்கு :-)
லியோ சுரேஷ்//
வாங்க லியோ! இருக்குற சரக்க வச்சி இப்டீயே ஓட்டிக்க வேண்டியதுதான்..
*******************************
//அப்பனுக்கு தப்பாம பொறந்துருக்கு. :)
யோவ்... என்னய்யா இது.. இதுக்கு ஒரு முடிவே இல்லையா? தாங்கலய்யா.... சிரிச்சு சிரிச்சு வயிறு வலி தாங்கல...//
வாங்க லொடுக்கு!!
ஹி..ஹி சும்மா டமாஷு தான்...
//ஆமா. வெள்ளிக்கிழமை பள்ளிக்கூடத்து வர்ரேன்னு சொல்லிட்டு ஏன் வரலை? வைரமுத்து ரொம்ப கோவிச்சுகிட்டாரு. :(//
கொஞ்சம் ஆணி இருந்துச்சு!! சரி எப்டி பேசினார் என்ன பேசினார்ன்னு ஒரு பதிவு போடுங்க! தம்பி அவர் பேசும் முன்பே வீட்டுக்கு வந்துட்டதாக சொன்னார்
******************************
//இந்த விவரத்துக்கே உங்களோடயும் உங்க மகளோடயும் "லொள்ளு" தாங்கலை! இன்னும் விவரமாவா? வேண்டாம், சாமி, வயிறு வலிக்குது, விட்டுடுங்க! :))))))))))))))))))))))//
ReplyDeleteவாங்க கீதாமேடம்!! அமரிக்கா போறீங்களாமே! சமத்தா போயிட்டு சமத்தா வாங்க! ஜீன்ஸ் லெஷ்மியாட்டம் அலம்பல் செய்யாம இருங்க! முடிஞ்சா வல்லி மேடம், கொத்ஸ் எல்லாரும் ஒரு வலைப்பதிவர் மாநாடு போடுங்க!!!
********************************
//ஒண்ணு சொல்லறேன், உம்ம பொண்ணு எடுத்துக்கிட்ட ஸ்பூன்(!) சைஸிலிருந்தே தெரியுது. நம்ம நாட்டின் அடுத்த தலைவிகள் லிஸ்டில் பேரு போல்ட் எழுத்துக்களில் இருக்குன்னு! //
வாங்க கொத்ஸ்! பாப்பாவுக்கு P.M போஸ்ட்... கொஞ்சம் டைம் குடுங்க...யோசிச்சு சொல்றேன்:-)))
*****************************
//உக்காந்து யோசிப்பாய்ன்ங்களோ.... முடியல...
டெலிகேசி.//
வாங்க டெலிகேசி அய்யா! வருகைக்கு நன்றி! நன்றி!!
***************************
//நல்லா இருக்கு...
ரொம்ப நல்லா...
பேஷ் பேஷ்...
என்ன ஓய் அசத்திட்டேல் காணும்.. //
வாங்க சரா! உங்க கவிதைகள் படித்தேன். நல்லா இருக்கு!! வாழ்த்துக்கள்!! பட்டுக்கோட்டையா நீங்க!!
*********************************
:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
ReplyDeleteஉங்களுக்கு மட்டும்தான் இவ்ளோ ஸ்மைலிஸ்...
:)) இத அபி பாப்பாகிட்ட கொடுத்துடுங்க...
சென்ஷி
//வெவரமா" நமக்கும் அதுக்கும்தான் ஸ்நானப்பிராப்தியே கிடையாதே இதுக்கு தங்கமணிபேச்சையாவது ஒழுங்கா கேட்டிருந்தா மானத்தை கொஞ்சமாவது காப்பாத்தியிருக்கலாம்.//
ReplyDeleteவாங்க வாங்க T.R.C சார்!! முதன் முதலான வருகை! மிக்க சந்தோஷம். மிக்க சந்தோஷம். உங்கள் இசை விமர்சனங்கள் சுப்புடு அய்யா மாதிரி இதயத்தை ஈட்டியால் குத்தாமல் அருமையாக வருடிக் கொடுப்பது போல் இருக்கிறது. வருகைக்கு மிக்க நன்றி சார்.
***************************
//சூப்பர் எக்ஸ்பீரியன்ஸ் :-)
நல்ல நகைச்சுவையா சொல்லீயிருக்கீங்க....//
வாங்க அருண்!! மிக்க நன்றி!! தங்கள் வருகைக்கும், விமர்சனத்துக்கும்..
***************************
செம காமெடிங்க !! இந்த சாக்கு ரேஸ் இன்னும் இருக்கா?? ஒரு காலத்துல அப்பா அம்ம உதவி இல்லாம ஜெயிச்சிருக்கேங்க.....ப்ச்...
ReplyDelete//vizhunthu vizhunthu sirichchen.. engke adi padduccunnu kEdkappadaathu..
ReplyDeleteReally nice.. Vazhga ngal ezuththu.. niraiya ezuthungka.. :-D //
வாங்க மைஃபிரன்ட்!! எல்லாரும் சந்தோஷமானா எனக்கும் சந்தோஷம் தான். வருகைக்கு நன்றி!!
***************************
//சின்னப் பிள்ளைக்கு பொய் சொல்ல
கத்துக்குடுக்க நினைச்ச பாவம் உங்கள
சும்மாவிடாது சொல்லிட்டேன். //
வாங்க லெஷ்மி! அரசியல்ல இதல்லாம் சகஜம். விடுங்க!!
******************************
//என்னய்யா இது? எங்க நான் போட்ட பின்னூட்டம்? //
போட்டாச்சு கொத்ஸ் அய்யா!!
********************************
//Repeattu.. //
வாங்க தாஸ்!! முதல் வருகைக்கு நன்றி!!
******************************
//ஒவ்வொரு போஸ்டும் அப்படியே எல்லாத்தையும் சுண்டி இழுக்குற மாதிரில்லா இருக்குது....//
வாங்க ஜி!! நீங்கள்ளாம் எழுதாத காமடியா!! அடிக்கடி வாங்க ஜி! உங்க நண்பர் நாயகன் படிச்சுட்டாரா. நான் விசாரிச்சேன்னு சொல்லுங்க!
****************************
//-- ஆமா நீங்க செஞ்ச காரியத்துக்கு ஏன் வெரட்டமாட்டாங்க? :-D//
ReplyDeleteவாங்க சகோதரி சேதுக்கரசி!! ஆரம்பம் முதலே நான் எழுதுவதற்கு ஆதரவு தந்து... மிக்க நன்றி!! மிக்க நன்றி!!
*****************************
//தலைவா பின்னிட்டிங்க....சிரிச்சு சிரிச்சு வயிறு எல்லாம் வலி
நீங்க நிறுத்த மாட்டிங்க போல...ம்ம்ம்...இந்த பதிவும் எப்படியும் //
வாய்யா கோபி தம்பி!! எங்க 100 அடிக்க..அதுதான் ஆப்பு வச்சுட்டாங்களே!
//சார்..சார் அபி அப்பா புளியம்பழம் எடுக்க போயிட்டாரு சார்...//
தம்பியோட நமீதா பதிவுல புளியம் பழம் போன கோபிதம்பி இன்னுமா திருப்பலை??
*********************************
//அசத்தறீங்க போங்க...
அகஸ்தியன் என்று ஒரு எழுத்தாளர் இப்படித்தான் தன் 'குடும்ப அனுபவங்களை' காமெடியாக எழுதி கொண்டிருந்தார்.
தொடர்ந்து எழுதுங்கள்.
அபி குட்டிக்கு எங்கள் ஸ்பெஷல் அன்பு :-) //
வாங்க ஸ்ரீதர்!!"ஷில்பா ஷெட்டியும் சிக்கன் சூப்பும்"ன்னு நீங்க குத்த ஐடியாதான் "மன்மோகன்சிங்கும் மன்னார்குடி குரூப்பும்" thanks
************************
//சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் ஆக ஒரே ஒரு விஷயம் தான் பாக்கி..
ReplyDeleteஸ்பெல்லிங் மிஸ்டேக்...
உடனே கோவை வாத்தியாரை பிடித்து, ஒவ்வொரு போஸ்ட்டையும் அவர் ஒரு முறை பார்த்து அனுப்புமாறு கேட்கவும்...
:)))
மற்றபடி அன்னைக்கு நீங்க போனடிச்சப்போ ஒரு ஈட்டிவாயனோட பேசிக்கிட்டிருந்தேன்...அதான் பேசமுடியல...மன்னிக்கவும்...யார் அந்த ஈட்டிவாயன்னு கேட்கறீங்களா? அது சொல்லமுடியாது...//
வாங்க செந்தழலாரே! ஸ்பெல்லிங் மிஸ்டேக் கூடிய சீக்கிரம் சரியாகும்.
நான் உங்க கூட பேசிக்கிட்டிருந்தப்ப நீங்க என்கூட தான் பேசிக்கிட்டு இருந்தீங்க. அதனால அந்த ஈட்டிவாயன் நாந்தான்:-))))
**********************************
//:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
உங்களுக்கு மட்டும்தான் இவ்ளோ ஸ்மைலிஸ்...
:)) இத அபி பாப்பாகிட்ட கொடுத்துடுங்க...//
ரொம்ப தேங்ஸ் சென்ஷி! ஏன் இன்னிக்கு லேட்!
******************************
//செம காமெடிங்க !! இந்த சாக்கு ரேஸ் இன்னும் இருக்கா?? ஒரு காலத்துல அப்பா அம்ம உதவி இல்லாம ஜெயிச்சிருக்கேங்க.....ப்ச்... //
வாங்க ராதா! முதல் வருகை. மிக்க நன்றி! உங்கள் பதிவு படித்தேன். ராதா என்று சின்ன பெயராக இருப்பது பற்றி இவ்வளவு கவலையா??
*****************************
//அபி அப்பா, அசத்து அசத்துன்னு அசத்திட்டீங்க!//
வாங்க சகோதரி கோகிலா! முதல் வருகை. மிக மிக சந்தோஷம். அடிக்கடி வாங்க!!
***********************
Abi Appa!
ReplyDeleteunga blog nameum super.. unga blogum supero super.. first time here.. romba nalla ezhudhirukkeenga.. Vaazhthukkal.
Cheers!
இது அடுத்த காமெடியா? என்னவோ அமெரிக்காவிலே நானும், வல்லியும், இ.கொ.வும் பக்கத்துப் பக்கத்து வீட்டிலே இருக்கப்போகிற மாதிரி, வலைப்பதிவர் மாநாடுன்னு எல்லாம் சொல்றீங்க? கிழிஞ்சது போங்க! தொலைபேசிக்கலாம். அம்புட்டுத் தான்!
ReplyDelete//Abi Appa!
ReplyDeleteunga blog nameum super.. unga blogum supero super.. first time here.. romba nalla ezhudhirukkeenga.. Vaazhthukkal.
Cheers!//
வாங்க கவிதா! முதன் முதலான வருகை. மிக்க நன்றி. உங்க டெம்பிளேட்டும் நம்மது மாதிரி இருக்கு. அதனாலதான் பாராட்டா?
வாரே வாவ்... என் மருமக எவ்ளோ அறிவா இருக்கா அத்தை மாதிரியே... ஸ்பூன்க்கு பதிலா என்ன அறிவா கரண்டிய எடுத்துட்டு போயிருக்கா...
ReplyDelete:)))))
Abi Appa!
ReplyDelete//உங்க டெம்பிளேட்டும் நம்மது மாதிரி இருக்கு. அதனாலதான் பாராட்டா?//
template mattum dhan ungalodhu maadhiri ennodadhum... but adhula irukka sarakku (postsa dhan solren..) ungalodhu super.. enodadha sappa..
thanks for your comment. (Kavidhainu veikkaatti enna.. ippave naan kavidhai dhan.. hehehe)
Cheers!
//"பாட்டி நானு கிரவுண்டுல ஜெயிச்சதால அப்பா இதல்லாம் கடைல வாங்கி குடுத்தாங்க"//
ReplyDeleteஇது இது இது....................
:-)))))))))))))))))
\\என்ன கொடுமை சரவணன்! லொடுக்கு தம்பி கேட்ட கேள்விக்கு கோபிதம்பி பதில் சொல்றார். கண்மணிக்கு சேதுக்கரசி பதில் சொல்றாங்க!!\\\
ReplyDeleteஇது கொடுமை இல்லை அய்யா...இதுக்கு பேரு தான் கும்மி...
சமீபக் காலத்துல்ல படித்தப் பதிவுகளில் அதிகம் சிரிக்க வைத்தப் பதிவு இது தானுங்கோ.. கலக்கல்ஸ்ங்கோ..
ReplyDeleteஅபிஅப்பா, நாய்க்கு டைகர்னு பேர் வச்சிருக்கீங்களே, டைகர் வளர்த்தா நாய்னு பேர் வைப்பிங்களா? :))
ReplyDeleteரொம்ப நாள் கழிச்சு வயிரு வலிக்க சிரிச்சேன்..super போங்க.
ReplyDelete//வாரே வாவ்... என் மருமக எவ்ளோ அறிவா இருக்கா அத்தை மாதிரியே... ஸ்பூன்க்கு பதிலா என்ன அறிவா கரண்டிய எடுத்துட்டு போயிருக்கா...
ReplyDelete:)))))//
ஆனா பாருங்க இம்சை மன்னி, அந்த ஸ்கூல்ல ரிஜக்ட் பண்ணீட்டாங்க..மோசமான ஸ்கூல்..நீங்க மயிலாடுதுறை பக்கம் வந்தா ஒரு ரைடு விடுங்க!!
//template mattum dhan ungalodhu maadhiri ennodadhum... but adhula irukka sarakku (postsa dhan solren..) ungalodhu super.. enodadha sappa.. //
ReplyDeleteஎவ்வளவு தன்னடக்கம்!! உங்களுக்கு கவிதை சூப்பரா வருது. எனக்கு சுட்டு போட்டாலும் வரலை!!!
//இது இது இது....................
ReplyDelete:-))))))))))))))))) //
டீச்சர்! நா எங்கயாவது எக்குதப்பா மாட்டிகிட்டா உங்களுக்கு சிரிப்பா வருது! ஹும்..
//இது கொடுமை இல்லை அய்யா...இதுக்கு பேரு தான் கும்மி... //
ReplyDeleteஅதுக்குதான் வச்சுட்டாங்களே ஆப்பு கோபிதம்பி!
//சமீபக் காலத்துல்ல படித்தப் பதிவுகளில் அதிகம் சிரிக்க வைத்தப் பதிவு இது தானுங்கோ.. கலக்கல்ஸ்ங்கோ..//
ReplyDeleteவாங்க வாங்க தேவ்! முதல் வருகை. சந்தோஷம். உங்கள் பதிவுகள் நான் படிக்காமல் விட்டதேயில்லை. சூப்பராக இருக்கிறது. வருகைக்கு மிக்க நன்றி.
//அபிஅப்பா, நாய்க்கு டைகர்னு பேர் வச்சிருக்கீங்களே, டைகர் வளர்த்தா நாய்னு பேர் வைப்பிங்களா? :))//
ReplyDeleteவாங்க மணிகண்டன்! மொதோ தபா விசிட்! ரொம்ப தேங்ஸு.. பேரு வைக்க கண்மணிகிட்ட ஐடியா கேட்டுக்கலாம்...ஒரு பதிவே போட்டுட்டாங்க அத பத்தி!!
//ரொம்ப நாள் கழிச்சு வயிரு வலிக்க சிரிச்சேன்..super போங்க. //
ReplyDeleteவாங்க ஷக்தி! முதல் வருகை. சந்தோஷம். நீங்கள் இசை துறையில் உச்சத்துக்கு செல்ல வாழ்த்துக்கள்!!
நல்ல நகைச்சுவை
ReplyDeleteவாழ்துக்கு நன்றி அபி அப்பா...
ReplyDelete:-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-)
ReplyDeleteஇவ்வளோ சிரிப்பு சிரிச்சேன்
Dhool baa :)
ReplyDeleteஅபி அப்பா...நாங்க ரெண்டு பேரும் சிறிச்சு சிறிச்சு..பக்கத்து பிளாட்ல இருக்கற பஞ்சாபி..எங்கள லூசுகன்னு முடிவு பண்ணீருச்சு...அபி அப்பா உபயம்...
ReplyDeleteதோல்வி தான் வெற்றிக்கு முதற்படி..நீ அசத்து அபி... அவங்க என்ன நமக்கு பரிசு குடுக்கறது..நாம ஆயிரம் பேருக்கு குடுப்போம்..:-)))
//நல்ல நகைச்சுவை //
ReplyDeleteஅனானி அண்ணா! தேங்ஸ்
//:-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-)
ReplyDeleteஇவ்வளோ சிரிப்பு சிரிச்சேன்//
வாங்க வினையூக்கி! எவ்வளவு சிரிச்சாலும் உடலுக்கும் மனசுக்கும் நல்லதுதானே!
//Dhool baa :)
ReplyDelete//
வருகைக்கு நன்றி சர்வேசன் அவர்களே!
//அபி அப்பா...நாங்க ரெண்டு பேரும் சிறிச்சு சிறிச்சு..பக்கத்து பிளாட்ல இருக்கற பஞ்சாபி..எங்கள லூசுகன்னு முடிவு பண்ணீருச்சு...அபி அப்பா உபயம்...
ReplyDeleteதோல்வி தான் வெற்றிக்கு முதற்படி..நீ அசத்து அபி... அவங்க என்ன நமக்கு பரிசு குடுக்கறது..நாம ஆயிரம் பேருக்கு குடுப்போம்..:-))) //
வாங்க மங்கை! உங்கள் சந்தோஷமே நம்ம குறிக்கோள்!
சகலதும் சிரிச்சு சிரிச்சு வாசிச்சாச்சு. அது சரி எப்பிடி உங்களாலை சிரிக்காமல் எழுதமுடியுது..?
ReplyDelete//"அப்பா டைகர் பாவம்பா, அதையும் தூக்கி உள்ள போடுப்பா"//
ReplyDeleteஏங்க நீங்கதான் ஓடுறீங்கனா நாயையெல்லாம் கஷ்டப் படுத்துறீங்க? நாயையும் தூக்கிட்டு ஓடிருக்கலாம்ல... :)))
//5 அடிக்கு அவங்க மிஸ்ஸ உள்ள போட்டு கட்டலாம் போல இருக்கு.//
உட்டா ப்ரின்சியக் கூட மூட்ட கட்டுவீங்க...
ரொம்ப நல்லாயிருந்தது... :-))))
அட ரொம்ப லேட் நானு.. ரொம்ப ரசிச்சு படிச்சேன்..
ReplyDeleteஇத படித்துக்கொண்டிருக்கும்போது என்னை எல்லாரும் ஒருமாதிரி பார்த்தார்கள்..
Computer Monitor பார்த்து நான் சிரிச்சிகிட்டிருந்தேன்..
சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்குது:)))
ReplyDeleteannathey ...thangaavey mudiyalaey...
ReplyDeleteKailaila enzhunthavudan ungalathey parthen..orae sirippu....Abhi kuttiyayum ..Tigeraayum kaettathaaga sollavum
//சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்குது:)))
ReplyDeleteRepeeettu.
Very humorous Abiappa.