திஸ்கி # 1 : 3 மாதங்கள் முன்பு ஜெயலலிதா கணிதத்தில் வாங்கிய மார்க் பற்றிய சர்ச்சையில் பொன்முடி சென்னை பல்கலை கழக மார்க் லிஸ்டயே காட்டி அந்த சண்டையில் ஜெயிச்சார். இந்த பதிவுக்கும் இந்த திஸ்கிக்கும் என்ன சம்பந்தம்??
.
*******************************************************************************
சமீபத்தில் எனக்கு கிடைத்த ஒரு 8ம் வகுப்பு மானவ or மாணவி யின் வரலாறு பரிட்சையின் விடை தாள் கிடைத்தது. அப்படியே கீழே தருகிறேன்.
*******************************************************************
.
1.முதலாம் பானிப்பட் யுத்தம் மற்றும் பாபரின் முடிசூட்டு விழா பற்றி விரிவாக எழுதுக:
அவனுக்கும், இவனுக்கும் யுத்தம். அவன் கையில் 200 வீரர்களும், 50 டேங்குகளும், 10 மிஸைல்களும், 5 யுத்த விமானங்களும் இருந்தன.
அதுபோல இவன் கையில் 300 வீரர்களும், 25 டேங்குகளும், 25 மிஸைல்களும், 10 யுத்த விமானங்களும் இருந்தன.
அவன் தான் முதலில் ஒரு மிஸைலை இவன் மேல் விட்டு யுத்தத்தை தொடங்கினான்.
முதல் நாள் முடிவில் அவன் 75 வீரர்கள், 6 டேங்குகள், 5 மிஸைல்கள், 2யுத்தவிமானங்கள் ஆகியவற்றை இழந்தான். அதுபோல் இவனுக்கும் பலத்த நஷ்டம் ஏற்ப்பட்டது.
3ம் நாள் யுத்தம் முடிவுக்கு வந்தபோது அவனும் இவனும் மற்ற எல்லாரும் இறந்துவிட்டனர்.
கடைசியில் ஐக்கிய நாடு என்னும் நாட்டில் உள்ள அண்ணன் கோபி என்பவர் வந்து அந்த பட்டாளத்தில் மிச்சமிருந்த ஒரு பாபருக்கு முடி சூட்டினார்.
2. 1869 ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி என்ன முக்கிய நிகழ்வு நடந்தது?
காந்தி பிறந்தார்.
3. 1874ம் ஆண்டு என்ன நடந்தது?
காந்திக்கு 5 வயது ஆனது.
4. ஜாலியன் வாலா பேக் பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன?
அந்த பேக் அத்தனை நல்ல பேக் என்று சொல்லமுடியாது. ஃபாரினில் இருந்து வருபவர்கள் கொண்டு வரும் பேக் நன்றாக இருக்கின்றது. ஃபாரின் செல்ல முடியாதவர்கள் ஒரு அவசரத்துக்கு பாரீஸ் கார்னரில் வாங்கி உபயோகப்படுத்தலாம் என்பதே என் அபிப்ராயம்.
5.சுபாஷ் சந்திர போஸ் பற்றி விவரிக்கவும்?
இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் இணை பிரியாத நண்பர்கள் சுபாஷும் சந்திரனும் போஸும். என்ன! இந்த போஸ் மட்டும் எப்போதாவது சிகரட் குடிக்கும் பழக்கம் உடையவன். அதை தவிர இந்த மூவரும் மிக்க நல்லவர்கள் என்பது என் கருத்து.
6. அக்பர் இந்தியர்களுக்கு செய்த நன்மைகள் பற்றி 2 பக்கம் விரிவாக எழுதவும் ?
அப்பப்ப ஐந்தோ பத்தோ கொடுத்திருப்பார். 2 பக்கம் விரிவாக சொல்ல சரித்திரத்தில் அவரைப் பற்றிய குறிப்புகள் இல்லை என்பதே என் கருத்து.
*****************************************************************************
மக்கா! பதிவு நீண்டு போய்விடும் என்பதால் மீதி பதில்களை விட்டுவிடுகிறேன்.
திஸ்கி# 2:
//என்ன அபி அப்பா நீங்க தமிழ் ல்ல அப்படி இப்படின்னு சொல்லிட்டு கொங்குதேர் ஒப்பிச்சீங்களா? பரவாயில்லையே.நானெல்லாம் அப்போ வரலாறு தான் இஷ்டமா படிப்பேன். // இது சகோதரி முத்துலெஷ்மி அவர்களின் ஒரு பின்னூட்டம்.
திஸ்கி # 3: மக்களே திஸ்கி#1,திஸ்கி#2, பதிவு இது எதுக்குமே சம்பந்தம் இல்லை. போட்டு குழப்பிக்க வேண்டாம். குழப்பிகிட்டா கொஞ்சம் சிரிப்பு வரும்.
:)
ReplyDeleteஅடங்க மாட்டீரு போலிருக்கே!
யோவ் அண்ணாத்த
ReplyDeleteஇது மலையாளத்துல சுத்துன அஞ்சலாச்சே? அதுல இன்னொரு முக்கிய மேட்டர் உண்டே? அதை பெண்கள் தின ஸ்பெஷலா போடுவீரோ?
சாத்தான்குளத்தான்
//யோவ் அண்ணாத்த
ReplyDeleteஇது மலையாளத்துல சுத்துன அஞ்சலாச்சே? அதுல இன்னொரு முக்கிய மேட்டர் உண்டே? அதை பெண்கள் தின ஸ்பெஷலா போடுவீரோ?
சாத்தான்குளத்தான்//
வாங்க வாங்க சாத்தான்குளத்தாரே!! முதன் முதலான் வருகை. மிக்க மகிழ்ச்சி!!
ஆமாம்! அதே அஞ்சல்தான். அதான் பதிவிலேயே போட்டிருக்கேனே,"விடை பேப்பர் எனக்கு கிடைத்தது" என்று!!
அய்யோ! அந்த முக்கிய மேட்டரெல்லாம் போட்டா நம்ம கதி அவ்ளோவ்தான். வந்து குமுறிடுவாங்க!! வுடுங்க சாமீ!!
மற்றபடி சுபானிடமிருந்து போன் ஏதாவது வந்ததா?(கேன்சல் செய்து ஊருக்கு போய்விட்டார்)
ஆறாப்பு படிக்கும்போது வரலாறுல வந்த கேள்விக்கு என்னோட நண்பன் ஒருத்தன் எக்குத்தப்பா இந்த மாதிரிதான் எழுதினான் அதிர்ஷடவசமா அந்த பதில படிச்ச வாத்திக்கு வந்தது கோவம் பையன பிரிச்சி மேய்ஞ்சிட்டாரு.
ReplyDeleteஎல்லா கேள்விக்கும்,
தெரியாது
தெரிஞ்சாலும் சொல்ல முடியாது
நீயா விடைய கண்டுபுடிச்சிக்கோ
இதத்தான் எழுதியிருந்தான்.
அபி பாப்பாவுக்கு அவ்வளவு வயசாச்சா? பழைய பதிவெல்லாம் படிச்சு இன்னும் சின்னப் பொண்ணுன்னு இல்ல நினைச்சேன்.
ReplyDeleteதிஸ்கி போட எதுக்கய்யா தங்கமணி பெர்மிஷன்? ஆனாலும் அநியாயத்துக்குப் பயப்படறீரே.... :))
முடியலைப்பா.. முடியலை..சிரிப்பை அடக்க முடியலை ..
ReplyDeleteநான் உங்கள் ஒவ்வொறு பதிவையும் படித்து சிரித்து, முடியலை ..;)
அபி குட்டியையும், உங்கள் தங்கமணியையும் கேட்டதாகச் சொல்லவும் ;)
நகைச்சுவை மாதிரி இல்லை..நகைச்சுவையேதான்..
ReplyDelete:)))
செந்தழல் ரவி
சிரிப்பா இருக்குங்க. ஆமா அது என்ன சொந்த விசயமேல்லாம் பின்னுட்டத்தில்?
ReplyDeleteஉம்ம குசும்புக்கு அளவே இல்லாம போச்சுங்ய்யா...
ReplyDeleteஅப்புறம் யாரோ கொடி புடிக்கிறாங்களாமே.. ஜாக்கி சான் தங்கச்சி பறக்கும் சூராவளி அபி பாப்பாவ அனுப்பி பொளந்துட வேண்டியதுதானே ;))))
மூணு கண்ணன் வந்து மொறைச்சாலும் அடங்க மாட்டீரா?எம்புட்டு நாளா இப்டி பிட் அடிக்கிற பழக்கம்.பொன்முடியாவா இழுக்கிறீரு உமக்கு ஆப்புதேன் ரெடியாயிரும்.உம்ம அபிக்கு எப்படி இஸ்கோலுக்கு சீட்டு வாங்கறீரு பாப்பம்.
ReplyDelete:)))))
ReplyDelete\\அடங்க மாட்டீரு போலிருக்கே!\\
ரிப்பீட்டேய்...
நான் வரலாறு இஷ்டமா படிக்க காரணம் என் வரலாறு டீச்சர். அவங்க என்னோட முதல் பேரக்கூப்பிடாம முத்துலெட்சுமின்னு கூப்பிட்டு அன்பா நடத்துவாங்க. இதுல இருக்கற மாதிரி கதை விட எல்லாம் எனக்கு தெரியாது அப்ப. சரியான பதில் தெரிஞ்சாவே கைவலிக்குதுன்னா எழுதாம விட்டுட்டு வந்துடுவேன் நான்.
ReplyDeleteஇது பரவாயில்ல..
ReplyDeleteஇங்குபேட்டர்-ன்னா என்னங்கற கேள்விக்கு பேனாவுல இங்க் நிரப்ப யூஸ் பண்றதுன்னு எழுதி வச்சான் ஒரு பய.
:)))
என்னோட கமெண்ட்
சூப்பருப்ப்பூ
சென்ஷி
நகைச்சுவை மாதிரின்னு சொல்லி தப்பிக்க வேனாம் இது நகைச்சுவையேதான் ஏன்னா எனக்கு சிரிப்பு வந்துச்சி.
ReplyDeleteஎல்லாரும் ஒரு முடிவோடு தான் இருக்கீங்க இருக்கீங்கன்னு சொல்றாங்களே? அதானே இது? முடியலைங்க, தனியாச் சிரிக்க முடியலை! :))))))))))))))
ReplyDelete//:)
ReplyDeleteஅடங்க மாட்டீரு போலிருக்கே!//
:-)))))) லொடுக்குதம்பி! அப்டிதான்..கண்டுகாதீங்க!
//தெரியாது
ReplyDeleteதெரிஞ்சாலும் சொல்ல முடியாது
நீயா விடைய கண்டுபுடிச்சிக்கோ//
தம்பி! அந்த பையன் வெவகார"மாணவன்"னு சொல்லுங்க:-))
//அபி பாப்பாவுக்கு அவ்வளவு வயசாச்சா? பழைய பதிவெல்லாம் படிச்சு இன்னும் சின்னப் பொண்ணுன்னு இல்ல நினைச்சேன்.
ReplyDeleteதிஸ்கி போட எதுக்கய்யா தங்கமணி பெர்மிஷன்? ஆனாலும் அநியாயத்துக்குப் பயப்படறீரே.... //
ஐயா கொத்ஸ், அந்த மாணவ/மாணவி அபிபாப்பா இல்லை. அதுபோல் த்ஸ்கி பர்மிஷனும் தங்கமணிகிட்ட இல்ல. இப்போ விளங்கிடுச்சா?
//முடியலைப்பா.. முடியலை..சிரிப்பை அடக்க முடியலை ..
ReplyDeleteநான் உங்கள் ஒவ்வொறு பதிவையும் படித்து சிரித்து, முடியலை ..;)
அபி குட்டியையும், உங்கள் தங்கமணியையும் கேட்டதாகச் சொல்லவும் ;) //
வாங்க தாஸ். வருகைக்கு நன்றி. கண்டிப்பாக சொல்லிவிடுகிறேன் உங்க விசாரிப்பை
//நகைச்சுவை மாதிரி இல்லை..நகைச்சுவையேதான்..
ReplyDelete:)))
செந்தழல் ரவி //
நன்றி செந்தழலாரே. மிக்க நன்றி!
//சிரிப்பா இருக்குங்க. ஆமா அது என்ன சொந்த விசயமேல்லாம் பின்னுட்டத்தில்?//
ReplyDeleteவாங்க பொதகுடியான்! சும்மா ஜாலிக்குதான் அந்த விசாரிப்பெல்லாம்!
//உம்ம குசும்புக்கு அளவே இல்லாம போச்சுங்ய்யா...
ReplyDeleteஅப்புறம் யாரோ கொடி புடிக்கிறாங்களாமே.. ஜாக்கி சான் தங்கச்சி பறக்கும் சூராவளி அபி பாப்பாவ அனுப்பி பொளந்துட வேண்டியதுதானே ;))))//
ஜி!வாங்க வாங்க, நமக்கு யாருங்க கொடி புடிப்பாங்க! அதான் பக்கபலமா நீங்க இருக்கீங்களே!எனக்கு என்னா கவலை!
//மூணு கண்ணன் வந்து மொறைச்சாலும் அடங்க மாட்டீரா?எம்புட்டு நாளா இப்டி பிட் அடிக்கிற பழக்கம்.பொன்முடியாவா இழுக்கிறீரு உமக்கு ஆப்புதேன் ரெடியாயிரும்.உம்ம அபிக்கு எப்படி இஸ்கோலுக்கு சீட்டு வாங்கறீரு பாப்பம்//
ReplyDeleteவாங்க கண்மணி! சும்மா ஜாலியா கலாய்ச்சா, பொன்முடிக்காக சப்போட்ட்டுக்கு வரீங்களே!! :=)))
//ரிப்பீட்டேய்... //
ReplyDeleteகோபிதம்பி! ரிப்பீட்டா கொடுக்கற... நாளைக்கு நேர்ல வச்சுக்கறேன்!
//இதுல இருக்கற மாதிரி கதை விட எல்லாம் எனக்கு தெரியாது அப்ப. சரியான பதில் தெரிஞ்சாவே கைவலிக்குதுன்னா எழுதாம விட்டுட்டு வந்துடுவேன் நான்.//
ReplyDeleteநீங்க வரலாறு இஷ்டமா படிப்பேன்னு சொன்ன உடனே இந்த பதில்கள் பற்றிய மெயில் ஞாபகம் வந்தது. அதான் பதிவா போட்டேன்.
//இது பரவாயில்ல..
ReplyDeleteஇங்குபேட்டர்-ன்னா என்னங்கற கேள்விக்கு பேனாவுல இங்க் நிரப்ப யூஸ் பண்றதுன்னு எழுதி வச்சான் ஒரு பய.
:)))//
செம காமடி சென்ஷி! இங்கெபேட்டர்ன்னா இங்கு போட யூஸ் பண்ணுவதா, சரி அப்டீ சொன்னது நீங்க இல்லியே?
//நகைச்சுவை மாதிரின்னு சொல்லி தப்பிக்க வேனாம் இது நகைச்சுவையேதான் ஏன்னா எனக்கு சிரிப்பு வந்துச்சி.//
ReplyDeleteவாங்க நர்மதா! சிரிப்பு வந்தா சந்தோஷம் தான்!
//எல்லாரும் ஒரு முடிவோடு தான் இருக்கீங்க இருக்கீங்கன்னு சொல்றாங்களே? அதானே இது? முடியலைங்க, தனியாச் சிரிக்க முடியலை! :))))))))))))))//
ReplyDeleteமேடம் ஏன் தனியா சிரிக்கனும்.. "நல்ல பாதி"சார் எங்கே?
;-))))))
ReplyDelete