*************************************************************************************
எனக்கு அப்போதான் அந்த டவுட் வந்துச்சு. பாப்பாதான் 1 வாரத்திலே கு.வ கத்துகிட்டாளே, பிறகு ஏன் 1 மாசமா அதையே செய்றா, டீச்சர் வேற எதுவும் இன்னுமா சொல்லிதரலை??
சரி, இன்னைக்கு ஜன்னல் வழியா பாத்துட வேண்டியதுதான்னு முடிவு செஞ்சு டீச்சர் வருகைக்காக காத்திருந்தேன்.
டீச்சர் வந்தாங்க. இப்போல்லாம் அவங்க முன்ன மாதிரி கல கலன்னு இருப்பதில்லை. அவங்க வீட்டுல என்ன பிரச்சினையோன்னு நெனச்சுகிட்டேன்.
பாப்பா பர பரன்னு தங்கமணி கிட்டே காபி, பிஸ்கட் எல்லாம் வாங்கி ரூம் உள்ளே கொண்டு வச்சுட்டு சிரத்தையா கதவ சாத்திகிட்டா. அவங்க காபி குடிச்சு முடிக்கட்டும்ன்னு 15 நிமிஷம் காத்திருந்து மெதுவா ஜன்னல் திறந்து பார்தேன். பாப்பா குரு வணக்கம் செஞ்சா.
"சரி..போதும் இன்னைக்காவது அடுத்த பாடம் போகலாம்"ன்னாங்க. அவங்க இன்னைக்காவதுன்னு கொஞ்சம் அழுத்தி சொன்னதுல ஏதோ உள்குத்து இருக்கும் போலயிருக்கேன்னு எனக்கு டவுட்.
நா சந்தேகப்பட்டது சரியா போச்சு. அவங்க கதற கதற பாப்பா காதுலயே வாங்கிக்காம ஒன்லி கு.வ தான். "இங்க பாரும்மா. என் பேர் கெட்டுடும். வேற எதுவும் சொல்லிகுடுக்கலைன்னு, அதனால இன்னைக்காவது அடுத்த பாடம் போகலாம்"னு கெஞ்சுனாங்க.
பாப்பாவும் கொஞ்சம் மனசு இறங்கி "சரி"ன்னுச்சு. உடனே டீச்சர் சந்தோஷமா "சரிடா செல்லம், நீ ரொம்ப நேரம் கு.வ செஞ்சதால கால் வலிக்கும், அதனால அந்த சோஃபால உக்காந்துக்கோ, இப்பொ நா ஆடுவதை பாத்துக்கோ"ன்னாங்க.
பாப்பா சோஃபா வில சாஞ்சு உக்காந்துகிட்டு அட்டானிகால் போட்டுகிட்டு " டீச்சர் முதல்ல குருவணக்கம் அப்புறம்தான் அடுத்த பாடம்" அப்டீன்னுச்சு. "இல்லம்மா, அதான் உனக்கு அது நல்லா வருதே, நேரா அடுத்த பாடம் போகலாம்"ன்னாங்க.
"ஊகூம். முதல்ல கு.வ" ன்னு சொல்லீட்டு வாயில விரல் போட்டுகிச்சு. சரி ஆடி தொலச்சுட்டா அடுத்த பாடத்துக்கு போகலாமேன்னு அவங்களும் பாப்பாவுக்கு முன்னாடி குருவணக்கம் செஞ்சாங்க. பாப்பா என்னவோ குருநாதர் மாதிரி உக்காந்து அவங்க வணக்கத்தை ஏத்துக்காம "டீச்சர் இது மாதிரியில்ல, நேத்திக்கு வச்ச மாதிரி"ங்குது.
"நேத்திகும் இப்டீதானே செஞ்சேன்"ன்னாங்க. "இல்ல வேற மாதிரி"ன்னுச்சு பாப்பா. சரின்னு அவங்களும் இன்னுமொரு தடவை வச்சாங்க. பாப்பாவுக்கு திருப்தியேயில்லை 4,5 தடவை அவங்க செய்துகாட்டியும்! அதுக்குள்ள 1 மணி நேரம் முடிஞ்சுது. "சரி இன்னைக்கு இது போதும்" அப்டீன்னு டீச்சர் சொல்லலை..பாப்பா சொல்லுது!!
என்னவோ பாப்பா பென்ட நிமுத்தறேன்னு முதநாள் சொல்லிட்டு உள்ளே போன டீச்சர் பென்டு கழண்டு வெளியே வந்தாங்க.
பாப்பாவும் டைகரோட விளையாட போயிட்டா. நா மெதுவா டீச்சர்கிட்ட கேட்டேன் "டீச்சர் தினமும் இந்த கூத்துதான் நடக்குதா"ன்னு.
அதுக்கு அவங்க "ஆமா அபிஅப்பா, எனக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியலை. ஒரு 6 மாசம் கழிச்சு கிளாஸ் எடுக்கலாமா"ன்னு கேட்டாங்க. உங்க பொண்ணுக்கு என்னால மட்டுமல்ல அந்த பத்மா சுப்ரமணியம் வந்தாகூட கத்துகுடுக்க முடியாது என்பதை எவ்வளவு டீசண்டா சொல்றாங்க!!
சரின்னேன். பிறகு பாப்பாகிட்ட கேட்டேன். "என்னடா பரத நாட்டியம் பிடிக்கலயா?"ன்னு. அதுக்கு பாப்பா "என்னய கேட்டா சேத்திங்க"ன்னுது. அந்த கால குழந்தைகளுக்கும் இந்த கால விசுக்கட்டான்களுக்கும் எவ்வளவு வித்யாசம். இங்க பாருங்க உஷா மேடம் பட்ட கஷ்டத்த.
மறுநாள் டீச்சரை கோவிலில் பார்த்தேன். "அபிஅப்பா! பாப்பாவுக்கு நல்ல குரல் வளம் இருக்கு. என் வீட்டுக்கு பக்கத்துல ஒரு பாட்டு சார் இருக்காரு, அவர்கிட்ட வேணா சேத்துவிடுங்க" அப்டீன்னாங்க.
"ஏன் டீச்சர் அவர்கிட்ட சேக்கனும்"ன்னு கேட்டேன். அதுக்கு அவங்க "அவர் வீட்டுக் குப்பையெல்லாம் என் வீட்டு வாசல்ல வந்து கொட்டிட்டு போறார்"
அப்டீன்னாங்க. எனக்கு ஒன்னும் புரியலை. அதுக்கும் அவர்கிட்ட பாப்பா பாட்டு கத்துகறத்துக்கும் என்ன சம்பந்தம்?
நான் தங்கமணிகிட்ட வந்து விஷயத்த சொன்னேன். அதுக்கு தங்கமணி " ஏன், பாட்டு வாத்தியார் ஸா...பா...ஸா..பா ன்னே சாவறத்துக்கா"ன்னாங்க.
முற்றும்
unable to control my laughter..
ReplyDeleteexcellent post..
romba nalla comedy
Sengkamalam
//ஒருவேளை பதிவின் பெயர் பெருசா இருப்பதால வரல போலன்னு நெனச்சுகிட்டு பத்மா சுப்ரமணியத்தை பசுவாக்கி இந்த 2ம் பாகம் போடுகிறேன்.//
ReplyDeleteஇது அவங்களுக்கு தெரியுமா? உம்ம விருப்பத்துக்கு பெயர சுருக்கீர்...
பசு மாதிரி வேற என்னவேல்லாம் யோசித்டு வைத்து உள்ளீர்க்....
//அதுக்கு பாப்பா "என்னய கேட்டா சேத்திங்க"ன்னுது//
ReplyDeleteசரியான கேள்வி, இந்த ஒரு பதிலே வச்சே கேஸ் சூப்பரா நடத்திடலாம்!!!
வாங்க வாங்க செங்கமலம் அவர்களே! முதல் வருகை. மிக்க நன்றி!
ReplyDelete********************
புலியாரே! பாகம் 1 படிச்சுட்டு என் மேல கேஸ் போட போறேன்ன்னு சொன்னீங்க! இப்போ பாகம் 2 படிச்சுட்டு என்ன சொல்லப்போறீங்க?
புலி! ஆக கேஸ் போடனும்னு முடிவாயிடுச்சு. பாப்பாவ துனைக்கு கூட்டிகிட்டா சூப்பரா சாட்சி சொல்லும். நல்ல வேலை பாட்டு கத்துக்க விடலை. ஒரு கொலை முயற்சி கேஸ்லே இருந்து தப்பிச்சாச்சு!
ReplyDelete//ஏன் டீச்சர் அவர்கிட்ட சேக்கனும்"ன்னு கேட்டேன். அதுக்கு அவங்க "அவர் வீட்டுக் குப்பையெல்லாம் என் வீட்டு வாசல்ல வந்து கொட்டிட்டு போறார்"
ReplyDeleteஅப்டீன்னாங்க. எனக்கு ஒன்னும் புரியலை. அதுக்கும் அவர்கிட்ட பாப்பா பாட்டு கத்துகறத்துக்கும் என்ன சம்பந்தம்?\\
அபிஅப்பா அந்த பாட்டு வாத்தியார் நம்ப அம்புஜம் மாமி ஆத்துக்காரர்தான்.பொழச்சுப் போறார் விட்டுடுங்கோ.
இன்னா நைனா அபி பாப்பா இம்மாம் பொல்லாத பாப்பாவாக்கீதே
This is not the first visit. but first pinnottam.
ReplyDeleteSengamalam
//அபிஅப்பா அந்த பாட்டு வாத்தியார் நம்ப அம்புஜம் மாமி ஆத்துக்காரர்தான்.பொழச்சுப் போறார் விட்டுடுங்கோ.//
ReplyDeleteவிட்டாச்சு. புலி வேற கேஸ் போட போவதா சொல்றார். பாப்பாவுக்கு IAS போதும் போங்க.
இன்னா நைனா அபி பாப்பா இம்மாம் பொல்லாத பாப்பாவாக்கீதே//
ஆனா படா டாமாஸான பாப்பா:-)))
**************************
thanks sengamalam. romba thanks
//அதுக்கும் அவர்கிட்ட பாப்பா பாட்டு கத்துகறத்துக்கும் என்ன சம்பந்தம்?//
ReplyDeleteயாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் தான்!!!!
//புலி வேற கேஸ் போட போவதா சொல்றார். //
ReplyDeleteஅமீரகம் வந்து இருந்தப்ப என்னைய சரியா கவனிச்சு இருந்தா நான் ஏன் இது எல்லாம் பண்ண போறேன்.
நீங்க ஹைதராபாத் பக்கம் வந்தா எங்க வீட்டுப் பக்கத்தில் கூட ஒரு பிரச்சினை பிடிச்ச பாட்டு வாத்தியார் இருக்காருங்க... ஒரு 4-5 நாள் பாப்பாவை விட்டுட்டுப் போனீங்கன்னா நாங்களும் பொழைச்சுக்கிருவம்.
ReplyDeleteகலக்கிப்போட்டீங்க போங்க.. :)
//யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் தான்!!!!//
ReplyDeleteசிவா! அவரு குப்பைய கொட்டினதுக்கு தக்க தண்டனை தர்ராங்கலாமா>:-)
//அமீரகம் வந்து இருந்தப்ப என்னைய சரியா கவனிச்சு இருந்தா நான் ஏன் இது எல்லாம் பண்ண போறேன்.//
அடுத்த முறை வாங்க கிடேசன் பார்க்கிலே ட்ரீட். இப்போ கேசை வாபஸ் வாங்கிடுங்க
**************************
வாங்க பிரதீப்! முதல் வருகை. மிக்க மகிழ்ச்சி. ஐதராபாத் வந்தா கண்டிப்பா வர்ரோம். அந்த பாட்டு வாத்தியார ஒரு கை பாத்துடுவோம்:-))
"பசு அவர்களே"ன்னு பார்த்ததும், பழைய போஸ்ட் முடிக்காம புது போஸ்ட் ஆரம்பிச்சிட்டீங்களொன்னு வந்து பார்த்தேன். நீங்க பெயர் சுருக்குன விஷயம் தெரிய வந்துச்சு!!!
ReplyDeleteபாவம்.. இப்படி சுருக்கிட்டீங்களே!!!!
//"சரி..போதும் இன்னைக்காவது அடுத்த பாடம் போகலாம்"ன்னாங்க//
ReplyDeleteநெனச்சேன் பாப்பாதான் ஏதோ லொல்லு பண்ணியிருக்கனும்ன்னு!! அப்பா எட்டடின்னா பாப்பா பதினாறு அடி பாயுது! :-P
// "சரி இன்னைக்கு இது போதும்" அப்டீன்னு டீச்சர் சொல்லலை..பாப்பா சொல்லுது!!//
ReplyDeleteROTFL... :-))))))
எப்படிங்க இப்படியெல்லாம் எழுதுறீங்க.. எங்களுக்கும் கொஞ்சம் சொல்லி தாங்க.. ;-)
////அதுக்கும் அவர்கிட்ட பாப்பா பாட்டு கத்துகறத்துக்கும் என்ன சம்பந்தம்?//
ReplyDeleteயாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் தான்!!!! //
ரிபீட்டே!!!!
எனக்கென்னமோ அபி பாப்பா செஞ்ச நிறைய விஷயத்த நீங்க மறைக்கிறிங்களோன்னு தோணுது.. :)
ReplyDeleteசென்ஷி
2ம் பாகத்தைப் படிக்காம முதல் பாகத்தில் பாப்பாவை கஷ்டப்படுத்தியிருக்கீகன்னு சொன்னது தப்பு தப்பு தப்பு..... பாவம் டீச்சர்... அவங்க இப்போ யாருக்கும் டான்ஸ் சொல்லிக்குடுக்கறதில்லையாமே?
ReplyDeleteகலக்கல் பதிவு.
அதென்னங்க அது, நகைச்சுவை மாதிரின்னு லேபிள் வைச்சிருக்கீங்க. ஆனாலும் இவ்ளோ தன்னடக்கமெல்லாம் ஆகாது. ரொம்பவே நல்லா இருக்குங்க. அடுத்தது என்ன, சுராவுக்கு சவாலா(சுதா ரகுநாதன்)?
ReplyDelete\\"ஏன் டீச்சர் அவர்கிட்ட சேக்கனும்"ன்னு கேட்டேன். அதுக்கு அவங்க "அவர் வீட்டுக் குப்பையெல்லாம் என் வீட்டு வாசல்ல வந்து கொட்டிட்டு போறார்"
ReplyDeleteஅப்டீன்னாங்க. எனக்கு ஒன்னும் புரியலை. அதுக்கும் அவர்கிட்ட பாப்பா பாட்டு கத்துகறத்துக்கும் என்ன சம்பந்தம்?//
அபி பயங்கரமான் ஆள்தான் போல!நல்லா கலக்குது.keep it up சொன்னேன்னு பாப்பா கிட்ட சொல்லுங்க.
வி.வி.சி.. :)))) [அதாங்க அந்தம்மா ROTFLங்கும்போது நாங்க அதைத் தமிழில் சொல்ல மாட்டோமா :) ]
ReplyDeleteரொம்ப நல்லா இருந்தது..
எங்க வீட்டுக்குப் பக்கத்தில கூட ஒரு மிருதங்க வாத்தியார் ரொம்ப ரவுசு பண்றாரு.. அபி பாப்பா சென்னைக்கு எப்போ வரும்? ;)
\\அதுக்கு பாப்பா "என்னய கேட்டா சேத்திங்க"ன்னுது.\\
ReplyDeleteஇது தானா விஷயம்....அபி அப்பா உங்க லீலை எல்லாம் பதிவுல தான் பாப்பாவை ஒன்னும் செய்ய முடியாது ;)))
பட்டயக் கிளப்புங்க
ReplyDeleteதேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி
http://www.desipundit.com/2007/03/15/savaal/
\\அதுக்கு தங்கமணி " ஏன், பாட்டு வாத்தியார் ஸா...பா...ஸா..பா ன்னே சாவறத்துக்கா\\
ReplyDeleteஅபி அப்பா இந்த இடத்துல இதை மட்டும் தான் தங்கமணி அக்கா சொன்னாங்க ??? வேற சில வார்த்தைகள் எல்லாம் சொன்னாத பாப்பா சொல்லுச்சு..
அபி பாப்பா வாயிலே விரலைப் போட்டுட்டே இவ்வளவு வேலை செய்யுதா? பரவாயில்லையே? நல்லாப் பழக்கி இருக்கீங்க! அது என்ன பாகனுக்கும், பொன்ஸக்காவுக்கும் மட்டும் தனியா குரு வணக்கம், நாங்க எல்லாம் குருவாத் தெரியலையா உங்க பாப்பாவுக்கு? நறநறநற :)))))))
ReplyDeleteஅபி பாப்பாவே இந்த போடு போட்டா அபி அப்பா என் பாடு படுத்துவர்
ReplyDeleteபாவம் தங்கமணி.
அந்த காலத்து நகைச்சுவை எழுத்தாளர் நாடோடி மாதிரி அருமையாண காமெடி.
//பத்மா சுப்ரமணியத்தை பசுவாக்கி இந்த 2ம் பாகம் போடுகிறேன்//
ReplyDeleteஎன்னங்க உங்க இஷ்டத்துக்கு சுருக்கறிங்க.
உங்க அபி பாப்பா வயலின் கத்துக்க போயிருந்தா குன்னக்குடி வைத்தியநாதன 'குவைத்'னு சுருக்கியிருப்பீங்களோ?? :))
இது என்னங்க என்னோட கமெண்ட்டை இருட்டடிப்புச் செஞ்சிருக்கீங்க போல் இருக்கு? :)))))))
ReplyDeleteபோட்டோ போட்டீங்க, சரி.. கனக் காரியமா, இன்ன கம்பனிலதான் குந்திகினுகீறேன்னு சொல்ற மாதிரி அந்த நாய்ப்பட்டைய வேற போட்டுகிட்டே போஸ் கொடுக்கணுமா? :)
ReplyDeleteஅபியக் கேட்டதா சொல்லவும்.. :)
அன்புடன்
பொன்ஸ்
http://poonspakkangkal.blogspot.com
அபி அப்பா
ReplyDeleteஉங்க பதிவுகளை மிக மிக ரசிக்கிறேன். இந்த நகைச்சுவை உணர்வு மட்டும் இருந்தால் என்ன கஷ்டங்களையும் பந்தாடி விடலாம். பதிவுலகில் எதார்த்தத்தை நகைச்சுவையுடன் சொல்பவர்கள் மிகக்குறைவு. அது மிக தேவையும் கூட. வாழ்வும் நகைச்சுவையுடன் என்று ஓங்கட்டும். நிறைய சிரிக்க வையுங்கள்.
அபி அப்பா எல்லாரும் உங்க பதிவ படிக்கும் போது விழுந்து விழுந்து சிரிக்கராங்க எனக்கு என்னடான்ன எக்குதப்பா கடை கண்ணில இருக்கும் போதெல்லம் நெனைவு வந்து சிரிக்கரேங்க.....எல்லாரும் என்ன ஒரு மாதிரி..ப்ளீஸ் இதுக்கு மேல என்ன சொல்ல சொல்லாதீங்க....!!!!
ReplyDelete:)))
ReplyDeleteரெண்டு பாகமும் படித்தேன்.
ReplyDeleteHad a good laugh :)))
அந்த டீச்சர் இன்னும் சொல்லித்தராங்களா? இல்லை சொல்லித் தருவதையே நிறுத்திட்டாங்களா?
ReplyDeleteஇப்படி ஒரு குடும்பமா சேர்ந்து டீச்சர அடிச்சி வெரட்டியிருக்கிங்க. யோவ் புலி சீக்கிரம் கேஸ் கட்டை எடுத்துக்கிட்டு கெளம்புய்யா..
//Radha Sriram said...
ReplyDeleteஎக்குதப்பா கடை கண்ணில இருக்கும் போதெல்லம் நெனைவு வந்து சிரிக்கரேங்க///
ராதா நீங்களாவது கடை கண்ணியில.. நான் பாஸ்க்கு எதுக்கால உக்காந்துட்டு, நினப்பு வந்து சிரிச்சு...ஏத்து வாங்கி..
ஆனா ஏத்து வாங்கின அப்புறமும் கோவம் வரலை...மீண்டும் மீண்டும் சிரிப்பு..:-))
குழந்தைகள் துன்புறுத்தும் பெற்றோருக்கெதிரான சட்டம் எதாச்சுன்ம் இருந்தா அதுல உள்ள தூக்கி போடுங்கப்ப இந்த ஆளை.
ReplyDelete//பாவம்.. இப்படி சுருக்கிட்டீங்களே!!!! //
ReplyDeleteமைஃபிரன்ட் ! வாங்க பசு பாவமா அல்லது ப.சு பாவமா?
ennaga neenga..
ReplyDeletepa.su appadinu suruki irukalam.. naan pasu baagam 1 engenu thedaren che ippadiya pannuveenga
//சரி, இன்னைக்கு ஜன்னல் வழியா பாத்துட வேண்டியதுதான்னு முடிவு செஞ்சு டீச்சர் வருகைக்காக காத்திருந்தேன்//
ReplyDeleteஇப்படியெல்லாம் பொத்தாம் பொதுவா எழுதாதீங்க அபி அப்பா.. யாராச்சும் என்னமாச்சும் நெனச்சுக்கப் போறாங்க :-D (நல்லா மாட்னீங்களா? :-))
////சரி, இன்னைக்கு ஜன்னல் வழியா பாத்துட வேண்டியதுதான்னு முடிவு செஞ்சு டீச்சர் வருகைக்காக காத்திருந்தேன்//
ReplyDeleteஇப்படியெல்லாம் பொத்தாம் பொதுவா எழுதாதீங்க அபி அப்பா.. யாராச்சும் என்னமாச்சும் நெனச்சுக்கப் போறாங்க :-D (நல்லா மாட்னீங்களா? :-))//
:-))))))