பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

March 8, 2007

காமடி தினமா? மகளிர்தினமா??

1ம்தேதின்னா எங்க சின்ன அக்கா பரபரப்பாயிடுவாங்க. அம்மாவுக்கு ஹெல்ப்பெல்லாம் நடக்கும். வேற என்ன தட்டுகள் கழுவி சுத்தமாக்கின்னு சுறு சுறுன்னு இருப்பாங்க. ஏன்னா அப்பாவின் சம்பள நாள். கண்டிப்பா காளியாகுடி அல்வா வாங்கிட்டு வருவாங்க.

வந்தவுடன் அம்மாதான் பங்கு பிரிப்பாங்க. தட்டில் ரவுண்டாக ஒவ்வொருவருக்கும் வைத்துவிட்டு நடுவே ஒரு பங்கு. அது தம்பிக்கு. அது கொஞ்சம் பெரியதாக இருக்கும். அவன் கடைகுட்டி அதனால. அதன் பிறகு அம்மா அவங்க பங்கிலேயிருந்து கொஞ்சம் கில்லி தம்பி பங்கின் தலையில் கிரீடம் மாதிரி வைப்பாங்க.

நான் கொஞ்சம் அவசர குடுக்கை. குடுத்த உடனே டபக்குன்னு தின்னுடுவேன். தம்பியோ அந்த கிரீடத்தையே நக்கிகிட்டு இருப்பான். சின்ன அக்காவோ ரசித்து ரசித்து கொஞ்சம் கொஞ்சமா எனக்கு எதிர்ல நின்னு திங்கும். அதை எப்படியாவது புடுங்கிடனும்ன்னு நா பிரம்ம பிரயத்தினம் செய்வேன்.

தம்பியோடத பிடுங்க முடியாது. அம்மா காவல் வளையத்துக்குள் இருப்பான். ஒருமுறை 90% பிடுங்கிட்டேன் சின்ன அக்காகிட்ட இருந்து. என்னை தள்ளிவிட்டுட்டு டபக்ன்னு வாய்குள்ளே போட்டு வாயை மூடி ஒரு உருட்டு உருட்டி வெளியே எடுத்து "எச்சிலாயிடுத்தே. இப்ப நீ சாப்பிடமுடியாதே"ன்னு நக்கல் செஞ்சுது.

ஒரே செகண்டில் அதை பிடுங்கி நான் வாயில் போட்டு முழுங்கி(நான் அதை ருசி பார்க்கனும் என்பதில்லை.அக்காவை ஜெயிக்கனும் அவ்வளவே) "எச்சியா இருந்தா பரவாயில்ல, இப்ப என்ன பண்ணுவ"ன்னு சொல்லிட்டு ஓடிட்டேன். பிறகு அக்கா துரத்தி துரத்தி அடித்தது தனி கதை.

பின்பு பெரிய அக்கா தன் பங்கில் எனக்கு கொஞ்சம் சின்ன அக்காவுக்கு கொஞ்சம் தந்தது.

அப்போது சவால் வேற..சின்ன அக்காகிட்ட"தோ பார். நா அப்பாவாட்டம் வேலைக்கு போய் மொதோ சம்பளம் வாங்கி 2கிலோ அல்வா வாங்கி லாட்ஜ்ல ரூம் போட்டு கதவ சாத்திகிட்டு நா மட்டும் தனியா திங்கல என் பேர மாத்திக்க". இதுவரை எனக்கு ரூம் போட்டு அல்வா சாப்பிட நேரம் கிடைக்கவில்லை.

6 மாதம் முன்பு அக்கா வீட்டுக்கு வந்தபோது "அக்கா காளியாகுடி அல்வா வாங்கிவர்ரேன் சாப்பிடுறாயான்னு கேட்டேன். அதுக்கு அக்கா" போடா இப்பல்லாம் அந்த ஆசையே இல்லை. காபிக்கு கூட ஜீனி போடுவது கிடையாது"ன்னு சலிச்சுகிட்டாங்க. அந்த காலம் இனி வருமா?

அபிபாப்பாகிட்ட 1 கிலோ அல்வா வாங்கி குடுத்தா ஒரே ஒரு வாய் கஷ்டப்பட்டு தின்னுட்டு மீதிய டைகர்தான் சாப்பிடுது. அவளுக்கு எனக்கும் என் அக்காகெல்லாம் கிடைத்த அனுபவமெல்லாம் அசைபோட கிடைக்குமா.

விஷயத்துக்கு வருகிறேன். இப்படி தினம் தினம் சண்டையும் ஜாலியுமாய் போய் கொண்டிருந்தது. நான் 9ம் வகுப்பு படித்தபோது பெரிய அக்காவும், காலேஜ் 2ம் வருடம் படித்த போது சின்ன அக்காவும் கல்யாணமாகி புகுந்த வீடு போய்ட்டாங்க!

அதன் பிறகு 13 வருஷம் எங்க வீடு வீடு மாதிரியே இல்லை. அம்மா மட்டும்தான் மகளிர். அவங்க தலைசீவிட்டு முடியை சீப்பிலேயே வைக்க மாட்டாங்க,ஸ்டிக்கர் பொட்டை கண்ணாடியில ஒட்ட மாட்டாங்க, கண் மையை சுவத்துல தடவ மாட்டாங்க, சாப்பிட்ட தட்டை காயவிட்டு கழுவமாட்டாங்க, கலர் கோலம் போட மாட்டாங்க, சினிமா பத்தி பேச மாட்டாங்க, ரிப்பன் கிடையாது, குஞ்சம் கிடையாது, கண்ணாடி வளையல் போட மாட்டாங்க, கொலுசு போட்டுக்க மாட்டாங்க, ஹீல்ஸ் கிடையாது சாதாரண ரப்பர் செருப்புதான், எங்கயாவது கிளம்பினா 2 நிமிஷத்துல மேகிமாதிரி ரெடியாயிடுவாங்க.(ஆனால் அன்பும், அருமையான சாப்பாடும் அம்மாவிடமிருந்து கிடைக்கும்)..ரொம்ப வெறுமையா போச்சு அந்த 13 வருஷம்.

அப்புறம் தங்கமணி வந்த பிறகு வீடு பழையபடி கல கலன்னு சிரிக்குது. ஆக வெறுமை இல்லாத உலகத்தை தந்து கொண்டிருக்கும் அம்மா, சகோதரிகள், நண்பிகள், மற்றும் அனைத்து மகளிருக்கும் இந்த அபிஅப்பாவின் மகளிர்தின வாழ்த்துக்கள்.

குறிப்பாக எனக்கு இந்த 1மாதமாக வலைப்பூவினால் கிடைத்த சகோதரிகள் இம்சைஅரசி,நர்மதா,அப்பாவிகுமாரி,சேதுக்கரசி,முத்துலெஷ்மி,வல்லிசிம்ஹன் மேடம்,மீனா,டுபுக்குடிசப்பிள்,பொன்ஸக்கா,மைஃபிரன்ட்,கண்மணி,துளசிடீச்சர், கீதா மேடம்,அபர்ணா, மங்கை,மதுரா,வேதா,உஷமேடம்,கீதாபாலராஜன்,ராதாஸ்ரீராம்,கோகிலாகார்த்திக்,கவிதா,ஷக்தி ஆகியோர்களுக்கு என் ஸ்பெஷல் வாழ்த்துக்கள்!!!

தலைப்பு: சும்மா தூண்டில்தான்:-)))

38 comments:

  1. தொல்ஸ்,
    கொசுவத்தியை சுத்தவிட்டு எங்கெயோ அழைத்து சென்றுவிட்டீகள்
    லியோ சுரேஷ்

    ReplyDelete
  2. // எனக்கு இந்த 1மாதமாக வலைப்பூவினால் கிடைத்த சகோதரிகள் இம்சைஅரசி,நர்மதா,அப்பாவிகுமாரி,சேதுக்கரசி,முத்துலெஷ்மி,வல்லிசிம்ஹன் மேடம்,மீனா,டுபுக்குடிசப்பிள்,பொன்ஸக்கா,மைஃபிரன்ட்,கண்மணி,துளசிடீச்சர், கீதா மேடம்,அபர்ணா, மங்கை,மதுரா,வேதா,உஷமேடம்,பாலராஜன்கீதா,ராதாஸ்ரீராம்,கோகிலாகார்த்திக்,கவிதா,ஷக்தி ஆகியோர்களுக்கு என் ஸ்பெஷல் வாழ்த்துக்கள்!!!//

    உங்க பதிவுலயே நானும் வாழ்த்திக்கிறேன்.

    பசங்களை பத்தி யோசிக்கவாச்சும் ஒரு நாளை கொண்டாடனும் போலருக்கு..
    ஏப்ரல்-1ன்னு சொல்லிடாதேப்பு..
    அது சமத்துவ நாள்..

    சென்ஷி

    ReplyDelete
  3. யோவ் இது உனக்கே நியாயமா இருக்கா...பாலராஜன் கீதாவை சகோதரின்னு போட்டிருக்கியே...இது அந்த பாலராஜன் கீதாவுக்கு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவார்...

    அட ஆமப்பா..அவர் ஆம்பள...அவருக்கு எதுக்கு மகளிர் தின வாழ்த்து...

    எழுத்தாளர் சுஜாதா ஆம்பள. அதுவாவது தெரியும் இல்ல...

    மற்றபடி லேடீஸ் இருந்த வீட்டுல இருந்துட்டு அவங்களை மிஸ் பண்ணதை கொஞ்சம் காமெடியா டச்சிங்க எழுதி இருக்கேள்...நன்னாருங்கோ...

    ReplyDelete
  4. தேங்க்ஸ் அண்ணா...

    அப்படியே அண்ணிக்கு நான் "மகளிர் தின வாழ்த்துக்கள்" சொன்னேன்னு சொல்லிடுங்க :)))

    ReplyDelete
  5. அபி அப்பா, ரொம்ப தமாசா எழுதறீங்க. அதே சமயம் கடேசீல டச்சிங்கா முடிச்சிட்டீங்க. நீங்க சொன்னமாரி சண்டை அனேகமா நம்ம ஜெனரேஷன்ல எல்லார் வீட்டுலயும் இருந்துது. இப்பத்தான் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒண்ணொட நிறுத்திடராஙகளே.

    ReplyDelete
  6. எங்களையெல்லாம் நினைச்சு வாழ்த்து சொன்னதுக்கு நன்றி. அப்புறம்
    ஒரே ஒரு ச்சின்ன விஷயம்.
    நம்ம 'பாலராஜன் கீதா' கிட்டே சொல்லி அவுங்க மனைவி 'கீதா பாலராஜனு'க்கு
    வாழ்த்தைத் திருப்பிடச்சொல்லுங்க. இதுதான் சாக்குன்னு அவரே வச்சுக்கப் போறாரு:-))))

    ReplyDelete
  7. இன்னாப்பா நீ இப்படி கொசுவத்தியை சுத்த வச்சுட்ட....

    அக்கா இருந்தா எப்ப பார்த்தலும் ஜாலியா சண்டை தான்.
    போன வருஷம் ஊருக்கு போன போதும் எனக்கும் அக்கா இல்லாத வீடு ரொம்ப வெறுப்பா இருந்திச்சி ;(((

    ஒரே பீலிங்ஸா இருக்குப்பா ;((((

    ReplyDelete
  8. \\இம்சைஅரசி,நர்மதா,அப்பாவிகுமாரி,சேதுக்கரசி,
    முத்துலெஷ்மி,வல்லிசிம்ஹன் மேடம்,மீனா,டுபுக்குடிசப்பிள்,பொன்ஸக்கா,மைஃபிரன்ட்,
    கண்மணி,துளசிடீச்சர், கீதா மேடம்,அபர்ணா, மங்கை,மதுரா,வேதா,உஷமேடம்,பாலராஜன்கீதா,
    ராதாஸ்ரீராம்,கோகிலாகார்த்\\

    ஆஹா...எப்படி எல்லா பெண் பதிவர்களுக்கும் வாழ்த்து சொல்றதுன்னு யோசிச்சிகிட்டு இருந்தேன்....ரொம்ப நன்றி அபி அப்பா...

    எல்லாருக்கும் என் இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. \\"தோ பார். நா அப்பாவாட்டம் வேலைக்கு போய் மொதோ சம்பளம் வாங்கி 2கிலோ அல்வா வாங்கி லாட்ஜ்ல ரூம் போட்டு கதவ சாத்திகிட்டு நா மட்டும் தனியா திங்கல என் பேர மாத்திக்க". \\

    அட...அபி அப்பா அதுக்கு தான் கிடேசன் பார்க் இருக்கே.

    ReplyDelete
  10. அன்பு அபி அப்பா,
    என்ன நம்ம பாலராஜன்கீதாவை 'சகோதரி' ஆக்கிட்டீங்க?
    அவரு நம்மள மாதிரி ஒரு ஆளாக்கும்..

    முதல்ல அவர் வந்து பாக்கறதுக்குள்ள.. அந்த பேரை எடுத்துடுங்க..

    அன்புடன்,
    சீமாச்சு..

    ReplyDelete
  11. முதல்லே வாழ்த்துக்களுக்கு நன்றி சொல்லிட்டு அப்புறம் நிதானமா வந்து படிச்சுட்டு வந்து பின்னூட்டம் போடறேன். அபி அம்மா, அபி பாப்பாவுக்கும் என்னோட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. ஏப்ரல் 1-ம் தேதி பசங்களுக்காக யோசிக்கும் நாள் (ஹிஹிஹி, முட்டாள்னு ஒத்துக்கிறாரே?) கொண்டாடப் போகும் "சென்ஷி"க்கு வாழ்த்துக்கள் முன்பதிவு செய்யப் படுகிறது. :D

    ReplyDelete
  13. உங்க பதிவு மூலமா நானும் மகளிர் தின வாழ்த்துக்கள தெரிவிச்சிக்குறேன்...

    ReplyDelete
  14. // எனக்கு இந்த 1மாதமாக வலைப்பூவினால் கிடைத்த சகோதரிகள் இம்சைஅரசி,நர்மதா,அப்பாவிகுமாரி,சேதுக்கரசி,முத்துலெஷ்மி,வல்லிசிம்ஹன் மேடம்,மீனா,டுபுக்குடிசப்பிள்,பொன்ஸக்கா,மைஃபிரன்ட்,கண்மணி,துளசிடீச்சர், கீதா மேடம்,அபர்ணா, மங்கை,மதுரா,வேதா,உஷமேடம்,பாலராஜன்கீதா,ராதாஸ்ரீராம்,கோகிலாகார்த்திக்,கவிதா,ஷக்தி ஆகியோர்களுக்கு என் ஸ்பெஷல் வாழ்த்துக்கள்!!!//
    புதிதாக சேர்ந்த என்னையும் நினைவு கூர்ந்ததர்க்கு நன்றி.{மகளிர் தின வாழ்த்துக்கும் சேர்த்து}

    ReplyDelete
  15. ///அவங்க தலைசீவிட்டு முடியை சீப்பிலேயே வைக்க மாட்டாங்க,ஸ்டிக்கர் பொட்டை கண்ணாடியில ஒட்ட மாட்டாங்க, கண் மையை சுவத்துல தடவ மாட்டாங்க, சாப்பிட்ட தட்டை காயவிட்டு கழுவமாட்டாங்க///

    பரவாயில்லை என் கிளப்புல நிறைய பேர் இருந்து இருக்காங்க...சந்தோஷம்

    //அபிபாப்பாகிட்ட 1 கிலோ அல்வா வாங்கி குடுத்தா ஒரே ஒரு வாய் கஷ்டப்பட்டு தின்னுட்டு மீதிய டைகர்தான் சாப்பிடுது. அவளுக்கு எனக்கும் என் அக்காகெல்லாம் கிடைத்த அனுபவமெல்லாம் அசைபோட கிடைக்குமா.//

    உண்மை அபி அப்பா... என் பெண்ணுக்கும் அந்த கொடுப்பினை இல்லைனு நினைக்கறப்போ நானும் இது மாதிரி அடிக்கடி நினச்சு பார்த்துபேன்..ஹ்ம்ம்..அங்க டைகர் மாதிரி இங்க ஜூலி...அவள் உலகமே ஜூலி தான்... இப்ப எங்க கவலை எல்லாம் ஜூலிக்கு என்னும் ஆகக் கூடாதூங்ககிறது தான்...அந்த அளவிற்கு ஜூலி அவளின் வாழ்வில் ஒரு அங்கம்..ம்ம்ம்

    ReplyDelete
  16. பாலராஜனுக்குச் சொன்னாலும் கீதாவுக்குப் போயிடும். கீதாவுக்குச் சொன்னாலும் பாலராஜனுக்குப் போயிடும். ஆகவே நீங்க எழுதியதிலும் அர்த்தம் உள்ளது.

    ReplyDelete
  17. ரொம்ப நன்றி! எங்களுக்கு எல்லாம் சொன்னீர்களே! உங்க மனைவிக்கு , 2 சகோதரிகளுக்கு சொன்னீர்களா?

    ஏன்னா,எங்க அண்ணன்கள் கண்டுக்கவே இல்லை!

    ReplyDelete
  18. வலையுலக பாக்யராஜ் இனிமே அபிஅப்பாதான் என்பது உறுதியாகிவிட்டது. :)

    ReplyDelete
  19. eppavum pola super postu.

    magalir dhina vaazhthukkalku nanri.

    rendoru vaati, blog visitina ennaiyum nyabagathula vechu vaazhthu kooriyamaikku special thanku..

    Cheers

    ReplyDelete
  20. //அவங்க தலைசீவிட்டு முடியை சீப்பிலேயே வைக்க மாட்டாங்க,ஸ்டிக்கர் பொட்டை கண்ணாடியில ஒட்ட மாட்டாங்க, கண் மையை சுவத்துல தடவ மாட்டாங்க, சாப்பிட்ட தட்டை காயவிட்டு கழுவமாட்டாங்க, கலர் கோலம் போட மாட்டாங்க, சினிமா பத்தி பேச மாட்டாங்க, ரிப்பன் கிடையாது, குஞ்சம் கிடையாது, கண்ணாடி வளையல் போட மாட்டாங்க, கொலுசு போட்டுக்க மாட்டாங்க, ஹீல்ஸ் கிடையாது சாதாரண ரப்பர் செருப்புதான், எங்கயாவது கிளம்பினா 2 நிமிஷத்துல மேகிமாதிரி ரெடியாயிடுவாங்க.(ஆனால் அன்பும், அருமையான சாப்பாடும் அம்மாவிடமிருந்து கிடைக்கும்).ரொம்ப வெறுமையா போச்சு அந்த 13 வருஷம்.//

    //அப்புறம் தங்கமணி வந்த பிறகு வீடு பழையபடி கல கலன்னு சிரிக்குது. //

    ஆக தங்கமணி மேட்டர் எல்லாம் இப்படி பிட்டைப் போட்டு உள்குத்தா சொல்லிட்டீரு. வந்து படிக்க மாட்டாங்கன்னு ஒரு தைரியமா?

    யாருடா அது? மக்கா அண்ணிக்கு ஒரு போனைப் போடுல! :))

    ReplyDelete
  21. நீங்கள் அல்வா புடுங்கி சாப்பிட்ட கதை சுவாரசியமாக இருக்கின்றது.மிகவும் தாமதமாக மகளிர் தின வாழ்த்துக்களை அனைவருக்கும் சொல்கின்றேன்.

    ReplyDelete
  22. கேக்குறதுக்கு ஆள் இல்லாமத்தான் இப்படி பதிவு போடறிங்க!

    ReplyDelete
  23. தலைப்பு தூண்டில் தாங்க, மூனு நாள் கழித்து பாத்ததில் வர வரைக்கும் நம்மள ஏதும் காமெடி பண்ணிட்டீங்களோனு பயந்துக்கிட்டே வந்தேன்...

    நம்ம நிலைமை அப்படி ஆகி போச்சு.

    ReplyDelete
  24. Thanks a lot AbiAppa!!
    plz convey our wishes to Abiamma and abikutty!!!

    i am attrected to ur blog for the way u make us laugh and also for ur kids name ;-) yeah ..my pet name is also "Abi"!!

    ReplyDelete
  25. //அப்புறம் தங்கமணி வந்த பிறகு வீடு பழையபடி கல கலன்னு சிரிக்குது//

    நல்ல தகவல் தல...இனிமே நானும் என்னுடைய எல்லா பதிவிலும் இப்படி ஒரு பிட்ட போடலாம்னு இருக்கேன்..(அடி கொஞ்சம் குறையும் பாருங்க) :-)

    ReplyDelete
  26. //தொல்ஸ்,
    கொசுவத்தியை சுத்தவிட்டு எங்கெயோ அழைத்து சென்றுவிட்டீகள்
    லியோ சுரேஷ்//

    வாங்க லியோ! திரும்பி வர்ரமாதிரி ஒரு பதிவு போட்டுடலாம்:-))

    ReplyDelete
  27. //பசங்களை பத்தி யோசிக்கவாச்சும் ஒரு நாளை கொண்டாடனும் போலருக்கு..
    ஏப்ரல்-1ன்னு சொல்லிடாதேப்பு..
    அது சமத்துவ நாள்..//

    சென்ஷி! அதையேன் ஞாபகம் வச்சிகிட்டு..பின்ன பதிவு போட்டு கும்மியடிச்சுடுவாங்க நம்மை:-)))

    ReplyDelete
  28. //யோவ் இது உனக்கே நியாயமா இருக்கா...பாலராஜன் கீதாவை சகோதரின்னு போட்டிருக்கியே...இது அந்த பாலராஜன் கீதாவுக்கு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவார்...//

    இப்ப பாருங்க ரவி! கீதா பாலராஜன்னு இருக்கும். தவறு நடந்துவிட்டது. ஸாரி

    ReplyDelete
  29. //யோவ் இது உனக்கே நியாயமா இருக்கா...பாலராஜன் கீதாவை சகோதரின்னு போட்டிருக்கியே...இது அந்த பாலராஜன் கீதாவுக்கு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவார்...//

    இப்ப பாருங்க ரவி! கீதா பாலராஜன்னு இருக்கும். தவறு நடந்துவிட்டது. ஸாரி

    ReplyDelete
  30. //தேங்க்ஸ் அண்ணா...

    அப்படியே அண்ணிக்கு நான் "மகளிர் தின வாழ்த்துக்கள்" சொன்னேன்னு சொல்லிடுங்க :))) //

    இம்சையம்மா! கண்டிப்பாக. சொல்லாட்டி யார் வாங்கிகட்டிப்பது:-))

    ReplyDelete
  31. //அபி அப்பா, ரொம்ப தமாசா எழுதறீங்க. அதே சமயம் கடேசீல டச்சிங்கா முடிச்சிட்டீங்க. நீங்க சொன்னமாரி சண்டை அனேகமா நம்ம ஜெனரேஷன்ல எல்லார் வீட்டுலயும் இருந்துது. இப்பத்தான் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒண்ணொட நிறுத்திடராஙகளே.//

    வாங்க சின்ன அம்மனி! வருகைக்கு மிக்க சந்தோஷம். அடிக்கடி வாங்க

    ReplyDelete
  32. //நம்ம 'பாலராஜன் கீதா' கிட்டே சொல்லி அவுங்க மனைவி 'கீதா பாலராஜனு'க்கு
    வாழ்த்தைத் திருப்பிடச்சொல்லுங்க. இதுதான் சாக்குன்னு அவரே வச்சுக்கப் போறாரு:-)))) //

    வாங்க டீச்சர்! 500 பதிவுக்கும் 500 வாழ்த்துக்கள்./தவறு இப்போ சரியாயிடுச்சு:-)

    ReplyDelete
  33. //ஒரே பீலிங்ஸா இருக்குப்பா ;(((( //

    கோபிதம்பி! குடும்பத்தோட இருப்பது எவ்வள்வு சந்தோஷம் ஹும்..

    ReplyDelete
  34. //அன்பு அபி அப்பா,
    என்ன நம்ம பாலராஜன்கீதாவை 'சகோதரி' ஆக்கிட்டீங்க?
    அவரு நம்மள மாதிரி ஒரு ஆளாக்கும்..

    முதல்ல அவர் வந்து பாக்கறதுக்குள்ள.. அந்த பேரை எடுத்துடுங்க..

    அன்புடன்,
    சீமாச்சு..//

    வாங்க சீமாச்சு! தவறு சரியாயிடுச்சு. மாப்பு.மாப்பு.
    முதல் வருகை. மிக்க மகிழ்ச்சி! என்னை தெறியுதா?

    ReplyDelete
  35. //முதல்லே வாழ்த்துக்களுக்கு நன்றி சொல்லிட்டு அப்புறம் நிதானமா வந்து படிச்சுட்டு வந்து பின்னூட்டம் போடறேன். அபி அம்மா, அபி பாப்பாவுக்கும் என்னோட வாழ்த்துக்கள். //

    வாங்க கீதா மேடம்! வாழ்த்தை தங்கமணிகிட்ட சொல்லீட்டு பாப்பாகிட்ட சொல்லும் போது "பாப்பாவுக்கு டிரஸ் எடுக்கலயா"ங்குது.

    ReplyDelete
  36. ஹூம்..ஹூம்..ஹூம் அழுகிறேனாக்கும்.இப்படி உங்க பழைய கதையெல்லாம் சொல்லி கவுத்துப்புட்டீங்களே அண்ணாச்சி.
    மகளிர்தின வாழ்த்துக்களுக்கு நன்றி..அபியைப் பார்க்கவரும் போது 2கிலோ காளியாகுடி அல்வாவுடன் வந்து உங்களையும் அண்ணியாரையும் பார்க்கிறேன்.[இப்பல்லாம் அங்க அல்வா நல்லாயில்லையாம்.சாப்பிட்டா நாலு நாளைக்கு வயித்தாலப் போகுதாம் .இருந்தாலும் ஆசைப்பட்டுட்டியளே விட்டிருவமா?]]

    ReplyDelete
  37. //அபியைப் பார்க்கவரும் போது 2கிலோ காளியாகுடி அல்வாவுடன் வந்து உங்களையும் அண்ணியாரையும் பார்க்கிறேன்.//

    கண்டிப்பா வாங்க! கண்டிப்பா வாங்க!!

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))