பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 9, 2007

துபாய் வலைப்பதிவர் சந்திப்பு

மெதுவா ஒட்டகம் மாதிரி நொழஞ்சாச்சு. கவிதை, காமெடி,சமூகம்,சண்டை(நெசமான சண்டையில்ல) இப்டீன்னு ஒரு ரவுண்டு வந்தாச்சு. முழு பிளாக்கர் ஆகனும்னா அடுத்தது என்ன செய்யுனும்னு நல்லா யோசிச்சு பாத்தா ஒன்னு பாக்கி இருந்துச்சி.

அதுதாங்க, 'வலைப்பதிவர் சந்திப்பு'. சரி இதையே காமெடியா எழுதிடலாம்ன்னு நெனச்சா டுபுக்கு ஐயா அதுல் பின்னி பெடலு எடுத்துட்டார். அதுனால சீரியசா ஒரு வலிப்பதிவாளர் சந்திப்பு போட்டுடலாம்னு முடிவு செஞ்சு அதுக்கான ஏற்பாடு செஞ்சேன்.

நா கத்துக்குட்டி. நா கூப்புட்டா வாரத்துக்கு ஒரே ஒரு மூத்த பதிவர்தான் ஒத்துகிட்டார். ஒருத்தர் மட்டுமே கலந்துகிட்டா அது வலைப்பதிவாளர் சந்திப்பாகுமான்னு ஒரு டவுட்டு. அப்பதான் நம்ம சூடான் புலி மனசுக்குள்ள வந்தாரு. அவரு துபாய் வந்த போது''தம்பிய மட்டும் சந்திச்சா அது வலைப்பதிவர் சந்திப்பாகுமா?"ன்னு ஒரு பிட்ட போட்டாரு.

அதுக்கும் ஒரு 45 பேர் வந்து ''பின்ன இல்லியா?"ன்னு குமுறி குமுறி கும்மியடிச்சிட்டு போனாங்க. அந்த தைரியத்துல நானும் அந்த மூத்த பதிவரை வர சொல்லிட்டேன். ஒத்துகிட்டாரு. சந்தோசம். மகிழ்ச்சி.

என்க்கு 5 மணி வர பொட்டி தட்டுனும்.(புது வார்த்தைக்கு நன்றி தல). அதனால ஒரு 6.30க்கு அவர என் வூட்டுக்கு வர சொல்லிட்டேன். வூட்டுக்கு பக்கத்துல "கிடேசன் பார்க்"ன்னு ஒன்னு இருக்கு. அங்கியே நம்ம கச்சேரி வச்சுக்கலாம்ன்னு சொல்லிட்டேன். இன்னிக்கு நம்ம தங்கமனியும், மை டியர் குட்டிசாத்தானும் வூட்டுல இல்ல. (அதனால தான் இந்த சந்திப்பே)

போகும் வழியிலேயே எல்லாத்தையும் வாங்கிகிட்டேன். சரியா 6.25க்கு வந்துட்டார். உள்ள வரலமான்னு கேட்டப்போ "வாங்க சார், வாங்க சார்"ன்னு சொல்லிட்டு பரபரப்பாயிட்டேன். நாங்க முத முத அப்பதான் நேர்ல அறிமுகம். தனக்கு இத்தன வயசுன்னு சொன்னப்ப என்னால நம்பவே முடியலை.

அவருதான் ஆரம்பிச்சார் டாப்பிக்க. பின்நவீனத்துவம், பெரியார்,ஆன்மீகம்,வலைப்பூக்களின் ஆதிக்கம், இலக்கியம்,ஷெல்லி கீட்ஸ், முருஹன், கனிமொழி,எழுத்துதிமிர், அடங்கமறு, பாலியல், பெண்ணீயம்,நா.க,பார்த்தசாரதி, ஞாநி,சயின்ஸ் தாத்தா......போதும் போதும்..

சார், நாம கிடேசன் பார்க் போலாமா?ன்னு கேட்டேன். உடனே கிடேசனுக்கும் பார்க்குக்கும் நடுப்புர உள்ளத பத்தி பேச ஆரம்பிச்சுட்டார். பின்ன மெதுவா எந்திரிச்சு நிக்க பாத்தார். மெதுவா கேட்டார்"நாம இங்கியே கண்டின்யூ பன்னுவோமே". எனக்கும் அது உசிதமாகப்பட்டதாள் திரும்பவும் ஒக்காந்துட்டோம்.

கவிதை சொல்லவான்னு கேட்டார். சொல்லுங்கன்னு சொல்றத்துக்கு முன்னயே சொல்ல ஆரம்பிச்சுட்டார்.

இளைஞ்னே,
கவலைகள் என்ன நீ
கட்டிக்கொண்ட மனைவியா
ஒட்டிக்கொண்ட புல்தானே
தட்டிவிட்டு நடை போடு
தடைகளே வழியாகும்!!!

"மேல சொல்லுங்க சார். கொஞ்சம் இருங்க சூடா வடை சொல்லியிருக்கேன் வந்துடும் ' ன்னேன்.

வடைய யாரு எடுத்துட்டு வருவாங்கன்னு கேக்குரத்துக்கு பதிலா"வடை யார் கூட வரும்"ன்னார். இட்லிகூட வரும்னு சொன்னேன். பதறிட்டார். "யோவ் அவன் போட்டோ புடிச்சு போட்டுவான்யா"ன்னு அலறிட்டார்.

நா "மேல சொல்லுங்க சார்" ன்னேன்.

நீ
படுத்துக்கொண்டிருக்கும் வரை
உன்னை
படிக்கட்டாகத்தான்
பயன்படுத்துவார்கள்
எழுந்து நில்
எண் திசைக்கும்
வழிகாட்டும்
வழிகாட்டியாக..

"சழி பாத்ரூம் எங்க?"

மீதிய அங்க சொல்லப்போறார்ன்னு நெனக்கிறேன்.

"எங்க வுட்டன்"

"பாத் ரூம்ல சார்"

"யோவ், கவுஜய எங்க வுட்டன்"

"நாபகம் இல்ல சார்"

"ஆங் புடிச்சுட்டேன்"ன்னு ரவுச ஆரம்பிச்சுட்டார்.

நீ
விழுந்து கிடப்பது
மலர்களை போல்
மடிவதற்கள்ள
விதைகளை போல்
எழுவதற்கு..

"போதும் சார்.. பிரியமாட்டங்குது. ஆன்மீகம் பேசுவோம் சார்"ன்னு சொல்லி முடிக்கல லிங்கம் எடுத்துட்டார். வாயிலேர்ந்து. பின்ன வாய தொடச்சிவுட்டு படுக்கவச்சுட்டேன்.

இப்படியாக இனிதாக துபாய்-Al Quoz Area வலைப்பதிவர் சந்திப்பு முடிந்தது.

ஆக நானும் ஒரு பதிவு போட மேட்டர் கிடைத்தது.

சொல்ல மறந்துட்டேனே! என் கூட சந்திப்பில் கலந்து கொண்ட அந்த மூத்த(வயதில்.....ஆச்சு அவருக்கு 27)வலைப்பதிவர்???? ''அபிஅப்பா" (இருக்குடீ, பாத்ரூம் போம்போது பாப்பா பொம்மைய உடச்சில்ல)

24 comments:

 1. நாதாறி, நீ வாந்தியெடுத்தத கொட்டுற எடமா எங்க "தமிழ்மணம்" என்று திட்டுபவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பனம்.

  ReplyDelete
 2. உங்களுக்கு வயசு 27 தானா????

  ReplyDelete
 3. //உங்களுக்கு வயசு 27 தானா???? //

  ஆமா வெட்டி தம்பி, ஆனா 10 வருஷம் முன்ன.

  ReplyDelete
 4. இன்னும் தூங்கல. தம்பியம், கோபிநாத்தும் வீட்டுக்க வரன்னு சொல்லியிருக்காங்க. அதனால வெயிட்டிங். சரி பதிவ பத்தி சொல்லுங்க

  ReplyDelete
 5. ஏங்க பதிவர் சந்திப்புக்கு போறப்ப முகம் பாக்குற கண்ணாடியையுமா கொண்டு போறது. :)))

  சென்ஷி

  ReplyDelete
 6. இதோ போறேன்... மணி 12:30 ஆச்சி

  எப்பவும் 2 மணிக்கு தான் தூங்கறது...

  ரெண்டு பேரையும் விசாரிச்சதா சொல்லுங்க...

  பதிவு ரொம்ப அருமை!!!

  ReplyDelete
 7. hey poi sollatha,37 ennoda vayasu...!

  abi sithappa...!

  ReplyDelete
 8. அபிஅப்பா,
  தம்பி கோபியுடன் என் வீட்டிற்க்கு வருகிறேன் என்று எனக்கு அல்வா கொடுத்துவிட்டு அங்க வந்து கும்மி அடிச்சியிருக்கிறாரா.
  லியோ சுரேஷ்

  ReplyDelete
 9. ஆகா...கவிதை எல்லாம் கலக்கல்...

  ReplyDelete
 10. \\இப்படியாக இனிதாக துபாய்-Al Quoz Area வலைப்பதிவர் சந்திப்பு முடிந்தது.\\\

  அம்மா....அய்யோ!!!!..

  ReplyDelete
 11. \\இதோ போறேன்... மணி 12:30 ஆச்சி

  எப்பவும் 2 மணிக்கு தான் தூங்கறது...

  ரெண்டு பேரையும் விசாரிச்சதா சொல்லுங்க...\\

  வெட்டி உங்கள் விசாரிப்புக்கள் வந்த சேர்ந்தது....மிக்க நன்றி...

  ReplyDelete
 12. என்னய்யா இதெல்லாம்???

  என் மருமகள குட்டிசாத்தானு சொல்லியிருக்கீங்க???

  உங்களுக்கு பெருசா ஆப்பு வரும் பாருங்க. நல்லா மாட்டிக்கிட்டிங்க போங்க.........

  ReplyDelete
 13. //முழு பிளாக்கர் ஆகனும்னா அடுத்தது என்ன செய்யுனும்னு நல்லா யோசிச்சு பாத்தா ஒன்னு பாக்கி இருந்துச்சி.
  //

  முழு பிளாக்கராவது! மூத்த பதிவராவே ஆயிட்டீங்க!

  ReplyDelete
 14. தானாகவே அல்வா கிண்டி தானாகவே பின்நவீனத்துவம் பேசி தானாகவே வடை சாப்பிட்டு தானாகவே மாநாடு நடத்திய எங்கள் மூத்த பதிவர் கோலங்கள் தொல்கா வாழ்க வாழ்க
  :)

  ReplyDelete
 15. //ஏங்க பதிவர் சந்திப்புக்கு போறப்ப முகம் பாக்குற கண்ணாடியையுமா கொண்டு போறது. :)))//

  வாங்க சென்ஷி,

  ஹி ஹி ஹி

  ReplyDelete
 16. //எப்பவும் 2 மணிக்கு தான் தூங்கறது...

  ரெண்டு பேரையும் விசாரிச்சதா சொல்லுங்க...

  பதிவு ரொம்ப அருமை!!!//

  வெட்டி தம்பி,
  சொல்லிட்டேன் நீங்க விசாரிச்சதா.

  ReplyDelete
 17. //hey poi sollatha,37 ennoda vayasu...!

  abi sithappa...! //

  வாடா சவுமி, ஆப்பு வக்கன்னே கிளம்பிட்டீங்களையா

  ReplyDelete
 18. //அபிஅப்பா,
  தம்பி கோபியுடன் என் வீட்டிற்க்கு வருகிறேன் என்று எனக்கு அல்வா கொடுத்துவிட்டு அங்க வந்து கும்மி அடிச்சியிருக்கிறாரா.
  லியோ சுரேஷ் //

  அடுத்தவாரம் அங்கதான் பின்நவீனத்துவ கவிதை...போதுமா?

  ReplyDelete
 19. //ஆகா...கவிதை எல்லாம் கலக்கல்... //

  //அம்மா....அய்யோ!!!!.//

  வந்த உடனே டாய்லெட் எங்கன்னு கேட்டீங்களே, கவிதைதான் காரணமா? கோபிதம்பி.

  ReplyDelete
 20. //என்னய்யா இதெல்லாம்???

  என் மருமகள குட்டிசாத்தானு சொல்லியிருக்கீங்க???

  உங்களுக்கு பெருசா ஆப்பு வரும் பாருங்க. நல்லா மாட்டிக்கிட்டிங்க போங்க......... //

  இம்சை மன்னி, ஆப்பு வாங்குவதையே தொழிலாக கொண்டிருக்கும் நம்ம தல க்கு திருப்பிவிடப்படும் என்பதை சிரம் தாழ்ந்து தெறிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 21. //முழு பிளாக்கராவது! மூத்த பதிவராவே ஆயிட்டீங்க! //

  இல்லை சிபியாரே,
  கவுஜ எழுதுனும்,விமர்சனம் போடனும்,குவிஸ் பதிவு,எத்தன பாக்கியிருக்கு

  ReplyDelete
 22. //தானாகவே அல்வா கிண்டி தானாகவே பின்நவீனத்துவம் பேசி தானாகவே வடை சாப்பிட்டு தானாகவே மாநாடு நடத்திய எங்கள் மூத்த பதிவர் கோலங்கள் தொல்கா வாழ்க வாழ்க
  :)//

  தல கைப்ஸ், 7 நாள் பின்ன பதில் சொல்றென்னு தப்பா நெனச்சுக்கப்படாது.

  ReplyDelete
 23. \\இல்லை சிபியாரே,
  கவுஜ எழுதுனும்,விமர்சனம் போடனும்,குவிஸ் பதிவு,எத்தன பாக்கியிருக்கு//

  பேசாம ப்ளாக் க்கு இன்ஸ்ட்டியூட்
  ஒன்று
  ஆரம்பித்துருவீங்க போல !!

  ReplyDelete
 24. //பேசாம ப்ளாக் க்கு இன்ஸ்ட்டியூட்
  ஒன்று
  ஆரம்பித்துருவீங்க போல !!//

  நா ஒரு கத்துகுட்டி தான்;-}}

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))