பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 20, 2007

பாரதிக்கும் பாரதமாதாவுக்கும் என்ன பிரச்சனை?

நான் வீட்டில் நுழையும் போது பாப்பா டைகரிடம் " நீங்கள் எல்லாருமே என் குழந்தைகள்" ன்னு சொல்லிட்டு இருந்தா. நா நேரா தங்கமனிட்ட போய் டைகருக்கு என்னாச்சுன்னு கேட்டேன். வீடே கொஞ்சம் பரபரன்னு இருந்துச்சு.

"டைகருக்கு ஒன்னும் ஆகல. நீங்க போய் பாப்பா தலை சைஸ்க்கு ஒரு கிரீடம், ஒரு வேல் ரெண்டும் எங்கேர்ந்தாவது புடிச்சுட்டு வாங்க. எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை.சீக்கிரம் போங்க"

என்னாச்சு....சரி பாப்பா ஏதாவது ஜெயசந்திரன் கோல்டு ஹவுசுக்கு மாடல் ஆகப்போவுது போலயிருக்கு. நாம கொடுத்த வேலய செய்வும்ன்னு வெளியே வந்துட்டேன். பாப்பா அப்பவும் டைகர்கூட அதையே பேசிட்டுஇருந்தா.

வாசலுக்கு வந்தா அப்பா, அம்மா மற்றும் உறவினர்கள் எல்லாரும் வந்து தப தபன்னு நுழைறாங்க. அப்புரம்தான் தெரிஞ்சுது. ஸ்கூல் குடியரசு தினத்துக்கு விழாவில் பாப்பாதான் பாரதமாதாவாம். இன்னிக்கு சாயந்திரம் விழா. அட்ரா சக்கை. எனக்கும் பரபரப்பு தொத்திகிச்சு.

தங்கமனிகிட்ட 'கான்செப்ட்' என்னன்னு கேட்டேன். " எனக்கு நெறய வேல இருக்கு. சொன்னத செய்ங்க"ன்னு பதில் வந்தது. என் கஷ்டத்த பாத்து அபியோட பெரியம்மா பொண்ணு சொன்னா" பாப்பாவ ஸ்டேஜ்ல ஒரு ஸ்டூல் போட்டு நிருத்தி காந்தி, நேரு, பாரதி, காமராஜர்,சரோஜினி நாயுடு இப்டி பல தலைவர்கள் வேஷம் போட்ட பையன்களும் பொண்ணுகளும் சுத்தி சுத்தி வருவாங்களாம். கடைசியா பாப்பா எல்லாரையும் பாத்து "நீங்கள் எல்லாரும் என் குழந்தைகள்" என்ற டயலாக் சொல்லனுமாம்" என்றது. ஓ அதுதான் பாப்பா டைகரிடம் இதை சொல்லிட்டுருந்தாளோ. அதுக்குள்ள பாப்பாவுக்கு மேக்கப் ஸ்டாட் ஆயிருச்சு. நமக்கு கொடுத்த வேலைய நாம பாப்போம்ன்னு வெளியே வந்தேன்.

டைகர் என்னய பாத்து "நீங்கள் எல்லாம் என் குழந்தைகள்"ன்னுச்சு. அடிப்பாவி டயலாக் மனப்பாடம் செய்யிறேன் டயலாக் மனப்பாடம் செய்யிறேன்னு சொல்லி நாய பேச வச்சுட்டாளேன்னு நெனச்சுகிட்டு கிரீடம், வேல் வாங்க கெளம்பிட்டேன்.

ஒரு வழியா வேல் மட்டும் மோப் குச்சியில் முனைல அட்டயால் வேல் மாதிரி செஞ்சு அதில ஜிகினா பேப்பர் ஒட்டி குடுத்தார் பூக்கடை சவுந்திரம். எடுத்துகிட்டு வூட்டுக்கு ஓடினா பாப்பா ரெடி, தங்கமனி ரெடி, எல்லாரும் ரெடி, டைகர் கூடரெடி எக்ஸப்டு நானு. நா எப்படியும் கொண்டுவரமாட்டன்ற நம்பிக்கைல தங்கமனி நெக்லெஸ்ஸ தலகீழ பாப்பா தலைல கட்டி நிமிந்து நிக்க ஈர்க்க குச்சிவச்சி கட்டி ஆனா நல்லாதான் இருந்துச்சி.

"பாப்பா அப்பாகிட்ட மேக்கப்ப காட்டு"ன்னு யாரோ கூட்டத்துல சொல்ல பாப்பா வேலை கையில புடுச்சிகிட்டு லொடுக்கு பாண்டி மாதிரி நிக்குது. எங்க டயலாக்க சொல்லுன்னு நா சொல்ல "ஃஹீங்க ஃஹெல்லாம் ஹென் ஃஹொழந்தங்க" ன்னு ஏகப்பட்ட ஃ வருது. வாய் பொளந்தே வச்சிருக்கு. (லிப்ஸ்டிக் அழிஞ்சிடக்கூடாதாமா!!) பாப்பாவ பாத்தா எனக்கே பாவமா இருக்கு.

அதுக்குள்ள 3 ஆட்டோ வந்து நிக்குது. சகுணம் பாக்குறாங்க அம்மா. திருஷ்டி பொட்டு வக்கிறாங்க. பாப்பா மேல பட்டும் படாமலும் மெலிசான காசி துண்ட போத்தி தங்கமனி தூக்கிகிட்டு முதல் ஆட்டோல ஏறிக்க, பைலட் மாதிரி நா என் வண்டில ஹாரன் அடிச்சிகிட்டே(வேலையும் நாதான் கைல வச்சிகனும்) போகனும்னு ஆர்டர் தங்கமனிகிட்டேயிருந்து. நானும் கொஞ்சம் கூட வெக்கமில்லாம உழைப்பாளி ரஜினி மாதிரி... போய் ஸ்கூல்ல சேந்தாச்சு.

செம கூட்டம். த்ங்கமனி, பாப்பால்லாம் ஸ்டேஜ்க்கு பின் பக்கம் மேக்கப்ரூம்க்கு போயாச்சு. நமக்கெல்லாம் அங்கு சீந்தி பாக்க ஆள் இல்லை. சரின்னு வந்து ஸ்டேஜுக்கு முன்னாடி ஒக்காந்துட்டேன். பக்கத்து சீட்ல ராமனாதன். பக்கத்து வீட்டுகாரர். அவர் பையனும் நாடகத்துல நடிக்கிறானாம். 17 பக்க வசனம் பேசுவதாக சொன்னார். அவன் 4 வது படிக்கிறான். 17 பக்கம் பேசலாம். "என்னங்க உங்க பொண்ணுக்கு 1 வரி டயலாக்தனாமே"ன்னு நக்கல் வேறு.

நிகழ்சி ஆரம்பம் ஆனது. கொஞ்ச நேரத்துலேயே ராமனாதன் பையன் நடிக்கும் நாடகம்"திருவிளையாடல்" ஆரமிச்சுது. அவரு பரவசத்துல உச்ச்த்துல இருந்தார். "சார் எங்க சார் உங்க பையன காணும்"ன்னு கேட்டேன். "அதோ அதோ"ன்னார். எனக்கு எங்கன்னே தெரியல. "அவனுக்கு என்னமா பொருந்தியிருக்கு பாருங்க சார் அந்த பிள்ளையார் வேஷம்" அப்டீன்னார். அப்பதான் தெரிஞ்சுது யானை மண்டைக்குள்ள இருக்குறது அவன் மண்டைன்னு. பொருந்தியிருகில்ல...பெருந்தொந்தியிருக்கு அவனுக்குன்னு நெனச்சுகிட்டு அவனின் 17 பக்க டயலாக்குகாக காத்திருந்தேன்.

"அப்பா பழம் எனக்குத்தான்" அப்டீன்னு சொன்னவுடனே அடி விசில் கிழிச்சுட்டார். நாடகம் முடியும் வரை அவன் வேறு எதுவும் பேசலை. அவரிடம் நா எதுவும் கேக்கலை. அவர் கைல இருந்த நோட்டை எங்கிட்ட கொடுத்துட்டு பையனை தேடி ஓடிட்டார். நா மெதுவா நோட்டை பிரித்து பார்த்தேன். "அப்பா பழம் எனக்குத்தான்" "அப்பா பழம் எனக்குத்தான்" அப்டீன்னு 17 பக்கத்துக்கு எழுதியிருந்துச்சு.

க்ளைமாக்ஸ் வந்துச்சு. காந்தி, நேரு, காமராஜர், சரோஜினிநாயுடு, பாரதி, சுபாஸ் சந்திர போஸ், எல்லாரும் ரெடி. எனக்கு படபடங்குது. ஸ்டேஜ்கிட்ட போயி மேல ஏறி சைடுல தங்கமனிகிட்ட நின்னுட்டேன்.(அடிபாவி நீ மட்டும் பட்டு புடவை, நா மட்டும் சாதாரண டிரஸ்ஸா?)

ஒரு ஸ்டூல் போட்டு பின்னாடி பெரிய கொடி நட்டு பாப்பாவ தூக்கி நிப்பாட்டி கைல வேல கொடுத்துட்டாங்க. சுத்தி வர தலைவர் எல்லாரும் ரெடி.

திரை விலக்கப்பட்டது. "ரகுபதி ராகவ ராஜாராம்" காந்தி பாட எல்லாரும் அதையே திரும்ப பாட முதல் சுத்து நல்லபடியா முடிஞ்சுது. தங்கமனி தாலிய கண்னுல ஒத்திக்க, "நானா பாரதமாதா, பாப்பாதான"ன்னு சொல்ல அந்த அவசரத்திலும் ஒரு முறைப்பை மாத்திரம் வாங்கிகிட்டு கவனிக்கலானேன்.

ஆனா பாப்பா லிப்ஸ்டிக் காரணத்தால் வாயை பொளந்தபடியே இருந்தாள். ரெண்டாவது சுத்தும் நல்லபடி முடிஞ்சுது. 3 வது சுத்து ஆரம்பம்.

பாப்பாவுக்கு அந்த ஜிகினா டிரஸ் ஒத்துக்கல போலயிருக்கு. முதுகுல அரிச்சுது போல. வலது கையில இருந்த வேலை இடது கைக்கு மாத்துனா. வலது கைய லாவகமா மடிச்சு...அப்போ இடதுகை வேலின் பின்பக்கம் பின்னோக்கி போக காந்ந்திதாத்தா கம்போட இடிக்க தாத்தா பின்னாடி வந்த பாரதி மேல விழ கூடவந்த சரோஜினி நாயுடுவும் தடுமாற இதுல யார் ஸ்டூல ஒதச்சாங்கன்னு தெரியல பாரத மாதா பொதக்கடீர்ன்னு குப்புரவுழுந்துட்டாங்க.(இத்தன கலேபரத்திலும் லிப்ஸ்டிக்க காப்பாத்த பாப்பா வாயை மூடலை).

முதல்ல பாய்ந்தது வேற யாரு. தங்கமனிதான். பெத்த பாசம்னா சும்மாவா!! ஆனா பாப்பாவ முதல்ல தூக்கினது நாதான். பாப்பா தலைலேர்ந்து விழுந்த கிரீடத்த தங்கமனி எடுக்க நா நின்ன இடம் அப்போது மைக்குக்கு நேரா. உடனே பாப்பா "ஃஹீங்க ஃஹெல்லாம் ஹென் ஃஹொழந்தங்க" ன்னு டயலாக் விட்டா மைக்ல. (உன் கடமையுணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லியா).

கீழ எறக்கிவுட்டோன்ன புடுச்சிகிட்டா காந்திய பாத்து '' பாரதி கொரங்கு ஏண்டா என்னய தள்ளிவுட்ட..ஊவும்..ஊம்..."ன்னு அழுகை வேற. ஆஹா காந்திய பாத்து பாரதிங்கறாளே, கீழ வுழுந்ததுல எக்கு தப்பா அடி கிடி பட்டுடுச்சோன்னு நெனச்சுகிட்டு " பாப்பா அது பாரதியில்ல காந்தி"ன்னேன்.

"நா இப்ப என்ன பாரதமாதாவா, அதுதான் முடிஞ்சுடுச்சே. அவன் காந்தி வேஷம் போட்ட பாரதிப்பா. அவன் பேரு பாரதி"

அப்ப நாதான் லூசா!!!!

135 comments:

 1. இப்ப நாந்தான் ஃபர்ஸ்ட்டா???


  சென்ஷி

  ReplyDelete
 2. வாங்க சென்ஷி, நீங்கதான் முதல். படிச்சுட்டு சொல்லுங்க.

  ReplyDelete
 3. நல்ல காமெடி அபி அப்பா! அதுவும் முக்கியமா, லிப்ஸ்டிக் போட்டதால ஃ ஃனு பேசினது, 17 பக்க வசனம், காந்தி வேஷம் போட்ட பாரதி.. டுபுக்கு ஸ்டைல்ல கலக்கறீங்க!

  ReplyDelete
 4. அப்ப நாதான் லூசா!!!!

  இதான் உண்மைங்கறது..

  மத்தபடி நல்ல காமெடிங்கோ உங்ககூட...

  சென்ஷி

  ReplyDelete
 5. so nice abi appa. you got a real talent to write comedy. it is enjoyable.

  ReplyDelete
 6. //நல்ல காமெடி அபி அப்பா! அதுவும் முக்கியமா, லிப்ஸ்டிக் போட்டதால ஃ ஃனு பேசினது, 17 பக்க வசனம், காந்தி வேஷம் போட்ட பாரதி.. டுபுக்கு ஸ்டைல்ல கலக்கறீங்க!//

  அய்யோ டுபுக்கர் எங்கே நான் எங்கே, நமக்கு தெறிஞ்ச சரக்கு இவ்ளோவ்தான். வருகைக்கு நன்றி பெனாத்தலாரே!!

  ReplyDelete
 7. //அப்ப நாதான் லூசா!!!!

  இதான் உண்மைங்கறது..//

  ஆஹா கிளம்பிட்டீங்களே!!

  ReplyDelete
 8. //so nice abi appa. you got a real talent to write comedy. it is enjoyable.//

  சந்தோஷமானா சரிதான் டாமோஸ்!!!

  ReplyDelete
 9. \\கீழ எறக்கிவுட்டோன்ன புடுச்சிகிட்டா காந்திய பாத்து '' பாரதி கொரங்கு ஏண்டா என்னய தள்ளிவுட்ட..ஊவும்..ஊம்..."ன்னு அழுகை வேற. ஆஹா காந்திய பாத்து பாரதிங்கறாளே, கீழ வுழுந்ததுல எக்கு தப்பா அடி கிடி பட்டுடுச்சோன்னு நெனச்சுகிட்டு " பாப்பா அது பாரதியில்ல காந்தி"ன்னேன்.

  "நா இப்ப என்ன பாரதமாதாவா, அதுதான் முடிஞ்சுடுச்சே. அவன் காந்தி வேஷம் போட்ட பாரதிப்பா. அவன் பேரு பாரதி"

  அப்ப நாதான் லூசா!!!!//

  சிரிச்சி சிரிச்சி பயங்கர வயத்து வலி.னான் தனியா சிரிக்கரதை பாத்து' லுசா ' ன்னு எங்க வீட்டுக் காரர்

  ReplyDelete
 10. //சிரிச்சி சிரிச்சி பயங்கர வயத்து வலி.னான் தனியா சிரிக்கரதை பாத்து' லுசா ' ன்னு எங்க வீட்டுக் காரர்//

  W டைப் செய்தால் ந வரும். வாங்க நர்மதா, ரொம்ப சந்தொஷம் உங்க வருகைக்கு.

  ReplyDelete
 11. அன்புள்ள தமிழ்மணப் பதிவர்களுக்கு இத்துடன் கண்மணியாகிய நான் பதிவு எழுதுவதை நிறுத்துவதைத் தவிர வேறொன்றும் செய்யமுடியாது அபி அப்பா இப்படிப் போட்டுத் தாக்கும் போது.கண்ணுல தண்ணீயே வந்திடுச்சி[நடுவர் மன்ற தீர்ப்பினால் இல்லை].
  எதைச் சொல்ல?பாப்பா லிப்ஸ்டிக் பேச்சா,டைகர் பேச்சா,நீங்க உழைப்பாளி மாதிரி போனதா,பாப்பா விழுந்ததா இல்லை பாரதிக் குரங்கைத் திட்டியதா....சிம்ப்ளி சூப்பர்ப்.[எனக்கு மட்டும் காதோடு சொல்லுங்க ஃப்ளீஸ் எந்த மண்டபத்துல சரக்கு எடுக்குறீங்க?]

  ReplyDelete
 12. //சிம்ப்ளி சூப்பர்ப்.[எனக்கு மட்டும் காதோடு சொல்லுங்க ஃப்ளீஸ் எந்த மண்டபத்துல சரக்கு எடுக்குறீங்க?] //

  என்னங்க கண்மணி, எனக்கு எந்த டைப் வருதுன்னு இன்னுமும் சரியா தெறியல. கவிதை வராதுன்னு தெளிவா சொல்லீட்டிங்க. இப்ப சொன்னதுல ஏதும் உள் குத்து இல்லியே!! இப்டியே தொடரவா???

  ReplyDelete
 13. மிகவும் நன்றீ முதல் முதல் தமிழில் டைப்புகிறேன்.என்னுடைய பின்னூட்டதை முதன் முதலில் பர்க்கும் போது சன்தொஷமாக இருக்கு

  ReplyDelete
 14. //மிகவும் நன்றீ முதல் முதல் தமிழில் டைப்புகிறேன்.என்னுடைய பின்னூட்டதை முதன் முதலில் பர்க்கும் போது சன்தொஷமாக இருக்கு //

  நாங்களும் இப்டீதான். சீக்கிரம் பதிவரா ஆக வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. நான் சொல்வதெல்லாம் உண்மை.உண்மையைத் தவிர வேறில்லை.கவிதை நல்லாருக்குன்னு அல்லாரும் கும்முனாங்க நா மட்டும் கரீட்டா இது ஆவறதில்லைன்னு சொன்னேன்.ஆனா காமெடி உரை நடை நெசமாலுமே ஷோக்காகீது.
  நா ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி.உள்/வெளி குத்து இல்லை.ஏன்னா பாம்பின் கால் பாம்பறியும்.[லூசப் பத்தி லூசுக்குத்தானே தெரியும் ஹி..ஹி]

  ReplyDelete
 16. பின்னு பெடலெடுக்கறிங்களே!

  இத மாதிரி எழுதறத விட்டுபோட்டு எங்கள மாதிரி ஏன் கவிதையெல்லாம் எழுதி கை சுட்டுக்கறீங்க

  இந்த வாரம் கிடேசன் பார்க் மேட்டர் உள்ளதா?

  ReplyDelete
 17. இந்த சின்ன வயசுல மேடையேறி இருக்கா உங்களுக்கு கிண்டலா? அதவச்சு போட்ட பதிவ அவ பெரிசாகி படிச்சுட்டு திட்டப்போறா.

  (அப்புறம் என் பதிவுல இன்னும் கொஞ்ச பேர் பின்னூட்டம் போட்டதும் நான் என்னோட கருத்த சொல்றேன்னு சொல்லி பின்னூட்டம் போட்டு பின்னூட்டம் போடறதுல பெரிய எக்ஸ்பர்ட் ன்னு நிரூபிச்சிட்டீங்க)

  ReplyDelete
 18. Sema comedy Boss :)

  Nayagan.

  ReplyDelete
 19. //ஏன்னா பாம்பின் கால் பாம்பறியும்.[லூசப் பத்தி லூசுக்குத்தானே தெரியும் ஹி..ஹி]//

  சரி கண்மணி!! ஒத்துக்கறேன். இனி இப்டித்தான் எழுதப் போகிறேன். ஆனா மாசத்துக்கு ஒருமுறை கவிதை எழுதினா உடம்புக்கு நல்லதுன்னு எங்க பேமிலி டாக்டர் சொல்றார்!!! ஹும்..

  ReplyDelete
 20. //பின்னு பெடலெடுக்கறிங்களே!

  இத மாதிரி எழுதறத விட்டுபோட்டு எங்கள மாதிரி ஏன் கவிதையெல்லாம் எழுதி கை சுட்டுக்கறீங்க

  இந்த வாரம் கிடேசன் பார்க் மேட்டர் உள்ளதா? //

  கிடேசன் பார்க் உள்ளது. மேட்டர் உள்ளதா என்பது இன்றைய செயற்குழுவில் முடிவு செய்யப்படும். செயலர் கோபி தம்பி வரட்டும். புதிய உறுப்பினர் திரு.லொடுக்கு என்பதை தலைவர் தம்பி அறியவும்.

  ReplyDelete
 21. //இந்த சின்ன வயசுல மேடையேறி இருக்கா உங்களுக்கு கிண்டலா? அதவச்சு போட்ட பதிவ அவ பெரிசாகி படிச்சுட்டு திட்டப்போறா.//

  அவ மேடை ஏறினத விட கீழே விழுந்த பின்னும் மைக்ல டயலாக் விட்டது எனக்கு புடிச்ச விஷயம்.

  (அப்புறம் என் பதிவுல இன்னும் கொஞ்ச பேர் பின்னூட்டம் போட்டதும் நான் என்னோட கருத்த சொல்றேன்னு சொல்லி பின்னூட்டம் போட்டு பின்னூட்டம் போடறதுல பெரிய எக்ஸ்பர்ட் ன்னு நிரூபிச்சிட்டீங்க)

  இல்ல..போடலாம்ன்னுதான் இருந்தேன். நேத்திக்கு "பெண்ணீயம்" டோண்டு மாமா ரேஞ்சுக்கு போயிடுச்சி தமிழ்மண்த்துல. அது கொஞ்சம் அடங்கட்டும்ன்னு விட்டுட்டேன்.

  ReplyDelete
 22. //Sema comedy Boss :)

  Nayagan.//

  நன்றி...நாயகன்...நீங்க நல்லவரா..கெட்டவரா!!

  ReplyDelete
 23. எப்படி அபி அப்பா... இப்படியெல்லாம்.. ஆரம்பிச்சதுல இருந்து முடியிற வரைக்கும் பிரேக்கே இல்லாம இப்படி காமெடி பண்றீங்க... கண்மணி சொன்ன மாதிரி நாங்கெல்லாம் கடைய மூட வேண்டியதுதான்...

  ReplyDelete
 24. //எப்படி அபி அப்பா... இப்படியெல்லாம்.. ஆரம்பிச்சதுல இருந்து முடியிற வரைக்கும் பிரேக்கே இல்லாம இப்படி காமெடி பண்றீங்க... கண்மணி சொன்ன மாதிரி நாங்கெல்லாம் கடைய மூட வேண்டியதுதான்... //

  ஆஹா ஜி!! நீங்க இப்டி காமெடி பண்றீங்க. நீங்க, கண்மணி, டுபுக்கர் இந்த எல்லாருமே நம்ம குருங்க!!

  ReplyDelete
 25. கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட இருந்தாலும் கலக்கல் நகைச்சுவை விருந்து...

  என்னாது, என்னா ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா ? அட மொதலுக்கே மோசம். தங்கமணின்னு மூணு சுழி ணா போடனும். எல்லாத்தையும் சொல்லித்தொலைக்க முடியுமா ?

  கடைசி வரைக்கும் பாப்பா வாயை மூடாம லிப்ஸ்டிக்கை காப்பாத்திருச்சி பாருங்க...

  ReplyDelete
 26. //கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட இருந்தாலும் கலக்கல் நகைச்சுவை விருந்து...

  என்னாது, என்னா ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா ? அட மொதலுக்கே மோசம். தங்கமணின்னு மூணு சுழி ணா போடனும். எல்லாத்தையும் சொல்லித்தொலைக்க முடியுமா ?

  கடைசி வரைக்கும் பாப்பா வாயை மூடாம லிப்ஸ்டிக்கை காப்பாத்திருச்சி பாருங்க... //

  வாங்க ரவி!! ஜெர்மன் மொழியிலயே காலத்த கழிச்சுட்டனா, அதனால தமிழ் தடுமாறுது...சீக்கிரம் திருத்திக்கறேன்.

  ReplyDelete
 27. அண்ணா வணக்கங்கண்ணா!
  காமெடியில் கலக்குறீங்கண்ணா! தொடருங்கண்ணா!!

  //கிடேசன் பார்க் உள்ளது. மேட்டர் உள்ளதா என்பது இன்றைய செயற்குழுவில் முடிவு செய்யப்படும். செயலர் கோபி தம்பி வரட்டும். புதிய உறுப்பினர் திரு.லொடுக்கு என்பதை தலைவர் தம்பி அறியவும்.
  //

  மேட்டர்னா என்னன்னு சொன்னாத்தான் நான் வருவேன்.

  ReplyDelete
 28. //மேட்டர்னா என்னன்னு சொன்னாத்தான் நான் வருவேன். //

  மேட்டர்ன்னா பின் நவீனத்துவம், இலக்கியம், சமூகநீதி, கலை, கலாச்சாரம்,அறிவியல், ஹைகூ, புதினம் இதை பதியெல்லாம் பேசறது.. மற்றும் இதையெல்லாம் பேச தேவையான உபகரணங்கள்.(விஷயம் தான் முக்கியம். உபகரணம் ஜஸ்ட் உப-காரணம்தான்.

  ReplyDelete
 29. பாப்பா நடிப்பிலும் பின்றாங்க.. சுட்டியிலேயும் பின்றாங்க.. :-)))

  ReplyDelete
 30. //பாப்பா நடிப்பிலும் பின்றாங்க.. சுட்டியிலேயும் பின்றாங்க.. :-)))//

  வாங்க மை பிரன்ட்!!! மெசேஜ் பாஸ் டு அபிபாப்பா.

  ReplyDelete
 31. அருமையான பதிவு அபி அப்பா. கலக்கறீங்க. Very hilarious.

  ReplyDelete
 32. நாகை சிவாவிடமிருந்து வந்த மெயில்:-


  //நா இப்ப என்ன பாரதமாதாவா, அதுதான் முடிஞ்சுடுச்சே. அவன் காந்தி வேஷம் போட்ட பாரதிப்பா. அவன் பேரு பாரதி"
  அப்ப நாதான் லூசா!!!! //

  இதுக்கு தான், குழந்தைங்கிட்ட பேசும் போது அநியாயத்துக்கு உசாரா இருக்குறது.

  //(உன் கடமையுணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லியா).//

  பின்ன, நாங்க எல்லாம் ஒரு கடமைனு வந்துட்டா அப்படியே பொங்கிடுவோம்ல..... ;-)

  ReplyDelete
 33. //பின்ன, நாங்க எல்லாம் ஒரு கடமைனு வந்துட்டா அப்படியே பொங்கிடுவோம்ல..... ;-)//

  வாங்க சிவா வாங்க, நா யாரு தெர்தா???

  ReplyDelete
 34. //அருமையான பதிவு அபி அப்பா. கலக்கறீங்க. Very hilarious.//

  நன்றி பிரசன்னா உங்கள் வருகைக்கு!!

  ReplyDelete
 35. அது சரி, நீங்க எழுதற லட்சணத்திலே "நர்மதா"வுக்குப் பாடம் வேறேயா? காஃபி மணம், அதான் லட்சுமி விலாஸ் காஃபி மணம் இழுத்ததென்னு வந்தா,
  "குறும்பி அளவாக் காதைக் குடைந்து எட்டின மட்டும் குடைவதற்கோர் பிள்ளைப் பாண்டியனையும், போறாததுக்குச் சீத்தலைச் சாத்தனாரையும் கூட்டிட்டு வரேன். இவ்வளவு தப்பா? அதான், எல்லாரும் வந்து துப்பறாங்க. :D

  ReplyDelete
 36. நாயகன், நான் நினைக்கிறவரா இருந்தா இப்போத் தான் +2 எழுதறார். அப்புறமா சிவாவுக்குத் தெரியுமா நீங்க யாருன்னு? சிவா சொல்லவே இல்லையே? இன்னிக்கே மெயிலறேன்.

  ReplyDelete
 37. அப்புறம், நான் அபிக்குக் கொடுக்கச் சொன்ன மூணு கோடியைக் கொடுத்திருந்தா இப்போ பாருங்க, அபி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கையை விட்டே போயிருக்காது இல்லை? :P, பார்த்துட்டுச் சும்மாவே இருந்துட்டீங்களே? :D

  ReplyDelete
 38. chanceless!! first time i am coming to ur site!! enjoyed reading ur blogs!!!
  i was not able to control laughing!! kallareenga!! top to bottom , it was superb comedy!!

  ReplyDelete
 39. //அது சரி, நீங்க எழுதற லட்சணத்திலே "நர்மதா"வுக்குப் பாடம் வேறேயா? //

  W டைப் செய்தால் ந வரும் என்பது பெரிய பாடமா?

  //குறும்பி அளவாக் காதைக் குடைந்து எட்டின மட்டும் குடைவதற்கோர் பிள்ளைப் பாண்டியனையும், போறாததுக்குச் சீத்தலைச் சாத்தனாரையும் கூட்டிட்டு வரேன். இவ்வளவு தப்பா? அதான், எல்லாரும் வந்து துப்பறாங்க. :D//

  ஒரு கட்டத்துல என் தமிழ் டீச்சர்(7 வது படிக்கும் போது) என் விரல புடிச்சு பக்கத்துல இருந்த சுவத்துல பர பரன்னு தேச்சி அதுவும் பத்தாம 'ஒ'ன்னு அழுதாங்க. சமீபத்துல என்ன பாத்தப்ப "இப்பவும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கா"ன்னு கேட்டாங்க. "இல்லவே இல்லை டீச்சர்"ன்னு சொன்னேன். "எப்டீ"ன்னு கேட்டாங்க...நா "தமிழ் எழுதறதேயில்லை டீச்சர்"ன்னேன்.

  நீங்க திட்டுறதுல அவுங்க தேவலாம் போலயிருக்கு

  ReplyDelete
 40. //அப்புறம், நான் அபிக்குக் கொடுக்கச் சொன்ன மூணு கோடியைக் கொடுத்திருந்தா இப்போ பாருங்க, அபி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கையை விட்டே போயிருக்காது இல்லை? :P, பார்த்துட்டுச் சும்மாவே இருந்துட்டீங்களே? :D//

  பாவம் அந்த பொண்னு, நேத்திக்கு ரொம்ப அழுகாச்சி. ரொம்ப பாக்காதீங்க. உடம்புக்கு/மனசுக்கு கெடுதி.

  ReplyDelete
 41. //chanceless!! first time i am coming to ur site!! enjoyed reading ur blogs!!!
  i was not able to control laughing!! kallareenga!! top to bottom , it was superb comedy!! //

  வாங்க! இப்பதான் கீதா மேடம் திட்டிட்டு போனாங்க. நல்ல வேளை கொஞ்சம் ரிலீஃப்பா இருக்கு நீங்க சொல்றது. வருகைக்கு நன்றி.அடிக்கடி வாங்க.

  ReplyDelete
 42. shஅபிஅப்பா,
  இப்படியே கன்டினியு பன்னுங்க, கவுஜ பக்கம் எல்லாம் போகதீங்க,
  //இந்த வாரம் கிடேசன் பார்க் மேட்டர் உள்ளதா?//

  எனக்கும் ஒரு துண்ட போட்டுடுங்க.
  லியோ சுரேஷ்

  ReplyDelete
 43. ஆஹா...அபி அப்பா.

  கலக்குறப்பா

  பின்னூட்டம் எல்லாம் பின்னுதப்பா

  நகைச்சுவை உங்களுக்கு கைவந்த கலையப்பா

  நீங்கள் எழுத ஆரம்பித்தால் எல்லோருக்கும் கிலியப்பா..

  அபி குட்டி பாவம்ப்பா...

  வாழ்த்துக்கள்...கலக்குங்க ராசா..

  ReplyDelete
 44. \\இந்த வாரம் கிடேசன் பார்க் மேட்டர் உள்ளதா? //

  கிடேசன் பார்க் உள்ளது. மேட்டர் உள்ளதா என்பது இன்றைய செயற்குழுவில் முடிவு செய்யப்படும். செயலர் கோபி தம்பி வரட்டும். புதிய உறுப்பினர் திரு.லொடுக்கு என்பதை தலைவர் தம்பி அறியவும். \\

  கழக கண்மணிகளுக்கு...
  என் நிலையை நான் தம்பியிடம் கூறிவிட்டேன்...

  புதிய உறுப்பினர் அன்பு நண்பர் லொடுக்கு அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..(இந்த வாட்டி உங்கள வச்சித்தான் காமெடின்னு நினைக்கிறேன்)

  ReplyDelete
 45. //shஅபிஅப்பா,
  இப்படியே கன்டினியு பன்னுங்க, கவுஜ பக்கம் எல்லாம் போகதீங்க,
  //இந்த வாரம் கிடேசன் பார்க் மேட்டர் உள்ளதா?//

  எனக்கும் ஒரு துண்ட போட்டுடுங்க.
  லியோ சுரேஷ்//

  நா கவுஜ எழுதறத நிப்பாட்டுனா பல பேர் அழுவாங்களே, இப்ப என்ன பன்றது???

  துண்டு என்ன, வேஷ்டியே போட்டுடுவோம். துணைத்தலைவர் இல்லாமயா?

  ReplyDelete
 46. //கலக்குறப்பா

  பின்னூட்டம் எல்லாம் பின்னுதப்பா

  நகைச்சுவை உங்களுக்கு கைவந்த கலையப்பா

  நீங்கள் எழுத ஆரம்பித்தால் எல்லோருக்கும் கிலியப்பா..

  அபி குட்டி பாவம்ப்பா...

  வாழ்த்துக்கள்...கலக்குங்க ராசா..//

  ஆஹா, பின்னூட்டத்துக்கே கவித எழுதுறீங்களே, என்னால முடியலயே...இப்ப என்ன பன்னுவேன்.

  ReplyDelete
 47. //கழக கண்மணிகளுக்கு...
  என் நிலையை நான் தம்பியிடம் கூறிவிட்டேன்...//

  தலைவர் தம்பியிடம் மட்டும் கூறினால் போதாது. முன்வரிசைல குந்திகினு விசில் அடிக்குற என்னைப்போன்ற குஞ்சுகளுக்கும் கூற வேண்டும் செயலாளரே!!

  ReplyDelete
 48. //நா இப்ப என்ன பாரதமாதாவா, அதுதான் முடிஞ்சுடுச்சே. அவன் காந்தி வேஷம் போட்ட பாரதிப்பா. அவன் பேரு பாரதி"

  அப்ப நாதான் லூசா///

  இன்னுமா ஒத்துக்கமுடியலை...:-))

  எங்களுக்கே ஸ்டேஜ் முன்னாடி உக்காந்துட்டு இருந்த மாதிரி இரு உணர்வு...

  நகைச்சுவை,,ஒவ்வொரு வரியிலும்

  ReplyDelete
 49. //இன்னுமா ஒத்துக்கமுடியலை...:-))

  எங்களுக்கே ஸ்டேஜ் முன்னாடி உக்காந்துட்டு இருந்த மாதிரி இரு உணர்வு...

  நகைச்சுவை,,ஒவ்வொரு வரியிலும் //

  வாங்க மங்கை!!
  என்னய லூசுன்னு சொல்லுறப்ப முகத்துல என்ன ஒரு பிரகாசம். கொண்டாடுங்க.

  ReplyDelete
 50. //என்னய லூசுன்னு சொல்லுறப்ப முகத்துல என்ன ஒரு பிரகாசம். கொண்டாடுங்க//

  அபி பாப்பா சொல்ச்சு, தெலியுமா அவங்க மிஸ் சொல்குயித்தாங்களாம்

  Make Hay when the Sun Shines னு...

  ReplyDelete
 51. //அபி பாப்பா சொல்ச்சு, தெலியுமா அவங்க மிஸ் சொல்குயித்தாங்களாம்

  Make Hay when the Sun Shines னு...//

  ஹஹ் ஹஹ் ஹா....நிசமா மனசுவிட்டு சிரிக்கிறேன்..

  ReplyDelete
 52. தமிழ்மண தாய்குலங்களுக்கு நன்றி உணர்சி ஜாஸ்தி

  நாங்க மட்டும் சிரிச்சா எப்படி...
  :-))...

  அபிக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 53. //W டைப் செய்தால் ந வரும். வாங்க நர்மதா, ரொம்ப சந்தொஷம் உங்க வருகைக்கு.//

  அப்படியே தமிழில் எப்படி டைப் செய்வது என்பதையும் கொஞ்சம் சொல்லுங்கள். நான் சுற்றி வளைத்து டைப் செய்கிறேன்.

  ReplyDelete
 54. //அபிக்கு வாழ்த்துக்கள்... //

  கண்டிப்பா சொல்கிறேன். நன்றி.

  ReplyDelete
 55. //அப்படியே தமிழில் எப்படி டைப் செய்வது என்பதையும் கொஞ்சம் சொல்லுங்கள். நான் சுற்றி வளைத்து டைப் செய்கிறேன்.//

  நானே கத்துகுட்டி, இருந்தாலும் மெயில் பன்ணுங்க உமா சங்கர்.

  ReplyDelete
 56. hi abi appa!!
  super kalakal post
  ippadiye nalla comedy ezhuthunga!!

  ReplyDelete
 57. comedy ellam ezhuthina thaan unmai ellam velila varum
  /naan thaan loosa??// ippadi patta unmaigal!!
  he he he

  ReplyDelete
 58. //hi abi appa!!
  super kalakal post
  ippadiye nalla comedy ezhuthunga!!//

  வாங்க டுபுக்கு சிஷ்யை, உங்க(நம்ம) குருநாதர் அளவு முடியாட்டியும் இப்டியே ஓட்டிக்கிட்டு போறேன்.

  ReplyDelete
 59. //comedy ellam ezhuthina thaan unmai ellam velila varum
  /naan thaan loosa??// ippadi patta unmaigal!!//

  என்னய லூசுங்குறதுல எவ்ளேவ் சந்தோஷம் பாருங்க!!!

  ReplyDelete
 60. கலக்கிட்டீங்க போங்க.

  அதிலும் டைகர் சொல்லுச்சு பாருங்க 'நீங்கள் எல்லாம் என் குழந்தைகள்' :-)))))))))))))

  சூப்பர் இல்லை............

  அதி சூப்பர்.

  ReplyDelete
 61. //கலக்கிட்டீங்க போங்க.

  அதிலும் டைகர் சொல்லுச்சு பாருங்க 'நீங்கள் எல்லாம் என் குழந்தைகள்' :-)))))))))))))

  சூப்பர் இல்லை............

  அதி சூப்பர்.//

  வாங்க வாங்க டீச்சர், முதல் முதலா நம்ம வீட்டுக்கு(பிளாக்குக்கு) வந்திருக்கீங்க. ரொம்ப சந்தோஷம். அதி சூப்பர்ன்னு நீங்க சொல்றது எனக்கு ரொம்ப அதிகம். ரொம்ப சந்தொஷம் டீச்சர்.

  ReplyDelete
 62. //புதிய உறுப்பினர் அன்பு நண்பர் லொடுக்கு அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..(இந்த வாட்டி உங்கள வச்சித்தான் காமெடின்னு நினைக்கிறேன்)
  //
  இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் அபி அப்பாவை ரணகளப் படுத்த வக்கிறீங்களா? அடப் பாவிகளா!

  ReplyDelete
 63. //இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் அபி அப்பாவை ரணகளப் படுத்த வக்கிறீங்களா? அடப் பாவிகளா! //

  அந்த கொடுமைய எங்க போயி சொல்றது??

  ReplyDelete
 64. பெனாத்தலார் வந்து டுபுக்கு ரேஞ்சுக்கு எழுதுறீங்கன்னு சொன்னா படிக்காம இருக்கமுடியுமா? (பெரிய்ய்ய்ய பதிவா இருக்கேன்னு படிக்காம தப்பிச்சிட்டே இருந்தேன்!) சூப்பர் காமெடி போங்க. டைகர் பேசினதுல இருந்து நீங்க லூசான்னு கேட்டவரைக்கும்.. ஆகா.. :-)))

  ReplyDelete
 65. செந்தழலார் & கீதா டீச்சர் சொல்றதை அப்படியே வழிமொழியறேன். இஷ்பெல்லிங் ரொம்பத்தான் ஆட்டங்காணுது.

  //ஜெர்மன் மொழியிலயே காலத்த கழிச்சுட்டனா, அதனால தமிழ் தடுமாறுது//

  ஜெர்மனா? இதென்னது புது பந்தா?

  ReplyDelete
 66. //ஒரு கட்டத்துல என் தமிழ் டீச்சர்(7 வது படிக்கும் போது) என் விரல புடிச்சு பக்கத்துல இருந்த சுவத்துல பர பரன்னு தேச்சி அதுவும் பத்தாம 'ஒ'ன்னு அழுதாங்க. சமீபத்துல என்ன பாத்தப்ப "இப்பவும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கா"ன்னு கேட்டாங்க. "இல்லவே இல்லை டீச்சர்"ன்னு சொன்னேன். "எப்டீ"ன்னு கேட்டாங்க...நா "தமிழ் எழுதறதேயில்லை டீச்சர்"ன்னேன்.//

  அட.. இந்த மறுமொழியே சிரிக்கவைக்குதே, இதையே விலாவாரியா எழுதி ஒரு பதிவு போட்டீங்கன்னா பிச்சிக்கிட்டுப் போகும்.. கியாரண்டி! ப்ளீஸ்.. ப்ளீஸ் :-)

  ReplyDelete
 67. //மாசத்துக்கு ஒருமுறை கவிதை எழுதினா உடம்புக்கு நல்லதுன்னு எங்க பேமிலி டாக்டர் சொல்றார்!!!//

  இப்ப தெரியுது என் உடல் நலம் ஏன் இப்படிக் கேடுகெட்டுக் கெடக்குன்னு :-( ம்.. நடத்துங்க :-D

  ReplyDelete
 68. இந்தக் காமெடிக்கே எல்லாரும் விழுந்து எழுந்து சிரிக்கிறாங்களே, உங்க கோலங்கள் வாழ்க்கையை மட்டும் ஒரு பதிவாப் போடுங்க.. பின்னூட்ட எண்ணிக்கையில் கொத்தனாரை பீட் பண்ண முயற்சிக்கலாம்!

  ReplyDelete
 69. //பெனாத்தலார் வந்து டுபுக்கு ரேஞ்சுக்கு எழுதுறீங்கன்னு சொன்னா படிக்காம இருக்கமுடியுமா? //

  வாங்க சேதுக்கரசி, டுபுக்கர் நம்ம குருநாதர். அவர் ரேன்சுக்கு முடியுமா??

  ReplyDelete
 70. //ஜெர்மனா? இதென்னது புது பந்தா? //

  சும்மா பந்தாதான். ஹி ஹி...

  ReplyDelete
 71. // இந்தக் காமெடிக்கே எல்லாரும் விழுந்து எழுந்து சிரிக்கிறாங்களே, உங்க கோலங்கள் வாழ்க்கையை மட்டும் ஒரு பதிவாப் போடுங்க.. பின்னூட்ட எண்ணிக்கையில் கொத்தனாரை பீட் பண்ண முயற்சிக்கலாம்! //

  கொத்ஸ பீட் பண்ண முடியுமா?? இதெல்லாம் நடக்குற காரியமா?

  ReplyDelete
 72. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 73. //நல்ல காமெடி அபி அப்பா! அதுவும் முக்கியமா, லிப்ஸ்டிக் போட்டதால ஃ ஃனு பேசினது, 17 பக்க வசனம், காந்தி வேஷம் போட்ட பாரதி.. டுபுக்கு ஸ்டைல்ல கலக்கறீங்க!//

  ரிப்பீட்டே! இதுக்கும் அந்த கடைசி வரிக்கும். :))

  ReplyDelete
 74. //ரிப்பீட்டே! இதுக்கும் அந்த கடைசி வரிக்கும். :)) //

  வாங்க கொத்ஸ், ரொம்ப தேங்ஸ். "நாதான் லூசா" அப்டீன்னா உங்களுக்கு சிரிப்பா இருக்குதா?

  ReplyDelete
 75. அபி அப்பா! பல இடங்களில் நகைச்சுவை நல்லா வந்திருக்கு. இதே போல பள்ளிக்கூட டிராமாவில் லிப்ஸ்டிக் போட பட்டு பன்னி வாய் மாதிரி உதட்டை வைத்துக் கொண்டு இருந்தது நினைவுக்கு வருது. நாய் சேகரியைக் கேட்டதா சொல்லவும். ஊட்டாண்டை வரேன் அவளைப் பார்க்க!
  -usha (ramachandranusha)

  ReplyDelete
 76. //வாங்க சிவா வாங்க, நா யாரு தெர்தா???//

  தொல்ஸ், தெரியாமலா......

  கும்மார் - இப்ப ஒகேவா

  ReplyDelete
 77. //வாங்க கொத்ஸ், ரொம்ப தேங்ஸ். "நாதான் லூசா" அப்டீன்னா உங்களுக்கு சிரிப்பா இருக்குதா? //

  இப்படி எல்லாம் சபைல கேட்கப்பிடாது. அப்புறம் நாங்க உண்மைய சொல்லிடுவோம். கொத்துஸ் சரி தானே?

  ReplyDelete
 78. //அபி அப்பா! பல இடங்களில் நகைச்சுவை நல்லா வந்திருக்கு. இதே போல பள்ளிக்கூட டிராமாவில் லிப்ஸ்டிக் போட பட்டு பன்னி வாய் மாதிரி உதட்டை வைத்துக் கொண்டு இருந்தது நினைவுக்கு வருது. நாய் சேகரியைக் கேட்டதா சொல்லவும். ஊட்டாண்டை வரேன் அவளைப் பார்க்க!
  -usha (ramachandranusha)//

  வாங்க வாங்க மேடம், முதல் முறையா வர்ரீங்க!! ரொம்ப சந்தோஷம். கண்டிப்பா உங்க விசாரிப்பை நாய்சேகரிகிட்டே சொல்கிறேன். ( ஆமா நீங்க உஷா மேடம்தான. அனானியா வந்ததால சந்தேகம்.)

  ReplyDelete
 79. //தொல்ஸ், தெரியாமலா......

  கும்மார் - இப்ப ஒகேவா //


  வாங்க சிவா!! அதே கும்மார் தொல்காப்பியம்தான்.

  ////இப்படி எல்லாம் சபைல கேட்கப்பிடாது. அப்புறம் நாங்க உண்மைய சொல்லிடுவோம். கொத்துஸ் சரி தானே?//

  ஹி..ஹி..

  ReplyDelete
 80. கொஞ்ச நாள் முன்னாடியே கேட்கணும்னு நெனச்சேன்.. குமார் தெரியும்.. அதென்னங்க "கும்மார்"? :-)

  ReplyDelete
 81. office mail idஐ எல்லாம் பப்ளிஷ் பண்ணறீங்க?

  ReplyDelete
 82. ஆமா அபி அப்பா கூட்டினா எத்தனை வருது. தங்கமணி
  பாத்து சொன்னாங்களா ...?
  இப்படியே சதம் அடிச்சிடுவீங்க
  போல:-) எல்லாம் பேர் மகிமை
  யா இருக்குமோ?

  ReplyDelete
 83. //office mail idஐ எல்லாம் பப்ளிஷ் பண்ணறீங்க? //

  நா யாரை திட்டி, யார் மனதை புண்படுத்தி எழுதப்போகிறேன். எனக்கு யார் ஆட்டோ அனுப்ப போறாங்க அப்டீங்குற தைரியம்தான். சரி நீங்க சொல்லீட்டிங்க. இப்போ எடுத்துவிடுகிறேன்.சகோதரி சேதுக்கரசி விள்க்கத்தி இந்நேரம் பார்திருப்பாங்களா?

  ReplyDelete
 84. ஐடியத்தவிர மித்தத திருப்பி பின்னூட்ட மிடலாமே.

  ReplyDelete
 85. //ஆமா அபி அப்பா கூட்டினா எத்தனை வருது. தங்கமணி
  பாத்து சொன்னாங்களா ...?
  இப்படியே சதம் அடிச்சிடுவீங்க
  போல:-) எல்லாம் பேர் மகிமை
  யா இருக்குமோ? //

  ஐந்தோ, ஒன்றோ தெறியலை. 100 அடிச்சா அது முதல் 100.ஐயா ஜாலி!!!

  ReplyDelete
 86. //ஐடியத்தவிர மித்தத திருப்பி பின்னூட்ட மிடலாமே. //

  எனக்கு எடிட் செய்ய தெரியவில்லை. அதனால எடுத்துவிட்டேன்.

  ReplyDelete
 87. திருப்பி பின்னூட்டமாக எழுதிவிடுங்கள்.சேதுக்கரசிக்காக..
  இல்லையென்றால் பெயர்காரணம்
  விளக்கப்படாமல் போய்விட்டால்
  பதிலுக்கு சேதுக்கரசி எப்படி
  பின்னூட்டம் போட்டு சதமடிக்க
  உதவமுடியும்.

  ReplyDelete
 88. //திருப்பி பின்னூட்டமாக எழுதிவிடுங்கள்.சேதுக்கரசிக்காக..
  இல்லையென்றால் பெயர்காரணம்
  விளக்கப்படாமல் போய்விட்டால்
  பதிலுக்கு சேதுக்கரசி எப்படி
  பின்னூட்டம் போட்டு சதமடிக்க
  உதவமுடியும்.//

  இதுகூட நல்ல ஐடியாவாதான் ப்டுது!!

  ReplyDelete
 89. //கொஞ்ச நாள் முன்னாடியே கேட்கணும்னு நெனச்சேன்.. குமார் தெரியும்.. அதென்னங்க "கும்மார்"? :-) //

  அதவதுங்க, என் பெயர் குமார் தொல்காப்பியன் தான். இங்கு ஆபீஸில் தொல்காப்பியன் யார் வாயிலும் நுழையாது. என் கம்பெனியில் 4,5 குமார் உண்டு. ஆபீஸ் மெயில் I.D கிரியேட் செய்யும் போது kumar என்பதற்கு பதிலா kummar என்று கிரியேட் செய்துவிட்டார்கள். தங்கமணி "கூட்டினா 5 வருது 1 வருது..."அப்டீ இப்டீன்னு அளந்துவிட இப்போ குமார் போய் கும்மார் ஆகிடுச்சு!!! ஓக்கே...சரி சரி எல்லாரும் வாங்க..ஊர்கூடி தேர் இழுப்போம்...

  ReplyDelete
 90. எல்லாமே சூப்பருங்க...

  குறிப்பா:
  //டைகர் என்னய பாத்து "நீங்கள் எல்லாம் என் குழந்தைகள்"ன்னுச்சு. //
  //"ஃஹீங்க ஃஹெல்லாம் ஹென் ஃஹொழந்தங்க"//
  // 17 பக்க டயலாக்கு //

  சீக்கிரம் சதம் அடியுங்கள் ;-)

  ReplyDelete
 91. பாப்பாவை மிகவும் கேட்டதாக சொல்லவும் ;)

  ReplyDelete
 92. //குறிப்பா:
  //டைகர் என்னய பாத்து "நீங்கள் எல்லாம் என் குழந்தைகள்"ன்னுச்சு. //
  //"ஃஹீங்க ஃஹெல்லாம் ஹென் ஃஹொழந்தங்க"//
  // 17 பக்க டயலாக்கு ////

  வாங்க வாங்க கோவை மணி, முதல் வருகை. மிக்க நன்றி. அது போல் உங்கள் கவிதைக்காக காத்திருக்கிறோம். சீக்கிரம் நெய்து தாருங்கள்!!!

  ReplyDelete
 93. //பாப்பாவை மிகவும் கேட்டதாக சொல்லவும் ;) //

  வாங்க சகோதரி மதுரா!!! முதல் வருகை. மிக்க நன்றி!! கண்டிப்பாக பாப்பாவிடம் உங்கள் விசாரிப்பை சொல்லிவிடுகிறேன்.

  ReplyDelete
 94. நான் உங்க சகோதரியானா பாரதத்தில குழப்பம் வந்திருமே ... :) பரவாயில்லையா ...
  மத்தபடி அத்தனை பேரையும் ஒரே பதிவுல டீ-கன்ஸ்ட்ரக்ட் பண்ணி கொடுத்ததுக்கு இந்த சகோதரியின் சந்தோஷங்கள்! :)

  க்ளூ: பின்னூட்டம் புரியலன்னு சொல்லிருங்க! :)

  ReplyDelete
 95. //நான் உங்க சகோதரியானா பாரதத்தில குழப்பம் வந்திருமே ... :)//

  உங்க profileல female ன்னுதான போட்டிருக்கு.. நெஜமாவே ஒன்னியும் புரியல..

  ReplyDelete
 96. ஆஹா..

  அபி பாப்பா maiden Century பார்க்க காத்துட்டு இருக்கோம்...

  ReplyDelete
 97. //அபி பாப்பா maiden Century பார்க்க காத்துட்டு இருக்கோம்...//

  வாங்க மங்கை!! உக்காந்து பாத்துகிட்டு இருக்கீங்களா?? கொஞ்சம் ஹெல்ப் செஞ்சா 100 அடிச்சுட்டு அடுத்த பதிவுக்கு ஆயத்தமாயிடுவேன்...

  ReplyDelete
 98. அசத்துறீங்க அபி அப்பா. அருமையான நகைச்சுவை. அடுத்த கிடேசன் பார்க் மீட்டிங் எப்ப. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம்ல. நூறூக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 99. வாங்க வாங்க முத்துகுமரன். நீங்க தான் 100. முதல் முறையா வர்ரீங்க உள்ளூர்ல இருந்துகிட்டு. நன்றி நன்றி. வர்ர வெள்ளிகிழமை கிடேசன் பார்க்ல உங்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்.

  ReplyDelete
 100. மிஸ் ஆயுடுச்சே

  இங்க ஜூனியர் மங்கை, ஜுலி (நாய் குட்டி) எல்லாரும் களத்துக்கு வந்தோம்... மிஸ் ஆயுடுச்சே

  ReplyDelete
 101. பதிமூணாவது பதிவு போட்டகையோட நூறு ..

  வாழ்த்துக்கள் அபி அப்பா.
  பாப்பா புண்ணியத்துல நல்லா இருங்க.

  ReplyDelete
 102. //மிஸ் ஆயுடுச்சே

  இங்க ஜூனியர் மங்கை, ஜுலி (நாய் குட்டி) எல்லாரும் களத்துக்கு வந்தோம்... மிஸ் ஆயுடுச்சே //

  நான் 12th மேன் தானுங்க மங்கை. நீங்க ஓய்வெடுக்க போனப்ப மாற்று வீரரா களம் இறக்ங்கினேன். கோவிச்சுகிடாதீக

  ReplyDelete
 103. //இங்க ஜூனியர் மங்கை, ஜுலி (நாய் குட்டி) எல்லாரும் களத்துக்கு வந்தோம்... மிஸ் ஆயுடுச்சே //

  பரவாயில்லை சகோதரி!!! எனக்காக ஜுனியர் மங்கை, ஜுலி எல்லார்கூடவும் வந்தமைக்கு மிக்க நன்றி!!!!

  ReplyDelete
 104. //பதிமூணாவது பதிவு போட்டகையோட நூறு ..

  வாழ்த்துக்கள் அபி அப்பா.
  பாப்பா புண்ணியத்துல நல்லா இருங்க//

  மிக்க நன்றி!!! மிக்க நன்றி!!!! இது 13 வது பதிவா? நானே கவனிக்கலை. மிக்க நன்றி லெஷ்மி. நீங்க நம்ம மாயூரம்தானா? நாகைசிவா பதிவுல பாத்தேன். எந்த தெரு???

  ReplyDelete
 105. ஊர் பாசத்தில் தாங்க இந்த சதம் எல்லாம் முன்னாடியே ஒருமுறை ஒரே ஊர்க்காரங்க என்று சொன்னேனே மறந்து விட்டீர்கள் போல.மேம்பாலம் பக்கத்துல.அது பத்தி பதிவு கூட போட்டேனே.

  ReplyDelete
 106. //நான் 12th மேன் தானுங்க மங்கை. நீங்க ஓய்வெடுக்க போனப்ப மாற்று வீரரா களம் இறக்ங்கினேன். கோவிச்சுகிடாதீக //

  நாகை சிவா இங்கே வந்தப்ப அவர் போன் நம்பர் கேட்டு நான் உங்ககிட்ட மெயில் செஞ்சேன். அதன் பிறகு நீங்கள் எனக்கு போன் செய்தீர்கள். ஞாபகம் இருக்கா முத்துகுமரன்? உங்கள் கவிதை எல்லாமெ படிச்சுருக்கேன். மிகவும் அருமை.

  ReplyDelete
 107. //ஊர் பாசத்தில் தாங்க இந்த சதம் எல்லாம் முன்னாடியே ஒருமுறை ஒரே ஊர்க்காரங்க என்று சொன்னேனே மறந்து விட்டீர்கள் போல.மேம்பாலம் பக்கத்துல.அது பத்தி பதிவு கூட போட்டேனே.//

  நான் நாகை மாவட்டம் என்று சொன்னதை நாகை என்று புரிந்துகொண்டேன்.

  ReplyDelete
 108. குமார் நன்றாக ஞாபகம் இருக்கிறது. என்ன உங்கள் கைபேசி எண்ணைத்தான் தொலைத்து விட்டேன். தம்பியை அடிக்கடி சந்திப்பேன். உங்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருப்போம். :-)

  ReplyDelete
 109. முதல் நூறுக்கு வாழ்த்துக்கள்!

  கிடேசன் பார்க்ல அப்போ ட்ரீட் இருக்கு! :)

  ReplyDelete
 110. அய்யா கும்மார் சாரே!

  அடுத்த பதிவுக்கு ரெடியாவுங்க சாரே
  ஒரே இடத்துல எவ்வளவு நேரந்தான் கும்மி அடிக்கிறது.

  அந்த சீரியல்கள பத்தி எழுதுங்க இங்க வர்ற தாய்க்குலங்கள் அதை படிச்சிட்டு என்ன சொல்றாங்கன்னு தெரிய ஆவலா இருக்கு!

  ReplyDelete
 111. 12வது ஆளா இறங்கி சதம் கண்ட ஒரே ஆளு நம்மாளுதான். :))

  ReplyDelete
 112. //முதல் நூறுக்கு வாழ்த்துக்கள்!

  கிடேசன் பார்க்ல அப்போ ட்ரீட் இருக்கு//

  கண்டிப்பா உண்டு!!! தலைவர்"தம்பி", செயலர் கோபிதம்பி, எல்லார்கிட்டயும் கலந்து பேசி மெஸேஜ் அனுப்பப்படும்!!!! வாழ்த்துக்கு நன்றி!!!

  ReplyDelete
 113. //அய்யா கும்மார் சாரே!

  அடுத்த பதிவுக்கு ரெடியாவுங்க சாரே
  ஒரே இடத்துல எவ்வளவு நேரந்தான் கும்மி அடிக்கிறது.

  அந்த சீரியல்கள பத்தி எழுதுங்க இங்க வர்ற தாய்க்குலங்கள் அதை படிச்சிட்டு என்ன சொல்றாங்கன்னு தெரிய ஆவலா இருக்கு!//

  கிளம்பிட்டேன்...கிளம்பிட்டேன்.... சீக்கிரமா எதிர்பார்க்கலாம்...வர்ட்டா!!!

  ReplyDelete
 114. //நான் 12th மேன் தானுங்க மங்கை. நீங்க ஓய்வெடுக்க போனப்ப மாற்று வீரரா களம் இறக்ங்கினேன். கோவிச்சுகிடாதீக ///

  அதெல்லாம் நம்ம அகராதியில இல்ல முத்துகுமரன்...களத்தில யாரு இருந்தா என்ன...ஜெயிக்க வைக்கனும்..
  அவ்வளவுதான் :-))
  நன்றி

  ReplyDelete
 115. தொல்ஸ்,
  நூறு அடிச்சபிறகுதான் பின்னூட்டம் இடனும் என்று இருந்தேன், வாழ்த்துக்கள், அபி பாப்பாவுக்கு திருஷ்டி சுத்தி போடுங்க
  லியோ சுரேஷ்

  ReplyDelete
 116. //என்ன...ஜெயிக்க வைக்கனும்..
  அவ்வளவுதான் :-))
  நன்றி//

  மிக்க நன்றி!!! மிக்க நன்றி!!!

  ReplyDelete
 117. //தொல்ஸ்,
  நூறு அடிச்சபிறகுதான் பின்னூட்டம் இடனும் என்று இருந்தேன், வாழ்த்துக்கள், அபி பாப்பாவுக்கு திருஷ்டி சுத்தி போடுங்க
  லியோ சுரேஷ்//

  நீங்க பின்னூட்டம் போட்டாதானே 100 வரும்!!! வாழ்த்துக்கு மிக்க நன்றி!!!!

  ReplyDelete
 118. //தலைவர்"தம்பி"//

  இப்படி சொல்லி சொல்லியே போட்டு தள்ளிடுங்க. ;((

  ReplyDelete
 119. ////தலைவர்"தம்பி"//

  இப்படி சொல்லி சொல்லியே போட்டு தள்ளிடுங்க. ;(( //

  தலைவருக்கு இவ்வளவு அடக்கம் கூடாது!!!!

  ReplyDelete
 120. அபி அப்பா,பாப்பா, தங்கமணி உங்களுக்கு எல்லோருக்கும் வாழ்த்துக்கள். நூறு பின்னூட்டம் சாதித்த பிறகு வருவது பெருமையக இருக்கிறது. நல்ல நகைச்சுவை. இன்னும் எழுதுங்கள்.
  பாப்பா வாயிலிருந்த லிப்ஸ்டிக்கை அழிச்சீங்களா இல்லையா:-)

  ReplyDelete
 121. //உங்க profileல female ன்னுதான போட்டிருக்கு.. //
  அப்படியா நான் பார்க்கவே இல்லையே!

  கும்மார் கும்மிரிக்கிட்டவே சும்மா ஒரு கும்மா?! ;)
  சகோதரனாத்தான் இருக்கீரு! :)
  இப்படிக்கு
  அபி அத்தை!

  (சகோதரா காட்டுல எது பசு எது புலின்னு குழப்பம் ஜாஸ்தியாப் போச்சா?!)

  ReplyDelete
 122. அபி அப்பா 100க்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 123. \\இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் அபி அப்பாவை ரணகளப் படுத்த வக்கிறீங்களா? அடப் பாவிகளா!\\\

  உசுப்புதான் ஏத்துவோம் ரணகளப்படுத்துறது எல்லாம் மற்ற தமிழ்மணத்தின் நண்பர்கள்.

  ReplyDelete
 124. \\கிடேசன் பார்க்ல அப்போ ட்ரீட் இருக்கு//

  கண்டிப்பா உண்டு!!! தலைவர்"தம்பி", செயலர் கோபிதம்பி, எல்லார்கிட்டயும் கலந்து பேசி மெஸேஜ் அனுப்பப்படும்!!!! வாழ்த்துக்கு நன்றி!!!\\

  ம்க்கும் பதவி எல்லாம் நல்லதான் இருக்கு...ட்ரீட்டு கொடுங்க பொருளாளரே......ஆமா கிடேசன் பார்க் அடித்து நொருக்கப்பட்டதுன்னு தம்பி சொன்னாறு..

  ReplyDelete
 125. \\/தலைவர்"தம்பி"//

  இப்படி சொல்லி சொல்லியே போட்டு தள்ளிடுங்க. ;((\\

  சரியா சொன்னா தம்பி இவரு நம்மள கண்டிப்பா போட்டு தள்ளிடுவாரு

  ReplyDelete
 126. ம்ம்ம்....125 பின்னூட்டம்
  வாழ்த்துக்கள்...

  \\ முத்துலெட்சுமி said...
  பதிமூணாவது பதிவு போட்டகையோட நூறு ..

  வாழ்த்துக்கள் அபி அப்பா.
  பாப்பா புண்ணியத்துல நல்லா இருங்க.\\

  ரிப்பீட்டு....

  ReplyDelete
 127. //அபி அப்பா,பாப்பா, தங்கமணி உங்களுக்கு எல்லோருக்கும் வாழ்த்துக்கள். நூறு பின்னூட்டம் சாதித்த பிறகு வருவது பெருமையக இருக்கிறது. நல்ல நகைச்சுவை. இன்னும் எழுதுங்கள்.
  பாப்பா வாயிலிருந்த லிப்ஸ்டிக்கை அழிச்சீங்களா இல்லையா:-) //

  வாங்க வல்லியம்மா!!! மிக்க நன்றி! மிக்க நன்றி!! பாப்பா லிப்ஸ்டிகை அழிச்சாச்சு!!!

  ReplyDelete
 128. //சகோதரா காட்டுல எது பசு எது புலின்னு குழப்பம் ஜாஸ்தியாப் போச்சா?!) //

  ஆமாங்க!!!!

  //கும்மார் கும்மிரிக்கிட்டவே சும்மா ஒரு கும்மா?! ;)
  சகோதரனாத்தான் இருக்கீரு! :)
  இப்படிக்கு
  அபி அத்தை!//

  நான் ஒரு அப்பாவி!! இப்டீ கலாய்ச்சா அழுதுடுவேன்!!

  ReplyDelete
 129. //ம்க்கும் பதவி எல்லாம் நல்லதான் இருக்கு...ட்ரீட்டு கொடுங்க பொருளாளரே......ஆமா கிடேசன் பார்க் அடித்து நொருக்கப்பட்டதுன்னு தம்பி சொன்னாறு.. //

  தலைவரே இப்டீ செய்வாரா!! வெறும் வதந்தீ கோபிதம்பி!! எதிர்கட்சி சதி இது!

  ReplyDelete
 130. கீதா மேடம் வலைப்பக்கத்துல பார்த்து
  இப்ப தான் முதல் தடவை இங்கன வரேன்,சும்மா நகைச்சுவையில பூந்து விளையாடிட்டீங்க,சூப்பர்:) விவிசி:)

  ReplyDelete
 131. //கீதா மேடம் வலைப்பக்கத்துல பார்த்து
  இப்ப தான் முதல் தடவை இங்கன வரேன்,சும்மா நகைச்சுவையில பூந்து விளையாடிட்டீங்க,சூப்பர்:) விவிசி//

  வாங்க வேதா!! முதன் முதலா வந்திருக்கீங்க. மிக்க சந்தொஷம். நன்றி!! உங்கள் கவிதைகள் அருமை. அதுபோல் லேட்டஸ்ட் மொக்கை பதிவும் நல்ல காமடி!!!

  ReplyDelete
 132. நன்றி முத்துலட்சுமி & அபி அப்பா.

  கும்மார் பேர்க் காரணம் இப்போ தெரியுது :-)

  உங்க பதிவுக்கு எல்லாம் ஆப்பு போல.. 30+ ஆனதால!

  இன்னிக்கு வந்த அறிவிப்புக்கு அப்புறம் தான் இங்கே வந்தேன் :-)

  ReplyDelete
 133. முருகா முருகா முருகா. சிரிக்கிறதுக்கு ஒரு அளவே இல்லையா.

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))