பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 26, 2007

"அந்த" ஏழு நாட்கள்!!!

முதல் நாள்

அன்னக்கி காலைல எழுந்திருக்கும் போதே கத கதன்னு ஜுரம் அடிச்சுது. ''ஆஹா ஜாலி இன்னக்கி லீவு போடலாம் போலருக்கேன்னு ஒரு சந்தோஷம்.
.
.
போன எடுத்து வராத முக்கல வரவழச்சி " ரொம்ம்ப ஜொரமா இருக்கு, நான்னா மெதுவா வந்து பன்ச் பன்னிட்டு போய்டவா"ன்னு ஆபீஸ்ல கேட்டேன். "பரவாயில்ல நீ வந்து என்னாத்த கிழிக்கபோர, ரெஸ்ட் எடுத்துக்கோ"ன்னு பதில் வந்துச்சி. மயக்கத்தோட கூடிய தூக்கம் வந்துச்சி. அப்டியே தூங்கிட்டேன். முதநாள் பாத்த "தீபாவளி" மனசுக்குள்ள ஓடுச்சு. பாவனாவுக்கு வந்த மாதிரி நமக்கும் 2 வருஷம் எல்லாம் மறந்துச்சுன்னா என்ன ஆவும்ன்னு நெனச்சிகிட்டே தூங்கிட்டேன்.
.
.
திடீர்ன்னு முழிச்சு பாத்தா அது ராத்திரியா பகலா எதுவுமே தெரியல. சரி எதுக்கும் சன் டிவி பாப்போம்னு போட்டேன். சொர்க்கம் சீரியல் ஓடிக்கிட்டு இருந்துச்சி. நா சன் டி.வி பாத்து 1.5 வருஷமாச்சு.காரணம் 'அம்பிகை' சீரியல். "நா போய் அவன் கிட்ட 450 கோடிய வாங்கிகிட்டு வர்ர வ்ழியில சலூன்காரருக்கு 40 கோடி நான் தரவேண்டியிருக்கு, அதை குடுத்துட்டு, கோவில் வாசல்ல ஒரு பிச்சைக்காரன் ரொம்ப நாளா கஷ்டப்படுறான் அவனுக்கு 1 கோடி போட்டிட்டு 10 நிமிஷத்துல வரேன்" ன்ற ரீதியில் டயலாக். எனக்கு அந்த சீரியல் பாத்து டிசன்ட்ரி தொந்தரவு வந்ததால ஒட்டு மொத்தமா டி.வி பார்ப்பதை விட்டுட்டேன்.
.
.

ரொம்ப நாளாச்சே எல்லாரும் திருந்தியுருப்பாங்க, சரி பாப்போம்ன்னு பாத்தேன். மௌனிகா வழக்கம் போல சவால்வுட்டுகிட்டு இருந்தாங்க. நா 1.5 வருஷத்துக்கு முன்ன பாத்த காட்சிகளின் அடுத்த எபிசோட் மாதிரி இருந்துச்சு. எனக்கு பயமா போயிடுச்சு. பாவனாவுக்கு வந்த மாதிரி எனக்கும் 1.5 வருஷ ஞாபகம் எல்லாம் அவுட்டா??? பயந்துகிட்டே திரும்பி படுத்துட்டேன்.
.
.

சாயந்திரம் கொஞ்சம் கண்ண தொறந்து பாத்தேன். மை டியர் பூதம் ஓடிச்சு. இருக்குற பூதம் பத்தாதுன்னு எல்லா குழ்ந்தைகளும் சன் டிவிக்கு எழுதிபோட்டிருப்பாங்க போல. அன்னிக்கு ஒரு புது பூதம் கேரக்டர் புதுசா நுழைச்சிருந்தாங்க. அதுக்கு பேர்"அசின் பூதம்". நம்புங்க. இது காமெடியில்லை. சந்தேகம் இருந்தா ரெகுலரா சன் டி.வி பாக்குறவங்ககிட்டே கேட்டு தெரிஞ்சுக்கலாம்.
.
.
அதுக்குள்ள பழம், பால். இளநீர் அப்டீன்னு ரூம் கலை கட்டிடுச்சு. அப்புறம் என்ன..வரிசையா ஆனந்தம், மலர்கள், கஸ்தூரி,கோலங்கள், அரசி,லெஷ்மி அப்டீன்னு ரவுண்டு கட்டி அடிச்சாங்க.
.
.

'கோலங்கள்'ல ஆதி, அபிய போட்டு துவச்சி எடுத்துட்டு, அடுத்த 5 நிமிஷத்துல தலைய வழிச்சு சீவிகிட்டு 'அரசி'ல வந்து ரவுசு வுடுறார். எனக்கு ஏகப்பட்ட குழப்பம். இது கதைக்காவாதுன்னு தூங்கிட்டேன். (கீதா மேடம் வேற என்கிட்ட கோலங்கள் அபிக்கு ஒரு 3 கோடி தரக்கூடாதா தரக்கூடாதான்னு கேக்குறாங்க....அபிபாப்பாவுக்கு கொடுத்தாகூட ஆப்பிள் உண்டியல்ல போட்டு ஒழிச்சுவச்சுக்கும். கோலங்கள் அபிகிட்ட குடுத்தா போற வழியிலேயே தொலச்சிட்டு அழுதுகிட்டு இருக்கும்)
.
.

இரண்டாம் நாள்
.

காலைல கொஞ்சம் லேட்டா எழுந்திருச்சேன். வேற வழி. சன் டிவிதான். போட்ட உடனே ஒரு அம்மணி மண்ணை வாரி வாரி என் மேல எறியறாங்க. ஆஹா, நா எந்த வம்புதும்புக்கும் போகாதவனாச்சே!! அப்புறம்தான் தெறிஞ்சுது அது 'சூர்யா' சீரியலின் பிளாஷ்பேக் சீன். சரின்னு தங்கமணிக்கு போன் செய்து அம்மை போட்டதை சொல்லாமல்" பாப்பா ஸ்கூலுக்கு போயாச்சா?"ன்னு கேட்டேன். திரும்பவும் சீரியலில் முழுகிவிட்டேன்.
.
.
மாலை பூதம் பாத்துட்டு இருக்கும்போது விஜய டிஆரின் அரட்டைஅரங்கம் விளம்பரம். ஏதோ குந்திதேவி குந்திதேவிங்குறார். எனக்கு பக்கு பக்குங்குது. பயந்துகிட்டே தூங்கிட்டேன்.
.
.

திரும்பவும் முழிச்சபோது சூர்யா ஓடிச்சு. ஆஹா ரொம்ப நேரம் தூங்கிடோமேன்னு வீட்டுக்கு போன் செய்து "பாப்பா ஸ்கூலுக்கு போயாச்சா?"ன்னு கேட்டேன். தங்கமணியிடமிருந்து 'நற நற நற'. அப்புறம்தான் தெரிஞ்சுது டாக்டர் மூணு வேளைக்கு மருந்து குடுப்பது மாதிரி இந்த 'சூர்யா' காலை, மதியம்,இரவுன்னு ஓடிக்கிட்டே இருக்குமாம். நடுராத்திரி பாக்கணும்னா சன் டிவிக்கு ஒரு போன் போட்டா போதுமாம். உடனே போடுவாங்களாம்.
.
.

என்ன பாக்க வந்தவங்ககிட்டே "சன் டிவியால ரொம்ப அவதிபடுறேன். ஏதாவது புது படம் சி.டி இருந்தா கொண்டு வாங்க"ன்னேன். இதுதான் சொ.செ.சூங்கிறது.
.
.

3 வது நாள்
.

காலைல 9 மணிக்கு சி.டி வந்துச்சு. படத்தோட பேர பாத்ததுமே கை,காலெல்லாம் நடுங்குது. ரொம்ப நாள் வெறியோட இருந்திருக்கானுங்க பய புள்ளைங்க. இதுதான் சாக்குன்னு வச்சிட்டானுங்க ஆப்பு.
சரி வேண்டாம் சன் டி.வியே பாப்போம்ன்னு போட்டேன். வீராசாமி திரை விமர்சனம் ஓடுச்சு. ஐயோன்னு நெனச்சுகிட்டு உக்காந்தா அரட்டைஅரங்க விளம்பரம் 2 நிமிஷத்துக்கு ஒரு தடவை. திரும்பவும் குந்திதேவி, குந்திதேவின்னு ரப்சர் தாங்கலை.
.
.
சரி சன்நியூஸ் பாப்போம்ன்னு மாத்துனா கலைஞர் வெளிறி போன முகத்தோட ஒரு தியேட்டரில் இருந்து வர்ரார். கூட வர்ரவுங்க நம்ம டுபுக்கர் சொல்ற மாதிரி சவ ஊர்வலத்தில் வாயில துண்ட கடிச்சுகிட்டே வர்ர மாதிரி வர்ராங்க. பின்னாடியே விஜய டி.ஆர். 'வீராசாமி' பிரத்யோக காட்சி பாத்துட்டு வர்ராராமா!!!
.
.
சரி!! சனி ரவுண்டு கட்டிட்டார் நம்மலன்னு நெனச்சுகிட்டு எந்த பிரச்சனையா இருந்தாலும் நேருக்கு நேர் மோதிபாத்துடலாம்னு சி.டி ய போட்டேன். பார்த்தேன். வலையுளக மக்களே இப்ப தெறிஞ்சுதா நம்ம தைரியம். நாங்கல்லாம் வீர பரம்பரல்ல!!!
.
.

மும்தாஜ் தன் காதலை டி.ஆர் கிட்ட சொல்லும்போது இவருடைய நடிப்பு, நல்லா வாயை பொளந்துகிட்டு, கலங்குண கண்ணோடு தாவங்கட்டய மேல் பக்கமா தூக்கிகிட்டு எல்லா திசைக்கும் முகத்த திருப்புவார் பாருங்க...நா அழுதுட்டேன். ஆமா நெசமா. புல்லரிக்குதுன்னு ஒரு கட்டிய போட்டு சொறிஞ்சா ரத்தம் வராதா...வலிக்காதா..பின்ன அழுவமாட்டனா!!!
.
.

ஆக இப்படியா அடுத்த அடுத்த 4 நாட்கள் போச்சு!! இதுனால நா தெரிஞ்சுகிட்டது என்னன்னா....
.

1. பந்தங்கள் பாத்தா சொந்த பந்தங்கள் நம்மை விட்டு போயிடும். (ஆமா நானு அத பாத்து சொக்கிகிடக்கும் போது வந்த தங்கமணி போனை எடுக்காததால் ஏகப்பட்ட கட முடா)
.

2. சொர்கம் பாத்தா நரகம் கிட்டும்
.

3.நிம்மதி பாத்தா அது போயிடும்
.

4.ஆனந்தம் பாத்தா அது போயிடும்
.

5.கோலங்கள் பாத்தா வாழ்க்கை அலங்கோலமாயிடும்
.

6.மொத்தத்துல வீராசாமி பாத்தா உயிரே போய்டும்.
.

இந்த லச்சணத்தில வெட்டிபாலாஜி ஆசையா பாத்தீங்களா??
.

இந்த ஏழு நாளில் 7.5 சனி புடிச்சுவிட்டுடுச்சு!!! இனி எல்லாம் சுகமே!!!

55 comments:

  1. பதிவு கொஞ்சம் பெருசா இருக்கா!! அவ்வளவு நொந்து போனேன்!!!

    ReplyDelete
  2. என்னய்யா ஆச்சு? உடம்பு மட்டும் சரியா இல்லாம போகலை போல. இப்போ எல்லாம் சரியாப் போச்சா?

    ஆமாம் தங்கமணிக்கு போன் போட்டியா? அப்போ நீ 'நோ தங்கமணி எஞ்சாயா?' அப்போ ஆட்டத்தை அளவா போடு மகனே, இல்லை இப்படித்தான் காலையில் எழுந்தா கஷ்டமா இருக்கும்!

    ReplyDelete
  3. அபி அப்பா,தங்கமணி கவனிக்காதபடி எங்க இருந்தீங்க.
    உடல், நலமாயிடுச்சா.
    'ஜுரம் வந்தவன் வீராச்சாமி பாத்தானாம்னு' புது மொழி போட்டுடலாமா?
    உங்களைப் பத்தி மேல் விவரம் தெரியாததல் கேட்டுவிட்டேன்:-)

    ReplyDelete
  4. தொல்ஸ்,
    காலேலிருந்து பதிவுக்கு காத்திருந்தா இப்பவாவது போட்டீங்களே.
    நானும் அந்த சன் டிவி கொடுமைய இரவு நேரத்தில் அனுபவிக்கிறேன், ஆனா வீராசாமி பாக்குற அளவுக்கு தைரியமில்லை.
    லியோ சுரேஷ்

    ReplyDelete
  5. //என்னய்யா ஆச்சு? உடம்பு மட்டும் சரியா இல்லாம போகலை போல. இப்போ எல்லாம் சரியாப் போச்சா?//

    வாங்க கொத்ஸ்!! ஏதோ உள்குத்து மாதிரி இருக்கே!!!

    //ஆமாம் தங்கமணிக்கு போன் போட்டியா? அப்போ நீ 'நோ தங்கமணி எஞ்சாயா?' அப்போ ஆட்டத்தை அளவா போடு மகனே, இல்லை இப்படித்தான் காலையில் எழுந்தா கஷ்டமா இருக்கும்!//

    இன்னும் 7 மாசத்துக்கு என்சாய் தான்!!!

    ReplyDelete
  6. //அபி அப்பா,தங்கமணி கவனிக்காதபடி எங்க இருந்தீங்க.
    உடல், நலமாயிடுச்சா.
    'ஜுரம் வந்தவன் வீராச்சாமி பாத்தானாம்னு' புது மொழி போட்டுடலாமா?
    உங்களைப் பத்தி மேல் விவரம் தெரியாததல் கேட்டுவிட்டேன்:-) //

    வாங்க சகோதரி! தங்கமணி இப்போ என் கூட இல்லை. ஊர்ல இருக்காங்க. அதனால ஐயாக்கு ஜாலி!! வாராவாரம் வலைப்பதிவர் சந்திப்புதான்!!!

    ReplyDelete
  7. //தொல்ஸ்,
    காலேலிருந்து பதிவுக்கு காத்திருந்தா இப்பவாவது போட்டீங்களே.//

    வாங்க வாங்க லியோ!!! கொஞ்சம் ஆணி ஜாஸ்தி இன்னிக்கு, அதான்.

    ReplyDelete
  8. அய்யா! ஆர் யூ ஆல்ரைட்?

    பதிவை படிச்சுட்டு எனக்கெதுவும் வராம இருந்தா சரி. :)

    ReplyDelete
  9. //அய்யா! ஆர் யூ ஆல்ரைட்?

    பதிவை படிச்சுட்டு எனக்கெதுவும் வராம இருந்தா சரி. :) //

    இதெல்லாம் நடந்து 15 நாள் ஆச்சு!! இப்போ everything okey!!இந்த பதிவை நீங்க படிச்சுட்டு எனக்கெதுவும் வராம இருந்தா சரி.ஆட்டோ கீட்டோ அனுப்பாம!!

    ReplyDelete
  10. அம்பி இப்போ நன்னாருக்கேளா ?

    ReplyDelete
  11. அபிபாப்பாவுக்கு கொடுத்தாகூட ஆப்பிள் உண்டியல்ல போட்டு ஒழிச்சுவச்சுக்கும். கோலங்கள் அபிகிட்ட குடுத்தா போற வழியிலேயே தொலச்சிட்டு அழுதுகிட்டு இருக்கும்/
    :-)))))))))))))))))))
    இன்னும் 7 மாசத்துக்கு என்சாய் தான்!!! //மூணு நாலு ஆகப்போகுது போல தோணுது :-)
    usha

    ReplyDelete
  12. //மும்தாஜ் தன் காதலை டி.ஆர் கிட்ட சொல்லும்போது இவருடைய நடிப்பு, நல்லா வாயை பொளந்துகிட்டு, கலங்குண கண்ணோடு தாவங்கட்டய மேல் பக்கமா தூக்கிகிட்டு எல்லா திசைக்கும் முகத்த திருப்புவார் பாருங்க...நா அழுதுட்டேன். ஆமா நெசமா. புல்லரிக்குதுன்னு ஒரு கட்டிய போட்டு சொறிஞ்சா ரத்தம் வராதா...வலிக்காதா..பின்ன அழுவமாட்டனா!!!.//

    அய்யய்யோ ...
    யாராவது அபி அப்பாட்டந்து டி.ஆர காப்பாத்துங்க....

    :)-

    சென்ஷி

    ReplyDelete
  13. //அம்பி இப்போ நன்னாருக்கேளா ? //

    இப்போ சூப்பரா இருக்கேன் அனானி நண்பரே!!

    ReplyDelete
  14. //அபிபாப்பாவுக்கு கொடுத்தாகூட ஆப்பிள் உண்டியல்ல போட்டு ஒழிச்சுவச்சுக்கும். கோலங்கள் அபிகிட்ட குடுத்தா போற வழியிலேயே தொலச்சிட்டு அழுதுகிட்டு இருக்கும்/
    :-)))))))))))))))))))//

    இது நெஜமாவே உஷா மேடம்தானா?? any how நன்றி மேடம்.

    //இன்னும் 7 மாசத்துக்கு என்சாய் தான்!!! //மூணு நாலு ஆகப்போகுது போல தோணுது :-)
    usha//

    :-))))))))))))))))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  15. //அய்யய்யோ ...
    யாராவது அபி அப்பாட்டந்து டி.ஆர காப்பாத்துங்க....

    :)-//

    வாங்க சென்ஷி!!! சும்மா ஜாலிக்குதான். வருகைக்கு நன்றி சென்ஷி!!

    ReplyDelete
  16. நானேதான், சில சமயங்களில் புது பிளாக்கர் அக்கவுண்ட் உள்ள விட மாட்டேங்குது. அதனால
    அனானிமஸ் அனுமதிக்க பிளாக்கர் என்றால் அதையே கிளிக்கிவிடுவது.

    ReplyDelete
  17. //நானேதான், சில சமயங்களில் புது பிளாக்கர் அக்கவுண்ட் உள்ள விட மாட்டேங்குது. அதனால
    அனானிமஸ் அனுமதிக்க பிளாக்கர் என்றால் அதையே கிளிக்கிவிடுவது//

    வாங்க மேடம்!! மிக்க சந்தோஷம் உங்க வருகைக்கு!! ஆமாம்:-)(இந்த பதில் போன பின்னூட்டத்துக்கு)

    ReplyDelete
  18. "ஆமாம் ">>? ஒகே ஒகே.
    அப்ப இன்னும் நிறைய கதை கிடைக்கும். ஆனா அபி அப்பா பேருக்கு போட்டி வராம இருக்கணும்.
    அப்புறம் பதிவு நல்லாருக்கு.
    கடைசியில் குடுத்த நீதி ரொம்பவே நல்லாருக்கு. லிஸ்ட்ல நான் பார்க்குற ஒரே ஒரு சீரியல் பேர் வரவே இல்லை.அப்பாடா.அதுவும் கொஞ்சம் சுமார் தான் இருந்தாலும் ஒன்னு கூட பாக்கலன்னா பாவமாம்.அதான்.

    ReplyDelete
  19. //பாவனாவுக்கு வந்த மாதிரி எனக்கும் 1.5 வருஷ ஞாபகம் எல்லாம் அவுட்டா???//

    எங்கள் தானைத்தலைவி பாவனாவை வைத்து காமெடி செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.

    ReplyDelete
  20. //அதனால ஐயாக்கு ஜாலி!! வாராவாரம் வலைப்பதிவர் சந்திப்புதான்!!!//

    வலைப்பதிவர் சந்திப்பு நடக்குறத என்னவோ கிளு கிளு சமாச்சாரம் நடக்குற மாதிரி எழுதியிருக்கிங்களே
    என்ன கொடுமை இது.

    ReplyDelete
  21. எனக்கு ஒரு சந்தேகம்....

    ஜூரம் வந்ததால வீராசாமி பாத்தீங்களா? இல்ல வீராசாமி பாத்ததால ஜுரம் வந்திச்சா??

    இருந்தாலும் ரொம்ப நொந்துப் போயிருக்கீங்க. நான் பல பேராவ ஸ்கிப் பண்ணிட்டேன்னா பாத்துக்கோங்களேன். அந்த அளவுக்குப் பெருசா இருக்குது :((((

    ReplyDelete
  22. டி ராஜேந்தருடன் சேர்ந்து எலைட் கிளப் மெம்பர் ஆகிட்டீங்க நீங்க #8 ஆ #12 ஆ? வீராச்சாமி பார்த்தவர் எண்ணிக்கையிலே கேக்கிறேன்.

    இந்த அளவுக்கு டிவி சீரிய்ல்களை ஓட்டுறீங்களே, வீட்டிலே தவறிக்கூட இதை படிச்சுடாம இருக்க எதாவது சாப்ட்வேர் உபயோகப்படுத்தறீங்களா? எதாவது இருந்தா நானும் தைரியமாகிடலாமே:-(

    ReplyDelete
  23. உங்களுக்கு உடம்பு சரியில்லாம போனதுல மூளை எதும் குழம்பிடுச்சா??? எவ்வளவு தைரியமா சீரியல் பாத்துருக்கிங்க??!!!

    வேணாம் அண்ணா... சொல்ற பேச்ச கேளுங்க. வேணாம் இந்த விஷ பரிட்சை...

    ReplyDelete
  24. இந்தத் தொ(ல்)லைக்காட்சித் தொடர்களையெல்லாம் பார்க்கக்கூடாது என்றுதான் தமிழ் வலைப்பதிவுகளுக்கு வந்தால் இங்கேயுமா ?

    :-)))

    பதிவுகளை மாற்றி மாற்றிப் பார்க்க (படிக்க) ஏதேனும் ரிமோட் கண்ட்ரோல் இருக்கிறதா ? இந்த எலிக்குட்டி, தட்டச்சுப் பொத்தான் எல்லாம் ரொம்ப கடியாக இரூக்கின்றன.

    ReplyDelete
  25. உடம்பு சரியில்லைன்னாலும் குசும்பு கொஞ்சமும் குறையலை அபி அப்பாவுக்கு!!!

    அபி குட்டி, நீ எப்படி இருக்கே??

    ReplyDelete
  26. அடடா............. அம்மை போட்டுச்சா?
    வேப்பிலைக் கட்டிக்காரின்னு ஒண்ணு வருதே அதைப் பார்த்துருக்கலாமுல்லெ?
    அப்படியே ஆத்தா மனங்குளுர்ந்து இறங்கி இருப்பால்லெ?

    ஹூம்............பொழைக்கத் தெரியாத பசங்க:-))))))

    ReplyDelete
  27. அடங்கமாட்டிங்க போல...

    ReplyDelete
  28. \\பந்தங்கள் பாத்தா சொந்த பந்தங்கள் நம்மை விட்டு போயிடும். (ஆமா நானு அத பாத்து சொக்கிகிடக்கும் போது வந்த தங்கமணி போனை எடுக்காததால் ஏகப்பட்ட கட முடா).\\

    ஒட்டு மொத்தமா எல்லா சீரியலையும் பார்த்திருக்கீங்க...

    அப்படி இருந்தும் நலமா இருக்கேன்னு சொல்றிங்க??? எப்படிங்க???

    ReplyDelete
  29. \\வாங்க சகோதரி! தங்கமணி இப்போ என் கூட இல்லை. ஊர்ல இருக்காங்க. அதனால ஐயாக்கு ஜாலி!! வாராவாரம் வலைப்பதிவர் சந்திப்புதான்!!!\\

    தலைவர் தம்பி இதுக்கு தக்கபதில் தருவார்...

    ReplyDelete
  30. hello abhi appa .. eppadi irukkinga ? this is thiyagu

    ReplyDelete
  31. hello abhi appa eppadi irukkinga ,,,

    ReplyDelete
  32. //ஆமாம் ">>? ஒகே ஒகே.
    அப்ப இன்னும் நிறைய கதை கிடைக்கும்//

    ஆமாம். நிறைய சந்தோஷமான கதைகள் கிடைக்கும். நிச்சயம் எதிர்பாருங்கள் திருமதி. முத்துலெஷ்மி!!!!

    ReplyDelete
  33. //எங்கள் தானைத்தலைவி பாவனாவை வைத்து காமெடி செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.//

    தம்பி! இதென்ன புது கூத்து. அப்ப தம்பி கேரளாவில் வாக்க பட போவுதா?


    //வலைப்பதிவர் சந்திப்பு நடக்குறத என்னவோ கிளு கிளு சமாச்சாரம் நடக்குற மாதிரி எழுதியிருக்கிங்களே
    என்ன கொடுமை இது. //

    அப்டீதான் ஆக்கிட்டாங்க!!

    ReplyDelete
  34. //ஜூரம் வந்ததால வீராசாமி பாத்தீங்களா? இல்ல வீராசாமி பாத்ததால ஜுரம் வந்திச்சா??

    இருந்தாலும் ரொம்ப நொந்துப் போயிருக்கீங்க. நான் பல பேராவ ஸ்கிப் பண்ணிட்டேன்னா பாத்துக்கோங்களேன். அந்த அளவுக்குப் பெருசா இருக்குது :(((( ///

    வாங்க ஜி! ரெண்டும் ஒருசேர நடந்தது.

    ஆமா இந்த பதிவு பெருசாதான் போயிடுச்சு. நானே ஸ்கிப் பண்ணிட்டேன்னா பாத்துக்கோங்க!!

    ReplyDelete
  35. ஹிஹிஹி, என்னத்தைச் சொல்றது? பேசவே முடியலை. நொந்து போனது நீங்க மட்டும் இல்லை, நானும் தான், உங்க தமிழிலே தப்புக்களைப் பார்த்து! :D

    அப்போ தோணினது" "ராத்திரி நேரத்தில் தூக்கத்தில் நானொரு ராட்சஸி போல் வருவேன்!
    நாளைக்கு நீ எழுதும் தமிழ் நல்லா இல்லையானால் விடமாட்டேன்!"
    எம்.எஸ்.விஸ்வநாதன் குரலில் பாடிக்குங்க. வேறே வழியே இல்லை!

    ReplyDelete
  36. //டி ராஜேந்தருடன் சேர்ந்து எலைட் கிளப் மெம்பர் ஆகிட்டீங்க நீங்க #8 ஆ #12 ஆ? வீராச்சாமி பார்த்தவர் எண்ணிக்கையிலே கேக்கிறேன்.

    இந்த அளவுக்கு டிவி சீரிய்ல்களை ஓட்டுறீங்களே, வீட்டிலே தவறிக்கூட இதை படிச்சுடாம இருக்க எதாவது சாப்ட்வேர் உபயோகப்படுத்தறீங்களா? எதாவது இருந்தா நானும் தைரியமாகிடலாமே:-( //

    வாங்க பெனாத்தலாரே!! 1 வாரம் டிவி பாத்துபாருங்க, தங்கமணிய சமாளிக்கிற தைரியம் தானா வரும்.

    ReplyDelete
  37. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  38. அது சரி, அபி அப்பா, அந்த மூணு கோடி என்ன ஆச்சு? இப்போவாவது அபி கிட்டே கொடுத்துடுங்களேன், ப்ளீஸ்! :D

    ReplyDelete
  39. //உங்களுக்கு உடம்பு சரியில்லாம போனதுல மூளை எதும் குழம்பிடுச்சா??? எவ்வளவு தைரியமா சீரியல் பாத்துருக்கிங்க??!!!

    வேணாம் அண்ணா... சொல்ற பேச்ச கேளுங்க. வேணாம் இந்த விஷ பரிட்சை... //

    இம்சையம்மா! ரொம்ப பிஸியா. "பாரதிக்கும் பாரதமாதாவுக்கும்" பதிவ படிக்கலை போலயிருக்கு.

    நமக்கு மூளை குழம்பம் வர்ரத்துக்கு சான்சேயில்லை!!ஹி...ஹி

    ReplyDelete
  40. //பதிவுகளை மாற்றி மாற்றிப் பார்க்க (படிக்க) ஏதேனும் ரிமோட் கண்ட்ரோல் இருக்கிறதா ? இந்த எலிக்குட்டி, தட்டச்சுப் பொத்தான் எல்லாம் ரொம்ப கடியாக இரூக்கின்றன. //

    வாங்க பாலராஜன்கீதா!! முதல் வருகைக்கு நன்றி!! அடிக்கடி வாங்க!!

    ReplyDelete
  41. //பதிவுகளை மாற்றி மாற்றிப் பார்க்க (படிக்க) ஏதேனும் ரிமோட் கண்ட்ரோல் இருக்கிறதா ? இந்த எலிக்குட்டி, தட்டச்சுப் பொத்தான் எல்லாம் ரொம்ப கடியாக இரூக்கின்றன. //

    வாங்க பாலராஜன்கீதா!! முதல் வருகைக்கு நன்றி!! அடிக்கடி வாங்க!!

    ReplyDelete
  42. //உடம்பு சரியில்லைன்னாலும் குசும்பு கொஞ்சமும் குறையலை அபி அப்பாவுக்கு!!!

    அபி குட்டி, நீ எப்படி இருக்கே??//

    குசும்பு கூட பிறந்தது மைஃபிரன்ட்!! அபிபாப்பா சூப்பரா இருக்கா!

    ReplyDelete
  43. //அடடா............. அம்மை போட்டுச்சா?
    வேப்பிலைக் கட்டிக்காரின்னு ஒண்ணு வருதே அதைப் பார்த்துருக்கலாமுல்லெ?
    அப்படியே ஆத்தா மனங்குளுர்ந்து இறங்கி இருப்பால்லெ?

    ஹூம்............பொழைக்கத் தெரியாத பசங்க:-))))))//

    டீச்சர்! நீங்க காமடிக்கு சொல்றீங்க. எங்க அம்மா " தம்பி அங்க கோயிலுக்கு போக நேரமில்லைன்னா வேப்பிலைகாரியாவது பாருப்பா"ன்னாங்க. -:)))

    ReplyDelete
  44. //அடங்கமாட்டிங்க போல... //

    கோபிதம்பி! நாமல்லாம் அடங்குற ஆளுங்களா!

    தலைவர் தம்பி தக்க பதில் சொல்லனும்னு நானும் கேட்டுக்கறேன்.

    ReplyDelete
  45. //hello abhi appa .. eppadi irukkinga ? this is thiyagu //

    என்ன தியாகு! என்னை முதன் முதலில் "அபிஅப்பா"ன்னு அழைக்க ஆரம்பித்ததே நீங்கதானே!

    இப்போ எங்கே U.Sல தான. TCSல தான. ஸ்ரீதரை பாப்பீங்களா? kummarv@gmail.comக்கு கான்டக்ட் செய்யுங்க.

    ReplyDelete
  46. //hello abhi appa .. eppadi irukkinga ? this is thiyagu //

    என்ன தியாகு! என்னை முதன் முதலில் "அபிஅப்பா"ன்னு அழைக்க ஆரம்பித்ததே நீங்கதானே!

    இப்போ எங்கே U.Sல தான. TCSல தான. ஸ்ரீதரை பாப்பீங்களா? kummarv@gmail.comக்கு கான்டக்ட் செய்யுங்க.

    ReplyDelete
  47. //'ஜுரம் வந்தவன் வீராச்சாமி பாத்தானாம்னு' புது மொழி போட்டுடலாமா?
    உங்களைப் பத்தி மேல் விவரம் தெரியாததல் கேட்டுவிட்டேன்:-)//

    நீங்க எப்படிவேணா போடலாம் வல்லியம்மா!!

    என்னைபற்றிய மேல் விவரம் -நான் male...ஹி..ஹி

    ReplyDelete
  48. //அப்போ தோணினது" "ராத்திரி நேரத்தில் தூக்கத்தில் நானொரு ராட்சஸி போல் வருவேன்!
    நாளைக்கு நீ எழுதும் தமிழ் நல்லா இல்லையானால் விடமாட்டேன்!"
    எம்.எஸ்.விஸ்வநாதன் குரலில் பாடிக்குங்க. வேறே வழியே இல்லை!//

    நான் மாணிக்க விநாயகம் குரல்ல கேட்டுக்கறேன் மேடம். இப்ப தப்பு திருத்த ஒரு ஆள் போட்டாச்சு. பாவம் அவர்தான் மன்மதலீலை படத்துல வருவாரே ஒருத்தர் கமல் செய்யும் பாவத்த கேட்டு கேட்டு தாடி வளருமே அப்டி ஆகிட்டார்.

    ReplyDelete
  49. //அது சரி, அபி அப்பா, அந்த மூணு கோடி என்ன ஆச்சு? இப்போவாவது அபி கிட்டே கொடுத்துடுங்களேன், ப்ளீஸ்! :D //

    மேடம், இந்த பதிவிலேயே இதுக்கான பதிலை போட்டிருக்கேன்.

    ReplyDelete
  50. அது சரி பேருக்கு போட்டி வருமேன்னு கேட்டேனே அதுக்கு பதிலே காணோமே?

    ReplyDelete
  51. //அது சரி பேருக்கு போட்டி வருமேன்னு கேட்டேனே அதுக்கு பதிலே காணோமே//

    ஆமாம்.ஆமாம்...-:))))))))))))

    ReplyDelete
  52. தலைபை மாத்தி "அந்த நொந்த 7 நாட்கள்" அப்படின்னு வைக்கலாம்

    ReplyDelete
  53. //தலைபை மாத்தி "அந்த நொந்த 7 நாட்கள்" அப்படின்னு வைக்கலாம் //

    ஆமாங்க! வெந்த 7 நாட்கள் அப்டீன்னு கூட வச்சியிருக்கலாம்!!

    ReplyDelete
  54. மன்னிக்கவும்..

    நான் ஒரு முக்கியமான மீட்டிங்ல இருந்தேன். அதான் பேசமுடியலை.

    செந்தழல்

    ReplyDelete
  55. Hello ,Enna theriyutha ? super ra erukku blog ....kalakunga

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))