பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

December 16, 2007

எனக்கும் 100 சாத்தியமா?????

இதுவரை எனக்கு சாத்தியப்படாத விஷயம் இந்த 100 என்பது. அனேகமாக என் வாழ்க்கையின் முதல் 100 இதுவே. கணிதத்தில் கூட இதுவரை நான் 100 எடுத்தது கிடையாது. நான் சென்ற வருடம் டிசம்பர் 26 அன்று முதன் முதலில் "வணக்கம்" என டெஸ்ட் பதிவு போட்ட போது கூட நூறு பதிவெல்லாம் நமக்கு எங்கே என்று தான் நினைத்தேன். அதன் பிறகு யாராவது நூறாவது பதிவு என்று பதிவிட்டிருந்தால் உடனே ஓடிப்போய் என் பதிவை பார்ப்பேன். 28, 32 என்று தான் இருக்கும். திடீரென ஒரு நாள் பார்த்தா 50 பதிவு ஆகியிருந்தது. அட நாம கூட அரை சதம் வந்தாச்சேன்னு ஆச்சர்யம். அதன் பின்ன நூறு என்பதை பத்தியெல்லாம் கவலை படுவது எல்லாம் இல்லை.

20 நாள் முன்ன எதேர்ச்சையா பார்த்த போது 99 பதிவு ஆகியிருந்தது. மனசு ரெக்கை கட்டி பறக்க ஆரப்பிச்சுடுச்சு. எதுக்கும் இருக்கட்டும் என்று எண்ணி பார்த்த போது டிடாப்டில் இருந்தது எல்லாம் கணக்கில் வந்து 99 ஆகியிருந்தது. எல்லாத்தையும் கழிச்சுட்டு பார்த்தா 90 தான் வந்துச்சு. அப்ப ஆரம்பிச்ச ஸ்ட்ரெஸ் எனக்கு இந்த நிமிடம் வரை இருக்குது. நகரவே மாட்டங்குது. சரி எப்போதும் போல நமக்கு 100 என்பது எட்டாமலே போய்விடுமோன்னு ஆகிப்போச்சு.

எப்பவும் எனக்கு ஒரு கெட்ட பழக்கம். திடீர்ன்னு படம் வரைய ஆரம்பிப்பேன். ஜெக ஜோதியா ஓவியக்கலையில் பீக் வரை போயிட்டு திடீர்ன்னு டாட்டா காட்டிட்டு போட்டோ கிராபி பக்கம் போயிடுவேன். அதிலே ஒரு ஸ்டேஜ்க்கு வரும் முன்னமே மிருதங்கத்துக்கு தாவிடுவேன். சரி அதயாவது முழுசா முடிக்கலாம்ன்னு பார்த்தா அங்கிருந்து ஷெட்டில் விளையாட்டுக்கு ஓடிடுவேன். திடீர்ன்னு ஜேஸீஸ், ரோட்டரின்னு பிஸியாகிடுவேன். பின்ன கிளப் பக்கம் தலை வச்சு படுக்க மாட்டேன்.

அது போலத்தான் பிளாக்குவதும் ஆகும் என நினைத்தேன். ஆனா முழுசா செஞ்சுரி அடிச்சது எனக்கே ஆச்சர்யமா இருக்கு. இந்த ஒரு வருடத்தில் என் நண்பர்கள் எண்ணிக்கை சர்ன்னு உசந்துச்சு. ஏகப்பட்ட சகோதர, சகோதரிகள், அம்மாக்கள், நண்பர்கள் என என்னை அவங்க வீட்டு நபராகவே கருதும் அளவு நான் கண்ணியமாக நடந்து கொண்டிருக்கிறேன் என்பது எனக்கு பெருமையா இருக்கின்றது.

அது போல என எழுத்து பிழைகளையும் பொருத்து செல்லமா திட்டி, கோவமா திட்டி என்னை சரி பண்ண முயற்ச்சி பண்ணி தோத்து போன எல்லாருக்கும் சொல்லிக்கறேன் "மாப்பு மாப்பு மாப்பு". கொஞ்சம் கொஞ்சமா சரி பண்ணிகறேன். தப்பை சரி செய்யவே "வடிவேல்"ன்னு ஒரு பையன் வச்சிருந்தேன். மன்மதலீலை படத்திலே மழுங்க மழுங்க சேவ் செஞ்சுகிட்டு முதல் காட்சியில் வரும் கமலின் குமாஸ்தா படத்தின் கடைசி காட்சியில் பெரிய தாடியோட ஆவது மாதிரி ஆயிட்டான் நம்ம வடிவேல் பையன். ஒரு கட்டத்துல அவனால முடியாம "சார் நான் வெக்கேஷன் போறேன்"ன்னு போனவன் திரும்ப வந்தவுடன் பெரிய இடத்து ரெக்கமண்டேஷனோட எனக்கு கண்காணாத தூரத்துக்கு வேற பிராஜக்டுக்கு போயிட்டான். என் சாயலில் யாரையாவது பார்த்தா கூட அவனுக்கு மனசு பட படங்குதாம். கேள்வி பட்டேன். கூடிய சீக்கிரம் எழுத்து பிழை சரியாகிடும், முயற்சி பண்றேன். அதுவும் பாருங்க 90-99 பதிவு வரை ரொம்ப கொடுமை என் பதிவுகளிள் வந்த எழுத்து பிழை.

சாதாரனமாகவே எனக்கு சிரிக்க பேசித்தான், எழுதித்தான் பழக்கம். என்னையும் அறியாமல் யார் மனசாவது நோகும் படி நான் எழுதியிருந்தால் சத்தியமாக மன்னிக்க வேண்டுகிறேன். இந்த 90 முதல் 100 வது பதிவு வரைக்கும் இருந்த அந்த ஸ்ட்ரெஸ் இனி இருக்காது என நினைக்கிறேன். அதனால இனி பழைய அபிஅப்பாவை பார்க்கலாம் என சொல்லிக்கறேன்.

மேலும் ஒரு விஷயம்! நான் சமீப காலமாக சரி வர பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வதில்லை என்னும் மனக்குறை எனக்கு ஏகப்பட்டது இருக்கு எனக்கு. காரணம் என் வேலை பளுதான். இரவு மட்டும் தான் தமிழ்மணம் பக்கம் வர முடிகிறது. ஆனால் இனி அந்த குறையும் இல்லாத அளவு நடந்து கொள்கிறேன்.

எனக்கு இந்த அளவுக்கு ஆதரவு தெரிவித்த தெரிவித்து கொண்டிருக்கிற என் தமிழ் மண சொந்தங்களுக்கும், தமிழ்மணத்துக்கும் என் நன்றிகள்!

52 comments:

  1. அண்ணே வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஒரு வழியா ஆச்சா...

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. //திடீர்ன்னு படம் வரைய ஆரம்பிப்பேன். ஜெக ஜோதியா ஓவியக்கலையில் பீக் வரை போயிட்டு திடீர்ன்னு டாட்டா காட்டிட்டு போட்டோ கிராபி பக்கம் போயிடுவேன். அதிலே ஒரு ஸ்டேஜ்க்கு வரும் முன்னமே மிருதங்கத்துக்கு தாவிடுவேன். சரி அதயாவது முழுசா முடிக்கலாம்ன்னு பார்த்தா அங்கிருந்து ஷெட்டில் விளையாட்டுக்கு ஓடிடுவேன். திடீர்ன்னு ஜேஸீஸ், ரோட்டரின்னு பிஸியாகிடுவேன். பின்ன கிளப் பக்கம் தலை வச்சு படுக்க மாட்டேன்.//

    இப்போ என்ன சொல்ல வர்ரீங்க. இதெல்லாம் உங்களுக்கு தெரியும்னா?

    சரி சரி நம்பிட்டோம்...

    ReplyDelete
  4. //அவங்க வீட்டு நபராகவே கருதும் அளவு நான் கண்ணியமாக நடந்து கொண்டிருக்கிறேன் என்பது எனக்கு பெருமையா இருக்கின்றது//

    கடமை, கட்டுப்பாடு விட்டு போச்சு போல இருக்கே..

    ReplyDelete
  5. //இரவு மட்டும் தான் தமிழ்மணம் பக்கம் வர முடிகிறது//

    ராத்திரில பின்னூட்டம் போட கூடாதுனு யாராவது சொன்னாங்களா?

    ReplyDelete
  6. //இந்த 90 முதல் 100 வது பதிவு வரைக்கும் இருந்த அந்த ஸ்ட்ரெஸ் இனி இருக்காது என நினைக்கிறேன்.//

    ஆமாம் உண்மை தான். உங்களுக்கு மட்டும் இல்லை. எங்களுக்கும் தான். அப்பாடானு இருக்கு

    ReplyDelete
  7. என்னோட கமெண்ட்டெல்லாம் எங்கே???

    ReplyDelete
  8. 100ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    சச்சின் வழியில் செல்லும் அண்ணன் அபிஅப்பா அவர்களை (அதாங்க இந்த 90ல் வரும் ஸ்ட்ரெஸ் பத்திதான் சொல்லறேன். 90களில் அவுட் ஆகறது பத்தி இல்லை) வாழ்த்தி வணங்குகிறேன்.

    //அது போல என எழுத்து பிழைகளையும் பொருத்து செல்லமா திட்டி, கோவமா திட்டி என்னை சரி பண்ண முயற்ச்சி பண்ணி தோத்து போன எல்லாருக்கும் சொல்லிக்கறேன் "மாப்பு மாப்பு மாப்பு".//

    இந்த வரியிலுமா இப்படி!! திருத்தவே முடியாதப்பா!! I give up!

    ReplyDelete
  9. //கூடிய சீக்கிரம் எழுத்து பிழை சரியாகிடும்//

    அதெப்படி தானாவே சரிஆயிடுமா?

    ReplyDelete
  10. //இனி எந்த குறையும் இல்லாத அளவு நடந்து கொள்கிறேன்.

    Your comment has been saved and will be visible after blog owner approval. //

    அதெல்லாம் இருக்கட்டும், மொதல்ல இத என்னானு பாருங்க.

    ReplyDelete
  11. // என்னையும் அறியாமல் யார் மனசாவது நோகும் படி நான் எழுதியிருந்தால் சத்தியமாக மன்னிக்க வேண்டுகிறேன்.//

    அவ்வ்வ்... அபி அப்பா..நோ பீலிங்ஸ்..

    டபுள் செஞ்சுரி கலக்குங்க...

    ReplyDelete
  12. //இரவு மட்டும் தான் தமிழ்மணம் பக்கம் வர முடிகிறது. ஆனால் இனி அந்த குறையும் இல்லாத அளவு நடந்து கொள்கிறேன்//

    இதுல எது குறை? தமிழ்மணம் ராத்திரியில வர்றதா? ராத்திரியில மட்டும் வர்றதா? வர்றதேவா?

    100க்கு வாழ்த்துகள்.. அப்படியே 180, 360, 720ன்னு போய்ய்கிட்டே இருக்கணும் :-)

    ReplyDelete
  13. மாமா சீக்கிரமா 200 அடிங்க. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் :)))

    ReplyDelete
  15. /இப்போ என்ன சொல்ல வர்ரீங்க. இதெல்லாம் உங்களுக்கு தெரியும்னா?

    சரி சரி நம்பிட்டோம்...//


    மறுதபா.!
    மறுதபா..!
    மறுதபா...!
    சொல்லிக்கிறேன்ப்பா :)

    ReplyDelete
  16. J K said
    //Your comment has been saved and will be visible after blog owner approval. //

    அதெல்லாம் இருக்கட்டும், மொதல்ல இத என்னானு பாருங்க.//

    இன்னைக்குமட்டும் இத எடுத்துப் பாருங்க 200 க்கு பாப்பா கேரண்டி

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள்!

    தொடருங்கள் உங்கள் அறுவையை:)

    ReplyDelete
  18. //திடீரென ஒரு நாள் பார்த்தா 50 பதிவு ஆகியிருந்தது//

    அண்ணாத்தே..! அப்புறமா இன்னொரு நாளைக்கு இன்னொரு தபா

    திடீருன்னு போய் பார்த்திருந்தா 100 ஆகியிருக்கும்ல !

    யேன் பாக்கலை :)()())

    ReplyDelete
  19. யேம்பா அபி அப்பா... இதுலாம் ரொம்ப ஓவரா தெரியல.... இப்போ என்ன பெட்ரோல் விலை 10 ரூபா குறையவா போவுது!

    நாங்கலாம் ஆப் அடிச்சுட்டே அமைதியா இருக்கும் போது 100 அடிப்போமானு கேட்டுக்கிட்டு .... சின்னப்புள்ளத்தனமல இருக்கு!

    100 அடிக்குறது பெருசில்ல நாட் அவுட்டா இருக்கணும்லா...அதான் ஓய் முக்கியம்!

    100 அடிச்சுட்டு அப்படியே தொடர்ந்து 200... 300னு அடிச்சு பேர காப்பத்தணும் ஓய்!

    சரி சரி டென்சன் ஆவாம 1000 வரைக்கும் அடிப்பிங்க! வவ்வால் சொன்னா அடிப்பிங்க .. நம்பிக்கை தான் வாழ்கை!

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள்

    :)
    :)))

    ReplyDelete
  21. ஏன் இம்புட்டு ஃபிலிங்கு

    நாங்களாம் எண்ணி பாக்குறதே கிடையாது

    போய்ய்கிட்டே இருப்போம்


    100 வருதுனு தெரிஞ்சிடிச்சினா எண்ணுற ஒவ்வொரு நாளும் நரகமாயிடும்

    ஹா

    ஹா

    ஹா

    ReplyDelete
  22. முதலில் என் வாழ்த்துக்கள்.

    நண்பரே.. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்களுடைய பதிவுகளில் இருக்கும் இலக்கணப் பிழைகள், சந்திப் பிழைகள், எழுத்துப் பிழைகள் ரொம்ப அதிகம். உதா:

    /எனக்கு சாத்தியப்படாத/
    /பதிவை பார்ப்பேன்/
    /கவலை படுவது /
    /ஸ்டேஜ்க்கு/
    /ஷெட்டில்/
    /எழுத்து பிழைகளையும் பொருத்து செல்லமா திட்டி/

    படிக்கையில் இவை இடையூறாக இருக்கின்றன.

    ReplyDelete
  23. 100 வயசுதான் நமக்கு சாத்தியமில்லையே தவிர 100 பதிவுகள் சாத்தியம்தான்.

    இது இன்னும் நூறாயிரமாப் பெருகட்டும்.
    வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள்ங்ண்ணா :)

    ReplyDelete
  25. ராஜா.. சந்தோஷம்.. நூறுக்கு வாழ்த்துக்கள்..

    இன்னும் பல நூறு காண வாழ்த்துக்கள்..

    மாயவரத்துப் பையன் ஒருவன் நூறு அடிச்சா அதை விட வேற என்ன பெருமை வேணும்?

    அன்புடன்,
    சீமாச்சு..

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள். Atleast 10000 more post.

    Rumya

    ReplyDelete
  27. நூறு என்றதும் வயதுதான் ஆகிவிட்டதோ என்று நினைத்தேன்.
    சகாதேவன்

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள்.

    அரசு

    ReplyDelete
  29. நீங்க முன்னாலேயே 100 பதிவு போடப் போறதைப் புலம்பிட்டு இருந்ததை நினைவு வச்சு உங்களை வாழ்த்தி ஒரு பதிவு போட்டிருக்கேனே, கொஞ்சம் வந்து எட்டிப் பார்த்துட்டுப் போகறது தானே? அட, அட்லீஸ்ட் ஒரு லிங்காவது கொடுக்கலாமில்லை? :P

    ReplyDelete
  30. 100-வது பதிவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் அபி அப்பா. மேன்மேலும் இதே உற்சாகமும், ஆவலும், பகிர்வும் தொடரவும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. வாழ்த்துக்கள் தல ;)

    ReplyDelete
  32. தொல்ஸ்ண்ணே,

    நூறுக்கு வாழ்த்துக்கள்... :)

    ReplyDelete
  33. வாழ்த்துக்கள் அபி அப்பா..தொடர்ந்து உங்கள் நகைச்சுவை சேவை
    தேவை இந்த வலைக்கு.

    ReplyDelete
  34. வாழ்த்துகள் அபி அப்பா

    ReplyDelete
  35. வாழ்த்துக்கள் மாம்ஸ்

    ReplyDelete
  36. நிலா said...
    J K said
    //Your comment has been saved and will be visible after blog owner approval. //

    அதெல்லாம் இருக்கட்டும், மொதல்ல இத என்னானு பாருங்க.//

    இன்னைக்குமட்டும் இத எடுத்துப் பாருங்க 200 க்கு பாப்பா கேரண்டி

    அட நான் 1000 த்துக்கு கியாரண்டி குடுக்கரன்...

    ReplyDelete
  37. அபி அப்பா 100 க்கு பிறகாவது தப்பில்லாமல் எழுதுங்கள்.
    அபி அல்லது கிருஷ்ணாவிடம் மெயில் அனுப்பி பிழை திருத்தலாம்.
    என்ன தீபா வெங்கட் மேட்டர் தெரிஞ்சி போயிடும்.பூரிக்கட்டையோ அம்மிக் குழவியோ அமீரகம் நோக்கி பறந்து வரும்.;)
    மேலும் 1000000000000000000000000000000000000000000000000000000
    பதிவிட வாழ்த்துக்கள்.
    இதுல எத்தனை சைபர் இருக்கு அதன் பேர் என்ன வேல்யூ என்ன ன்னு நம்ம
    வ[வ்வா]ல்விஷர் சொல்லுவார்.

    ReplyDelete
  38. வாழ்த்துக்கள் அபிஅப்பா! 100க்கே தடுமாறலாமா... இன்னும் 900 அடிக்கவேண்டியிருக்குதே...செய்வீங்க. நம்புறோம்.

    ReplyDelete
  39. அண்ணே,
    அப்படியே 1000, 10,000ம்னு போயிட்டே இருங்க...

    ReplyDelete
  40. //மேலும் ஒரு விஷயம்! நான் சமீப காலமாக சரி வர பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வதில்லை என்னும் மனக்குறை எனக்கு ஏகப்பட்டது இருக்கு எனக்கு. காரணம் என் வேலை பளுதான். இரவு மட்டும் தான் தமிழ்மணம் பக்கம் வர முடிகிறது. ஆனால் இனி அந்த குறையும் இல்லாத அளவு நடந்து கொள்கிறேன்.//

    வாக்கு குடுத்த இந்தப் பதிவில் கூட பதில் சொல்லலை. இதன் மூலம் அனைவருக்கும் அறிவிக்க படுவது என்னவென்றால்.....

    அபி அப்பா அரசியலுக்குப் போகப் போறாருடேஏஏஏஏஏஏஏ!

    ReplyDelete
  41. எவ்வளவோ பண்ணுறீங்க, இதை பண்ண மாட்டீங்களா

    ReplyDelete
  42. All the best abi appa

    ReplyDelete
  43. வாழ்த்துக்கள்...
    வாழ்த்துக்கள்...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  44. //என்னை சரி பண்ண முயற்ச்சி பண்ணி தோத்து போன

    கூடிய சீக்கிரம் எழுத்து பிழை சரியாகிடும்//

    அப்டீன்றீங்க .. :)

    ReplyDelete
  45. என்ன அபி அப்பா, முந்தியெல்லாம் பின்னூட்டத்துக்குப் பின்னூட்டம் போட்டு சூப்பரா கும்மியடிப்பீங்க.. இப்பல்லாம் ரொம்ப அமைதியான சுபாவமாகிட்டீங்களே? ;-)

    ReplyDelete
  46. முதல்ல வாழ்த்துக்கள் அப்புறம் 100 அடிச்சதுக்கு ட்ரீட் இல்லயா?
    என்ன இருந்தாலும் இந்த பாதக செயல்ல எனக்கும் கொஞ்சம் பங்கு இருக்குல்ல.

    ReplyDelete
  47. விரைவில் இன்னுமொரு சதமடிக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))