அபுதாபி எனக்கு கிட்டதட்ட தாய் வீடு மாதிரி. துபாய் எனக்கு புகுந்த வீடு மாதிரி. துபாயில் இருந்து எப்பவாவது அபுதாபி செல்லும் போது ஜெபல்அலி தாண்டியதுமே எனக்குள் ஒரு மின்சாரம் வந்துவிடும். சாலையின் நடுவே உயர்ந்து நிற்கும் விளக்கு கம்பங்கள் அபுதாபி எல்லை ஆரம்பித்ததை சொல்லிவிடும். அதிலிருந்தே பசுமை ஆரம்பமாகிவிடும்.நான் வரும் வெள்ளி கிழமை அபுதாபி செல்ல இருப்பதால் அந்த சில நினைவுகள் இங்கே!
அபுதாமி தமிழ் சங்கம் இருக்கின்றதே தப்பு தப்பு... இருந்ததே ....ஆகா என் வாழ்க்கையின் சந்தோஷ நாட்கள் அவை. கண்டிப்பாய் 15 நாட்களுக்கு ஒரு முறை ஏதாவது நிகழ்ச்சி, ஈத், பொங்கல், தீபாவளி, சுதந்திர தினம் என எதையும் விட்டு வைக்க மாட்டோம்.
அதிலும் குறிப்பாக சங்கத்துக்கு உள்ளேயே பல குழுவாக இருப்போம் கிட்டதட்ட தமிழ்நாடு காங்கிரஸ் மாதிரி. ஆனாலும் தேர்தல் என வந்துவிட்டால் ஸாரி நிகழ்சி என வந்து விட்டால் ஒத்துமையா நின்னு நிகழ்ச்சியை ஜெயித்து விட்டு பின்ன சண்டை போட்டுப்போம். நாங்க ஒரு எட்டு பேர் அதிலே தனியாக "மன மகிழ் மன்றம்" என சொல்லி கொண்டு அடித்த லூட்டி அந்த தமிழ் சங்கத்திலே பிரமாதம். ஒருமுறை அப்படித்தான் மனமகிழ் மன்றம் தனியாக ஒரு நாடகம் போட்டுவிடுவது என தமிழ் சங்கத்திலே சொல்லி எங்களுக்கு தனியாக நேரம் வாங்கி விட்டோம். ஹில்டன் ஹோட்டல் மேல் மாடியில் நிகழ்ச்சி. சரி யார் கதை, யார் டைரக்ஷன், டயலாக் யார் என முடிவாகும் முன்னமே, எது எப்படியாகினும் நாம எல்லோருமே ஒரு ஒரு கேரக்டரில் நடித்து விட வேண்டும் என முடிவாகியது. எங்க அந்த குழுவிலே ஒரு நண்பர் சி.ஏ. சிங்கிள் அட்டெம்ப்டில் பாஸ் பண்ணினவர். அவர் மாத்திரம் ஒத்துக்க மாட்டேன்ன்னு சொல்றார் நடிக்க. எங்க கதைப்படி ஆரம்ப சீன் அவர் தான். கோவில் குருக்களாக வந்து (மணியடிச்சுகிட்டே வந்து) நன்னா இருங்கோ, ஷேமமா இருங்கோ, இந்த உலகமே சுபிட்ஷமா வையிடா ஆண்டவா(அப்போது மணியடிப்பதை நிறுத்தி விடனும்) .... இது தான் முதல் சீன். பின்ன அவர் வர வேண்டாம். இப்படி எல்லாம் அவருக்காக ஒன்பதே வார்த்தைகளிள் டயலாக் எழுதினேன். கதை வேற ஒரு நண்பர். நான் வசனம்.
எனக்கு என்னா கேரக்டர் தெரியுமா. சேட்ஜி! இன்னும் ஒரு நண்பருக்கு பிளேடு பக்கிரி கேரக்டர். காஸ்ட்டியூம்ஸ் எல்லாம் மனமகிழ் மன்ற மகளிர் அணி தயார் பண்ணியாச்சு. எனக்கு தான் சேட்டு குல்லாய் கிடைக்காமல் காயல்பட்டிணம் பாய் ஒருத்தவரின் ஜரிகை தொப்பி வாங்கி அட்ஜெஸ்ட் பண்ணியாச்சு.
நிகழ்ச்சி நாளும் வந்தது.மத்த மத்த குழுவிலும் சின்னதா ஸ்கிட், பாட்டு, வீணை வாசிப்பு, இப்படியாக நடந்து கொண்டிருந்தது. எங்க குழுவின் நாடகம் கடைசி நிகழ்ச்சி. பலத்த எதிர்பார்ப்பு எல்லோரிடமும். பிளேடு பக்கிரிக்கு முகத்திலே கருப்பு பரு இருக்கனும் என்கிற சர்வதேச விதியின் படி ஒரு அத்தர் உருண்டை வாங்கி கன்னத்துக்கு மேலே ஒட்டியாச்சு. அப்பல்லாம் பக்கிரி தைரியமாதான் இருந்தார். எனக்கு அது வரை மேக்கப் போடலை. நானும் தைரியமா இருப்பது போல "நடித்து" கொண்டிருந்தேன். தைரியமா இருப்பது போல நடிக்கிறோமே மேடையிலா நடிக்க தெரியாம போய்டும்ன்னு என்னை நானே தேத்திகிட்டேன். நாங்களாவது பரவாயில்லை, முதல் சீன்ல வரும் ஆடிட்டர் நண்பர் ரிகர்சலுக்கு கூட வரலை. ஏதோ கம்பெனில ஆடிட்டிங்ன்னு சொல்லிட்டு வரமா டிமிக்கி கொடுத்துட்டார். கதவை திறந்து பார்த்தா ஒரே விசில் சத்தம் மத்த நிகழ்ச்சிகளுக்கு. எங்கள் நாடகத்தின் டைரக்டரும்(கதை எழுதியவர்) முக்கிய வில்லன் பாத்திரத்தில் நடிக்க இருந்தவருமான நண்பர் எங்களுக்கு கடைசி நேர டிப்ஸ் எடுத்து கிட்டு இருந்தார்.
"தொல்ஸ் நீங்க சேட்ஜி இல்லியா அதனால தமிழ் தப்பு தப்பா பேசனும்"
"ஜி, நான் தமிழ் எழுதும் போது தான் தப்பா எழுதுவேன், பேசும் போது அட்சர சுத்தமா பேசுவேனே, வேணும்ன்னா ஹிந்தி தப்பு தப்பா பேசவா, கதையையை கொஞ்சம் மாத்திப்போமா"
"யோவ், சேட்டு ஹிந்தி தப்பா பேசுவானா, கதைய காமடியா மாத்தாதே"ன்னு எரிஞ்சு விழுந்தார்.
சரின்னு பிளேடு பக்கிரி பக்கமா திரும்பினார். பக்கிரியின் பயத்தின் காரணமாக முகத்தில் வியர்வை கொட்டுது அதிலே அத்தர் உருகி மூஞ்சில கோடா வழியுது. ரூம் முழுக்க அத்தர் வாசனை.
"யோவ் யோவ் என்னய்யா, உன் கேரக்டர் என்ன, பிளேடு போட்டு ரத்த வாடையா இருக்கனும்யா, இப்படி நாகூர் கந்தூரிக்கு போய் வந்த மாதிரி இருக்கியே வாசமா? சரி கருப்பு பரு எங்கே?"
"ஜி, அதான் இப்படி வழியுது"
"ஆஹா, அதை தொடைங்க"
சர்ன்னு தொடைச்சா முகமே கருப்பா விகாரமா போய் பிளேடு பக்கிரி அரிவாள் பக்கிரியா மாறிட்டார்.
எனக்கு மேக்கப் ஆரம்பிச்சாச்சு, அட்டகாசமா ஜிப்பா, குர்தா மேல் கோட், ஜரிகை தொப்பி எல்லாம் போட்டு, எல்லாத்தையு பார்த்துட்டு மகளிர் அணியினர் என்னவோ குறையுதேன்னு சொல்லி அதையும் கண்டு பிடிச்சு என் சின்ன நெத்தியிலே தெலுகு பட வில்லன் மாதிரி பெரிய நீட்டு பொட்டா சிகப்பு கலர் ஆஷா சாந்து வச்சி அழகு பார்த்துட்டு சிரிச்சு கிட்டே போயிட்டாங்க. எனக்கோ நேரம் ஆக ஆக லைட்டா கை உதறல் ஆரம்பிச்சாச்சு. அப்ப பார்த்து தமிழ் சங்க தலைவர் உள்ளே வந்து பார்த்துட்டு "ஹய், சஸ்பென்ஸா வச்சிருக்கீங்களா கதையை நான் கண்டு பிடிச்சுட்டேனே, காமடி டிராமாவா?"ன்னு கேட்டார்.
நான் "அய்யோ, எதை வச்சு காமடின்னு முடிவு பண்ணீங்க?"ன்னு கேட்டேன். அதுக்கு அவர் "நீங்க இன்னும் உங்க மேக்கப்பை கண்ணாடில பார்க்கலையா?"ன்னு கேட்டுட்டு போயிட்டார். எனக்கு உதறல் அதிகமாயிடுச்சு. ஓடிப்போய் கண்ணாடியிலே பார்த்தேன்!
இதை படித்து கொண்டிருப்பவர்களே. நீங்க வாழ்க்கையிலே அப்படி ஒரு சேட்டை பார்த்திருக்கவே முடியாது. எனக்கு சேட்ஜி வேஷம் கொடுத்த டைரக்டரின் குற்றமா, கொஞ்சம் கூட வெக்கம் இல்லாம ஒத்துகிட்ட என் மீது குற்றமான்னு தெரியலை. சும்மா டைபாய்டு வந்த சேட்டு மாதிரி ஒரு தோற்றம். எந்த சேட்டை பார்த்தாலும் குலோப்ஜாமூன் மாதிரி இருப்பான். என்னைய பார்த்தா எனக்கு ஜிப்பா போட்ட மாதிரி இல்ல ஜிப்பாவுக்கு என்னை போட்ட மாதிரி இருக்கு. நாமம் பார்த்தா சேட்டு போடுவது போல இல்லை ரங்கநாதர் மாதிரி இருக்கு. ஆக ஒல்லியிலே(ஆக மொத்தத்திலே இல்லை) பாம்பு புத்துக்கு படைக்க இருக்கும் சேவல் கோழிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தி கதம்ப பூவை கழுத்திலே சுத்தின மாதிரி இருக்கு.
என் உதறல் என் கண்ட்ரோலை தாண்டி போக ஆரம்பிச்சுது. சீக்கிரம் நாடகம் ஆரம்பிக்க போகுது.மீதி நாளைக்கு!!!
திஸ்கி: பதிவு பெருசா ஆகிடுச்சு ஒரு காரணம்,அடுத்து முதுகுவலி திரும்பவும் ஸ்டார்ட் மீசிக்....இப்போ இன்னிக்கு முதல்....
திஸ்கி 2: பிரகாஷ்ராஜ் மட்டும் தான் எடுக்கனுமா "அபியும் அபிஅப்பாவும்"ன்னு படம் நாங்க போட மாட்டோமா "அபிஅப்பாவும் அபுதாபியும்"ன்னு:-))
சேட்ஜி, பதிவு நல்லா இரிக்கி. நிங்கள் நல்லா நட்ச்சு இருப்பிங்கோ.
ReplyDelete//ஆக ஒல்லியிலே(ஆக மொத்தத்திலே இல்லை) //
ReplyDeleteஇதுதான அ.அ டிரேட் மார்க்கு...!!!
:-)
வாங்க இளா! நாளை அடுத்த பதிவிலே சேட் எப்படி நடிச்சார்ன்னு இருக்கும் பாருங்க:-))
ReplyDeleteவாங்க ஆயில்யா! நன்றி!!!
ReplyDelete// ஜி, நான் தமிழ் எழுதும் போது தான் தப்பா எழுதுவேன், பேசும் போது அட்சர சுத்தமா பேசுவேனே,//
ReplyDeleteஹா..ஹா.. இது டாப்பு..:))
உண்மைய ஒத்துக எம்புட்டு தைரியம் வேணும்... அபி அப்பா ...நீங்க இம்புட்டு நல்லவரா?..
கீதா அக்கா பிஸிபோல இருக்கு அந்த குறையை நான் தீர்கறேன்.
ReplyDelete//அபுதாமி தமிழ் சங்கம் இருக்கின்றதே//
அபுதாபி தானே? அப்புறம்... அய்யோ எனக்கு என்னப்பா வம்பு. என்கண்ணாடியும் உடஞ்சுபோகனுமா?
நல்லா இருந்ததுங்க. அந்த திட்ட வேண்டிய ஆசாமி பேர் என்ன சொன்னீங்க?
:-)
திவ
சேட், நிம்பிள் சொல்றான், நம்பிள் கேக்றான்... படா தமாஷ் பண்றான் நிம்பிள்..
ReplyDeleteசேட்ஜிக்கு வெயிட்டிங்..;))))
ReplyDeleteஓ ஸ்டேஜ் ஆக்ட் எல்லாம் குடுத்துக்கிறீங்களா!!!
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
தமிழ்மணத்தில் உங்கள் பதிவை க்ளிக்கினால் (வவ்வால் என்னும் பைத்தியம்!!!) ப்ளாகர் இப்படி திட்டுது:
ReplyDeletePage Not Found
The requested URL was not found on this server. Please visit the Blogger homepage or the Blogger Knowledge Base for further assistance.
அது என்னான்னு கொஞ்சம் பாருங்க.