பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

July 2, 2008

பறக்க தெரியும் என்பதற்காக சூரியனில் பாயக்கூடாது!!! பாகம் # 2

இதன் முந்தைய பாகத்தை இங்கே போய் பாருங்கப்பூ!!

////த‌மிழ்நாட்டில் த‌மிழில் தான் திரைப்ப‌ட‌ங்க‌ளுக்கு பெய‌ர் வைக்க‌ வேண்டும் என்று திரை குடும்ப‌த்தின் மூத்த‌ பிள்ளையாகிய‌ நீங்க‌ள் சொன்னால் உங்க‌ள் சினிமாக்கார‌ர்க‌ள் கேட்க‌ மாட்டார்களா ? அத‌ற்காக‌ த‌மிழில் பெய‌ர் வைத்தால் வ‌ரிவில‌க்கு என்று அர‌சாங்க‌த்திற்கு வ‌ரும் வ‌ருமான‌த்தை விட்டுக் கொடுக்க‌த்தான் வேண்டுமா? //

ஒரு சின்ன விளக்கம். 100 பேர் வேலை செய்யும் ஒரு நிறுவனத்தின் முதலாளி ஒரு அவசர வேலை காரணமாக எல்லா பணியாளர்களையும் அழைத்து " தயவு செய்து இன்னும் 1 வாரத்துக்கு தினமும் 2 மணி நேரம் அதிகமாக உழைத்து எனக்கு உற்பத்தியை முடித்து கொடுங்கள், நான் உங்கள் குடும்பத்தின் மூத்த பிள்ளை மாதிரி இல்லியா?" என கேட்பதாக வைத்து கொள்வோம். யாருக்கு ஆர்வம் இருக்கும்? அப்படியே சிலபேர் அவர் பேச்சை கேட்டால் கூட பகுதிக்கும் அதிகமானவர்கள் ஒரு வித சலிப்போடுத்தான் வேலை செய்வர். சிலர் அவர் பேச்சை கேட்க கூடாமல் போகவும் வாய்ப்பு உண்டு. ஒருவேளை இப்படி வைத்து கொள்ளுங்கள், அதாவது அந்த முதலாளி தன் அதிகாரத்தை பயன்படுத்தி தினப்படி வேலை நேரத்தை 2 மணி நேரம் கூட்டினார் என்றால் அந்த தொழிலாளிக்கு அவர் மீது வெறுப்புதான் மிஞ்சும். அது உற்பத்தியை பாதிக்கும். ஆனால் அதே முதலாளி " அதிகம் வேலை பார்க்கும் ஒவ்வொறு மணிக்கும் இரட்டை சம்பளம், விருப்பம் இருந்தால் செய்யவும்" என சொன்னால் போட்டி போட்டுகொண்டு வேலை செய்வர். இந்த இரட்டை சம்பள விஷயத்தால் முதலாளிக்கு லாபத்தில் கொஞ்சம் குறையுமே தவிர அவரின் நோக்கம் கண்டிப்பாக நிறைவேறும் இல்லியா? அதுதான் இந்த விஷயத்திலும் நடந்துள்ளது நண்பரே. அரசாங்கம் ஒரு சின்ன விஷயம் இல்லை. திரைப்பட கேளிக்கை வரியில் கஞ்சி காய்ச்சி குடித்து பசியாறி துவையலை தொட்டு நக்கி கொண்டிருக்க! அது ஒரு மலை!

மேலும் திரைப்படதுறை என்பது ஒரு கணிசமான சதவீத வேலை வாய்ப்பை தமிழக மக்களுக்கு தந்து கொண்டிருக்கும் ஒரு மாபெரும் சக்தி. அது நசிந்து போய் விட்டால் பல்லாயிரக்கணக்கானோர் நடுத்தெரு நாராயணன் ஆகிவிடுவர். அது அரசுக்கு தான் நெருக்கடியை கொடுக்கும். அதை எல்லாம் தவிர்க்கவே இந்த மாதிரி சலுகைகள் தரப்படுகின்றன!

////2 ரூபாய்கு ஒரு கிலோ அரிசி எனும் ஒரு ம‌க‌த்தான‌ திட்ட‌த்தின் மூல‌ம் ஒரு புற‌ம் சோம்பேறிக‌ளையும், ம‌றுபுற‌ம் அரிசி க‌ட‌த்த‌ல்கார‌ர்க‌ளையும் உருவாக்கிவிட்டீர்க‌ள்.//

துபாயில் கடந்த 2 மாதங்களாக விஷம் போல விலைவாசிகள் ஏறி வந்துவிட்டன. 2 மாதம் முன்னதாக ஒரு கிலோ அரிசி 27 ரூபாயாக இருந்தது. இன்றைக்கு 102 ரூபாய். நம்புங்கள் உண்மை. ஆனால் உலகத்திலேயே 2 ரூபாய்க்கு அரிசி தமிழகத்தில் மட்டுமே கிடைக்கின்றது. துபாய் காசு 20 காசுக்கு 1 கிலோ அரிசி. இது சாதனையா இல்லை வேதனையா? முன்னே போனா கடிக்கிறீங்க பின்னே போனா உதைக்கிறீங்கப்பா. இப்படி ஒரு கேள்வி கேட்டு உங்கள் பதிவை நகைச்சுவை என வகைப்படுத்தி இருந்தால் பொருத்தமானதாக இருந்திருக்கும்.

//இல‌ங்கை நாட்டின் க‌ட‌ற்ப‌டை ந‌ம் மீன‌வ‌ர்க‌ளை சுட்டுக் கொல்லும் போது, உட‌னே பிர‌த‌ம‌ருக்கு ஒரு க‌டித‌ம் ம‌ட்டும் எழுதுவீர்க‌ள்.//

கலைஞருக்கும் கடலோர காவல் படைக்கும் என்ன சம்மந்தம். கலைஞருக்கும் கடலுக்கும் உள்ள ஒரே தொடர்பு அவரை கடலில் தூக்கி போட்டால் கட்டுமரமாக மிதப்பார். நீங்கள் அதில் ஏறி பயணம் செய்யலாம் அவ்வளவே!! தமிழ் நாட்டின் புலிமலைப்பட்டியில் ஊர்காவல் படையில் வேலை பார்த்து கொண்டு ராவல்பிண்டி ரகீம்கானை பிடித்து வந்து லாக்கப்புல வச்சி எட்டு பக்க "தமில்" வசனத்தை பேசி பேசி அவன் டவுசரை உருவும் விசயகாந்து இல்லைப்பா கலைஞர்!!

////2004ல் மத்திய அமைச்சரவையில் திமுகா விற்கு கேட்ட‌ இலாக்காக்க‌ளை ஒதுக்க‌வில்லை என‌ போராடி பெற்ற‌ நீங்க‌ள், அது போன்ற‌ ஒரு போராட்ட‌த்தை ம‌க்க‌ளுக்காக‌ ஒரு போதும் செய்த‌தில்லையே ஏன்? //

அடப்பாவமே அதுவும் மக்களுக்காகத்தான்! தமிழகத்தின் 150 ஆண்டுகால கனவு சேதுராம் திட்டம் நிறைவேற வேண்டுமெனில் அந்த துறை நமக்கு வேண்டும். அதற்காக போராட வேண்டும் தானே. அது தமிழக நலனுக்காகத்தானே. நோக்கியா முதல் பாக்கியா வரை வரிசை கட்டி நிக்கனும் திருபெரும்புதூர் சாலையிலே, நாங்குநேரி முதல் நல்லத்துகுடி வரை ஐடி நிறுவனமா இருக்கனும். தமிழ் நாட்டிலே எந்த சின்ன பையனை கேட்டாலும் 35000, 40000 என காலர் தூக்கிவிட்டுக்கனும். டி.என்.பி.எஸ்.சி எழுதிகிட்டு பிள்ளையார் கோவில்ல தேங்காய் உடைத்து வேண்டுதால் நடத்திகிட்டு இருந்த நம்ம பசங்க இன்றைக்கு இத்தன தருவியா வருவேன், இல்லாட்டி போய்கிட்டே இருப்பேன் என்று எல்லாம் இருக்கனும். இதற்காகத்தானே அய்யா ஐடி துறையை கேட்டு வாங்கினோம். இதல்லாம் மக்களுக்கு தானே!

(ஒரு இயக்கம் என்றால் நெருப்பா இருக்கனும். 1989ல் கலைமாமணி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. கலைஞர் அப்போது முதல்வர். விஜயலெட்சுமி நவநீதகிருஷ்ணன், நடிகை ராதா, மதுரை பொன்னுதாய் இவர்கள் எல்லாம் விருது பெறுகின்றனர். பின்னர் பேசிய கலைஞர் " இந்த விழா முடியும் போது நான் முதல்வரா இல்லையா என எனக்கு தெரியாது. இப்போது வந்துள்ள செய்தி பிரதமர் சந்திரசேகர் அவர்கள் சொல்லியிருப்பதாக வந்த செய்தி 'திமுக ஆட்சியை கலைக்கும் முன் 100 முறை யோசிப்போம்' . பிரதமர் சந்திரசேகர் கொஞ்சம் பொருமையாக யோசிப்பவராக இருந்தாலும் உள்துறை இணை அமைச்சராக இருக்கும் சுபோத்கான் சகாய் அவர்கள் நான் பேசி முடிக்கும் முன்னமே 100 முறை யோசிக்கும் ஆற்றல் பெற்றவர் என எனக்கு தெரியும்"... ஆட்சி போகப்போவது தெரிந்தும் என்ன ஒரு நக்கல் அவருக்கு. ஆக உள்துறை இணை அமைச்சர் என்கிற அந்த அதிகாரமுள்ள அதே பதவியை அதே காங்கிரசிடமிருந்து நாங்கள் கேட்டு வாங்கியதில் என்ன தவறு.)

மத்தபடி நீங்க சொல்வதை நான் ஒத்துகொள்கிறேன். கலைஞர் சிறைக்கு போனதெல்லாம் செயலலிதா வீட்டு கோழியை திருடியமைக்காகத்தான்.

////பூரண மதுவிலக்கு வேண்டும் என்று கேட்டால் கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாமல் போய்விடும் என்பதால் பூரண மதுவிலக்கு ஏற்படுத்த முடியாது என்றீர்கள். ஆனால் இப்போது மட்டும் கள்ள சாராயம் முற்றிலுமாக ஒழிந்துவிட்டதா என்ன? அவ்வப்போது கள்ளச் சாராய சாவுகளும் நடந்துகொண்டுதானே இருக்கின்றன ? //

பெரியம்மையை முற்றிலுமாக ஒழிக்கலாம். போலியோவை 100 சதவீதம் ஒழிக்கலாம். ஆனால் கள்ள சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியாது. ஆனால் கட்டுப்படுத்தலாம். அவ்வளவு தான் செய்ய முடியும். காரணம் பொதுமக்கள் ஒத்துழைப்பு வேண்டும் எல்லாவற்றுக்கும். பெரியம்மை ஒழிவதால் அல்லது போலியோ ஒழிவதால் யாருக்கும் இழப்பு இல்லை. ஆனால் கள்ள சாராயம் ஒழிவதால் அதை வைத்து பணம் கொழிக்கும் சில கும்பலுக்கும் இழப்பு. தவிர குறைந்த விலையில் போதைக்கு அடிமையானவர்களுக்கு இழப்பு. அதனால் அரசு கண்ணில் இருந்து தப்பி தொழில் நடத்துகின்றனர். ஆனால் நிலமை கட்டுபாட்டில் உள்ளது.

//த‌மிழை செம்மொழி என்று சொன்னால் ம‌ட்டும் எல்லாத் த‌மிழ‌ன் வீட்டிலும் அடுப்பு எரிந்துவிடுமா? //

இதற்கு என்ன பதில் சொல்வது, விதண்டாவதமாக இருக்கின்றதே!

//ஒட்டுமொத்த தமிழர்களையும் உடன்பிறப்பே என்று அழைக்கும் நீங்கள் மொத்த தமிழகத்தையும் உங்கள் குடும்பமாக நினைத்தீர்கள் என்று அக மகிழ்ந்த எங்களுக்கு,//

திமுகவில் இருக்கும் 2 கோடி உருப்பினர்களின் வீட்டு திருமணத்துக்கும், துக்க நிகழ்வுகளுக்கும் கலைஞர் போய் வந்தது போல தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் மட்டுமல்ல அகில உலகத்திலும் ஏதாவது ஒரு தலைவனை காட்டமுடியுமா தங்களால்??? அவர் நடத்தி வைத்த திருமணங்கள் எத்தனை? போய் வந்த துக்க நிகழ்ச்சிகள் எத்தனை? இண்டர்காம் தலைவரா அவர். கொஞ்சமாவது மனசாட்சியோடு கேள்வி கேட்க வேண்டாமா? தமிழகமே அவருக்கு உடன்பிறப்பு தான்! சந்தேகமே இல்லை!

திரும்பவும் சொல்லி கொள்கிறேன்! இனி இலவச தொலைகாட்சி பற்றி ரொம்ப சிந்திக்க வேண்டாம். அழகா ஒரு வீடு கட்டினா வீட்டுக்கு முன்பாக வாசனையான மல்லிகையும் கவர்ச்சியான ரோஜாவையும் வைப்பது போல த்தான் இலவச தொலைகாட்சி பெட்டி! ஆனால் அதே வீட்டின் கொல்லையில் வைக்கும் புளிய விதை போன்றவை தான் சேதுராம் திட்டம் போன்றவை. அவைகள் நம் சந்ததிக்கு பலன் தரும். மல்லிகையும் ரோஜாவும் நமக்கு சந்தோஷம் கொடுக்கும். அவ்வளவே! அதிகம் குழப்பிக்காதீங்க யாரும்!!!

22 comments:

  1. summa nachi nachi-nnu pathil ayya...

    ReplyDelete
  2. அடிச்சி தூள்கிளப்பறீங்க அபி அப்பா,

    கேள்வி கேட்டவருக்கு -

    //த‌மிழை செம்மொழி என்று சொன்னால் ம‌ட்டும் எல்லாத் த‌மிழ‌ன் வீட்டிலும் அடுப்பு எரிந்துவிடுமா?//

    அப்படி அறிவிக்காவிட்டால் உடனே எரிந்து விடுமா? அடுப்பு எரிவதற்கும் செம்மொழி அறிவிப்புக்கும் என்னங்காணும் சம்பந்தம்? அது தான் அடுப்பு எரிவதற்கு கேஸும் அதற்கு மேலே வைக்க அரிசியும் கொடுக்கப்படுகிறதே?

    ReplyDelete
  3. சூப்பர் அபி அப்பா....

    ReplyDelete
  4. // திரைப்பட கேளிக்கை வரியில் கஞ்சி காய்ச்சி குடித்து பசியாறி துவையலை தொட்டு நக்கி கொண்டிருக்க!//



    ஆஹா ஆஹா....

    ReplyDelete
  5. //கலைஞருக்கும் கடலுக்கும் உள்ள ஒரே தொடர்பு அவரை கடலில் தூக்கி போட்டால் கட்டுமரமாக மிதப்பார். நீங்கள் அதில் ஏறி பயணம் செய்யலாம் அவ்வளவே!! //

    கலக்கல். அக்மார்க் மாயூரம் குசும்பு!!!

    இரண்டு பாகங்களையும் விரும்பி வாசித்தேன். அவ்வப்போதாவது நீங்கள் அரசியல் பதிவுகள் போடலாம், அருமையாக இருக்கிறது!!!

    ReplyDelete
  6. என்னக்கு விவரம் தெரிஞ்சி இன்னைக்கு தான் கலைஞரை பாராட்டுர ஒருத்தரை பார்க்கிறேன். Happy to Hear. Happy a lot yaar...

    ReplyDelete
  7. ஹை, இவ்வளவு சீக்கிரம் இரண்டாம் பாகத்தை போடுவீங்கன்னு எதிர்பார்க்கல.
    //திரைப்படதுறை என்பது ஒரு கணிசமான சதவீத வேலை வாய்ப்பை தமிழக மக்களுக்கு தந்து கொண்டிருக்கும் ஒரு மாபெரும் சக்தி. அது நசிந்து போய் விட்டால் பல்லாயிரக்கணக்கானோர் நடுத்தெரு நாராயணன் ஆகிவிடுவர். அது அரசுக்கு தான் நெருக்கடியை கொடுக்கும். அதை எல்லாம் தவிர்க்கவே இந்த மாதிரி சலுகைகள் தரப்படுகின்றன//
    இத நான் நெறயப் பேர் கிட்ட சொல்லிருக்கேன், ஆனாலும் ஏத்துக்க மாட்டேங்கறாங்க.
    //தமிழ் நாட்டின் புலிமலைப்பட்டியில் ஊர்காவல் படையில் வேலை பார்த்து கொண்டு ராவல்பிண்டி ரகீம்கானை பிடித்து வந்து லாக்கப்புல வச்சி எட்டு பக்க "தமில்" வசனத்தை பேசி பேசி அவன் டவுசரை உருவும் விசயகாந்து//
    சூப்பர்.
    //திமுகவில் இருக்கும் 2 கோடி உருப்பினர்களின் வீட்டு திருமணத்துக்கும், துக்க நிகழ்வுகளுக்கும் கலைஞர் போய் வந்தது போல தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் மட்டுமல்ல அகில உலகத்திலும் ஏதாவது ஒரு தலைவனை காட்டமுடியுமா//
    சரியா சொன்னீங்க.
    ஒட்டுமொத்தத்தில் எல்லா பதில்களும் ரொம்ப தெளிவா அழகா சொல்லிருக்கீங்க.

    ReplyDelete
  8. அடேங்கப்பா. அபிஅப்பாவுக்குள்ள சூரியன் ஜொலிக்குதே.

    ReplyDelete
  9. இலாக்கா கேள்விக்கான பதில் நச்சுன்னு இருக்கு;)

    \\ஆனால் நிலமை கட்டுபாட்டில் உள்ளது.\\

    நீங்க தான் உண்மையான உடன்பிறப்பு ;))

    ReplyDelete
  10. கலக்கறிங்க அபி அப்பா.. :))
    தயவு செய்து அரசியலுகென்று ஒரு தனி வலைப்பூ ஆர்ம்பியுங்கள். உங்களிடன் கேட்டுத் தெரிந்துக் கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கு..

    .....
    தமிழில் பெயர் வைதால் வரி விலக்கு என்பது.... சாணியை தட்டி காய வைத்து அப்படியே விற்றால் அதற்கு வரி போடுவேன் . அதற்கு பதில் அதை ஒரு அலுமினிய தாளில் சுற்றி அழகான படங்கள் வண்ண வண்ண எழுத்துக்கள் உள்ள ஒரு அட்டை பெட்டியில் வைத்து விற்றார் வரி கிடையாது என்று சொல்வது போலத் தான்... எப்படி விற்றாலும் அதே வரட்டி தானே..

    சினிமாவை பிழைக்க வைக்க வேண்டுமானால் நிபந்தனை இல்லாமலே வரியை நீக்கி இருக்கலாம். தமிழில் பெயர் வைத்துவிட்டு படத்தில் இவர்கள் செய்யும் அழிச்சாட்டியங்கள் தமிழுக்கு இழுக்கு தான். எந்த வகையிலும் பெருமை இல்லை. :)

    ReplyDelete
  11. //துபாயில் கடந்த 2 மாதங்களாக விஷம் போல விலைவாசிகள் ஏறி வந்துவிட்டன. 2 மாதம் முன்னதாக ஒரு கிலோ அரிசி 27 ரூபாயாக இருந்தது. இன்றைக்கு 102 ரூபாய். நம்புங்கள் உண்மை. ஆனால் உலகத்திலேயே 2 ரூபாய்க்கு அரிசி தமிழகத்தில் மட்டுமே கிடைக்கின்றது.//
    அண்ணா மன்னிக்கனும்.. நீங்கள் துபாயில் வாங்கும் அரிசியும் தமிழகத்தில் 2 ரூபாய்க்கு கிடைக்கும் அரிசியும் ஒரே தரமா? நீங்கள் அங்கு வாங்கும் அரிசி இங்கும் விலை அதிகம் தான். அது 2 ரூபாய்க்கு கிடைக்காது. சில மாதங்கள் முன்பு பழய அரிசி தீரும் வரை விட்டு விட்டு எங்கள் நிலத்தில் விலைந்த நெல்லை அரைத்து உடனே பயன்படுத்த முடியாததால் விலை குடுத்து வாங்க வேண்டியதாகிவிட்டது. கடையில் கிலோ 25 ரூபாய்க்கு தான் வாங்க முடிந்தது. ( புது அரிசி சோறு குழைந்து கஞ்சி ஆகிவிடும் :) ).. ஆகவே 2 ரூபாய்க்கு கிடைப்பது வேறு.. உங்க துபாய் அரிசி வேறு.. குழப்பிக் கொள்ளக் கூடாது. :)

    ReplyDelete
  12. பொறுமையா,அழகா சொல்லி இருக்கீங்க.அரிசி மேட்டருக்கு பதில் அசத்தலாக இருக்கிறது.பத்து பேரு நல்லா இருக்கிறது தெரியல,ஒருத்தன் ஆட்டைய போடுறது தான் தெரியுது.ஆனால் அரிசி கடத்தல் காரர்களும் கதிகலங்கிப் போய் தங்கள் தொழிலை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பது நான் நேரில் கண்ட உண்மை.

    ReplyDelete
  13. என்ன ஆச்சு திடீர்னு?? வெயில் ரொம்ப அதிகமா துபாயிலே???? இல்லை, நட்டு பிறந்த நாளுக்கு வர முடியலைங்கற வருத்தமா?? :((((((

    ReplyDelete
  14. ஹூம்...நடத்துங்க...

    ReplyDelete
  15. neegan oru unmaiyana thondar!! Aanal, thamizhnattula endha katchilayavadhu, thalaivorada puthra sigamanigal thavira vera yaaravadhu thalaivan aaga chance irukkara maadhiri irukka?En illai? ungalai maadhiri thondargal yosikka vendiyadhu idhu dhaan.
    Arignar Annavoda kudumbathula yaarume padhavikku varalai. But ippovellam thaliavorda kudumbathelurndhu dhaan padhavikku varanga. adhu poga, meedhi perukku dhaan padhavi prouppu ellam. Unga katchi mattum illai. Ella katchileyum adhu dhaan nilamani. Vishayam ippadi irukka, matha katchaiyai indha vishayuthula kurai sonna neenga othuppengannu enakku theriyum. Aanal adhe kuraiya unga thalaivar mele sonnal?? Arur doss kooda vasanam ezhudhinaaru? Aanala avarala Moon TV aarambikka mudinjudha. Adhu eppadi unga thalaivar mattum ivvalavu sambadhichar. Avar mela thaniya sollai. Avarai oozhal-la thooki sappudara arasiyal vaadhigal ippovum undu matha katchiyile. Aanal, oru thondana, unga thalavaro avar kudumbamo oozhal seyyalai, makkal thondu dhaan seyyaranganu ungalale solla mudiyuma? En kitta solla vendaam. neenga yosichu parunga.

    Adhanala, naan solla varadhu ennanna, he may not be worse than other politicians but he is no better anyway. Avar CM-a irukkattum but avarukku ivvalavu unmaiyana thondargal thevaiyanu dhaan thonudhu. Oru Sarasari politician appadinnu dhaan avara sollanum. Yes, ippo irukkara mathavanga ellam sarasarikkum keezhe but ivar sarasari enbadhai vaithu kondu, ivar gandhi kamaraj anna varisaiyila varuvarnu solradhu romba vedhanaiya irukku. (Neenga indha blogla appadi appattama sollalainu enakku theriyum- unga ezhuthlerundhu, ungal karuthaga naan ninaippadhu adhu.)

    ReplyDelete
  16. SanJai said...
    கலக்கறிங்க அபி அப்பா.. :))
    தயவு செய்து அரசியலுகென்று ஒரு தனி வலைப்பூ ஆர்ம்பியுங்கள். உங்களிடன் கேட்டுத் தெரிந்துக் கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கு..
    //

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டோய்

    ReplyDelete
  17. அன்புள்ள அபி அப்பா,
    வணக்கம், நேற்றைய செய்திதாளில் கூட நாகப்பட்டினம் அருகே உள்ள ஆற்காடுபுரத்தை சேர்ந்த 2 மீனவர்கள் இலங்கை அரசால் சுட்டு கொல்லப்பட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து நான் எழுதிய பதிவை பார்த்துவிட்டு பதில் சொல்லுங்கள்
    http://maraneri.blogspot.com/2008/07/blog-post_1624.html

    பறக்கத் தெரியும் என்பதற்காக இங்கே நாங்கள் சூரியனில் பாயவில்லை. சாவது சகத்தமிழன் என்பதால் எங்களுக்குள் ஏற்படும் குமுறல்கள் இவை.
    மத்திய அரசின் வெளியுறவு கொள்கை எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும், ஆனால் சாகும் தமிழர்களை காப்பாற்ற முடியாவிட்டால் என்ன பிரயோசனம்.
    அவர்களின் கையாலாகத வெளியுறவுக்கொள்கைக்கு விலையாக நம் தமிழர்களின் உயிகளைத்தான் தரவேண்டுமா?

    இது கருணாநிதி அவர்களை பார்த்து கேட்க்கும் கேள்வி என்று எண்ணிக்கொள்ள வேண்டாம். இந்த நேரத்தில் தமிழகத்தை ஆளும் முதல்வருக்கான கேள்விதான் இது. அது செயலலிதாவக இருந்தாலும்,வேறு யாராக இருந்தாலும் அவருக்கும் இந்த கேள்வி பொருந்தும்.
    எனவே என்னை திமுக என்ற ஒரு கட்சிக்கு எதிரானவன் என்ற கோணத்தில் பதில் சொல்ல வேண்டாம்.

    நியாயமான ஒரு தமிழனின் குரல் என்றுதான் கருத வேண்டும்.

    ReplyDelete
  18. முன்னாள்''தமிழகத்தின் தலைவன்''

    இப்போது "புதுகைச் சாரல் "
    நம்பளும் .......வந்துட்டோம்ல

    ReplyDelete
  19. சாதாரணமாக நமது நாட்டில் காணப்படும் ஒரு மன நிலை தலைவர்கள் விம்ர்சனங்களுக்கு அப்பாற்ப்பட்டவர்கள் என்ற நிலை, இது சாதாரணமாக நமது குடும்ப அமைப்பிலிருந்தே காணப்படுகிறதோ என்று தோன்றுகிறது, முதலில் நம் சிறு வயதில் நம்மால் நமது தந்தையை எந்த காரணத்திற்காகவும் விமர்சிக்க இயலாது , அதுவே பிறகு நாம் குடும்ப பொறுப்பிற்கு வந்தபிறகு நமது தந்தை உட்பட யாரும் நம்மை விமர்சிக்க அனுமதிப்பதில்லை.. இதே மன நிலைதான் நமது கட்சி தலைவர்களிடமும் , தொண்டர்களிடமும் காணப்படுகிறது.இந்த வகையான ஒரு வெளிப்பாடே அபி அப்பாவிடமிருந்தும், மற்ற அபிமானிகளிடமிருந்தும் வந்த பதில்களில் காணப்படுகிறது..இவ்வகையில் அல்லாத நடுவு நிலையில் உள்ள பதில்கள் மிக குறைவே...

    என் கருத்தை ஒத்த blog - சற்று முன்பு படித்து http://kumarankudil.blogspot.com/2008/07/blog-post_5583.html ‍ ல்

    உலக புகழ் பெற்ற அறிஞர் டேல் கார்னெகி தன்னுடைய “How to Stop Worrying and Start Living” புத்தகத்தில் கவலையைக் களைய உற்ற வழியாக இறை வழிப்பாடை கூறிப்பிட்டுள்ளார். யாருக்கும் இடையுறு தராத இறை வழிப்பாடானாலும் அதை விமர்சிக்கும் பகுத்தறிவாளர்கள் கண்களுக்கு, தங்கள் தலைவர்களின் சுயநல, லஞ்ச, அதிகார துஷ்பிரயோக செயல்கள் தெரிவதில்லை. ((((உண்மையிலேயே இவர்களுக்கு பகுத்தறிவு இருந்தால், வேண்டாம், அறிவு இருந்தால், தங்கள் தலைவர் நல்லது செய்யும்போது எப்படி புகழ்கிறார்களோ, அதேப்போல் தவறு செய்யும் போது அதையும் விமர்சிக்க வேண்டும். சும்மா சப்பைக்கட்டு கட்டினால், அப்புறம் இவர்களுக்கும் போலி சாமியார்களுக்கும் என்ன வித்தியாசம்?)))


    பின்ணூட்டம் அளிப்பவர்கள் முக்கியமாக் அபிமானிகள் இதையும் நினைவில் கொண்டு பதில் அளிப்பது நன்றாயிருக்குமென நான் கருதுகிறேன்..

    ReplyDelete
  20. இந்த பதிவு கோட்டைக்கு அனுப்ப பட்டுள்ளது.
    அனேகமாக அழைப்பு வரலாம்.
    திரு.லக்கி இப்போதெல்லாம் கலைஞரை புகழ்ந்து பதிவு எழுதிவதில்லை என்பதால் உங்களை வலையுலக கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்க பரிந்துரைக்க படுகிறது

    வால்பையன்

    ReplyDelete
  21. பதில் சொன்ன அபி அப்பாவுக்கு அழைப்புன்னா, எனக்கு ???
    ஆட்டோ வருமா?

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))