பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

July 18, 2008

பிரியாணியும் நானும்!!!

எனக்கும் பிரியாணிக்கும் அத்தனை ஒன்றும் தொப்புள் கொடி உறவெல்லாம் இல்லை. ஆனாலும் அது என் கூட நிழல் போல தொடர்ந்து வருவது ஒரு வேடிக்கை தான். எனக்கு அது முதலில் பரிட்சயமான போது எனக்கு வயது பத்து இருக்கலாம். அப்போதெல்லாம் அது எனக்கு ஒரு எட்டாக்கனி வஸ்து தான். அவ்வப்போது அப்பா, சித்தப்பா எல்லாம் பஸ்ட்டாண்டுக்கு நேர் எதிரில் இருக்கும் இம்பாலா ஹோட்டலின் பிரியாணி பற்றி பேசிகொண்டிருக்கும் போதே எனக்கு நாக்கில் எச்சில் ஊற தொடங்கியது. அப்போதெல்லாம் பிரியாணி கால் பிளேட். அரை பிளேட்,புல் பிளேட் என்கிற வகையிலே தான் விற்பனை ஆகும்.(குவாட்டர் கோயிந்தனுக்கு கால் பிளேட்டும், ஆஃப் ஆறுமுகத்துக்கு அரை பிளேட் பிரியாணியும் என்பது போன்ற கணக்கு போல இருக்கு) ஒரு தீபாவளி போனஸ் போது அப்பாவும் மனசு வந்து ஒரு அரை பிளேட் வாங்கி வர ராதாகூட கோலி விளையாடிவிட்டு வந்த எனக்கு மிஞ்சியது என்னவோ அந்த தயிர் வெங்காயம் மட்டுமே. நிற்க!

இப்படியாக பிரியாணியிம் மீதான என் காதல் அதிகமாகி கொண்டே போக ஒரு ரம்ஜானுக்கு கண்டக்டர் காதர் பாய் வீட்டில் இருந்து பிரியாணி வர முதல் ஆளாய் நான் அந்த பிரியாணியில் சிக்ஸரும் ஃபோருமாக அடிக்க அதன் பிறகு நான்கு நாட்களுக்கு அந்த சுவை நாக்கிலேயே இருந்தது. அதன் பிறகு தீபாவளியை எதிர்பார்ப்பதை விட ரம்ஜானை எதிர்பார்க்க தொடங்கி விட்டேன். வயது ஆக ஆக ஒரு ஏழாம் வகுப்பு படிக்கும் போது தான் கூடப்படிச்ச கிளியனூர் முபாரக் அக்காவுக்கு நிக்கா வந்துச்சு. பக்காவா பிரியாணியை அடித்து ஏற்றினேன். அப்பாவுக்கு ஏகப்பட்ட இஸ்லாமிய நண்பர்கள். எல்லோருமே குடும்ப நண்பர்கள். நான் +1, +2 படிக்கும் கால கட்டத்திலேயே எனக்கு வீட்டில் காதுகுத்தி, வலைகாப்பு போன்ற இரண்டாம் நிலை நிகழ்ச்சிகளுக்கு "விசாரிக்கும்" பதவி தரப்பட்டது. ஆனாலும் கல்யாணம், பெரிய எழவுகள் "விசாரிப்பு" பதவிகள் அப்பவும் சித்தப்பா வசமே இருந்தன. அதனால் அப்பாவின் இஸ்லாமிய நண்பர்கள் திருமணங்களுக்கு சித்தப்பாவே போய் பிரியாணி வெட்டி கொண்டிருந்தார். அதன் காரணமாகவே எனக்கு பிரியாணியின் மீதான காதல் ரெக்கை கட்டி பறக்க தொடங்கி விட்டிருந்தது.

அதன் பிறகு படித்துவிட்டு தண்டச்சோறாக இருந்த கால கட்டத்தில் தான் எனக்கு சித்தப்பாவுன் பதவி என் கைக்கு கிடைத்தது. செத்த வீட்டுக்கு போனால் காசிதுண்டை லாவகமாக பல்லில் கடித்து கொள்வது முதல் கல்யாண வீட்டுக்கு போனால் பன்னீருக்கு எப்படி தலை குனியவேண்டும், பாய் வீட்டுக்கு கல்யாணம் விசாரிக்க போனால் வெள்ளை கைலி உடுத்தி, மார்ட்டின் வெள்ளை முழுக்கை சட்டை போட்டு எப்படி போக வேண்டும் என்கிற பாலபாடம் எல்லாம் நடத்தி சித்தப்பா எனக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க சித்தப்பா சொல்லித்தராத சில விஷயங்களையும் நானாகவே கற்று கொண்டு அசத்தினேன். அதாங்க அப்பா கவரில் போட்டு கொடுக்கும் 100 ரூபாய் நோட்டில் இருந்து 50 ரூபாயை கழட்டி விட வேண்டும் என்கிறது மாதிரியான விஷயங்கள். பிற்காலத்தில் சின்ன அக்காவின் கல்யாண மொய் டாப்பில் அதன் பிரதிபலிப்பு இருந்தது தனிக்கதை. சரி விஷயத்துக்கு வருகிறேன்.

அப்படியாக தண்டச்சோறு கால கட்டத்தில் பிரியாணியை பற்றிய ஒரு ஆய்வு நடத்தினேன். முதலில் "இம்பாலா" ஹோட்டலுக்கு போய் ஒரு கால் பிளேட் வாங்கி சுவைத்ததில் அது பாய் வீட்டு கல்யாண பிரியாணியின் கால் தூசுக்கு சமானம் என்கிற முடிவுக்கு வந்து பின்னர் விசாரிக்க விசாரிக்க அப்போதுதான் தெரிந்தது மாயவரத்தில் இம்பாலா விட்டால் வேற எங்கயுமே பிரியாணி கிடையாது என்று. அப்போது இம்பாலாவை தவிற வேறு எந்த அசைவ ஹோட்டலும் பிரசித்தமாக இல்லை. ஆனால் மயிலாடுதுறையில் இருந்து திருக்களாச்சேரி வழியாக பொறையாறு போகும் வழியில் "ஆலமரத்தடி" ஸ்டாப்பிங் பிரியாணி பிரசித்தம் என கேள்விப்பட்டு (அதுவும் வெள்ளிகிழமை தொழுகைக்கு பின்பு அந்த ஆலமரத்தடியில் தான் கிடைக்கும். நல்ல கூட்டம் இருக்கும். ஒரு ஆளுக்கு ஒரு பொட்டலம் மட்டுமே என பியர்லெஸ் தியேட்டரின் விதிமுறைகளோடு நடத்தப்பட்ட அந்த பிரியாணி சும்மா சொல்ல கூடாது நல்லாவே இருந்தது.

பின்பு மயிலாடுதுறை - குடந்தை சாலையில் கோமல் ரோடு ஸ்டாபிங்ல இறங்கி அங்கயே ஒரு வாடகை சைக்கிள் எடுத்து கொண்டு கோமல் நோக்கி போகும் வழியில் தேரிழந்தூர் பஸ்ட்டாப்பில் ஒரு கீத்து கொட்டகை டீக்கடை. அதன் அடுப்பு பகுதியில் ஒரே கரி. அதன் மேல் திரிசூலம் போஸ்ட்டர் ஒட்டியிருக்கும். சிவாஜியும் ஸ்ரீபிரியாவும் தினமும் சூட்டில் கட்டிபிடித்து வெந்து கொண்டிருந்தனர். அந்த கடை பிரியாணியும் நல்லா இருந்துச்சு. ஆனாலும் அந்த கல்யாண வீட்டு பிரியாணிக்கு ஈடாக எதுவுமே இல்லை.

பின்பு கூத்தாநல்லூர் - பொதகுடியில் ஒரு கடை. இதே ஸ்டைல் கடை தான் அதுவும் நல்லா இருந்தது. இப்படியாக நான் ஆய்வு நடத்தியதில் இருந்து ஒன்று புலப்பட்டது. பாய் வீட்டு கல்யாண பிரியாணிக்கு சமமாக எதுவும் இல்லை. பாய் வீட்டு கல்யாணம் எப்படி என பார்ப்போம். மயிலாடுதுறையை சுற்றியும் நீடூர், தேரிழந்தூர், எலந்தங்குடி, வரகரை, சங்கரன் பந்தல், கிளியனூர் என 25க்கு மேற்ப்பட்ட இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஊர்கள் தான். யாருமே ஒரு மண்டபத்தில் வைத்து திருமணம் நடத்துவது இல்லை. பள்ளியில் திருமண ஒப்பந்தம். பின்னே அந்த சின்ன மண்ரோடு தெருவை அடைத்து அலங்கரிக்கப்பட்ட பந்தலில் போடப்பட்டிருக்கும் வாடகை நாற்காலியில் இளைப்பாறல். பின்பு ஏதாவது ஒரு வீட்டிலே சாப்பாடு. சும்மா சைவ சாப்பாடு மாதிரி நச நசன்னு கூட்டு, பொறியல் என்றெல்லாம் கிடையாது. ஒரு ஆளுக்கு 250 கிராம் எடையுள்ள ஆட்டுக்கறி துண்டு, பிரியாணி சாதம் வைத்த தட்டு சர சரன்னு பறந்து பறந்து பந்திக்கு வரும். ஒரு பாத்திரத்தில் கை கழுவ தண்ணியும் வரும். தொட்டுக்க வெங்காயம் தயிர் சில இடங்களில் மட்டுமே கிடைக்கும். ஆனால் தக்காளியை வைத்து தித்திப்பாக ஒரு பிசின் போன்று ஒன்று வரும். பின் கோதுமை கஞ்சி வரும்(அதை பாயசம் என்பார்கள்) அப்போது "மெடிக்கலா"என தட்டை சுமந்து வருபவன் கேட்டால் "இல்லை இல்லை சத்தியமா இல்லை" என்று சொல்லிடனும். ஆமாம் என சொல்லிவிட்டால் கோழிகறி பிரியாணியை தலையில் கட்டிவிடுவார்கள்.

ஆனா எல்லா கல்யாணத்திலும் பார்த்துவிட்டேன். அழகா வெள்ளை தொப்பி(கூத்தாநல்லூரில் மட்டும் எம்ஜியார் தொப்பி மாடலில் ஆனால் கருப்பாக ஒரு டிசைன் தொப்பி), வெள்ளை கைலி, முழுக்கை பட்டன் போடப்பட்ட மார்ட்டின் சட்டை போட்டு கொண்டு இருக்கும் எல்லா ஆண்களுமே சாப்பாடு ரெடியான பின்னே அந்த சின்ன நிலைப்படி வழியாக உள்ளே போனதும் கலவரத்துக்கு பின்பான அமைதியில் புரண்டு கிடக்கும் ஒற்றை காலணிகள் கிடக்குமே அது போல ஒரு 50 சட்டை பொத்தானாவது தரையில் கிடைக்கும் அந்த இடத்திலே.

இப்படியான என் ஆராய்ச்சி எல்லாம் முடிந்து நான் 90களில் அபுதாபி வந்த அன்றே நண்பர் பல்தியா என சொல்லப்படும் நகராட்சி தமிழ் ஊழியர்கள் நடத்திய மீளாது விழாவுக்கு கூட்டி செல்ல நல்ல பிரியாணி கிடைக்கும் வாங்க என்று கூட்டி சென்றார் நண்பர்) நான் கூட "அப்பாடா சட்டை பட்டன் பிய்த்துக்காம பிரியாணி சாப்பிடலாம் என நினைத்த எனக்கு மிஞ்சியது ஒரே ஒரு பட்டன் தான். ஆனால் மட்டன் பிரியாணி அசத்தல்.

ஆனாலும் என் பிரியாணி வேட்டை தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள் காயல்பட்டினம் ஆளுங்க துபாயில் கூட்டம் போட அதற்கு போய் வந்த என் நண்பர் ஒருவர் ஒரு பொட்டலம் பிரியாணியை கட்டி கொண்டு வர ஆஹா நான் தேடியது இது தான் இது தான் என மனசு குதிக்க ஒரு வழியா என் பிரியாணியை கண்டுபிடிச்சுட்டேன். அது எங்கே வாங்கப்பட்டது என கேட்ட போது "Chef Al Khaleej" பிரியாணி என்றும் வாணியம்பாடி- ஆம்பூர் காரர்கள் நடத்தும் மெஸ் என்பதும் சுருக்கமாக நம்ம ஆடகள் காலீத்து பிரியாணி என அழைப்பதும் தெரிந்தது. பின்பு என்ன அபுதாப்யில் இருந்தாலும் பெரிய சட்டி அனுப்பி வாங்கி வந்து மகிழ்ந்தோம்.

துபாய் வந்த பின்பும் தொடர்கிறது. நான் எந்த பார்ட்டி கொடுப்பதாக இருந்தாலும் அது தான். தொட்டுக்க ஏதும் தர மாட்டர்கள். சராசரியாக ஒரு தடவையாவது அதை வாங்கிவிடுவது என்கிற கொள்கையில் உறுதியாக இருக்கின்றேன். ஒரு மன்னு இப்போது 275 திர்காம். நான் எக்ஸ்ட்ரா கறி போட்டுதான் எப்போதும் வாங்குவேன். நாக்கில் எச்சில் ஊறுபவர்கள் நாளை கிடேசன் பார்க்குக்கு வந்தால் கிடைக்கும். துபாயில் உள்ளவர்கள் வசதிக்காக அந்த பிரியாணி கடையின் போன் நம்பர் தருகிறேன் 04 2694603.

அந்த பிரியாணி சாப்பிட்டு சாப்பிட்டு இந்த தடவை மாயவரம் போன போது "இம்பாலா" போனேன். "பாய் உங்க கடையிலே எனக்கு பிடிச்ச ஐட்டம் என்ன தெரியுமா?" என கேட்டேன். பாய் "என்ன தம்பி"ன்னு கேட்டார். கல்லாவின் மேலே இருந்த விபூதி/குங்கும/சோம்பு தட்டை காட்டி "இந்த விபூதி தான் என்னமா நைசா இருக்கு"ன்னு சொல்லிட்டு ஓடிவந்துட்டேன்!

!!!

24 comments:

  1. அபி அப்பா! கலீஜ் பிரியாணி வாசனை உங்க பதிவிலேயே தூக்குது.... மதியம் 12 மணிக்கு மேல தேரா வந்தாலே வண்டி நேரா அங்க தான் போய் நிக்கும்... அசத்தல் பிரியாணி போங்க... :)))

    ReplyDelete
  2. ஊரைச்சுத்தி அம்புட்டு பிரியாணி கடைகள் இருக்கா?????????

    ம் என்ன ஆச்சர்யப்பட்டு என்ன பிரயோசனம் நமக்கு அந்த எ*வு தின்னு தொலைக்கணுமான்னுத்தான் மனசு நினைக்க தோணுது :))

    ReplyDelete
  3. //பஸ்ட்டாண்டுக்கு நேர் எதிரில் இருக்கும் இம்பாலா ஹோட்டலின் பிரியாணி பற்றி பேசிகொண்டிருக்கும் போதே எனக்கு நாக்கில் எச்சில் ஊற தொடங்கியது. /

    நான் கேள்விப்பட்ட வகையில் மயிலாடுதுறையில முதன் முதலாக பீங்கான் தட்டுகளினை பயன்படுத்திய ஹோட்டலும் இதுதான் என்பது உண்மையா????
    ஏன்னா அப்பவெல்லாம் மத்த கடைகளில் ஒன்லி வாழை இலைதானாம்ல !

    ReplyDelete
  4. // செத்த வீட்டுக்கு போனால் காசிதுண்டை லாவகமாக பல்லில் கடித்து கொள்வது //

    இது அபி அப்பா டச்!

    ReplyDelete
  5. //அந்த பிரியாணி சாப்பிட்டு சாப்பிட்டு இந்த தடவை மாயவரம் போன போது "இம்பாலா" போனேன். "பாய் உங்க கடையிலே எனக்கு பிடிச்ச ஐட்டம் என்ன தெரியுமா?" என கேட்டேன். பாய் "என்ன தம்பி"ன்னு கேட்டார். கல்லாவின் மேலே இருந்த விபூதி/குங்கும/சோம்பு தட்டை காட்டி "இந்த விபூதி தான் என்னமா நைசா இருக்கு"ன்னு சொல்லிட்டு ஓடிவந்துட்டேன்! //

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !

    ReplyDelete
  6. /
    இப்படியான என் ஆராய்ச்சி எல்லாம் முடிந்து நான் 90களில் அபுதாபி வந்த அன்றே நண்பர் பல்தியா என சொல்லப்படும் நகராட்சி தமிழ் ஊழியர்கள் நடத்திய மீளாது விழாவுக்கு கூட்டி செல்ல நல்ல பிரியாணி கிடைக்கும் வாங்க என்று கூட்டி சென்றார் நண்பர்) நான் கூட "அப்பாடா சட்டை பட்டன் பிய்த்துக்காம பிரியாணி சாப்பிடலாம் என நினைத்த எனக்கு மிஞ்சியது ஒரே ஒரு பட்டன் தான்.
    /


    இந்த பட்டன் பிரச்சனை புரியலை :((

    ReplyDelete
  7. /
    "பாய் உங்க கடையிலே எனக்கு பிடிச்ச ஐட்டம் என்ன தெரியுமா?" என கேட்டேன். பாய் "என்ன தம்பி"ன்னு கேட்டார். கல்லாவின் மேலே இருந்த விபூதி/குங்கும/சோம்பு தட்டை காட்டி "இந்த விபூதி தான் என்னமா நைசா இருக்கு"ன்னு சொல்லிட்டு ஓடிவந்துட்டேன்!
    /

    ஹாஹா

    :))))))))))

    ReplyDelete
  8. ஆஹா ஆஹா, என்னங்க அபி அப்பா இப்படி பண்ணிட்டீங்க. இதுக்கு நீங்க என்னை நாலு வார்த்தை திட்டி இருக்கலாம். எனக்கு இப்ப இருக்கிற பிரியாணி ஆசையில ஓன்னு அழணும் போல இருக்கு. இங்க எங்கயுமே நம்ம ஊர் மாதிரி பிரியாணி கிடைக்க மாட்டேங்குது. யாராவது உங்களை மாதிரி சொன்னாங்கன்னா புண்ணியமா போகும். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..................

    ReplyDelete
  9. அபி அப்பா, இது நியாய‌மா? நீங்க‌ துபாய்ல‌ எப்ப‌ வேணும்னாலும் அருமையான‌ பிரியாணி சாப்பிட‌லாம். இங்க‌ சிங்கையில‌ பிரியாணி எப்ப‌டித்தெரியுமா இருக்கும் ? ந‌ம்ம‌ ஊரு எலுமிச்சை சோறு மாதிரி ம‌ஞ்ச‌ நிற‌த்துல‌ ஒரு பொது சோறு. நீங்க‌ ம‌ட்ட‌ன் பிரியாணி கேட்டா அந்த‌ சோறு மேல‌ ம‌ட்ட‌ன், சிக்க‌ன் பிரியாணி கேட்டா சிக்க‌ன‌ வைச்சு குடுப்பாங்க‌.
    ந‌ல்ல‌ ம‌ட்ட‌ன்பிரியாணி எங்க‌ கிடைக்குதுனு என‌க்கு தெரிய‌ல‌.
    எங்க‌ ந‌ல்ல‌ பிரியாணி செய்வாரு. நாளைக்கு அவ‌ருகிட்ட‌ சொல்லி செய்ய‌ சொல்ல‌னும். நீங்க பிரியாணி பசிய கிள‌ப்பிவிட்டுட்டீங்க‌.

    ReplyDelete
  10. ///கல்லாவின் மேலே இருந்த விபூதி/குங்கும/சோம்பு தட்டை காட்டி "இந்த விபூதி தான் என்னமா நைசா இருக்கு"ன்னு சொல்லிட்டு ஓடிவந்துட்டேன்! ///

    அபி அப்பாவின் ட்ரேட் மார்க் நக்கல்

    ReplyDelete
  11. //ஜோசப் பால்ராஜ் said...

    அபி அப்பா, இது நியாய‌மா? நீங்க‌ துபாய்ல‌ எப்ப‌ வேணும்னாலும் அருமையான‌ பிரியாணி சாப்பிட‌லாம். இங்க‌ சிங்கையில‌ பிரியாணி எப்ப‌டித்தெரியுமா இருக்கும் ? ந‌ம்ம‌ ஊரு எலுமிச்சை சோறு மாதிரி ம‌ஞ்ச‌ நிற‌த்துல‌ ஒரு பொது சோறு. நீங்க‌ ம‌ட்ட‌ன் பிரியாணி கேட்டா அந்த‌ சோறு மேல‌ ம‌ட்ட‌ன், சிக்க‌ன் பிரியாணி கேட்டா சிக்க‌ன‌ வைச்சு குடுப்பாங்க‌.
    ந‌ல்ல‌ ம‌ட்ட‌ன்பிரியாணி எங்க‌ கிடைக்குதுனு என‌க்கு தெரிய‌ல‌.
    எங்க‌ ந‌ல்ல‌ பிரியாணி செய்வாரு. நாளைக்கு அவ‌ருகிட்ட‌ சொல்லி செய்ய‌ சொல்ல‌னும். நீங்க பிரியாணி பசிய கிள‌ப்பிவிட்டுட்டீங்க‌.//

    இல்லை பால்ராஜ் இங்கேயும் 95% ஹோட்டல்களில் அதே கதைதான் உப்பும் இருக்காது உரைப்பும் இருக்காது பாதி சோறு வெள்ளையாகவும் மீதி கொஞ்சம் மஞ்சள் கலரிலும் இருக்கும் உள்ளே கோழி கறி பீஸில் இருக்கும் கொஞ்சோண்டு மசாலாவை சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிடனும்.
    (நம்ம ஊரு தமிழ் ஹோட்டல்கள்
    அஞ்சப்பர், பொன்னுசாமி,மதுரை அப்பு, செட்டி நாடு ஆச்சி, சிம்ரன் ஆப்ப கடை போன்ற கடைகள் மட்டும் விதிவிலக்கு)

    இவருக்கு மட்டும் எங்கு நல்ல பிரியாணி கிடைக்குதுன்னு தெரியலை.

    ReplyDelete
  12. குடும்பம் இருக்கும் போது chef al khaleejல் மன் கணக்கிலே ஆர்டர் கொடுத்து வாங்கிய போது நல்ல ருசியான பிரியாணி கிடைத்தது. இப்போதைய பேச்சிலர் வாழ்க்கையில் வெள்ளிக்கிழமை மதியங்களில் அங்கேயே போய் பாக்கெட் பிரியாணி வாங்கி வந்ததில் அவ்வளவு சரியில்லை.

    சமீபத்தில் tasty briyani என்ற இடத்தில் பிரியாணி ஆர்டர் செய்து வாங்கினோம். அதுவும் நன்றாகவே இருந்தது.

    ஏதோ அபிஅப்பா துபையில் நல்ல பிரியாணி சாப்பிட சிறு உதவி. :))

    என்னதான் இருந்தாலும் அம்மா கைப்பக்குவத்தில் ஊரில் சாப்பிடும் பிரியாணிதான் ருசி.

    ReplyDelete
  13. பிரியாணியில இம்புட்டு இருக்கா!!!! ;)

    ReplyDelete
  14. //கல்லாவின் மேலே இருந்த விபூதி/குங்கும/சோம்பு தட்டை காட்டி "இந்த விபூதி தான் என்னமா நைசா இருக்கு"ன்னு சொல்லிட்டு ஓடிவந்துட்டேன்//

    hahahaha :)))
    anbudan aruNa

    ReplyDelete
  15. @ rapp

    Did you check in La Chappelle area?
    There are several Pakistani/Bangladeshi restaurants.

    @ Joseph & Kusumban,

    I guess, they are Hyderabadi DUM biriyani variety.

    In that syle of cooking, they layer rice followed by masala followed by meat and cook it.

    ReplyDelete
  16. பாய் பிரியாணிமாதிரி எங்கயும் சாப்பிட்டத்தில்லை.

    எங்க வூட்டு தம்-பிரியாணியும் அமக்களமா இருக்கும். செய்முறை அப்பாலிக்கா போடறேன்.

    //நிற்க!//

    இது எதுக்கு போடறீங்க?

    ReplyDelete
  17. //Did you check in La Chappelle area?
    There are several Pakistani/Bangladeshi restaurants.
    //
    நல்லாவே சாப்பிட்டு இருக்கேங்க. ஆனா அந்த பிரியாணி எல்லாம் பயங்கர காடியா இருக்கே தவிர ருசி இருப்பதில்லை. ஆனா இப்ப புதுசா திறந்திருக்கும் அஞ்சப்பர் ருசி அமோகமா இருக்கறதா கேள்விப்பட்டேன், அடுத்த வாரம் போய் பார்க்கணும் :):):)

    ReplyDelete
  18. கட்டுரை நல்லா இருக்கு.

    எங்க ஊர் பக்கம் மெடிக்கல்ன்னா வெள்ளை சோறு (சாம்பார் சாதத்தான்) சொல்லுவாங்க. வெஜிடேரியன் சாப்பாடு.

    முஸ்லிம் வீட்டு கல்யானங்களில் விருந்து கொஞ்சம் தடபுடலா இருக்கும். சிலர் சிக்கனமா செய்வாங்க.

    பந்திக்கு உள்ள போய் பட்டன் இல்லாம திரும்ப வர்றதெல்லாம் பல விருந்துல கலந்துகிட்டா மட்டும்தான் கிடைக்கும். இதிலேந்தே தெரியுது உங்க அனுபவம். விருந்துல ஏரியா பாத்து உடகாரனும் அதுவும் நம்ம கூட வந்தவனுங்க இல்ல பக்கத்துல உட்காந்து இருக்கவனுங்க சரியா சாப்பிடாதவனா இருந்தா அவ்ளோதான் அந்த விருந்து ஒழுங்காவே சாப்பிடவே முடியாது. அதானால முடிந்த வரைக்கும் நம்ம ரேஞ்சு ஆளுங்களோட போகனும்.

    எங்க ஏரியாவுல ஏனங்குடி பிரியானி ஃபேமஸ். சும்மா சூப்பாரா இருக்கும். முடிஞ்சா ஒரு தடவை டிரை பன்னுங்க.

    ReplyDelete
  19. intha merpadi kuripita idangalai thavirthu vera entha conductor vitulayum neengha sapitathu illaya illa

    ReplyDelete
  20. Abi, What do you think of 'Vejitbil Biriyani'? Cant they call it by some other name like bisibela baath, bagalabaath or sindubath? They make it catchy with fried bread on top...

    ReplyDelete
  21. Abi, What do you think of 'Vejitbil Biriyani'? Cant they call it by some other name like bisibela baath, bagalabaath or sindubath? They make it catchy with fried bread on top...

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))