அந்த தாவணி தேவதையின் பெயர் சூடிக்கொடுத்த சுடர் கொடி. அவளின் வசீகரமே அவள் தலைமுடிதான். மற்ற பெண்களின் சடையின் அடர்த்தி இவள் சடையின் ஒரு பிரிக்கு சமமாக இருக்கும். அத்தனை மொத்தமான சடை அவள் முட்டிகால வரை பிரண்டு ஆட்டம் போடும். அவள் கொஞ்சம் குள்ளமான உருவம். நிறம் என்று பார்த்தால் மாநிறம் தான். அவள் சிகப்பாக இருந்திருந்தால் கூட அத்தனை நன்றாக இருந்திருக்காது. நல்ல திருத்திய முகம். ஆனால் எப்போதுமே ஒரு மெல்லிய சோகம் இழந்து ஓடும் உதடுகள். கண்கள், அதன் உள்ளே ஓடி விளையாடும் அந்த கருப்பு திராட்சகள் கிட்ட தட்ட ஆண்கள் அத்தனை பேரையுமே "அட" போட வைக்கும்.
என் வீட்டுக்கு எதிர் வீடு அவளின் உறவினர் வீடு. அவள் வீடு எங்கள் ஊரிலிருந்து 20 கி.மீ தள்ளி இருந்தது. +2 வரை அங்கே படித்துவிட்டு கல்லூரிக்காக உறவினர் வீட்டுக்கு வந்து விட்டாள். ஒரு காலை நேரத்தில் அவளின் உடமைகள் அடங்கிய ஒரு ஒயர் கூடையோடு அவளின் அப்பா அழைத்து வந்த போது தான் நான் முதன் முதலாக பார்த்தேன். அந்த வினாடியை இந்த நிமிடம் வரை என்னால் மறக்க முடியவில்லை. அவளுக்காகவே நான் தட்டச்சு பயிற்சிக்கு சென்றேன். அவளை கவர எத்தனை முயற்சிகள். ஆனால் அவள் எதற்கும் அசைந்து கொடுக்காதமையால் ஒரு நாள் தட்டச்சு பயிற்சி பள்ளியின் வாசலில் இருந்த அவள் சைக்கிளோடு என் சைக்கிளையும் இணைத்து பூட்டிவிட்டு காத்திருந்தேன். வந்து பார்த்த அவள் கொஞ்சமும் கோபிக்கவில்லை. "என்னங்க நம்ம சைக்கிளுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டீங்க" என சொல்லிவிட்டு மெல்லியதாக சிரித்தாள். எனக்கு ஆயிரம் வண்ணத்து பூச்சிகள் மனதில் பறக்க தொடங்கி விட்டது. என்னை இந்த உலகமே கவனீக்க தொடங்கியது போல ஒரு நினைவு. என்னை சுற்றி ஒரு கூட்டம் எப்போதுமே இருக்கும். என் வேடிக்கை பேச்சுகளால் நான் இருக்கும் இடமே கலகலப்பாக இருக்கும். என்னுடைய அந்த குணம் தான் அவளுக்கு பிடித்ததாம். குசூலோடித்கொதுடுங்த்கதன்.சுடர்கொடி என எல்லாம் கிருக்க தொடங்கினேன். எந்த மரத்தை பார்த்தாலும் இதயம் வரைய ஆரம்பித்தேன். ஒரு சீப்பும் கொஞ்சம் முக பவுடரும் நிரந்தரமாக என் சட்டை பையில் வந்து குடியிருக்க தொடங்கியது. எந்த காரை பார்த்தாலும் அந்த கார் கதவின் கண்ணாடியில் என்னை பார்க்க தொடங்கினேன். ஏனனில் அதில் மட்டுமே கொஞ்சம் குண்டாக தெரிந்தேன்.
அவள் கூந்தலுக்கு பூ வைக்க ஆசைப்பட்டேன். அவள் என் கூடவே இருக்க ஆசைப்பட்டேன். நண்பர்களை விட்டு தனியே வந்து சிந்திக்க தொடங்கினேன். அபத்த கவிதைகள் பொங்கி பொங்கி வந்தன. பொங்கியதை எல்லாம் பேப்பரில் வாந்தியாக எடுத்தேன். நானே படித்து மகிழ்ந்தேன். என்னை நம்பாமல் சலூன் கடைகாரரை நம்பினேன் மீசை திருத்த!அம்மாவின் சமையல் பிடிக்காமல் போனது. அப்பாவின் பேச்சுகள் அலுப்பாக இருந்தன. நான் என்ன வண்ணத்தில் உடை உடுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக ஆளாள் அவள். வித விதமாக என்னை போட்டோ எடுத்து கொள்ள ஆசையாக இருந்தது. அதை அவள் பார்க்க வேண்டும் என்பதில் அதீத ஆசையாக இருந்தது. அவள் போட்டோவை என் இதயத்துக்கு இணைப்பாக ஒட்டி கொள்ள ஆசையாக இருந்தது. ஒரு குச்சியில் அந்த போட்டோவை கட்டி எனக்கு 1 முழத்துக்கு முன்பாக ஆடிக்கொண்டிருக்க அபத்த யோசனை வந்து தனியே வீட்டின் அறையிலே செய்து பார்க்க தூண்டியது. "தென்றலே என்னை தொடு" படமும் "வருஷம் 16" படமும் எனக்கு ராமாயண மகாபாரதமாக ஆகியது. அவள் சடையை பிடித்து இழுக்க ஆசை வந்தது. எங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என எழுதி பார்க்க வைத்தது. யாருடைய கல்யாண பத்திரிக்கையிலோ அந்த மணமக்களுக்கு பதிலாக எங்கள் பெயரை எழுத வைத்தது மனது.
அவள் சாதாரண ஜுரத்துக்கு அவள் உறவினர் சைக்கிளில் டாக்டர் வீட்டுக்கு போய் திரும்பியவுடன் நான் போய் டாக்டரிடம் "டாக்டர் அபாய கட்டத்தில் இருந்து தாண்டிவிட்டாளா இல்லையெனில் அப்போலோ கொண்டு போகலாமா" என கேட்டு டாக்டரை மயக்கமடைய வைத்தேன். முப்பத்தி இரண்டு பக்கத்துக்கு எல்லாம் கடிதம் எழுதி அவளிடம் கொடுக்க வைத்தது மனது. பின் அவளிடமிருந்து 37 பக்க பதில் கடிதத்தை உடனே படிக்காமல் நடு மைதானத்துக்கு கொண்டு போய் உரக்க படிப்பது, பின்னே "சூடிகொடுத்த சுடர் கொடி குலோத்துங்கன்" என்கிற அவள் கையெழுத்தை மட்டும் கிழித்து வாயில் போட்டு விழுங்குவது, (அது போயிருக்கும் ஒரு 500 கையெழுத்து வயித்து குள்ளே)பிரசவத்துக்கு அவளை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட்டு வாசலில் நான் கையை பிசைந்து கொண்டிருப்பதாக நினைத்து கொண்ட்தெல்லாம் கொஞ்சம் அதிகபட்சம் தான்.
நான் அப்போது கல்லூரி மூன்றாம் ஆண்டு. அவளோ பெண்கள் கல்லூரியில் முதல் ஆண்டு. நான் இளமறிவியல் முடித்து அடுத்த கட்டத்துக்கு போகும் போது அவள் இன்னும் அதிகமாகவே என்னை விழுங்கிவிட்டிருந்தாள். காதலி உடையவன் என்கிற கர்வம் எனக்கு தனி அந்தஸ்தை கொடுத்திருந்தது. ஆனால் அந்த நேரத்தில் தான் அவள் வீட்டுக்கு விஷயம் தெரிய வர அவள் படிப்புக்கு பாடை கட்டப்பட்டு அவளின் சொந்த ஊருக்கும் அழைத்து போக பட்டாள். நானும் அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை. காதலிப்பது என்பது கற்பு இழப்புக்கு சமமாக அவள் வீட்டார் நினைத்தார்கள்.அவசர அவசரமாக அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க நாலு திக்கும் ஆட்கள் பறந்தார்கள்.
(ஆறு மாதங்களுக்கு பின்…………………)
அந்த சுடிதார் தேவதையின் பெயர் பிந்தியா. அவள் சேர நன்னாடு. விரித்து விட்ட ஈர தலைமுடியும், நெற்றி சந்தனமும், மயக்கும் கீரி விட்டது மாதிரியான கண்களும்,அவளின் நெடிய உருவமும், எலுமிச்சம் பழ வண்ணமும் ஆண்கள் அத்தனை பேரையும் நின்று பார்க்க வைக்கும். அந்த வண்ணமே அவளின் சிறப்பம்சம், அவள் கொஞ்சம் மாநிறமாக இருந்தால் கூட அத்தனை நன்றாக இருந்திருக்க மாட்டாள். எப்போதுமே அவள் உதடுகளில் ஒரு வித மின்னல் கீற்று மாதிரியான குறும்பு ஓடிக்கொண்டே இருக்கும்.…………………
போங்கப்பா பதிவு ஆரம்பித்த இடத்துக்கே வந்துவிட்டது …மாற்றம் என்பது மட்டுமே மாறாதது இவ்வுலகில்!!!!!
மீ த பர்ஸ்ட்?
ReplyDeleteஅட!!!!!!!
ReplyDelete//நிஜமா நல்லவன் said...
ReplyDeleteமீ த பர்ஸ்ட்?
//
S
S
S
//மற்ற பெண்களின் சடையின் அடர்த்தி இவள் சடையின் ஒரு பிரிக்கு சமமாக இருக்கும்.//
ReplyDeleteஇதுபோல் எங்க ஊரிலும் ஒரு சாமியாருக்கு சடை இருக்கும் செம அழுத்தமாக அடர்த்தியாக இருக்கும் பிரிக்க கூடமுடியாது!
நி.நல்லவரே! நீங்க தான் ப்ப்ஸ்ட்! வாழ்த்துக்கள்:-))
ReplyDeleteவாங்க ஆயில்யா! வருகைக்கு நன்றி!
ReplyDelete/போங்கப்பா பதிவு ஆரம்பித்த இடத்துக்கே வந்துவிட்டது …மாற்றம் என்பது மட்டுமே மாறாதது இவ்வுலகில்!!!!!/
ReplyDeleteஹா...ஹா...ஹா....:)
பதிவு செம சூப்பர்!
ReplyDeleteகுசும்பா! சாமியாருக்கு முடி எப்படி இருந்தா என்ன! அந்த புள்ளக்கி இருப்பதை பார்த்து ரசிப்பியா அத விட்டுட்டு!
ReplyDelete/அபி அப்பா said...
ReplyDeleteநி.நல்லவரே! நீங்க தான் ப்ப்ஸ்ட்! வாழ்த்துக்கள்:-))/
வாழ்த்துக்களுக்கு நன்றி!
நல்ல பதிவு அபி அப்பா. இதை படிக்கும் போது எனக்கு நினைவுக்கு வந்தது "சங்கர்தாதா எம்.பி.பி.எஸ்" (முன்னாபாய் படத்தின் தெலுங்கு ரீமேக்) படத்தில் சிரஞ்சீவி பாடும் பாட்டுதான் நினைவுக்கு வந்தது (தமிழில் அவ்வளவாக எடுபடாத ஆழ்வார்பேட்டை ஆண்டவா பாடல் வரும் இடத்தில் வரும்). காதல் இவ்வளவுதான் என்று நிரூபிக்க இது போலவே வருந்தி வருந்தி காதலித்து அவள் சென்றபின் மற்றொருவள் என்று ஒரு சிறுகதை போலவே இருக்கும். "மாயா... மாயா.." என்ற அந்த பாடல் யூ ட்யூபில் இருந்தால் பாருங்கள்.
ReplyDelete:-)))....
ReplyDeleteநல்ல பதிவு!
ReplyDeleteஎன் வாழ்க்கையில் நடந்தவைகளெல்லாம் உங்கள் வாழ்க்கையிலும் நடந்துள்ளதை நினைத்தால் ஆச்சிர்யமாக இருக்கிறது
வாங்க வெண்பூ! அண்ணாச்சி விமர்சனத்தை படிச்சுட்டு தமிழ் வசூல் ராஜாவே பார்க்கலை. இதிலே நான் எங்கிட்டு தெலுகு பார்க்கிறது. முடிஞ்சா பார்க்கிறேன்! வருகைக்கு நன்றி!
ReplyDeleteவாங்க விஜய் ஆனந்த்! நன்றி!
ReplyDeleteவால்பையா! நீ தாம்ப்பா நெசமான வால் பையன்! தெளிவா அந்த ஹீரோ பேரை குலோதுங்கன்ன்னு போட்டிருக்கேன். நைசா நம்மை மாட்டி விட பார்க்கிறேயப்பா:-))
ReplyDelete//வாங்க வெண்பூ! அண்ணாச்சி விமர்சனத்தை படிச்சுட்டு தமிழ் வசூல் ராஜாவே பார்க்கலை. இதிலே நான் எங்கிட்டு தெலுகு பார்க்கிறது. முடிஞ்சா பார்க்கிறேன்! வருகைக்கு நன்றி! //
ReplyDeleteஇரண்டையும் பார்த்ததால் சொல்கிறேன். தமிழை விட தெலுங்கில் படம் அருமையாக இருக்கும். ஓரளவு தெலுங்கு புரிந்தாலே படம் நன்றாக புரியும். முடிந்தால் பாருங்கள். (அவருக்கு ஜோடி சோனாலி பிந்த்ரே..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்)
வெண்பூ என்னை எப்படியாவது பார்க்க வைக்கும் நோக்கத்தில் சோனாலி பிந்ரேன்னு எல்லாம் சொல்லப்படாது! என்னை இழுக்க எந்த மந்திரம்ன்னு இன்னுமா தெரியலை:-)))
ReplyDeleteநேத்து சாட்டிங்க்ள பேசும்போது கூட அந்த பொண்ணோட ஒரிஜினல் பேரு ஏதோ சொன்னிங்களே!
ReplyDeleteசே அவசரத்துக்கு ஞாபகம் வர மாட்டிங்குது
/அபி அப்பா said...
ReplyDeleteவெண்பூ என்னை எப்படியாவது பார்க்க வைக்கும் நோக்கத்தில் சோனாலி பிந்ரேன்னு எல்லாம் சொல்லப்படாது! என்னை இழுக்க எந்த மந்திரம்ன்னு இன்னுமா தெரியலை:-)))/
வெளங்கிடும்:)
ஆஹா நம்ம வாயில இருந்தே புடுங்க பாக்குறீங்களே வெண்பூ:-))
ReplyDeleteஆஹா நம்ம வாயில இருந்தே புடுங்க பாக்குறீங்களே வெண்பூ:-))
ReplyDeleteஆஹா நம்ம வாயில இருந்தே புடுங்க பாக்குறீங்களே வெண்பூ:-))
ReplyDelete/அபி அப்பா said...
ReplyDeleteகுசும்பா! சாமியாருக்கு முடி எப்படி இருந்தா என்ன! அந்த புள்ளக்கி இருப்பதை பார்த்து ரசிப்பியா அத விட்டுட்டு!/
என்னது பார்த்து ரசிக்கனுமா? ஒரு படமாவது போட்டு இருக்கலாம்....அது கூட இல்லை...அப்புறம் என்னத்தை பார்த்து ரசிக்கிறது????
குசும்பரே நீங்க சாட்டில் சொன்னதை கேட்டுட்டேன்....ஓகே வா?
/அபி அப்பா said...
ReplyDeleteஆஹா நம்ம வாயில இருந்தே புடுங்க பாக்குறீங்களே வெண்பூ:-))
September 8, 2008 3:36 PM
Blogger அபி அப்பா said...
ஆஹா நம்ம வாயில இருந்தே புடுங்க பாக்குறீங்களே வெண்பூ:-))
September 8, 2008 3:36 PM
Blogger அபி அப்பா said...
ஆஹா நம்ம வாயில இருந்தே புடுங்க பாக்குறீங்களே வெண்பூ:-))/
உங்களுக்கு ஒரு வாய் தானே இருக்கு????அப்புறம் என்ன மூனு கமெண்ட்டு????
மாற்றம் என்பது மட்டுமே மாறாதது இவ்வுலகில்!!!!!
ReplyDeleteIthuthan Unmai...
:)))))))super anna...!!
ReplyDeleteசூப்பரோ சூப்பர்!
ReplyDeleteஎப்படி இப்படியெல்லாம்?
சாரே..
ReplyDeleteஎன் பதிவுல பின்னூட்டின வெண்பூ, அபி அப்பா ஒரு பதிவு போட்டிருக்காரு, போய்ப் பாருங்க, எதிர்ப் பதிவுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்ன்னாரு..
அப்படித்தான் தெரியுது..
ஒரு அதிர்ப்பதிவு போட்டுக்கறேனே.. ப்ளீஸ்..
போன பின்னூட்டத்துல ஒரு எழுத்துப் பிழை ஆயிடுச்சுன்னு நெனைக்கறேன்..
ReplyDeleteஅதிர் அல்ல.. எதிர்ப்பதிவு
நன்றாக உள்ளது.
ReplyDeleteபரிசல்காரன் எழுதியதை படித்தீர்களா?
லதானந்த் இப்போதெல்லாம் காணவில்லை!
interesting article,good one
ReplyDeleteஎன்ன அண்ணா, உண்மையதான் சொல்றீங்கன்னு பார்த்தா, கடைசில உஷார் ஆயிட்டிங்களே....
ReplyDeleteஅவனவன் ஒரு பக்கத்துக்கே அல்லாடிட்டிருக்க, உங்களுக்கு 'ஆட்டோகிராப்' கேக்குதா?
ReplyDeleteஏதோ முதல் காதல்தோல்விக்குப் பிறகு 'காதல்' பட பரத் மாதிரி 'ஞே ஞே ஞே' ன்னு சுத்திட்டிருப்பீங்கன்னு பார்த்தா....
ம்ம்ம்...என்னத்தச் சொல்றது ?