பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

September 25, 2008

உளுந்தூர்பேட்டை காத்தவராயனுக்கு போன் போடுங்கப்பா!!!




ஒரு 5 வருஷம் முன்ன விசா மாற்றும் விஷயமாக பக்கத்திலே ஒரு சின்ன தீவு "கிஷ் அய்லாண்டு"ன்னு, அங்க போயிட்டு வர வேண்டி இருந்துச்சு. ஒரு 50 பேர் உக்காந்து போகும் அளவு சின்ன விமானம். அதன் பேரு தான் விமானம். ஆனா அது ஒரு மானம் கெட்ட விமானம். உள்ளே அத்தனை கச்சடா. ஜன்னல் பக்கம் எல்லாம் துணி ஸ்கிரீன் அழுக்கா போட்டிருந்தாங்க. சீட் எல்லாம் வியர்வை சொட்ட சொட்ட பட்டான் உக்காந்த மாதிரி படை படையா இருந்துச்சு. சரின்னு சீட் மேலே ஒரு பேப்பரை போட்டு என் உடம்பின் எந்த பாகமும் சீட்டிலே படாத மாதிரி லாவகமா குந்திகிட்டு எதுனா விசில் வச்சிகிட்டு கண்டக்டர் இருக்காரான்னு சுத்திலும் பார்த்தேன். யாரும் இல்லை. பின்னே விரல் நுனியால அந்த ஸ்கிரீனை விலக்கினேன். அங்க தான் நம்ம இந்த பதிவோட ஹீரோ உளுந்தூர்பேட்டை காத்தவராயன் பெயர் எழுதி இருந்துச்சு. வஞ்சகமே இல்லாம எல்லா இந்திய மொழியிலும் தன் காதலிகள் பெயரையும் அந்த காதல கனவான்கள் எழுதி இருந்தனர். சில பேர் அனடாமி பாடம் நடத்தியிருந்தனர். கையிலே பேனா இல்லாதவர்கள் பைலட் கிட்டே வாங்கி எழுதியிருப்பானுங்க போல இருக்கு. சரி விஷயத்துக்கு வருவோம்.

" அன்புள்ள புனிதா நா ஒன்ன கதலிக்கிறேன்,
நீ என்னை கதலிக்கிறியா?
நா ஒன்ன பிளேன்ல கூட்டி பொவன்.
நா சன்ன பக்கம் நீ எனக்கு பக்கமா இருக்க
முத்தம் கொடு

இப்படிக்கு
காத்தவராயன்
3,வாத்துகார தெரு,
(டீ கடை எதுக்க)
உளுந்தூர்பேட்டை(போஸ்ட்)
த.நா-இந்தியா
என் துபாய் நம்பர்050 3803271
எனக்கு பொன் பன்னு''

இப்படித்தான் அந்த பிளைட் ஜன்னல் பக்கம் எழுதியிருந்துச்சு. அப்படியே குறிச்சுகிட்டேன். இது போதாதா நமக்கு. திரும்ப துபாய் வந்த பின்னே முதல் வேலையா நம்ம காத்தவராயனுக்கு போன் பண்ணினேன்.

"ஹலோ காத்தவராயனா"

"ஆமாங்க"

"நான் ரஷ்யா பிளைட் கம்பனியில இருந்து பேசறேன். நீங்க பிளைட்டிலே கன்னா பின்னான்னு எழுதி நாசம் பண்ணிட்டீங்க. அதுக்கு சுண்ணாம்பு அடிக்கும் காசை நீங்க தான் தரனும். இன்னும் 1 வாரத்துகுள்ள 3000 திர்காம் ரெடி பண்ணுங்க.நாங்க வந்து வாங்கிகறோம்"

"அய்யோ நான் எழுதலீங்க என் கூட வந்த மலையாளி தாங்க எழுதினாரு"

"அடங்கொய்யால மலையாளி எப்படி தமிழ்ல எழுதினாருய்யா"

"சார் சார் என் சம்பளமே 450 திருகாம் தானுங்க, அந்த இடத்துல மட்டும் பெயிண்டு அடிக்கும் காச குடுக்குறேன் சார்"

"சரி சரி பின்ன பேசறேன்"

ஆகா இதை வச்சி 1 வாரம் ஓட்டலாம் போல இருக்கேன்னு நெனச்சுகிட்டு ரூம்க்கு வந்து பசங்க கிட்டே விஷயத்தை சொன்னேன்.உடனே ஒருத்தன் நம்பரை குடுங்கன்னு வாங்கினான்.

"ஹல்லோ காத்தவராயனா, நாங்க துபாய் முனிசிபாலிட்டியில இருந்து பேசறோம். நீங்க துபாய் கக்கூஸ்ல எழுதி வச்சிருந்தீங்க இல்லியா உங்க அட்ரசை அதுக்கு வெள்ளை அடிக்கனும். அதுக்கான சார்ஜ் நீங்க முனிசிபாலிட்டியிலே வந்து கட்டிடுங்க - 3000 திர்காம்"

"அய்யா அது நான் எழுதலீங்க, ஆமா எந்த கக்கூஸ் பர்துபாய் பஸ்ட்டாண்டு கக்கூசா இல்லாட்டி டேரா அல் நாசர் ஸ்கொயர் கக்கூசாங்க"

போனை பொத்தி கொண்டு ரூம் மெட் எங்க கிட்ட சொல்றான் "இவன் வளச்சு வளச்சு துபாய்ல எழுதியிருக்கான் போல இருக்கு"ன்னு.

"ஹல்லோ மிஸ்டர் காத்து, நாங்க இது வரை ஒரு கக்கூஸ்ல தான் செக் பண்ணியிருக்கோம். ஒரு ஸ்பெஷல் டீம் போட்டு எல்லா கக்கூஸ்லயும் செக் பண்ண சொல்லியிருக்கோம். ஆக நீங்க எதுக்கும் ஒரு 10000 திர்காம் ரெடி பண்ணுங்க, நாங்க வந்து வாங்கிக்கறோம்"ன்னு சொல்லி போனை வச்சுட்டான்.

அப்போது அடுத்த ரூம் மெட் உள்ளே வரவும், அவனிடம் சொல்லி சிரிச்சோம். அவன் "அந்த போன் நம்பர் குடுங்கன்னு கேட்டு வாங்கிகிட்டு நம்ம காத்துக்கு போன் பண்ணினான்.

"ஹல்லோ மச்சான் எப்படி இருக்கிய"

""நீங்க யாருங்க"

"என்னை தெரியலையா புனிதாவோட அண்ணன். நானும் துபாய் வந்துட்டேன். இப்ப தான் உங்க போன் நம்பர் கிடைச்சுது"

"புனிதாவுக்கு அண்ணன் கிடையாதே, ஓ பெரீப்பா பையன் சோமுங்களா? என் நம்பர் எப்புடி கெடச்சுது"

"உங்க நம்பர் தான் ஒலகத்துக்கே தெரியுமே, நான் நைஃப் பார்க்கிலே பார்த்தேன் மச்சான். ஒங்களுக்கு புனிதாவை கட்டி வக்கிறதா முடிவு பண்ணிட்டோம். எப்ப போவலாம் ஊருக்கு, எத்தன பவுன் போடுவீங்க"

"ரொம்ப சந்தோஷமுங்க மச்சான். நா ஒரு 3 பவுன்ல சங்கிலி போடுறங்க, புனிதா எப்புடி இருக்குங்க, ஒங்க சித்தப்பாரு வெஷயம் தெரிஞ்ச பின்ன அதை போட்டு அடிச்சாருங்க, அதுல மனசு கேக்காம துபாய் வந்தவன் தான். அந்த சாமி தான் அவரு கண்ண தொறந்து மனச மாத்தியிருக்குங்க"

"என்ன மச்சான் ஒரு 10 பவுனாவது போடுவீங்கன்னு நெனச்சேன்"

"இல்லீங்க ஒரு பிளைட் கம்பனில ஒரு நண்பருக்கு 3000 தரனும், பல்தியா(முனிசிபாலிட்டி) நண்பருக்கு வேற தரனும். நா கல்யாணத்துக்காக சீட்டு போட்டிருந்தனா, அதை எடுத்து தான் தரணும். நேரமே சரியில்லைங்க"

"அப்புடியா சரி, நான் பின்ன பேசறேன், ஆனா ஒங்களுக்கு நல்ல சேதி சொன்னதுக்காக எனக்கு பேண்ட், சட்டை, வாட்ச், மோதரம் எல்லாம் போடனும் சரியா, ஆனா இனிமே இந்த கக்கூஸ், பார்க் இங்கல்லாம் எழுதறத விடுங்க"

"சரிங்க மச்சான், சத்தியமா இனிமே வூட்டுக்கு லெட்டர் கூட எழுத மாட்டேன் மச்சான்"

அப்போ வேற ஒரு நண்பர் வந்தார் ரூமுக்கு. அவர் ஒரு டிரான்ஸ்போர்ட் ஆபீசர். ஒரு நாளைக்கு 300 போன் வரும். சும்மா டிவில நியூஸ் கூட கேக்க விடாம போன்ல தொன தொனன்னு பேசிகிட்டே இருப்பார். அவரையும் கலாய்க்க வேண்டிய கட்டாயத்திலே இருந்தோமா, அப்ப அவரு தான் வாங்கின புது போனை குடுத்து பார்க்க சொன்னார். ஒருத்தன் மாத்தி ஒருத்தன் பார்த்துகிட்டே வந்தோம். அதிலே ஒருத்தன் நம்மா கத்தவராயன் நம்பர்க்கு அவர் போனை டைவர்ட் பண்ணி விட்டுட்டான்.

அப்படியாக ஒரு 2 நாள் காத்தவராயனை காத்துபோனராயனா மாத்தி பின்னே இனிமே பொது இடத்திலே இப்படி எல்லாம் எழுத கூடாதுன்னு சொல்லி அனுப்பினோம். அப்பவும் ஒரு ரூம் மெட் அவனோட கொடுங்கோல் மேனேஜர் நம்பரை மிஸ்டர் காத்துகிட்டே கொடுத்து " வெள்ளி கிழமை காலை 6.00 மணிக்கு போண் பண்ணி குட்மார்னிங் சொல்ல சொல்லி அனுப்பினான்.

இப்போ 2 நாள் முன்ன பெட்டிய நோண்டிகிட்டு இருந்தப்ப அந்த நம்பர் கிடைத்தது. சரி காத்து இப்ப எப்படி இருக்குன்னு பார்ப்போம்ன்னு போன் பண்ணினேன். வேற யாரோ எடுத்தாங்க.

"ஹல்லோ காத்தவராயனா?"

"இல்ல நான் முத்து"

"இதுக்கு முன்ன இந்த நம்பர் யார் கிட்டே இருந்துச்சு"

"ம் இதுக்கு முன்ன மைசூர் மகாராஜா வச்சிருந்தாரு, அதுக்கு முன்ன சொப்பன சுந்தரி வச்சிருந்தாங்க, ஆனா அவங்களை யார் வச்சிருக்காங்கன்னு தெரியாது. போனை வைய்யா"

ஒரு வேளை பிளாக் படிக்கிறவனா இருப்பானோ. இத்தன வெவரமா இருக்கான்!!!

முடிஞ்சா இந்த முத்துவை கலாய்ச்சி பாருங்கப்பா போன் பண்ணி!

30 comments:

  1. சூப்பரோ சூப்பர் தலைவா. செம காமெடி.

    ReplyDelete
  2. ஐயோ..சிரிச்சி சிரிச்சி வயிறு வலி வந்துடுச்ச்சி எனக்கு!!
    ROTFL post!!

    ReplyDelete
  3. செம கலக்கல் காமெடி.. :))

    ReplyDelete
  4. :-)))...

    semma comedy!!!

    aanaalum oru appaaviya pottu ippadi varutheduthurukkeengale!!!

    (sorry..no tamil fonts in this machine.)

    ReplyDelete
  5. //அய்யா அது நான் எழுதலீங்க, ஆமா எந்த கக்கூஸ் பர்துபாய் பஸ்ட்டாண்டு கக்கூசா இல்லாட்டி டேரா அல் நாசர் ஸ்கொயர் கக்கூசாங்க"

    போனை பொத்தி கொண்டு ரூம் மெட் எங்க கிட்ட சொல்றான் "இவன் வளச்சு வளச்சு துபாய்ல எழுதியிருக்கான் போல இருக்கு"ன்னு.//


    :)))))))))))))

    ReplyDelete
  6. அண்ணே... இப்டி போன் போட்டு கலாய்க்கற கெட்ட பழக்கத்தை இன்னும் விடலயா நீங்க? :)

    ReplyDelete
  7. ஓவர் அழும்பு இதெல்லாம் :).

    இதே மாதிரி ரூபாய் நோட்டில் அட்ரெஸுடன் கெட்டவார்த்தை கவிதை எழுதிய ஆள லெட்டர் போட்டு கலாய்ச்சு கடைசில அவங்க ஊர் நாட்டாமை பஞ்சாயத்து ல குத்தம் போடும்வரைக்கும் அவன இழுத்துவிட்டிருக்கோம்.

    ஆனா பாவம் அந்த அப்பாவி காதலன் காத்து...

    ReplyDelete
  8. அபி அப்பா, சூப்பர் !!!!!!!!

    ReplyDelete
  9. ஹாஹா. செம காமடி அபி அப்பா. முந்தின பதிவும் ரொம்பவே ரசித்தேன்.

    ஆபிஸ் டென்ஷன்களுக்கு நடுவில் நல்லா சிரிக்க வெச்ச உங்களுக்கு ரொம்ப நன்னி. :))


    குசும்பனுக்கு குடுங்க இந்த நம்பரை.

    ReplyDelete
  10. :)))))இதெல்லாம் நிஜம்மாவே நடத்தறீங்களா..இல்லை கற்பனை எதும் கலக்கறீங்களா...

    ReplyDelete
  11. //"ம் இதுக்கு முன்ன மைசூர் மகாராஜா வச்சிருந்தாரு, அதுக்கு முன்ன சொப்பன சுந்தரி வச்சிருந்தாங்க, ஆனா அவங்களை யார் வச்சிருக்காங்கன்னு தெரியாது. போனை வைய்யா"//

    :-)))))))))))))))

    ReplyDelete
  12. புனிதாவுக்கும் ,காத்தவராயனுக்கும் கல்யாணம் ஆச்சான்னு கேட்டு சொல்லிடிங்கன்ன எங்களுக்கு நிம்மதியா பூடும்

    ReplyDelete
  13. :-) :-) :-) :-)

    ithu karpanai kathaiyaaa ??

    ReplyDelete
  14. சிரிச்சுக்கிட்டே இருக்கேன்

    ReplyDelete
  15. ஐயோ.. வேலையே செய்ய முடியலயே..இந்த அபி அப்பாவை யாராவது ஏதாவது பண்ணி அடக்குங்கப்பா...


    செம காமெடி தலைவா...

    ReplyDelete
  16. சூப்பர் .!
    நன்றாக ரசித்து சிரித்தேன் !

    ReplyDelete
  17. துபாய் பஸ்ஸ்டாண்ட்ல உக்காந்து எழுதினதா ஸார்..? சிரிப்போ சிரிப்பு.

    அப்புறம் நம்ம புத்தகக் கதைய எப்ப எழுதுவீங்க..?

    ReplyDelete
  18. //அதன் பேரு தான் விமானம். ஆனா அது ஒரு மானம் கெட்ட விமானம்.////

    ஹா ஹா ஹா ;)

    ReplyDelete
  19. செம கலக்கல் காமெடி.. :))

    ReplyDelete
  20. கலக்கிட்டீங்க அபி அப்பா!. படித்து, ரசித்து, சிரித்து சிரித்து வயிறு வலியே வந்துட்டு போங்க...
    [:D] [:D]

    ReplyDelete
  21. :))))))))))))))))))))

    உங்களுக்கே
    உங்களுக்கு
    கைவந்த கலைங்க!
    இந்தமாதிரி கலாய்ச்சு
    எழுதுறதும்
    செய்யிறதும்!

    சூப்பர்ண்ணா!

    ReplyDelete
  22. சூப்பர் தலைவா. செம காமெடி.

    ReplyDelete
  23. நல்லா சிரிக்க வைச்சிட்டீங்க,

    நல்லாருக்கு. நம்ம கிட்ட ஒரு கதை உண்டு. இவ்வளவு சுவார்சியமா வருமா தெரியலை, முயற்சி பன்றேன்.

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))