பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

April 19, 2010

சூடான இட்லி+ நெய்+ ஜீனி 20/04/2010

குட்டி குழைத்து நாய் தலையிலே வைப்பது என்பது இது தான். கொச்சிக்கு ஒரு டீம் வேண்டும் என ஆசைப்படுவது தப்பே இல்லை. அது கிடைச்ச அன்னிக்கே ஸ்ரீசாந்து கொச்சன் பஞ்சாப் டீமில் ஆடிகிட்டு இருந்தவன் "ச்சேட்டன் சசியேட்டனுக்கு நன்னி நன்னி"ன்னு கூவியிருந்திருக்க வேண்டாம். அது தவிர "ஞான் அடுத்த பிராயஷம் எங்க கொச்சி டீமுக்காகத்தான் டான்ஸ் ஆடுவேனாக்கும். ஈ தள்ளிபுளி டீமுக்கு ஆடமாட்டேன்"ன்னு ஸ்டேட்மெண்ட் விட்டது தான் ஜூப்பரு.

போன தடவை பாஜி விட்ட அறையை நினைச்சா எனக்கே இப்பவும் வலிக்குது. சொரனை கெட்ட ஸ்ரீசாந்து குட்டனுக்கு ஓர்மையில்லை. ஏற்கனவே ட்விட்டர், ஃபேஸ்புக், பிளாக்குன்னு சசிதரூர் நாத்தம் தாங்கலை. போதாகுறைக்கு சீனியர் மினிஸ்டர் எஸ்.எம். கிருஷ்ணா எல்லாம் "வாயை வச்சிகிட்டு ஒழுங்கா இருடா கம்முனாட்டி. உனக்கு M.K. நாராயணன் மாமாவா இருந்தா எனக்கு என்ன! மூஞ்சிய பேத்துடுவேன்"ன்னு செல்லமா சொல்லி பார்த்தும் கேட்டானா அந்த மைனர் மங்குனிபாண்டி! அதான் இன்னிக்கு பிரதமர் "கொஞ்சம் பின்னால திரும்பு"ன்னு சொல்லி உதைச்சு அனுப்பினார்.


****************





மயிலாடுதுறை பாலம் இடிச்சதை எழுதின உடனே சீமாச்சு அண்ணன் போன் செஞ்சு "அய்யய்யோ நான் அங்க வந்தா எப்படி நம்ம ஸ்கூலுக்கு போவேன்"ன்னு உணர்ச்சி வசப்பட நானு கொஞ்சம் ஆடித்தான் போயிட்டேன். அவர் அதிர்சி அடைந்ததுக்கு கான்கிரீட் காரணம் இருக்கு.

வரும் வெள்ளிகிழமை மயிலாடுதுறை - சென்னை ரயில் நிப்பாட்டிட்டு வெள்ளியோட வெள்ளி எட்டு நாளைக்குள்ளே அகலமா ரயில் விடுவோம்ன்னு சொல்லி அது ஆச்சு 236 வெள்ளி ஆச்சு. எந்த அதிகாரிகிட்டயாவது ரயில் என்னாச்சுன்னு கேட்டா கட்டை விரலை ஒரு மாதிரியா வச்சு காமிக்கிறாங்க. ஆனா பாலம் விஷயம் அப்படி இல்லை போலிருக்கு. போட்டோ பாருங்க. வேலை நடக்குது. சந்தோஷம்.


*******************



பதிவர் மாயவரத்தான் இந்த போஸ்ட்டரை பார்த்து நாக்கை பிடுங்கிகிட்டா அதுக்கு நீடூர் நிஜாமுதீன் மீது சத்தியமாக நான் காரணம் இல்லை . போஸ்டர் கிடக்கட்டும். ஒரு சிட்டிசன் அதுக்கு கீழே "அப்ப நான் என்ன குறிஞ்சிப்பாடியா?"ன்னு எழுதியிருந்ததை பார்த்து குபீர்ன்னு சிரித்துவிட்டேன். ஓடிப்போய் கேமிரா எடுத்து வரலாம் என நினைத்த போது "மயிலாடுதுறை பேருந்து நிலையத்துக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை"ன்னு ஒரு கம்யூனிஸ்ட் தோழர் அதன் மேல் ஒட்டி போஸ்டர் ஒட்டி விட்டார். நான் என்ன செய்ய? அதான் இருந்த ஒரு போஸ்ட்டரை எடுத்தேன். பார்த்து மகிழ்க!

****************

குமுதம் ரிப்போர்ட்டரில் சாரு எழுதும் நித்யானந்தா தொடரில் "நான் ராகசுதாவை மிரட்டினேன் அது பற்றி பிறகு சொல்கிறேன்" "நித்யானந்தா ஒரு திருநங்கை அதை பிறகு சொல்கிறேன்" " நித்யானந்தா ஒரு காம பிசாசு அதை பற்றி பிறகு சொல்கிறேன்" " நான் கேரளாவில் லாடுலபக்கு தாஸ் அது பற்றி பிறகு சொல்கிறேன்" என ஒரு கட்டுரைக்கு குறைந்த பட்சம் நான்கு "பிறகு சொல்கிறேன்"ன்னு சொல்கிறார். அநேகமாக 500 வாரம் வரும் போல இருக்கு. அதுக்குள்ள வேற சாமியார் வந்து சூப்பர் குத்தாட்டம் போட்டு சாருவின் போஜனத்துக்கு வேட்டு வைத்து விட போகிறார். எனக்கு ஒரு சந்தேகம். யோவ் இத்தனை வாரம் அவனை பத்தி எழுத செய்தி வச்சிருக்கியே! அதல்லாம் அவன் மாட்டின பின்ன தான் எழுதனும்ன்னு தோனுச்சா? மனசாட்சி இல்லாத எழுத்தாளன் நீ!

*************

மயிலாடுதுறையின் அடுத்த சட்டமன்ற உறுப்பினர் இவர் தான் என நான் எழுதிய பதிவுக்கு வந்த ஒரு பின்னூட்டத்தில் தற்போதைய எம்.பி ஓ.எஸ்.மணியன் பத்தி ஒருத்தர் கேட்டிருந்தார். நான் என்னத்த சொல்ல? அவர் தன் சொந்த கட்சிகாரர்களிடம் அடிவாங்குவதாக இருந்தாலும் வேதாரண்யத்தில் போய் தான் அடி வாங்குகிறார். அந்த பாக்கியத்தை கூட மயிலாடுதுறைக்கு கொடுப்பதில்லை என்பதை வருத்தமுடன் பதிவு செய்கிறேன்.

************

ஏப்ரல் 2ம் தேதி கொல்லுமாங்குடியில் வெற்றிகொண்டான் மீட்டிங். நண்பன் வரத.கோ.ஆனந் கூப்பிட்டதுக்காக போனேன். அவர் மீட்டிங்ல பேசினது ஒரு மணி நேரம் தான் எனினும், தனியாக பேசி கொண்டிருந்த போது எனக்கு சிரித்து சிரித்து வயிறு வலித்தது ஒரு மறக்க முடியாத அனுபவம்.

"காங்கிரஸ் பசங்க எல்லாரும் நல்ல பசங்க தான். இந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோ தம்பி தான் எதுனா உளறிகிட்டே இருக்கும். பாவம் அதும் ஜெயிச்சிருந்தா வாயை மூடிகிட்டு இருந்திருக்கும். அரசியல் பண்ணனுமா இல்லையா? அதான் ராகுல் தம்பி வரும் போதெல்லாம் "காங்கிரஸ் தனியா நிக்கினும் தனியா நிக்கினும்"ன்னு சொல்லிகிட்டு இருந்துச்சு. சரின்னு அந்த தம்பியும் தனியா நிக்க சொல்லி தேர்தலும் வந்துச்சு. நாம அதில இத்தனை இடம் வேணும்ன்னு கேட்கவும் இல்லை. அவங்களும் தரலை. பிரசாரத்துக்கும் நாம போகலை. அத்தனை ஏன் ஓட்டு போட கூட நாம போகலை. இதான் கூட்டனி தர்மம்" ன்னு அவர் சொல்லி கொண்டே போக எல்லாருக்கும் திகைப்பு. மேலும் அவர் " அட ஆமாய்யா. இளைஞர் காங்கிரஸ் தேர்தல் தானய்யா சொல்றேன்"ன்னு சொன்ன போது அந்த இடத்தில் வெடிச்சிரிப்பு. பாருங்க இத்தனை நாள் இதை நான் யார் கிட்டயும் சொல்லலை ஆனா ஆனந்த விகடன்ல நானே கேள்வி நானே பதில் பகுதியிலே யாரோ எழுதி பெயர் வாங்கிட்டு போயிட்டாங்க!

**********************

என்னது இந்த இட்லி நெய் சூடாக இருக்கின்றது??

தம்பி நட்டு சோபாவில் உட்காந்து ஏதோ சாப்பிட்டு கொண்டு இருந்தான். வழக்கம் போல நானும் அபியும் சோபாவின் கீழே உட்காந்து டீ வி பார்த்து கொண்டிருந்தோம். அவன் கால் நல்ல வாகாக அபியின் முகத்துக்கு இருந்தது. சும்மா ஜாலியா ஒரு உதை விட்டான். நிலைகுலைந்து கீழே விழுந்த அபி செம கோவத்துடன் அவனை அடிக்க கை ஓங்க அன்று காலையில் தான் பாத்ரூமில் விழுந்து தம்பி நெற்றி அடிபட்டு ரத்தம் வந்து மருந்து போட்டிருந்த காரணத்தால் அவனை அடிக்க மனம் வராமல் கோவித்து கொண்டு ரூம் போய் கதவை சாத்தி கொண்டாள்.
நடந்த சம்பவத்துக்கான முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நான் அமைதியாக இருக்க நம்ம அக்கியூஸ்ட் கொஞ்சம் பயந்து போய் எப்படியும் அம்மாவிடம் அடி விழும் என நினைத்து அவனே ஒரு பொய் அழுகை அழுது அவன் அம்மாவிடம் கிச்சனுக்கு போய் "அம்மா என் (உள்ளங்)கால்ல அக்கா மூஞ்சிய வச்சு இடிச்சுட்டா"ன்னு அழ அது சரியா புரியாத அபிஅம்மா "அடடா தங்கம், இனிமே எங்கயும் இடிச்சுக்காதடீ இரு மருந்து போடுறேன்"ன்னு சொல்லி காலில் மருந்து தடவ எனக்கு ஏமாற்றமாக போய் விட்டது. சின்ன அக்காவை உதைத்து எத்தனை தடவை அம்மாகிட்ட அடி வாங்கியிருப்பேன். இப்படியும் மாத்தி சொல்லலாமோ???

****************

April 12, 2010

வேர் ஈஸ் த பார்ட்டி! அட எங்கூட்டுல பார்ட்டி!!!

இது முழுக்க முழுக்க நட்ராஜ் அப்டேட்ஸ் தான்



சிம்பு பாட்டுன்னா ரொம்ப ஆசை. உடனே டான்ஸ் தான். அதிலும் வேர் ஈஸ் த பார்ட்டி, நலந்தானா எல்லாம் டி வியிலே போட்டா செம டான்ஸ் தான். அபிக்கு பத்தாம் தேதி முதல் கோடை விடுமுறை ஆரம்பித்த அன்று வேர் ஈஸ் த பார்ட்டிக்கு அதே காஸ்ட்டியூம்ல கலக்கினான்.
****************


"அப்பா ஒரு கதை சொல்லு"

அவன் வழக்கம் போல என்னை கதை சொல்ல சொல்லி பின்னே அவன் சொல்லி அதிலேயே நான் தூங்கி போவதும் அவன் ஓடி போய் பாத்டப்பில் தண்ணீர் பிடித்து தொம் தொம்ன்னு விழுந்து அவன் அம்மாவிடம் தொம் தொம்ன்னு அடி வாங்கி தூங்குவதும் வழக்கம் தான்.

"அப்பா ஒரு கதை சொல்லு"

"ஒரு ஊர்ல நட்ராஜ்ன்னு ஒரு பையனாம்"

"மாயவரமா?"

"ஆமாம். அவன் யூனிபாஃர்ம் எல்லாம் போட்டு கிட்டு ஸ்கூல் போனானாம்"

"அய்யே ஆய் கதை. அது வேனாம்.நல்ல கதை சொல்லு"

"சரி ஒரு ஊர்ல ஒரு ஸ்கூலாம்"

"அப்பா அசிங்க அசிங்கமா பேசாதே. உனக்கு கதையே தெரியலை. நான் சொல்லட்டுமா?"

"சொல்லு"

"ஒரு ஊர்ல அவயாம்பான்னு ஒரு யானையாம்"

"மாயவரமா?"

"ஆமா. நம்ம அவயாம்பா யானை தான். அது நேத்து வீட்டுக்கு வந்துச்சுப்பா. நம்ம அப்பா எங்கன்னு கேட்டுச்சு"

அதுக்கும் நான் தான் அப்பாவா? அடராமா!

"நீ என்ன சொன்ன?"

"அப்பா தூங்குறாங்க அப்புறமா வான்னு சொன்னேன். அது கேக்கலை. கேட்டை திறந்து கிட்டு வந்துச்சு. நான் அது வாலை பிடிச்சு சொய்ங் சொய்ங்ன்னு சுத்தி மாடிக்கு தூக்கிகிட்டு வந்து மாடில இருந்து கிரவுண்டுல தூக்கி போட்டேன். அது தொபக்கடீன்னு விழுந்துச்சு. அப்புறமா நின்னு அழுதுகிட்டே இருந்துச்சு. நான் போய் ஒரு உதை டமால்ன்னு. அது குடுத்தேன். அது அழுதுகிட்டே ஓடிடுச்சு"

அபிஅம்மாவுக்கு சரியான கோவம். "என்ன ஒரு கற்பனை. பிளாக் ஆரம்பிச்சு குடுங்க. அபிதம்பின்னு பேர்ல எழுதட்டும். தமிழ்மணம் தழைச்சு வளரும்"ன்னு கடுப்படிச்சுட்டு தூங்கினாங்க. பொறாமை!

*************

எல்லா அப்பா அம்மாவும் எல்லா பிள்ளைகளிடமும் கேட்கும் அந்த கேள்வியை நான் ஏண்டா நட்ராஜிடம் கேட்டோம் என ஆகிவிட்டது.

"தம்பி பின்னால எனக்கு சோறு போடுவியா?"

"மாட்டேன்"

"ஏண்டா?"

"வாயில தான் போடுவேன்"

எனக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்.

****************



என் வீட்டுக்கு எதிரே கிரவுண்ட். எல்லா பள்ளியும் கோடை விடுமுறை விட்டாச்சு. கிரவுண்டு முழுக்க வானரம் ஆயிரம். அதிலே நட்ராஜ் ஆயிரத்தில் ஒருவன். ஐந்து நிமிடம் கூட வெய்யிலை வேஸ்ட் பண்ணுவதில்லை. கிரிக்கெட் பிட்ச் மூணு போட்டுட்டானுங்க. காலை ஆறு மணிக்கு ஆரம்பமாகும் விளையாட்டு இரவு ஏழு வரை தொடர்ந்து ஆட்டம் தான்.

நேற்று மாலை 5 மணிக்கு ஒரே சத்தம். பசங்க அடிச்சிகிறாங்க போலருக்குன்னு ஓடி பார்த்தேன். திக்குன்னு ஆச்சு. ஒரு 5 அடி நீள பாம்பு. நல்ல பாம்பு. அதல்லாம் எப்போதும் அந்த கிரவுண்டுக்கு பின்புறம் உள்ள வயலிலிருந்து கிரவுண்டு வழியா வந்து என் வீட்டுக்கு பின் பக்கம் உள்ள அதன் அத்தை மாமா வீட்டுக்கு வந்து குசலம் விசாரிப்பதும், நம்ம பக்கம் உள்ள பாம்புகள் "பையா" படம் பார்த்தியா? தமண்ணா எப்படின்னு கேட்க அந்த பக்கம் போய் வருவதும் சகஜம் தான். ஆனா பசங்க விளையாடும் போதெல்லாம் வரமாட்டாங்க. இது ஏதோ விருந்தாளி பாம்பு போல இருக்கு. பழக்க வழக்கம் பத்தலை. பசங்க விளையாடும் போது தைரியமா பிட்ச் வழியா வர இந்த பசங்க அதை அடித்தும் கொல்லாமல் விரட்டியும் விடாம அதை பப்பூன் ரேஞ்சுக்கு வாலை பிடித்து சுழட்ட அது குவாட்டர் அடிச்ச கோயிந்தன் மாதிரி ஆகிடுச்சு.


அதல்லாம் எனக்கு பிரச்சனையே இல்லை. அந்த வானர கூட்டத்தில் நட்டு பண்ணின அடம் தான் எனக்கு வயித்தில் புளி கரைத்தது. அவனும் தூக்கி தட்டாமாலை சுத்தனும்ன்னு அடம். பாம்பு போடும் முன்னே அபிஅம்மா அவனை முதுகில் ரெண்டு போட்டு தூக்கி வந்தாங்க. எனக்கு தான் கால் நடுக்கம் நிற்க அரை மணி ஆகியது.


********************

வீட்டில் மர வேலை செய்யும் போது தம்பியை மிரட்ட ஒரு அழகான தேக்கு மர குச்சி நல்ல இழைத்து வாங்கி வைத்து கொண்டேன். அதை காட்டி மிரட்டலாமென நினைத்து. ஏண்டா அப்படி ஒரு குச்சி செய்தோம் என ஆகிவிட்டது எனக்கு.


அவன் எதுக்காவது அழுது அடம்பிடித்தால் "என்னங்க அந்த குச்சியை எடுத்து மிரட்டுங்க அப்ப தான் சிரிப்பான்" என அபிஅம்மா சொல்லும்போது எனக்கு தான் அழுகை வருகின்றது. "நீங்க அதை எடுத்து மிரட்டும் போது எனக்கே சிரிப்பு சிரிப்பா வருது"ன்னு அவங்க சொல்லும் போது எனக்கு பத்திகிட்டு வருது. நான் அந்த குச்சியை எடுத்தாலே ஒட்டுமொத்த குடும்பமும் கெக்கெபிக்கேங்குது. என்னை பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்குதாம். அடுத்த ஜென்மத்திலாவது விருமாண்டி மீசையோட பிறக்கனும்.

*********************

இப்போதெல்லாம் தமிழ் வார்த்தைகள் எதுவாக இருந்தாலும் தனி தனியாக ஸ்பெல்லிங் (தப்பாகத்தான்) சொல்லி தானே பழக்குகிறான். அம்மா என்றால் அ, மா அம்மா, அப்பா என்றால் அ, பா அப்பா, சாப்பாடு என்றால் சா, பா, டு என்று தானே சொல்லி பார்த்துப்பான். அதிலும் லேட்டஸ்ட் ட்ரண்ட் word jumping தான்.

உண்மை தமிழன்ன்னு சொல்லுன்னு சொன்னா தன்மை உமிழன்னு சொல்றான். குசும்பன் சரவணன்ன்னு சொல்ல சொன்னா சசும்பன் குரவணன் என்கிறான். தொல்காப்பியன் என சொல்ல சொன்னால் கால் தொப்பியன் என்கிறான். நல்ல வேளை இன்னும் ஆத்தி சூடி சொல்லி கொடுக்கவில்லை.
****************

April 6, 2010

என் உச்சி மண்டையிலே சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ங்குது!!!!

இன்று மதியம் எதேற்சையாக ரிமோட் மேலே உட்காந்து விடவே நடிகை லட்சுமியின் கதை அல்ல நிஜம் பார்த்து தொலைய நேரிட்டது. வழக்கம் போல அந்த அம்மா ஒரு பெரிய சோபாவில் உட்காந்து கட்ட பஞ்சாயத்து பண்ணிகிட்டு இருந்துச்சு. எதிரே ஒரு புருஷன் பொண்டாட்டி உட்காந்து இருந்தாங்க. அந்த பொண்டாட்டி சொல்லுச்சு. " மூணாவதா என்னை முருகன் கல்யாணம் பண்ணிகிட்டாருங்க" எனக்கு பக்குன்னு ஆச்சு. என்னடா இது இந்த லட்சுமிக்கு வந்த சோதனை. இந்தம்மா என்ன தீர்ப்பு சொல்ல போவுதுன்னு ஆர்வமா பார்த்தேன்.

லட்சுமி: முதல் இரண்டு மனவி யாரும்ம்மா?

பெண்மணி: முதல் மனைவி தெய்வானை, இரண்டாவது மனைவி வள்ளிங்க!

கேட்டுகிட்டு இருந்த என் உச்சி மண்டையிலே சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ங்குது.

லட்சுமி: என்னம்மா நீங்க சொல்றது எந்த முருகன்மா?

பெண்மணி: அதாங்க தமிழ் கடவுள் முருகன். நான் கோவையை சேர்ந்தவள். பக்கத்துல ஒரு மலை மேலத்தான் எங்க கல்யாணம் நடந்துச்சுங்க. கல்யாணத்துக்கு எங்க மானனார் மாமியார் எல்லாம் கூட வந்திருந்தாங்க.

லட்சுமி: யூ மீன்????

பெண்மணி: ஆமாங்க சிவனும், பார்வதியும் தான்.

லட்சுமி: உங்க பக்கத்துல இருப்பது யாருங்க?

பெண்மணி: என் முதல் புருஷன்ங்க. எங்களுக்கு இரண்டு பையன் கூட இருக்காங்க.

அந்த கணவனும் ஆமாம்ன்னு ஒத்துகறார். அவர் இரண்டாவது புருஷனாம்.

லட்சுமி: சரி முருகனே உங்களை வச்சிருக்காரு. அப்படின்னா வர்ர தேர்தல்ல மாநிலத்தில், மத்தியில் யார் ஜெயிப்பாங்க சொல்லுங்க.

பெண்மணி: இப்ப இருக்குற ஆட்சி நல்லா இருக்கு. அதனால கீழ இவங்க தான். மேல சோனியா தான்.

என்னால முடியலை. அதுக்குள்ள இரண்டு மூன்று போன் கால். உடனே "விஜய் டிவி பாருங்க சித்தப்பான்னு கிருஷ்ணாவின் அக்கா பொண்ணு, என் அக்கா எல்லாரும்."செம காமடியா இருக்கு பாருங்கன்னு கமெண்ட் வேற. என்ன கொடுமைடா. அந்த பெண்மணி என்ன அழகா அழுத்தம் திருத்தமா பேசிகிட்டு இருக்காங்க. பாவம் நடிகை தான் முகம் பேஸ்த் அடிச்ச மாதிரி ஆகிட்டாங்க. இது நடுவே தம்பிக்கு மதியம் சாதம் ஊட்டுவதற்காக அபிஅம்மா சுட்டி டிவி மாத்தி பூம்பா பார்க்க நான் ஓடி போய் மாடியில் விஜய் டிவியில் ஐக்கியமானேன். அதுக்குள்ள வேற ஒரு அம்மணி நல்ல கைரேகை பார்க்கும் அம்மணி மாதிரி பெரிய பொட்டு, பட்டு புடவைன்னு ஜகஜோதியா இருந்தாங்க.அவங்க ஊர் கரூர்ன்னு சொன்னாங்க.

லட்சுமி: உங்க பேர் என்னம்மா?

பெண்மணி: என் பேரும் லட்சுமி தான். நான் போகர்ன்னு ஒரு சித்தரோட வாரிசு.

லட்சுமி: அப்படியா? போகர்ன்னா அந்த பழனி கோவில் போகரா?

பெண்மணி: ஆமாம். நான் இப்போ போகர் தான் பேசுறேன். ஒன்பது நவபாஷானத்தால அந்த சிலை செஞ்சேன்.

லட்சுமி: நவ பாஷானம்ன்னாவே ஒன்பது பாஷானம் தான். அது என்ன ஒன்பது நவபாஷானம்?

பெண்மணி: நான் சீனாவெல்லாம் போயிருக்கேன்.

லட்சுமி: அப்படியா? அங்க உங்க பேர் என்ன?

பெண்மணி: அங்க என்னை போப் ஆண்டவர்ன்னு சொல்லுவாங்க. அங்க தான் நான் அக்குபஞ்சர் கண்டுபிடிச்சேன்.

கேட்டுகிட்டு இருந்த எனக்கு பஞ்சர் ஆகிடுச்சு.

தொடர்ந்து லட்சுமி நவபாஷானம் பெயர் எல்லாம் கேட்டு பரிட்சை வைக்க அந்த அம்மா(அதான் போகர்) செம கடுப்பாகி ஜாக்கெட் உள்ளே இருந்த மைக்கை கழட்டி வீசிட்டு செட்டை விட்டு வெளியே போய் லெட்சுமியை வண்டை வண்டையா திட்டிகிட்டு போய் காரில் ஏறி உட்காந்துகிட்டுச்சு. பின்னாலயே அந்த அம்மாவின் பக்த கம்மனாட்டிகள் ஸாரி பக்தகோடிகள். பாவம் சிவசந்திரன் கூட இப்படியெல்லாம் திட்டியிருக்க மாட்டாங்க லட்சுமியை. அத்தனை திட்டு.

ஹாட்ஸ் ஆஃப் டி விஜய் டிவி! அடிக்கடி இந்த மாதிரி ஒரு காமடி நிகழ்ச்சி காட்டியமைக்காக!

அதல்லாம் விடுங்க. இனி நம்ம விஷயத்துக்கு வாங்க. இன்னிக்கு டாக் ஆஃப் தமிழ்நாடு இந்த செய்தி தான்.அரசியல் வாதிங்க சும்மா இருப்பாங்களா? அறிக்கை இல்லாத அரசியல் ஒரு அரசியலா?

*********************

கலைஞரின் கேள்வி பதில் அறிக்கை:

நிருபர்: கோவையை சேர்ந்த ஒரு அம்மா முருகன் மூணாம் தாரமா ஒரு பெண்னை கல்யாணம் பண்ணிகிட்டதா சொல்றாங்களே?

கலைஞர்: முருகன் தமிழ்கடவுள் என்பதால் இப்படி எல்லாம் அவப்பெயர் உண்டாக்குகின்றனர். இதே சிவ பெருமான் இரண்டு கல்யாணம் செய்து கொண்ட போது இராமகோபாலன்கள் வாய் மூடி மௌனியாக இருந்துவிட்டு முருகன் தமிழன் என்பதால் விஷயத்தை ஊதி பெரிதாக்குகின்றனர்.

நிருபர்: ஜெயலலிதா கூட இது பற்றி கண்டனம் தெரிவித்து இருக்கின்றாரே?

கலைஞர்: இதோ கோவையில் உலக செம்மொழி மாநாடு நடக்க இருக்கின்றது. தம்பி வைரமுத்து போன்ற உலக தமிழரிஞர் எல்லாம் கூட இருக்கின்றனர். அதை பொறுத்து கொள்ள முடியாத அந்த அம்மையார் இந்த கோவை பெண்மனியின் விஷயத்தை பெரிதாக்கி மாநாட்டுக்கு வரும் கூட்டத்தை தடுக்க செய்யும் சதியோ என நினைக்க தோன்றுகிறது.

நிருபர்: முடிவாக என்ன சொல்ல வருகின்றீர்கள்?

கலைஞர்: முடி இருக்கும் மகராசன் முருகன் வாரி முடிக்கின்றான். இவர்களுக்கு என்ன இது பற்றி!

**************************

ஜெயா டிவி மாலை செய்தி:

கோவையை சேர்ந்த ஒரு அபலை பெண்ணை மூண்றாம் முறையாக முருகன் திருமணம் செய்து கொண்டிருப்பதாகவும், அதற்கு மைனாரிட்டி திமுக அரசு பக்க பலமாக இருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் கலாச்சாரம் இந்த மைனாரிட்டி திமுக அரசில் இப்படி காற்றில் பறந்து கொண்டிருக்கின்றது. கூறை ஏறி கோழி பிடிக்க முடியாத மைனாரிட்டி மைனர் கருனாநிதி வானம் ஏறி வைகுண்டம் போக போகிறாரா? (ஏதாவது ஒரு பழமொழி சொல்லியே ஆக வேண்டும்) இதே தானை தலைவி என்னுடைய ஆட்சியில் எந்த ஒரு பெண்ணுக்காவது திருமணம் ஆனதுண்டா? அந்த அளவு கட்டு பாட்டுடன் நாங்கள் கண்ணியத்துடன் நடந்து கொண்டோம். இன்னும் சொல்ல போனால் கல்யாணம் ஆன பெண்களை கூட புருஷனிடம் அனுப்பாமல் தோழி போல் காப்பாற்றும் பொற்கால ஆட்சியல்லவா நடத்தினோம்.


*****************

சிவசங்கர் மேனன் அறிக்கை:

எண்டே குருவாயூரப்பா! இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு எந்த வித அச்சுருத்தலும் இல்லை. முருகனின் ஹெல்த் பாதுகாப்புக்கு உள்துறை அமைச்சகமே பொறுப்பு.

*************

மத்திய அரசின் நிருபமா ராவ்:

நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகின்றது.

*****************

மதிமுக வைக்கோ:

தேம்ஸ் நதிக்கரையில் டும்பாக்கோ டுபாக்கோ என்னும் கிரெக்க கடவுள் 36000 திருமணம் செய்து கொண்டதாக சிந்து சமவெளி நாகரீக வரலாற்று பதிவே மெஸபடோமியா கல்வெட்டில் இருக்கின்றது . இனி ஒரு மலையாளியும் பழனிக்கு வரக்கூடாது. வந்தால் பழனி எல்லையில் தடுப்போம். கொக்கரகோ கும்மாங்கோ.

***************

டாக்டர் அன்புமணி:

அவர் எத்தனை திருமணம் செய்து கிட்டாலும் கவலை இல்லை. ஆனால் அவர் கோவில்களில் அவர் மது அருந்துவதோ அல்லது தம் அடிப்பது போல சிலை வைத்தால் நாங்க கடுமையா எதிர்ப்போம். ஏன்னா அது உடல் நலத்துக்கு தீங்கு. தவிர முருகன் பிரபலமானவர். அவரை பார்த்து அவர் பக்தர்களும் தம் அடிப்பாங்க. அதுக்கு பதிலா அபினோ, கொக்கய்னோ வாயிலே சிக்லெட் மாதிரி போட்டு அடக்கி கிட்டா ஒன்னும் சொல்ல மாட்டோம். அதை மீறி நடந்தா நான் ஒன்னும் செய்ய மாட்டேன். எங்க தொண்டர்கள் முருகன் கோவில்ல நுழைந்து உண்டியல் பெட்டிய தூக்கிகிட்டு ஓடும் போராட்டம் நடத்துவாங்க!

பொதுமக்கள்:

நல்லவேளை அந்த பெண்மனி இப்படி சொன்னது முருகனுக்கு தெரியாது. அடுத்து கலைஞருக்கும் எனக்கும் கல்யாணம் நடந்துச்சுன்னு சொல்லாம இருந்துச்சே. சொல்லியிருந்தா என்ன ஆயிருக்கும். அந்த பெண்மனிக்கு வேற இரண்டு பையன் இருக்காங்கலாம்! தமிழகத்தை கடவுள் தான் காப்பாத்தினாரு!

குறிப்பு: மக்கா! இன்னும் கனிமொழி, திருமா, ராம் சேனா தலைவர், வீரமணி கருத்துகள் எல்லாம் இருக்கு. அதை எல்லாம் நீங்க பின்னூட்டத்திலே சொல்லிடுங்க எனக்கு நேரமில்லை!