பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 29, 2013

இன்று "அம்மா" திறந்து வைக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டமும் ஒரு சின்ன கதையும்!

அவ்வப்போது வந்து பணிகளை பார்வையிடும் மு.க.ஸ்டாலின்


பழைய தமிழ் படங்களில் ஒரு வசனம் வரும். "உன்னை தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்றிவிடுவேன்". எல்லா அரசாங்க உத்யோகஸ்தர்களுக்கும் இந்த வசனம் சனி கிரகம் மாதிரி ஒரு முறையாவது கடந்து போகும். அந்த தண்ணி இல்லா காடுதான் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள். இத்தனைக்கும் காவிரி அதன் அருகே தான். இந்த அவப்பெயரை நீக்கத்தான் திமுக அரசு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வந்தது.


இந்த திட்டத்தின் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய நகராட்சிப்பகுதிகள், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 17 பேரூராட்சி பகுதிகள், 18 ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகள், ஆக மொத்தம் 6,755 குடும்பங்களை சேர்ந்த 30 லட்சம் மக்கள் பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீரை பெறலாம். அந்த திட்டம் கடந்து வந்த பாதையை பார்ப்போம்!



* 1997ல் பிப்ரவரி மாதம் திமுக ஆட்சியில் இதற்கான முதல் முயற்சி எடுக்கப்பட்டது. 576 கோடி ரூபாய் மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டமாக தொடங்கப்பட்டு  பின்னர் புளோரைடு வியாதிகளை தடுக்கும் அல்லது குறைக்கும் சுகாதார திட்டமும்  அத்துடன் இணைந்து இதற்கு ஜப்பானிய நாட்டு நிதி நிறுவனம் வழியே அந்த திட்ட மதிப்பீடு தொகை 576 கோடி இந்திய ரூபாய்களை பெற அனுமதி வேண்டி மத்திய அரசுக்கு திட்டம் அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது மத்தியில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி. வாஜ்பாய் பிரதமர்.





*1998 மார்ச் - திட்டத்துக்கான கள ஆய்வுப்பணி திமுக அரசால் ஆரம்பிக்கப்பட்டது. காவிரியில் இருந்து தண்ணீர் எடுக்க வேண்டி அதற்கான தடையில்லா சான்றிதழ் கோரி  மத்திய பாஜக அரசுக்கு திட்ட நகல் அனுப்பி வைக்கப்பட்டது.


*இதற்கிடையே தமிழகத்தின் திமுக ஆட்சி, ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் அந்த 576 கோடி ரூபாய் கடனாக கொடுக்க ஒப்புதல் அளித்தனர்.


* 1998  மே மாதம் வாஜ்பாய் அரசு பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியதன் விளைவாக ஜப்பான் கடன் தர மறுத்து விட்டது.


*1998 செப்டம்பர் மாதம் பாஜகவின் மத்திய அரசு தனது மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் மூலமாக காவிரியில் இருந்து தண்ணீர் எடுக்க அனுமதி கொடுத்து தடையில்லா சான்றிதழ் வழங்கியது.


*அதன் பின்னர் திமுக ஆட்சி காலத்தில் இரண்டாண்டுகள் வேறு எந்த வகையில் பணம் கிடைக்கும் என பல முயற்சிகள் எடுக்கப்பட்டன.  ஒன்னரை ஆண்டுகள் கழித்து நிலமை சீரானது. ஆனால் அதற்குள் 2001 தேர்தல் வந்ததது.


*2001 தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்து அதிமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் திமுக திட்டம் என்பதால் அது கைவிடப்பட்டது. அதிமுகவுக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி,ஓசூர் மக்கள் நலனை விட திமுகவின் திட்டத்தை நாம் செயல் படுத்துவதா என்னும் ஈகோவே ஜெயாவுக்கு பெரிதாய் இருந்தது. அதனால் 2001 முதல் 2006 வரை ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு ஒரு இருண்ட காலம் எனலாம். திட்டத்துக்கு மூடுவிழா நடந்தது அதிமுக ஆட்சியால்.


*2006 மே மாதம் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது.இந்த திட்டத்தை செயல்படுத்தும் உள்ளாட்சித்துறை அமைச்சகத்துக்கு தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அமைச்சர் ஆனார்கள்.


*11.8.2006ல் சட்டப்பேரவையில் உள்ளாட்சித்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது காவிரி நீரைக்கொண்டு மீண்டும் ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் தளபதி அவர்கள் அறிவித்தார். அதாவது 110 தலைவிதியின்படி  அல்ல. விவாதத்துக்கு பின்னர் எடுக்கப்பட்ட முடிவு அது.


*27.1.2007 அன்று ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசும் போது கலைஞர் அவர்கள் "ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனத்தின் நிதி உதவி கோரப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு (அப்போது காங்கிரஸ் அரசு) மிகுந்த முன்னுரிமை அதாவது தமிழ்ல சொல்லப்போனா ஃபர்ஷ்ட் ப்ரியாரிட்டி பேசிஸ் ல (இப்ப புரியுதா) இந்த திட்டத்துக்கு காசு கொடுக்கனும்னு ஜப்பான் காரன் கிட்டே சொல்லுச்சு. அப்புடியே ஜப்பான் காரன் காசு கொடுக்காட்டியும் தமிழக அரசு அண்டா  குண்டானை அடகு வச்சாவது வேற எப்படியாவது காசு புரட்டி இதை நாங்க செஞ்சுடுவோம்" என கலைஞர் அறிவித்தார்.


*23.3.2007 அன்று தமிழக பட்ஜெட்ல இதுக்கான வேலைக்கான ஆரம்ப கட்ட காசு ஒதுக்கியது திமுக அரசு. ஆரம்ப கட்ட வேலை எல்லாம் தொடங்கியது.


* 6.2.2008 அன்று தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு நிபுனர் குழுவோடு ஜப்பான் போனாரு. போகும் போதே காசு கேக்குறது கேக்குறோம் அப்படியே சென்னை மெட்ரோ வாட்டர் திட்டத்துக்கும் சேர்த்து கேட்போம் என கேட்டார். அங்க ஜப்பான் கூட்டுறவு வங்கியின் இயக்குனர் திரு. டிசியோகுசின்னு ஒருத்தரை பார்த்து 9,700 கோடி சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கும் அது போல அப்போதைய ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மதிப்பான 1330 கோடி ரூபாய் திட்டத்துக்கும் சேர்த்தே காசு கொடுங்கன்னு தளபதி கேட்டாரு.


* ஜப்பான் நிபுனர் குழு தமிழகம் வந்து ஆய்வு செய்தது. காசு கொடுக்கலாமா, கொடுத்தா சரியா திரும்பி வருமா என 2007ம் ஆண்டு அதே பிப்ரவரி, மாசம் வந்து ஆய்வு செஞ்சுது. உடனே ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி மெட்ரோ ரயில் திட்டம் 9,700 கோடி மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் 1,330 கோடி ரூபாய் இரண்டுக்கும் ஒப்புதல் கொடுத்து காசு கொடுத்தது. (படிப்படியாக வேலை முடிய முடிய காசு கொடுத்து கொண்டு வந்தது)
அதாவது திமுகவின் முந்தைய ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டதை 2001-2006ல ஜெயாவின் அதிமுக அரசு கைவிடாம தொடர்ந்து செயல் படுத்தி இருந்தா இதே திட்டம் 576 கோடி ரூபாய்ல முடிஞ்சு போயிருக்கும். மக்களுக்கும் அப்போதே தண்ணி கிடைச்சு இருக்கும். ஆனா அந்த 5 வருஷம் சும்மா கிடப்பிலே போட்டதால தமிழக மக்கள் பணம் 750 கோடி ரூபாய் எள்ளு. (ச்சீ தூ... ஜெயாவெல்லாம் ஒரு நல்ல அட்மினிஸ்ட்ரேட்டர்ன்னு சொல்லும் ஊடகங்கள் ஆரத்தி கரைச்சு வையுங்க, அம்மாவுக்கு ஆரத்தி கரைச்சு வையுங்கன்னு பாடுவதுக்கு பதிலா சாணிய கரைச்சு ஊத்துங்க, ஓயா மேல சாணிய கரைச்சு ஊத்துங்க"ன்னு பாடலாம்...ச்சீ தூ)


* 26.2.2008ல் தர்மபுரியில் நடந்த ஆரம்ப விழாவில் கலைஞர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் ஆரம்பம் ஆகியது.


* திட்ட செலவு விலைவாசி உயர்வினால் அதிகரித்தமையால் திருத்திய நிர்வாக ஒப்புதலின் படி திட்ட மதிப்பு தொகை 1928 கோடியே 80 லட்சம் ஆக உயர்ந்ததப்பட்டது.


*ஐந்து செக்டர்களாக வேலைகள் பிரிக்கப்பட்டது. முதல் செக்டர் வேலைகளுக்கு டெண்டர் விடப்பட்டது. மொத்தம் பத்து கம்பனிகள் அவங்கவங்க கம்பனி ஜாதகத்துடன் டெண்டர் அப்ளை செய்தனர். அப்படியே அதை மூட்டை கட்டி தமிழக அரசு ஜப்பன்ல கடன் கொடுக்கும் பேங்குக்கு அனுப்பியது. அவங்க ஜாதக பொருத்தம் எல்லாம் பார்த்து "இன்ன கம்பனிக்கு கொடுத்தா தான் ஒழுங்கா வேலை நடக்கும். அது ஒழுங்கா முடிஞ்சா தான் என் கடன் வசூலாகும்" என சொல்ல அதன் படி வேலை கொடுக்கப்பட்டது.


*அதே போல இரண்டாவது, மூன்றாவது ஐந்தாவது கட்ட வேலைகளுக்கும் டெண்டர் விடப்பட்டு  மேலே சொன்னது போல செய்யப்பட்டு வேலைகள் துரித கதியில் நடந்தன. உள்ளாட்சி துறை அமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாதம் ஒரு முறை கண்டிப்பாக போய் பார்த்து ஊக்குவித்துவிட்டு வந்தார்.



*ஜப்பான் பேங்கு சொன்னது போல அதாவது 2009 ஜூலையில் டெண்டர் எல்லாம் விடப்பட வேண்டும், 2009 டிசம்பரில் களப்பணிகள் ஆரம்பிக்க வேண்டும், 2012 டிசம்பரில் வேலை எல்லாம் முழுமையாக முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வர வேண்டும்.


* 2011 மே மாதத்தில் கிட்ட தட்ட 90 சத பணிகள் முடிந்து விட்டன. இன்னும் ஆறு மாத காலம் இதே நிலையில் வேலைகள் துரிதமாக நடந்தால் 2012 பிப்ரவரியில் திட்டம் அதாவது பத்து மாதம் முன்பாகவே முடிந்து இருக்கும்.


* ஆனால் தமிழக மக்களின் துரதிஷ்டம் காரணமாக 2011 மே மாதம் ஆட்சி மாறியது. திட்டம் சுனங்கிப்போனது. இன்னும் 10 சதம் வேலை மீதி இருக்கும் நிலையில்.... அதிமுக ஆட்சி இது திமுக திட்டம் என்கிற காரணத்தால் திட்டத்தின் மீது கவனம் செலுத்தவில்லை. தர்மபுரி, கிருஷ்ணகிரி மக்களின் தண்ணீர் தேவையை விட அதிமுக அரசுக்கு ஈகோ பிரச்சனை தான் முன்னே நின்றது.




* பணம் கொடுத்த ஜப்பான்காரன் தன் பணம் மீண்டும் கிடைக்க வேண்டுமே என நினைத்து தானே தன் ஆட்களை கொண்டு வந்து தமிழக அரசு ஒத்துழைப்பு அத்தனை சிறப்பாக இல்லாவிடினும் வேலை செய்தனர்.இன்று முழுமை பெறாமலேயே நாடாளுமன்ற தேர்தல் வருவதால் இன்று 29.5.2013 அன்று மிக தாமதமாக மிக மிக மிக தாமதமாக தமிழக அரசால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றது.


இது தான் ஒக்கேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கடந்த கால வரலாறு.


எனக்கு தெரிந்து ஒரு உண்மைக்கதை. ஒரு ஊர்ல ஒரு புருஷன், பொண்டாட்டி இருந்தாங்க. அவங்களுக்கு ஒரே பெண் குழந்தை. அம்மாக்காரி அத்தனை ஒரு நல்லவ இல்லை. பெண்ணுக்கு திருமண வயது வந்தது. அப்பாகாரர் அங்க இங்க கடனை வாங்கி திருமணம்  பண்ணி வைக்க போராடினார். கடன் வாங்க போன இடத்திலே பிர்ச்சனை. திருமணம் ஒத்திப்போனது. பின்னர் பிரச்சனை தீர்ந்த பின்னர் அப்பா மீண்டும் திருமண  ஏற்பாடுகள் செஞ்சாரு. ஒரு பைனன்சியர் அப்பாகாரரின் நாணயத்தை வந்து பார்த்து விட்டு மாப்பிள்ளையும் பெரிய இடம்.


கல்யாணம் முடிந்த பின்னர் மாப்பிள்ளை கூட தனது கடனை அடைத்து விடக்கூடிய அளவு பெரிய இடம் தான். எனவே பைனான்ஸ் செய்தால் பணம் கண்டிப்பா திரும்பிடும் என நினைத்து பைனான்ஸ் செய்தார். கல்யாண வேலை எல்லாம் ஜரூராக நடந்தது. நிச்சயம் கூட பெரிய விழாவாய் நடந்தது. பின்னர் எல்லா கல்யாண வேலையும் 90 சதம் முடிந்து தாலி கட்டும் நாளுக்கு முதல் நாள் அப்பா ஒரு வேலை கிடைத்து  வெளியூர் போய்விட்டார் வேறு வழி இல்லாமல். போனவர் எக்கு தப்பாய் ஒரு அக்ரிமெண்டில் கையெழுத்து போட்டுவிட ஐந்து வருடம் கழித்து தான் மீண்டும் தாயகம் திரும்ப வேண்டிய நிலை. கல்யாணம் கிடப்பில் போடப்பட்டது. தாலி கட்டும் நாள் "தேதி குறிப்பிடப்படமல்" ஒத்திப்போடப்பட்டது. பெண்ணின் அம்மா தான் கொஞ்சம் "அப்படி இப்படி"யாகிற்றே. பெண்ணின் கல்யாணம் பற்றி கவலைப்படவில்லை.தன் நல்ல புருஷன் பார்த்த மாப்பிள்ளைக்கு கட்டி வைப்பதா என ஈகோ காரணமாய் திருமணத்தை கண்டுக்காமல் விட பணம் கொடுத்த பைனான்சியர் தன் பணம் வர வேண்டுமே என்கிற நோக்கில் தானே திருமண வேலையை முன்னின்று நடத்த  ஒரு வழியாக மிக தாமதமாக திருமண  தேதி முடிவானது.


பெண்ணின் அம்மாவுக்கு வேறு வழி இல்லை. பத்திரிக்கை அடித்தாள். என்னவென்று. அப்பன் பெயரை போடாமல் ஏதோ தான் மட்டுமே பெத்த பெண் என்பது போலவும், தனே அந்த திருமணத்தை சிரமப்பட்டு பணம் புரட்டி ஏற்பாடு செய்தது போலவும் ஒரு பத்திரிக்கை. கல்யாணம் நல்லபடி முடிந்தது. ஆனாலும் அப்பன்காரன் சொன்னது போல முழு சீரும் செய்யாமல் ஏதோ அரைகுறையாக நடந்தது. பெண்ணை பெற்ற அப்பன் காரன் காதில் செய்தி விழுந்தது. ஏதோ இந்த மட்டிலும் செய்தாளே அந்த மகாபாவி என வாழ்த்தினார். எப்படியோ பெண்ணின் திருமணம் நடந்தால் சரி. மீதி சீர் வரிசை எல்லாம் தான் நாட்டுக்கு வந்த பின் முழுமையாக செய்வதாக பெண்ணிடம் சேதி அனுப்பினார்.


கல்யாணத்துக்கு வந்தவர்கள், அந்த தெருவில் இருந்தவர்கள் எல்லோருக்கும் அந்த பெண்ணின் அப்பனைப்பற்றியும் தெரியும். ஆத்தாளை பற்றியும் தெரியும். அம்மாகாரியை காறித்துப்பி விட்டு அந்த பெண்ணை வாழ்த்தி விட்டு போனார்கள். அந்த அம்மாகாரிக்கு என சில அல்லக்கைகள் இருக்குமே அதுகள் "அம்மா" வாழ்க என வாழ்த்துப்பா பாடுகின்றன. ஏற்கனவே நெம்மேலி கடல் நீரை சுவைநீராக ஆக்கி பெருமை கதையும் இப்படித்தான். வெட்கம் கெட்ட ஜென்மங்கள்!



இந்த மேற்கண்ட உண்மைக்கதைக்கும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட வரலாறுக்கும் ஒரு வித்யாசமும் இல்லை.


இன்னும் ஒரு விஷயம்... 98 சதம் வேலை முடிந்த பின்னர் தலைமை செயலகம் திமுக அரசால் திறந்து வைக்கப்பட்ட போது "செட்டிங்ஸ்" போட்டு ஒரு திறப்பு விழாவா? என கூப்பாடு போட்ட நடுநிலை நாயகம் எல்லாம் இன்றைக்கு சினிமா நடிகைகள் கிசுகிசுக்கள் எழுதிக்கொண்டு சிரித்துக்கொண்டு இருக்கின்றன. நடக்கட்டும் நடக்கட்டும். எல்லாவற்றையும் நாட்டு மக்கள் கவனித்து கொண்டு தான் இருக்கின்றனர்!!

10 comments:

  1. தினமணியில் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்று ஒரு வரி கூட எழுதவில்லை. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்கள்.உண்மையான, மானமுள்ள, இன உணர்வு மிக்கத் தமிழர்க்குத் தெரியும் இத்திட்டத்திற்கு முழுமுதற்காரணம் யார், 90சதம் வேலைகளை முடித்தது யார் என்று.

    ReplyDelete
  2. அவனா நீயி?

    ReplyDelete
  3. கோயம்பேடு பஸ் நிலையம் கூட இப்படி தான் என்று நினைக்கிறேன். மெட்ரொ ரயில் கதையும் அதே போல் ஆகி விட போகிறது.தற்போது இருப்பது போன்ற மின்வெட்டு தி.மு.க ஆட்சியில் இருந்திருந்தால் இந்த பத்திரிக்கைகள் எப்படி எழுதி இருக்கும் என்று நினைத்து பார்க்கிறேன். தி.மு.க ஆட்சியில் ஒவ்வொரு வாரமும் புதிய தொழிற்சாலைக்கான அறிவிப்பு வரும்(நல்லதோ கெட்டதோ அது வேறு விஷயம்). தற்போது அது போன்ற ஒரு செய்தி கூட வருவதில்லை. தி.மு.க ஆட்சியில் கருணாநிதி குடும்பத்தினர் ஆதிக்கம் தவிர்த்து administration ஓரளவு efficient ஆகவே இருந்தது.திமு.க ஆட்சியில் இலவச பொருட்கள் கொடுத்தால் அது மக்களை சோம்பேறியாக்குகிறார்கள் என்று அர்த்தம். அதிமுக ஆட்சியில் செய்தால் ஏழை மக்களுக்கு உதவுகிறார்கள் என்று அர்த்தம்.

    ReplyDelete
  4. இன்னும் கூட காறித்துப்பி கழுவி ஊத்தியிருக்கலாம் அப்படி யாவது அதிமுகவினருக்கு உறைக்குமா என்று பார்த்திருக்கலாம்

    ReplyDelete
  5. இன்னும் கூட காறித்துப்பி கழுவி ஊத்தியிருக்கலாம் அப்படி யாவது அதிமுகவினருக்கு உறைக்குமா என்று பார்த்திருக்கலாம்

    ReplyDelete
  6. //ஆக மொத்தம் 6,755 குடும்பங்களை சேர்ந்த 30 லட்சம் மக்கள் பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீரை பெறலாம்//

    ஒரு குடும்பத்துக்கு 44, 45 பேரா இருக்காங்க?

    ReplyDelete
  7. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))