பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

November 1, 2007

இவர் ஒரு மல்டி நேஷனல் கம்பனியின் முதலாளி! நம்புவீங்களா???



இவர் பெயர் மைன்கான். வயது 67 ஆகிறது. ஒரு வருடம் முன்ன என் கம்பெனியில் ஒரு 300 பேர் கொண்ட குழுவாக கூலி தொழிலாளிகள் பங்ளாதேஷிலிருந்து வந்து இறங்கினர். நேரிடையாக ஏர்ப்போட்டில இருந்து சைட்டுக்கு வந்துட்டாங்க. எல்லோரையும் ஐம்பது ஐம்பது பேரா வரிசையா நிக்க வச்சு ஸ்டீல் செக்ஷன், மேசனரி செக்ஷன், கார்பெண்ட்ரி செக்ஷன், கான்கிரீட் செக்ஷன் ன்னு யார் யாருக்கு தேவையோ பிரிச்சு கொடுத்து கிட்டு இருந்தாங்க. அப்போ மேலே சொன்ன மைன்கான் எல்லா வரிசையிலும் முதல்ல போய் நிற்பதும் அவரை கையை பிடித்து இழுத்து வரிசையில் இருந்து அப்புறப்படுத்தி "ஹய்யோ இத நான் வச்சிகிட்டு மாரடிக்க முடியாது" என்பதைப்போல எல்லோரும் நிராகரிப்பதும், இவரும் சளைக்காமல் ஊமை பாஷை மாதிரி ஏதோ சொல்வது அதாவது அவர் சொல்லும் தொணி"நான் நல்லா வேலை செய்வேன் என்னையும் ஆட்டையிலே சேர்த்து கோங்க" என்பதை போலவும் இருந்தது. ஒரு கட்டத்திலே 299 பேருக்கும் யூனிஃபாம் எல்லாம் குடுத்து அங்கிருந்த படியே வேலைக்கு அனுப்பி விட இவர் மாத்திரம் அவமானத்தாலும், எங்கே தன்னை நாட்டுக்கு திருப்பி அனுப்பிடுவாங்களோன்னு ஒரு வித மிரட்ச்சியிலும் இருந்தார். பங்களாதேஷ் பணம் இரண்டு லெட்சம் குடுத்து வந்திருக்கார். கொஞ்ச நேரம் பின்னே உயர்ரக தொழிலாளர் குடியிருப்பு(என்னமா தமிழ் படுத்தியாச்சு) கேம்ப் பாஸ் வந்தார் தனக்கு 12 கூலிகள் வேண்டும் துப்புரவு பணிக்காகன்னு, பின்ன அங்க இங்கன்னு தேத்தி இவரையும் உப்புக்கு சப்பாணியா கேம்ப் கிளீனிங்க்கு அனுப்பி விட்டாங்க.

அந்த கேம்ப் கீழ்தளம் 80 ரூம், முதல் மாடி 80 ரூம் இரண்டாவது மாடி 80 ரூம் அப்படின்னு இருக்கும். ஒவ்வொறு தளத்துக்கும் 4 பேர் வீதம் சுத்தம் செய்ய பணிக்கப்பட்டனர். நம்ம கதாநாயகனை தவிர மீதி எல்லாரும் வாலிப வயசு ஜவான்கள். சின்ன பசங்க தான். ஆனா கீழ்த்தளத்தில் இவருக்கு பணி கொடுக்காமல் இவரை நைசா இரண்டாம் மாடிக்கு அனுப்பிட்டாங்க அந்த பசங்க. இந்த 12 பேருக்கும் அங்கேயே ஒரு ரூமில் தங்குமிடம்.

இவருக்கு வேலை காலை 4.00 மணிக்கு ஆரம்பம். எழுந்து இரண்டாம் தளத்தில் உள்ள அத்தனை கச்சடா கூடையையும் சேகரித்து கீழ்த்தளத்தில் ரோட்டோரமாக இருக்கும் கச்சடா ஸ்கிப்பில் கொண்டு வந்து போட வேண்டும். அது முடியவே காலை 7.00 ஆகிவிடும். கிட்டத்தட்ட 30 தடவை இரண்டாம் மாடிக்கும் ரோட்டுக்கும் போய் வரணும். 80 ரூம் என்றால் சுத்தளவு எப்படியிருக்கும் நெனச்சு பாருங்க. பின்ன அந்த இரண்டாம் தளத்தை முழுவதும் பிரஷ் பண்ணி மோப் போட்டு முடிக்கணும். இது தான் அவர் வேலை. சொல்வது சுலபம் ஆனா 30 தடவை மாடிக்கும் ரோட்டுக்கும் வெயிட்டை தூக்கி இறக்கினாலோ அல்லது இறக்கும் போது பார்த்தாலே கூட போதும் நமக்கு மூச்சு முட்டும். இவர் வேலை முடிய 12.00 ஆகும் அதுக்கு பின்ன ரெஸ்ட் தான். எங்கிருந்து ரெஸ்ட், சமைக்கனும் சாப்பிடனும் இதல்லாம் முடிய அவருக்கு 2.30 ஆகும். பின்ன மாலை சும்மா ஒரு ரவுண்ட் அடிச்சு கீழே கிடக்கும் கச்சடாவை எடுத்து கூடையில் போடனும். 8 மணி நேரம் வேலை என்றாலும் 3 மணி நேரம் ஓவர்டைம் போட்டு அவருக்கு சம்பளம்ன்னு பார்த்தா 800 திர்காம் கிடைக்கும். இவர் கூட வந்த எல்லாருக்கும் சைட்டில் வேலை செய்பவர்களுக்கும் அதே 800 தான் கிடைக்கும்.

முதல் இரண்டு நாள் அவர் வேலை செய்வதை பார்த்து எனக்கு ரொம்ப பாவமா போயிடுச்சு. 3 வது நாள் நான் வேலை முடித்து வரும் போது பார்த்தா இவர் மூக்கு உடைந்து ரத்தமா பிலாஸ்ட்டர் போட்டு, பல் உதட்டில் குத்தி ரத்தம், முகமும் வீங்கி போய்.. எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா போயிடுச்சு. 67 வயது பெரியவர் இப்படி தூர தேசத்துல வந்து துணைக்கு ஆள் கூட இல்லாம....ரொம்ப கொடுமை இது. மோப் அடிச்ச சோப் தண்ணியில் மாடிப்படியில் வழுக்கி விழுந்துட்டாராம்.

நாங்க எல்லாம் பேசிக்கிட்டோம், சரி இவர் ஊருக்கு போவது தான் நல்லது ரெண்டு லெட்சம் போனாலும் உயிராவது மிஞ்சுமேன்னு. பின்ன இவருக்கு வைத்தியம் பார்த்த கேம்ப் டாக்டர் 3 நாள் ஓய்வுக்கு எழுதி குடுத்துட்டார். 3 நாள் லீவ் முடிஞ்சு வந்தார் இரண்டாம் மாடிக்கு, திரும்ப வேலை செய்ய ஆரம்பிச்சுட்டார்.

திடீர்ன்னு ஒரு நாள் வந்து கேட்டார் சிகரட் வேணுமான்னு. இரண்டு மாடி இறங்கி ரோட்டுக்கு போய் வாங்கி வர எல்லாருக்குமே ஒரு அலுப்பு இருக்கும். சரி அதனால இவரிடமே வாங்கிகலாம் என நண்பர்கள் முடிவெடுத்து அவரிடம் வாங்க ஆரம்பிச்சாங்க. கடையில் விற்கும் அதே ரேட் தான். அவர் மனித வெடிகுண்டு மதிரி இடுப்பிலேயே ஒரு மினி சிகரட் கடை வச்சுட்டார். மாலை 5.00க்கு எலோரும் வர ஆரம்பிச்சதும் இவர் வியாபாரம் ஆரம்பிச்சுடும். நான் கூப்பிட்டு கேட்டேன் ஒரு நாள் "இதுல என்ன கிடைச்சுட போவுது"ன்னு. அதுக்கு அவர் ''ஒரு நாளைக்கு 50 பாக்கெட் விக்குது அதனால எனக்கு 15 திர்காம் கிடைக்குது"ன்னு சொன்னாரு. அப்படின்னா 450 ரூபாய் சம்பாதிக்கிறார். வெரிகுட் நல்லதுன்னு நெனச்சு கிட்டேன். பின்ன ஒரு நாள் சமைக்க அலுப்பு பட்டு கிட்டு ஹோட்டல் போனேன் இரவு. அப்போது அவர் ஒரு பத்து பதினைந்து சாப்பாடு பார்சல் வாங்கிட்டு இருந்தார். நான் கூப்பிட்டு என்ன இது யாருக்குன்னு கேட்டேன். அதுக்கு அவர் "ஒரு சாப்பாடு வாங்கி வந்து குடுத்தா 1 திர்காம் குடுப்பாங்க, சில சமயம் 50 பில்ஸ் குடுப்பாங்க ஆனா தினமும் 15 பேருக்காவது வாங்கி குடுப்பேன். நான் தினமும் இந்த ஹோடல்ல வந்து 15, 20 சாப்பாடு நான் வங்கறதால எனக்கு ஒரு சாப்பாடு ஃப்ரீ"ன்னு சொன்னார். ஹய் குட் குட் இதிலே ஒரு 450 வந்துடுமே, பாவம் இவர் ஆண்டவன் இப்பத்தான் லைட்டா கண்ணை தொறக்கறார் இவர் விஷயத்துலன்னு நெனச்சு கிட்டேன்.

இங்கே எல்லாருக்கும் வாஷிங் மிஷின் இருந்தாலும் டூட்டி முடிந்து வந்தால் சன் டிவி/சேட்டிங்ன்னு செம பிசியா ஆகிடுவதால?? யாருக்கும் தன் துணிகளை துவைக்க நேரம் இருக்காது. எங்களை நம்பியே ஒரு பெரிய லாண்டரி கம்பனி இருக்குது. இன்றைக்கு துணி எடுத்து போனால் 2 நாள் பின்ன வரும் அதுவும் துணிகளை மாற்றி மாற்றி பாடாவதியா இருக்கும். சில சமயம் அழுக்கே போகாது. ஆனாலும் எங்க வாஷிங் மெஷின் சும்மாவே கிடக்கும். தொட மாட்டோம்ல்ல! ஒரு நாள் நம்ம மைன்கான் வந்து தான் அந்த துணிகளை துவைத்து தருவதாகவும் இன்று கொடுத்தால் அடுத்த நாள் டெலிவரின்னும் சொன்னார். சரின்னு கொடுத்தோம். வாங்கிட்டு போனார். இங்கே ஒரு உருப்படிக்கு 1 திர்காம். அதான் வாஷிங் மிஷின் நிறைய இருக்கே, இவர் சர்ஃப் மாத்திரம் வாங்கி எல்லாத்திலயும் போட்டு மொட்டை மாடில காய வைத்து காலை 3.30க்கு எடுத்து போய் அவர் ரூமிலே போட்டு விட்டு கச்சடா எடுக்க கிளம்பி விடுவார். 12.00 மணிக்கு வேலை முடிந்ததும் சாப்பிட்டு விட்டு அயர்ன் பண்ண ஆரம்பிச்சு ,அயர்ன் பண்ண தெரியும் ஆனா மடிக்க தெரியாது அதனால் ஹேங்கரில் மாட்டி மாட்டி மாலை நாங்க வந்த் உடனே வந்து கொடுத்து விடுவார்.

இப்படியாக ஒரு நாளைக்கு 50 உருப்படிகள் தேறிடும் அவருக்கு. சரியான சுத்தம் நல்ல சர்வீஸ் என்பதால் மேலும் சில பேர் குடுக்க முன் வந்த போது தனக்கு அயனிங் தெரிய வில்லை என சொல்லி வாங்க மட்டேன்னு சொல்லிட்டார். இப்போது அவரின் மாத வருமானமே 3200 திர்காமாக ஆகி விட்டதே. ஆனால் தொடந்து எல்லோ ரும் வற்புறுத்தவே அவர் கூட வந்த கிளீனிங் ஜவான் இலங்கை பையன் அவனிடம் அயனிங் மட்டும் "சப் காண்டிராக்ட்" விட்டார். அவனுக்கு ஒரு உருப்படிக்கு 25 பில்ஸ் இவருக்கு 75 பில்ஸ், ஆனால் ஒரு நாளைக்கு 100 உருப்படி கலெக்ட் பண்ன ஆரம்பிச்சுட்டார். பின்ன முதல் மாடியில் உள்ளவர்கள் துணி போட ஆரம்பித்ததும் ஒரு பீகாரி பையனை வச்சுகிட்டார். அதே காண்டிராக்ட் பேசிஸ்ல. உருப்படிக்கு அவனுக்கு 25 பைசா அயர்னிங்க்கு. இப்போ அவருக்கு 150 உருப்படிகள் வர ஆரம்பிச்சதால துணி கலெக்ட் செய்ய உலர்த்தி எடுக்க ஒரு நேப்பாளி பையன் போட்டுட்டார். ஆனால் இவனை சம்பளத்துக்கு வச்சுகிட்டார்

ஆனால் இவர் கூட வந்த ஜவான்கள் 800 தான் சம்பாதிக்கிறங்க. இவரை வேலைக்கு சேர்த்துக மாட்டேன்ன்னு உதாசீன படுத்தியவர்களை காட்டிலும் இவர் 2 மடங்கு சம்பாதிக்கிறார். மனுஷன் கொஞ்ச நேரம் சும்மா இருந்து நான் பார்த்ததில்லை. அவரை கூப்பிட்டு பேசுவேன், அப்போது சொன்னார், இவர் கூலி வேலை செய்து சம்பாதிச்சதை உறவு காரங்க ஏமாத்திட்டதாகவும், பின்ன தனக்கும் தன் மனைவிக்கும் எந்த ஆதரவும் இல்லாம போனதாகவும் சேர்த்து வச்ச 2 லெட்சத்தை 45 வயசுன்னு போட்டு பாஸ்போர்ட் எடுத்து இங்க வந்ததாகவும் சொன்னாரு.

பாஷைன்னு பார்த்தா இவருக்கு வங்காளி மட்டுமே தெரியும். வேற ஒன்னுமே தெரியாது. எல்லாம் ஊமை பாஷை தான். சரி, இசைக்கும், உழைப்புக்கும் என்ன பாஷை வேண்டி கிடக்கு. இப்ப சொல்லுங்க வங்காளியான இவர்கிட்ட நேப்பாளி,இந்தியன், ஸ்ரீலங்கன்,எல்லாம் வேலை பார்க்கிறாங்க அதனால "மைன்கான் A to Z" கம்பனியை நாம் ஏன் "மல்டி நேஷனல்(வேலை பார்க்கும்) கம்பனின்னு சொல்லக்கூடாது???"

37 comments:

  1. சொன்னத செய்ஞ்சுட்ட மாதிரி இருக்கு?

    ReplyDelete
  2. super post... innaikkuththaan romba naal appuram unga posta muzusaa padikiren :)))))

    ReplyDelete
  3. //இப்ப சொல்லுங்க வங்காளியான இவர்கிட்ட நேப்பாளி,இந்தியன், ஸ்ரீலங்கன்,எல்லாம் வேலை பார்க்கிறாங்க அதனால "மைன்கான் A to Z" கம்பனியை நாம் ஏன் "மல்டி நேஷனல்(வேலை பார்க்கும்) கம்பனின்னு சொல்லக்கூடாது???"//
    உதாரணத்திற்கு இப்படிப்பட்டவர்களைத் தான் காட்ட வேண்டும். உண்மையில் உழைப்பவர்கள் எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்வார்கள்.

    ReplyDelete
  4. நல்ல பதிவு..பாராட்டுக்கள் நண்பா...

    ReplyDelete
  5. அமாங்க அபி அப்பா..இதுபோல பலபேரை துபாயிலும்,கத்தரிலும் நானும் பாத்திருக்கேன்..
    சூழ் நிலையால மூலைக்கு தள்ளப்படுற போது ,எப்பிடியோ முட்டி மோதி வந்துடராய்ங்க...
    நாமதா கஷ்ட்டப்படாம படிச்சி நல்ல சம்பளத்துக்கு வந்தும், அவிங்க அனுபவத்த மிஸ் பண்ணிட்டு ,ஊருல போயி பணத்த மெயின்டெய்ன் பண்ணத்தெரியாம இழக்கிறோம்..அவிங்கள எங்க விட்டாலும் தெறமையா சமாளிச்சிக்குவாய்ங்க...

    ReplyDelete
  6. // பங்களாதேஷ் பணம் இரண்டு லெட்சம் குடுத்து வந்திருக்கார்//

    இவ்வளவு தெறம இருக்கிற அவரு அந்த ரெண்டு லச்சத்த ஊருலயே முதலீடாக்கி கலக்கியிருந்தாக்கா.. உண்மையிலேயே தொழிலதிபராகியிருப்பாரோ?...

    ReplyDelete
  7. அவர் உழைப்புக்கு ஒரு சல்யூட்!

    ஹ்ம்ம்ம்... உருப்படியா ஒரு பதிவு போட்டு, உங்களுக்கு இப்படியும் பதிய வரும்னு நிரூபிச்சிட்டீங்க!!

    கலக்குங்க..

    ReplyDelete
  8. ithu oru star post! pathirappaduththivitteen! thalaippukkavarssiyum ulladakkamum kalakkal. mikka nandri

    ReplyDelete
  9. ரொம்பவே உருப்படியான பதிவு, யார் திருத்திக் கொடுத்தாங்க, எ.பி. ஒண்ணும் அதிகமா இல்லையே? :P
    எங்கே ஒளிஞ்சுட்டு இருக்கீங்க? என்னைப் பார்த்தாலே அலறி அடிச்சுட்டு போய் ஒளிஞ்சுக்கறீங்க போலிருக்கு? :P

    ReplyDelete
  10. அருமையான பதிவு அண்ணாச்சி. பிளாக்லே எழுதினதுக்கு பதிலா ஏதாவது பத்திரிகைக்கு அனுப்பியிருக்கலாம்!

    ReplyDelete
  11. சூப்பர் பதிவு...:))

    ReplyDelete
  12. தி க்ரேட் 'மைன்கான்'
    அவர் உழைப்புக்கு ஒரு சல்யூட்!

    ReplyDelete
  13. கீதா சாம்பசிவம் said...

    ரொம்பவே உருப்படியான பதிவு, யார் திருத்திக் கொடுத்தாங்க, எ.பி. ஒண்ணும் அதிகமா இல்லையே?
    எங்கே ஒளிஞ்சுட்டு இருக்கீங்க? என்னைப் பார்த்தாலே அலறி அடிச்சுட்டு போய் ஒளிஞ்சுக்கறீங்க போலிருக்கு?

    ரிப்பிட்டெய் ரிப்பிட்டெய் ரிப்பிட்டெய்...

    ReplyDelete
  14. நல்ல பதிவு..பாராட்டுக்கள் மாமா...

    ReplyDelete
  15. பாராட்டப்பட வேண்டியவர்.

    ReplyDelete
  16. நல்ல பதிவு. பார்த்தாலே, கேட்டாலே பிரமிக்க வைக்கும் இவர் போல நிறைய பேர் இருக்கிறார்கள்.

    சோம்பேறித்தனத்தை விட்டு விட்டு நானும் இப்படி அவர் மாதிரி MNCக்கு மாறத்தான் பார்க்கிறேன். சுறுசுறுப்பு ஒட்டிக் கொள்ளுமா? முடியுமா?

    ReplyDelete
  17. சூப்பர் போஸ்ட்.

    பாராட்டப்பட வேண்டியவர் மைன்கான்.

    ReplyDelete
  18. great... நல்ல ஐடியா கிடச்சுது அவருக்கு சுத்தி இருக்கறவங்க தேவையை புரிஞ்சிக்கிட்டா எல்லாருமே இப்படி முதலாளி யாகிடலாம் ...

    ReplyDelete
  19. நல்ல பதிவுதான். இப்படி அவர் எக்ஸ்ட்ரா வேலை எல்லாம் பண்ணும் பொழுது அவருக்கு தனது துப்புறவு பணி செய்ய நேரமிருந்துதா? இல்லை அதை விட்டுட்டாரா?

    ReplyDelete
  20. நல்ல பதிவுதான். இப்படி அவர் எக்ஸ்ட்ரா வேலை எல்லாம் பண்ணும் பொழுது அவருக்கு தனது துப்புறவு பணி செய்ய நேரமிருந்துதா? இல்லை அதை விட்டுட்டாரா?

    ReplyDelete
  21. Super post abi appa,
    he stands as a example for others...

    ReplyDelete
  22. அபி அப்பா உங்களுக்கும்,அபி பாப்பாவுக்கும்,குடும்பத்தாருக்கும். எனது அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
    என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்.

    ReplyDelete
  23. நல்ல பதிவு அபிஅப்பா

    மயிலாடுதுறை சிவா

    ReplyDelete
  24. செய்யும் தொழில் எதுவெனினும் முழு ஈடுபாட்டுடன் செய்தால் - MNC ஆகலாம். வழி இருக்கிறது. பொறுமை, அயராத உழைப்பு, திறமை, ஆதரிக்கும் வாடிக்கையாளர்கள், குறிக்கோள், இவை அனைத்தும் இருக்கும் மைன்கான் உண்மையிலேயே MNC தான்

    ReplyDelete
  25. Good post. This post should be published in popular journals like Ananda Vikatan etc. It will boost confidence of young people

    ReplyDelete
  26. சிறந்த பதிவு.

    உழைப்புக்கும், ஊக்கத்துக்கும் இவர் மாதிரி ஆட்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்ட்டு.

    இந்த தள்ளாத வயதிலும் அவருடைய சுருசுருப்பு வியக்கவைக்கின்றது. அதுவும் அவர் மிகவும் வைராக்கியம் மிக்க மனிதராக இருப்பார் போல தெரிகின்றது.

    ReplyDelete
  27. Leave Ambani alone .. this man is an inspiration!!

    ReplyDelete
  28. ரொம்ப புல்லரிக்குது இந்த கதைய கேட்டு

    ReplyDelete
  29. உண்மை அபி அப்பா,

    சோம்பேறித்தனத்தையும், தான் போயி இந்த வேலை செய்யறதாங்கற மனப்பான்மையை விட்டழிச்சாலும் இவர் மாதிரி எல்லாருமே மல்டி நேஷனல் கம்பெனி முதலாளி ஆகிடலாம். நானும் அப்படிதான் நினக்கறேன்...எங்க இப்ப முடியுது?.. ஒரு வருஷம் போகட்டும் அப்புறம் பாக்கலாம்...!!!!

    ReplyDelete
  30. பாராட்டப்பட வேண்டியவர் மைன்கான்

    ReplyDelete
  31. அருமையான பதிவு

    ReplyDelete
  32. அருமையான பதிவு

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))