பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

November 12, 2007

அன்புள்ள என் இனிய தமிழ்மண சொந்தங்களே!!

அன்புள்ள தமிழ்மண சொந்தங்களுக்கு, நான் அபிஅப்பா எழுதுவது. நான் மிக்க நலம். அது போல் அங்கு தாங்கள் சுகமறிய ஆவல். என்ன! நான் கொஞ்சம் பிசியாகி போன பின்ன என்னை மறந்துட்டா என்ன பண்றதுன்னு தான் இந்த அவசர கடிதம்!

சரி நான் தான் பிஸியாச்சேன்னு மத்தவங்களுக்கு போன் பண்ணி தமிழ்மணம் எப்படி இருக்குன்னு விசாரிச்சா, நான் கேட்ட 15 பேருமே "என்னங்க அபிஅப்பா, நான் இருக்கும் பிசில தமிழ்மனம் பக்கம் தலை வச்சு படுக்கவே நேரம் இல்லை"ன்னு இன்ஸ்டண்ட் பதில் சொல்றாங்க. ஆனா நான் நடு நடுவே எட்டி பார்க்கும் போது பதிவு போட்டுகிட்டும், பின்னூட்டம் போட்டுகிட்டும் தமிழை வளர்த்துகிட்டு இருக்காய்ங்க(ஜஸீலா மன்னிக்கனும் நான் பொதுவாதான் சொன்னேன்:-))

மத்தபடி துபாய்ல என்னா விஷேஷம்ன்னு கேட்டா, வரும் 15ம் தேதி வெள்ளி கிழமை ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்துல இளையராஜா பிரபல பாடகர்களோட பின்னி பெடலெடுக்க போறார். நான் நேரமின்மையை காரணம் காட்டி (பாட) வர இயலாமையை தெரிவித்து விட்டேன். ஆனாலும் நல்ல ஆரோக்கியமான ஸ்பான்சர் கிடைக்கும் பட்சத்தில் 4 மணி நேரமானாலும் பங்கேற்க உத்தேசம். இந்த நேரத்தில் நான் சென்ர முறை A.R.ரஹ்மான் கச்சேரி அல் அஹல்யா ஸ்டேடியத்தில் நடந்த போது போய் முஸ்தபா முஸ்தபா பாடலுக்கு சிகர் லைட்டரை பத்தவச்சி தூக்கி பிடிச்சு என்னை பார்த்து பலரும் அப்படியே செய்து என்னடா முதுகு பக்கம் சூடா இருக்குதேன்னு திரும்பி பார்த்து அலறி பத்தவச்ச பலாச்சுலாக்கிய திட்டிகிட்டே அந்த உயரத்தில் இருந்து விழுந்து, ஒரு பிரபல வலைப்பதிவர் கீழே விழுந்து கிடக்காரேன்னு கூட பார்க்காம என் மேல் பூனை வாக் நடத்திய யானை மாமி ஞாபகத்துக்கு வர்ராங்க.

அது போகட்டும்! என் முதுகுவலிக்கு கணினி தான் காரணம் என டாக்டர் கண்டபடி சொன்னாலும், எனக்கு என்னவோ ராமன் சேட்டா “பிரியாணி” என்ற பெயரில் தரும் மஞ்ச சோறுதான் காரணம் என நினைத்து என் மாஞ்சா சோத்தை காப்பாத்திக்க திரும்பவும் சொந்த சமையல் ஆரம்பித்து விட்டது இந்த வார உபரி செய்தி. மேலும் “இட்லி”யை இட்லி என்றும் தோசையை தோசை என்று சொல்லாமலும் “இட்டேலி” “தோஷா”ன்னு சொல்லும் ராமன் சேட்டாவின் கொலவெறி கூட நான் சொந்த சமையலுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் நண்பர்கள் சொல்கிறார்கள்.

தமிழ்மணத்துலதான் வரலியே தவிர போன் மொக்கை எப்போதும் போல தொடர்கிறது. கோபி வழக்கம் போல போன் செய்து “ம் சொல்லுங்க வேர என்ன சேதி” என்பதும், சென்ஷி மெனக்கெட்டு போன் செய்து “நான் ரொம்ப பிசியா இருக்கேன், பின்ன பேசறேன்”ன்னு சொல்வதும், லொடுக்கு போன் செய்து “என்ன அபிஅப்பா, பிரகாஷ்ராஜ் தன் அடுத்த படத்துக்கு “அபியும் அபிஅப்பாவும்”ன்னு பேர் வச்சிருக்காரே, உங்க கருத்து என்ன அது பத்தி”ன்னு கேட்டப்ப “அது ஒரு இன்பியல் சம்பவம்”ன்னு நான் சொல்லியதும், கதிர் தம்பி போன் செய்து “எனக்கு அம்மை போட்டிருக்கு யார்கிட்டயும் சொல்லவேணாம் வருத்த படுவாங்க”ன்னு சொல்லியதும் அதற்கு நான் “என் வாயாலே சொல்ல மாட்டேன்”ன்னு சொல்லியதும்,ஜஸீலா தீபாவளி வாழ்த்து சொல்ல போன் செஞ்சு வாழ்த்து 2 செகண்டும் மீதி கம்பனி நிகழ்வுகளும் பேசியதும், ஜூபைர்,மின்னல்,எல்லாம் தீபாவளி வாழ்த்து சொன்னதும் இந்த வார நிகழ்வுகளில் சில!!

சரி விஷயத்துக்கு வாரேன்! நான் வழக்கம் போல இந்த வருடமும் மலைஏற போறேன்! அதாங்க இமயமலை. ரசிகர்கள் வழக்கம் போல என் பி.ஏ. கத்திய நாராயனா(அதாங்க என் கூட எப்பவும் கத்திகிட்டே இருப்பானே)கிட்ட உங்க பொக்கே, பரிசு பொருட்கள் எல்லாத்தையும் தந்திடுங்க:-)), வெளியூர் அன்பர்கள் வசதிக்காக அபிஅப்பாவின் உலக சுற்று பயணம் பின்னர் வெளியிடப்படும். அப்போது நேரிடையாக பரிசுகளை தந்து விடலாம்.

என்றும் அன்புடன்

அபி&நட்ராஜ் அப்பா

தமிழ்மணத்தின் திஸ்கி: அடங்கொய்யால, ஆள் கிடைக்காம உன்னை தெரியாதனமா 1 வாரத்துக்கு ஸ்டார் ஆக்கினா நீ “சூப்பர் ஸ்டார்” ரேஞ்சுக்கு பில்டப்பு குடுக்கிறியா???

10 comments:

  1. //நான் கொஞ்சம் பிசியாகி போன பின்ன என்னை மறந்துட்டா என்ன பண்றதுன்னு தான் இந்த அவசர கடிதம்!
    //

    என்ன ஒற்றுமை அபி அப்பா. நானும் பயங்கர பிஸி. ஆணி புடுங்கித்தீர மாட்டேங்குது.
    மீதி பதிவ படிச்சுட்டு வந்து சொல்றேன்.

    ReplyDelete
  2. சூப்பர்...பதிவ படிச்சிட்டு வரென்....

    ReplyDelete
  3. இப்போ என்னான்றீங்க? சத்தியமா ஒண்ணும் புரியலை. நல்லா இருந்தா சரி.

    அப்புறம் நானும் பிஸிதான். வர்ட்டா?

    ReplyDelete
  4. \\\நான் வழக்கம் போல இந்த வருடமும் மலைஏற போறேன்! அதாங்க இமயமலை. ரசிகர்கள் வழக்கம் போல என் பி.ஏ. கத்திய நாராயனா(அதாங்க என் கூட எப்பவும் கத்திகிட்டே இருப்பானே)கிட்ட உங்க பொக்கே, பரிசு பொருட்கள் எல்லாத்தையும் தந்திடுங்க:-)), \\

    ஐயா சாமி இந்த பில்டாப்பு எதுக்குன்னு எனக்கு தெரியும்...;))

    ஆப்பு ரெடி நைனா ;))

    ReplyDelete
  5. அபிஅப்பா நீங்க பிசியா இருக்கீங்கன்னுதான் உங்க வலையுலக வாரிசுகள் நாங்கள்லாம் தமிழ்மணத்த கலக்குறோம்.

    ReplyDelete
  6. சரி விஷயத்துக்கு வாரேன்! நான் வழக்கம் போல இந்த வருடமும் மலைஏற போறேன்! அதாங்க இமயமலை.

    இங்க பாருப்பா நம்ம சங்க பதிவு எல்லாம் பாத்து பயந்து போய் இந்த மாமாவும் மலை ஏறிட்டாரு...

    ReplyDelete
  7. Ada Pongappa

    :))

    senshe

    from sharjah

    ReplyDelete
  8. அப்பறம் நல்லாருக்கீங்களா? நானும் பிசிதான்.. ஆனா பின்னூட்டம் மட்டும் அப்பப்ப போடறேன்.. மாசத்துக்கு நாமெல்லாம் இப்ப மூணோ நாலோ பதிவு போடரதே பெரும்பாடா போச்சு.. இனிய சொந்தங்களேன்னு கூப்பிட்டு பதிவு போட்ட்ட்ருக்கீங்க .. பரிசா அதான் பாருங்க கோபி ஆப்பு ரெடிபண்ணறாராம்.. கேட்டு வாங்கிக்கறீங்களே...

    ReplyDelete
  9. // நான் நேரமின்மையை காரணம் காட்டி (பாட) வர இயலாமையை தெரிவித்து விட்டேன். //
    ஆனாலும் உங்களுக்கு ரொம்பவே இளகன மனசுங்க.. அபி அப்பா.ஹா..ஹா.....
    சூப்பர்..

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))