பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

November 20, 2007

நாங்களும் ரவுடிதான்! ஜீப்புல ஏத்திகோங்க!!!

பத்தாவது முடிச்ச உடனே எங்க கூட படிச்சதுல ஒரு குரூப் பசங்க சிதம்பரம், நாகை, புத்தூர்ன்னு பாலிடெக்னிக்ல சேர்ந்துட்டானுங்க. நாங்க மட்டும் அழுத்தி முக்கியாவது அட்லீஸ்ட்(!) ஒரு டாக்டராகி செல்வம் டாகடருக்கு எதிர்த்தாப்புல கடை விரிச்சிடலாம்ன்னு 'ஏ' குரூப் சேர்ந்துட்டோம். பின்னதான் தெரிஞ்சுது பாட்டனி ஒரு பாடாவதின்னு. வரிசையா எல்லா டெஸ்டிலும் 75க்கு 1 மார்க்குக்கு மேல என்னால தாண்ட முடியலை. பின்ன 1க்கு பக்கத்துல ரெண்டு முட்டை போட்டு நான் 100க்கு 75 மார்க்காக்கும்ன்னு வீட்டிலே சொல்லி கையெழுத்து வாங்கியது இந்த பதிவுக்கு சம்மந்தம் இல்லாத விஷயம். விஷயம் என்னான்னா அந்த பாலிடெக்னிக் பசங்க எல்லாம் விடிய காலைல ஏக்கே 47 மாதிரி மினி டிராஃப்ட்ர் தூக்கிட்டு சைக்கிள்ள ரயில்வே ஸ்டேஷன் போய் அங்கிருந்து சிதம்பரமோ, புத்தூரோ போய் படிச்சுட்டு, அதோட விடாம எங்களை சீண்டுவதே தொழிலா இருந்தானுங்க.

"மாப்ள எங்க பிரின்சி இருக்காரே பொல்லாத ஆளுடா, ஆனா எங்க புரபசர் தங்கம் தெரியுமா, சரி உங்க வாத்தியார் எப்படி இருக்கார், ஹெட்மாஸ்டர் இப்பவும் பொடி போடுறத விடலையா?" அவுக எல்லாம் காலேஜ்ல படிக்கிறாய்ங்கலாம்!! அது தான் போகட்டும்ன்னா "டேய் எங்க சீனியர்ஸ் தொல்ல தாங்கலைடா, ராகிங் எந்த வருஷமும் இல்லாத அளவு இந்த வருஷம் அதிகம்"ன்னு வெயில் பற்றிய வானிலை அறிக்கை வாசிப்பானுங்க! அய்யோ எங்களை ஒருத்தனும் ராகிங் பண்ண மாட்டங்குறாங்களேன்னு ஏக்கமா இருக்கும். பின்ன திடீர்ன்னு வந்து "மாப்ள இன்னிக்கு ஜூனியர் வெல்கம்டா, எங்க சீனியர்ஸ் எல்லாம் தங்கம்டா, அவனவன் வந்து அவன் பிடிச்ச சிகரட்டை எங்க வாயில் வச்சி பீர் பாட்டிலை குலுக்கி தலையில ஊத்தி செம கவனிப்புடா, நாங்களும் பீர், தம்முன்னு அவனுங்க கூட செம் டான்ஸ்டா, அது கிடக்கட்டும் மந்த்லி டெஸ்ட் எல்லாம் நடத்துராங்களா உங்க வாத்தியார் எல்லாம்? எங்க புரபசர் அசைன்மெண்ட் எழுத சொல்லி படுத்தறார்டா, சரி எங்களை பார்த்த்து பீர், தம்முன்னு கெட்டு போயிடாதீங்கடா, ஸ்கூல் பசங்களா லெச்சனமா இருங்க அதல்லாம் எங்களை மாதிரி காலேஜ் எல்லாம் போன பின்ன பார்த்துக்கலாம்...வர்ட்டா". இப்படியே தான் கொல்லுவானுங்க.

11 வது தான் அப்படி போச்சுன்னா, 12 வது படிக்கும் போதும் அவனுங்க தொல்லை தாங்க முடியலை. " மாப்ள, இந்த வருஷம் ராகிங் போன வருஷத்தை விட டாப், எங்க சீனியர்ஸ் அசந்துட்டானுங்க, அடிச்சு தூள் பண்றோம்ல...ஒருத்தனை ரயில்ல பிச்சை எடுக்க விட்டேன் பாரு செம சிரிப்பு, ஆமா கேக்க மறந்துட்டேனே இலக்கிய மன்றம் எல்லாம் நடக்குதா, எங்களுக்கு இன்ஜினியர்ஸ் அசோசியேஷன்ல இருந்து வர்ர வாரம் செமினார் எடுக்க வர்ரானுங்க, செம போர் அடிக்கும், சரி வர்ட்டா"ன்னுட்டு போயிடுவானுங்க!

திடீர்ன்னு ஒரு நாள் வருவானுங்க! " மாப்ள எங்க குரூப்புக்கும், கடலூர் குரூப்புக்கும் சிதம்பரம் ஸ்டேஷன்ல முட்டிகிச்சு, நாங்க லோக்கல் பசங்களை வச்சு பிரிச்சு எடுத்துட்டோம் அவனுங்களை, அது காலேஜ்ல பெரிய பிரச்சனை ஆயி ஸ்ட்ரைக்குடா, மாயவரம் பேர காப்பாத்திட்டோம்ல. பிரின்சியே எங்களை பார்த்தா "குட்மார்னிங் சார்"ன்னுட்டு போறாருல்ல இப்ப"ன்னு கிழிச்சு போடுவாங்க. இதல்லாம் கேக்க கேக்க எங்களுக்கு காலேஜ் மேல் ஒரு வெறித்தனமான ஆசை வந்துடுச்சு, என்ன கோர்ஸ் எடுக்கலாம் என்பதை விட ரேகிங், ஸ்ட்ரைக் இதிலே நாட்டம் அதிகமா ஆகிடுச்சு! காலேஜ் போன பின்ன பிரின்சிபாலை பார்த்து "குட்மார்னிங் பிரின்சிபால்"ன்னு எப்படி சொல்வதுன்னு பலவிதங்களிள் கண்ணாடிக்கு முன்னாடி நின்னு கிட்டு கோணிகிட்டு, ராணுவ ஸ்டைலில் எல்லாம் சொல்லி பார்த்து கிட்டோம். மாலை வீட்டுக்கு வந்து சாப்பிடும் போது அம்மா "ஏண்டா டல்லா இருக்கே"ன்னு கேட்பது போலவும் அதற்கு நாங்கள்"அந்த புரபசர் சரியான முசுடும்மா"ன்னு சொல்வது போலவும் கனவுபோல நினைத்து பார்த்து கொண்டோம். ஆனா இப்ப பாருங்க அபிபாப்பா சொல்லுது "எங்க பிரின்சி நாளைக்கு எல்லாரையும் கலர் டிரஸ்ல வர சொன்னாங்க"ன்னு. நான் கூட கேட்பேன் அதுகிட்ட "உங்க டீன், ரீடர், புரபசர் எல்லாம் என்னா சொன்னாங்கன்னு! அதுக்கு என் கிட்ட ஒன்னும் சொல்லாது அவங்க அம்மா கிட்ட போய் "ஏம்மா நல்ல மாப்பிள்ளையே உனக்கு கிடைக்கலையா"ன்னு கேட்டுட்டு போகும்:-))

இப்படியாக நாங்க கஷ்டப்பட்டு பின்ன காலேஜ்ல சேர்ந்தோம் பலவித ரேகிங் கனவுகளோட! எல்லாரும் புது சைக்கிள் சகிதமா முதல் நாள் போனா, எங்களுக்கு பெரிய ஏமாற்றம். வாசல்ல சாக்லெட் வச்சிகிட்டு, ஜீனி தட்டு வச்சிகிட்டு சீனியர்ஸ். அடப்பாவமே எங்க காலேஜ்ல ரேகிங் என்பதே இல்லியாம். என்ன கொடுமை இது. கெஞ்சவா முடியும் அவங்களை பார்த்து "எங்களை ரேகிங் பண்னுங்க ரேகிங் பண்ணுங்க"ன்னு. சரி நாம் குடுத்து வச்சது அவ்வளவு தான்ன்னு நெனச்சுகிட்டு, ஸ்டைக் வரும் நாளை எதிர் பார்த்து காத்திருந்தோம். ஒருதலை ராகம் படத்திலே பார்த்திருப்பீங்க எங்க காலேஜை, ஒரு வாய்க்கால் இருக்கும் அதை தாண்டிதான் போனனும். அந்த மதில் மேல வரிசையா சீனியர்ஸ்தான் உக்காந்து இருப்பாங்க. ஆனா நாங்க அந்த மதிலை கைப்பற்றி ராஜ பரிபாலனம் செஞ்சு கிட்டே இருந்தோம். எப்படா ஸ்ட்ரைக் வர்ரும்ன்னு இளவு காத்த கிளியா காத்து கிடந்தோம்.

ஒன்னும் வர்ர மாதிரி தெரியல. அப்படித்தான் ஒருநாள் மதில்ல உக்காந்து அரட்டை அடிச்சுகிட்டு இருந்தப்ப நெய்வேலி குரூப் பசங்க ட்ரெயின்ல இருந்து வந்தானுங்க. அப்ப நான் "டேய் இன்னிக்கு ஸ்ட்ரைக்காம்டா உள்ளே ஒரே ரணகளமா இருக்கு"ன்னு அவுத்து விட அதையே வேத வாக்கா நம்பி அவனுங்களுக் திரும்ப போய் காலேஜ் எதிர்ல நின்னுட்டானுங்க. அவனுங்க கூட்டமா நிற்பதை பார்த்து வரும் கூட்டம் எல்லாம் அங்கயே நிக்க ஸ்ட்ரைக்குக்கான மேக மூட்டம் கருப்பா கண்ணுக்கு தெரிஞ்சுது. சரின்னு நாங்களும் வெளியே வந்து அந்த ஜோதில ஐக்கியமாகிட்டோம்.

பின்ன தான் விஷயம் கேள்விப்பட்டு மனோகரன் என்ற எங்க காலேஜ் சேர்மன்(மாணவர் தலைவர்) ஓடி வந்தான். வந்தவனுக்கு ஆனந்த கண்ணீர்! நம்மால சாதிக்க முடியாதது தானா எப்படியோ நடந்துடுச்சேன்னு. வந்தவன் நேரா கொடிகம்பம் பக்கத்துக மேடை மாதிரி இருக்கும் ரோட்டிலே அதிலே ஏறி நின்னு "மாணவர்களே! நான் பலமுறை நிர்வாகத்தை எச்சரித்தும் நமக்கு குடிதண்ணீரோ, கழிவறை வசதிகளோ இன்னும் செய்து கொடுக்காத காரணத்தால் நான் வேறு வழி இல்லாமல் இந்த ஸ்ட்ரைக் நடாத்துபடி ஆகிவிட்டது, உங்கள் ஒத்துழைப்பு இருந்தால் நாளையும் இது தொடரும், அமைதியாக கலைந்து செல்லுங்கள்"ன்னு பெருமையை தட்டிகிட்டு போனான்.

பின்னதான் வந்துச்சு பிரச்சனை. 2 நாள்ல ஸ்ட்ரைக் முடிஞ்ச பின்ன ஒரு குரூப் லெக்சரர்ஸ் தன்னோட உளவு வேலையை ஆரம்பிச்சு ஸ்ட்ரைக்குக்கு காரணம் என்னன்னு கண்டு பிடிக்க முயற்சி பண்ணி மொத்தமா ஒரு 30 பேரை சந்தேகத்தின் பேரில் பிடிச்சாங்க.அவங்களை திருவாளர் திருமதி மாதிரி தனி தனியா விசாரிச்சா ஒருத்தனும் சரியா பதில் சொல்லலை! அதிலே இந்த அப்பாவியும் ஒருத்தன். எல்லாரும் அப்பாவை அழைச்சுகிட்டு வரனும்ன்னு சொல்ல ஆஹா நாமலும் ரவுடிதான் ரவுடிதான்ன்னு வண்டில தொத்திட்டோம்டான்னு சந்தோஷமா வீட்டுக்கு போனா அப்பா ருத்ரதாண்டவம் ஆடுறாங்க! அப்பவும் நான் நக்கலா "விடுங்கப்பா நான் தான் அப்பவின்னு சொல்றேன்ல, சும்மா வாங்க நீங்களும் காலேஜ் வாசலை மிதிச்ச மாதிரி இருக்கும்"ன்னு நக்கல் பண்ண அப்பாவும் ஒத்துகிட்டாங்க.

காலேஜ் போனா அங்க எல்லா அப்பாவும் ஒன்னுகூடிட்டாங்க! அது அது எங்களை போட்டு வார்த்தையால துவம்சம் பண்ண ஆரம்பிச்சுடுச்சு. உளவு துறை புரபசர் வந்தார். எல்லா அப்பாவும் ஆளுக்கு ஒன்னா பேச எங்கப்பாவும் ஏதோ பேசாட்டி தெய்வ குத்தம் மாதிரின்னு நெனச்சுகிட்டு "சார் யார் தப்பு செஞ்சாங்களோ அவங்களை சஸ்பெண்ட் பண்ணுங்க, பாருங்க என் பையன் அப்பாவி, நீங்க பண்ண காரியத்தால நான் வேலையை விட்டுட்டு வந்திருக்கேன்"ன்னு சொல்லி வைக்க, ஆஹா அப்பா சும்மா இல்லாம கவுத்திட்டீங்களெ அப்பான்னு நெனச்சுகிட்டேன்.

கஷ்டப்பட்டு உளவு துறை மூலமா கண்டுபிடிச்ச புரபசர் தன் திறமை குறைத்து மதிப்பிடுவதை ஒத்துப்பாரா. "யார் சார் இவனா உங்க பையனா அப்பாவி, இவன் தான் 1 வாரமா இந்த பசங்களை ராத்திரி ராத்திரி சந்திச்சு ரகசிய கூட்டம் போட்டு, பிட் நோட்டீஸ் குடுத்து, சுவத்திலே எழுதி, ஸ்ட்ரைக் நடந்த அன்னிக்கு காலையிலே வந்து ஆட்கள் திரட்டி, போதா குறைக்கு அடியாட்கள் செட் பண்ணி கல்லூரி சொத்துகளுக்கு சேதம் உண்டு பண்ண திட்டம் போட்டிருந்தான். நாங்க சரியான நேரத்திலே கவனிச்சு தடுத்தோம், எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கு"ன்னு ஒட்டு மொத்த பழியையும் என் மேல போட்டாரு. ஆஹா " "டேய் இன்னிக்கு ஸ்ட்ரைக்காம்டா உள்ளே ஒரே ரணகளமா இருக்கு"ன்னு சொன்ன இந்த 6 வார்த்தைக்கு பின்ன இத்தன இருக்கா, அப்பா பழிவாங்கிட்டீங்களே அப்பா, என்னை ஒரு தீவிர வாதி அளவு ஆக்கிட்டீங்களே ஒரு வரி மீட்டிங்ல பேசி!!!வெளியே வந்தா நான் ஏதோ வெடிகுண்டு தயாரிச்சதா பேசிகிட்டானுங்க ரகசியமா!!!

பின்ன என்னாச்சு, மன்னிப்பு கேட்டு காலேஜ்க்கு வந்தாச்சு! மதிலுக்கு மேல யாரும் உக்காராத மாதிரி கூர்மையா கட்டிட்டாங்க! அதுக்கு பின்ன எப்ப ஸ்ட்ரைக்கு நடந்தாலும் நான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்படாத குறை தான், டக்குன்னு அப்பாவுக்கு லெட்டர் போகும் நிர்வாகத்தில் இருந்து. அப்பாவும் பதிலுக்கு லெட்டர் போடுவாங்க.இப்படி அடிக்கடி அப்பாவுக்கும் நிர்வாகத்துக்கும் நிறைய கடித தொடர்பு என்னால் நீடித்ததால் அது இரு பக்கமும் பழகி போய் நான் காலேஜ் விட்டு வந்த பின்னயும் தொடர்ந்தது."உங்க கார் நம்பர் YMZ 5454 சூப்பர்"ன்னு அப்பாவும், பதிலுக்கு நிர்வாகம் "நீங்க ஏன் surf க்கு மாற கூடாது"ன்னு பதிலும் ....இப்பவும் லெட்டர் தொடர்பு இருக்கான்னு அப்பாகிட்டே கேக்கனும்!!!

20 comments:

 1. //பத்தாவது முடிச்ச உடனே எங்க கூட படிச்சதுல ஒரு குரூப் பசங்க சிதம்பரம், நாகை, புத்தூர்ன்னு பாலிடெக்னிக்ல சேர்ந்துட்டானுங்க. நாங்க மட்டும் அழுத்தி முக்கியாவது அட்லீஸ்ட்(!) ஒரு டாக்டராகி செல்வம் டாகடருக்கு எதிர்த்தாப்புல கடை விரிச்சிடலாம்ன்னு 'ஏ' குரூப் சேர்ந்துட்டோம்//

  You have written for humour . but you have made good decision not to join POLYTECHNIC . I m one of the victims of POLYTECHNIC craze sweeped in 80's

  ReplyDelete
 2. நானும் ஒரு காலேஜில் சேர்ந்தேன். அதுக்கு பேசாம ஸ்கூலிலேயே இருந்திருக்கலாம்.

  ReplyDelete
 3. ஆமாம் அனானி சொல்றது சரியா தப்பான்னு தெரிய்லை
  ஆனா ஒண்ணு என் கூட 95ல பாலிடெக் படிச்சவங்க இப்ப பொண்ணு தேடிக்கிட்டிருக்காங்க...! (இந்த விதத்தில பாலிடெக்னிக் ஒரு வேஸ்ட் படிப்புதான்)

  ReplyDelete
 4. //ஏக்கே 47 மாதிரி மினி டிராஃப்ட்ர் தூக்கிட்டு சைக்கிள்ள ரயில்வே ஸ்டேஷன் போய் அங்கிருந்து //
  நானும் ஒரு நாள் அது மாதிரி தூக்கிட்டு போறப்ப பஸ் ஸ்டாண்ட்ல விழுந்து அது மேல கார் ஏறி,அதனால முத்தையா பாலிடெக்னிக் டிராயிங் வாத்தி மினி டிராப்ட இல்லாததால என்னை தலையில நொங்குன்னு வைச்சது இப்ப ஞாபகத்து வருதுண்ணா!

  ReplyDelete
 5. //மாப்ள எங்க குரூப்புக்கும், கடலூர் குரூப்புக்கும் சிதம்பரம் ஸ்டேஷன்ல முட்டிகிச்சு//
  ஓகோ...!

  அந்த காலத்துலேர்ந்தே!?!? இந்த பிரச்சனை இருக்கா?

  ReplyDelete
 6. கடித போக்குவரத்து எல்லாம் சரியா இடம் பார்த்து கட் பண்ணனும்.

  கூட எங்க அப்பா எல்லாம் காலேஜ் வந்தா(ஒரு தடவை தான் வந்தார், கடித போக்குவரத்து வேலை செய்யாதல், ஆள் வைத்து கூப்பிட்டாங்க) செம பெருமையா பேசுவாங்க... அப்புறம் எதுக்கு என்ன வர சொன்னீங்க அவரு கடுப்பானது வேற கதை.

  ReplyDelete
 7. //You have written for humour . but you have made good decision not to join POLYTECHNIC . I m one of the victims of POLYTECHNIC craze sweeped in 80's//

  என்ன படிக்குறோம் என்பதை எல்லாம் படிப்பில் சேர்வதுக்கு முன்னால் யோசிக்க வேண்டும். சேர்ந்துட்டு படிப்பை குறை சொல்வது தவறு. பாலிடெக்னிக் ல சமீபம் வரை படித்து நல்ல நிலையில் இருக்கும் பல நண்பர்கள் இருக்கிறார்கள். (மேற்க் கொண்டு டிகிரி படிக்காமல்) சும்மா பொத்தாம் பொதுவாக பேசக் கூடாது

  ReplyDelete
 8. //(இந்த விதத்தில பாலிடெக்னிக் ஒரு வேஸ்ட் படிப்புதான்)//

  பாலிடெக்னிக் படிச்ச ஒரே காரணத்துக்காக பொண்ணு கிடைக்கலைய்யா? சும்மா காமெடி பண்ணாதீங்க...

  ReplyDelete
 9. //இலவசக்கொத்தனார் said...
  நானும் ஒரு காலேஜில் சேர்ந்தேன். அதுக்கு பேசாம ஸ்கூலிலேயே இருந்திருக்கலாம்.//

  ஹி..ஹி.. நமக்கு எல்லாம் ஸ்கூலே காலேஜ் மாதிரி, காலேஜ் டபுள் காலேஜ் மாதிரி :)

  ReplyDelete
 10. வணக்கம்.

  திடீர்ன்னு ஒரு நாள் வருவானுங்க! " மாப்ள எங்க குரூப்புக்கும், கடலூர் குரூப்புக்கும் சிதம்பரம் ஸ்டேஷன்ல முட்டிகிச்சு, நாங்க லோக்கல் பசங்களை வச்சு பிரிச்சு எடுத்துட்டோம் அவனுங்களை, அது காலேஜ்ல பெரிய பிரச்சனை ஆயி ஸ்ட்ரைக்குடா, மாயவரம் பேர காப்பாத்திட்டோம்

  1976-77 வாக்கில் மாயவரம் பேரை காப்பாற்ற முடியல, ஒரு மாயவரம் மாணவனால். சீர்காழி பு.வ.நிலையத்தில் உள்ளூர் கல்லூரி பெண்ணிடம் வாலாட்டின அந்த மாயவரம் ஆளுக்கு மண்டகப்படி நடந்தது. மண்டகப்படி தானத்தில் பங்கேற்ற என்னுடைய நண்பர் கன்ஃபைட் கணபதி சுப்ரமணியம் சொன்னது !! அப்போது நான் உயர்நிலைப்பள்ளி மாணவன். உண்மை எத்தனை % என்பதை கன்ஃபைட் ஐ தான் தேடி கேட்கணும் !

  மண்டகப்படி வாங்கின ஆள், பிற்காலத்தில் ஒரு தலை நாகம், கிழிஞ்சல் என்றெல்லாம் படம் எடுத்ததாக கேள்வி. அவர் வீடு மயூரநாதர் வடக்கு சந்நிதியில் இருந்திருந்திருக்கலாம் !

  அவர் வாலட்டின பெண் என்னைவிட 5 வயது அதிகமானவர். சிறு பொடியனாய் இருந்த போது ஓரிருமுறை அவருடன் 'ஒளிஞ்சாம் புடிச்சு' விளையாடியதுண்டு.

  ReplyDelete
 11. மத்தவங்களுக்கு பதில் சொல்லும் முன்பாக "வாசன்" அண்னாச்சிக்கு பதில் சொல்லிடரேன்!

  வாச்தவம் தான்! அவர் பேர் கூட கீஜேந்தர்! (ஆஹா நானும் கிசு கிசு எழுத பழகிட்டேன் உங்களால! அவன் என் வீட்டுக்கு பக்கத்து வீடுதான்! 1980 ல் அவர் முதல் படம் வந்துச்சுச்சு! அவர் மத்து வாங்க காரனமான பொன்னு பேரு கூட பூந்தி! அது எதிர்த்த வீடுதான்! ஹி ஹி ஹி!!!நான் அவர் கூட ஒழிஞ்சாம் புடிச்சான் இல்ல நேரிடையாவே விளையாண்டிருக்கேன்!!!

  ReplyDelete
 12. //நாகை சிவா said...
  பாலிடெக்னிக் படிச்ச ஒரே காரணத்துக்காக பொண்ணு கிடைக்கலைய்யா? சும்மா காமெடி பண்ணாதீங்க...//

  சிவா என்ன இப்படி சொல்லிட்டீங்க என்னோட பாலிடெக்னிக் படிச்ச பையன் வெளிநாட்ல பத்துவருஷமா இருக்கான் இப்ப பொண்ணு பாக்குராங்க வெளிநாடு ஒ.கேன்னாலும் பாலிடெக்னிக்தானான்னு ரிஜக்ட் பண்றது உண்மைங்க!

  ReplyDelete
 13. அண்ணாத்தே,

  எனக்கு என்னோட கல்லூரிக் நினைவுகளை வரவ்ச்சிடீங்க!!

  ReplyDelete
 14. Dear Ayilyan, That's true..But I am also a polytechnic student and with no additonal degree earning a handsome salary at present and the marrige proposals are aplenthy..And I am only exception. Even I had starting troubles in getting the offers, only after my job shifting recently ( whcih fetched me a 100% hike) the marriage propsals have sky rocketed. However, though it is the salary and position which matters in mariiage alliances, more than that what matter is no matters is what you have studied.

  My love to all. Keep up the good job.

  ReplyDelete
 15. ஆகா சேம் பிளட்மா....

  ReplyDelete
 16. //"நாங்களும் ரவுடிதான்! ஜீப்புல ஏத்திகோங்க!!!"//

  பாத்துங்க கொரில்லா செல்ல்ல போட்டுட போறாய்ங்க...

  ReplyDelete
 17. ///நான் அவர் கூட ஒழிஞ்சாம் புடிச்சான் இல்ல நேரிடையாவே விளையாண்டிருக்கேன்!!!////

  கிபி அப்பா...எனக்கென்னவோ நேரடியா விளையாடறத விட ஒழிஞ்சாம் புடிச்சு விளையாடுறதுல ஒரு கிக் இருக்கறதாவே தோனுது...

  அதுவும் மொட்டைமாடி வாட்டர் டேங்னா ரொம்ப வசதி...

  *** ரொம்ப நாள் கழிச்சு உங்க பதிவுக்கு வரேனோ ?? :)))

  ReplyDelete
 18. நானும் பாலிடெக்னிக்லதான் படிச்சேன் (PSG - கோவை). ஓரு தடவை மாஸ் கட் அடித்ததால் அப்பாவை அழைத்து வரச் சொன்னார்கள். வந்தா எஙக HOD யும் அப்பாவும் தமிழ் புலவர்கள் என்பதை பரஸ்பரம் புரிந்துகொண்டு, "என் கண்ணையே உஙககிட்ட ஒப்படைக்கிறேன்" னு டயலாக் விட்டுட்டு போயிட்டார். ரெண்டு வருசமும் நரகம்தான் போங்க. ஸ்கூல் பையன் லெவலுக்கு நம்மளை கடுப்படிசிட்டார்.

  ReplyDelete
 19. நானும் பாலிடெக்னிக்லதான் படிச்சேன் (PSG - கோவை). ஓரு தடவை மாஸ் கட் அடித்ததால் அப்பாவை அழைத்து வரச் சொன்னார்கள். வந்தா எஙக HOD யும் அப்பாவும் தமிழ் புலவர்கள் என்பதை பரஸ்பரம் புரிந்துகொண்டு, "என் கண்ணையே உஙககிட்ட ஒப்படைக்கிறேன்" னு டயலாக் விட்டுட்டு போயிட்டார். ரெண்டு வருசமும் நரகம்தான் போங்க. ஸ்கூல் பையன் லெவலுக்கு நம்மளை கடுப்படிசிட்டார்.

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))