பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 2, 2008

சிதம்பரத்துக்கு போன அப்பா(டா)சாமி!!!- இப்படிக்கு அபிபாப்பா!

நாந்தாங்க உங்க அபிபாப்பா எழுதறேன். அப்பா கூடவே நான் இருந்துட்டேன். அதனால அப்பா என் பத்தின பதிவெல்லாம் எழுதினாங்க. நீங்களும் சிரிச்சீங்க. தம்பி நட்ராஜ் பிறந்த போது பார்த்தது தான் அப்பா. நான் தானே அவன் கூட இருக்கேன். நட்ராஜ் லீலை எல்லாம் எனக்கு தானே தெரியும். அதனால நான் எழுதுகிறேன். வழக்கம் போல ஆதரவு தாங்க.

நான், அம்மா, தப்பிபாப்பா நட்ராஜ் மூணு பேரும் சிதம்பரம் போன கதை சொல்றேன் கேளுங்க. சிதம்பரம் போக முடிவாகி நாங்க கிளம்பி மயிலாடுதுறை பஸ்டாண்ட் வந்து ஒரு பஸ் பிடிச்சு அம்மாவுக்கு இஞ்சிமரப்பா, நார்த்தங்காய் ஊறுகாய் இதல்லாம் மீறி வரும் வாந்தியின் பொருட்டு ஜன்னல் ஓர சீட்டும் அதுக்கு அடுத்து தம்பி நட்ராஜ் சாரும் அடுத்து நானும் வசதியா உக்காந்தாச்சு. தம்பியை நான் பிடிச்சுகிட்டேன். அம்மா மடியிலே உக்காந்தா அம்மாவுக்கு கஷ்டம் என நடுவிலே உக்காத்தி பிடிச்சுகிட்டாச்சு. சீட் எல்லாம் ஃபுல் ஆகிடுச்சு. அப்போ ஒரு ஆன்ட்டி வந்து அவசர அவசமா ஏறினாங்க. அவங்களுக்கு மட்டும் சீட் இல்லை. நேர என் கிட்ட வந்து "பாப்பாவுக்குமா டிக்கெட் வாங்கியிருக்கு"ன்னு கேட்டாங்க. அதுக்கு நான் "வேணும்னா வாங்கிடலாம். அவன் சீட்டை விட்டு தூக்கினா கத்துவான். தொடர்ந்து 1 மணி நேரம் எல்லாம் கத்துவான். நடுவே தொண்டை வரண்டு போச்சுன்னா தண்ணி வாங்கி குடிச்சுட்டு கத்துவான்"ன்னு சொன்னேன். அதுக்கு அவங்க "பரவாயில்ல நான் என் மடியிலே வச்சுக்கறேன்"ன்னு சொன்னாங்க. விதி வலியது!

மடியில வச்சிகிட்டு சும்மா இல்லாம "பாப்பா என்னா படிக்கிற"ன்னு கேட்டாங்க. அடுத்து "என்ன ரேங்"ன்னு கேப்பாங்க, நான் பிறந்ததில் இருந்து எழுவதாயிரத்து முன்னூத்து சொச்சம் தடவை பதில் சொன்ன கேள்வியாச்சே! சரி ஆன்ட்டி நல்ல ஃபார்ம்ல இருக்காங்க சிதம்பரம் போகும் வரை நாம தான் அவங்களுக்கு ஊறுகாய்ன்னு நெனச்சுகிட்டேன். சரி நறுக்குன்னு நாலு பதில் சொல்லிட்டா பின்ன கேக்க மாட்டாங்கன்னு "I.A.S" க்கு பிரிப்பேர் பண்ணிகிட்டு இருக்கேன்ன்னு சொன்னேன். அவங்களுக்கு ஆச்சர்யமா போச்சு. நான் ஒண்ணும் எடக்கு மடக்கா பதில் சொல்லலைங்க, பின்ன என்ன ஒரு டிகிரி முடிச்சாதான் IAS க்கு அட்டெண்ட் பண்ண முடியும்ன்னா LKG முதல் டிகிரி வரை எல்லாமே IAS க்கான பிரிப்பரேஷன் தானே. சுதாரிச்சுகிட்டாங்க. மெதுவா "பாப்பா நான் சிதம்பரம் BSNL ல வேலை பார்க்கிறேன்"ன்னு சொன்னாங்க. "வேலை பார்க்குறீங்களா?"ன்னு கேட்டேன்.நான் கேட்டதின் உள்குத்து அவங்களுக்கு புரியலை. கொஞ்சம் புரிய வைப்போம்ன்னு "பராமரிப்பு பணிகளால் உங்கள் தொலை பேசி பழுதடைந்து உள்ளது"ன்னு ஒரு ஆன்ட்டி அடிக்கடி சொல்லுவாங்களே அந்த ஆன்ட்டியா நீங்க?''ன்னு கேட்டேன். பேசாம இருந்துட்டாங்க.

சரி அப்பா துபாய்ல ஒரு மணி நேரம் டைம் பாசுக்கு 2 திர்காம் செலவழிச்ச அப்பா பேரை நாம் காப்பாத்தணுமே அந்த 2 ரூபாய் கூட செலவில்லாம சிதம்பரம் போகும் வரை டைம்பாஸ் பண்ணிட வேண்டியதுதான்னு முடிவு பண்ணிட்டேன். மெதுவா "ஆன்ட்டி என்ன பேசாம இருக்கீங்க" ன்னு கேட்டேன். என்னை கொஞ்சம் பயத்தோட பார்த்துட்டு "நீ என்ன பண்றே" ன்னு சாமர்த்தியமா கேட்டாங்க. "நான் ரிஷப்ஷனிஸ்டா இருக்கேன்"ன்னு சொன்னேன். அதன் பின்ன அவங்க பேசவே இல்லை. நான் இப்பவும் எடக்கு மடக்கா பேசலை. சரிதான் வீட்டுக்கு வரும் போன் கால் எல்லாம் நான் தான் அட்டெண்ட் பண்றேன். வீட்டுக்கு வருபவர்களை வா வா ன்னு கூப்பிடுவேன். எனக்கு ஒரு அஸிஸ்டெண்ட் கூட வச்சிருக்கேன். அவர் பேர் மிஸ்டர். டைகர். அவர் "வா"ள் வா"ள்" ன்னு கூப்பிடுவாரு. பின்ன என்ன நான் சொன்னது சரிதானே.

சரி இவங்க பேசாட்டி டைம் பாஸாகாதேன்னு மெதுவா அவங்க மடியில இருந்த தம்பி காலை கூசினேன். அவ்வளவு தான் வதக்கு வதக்குன்னு உதைக்க ஆரம்பிச்சுட்டான். ஒரு தடவை கூசினா தம்பி சராசரியா 37 தடவை உதைப்பான். "என்னது உன் தம்பி இப்படி உதைக்கிறான்"ன்னு கேட்டாங்க. "அவனுக்கு சந்தோஷம் வந்துடுச்சுன்னு அர்த்தம். சந்தோஷமானா அப்படிதான் உதைப்பான்"ன்னு சொன்னேன். அதுக்கு அவங்க "சரி எப்பல்லாம் சந்தோஷம் வரும்"ன்னு கேட்டாங்க. அதுக்கு நான் " 37 செகண்டுக்கு ஒரு தடவை சிதம்பரம் வரும் வரை வரும் இன்னிக்கு" ன்னு சொன்னேன்.

அப்பத்தான் பார்த்தேன் தம்பி அவங்க முந்தானையில முக்கால் வாசி வாய்க்குள்ள வச்சி ஜொல்லு வடிச்சு நனைச்சுட்டான். சரி தம்பியும் நமக்கு சாதகமா களத்திலே இறங்கிட்டான்னு நெனச்சுகிட்டு அடுத்த 37 வது செகண்ட்ல இன்னும் ஒரு தடவை அவன் காலை கூசி விட்டேன். அவ்வளவு தான் தம்பிக்கு சந்தோஷம் பிச்சுகிச்சு. ஆன்ட்டிக்கு பிரஷர் எகிறிகிச்சு. சரின்னு அவங்க தம்பிய தூக்கி நிக்க வச்சாங்க அப்பவாவது உதைப்பதை நிப்பாட்டுவான்னு. நிக்க வச்ச வேகத்திலேயே கண்ணாடிய டபக்குன்னு கழட்டிட்டான். வாரி சீவின முடியோடு கண்ணாடி அவன் கையில வந்துடுச்சு. அதை நானும் அவங்களும் சேர்ந்து பிடுங்கும் முன்னமே தலையில இருந்த பூவுக்கு தாவிட்டான். பாதி பூ தம்பி கையிலே. மீதி அவங்க தலையிலே. இந்த நேரத்திலே பார்த்து டிரைவர் ஹார்ன் அடிக்கலாமா. தம்பிக்கு ஒரு பழக்கம். ஹாரன் சத்தம் கேட்டா இவரும் உதட்டால "பர்ர்ர்ர்"ன்னு ஹாரன் அடிப்பாரு. அவர் வாயில தான் ஜொல்லுபாண்டி அங்கிள் மாதிரி குடம் குடமா ஜொல்லு ஸ்டாக் இருக்குமே. தம்பி அடிச்ச ஹார்ன்ல அந்த ஆன்ட்டி முகம் குங்குமம் எல்லாம் கோடா வழியுது. தம்பி நல்ல ஃபார்ம்க்கு வந்துட்டான். அவங்க குங்குமத்துக்கு கீழே ஆஹா சாந்து வச்சிருப்பாங்க போல இருக்கு. கர்ச்சீப்பால தொடச்சா முகமெல்லாம் சிகப்பு. இப்ப அவங்க முகத்தை பார்த்தா எனக்கே "மூஞ்சி" காமிக்கணும் போல இருந்துச்சு. அந்த நேரம் பார்த்து தம்பி 3 தடவை அவங்களை பார்த்து "மூஞ்சி" காமிக்குது. அவங்க முகம் அப்ப தம்பி காமிச்ச மாதிரிதான் இருந்துச்சு!

இப்படியாக சீர்காழி வந்துடுச்சு. தம்பியும் அவங்ககூட விளையாடி களைச்சு போய் உக்காந்துட்டான். அப்பவும் திரும்பி திரும்பி கண்ணாடிய இழுத்துகிட்டு இருந்தான். அதுக்கு நான் "ஆன்ட்டி பேசாம தம்பி பேக்கை அவன் கழுத்தில மாட்டிவிட்டா பேசாம இருப்பான்"ன்னு ஐடியா குடுத்து அவன் கழுத்திலே மாட்டி விட்டேன். தம்பி வெயிட்டோட பேக் வெயிட்டையும் சேர்த்து சுமந்தாங்க. அப்போ சும்மா இல்லாம தம்பி பேக் திறந்து "பாவம் பாப்பா தண்ணி குடுப்போம்"ன்னு சொல்லி தண்ணி பாட்டிலை திறந்து தண்ணி குடுத்தாங்க. அப்பவாச்சும் நான் தடுத்து இருக்கலாம். தம்பி ஒரு கிளாஸ் தண்ணி குடிச்சா நாலு கிளாஸ் உச்சா போவான் என்பதை ஞாபகமா சொல்ல மறந்துட்டேன். கொஞ்ச நேரத்தில நெளிஞ்சாங்க ...பாவம் அந்த ஆன்ட்டி, பின்ன தம்பி சமத்தா தூங்கிட்டான்.

தெற்கு கோபுர வாசல் வந்த பின்ன அந்த ஆன்ட்டி தம்பியை சீட்டிலே உக்கார வச்சுட்டு இறங்கி போனாங்க. டெலிபோன் மணி போல சிரிச்சுகிட்டே வந்தவங்க கீரைகாரம்மா மாதிரி போனாங்க. இனி ஜென்மத்தில நின்னுகிட்டு வந்தாலும் வருவாங்க தவிர இந்த மாதிரி அவஸ்தை பட மாட்டாங்க. போகும் போது கேட்டாங்க "சரி பாப்பா பஸ்ஸிலே நான் சமாளிச்சுட்டேன் நட்டுவை. வீட்டிலே எப்படி சமாளிப்பீங்க"ன்னு கேட்டாங்க. அதுக்கு நான் "தம்பி தூங்கும் போது நான் அம்மா எல்லாம் சமாளிச்சுடுவோம், முழிச்சு கிட்டு இருக்கும் போது உங்கள மாதிரி சிரிச்ச மூஞ்சா யாராவது மாட்டுவாங்க"ன்னு சொன்னேன். இளிச்சவாய்ன்னு சொன்னா தப்பில்லையா அதான் சிரிச்ச மூஞ்சுன்னு சொன்னேன். "சரி பாப்பா சிதம்பரத்தில் இறங்கின பின்ன யார் சமாளிப்பாங்க"ன்னு கேட்டாங்க அதுக்கு நான் "கார் வச்சிகிட்டு ஒரு அத்தை காத்துகிட்டு இருக்காங்க"ன்னு சொன்னேன்!!!!

41 comments:

 1. ஆஹா அக்கா குடும்பம் மொத்தமுமே இப்படித்தானா? நிறய கத்துக்கனும் அபிஅக்காகிட்ட இருந்து

  ReplyDelete
 2. கடைசியா கண்மனி அத்தை பட்ட பாட்டையும் சொல்லிடுங்க்கா

  ReplyDelete
 3. நட்டு இப்பவே இப்படீன்னா பெருசானான்னா அவங்க அப்பால்லாம் ஜுஜூபி போல

  ReplyDelete
 4. //அதுக்கு நான் "கார் வச்சிகிட்டு ஒரு அத்தை காத்துகிட்டு இருக்காங்க"ன்னு சொன்னேன்!!!!//
  குடும்பத்தோட போய் அட்டாக்கா? பாவம் மேடம். அதனாலதான் இந்தப்பக்கம் காணோமா?

  ReplyDelete
 5. அபி பாப்பா, இப்படி அப்பாவையே தூக்கி சாப்பிட்டுட்டியே:)

  சிரிச்சு சிரிச்சு முகமே நோவுதுப்பா.
  இன்னும் எழுதுங்க பாப்பா.
  இப்படிக்கு சென்னை பாட்டி.

  ReplyDelete
 6. :)))))))))

  நட்டு பண்ணினதெல்லாம் கண்ணு முன்னால பாக்கற மாதிரி இருக்கு! சார் இத்தன வாலுத்தனம் பண்றாரா?

  ReplyDelete
 7. நிலா குட்டி! அக்கா பத்தின பழைய பதிவுகளை படிச்சு பார்! நிறைய கத்துக்கலாம்!!!

  இப்படிக்கு பெரியப்பா

  ReplyDelete
 8. நிலா குட்டி! இரண்டாம் பாகம் போடலாம்னா அதுக்குள்ள குட்ட உடைச்சுட்டியே!!!:-))

  ReplyDelete
 9. :))

  சிங்கக்குட்டி அட்டூழியம் பண்ணிட்டிருக்காரா :))

  ReplyDelete
 10. அனானி சார்/சாரி! நாங்க பாட்டுக்கு பேசாம இருக்கோம், குட்டீஸ் பண்றதுதான் இதிலே லொல்லு, இதுல குடும்பத்தோடு அட்டாக்ன்னு சொன்னா என்னா அர்த்தம்! நாங்க சேர்ந்தா இன்னும் எப்படி இருக்கும்???

  ReplyDelete
 11. வல்லிம்மா!
  "தான் பாட்டியானதை விட தன் மாமியார் கொள்ளு பாட்டியானதை கொண்டாடும் மருமகளிசம் வாழ்க"ன்னு என் தங்கமணி உங்க பதிவை பத்தி சொன்னது காரணமே இல்லாமல் ஞாபகத்துக்கு வருது:-)))))

  ReplyDelete
 12. //"I.A.S" க்கு பிரிப்பேர் பண்ணிகிட்டு இருக்கேன்//

  //"வேலை பார்க்குறீங்களா?"ன்னு கேட்டேன்.//

  //என்பதை ஞாபகமா சொல்ல மறந்துட்டேன்//

  //டெலிபோன் மணி போல சிரிச்சுகிட்டே வந்தவங்க கீரைகாரம்மா மாதிரி போனாங்க.//

  அது :-))))

  //"கார் வச்சிகிட்டு ஒரு அத்தை காத்துகிட்டு இருக்காங்க"//

  அப்ப அடுத்த பாகமும் உண்டு போல. :-))
  போன பதிவுல ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன். காணலையே?

  ReplyDelete
 13. யப்பா..ராசா மொத்த குடும்பமே இப்படி தானா!!!

  உங்க குடும்பத்துக்கு பயந்தே மயிலாடுதுறை பக்கம் வர பயமாக இருக்குப்பா...முடியல..
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 14. அதென்ன 37 கணக்கு?

  கலக்கல்...

  ReplyDelete
 15. வேலை பாக்கறீங்களான்னு கேட்டப்போவே புத்திசாலியா இருந்தா அந்தம்மா எந்திருச்சு போயிருக்கனும்.. :)) கலக்கல காமெடி..

  காரோட வந்த அத்தை என்ன பாடுபட்டுருப்பாங்கன்னு கற்பனை செய்ய முடியுது.. அதுவரை உங்க அம்மா சமத்தா தூங்கினாங்களாடா அபி .. கெட்டிக்கார அம்மா...

  ReplyDelete
 16. //"பராமரிப்பு பணிகளால் உங்கள் தொலை பேசி பழுதடைந்து உள்ளது"ன்னு ஒரு ஆன்ட்டி அடிக்கடி சொல்லுவாங்களே அந்த ஆன்ட்டியா நீங்க?''ன்னு கேட்டேன். பேசாம இருந்துட்டாங்க.//

  ஹிஹிஹி, இந்தியா பூராவும் இப்படித் தானே! பாப்பாவுக்கு நல்ல புத்திக் கூர்மை, அவங்க அம்ம்ம்ம்ம்மாஆஆ மாதிரி! நல்லவேளை, அபி அப்பா, உங்களைக் கொள்ளலை, நடராஜும் சேர்த்துத் தான் சொல்றேன்.

  ReplyDelete
 17. //இப்படியாக சீர்காழி வந்துடுச்சு. தம்பியும் அவங்ககூட விளையாடி களைச்சு போய் உக்காந்துட்டான். //

  பாவம் இல்லை, குழந்தை, இப்படியா களைச்சுப் போய் உட்காரும் வரை விளையாட்டுக் காட்டுறது? :P

  ReplyDelete
 18. //நான் "கார் வச்சிகிட்டு ஒரு அத்தை காத்துகிட்டு இருக்காங்க"ன்னு சொன்னேன்!!!!//

  ஹிஹிஹி, கண்மணி, குடும்பத்தோடு தாக்குதல்? எப்படிச் சமாளிச்சீங்க? யார் எழுதப் போறா? நீங்களா? இல்லை அபி பாப்பாவே தானா? பாப்பாவே எழுதட்டும், நல்லாவே எழுதறா!

  ReplyDelete
 19. //"தம்பி தூங்கும் போது நான் அம்மா எல்லாம் சமாளிச்சுடுவோம், முழிச்சு கிட்டு இருக்கும் போது உங்கள மாதிரி சிரிச்ச மூஞ்சா யாராவது மாட்டுவாங்க"ன்னு சொன்னேன். இளிச்சவாய்ன்னு சொன்னா தப்பில்லையா அதான் சிரிச்ச மூஞ்சுன்னு சொன்னேன்.//

  அவ்வ்வ்வ்வ்..... இது சூப்பரேய்ய்ய்ய்....

  ReplyDelete
 20. //
  "சரி பாப்பா சிதம்பரத்தில் இறங்கின பின்ன யார் சமாளிப்பாங்க"ன்னு கேட்டாங்க அதுக்கு நான் "கார் வச்சிகிட்டு ஒரு அத்தை காத்துகிட்டு இருக்காங்க"ன்னு சொன்னேன்!!!!//
  //

  ஹா..ஹா... ஆனாலும நம்ம டீச்சரை இப்படில்லாம் சொல்லப்டாதும்மா அபி...:)))))))

  ReplyDelete
 21. // கீதா சாம்பசிவம் said...

  //இப்படியாக சீர்காழி வந்துடுச்சு. தம்பியும் அவங்ககூட விளையாடி களைச்சு போய் உக்காந்துட்டான். //

  பாவம் இல்லை, குழந்தை, இப்படியா களைச்சுப் போய் உட்காரும் வரை விளையாட்டுக் காட்டுறது? :P///

  ஹிஹி..ரிப்பீட்டேய்ய்...

  ReplyDelete
 22. ராஜா.. சூப்பர்.. இப்படியெல்லாம் எழுதியதுக்கே பாப்பாவுக்கு ஒரு ராஜ்ய சபா எம்.பி சீட்டு கொடுக்கலாம்..

  முடிஞ்சா துபாய் மினிஸ்டராகூட ஆக்கிடலாம்...

  மயிலாடுதுறை தந்த தமிழ்ச்செம்மல அபி பாப்பா.. வாழ்க...

  அன்புடன்
  சீமாச்சு...

  ReplyDelete
 23. அபிக்குட்டி, சூப்பரா எழுதுறே - நட்டுப் பய கிட்டே கொஞ்சம் சாக்கிரதையாத்தான் இருக்கணும் போலே - பரவா இல்லே - குறும்பு பண்ணாத்தான் அவன் பய - இல்லேன்னா பய இல்லே - கண்மணி அத்தை கார்லே வந்தாங்களா - சொல்லு சொல்லு

  ReplyDelete
 24. காயத்ரி! நீங்க தம்பி குட்டிய பார்த்ததுக்கும் இப்பவும் ரொன்ப வித்யாசம்! ரொம்ப வால் அதிகமாயிடுச்சாம்!!!

  ReplyDelete
 25. அப்பாடா கப்பி சாரே! என்னை சிங்கம்ன்னு சொன்னதுக்குக்காகவே உங்களை வாழ்த்தி ஒரு பதிவபோடலாம்!!!!:-))

  ReplyDelete
 26. ஸ்ரீதர் நாராயணன்! மன்னிக்கவும் போன பதிவிலே உங்க பதில் பின்னூட்டம் படிச்சு ரசிச்சேன்!! மிக மிக தவறுதலாக டெலீட் ஆகிடுச்சு!! பின்னவீனுத்துவத்தை பின்னி பெடல் எடுத்து இருந்தீங்க!!! ஸாரிங்க! இனி அந்த தப்பு நடக்காது! தெரியாம டெலேட் ஆகிடுச்சு!!! நன்றி! இந்த பின்னூட்டத்துக்கு!!!! எகய்ன் ஸாரி!!!

  ReplyDelete
 27. மின்னல்! உன் கல்யாணத்துக்காகவே நான் லீவ் போடுறேன்! சிங்கிள் வரில கலக்கிட்டியே!!!

  ReplyDelete
 28. கோபி! நான் மட்டுமல்ல மொத்த மயிலாடுதுறையுமே அப்படிதாண்டீ!!!:-))

  ReplyDelete
 29. பாசமலர்! அதான் ஆவரேஜ் கணக்கு!! திரும்பவும் படிங்கப்பா புரியும்!:-))

  ReplyDelete
 30. முத்துலெஷ்மி! அதுவரை அவங்க அம்மா பிஸியா வாந்தி எடுத்துகிட்டு இருந்தாங்கலாம்:-))

  ReplyDelete
 31. கீதாம்மா வந்துட்டீங்களா! வாங்க! இந்தியா முழுக்கவும் இந்த கொடுமைதானா?


  குடும்பத்தோட அட்டாக் அனேகமா டீச்சர்கிட்ட இருந்து வரும் பதிவு!!!:-))

  ReplyDelete
 32. ரசிகன்! வாப்பா! வருகைக்கு நன்றி!! மிக்க நன்றி:-))

  ReplyDelete
 33. சீமாச்சு அண்ணா! வாங்க!! நம்ம பாப்பாவுக்கு எத்துகு MP போஸ்ட் எல்லாம்! அது என்ன பெண்ணீய கவிதையா எழுத போகுது! சிம்பிளா நகைச்சுவை போஸ்ட் எழுதும். அதனால அதுக்கு தகுந்த மாதிரி PM போஸ்ட் போதும்ணா!!!

  ReplyDelete
 34. குசும்பா!! என்ன சிரிப்பு!!!

  ReplyDelete
 35. ராம் ராம்ஜி! என்ன ரொம்ப நாளா காணும்! சீக்கிரம் உங்க ஊர் வருகிறேன்!!! பார்ப்போம்!!!

  ReplyDelete
 36. பதிவு சூப்பரா இருக்குங்க. உங்க தங்கமணிகிட்ட சொல்லி பாப்பாக்கு சுத்திப் போட சொல்லுங்க சீக்கிரமா.

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))