சில விஷயங்கள் எதேச்சையாக நடக்கும். அப்படித்தான் நேற்று இரவு என் பள்ளிக் கூடத்தின் என் பத்தாம் வகுப்பு ஆசிரியர் திரு.N.வெங்கட்ராமன் என்கிற NV சாரை பற்றி கனவு கண்டேன். காலை எழுந்து தமிழ்மணம் திறந்து பார்த்தா மயிலாடுதுறை சிவா ஒரு பதிவு போட்டிருந்தார். ரொம்ப நாளா ஆச்சே அவர் பதிவு போட்டு, ஊருக்கு போனாரே திரும்பி வந்துட்டாரா என்கிற நினைவுடனேயே திறந்து பார்த்தா NV சாரை பத்தி பதிவு போட்டிருக்கார். போட்டோவும் போட்டு. எனக்கு ஆச்சர்யமாக போய் விட்டது.
மற்ற ஆசிரியர்களுக்கும் அவருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அவர் பாடம் மட்டும் கற்று கொடுப்பதில்லை. கூடவே வாழ்க்கையும் கற்று கொடுப்பார். அவரின் அந்த அணுகுமுறை அவரின் சில சக ஆசிரியர்களுக்கும் சில நூறு சதவிகித நல்ல மாணவர்களுக்கும் கூட பிடிக்காமல் இருந்திருக்கும். ஆனால் எனக்கு அவருடைய அந்த அணுகுமுறை சரி என்றே தோன்றுகிறது. காரணம் பத்தாம் வகுப்பு வந்து விட்ட மாணவர்கள் ஓரளவு தன் வாழ்க்கையின் திசையை முடிவெடுக்கும் நிலையில் இருப்பவர்கள். அதனால் கொஞ்சம் சுயமாக சிந்திக்க வேண்டும் என்கிற நோக்கோடு கொஞ்சம் விட்டு பிடிக்க வேண்டும் என நினைத்து மாணவர்களுக்கு கொஞ்சம் கூடுதலாகவே சுதந்திரம் கொடுப்பார்.
அவர் வகுப்பு மாணவர்கள் மற்ற வகுப்பு மாணவர்களை விட கொஞ்சம் வித்தியாசமாகவே இருப்பர். பாடம் எடுத்து கொண்டிருக்கும் போது தூரத்தில் வராண்டாவில் தலைமை ஆசிரியர் வந்துவிட்டால் இவர் "பசங்களா இப்போ நாம் PR என்கிற கோடு வரைந்து அதில் SK என்கிற புள்ளியை குறிக்க போகிறோம்" என்பார். வகுப்பில் சத்தம் காதை கிழித்து கொண்டு போகும். காரணம் PR என்பது அந்த தலைமை ஆசிரியர் பெயர். SK என்பது உதவி தலைமை ஆசிரியர் பெயர். அந்த இருவருமே எங்க NV சார் படிக்கும் போது அவருக்கே ஆசிரியர்கள் என்பது வேறு விஷயம். மாணவர்களின் சத்தம் கேட்டு வகுப்பில் நுழையும் தலைமை ஆசிரியர், "மிஸ்டர். NV என்ன சத்தம் என்ன பாடம் நடத்தறேள்" என்று கேட்டு விட்டு கரும் பலகையை பார்ப்பார். அவருக்கு விஷயம் புரிந்து விடும். செல்லமாக "நாப்பத்தஞ்சு வயசாகறது, இன்னும் பழைய குறும்பு போகலை"என்று செல்லமாக சொல்லிவிட்டு போய் விடுவார். அப்போது இந்த மாதிரி விஷயங்கள் எங்கள் பள்ளியின் புரட்சி என்று கூட சொல்லலாம்.
ஒரு மாணவன் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே ஆசிரியர் வந்துவிட்டால் சைக்கிளை விட்டு இறங்க வேண்டும். அதுதான் நாம் ஆசிரியருக்கு தரும் மரியாதை என தவறாக யாராலோ ஒரு பழக்கம் ஏற்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்தது. அது பற்றி வகுப்பிலே NV சார் ஒரு முறை "எதுக்கு இறங்கனும், அதிலே என்ன மரியாதை! சரி அதுதான் மரியாதை என்றே வைத்துகொண்டாலும் எவனாவது முழுசா இறங்குவானான்னு பார்த்தா அதுவும் இல்லை. இறங்குவது போல பாவ்லா பண்ணுவான். சைக்கிள் சீட்டிலிருந்து * *தை தூக்கிட்டு திரும்பவும் வச்சிட்டு போயிடுவான். கையை தூக்கி வணக்கம் வைத்து மரியாதை செய்யலாம். ஆனா **தை தூக்கி மரியாதையா, இதுக்கு பேசாம வாத்தியாரை பார்க்காத மாதிரி திரும்பிகிட்டு போறது பெட்டர்" என்று சொன்னார். இப்படி ஒரு வாத்தியார் அப்போதெல்லாம் "கெட்ட" வார்த்தை பேசுவது சரியா என மனசு கேட்டாலும் சிந்திச்சு பார்க்கும் போது "ஆமாம் அவர் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்குதே" என தோன்றியது.
அவரின் திறமை இருக்கிறதே, வாவ், ஒரு மாதிரியான அசாத்திய திறமை அவருக்கு. ஆங்கில புலமையும் கணித புலமையும் வியப்படைய வைக்கும். அவரின் நகைச்சுவை அவருடைய மிக பெரிய சொத்து. பள்ளியின் அனைத்து விழாக்களையும் இவர் ஒரு ஆளாக நின்று நடத்திக்காட்டுவார்.
வேலையில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் இப்பவும் பள்ளியின் பழைய மாணவர் சங்கத்திலே இணைந்து பள்ளியின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறார். வாழ்க்கைப் பாடத்தை நடத்தினார் என சொன்னேனே! அப்படிப்பட்ட அவரே ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் மிக பெரிய சறுக்கலை சந்திக்க நேர்ந்தது. ஏதோ பைனான்ஸ் கம்பனியால் தன் வீடு முதற்கொண்டு எல்லாவற்றையும் இழக்க நேர்ந்தது. "இனி NV அவ்வளவுதான்" என சொல்லியவர்கள் மத்தியில் மீண்டு எழுந்து வெற்றிக் கொடி நாட்டினார். அப்போது அவர் மட்டும் மனம் சோர்ந்திருந்தால் இன்று அவர் நம்மிடம் இருந்திருக்க மாட்டார். அவரிடம் படித்த எங்கள் அனைவருக்கும் அவர் நடத்திக்காட்டிய பிராக்டிகல் பாடம் அது என்றே நான் நினைக்கிறேன்.
சிறந்த ஆஞ்சனேய பக்தர். அவர் நடக்கும் வேகம் இன்றைக்கும் குறையவில்லை. எப்போதும் பிஸி தான். ஆணதாண்டவபுரத்திலே கோபால கிருஷ்ண பாரதிக்கு விழா எடுக்கறேன், நம்ம பள்ளி இலக்கிய மன்ற கூட்டத்துக்கு ஏற்பாடு பண்றேன், "வீரப்பா பிள்ளை" கோப்பை வாங்க பசங்களை தயார் பண்றேன், "NV கோப்பை" மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கான வேலை பண்றேன் என இப்பவும் எப்பவும் அவர் சுறுசுறுப்புதான். அவரிடம் படித்தேன் என்பதில் எப்பவுமே பெருமைப்பட்டு கொண்டிருக்கும் மாணவர்களில் நானும் ஒருவன்.
நல்ல குருபக்தி
ReplyDeleteஎனக்குத்தான் டீனேஜ் முழுசும் ஒரு வாத்தியாரும் ஒரு டீச்சரும் ஸ்கூல்லயும் வீட்லயும் கூடவே இருந்து(ஹி ஹி எங்க அப்பா அம்மா) இரூந்து எனக்கு வாத்தியார்ன்னாலே அலர்ஜியா போயிடுச்சு
இதைப் படிக்கும்போது எனக்கும் என் பள்ளி வயது நினைவுக்கு வருவதை உணர முடிகிறது.. அருமையா இருக்குங்க அபி அப்பா:)...
ReplyDeletenalla irukku... Its good to recall some of our teachers.
ReplyDeleteolder generation teachers !!!
ReplyDeleteThey were just amzing people.!!//
உள்குத்து ...? :(
NV சார்ட்ட நான் படித்ததில்லை. அவர் தன்னுடைய வகுப்பு பையன்களிடம் உள்ள நெருக்கத்தைப் பார்க்கும் பொழுது எங்களுக்கெல்லாம் பொறாமையாக இருக்கும்.
ReplyDeleteநான் படித்தது MK சாரிடம். அவரின் திறமையும் அலாதியானது. அவரின் திறமைகளைப்பற்றி கோர்வையாக சொல்ல தெரியவில்லை. MK சாரைப்பற்றி தாங்கள் அவசியம் ஒரு பதிவு போடவும். நன்றி. அதுபோல் இராஜாஜி சார் எனக்கு ரொம்ப நெருக்கம். முடிந்தால் அவரைப்பற்றியும் ஒரு பதிவு போடவும். ஆனால், யாரையும் பயம் காட்டிவிடாதீர்கள். இராஜாஜி சாரை நினைத்தால் பன்னீர் புகையிலையின் மனம்... இப்படியே எழுதிகொண்டு போனால் இந்த பின்னூட்டமே ஒரு பதிவாக போய்விடுமோ?
பழைய நினைவை கிளறிய உங்களுக்கு மீண்டும் எனது நன்றி.
நந்து! வாங்க, உங்க கொடுமை பெரிய கொடுமையா இருக்கே:-))
ReplyDeleteநந்து! வாங்க, உங்க கொடுமை பெரிய கொடுமையா இருக்கே:-))
ReplyDeleteரசிகன்! வாங்க வருகைக்கு நன்றி!!
ReplyDeleteவாங்க செந்தில்நாதன்! முதல் வருகையா இது. அம்மாவா அது! சந்தோஷமா இருக்கு போட்டோவை பார்க்கும் போது!! ஆமாம் நம் ஆசிரியர்கள் தானே அந்த வயதில் நமக்கு ரோல் மாடல்!!
ReplyDeleteதனது பள்ளி ஆசிரியரை நினைவு கூர்ந்து அவரது நிழலுருவத்தினையும் ( photo )
ReplyDeleteநடுவிலே அமைத்ததன் மூலம் தாங்கள் தனது வாழ்வின் வரைகோட்டில் மேலும்
உயர்கிறீர்கள்.
Live a life of love and gratitude
என்பார்கள். தங்கள் ஆசிரியப் பெருந்தகை பற்றிய தங்கள் தொகுப்பு
குமரகுருபரர் எழுதிய நீதி நெறி விளக்கமதிலுள்ள ஒரு பாடலை
நினைவூட்டுகிறது.
"எத்துணை ஆயினும் கல்வி இடமறிந்து
உய்த்துணர்வு இல்லெனினும் இல்லாகும் = உய்த்துணர்ந்தும்
சொல்வன்மை என்றெனின் என்னாகும்? அஃதுண்டேல்
பொன்மலர் நாற்றம் உடைத்து."
பொருள் வெள்ளிடை மலை. இருப்பினும் கடைசி வரியின் பெருமை
தனித்துவம் வாய்ந்தது. ஒருவர் பெற்ற கல்வி, அதை ஆராய்ந்து பிறர்க்கு
தெளிவாக எடுத்துரைக்கும் திறமையுடன், சொல்வன்மையும் சேர்ந்து
இருப்பது பொன்னால் ஆன மலர் வாசனையுடன் கூடி இருப்பது போல்
ஆகும்.
மேன்மேலும் உயர்க ஈசன் துணை நிற்பான். இது திண்ணம்.
அன்பு கலந்த ஆசிகளுடன்,
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://vazhvuneri.blogspot.com
வாங்க டாக்டர்! வருகைக்கு நன்றி!!
ReplyDeleteதருமி சார்! இதிலே என்ன உள்குத்து, டாக்டர் நேரிடையா தான் சொல்லியிருக்காங்க! பாருங்க அடுத்த பின்னூட்டத்திலே சிரிக்கிறாங்க:-))
ReplyDeleteவாங்க அப்துல் குத்தூஸ்! MK சார் தான் அப்போ எனக்கு அறிவியல் எடுத்தார். அவரைப்பற்றியும் சொல்லிகிட்டே போகலாம்.
ReplyDelete1. எழுத்து மிக அழகாக இருக்கும், கரும் பலகையில் நேர் கோடாக எழுதுவார்.
2. எல்லா எழுத்துமே கேப்பிட்டல் எழுத்தாவே தான் எழுதுவார்.
3. கிட்டத்தட்ட பிலிப்பைனிஸ் எழுத்து மாதிரி டைமன் டைனனாக இருக்கும்
4.தும்பைப்பூ வேஷ்டியும், பளிச்சுன்னு லைட் கலர் சட்டையும் தான் காஸ்ட்டியூம்
5. அவர் பேண்ட் அணிவதில்லை.
6.சைக்கிள் ஓட்ட தெரியாது,
7.மிக்க நல்லவர். செட்டி தெருவிலே இருக்கிறார்.
***************
அடுத்து இராஜாஜி சார் வெத்தலை, பன்னீர் புகயிலை போட மாட்டார். நீங்கள் சொல்வது இராஜாமணி சார். அவர் தான் கும்பகோணம் வெத்தலை, கைச்சீவல், ARR வாசனி சுண்ணாம்பு, சொக்கு புள்ள கடையின் பன்னீர் புகையிலை போடுவார்.
குரு பக்தி பதிவு !!
ReplyDeletedelphine said...
older generation teachers !!!
They were just amzing people.!!///
ரிப்பீட்டேய். (தருமி சார் உங்கள் பின்னூட்டத்தை பார்க்கவில்லை நான்)
மிக்க நன்றி பதிவிற்கு,
ReplyDeleteஎனது புகைப் படத்தை நீங்கள் எடுத்து போட்டதற்கும் மிக்க மகிழ்ச்சி!
நிறைய பதிவு சீக்கரம் போடுகிறேன்...
NV சார் சூப்பர்! என்றால் அது மிகை அல்ல!
மயிலாடுதுறை சிவா...
Abi Abba,
ReplyDeleteMany thanks, I'm proud student of Rajamani Sir - 1982 - SSLC batch.
kr_kumar@yahoo.com
naan nv siridam tution padithen.appoduthan avarathu mudhan pennuku marraige nadanthadu.naangal ellam oru kudumbaga athil kalandu kondoom.romba jollyana vathiyar.
ReplyDeleteஆஹா..சூப்பர்..என்னே உங்க குருபக்தி!
ReplyDeleteஅடடா இப்போதானே பாத்தேன். பரவால்ல, better late than never, என்ன சொல்றீங்க ?
ReplyDeleteநான் பத்தாம்பு படிக்கச்சே அவர்தான் எங்களுக்கு க்ளாஸ் டீச்சர். ஆங்கிலமும் கணக்கும் போதிச்சவர். "Third person, singular present tense-ல verb-ஓட எஸ் சேக்காதவனும் பீ திங்கிற பயலும் நீயும் ஒண்ணு" என்று ஆங்கில இலக்கணம் போதித்தவர். இப்போது நினைத்தாலும் பீறிடும் புன்னகையை அடக்க இயலவில்லை. (அவரோட ரோஜாப்பு சண்டை ஜோக் தெரியுமா ? :D)
அப்புறம், ஒன்பதாம் வகுப்பில் அறிவியல் போதித்த எம்.கே சார் (திருநீறும் புன்னகையும் துலங்கும் அழகிய அவரது முகம் இன்னும் என் மனதில்) வண்ண வண்ண சாக்பீஸ்களால் போர்டில் படம் வரைந்து பாடம் நடத்தும் அழகு ... அவரும் விழுந்து விழுந்து சிரிக்கும்படி ஜோக்கடிப்பதில் மன்னர்.
அப்புறம் பத்தில் அறிவியல் போதித்த கே.ஆர் சார் (அவரிடம்தான் நான் டியூஷன் கூட - இப்போ அவர்தானே தலைமை ஆசிரியர் ?), தமிழ் எடுத்த அரங்கராஜன் சார், வரலாறு/புவியியல் எடுத்த ஆனந்தவல்லி டீச்சர் என்று - இரண்டே ஆண்டுகள் படித்திருப்பினும் மறக்க இயலா அற்புத ஆசிரிய மனிதர்கள்.
அன்புடன்
முத்து
ஆகா.. ஆசிரியர்களைப் புகழும் மாணவர்கள்.. பார்க்கவும் படிக்கவும் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு... நான் இப்போதுதான் ஓய்வு பெற்ற ஆசிரியன். என் மாணவர்கள் என்னை நினைத்திருப்பர்.. இணையப்பக்கம் வநததாகத் தெரியவில்லை.. நான் நல்லாசிரியர் விருது பெறவில்லை என்பதே என் பெருமை! என் மாணவன் ஒருவன் எனக்குத் தந்த விருதை நான் என் வாழ்நாளில மறக்க முடியாது- பார்க்க -http://valarumkavithai.blogspot.com/2012/09/blog-post.html. நன்றி நண்பர்களே.
ReplyDelete