பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 11, 2008

அடங்கொய்யால!!!!

ஒரு கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும்(!) என படிப்பினை ஊட்டும் நிகழ்ச்சி ஒன்றை நேற்றைக்கு பார்த்தேன். “மானாட மயிலாட” நிகழ்ச்சியை தவற விடக்கூடாது என்பதற்காகவே அவசர அவசரமாக ஓடி வந்து டிவியை போட்டா ஒரு அம்மா அழுதுகிட்டு இருக்காங்க. ராஜ்குமார் என்கிற டான்சரின் அம்மா. அவுங்க அழுக பின்ன பையன் அழுக, நமீதா அழுக நானும் அழுக அய்யோடா அப்படி ஒரு சோகம் போங்க!

பின்ன ஸ்வேதா என்னும் டான்சர். அவங்க புருஷன் கிட்ட பேட்டி எடுத்தாங்க நமீதாவும் கலா மாஸ்ட்டரும்.

“உங்க மனைவி ரத்தீஸ் கூட டான்ஸ் ஆடினாங்களே அது பத்தி என்ன நினைக்கறீங்க”
நா தழுதழுக்க மாப்பிள்ளை சொன்னார் பாருங்க பதில் அப்படியே ஆடிபூட்டேன்!

“நான் குடுத்து வச்சவன்ங்க ஸ்வேதாவை மனைவியா அடைய, இத்தனை நாள் எல்லோரும் அவ கிட்ட வந்து ஆட்டோகிராப் வாங்குவாங்க வாங்கின பின்ன உங்க பேர் என்னான்னு கேப்பாங்க(J) ஆனா இப்போ இந்த நிகழ்ச்சிக்கு பின்ன ஸ்வேதா ஸ்வேதா ன்னு பேர் சொல்லி கூப்பிடும் போது போது ……உவ்வ்வ்வ்வ்வ்வ்வ்”

மாப்பிள்ளை பேட்டி குடுத்து கிட்டே இருக்கும் போதே ஸ்வேதா பக்கத்திலே இருக்கும் மத்த டான்ஸர்ஸ் ஸ்வேதா கண்ணை துடைச்சு விட்டு வராத அழுகையை வர வழைக்க இவர் கிட்ட பேட்டி எடுத்தாங்க நீதியரசி நமீதா!
“ஸ்வேதா, உங்க புருசன் நல்லா புருஷா நல்லா சொல்லுது நீங்க என்னா சொல்லுது” இது நமீதா!

மைக்கை வாங்கி கிட்டு ஸ்வேதா “நான் நெம்ப குடுத்து வச்சவ, அவர் எனக்கு புருசன் மாத்திரம் இல்ல”ன்னு சொல்லி கொஞ்சம் கேப் விட்டப்ப என் நண்பர்கள் கத்தியது எல்லாம் இந்த பதிவுக்கு சம்மந்தமில்லாத விஷயங்கள்! தொடர்ந்து ஸ்வேதா “ அவர் எனக்கு தாய் மாதிரி, காரணம் அரையிறுதிக்கு வரும் போது என் குழந்தைக்கு பயங்கரமா டைபாய்டு காய்ச்சல், ஷிவரிங்ல தூக்கி தூக்கி போடுது. அப்போ கூட என் புருசன் சொன்னார் ‘நீ போம்மா (நமக்கு கலைய வளர்க்கனும் அது தான் முக்கியம்) இந்த டென்சனை மனசுல வச்சுக்காம இதை மறந்துட்டு ஆடு’ன்னு சொல்லி என்னை அனுப்பி வச்சார்”ன்னு சொல்லிட்டு அழுகையோ அழுகை.

அதை பார்த்து கண் மை கலையாமல் கலா மாஸ்ட்டர் அழுக பின்ன என்ன என் நண்பர்கள் கூட நானும் மூக்கு சிந்தினேன்.
அதை விட அருமை மேடையிலே மழை பெய்யவிட்டு எல்லாரும் என்னமா டான்ஸ் ஆடினாங்கப்பா. அது முடிந்த பின்ன “பாடித்திரிந்த பறவைகளே” “முஸ்தப்பா முஸ்தப்பா டோண்ட் வொர்ரி முஸ்தப்பா”ன்னு மெழுகு வத்தி ஏத்திகிட்டு பாட்டு பாடினாங்க. அவங்க என்னதான் டோண்ட் ஒர்ரி முஸ்தப்பான்னு பாடினாலும் என்னால வொர்ரி பண்ணாம இருக்க முடியலை.

ஒட்டு மொத்த நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இனி டிவியை ஜட்டி காயப்போடும் உபகரணமாக மட்டுமே பயன் படுத்த வேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டது. சரி இதன் தாக்கம் தமிழ்நாட்டிலே எப்படி இருக்குதுன்னு பார்ப்போம்ன்னு வீட்டுக்கு போன் செய்தேன். அபிபாப்பா தான் போன் எடுத்தா. “மானாட மயிலாட பாத்திங்களாடா”ன்னு கேட்டேன். அங்கிருந்து பதில் வந்தது “பாவம்ப்பா அந்த டைபாய்டு வந்த குழந்தை”
எனக்கு நச்சுன்னு நடு மண்டையில் அடிவாங்கின மாதிரி இருந்துச்சு!

21 comments:

  1. மானாடா மயிலாட..

    நமிதா சதிராட முடிந்ததாமா..?

    ReplyDelete
  2. வாங்க டிசிபிடி! இன்னும் 3 வாரம் போகுமாம் அந்த கொடுமை!!

    ReplyDelete
  3. அபிஅப்பா நேத்து எபிஸோட் பார்த்தீங்களா..

    பலமுனைகளிலிருந்து வந்த கண்டனக் குரல்களுக்குப் பிறகு 'இதய தெய்வம்' நமீதா full டிரெஸ்ஸில் வர.. இதைப் பார்த்தவுடன் கொதித்துவிட்டனர் பக்தர்கள்.. 'தாலிபானிஸம்' ஆரம்பமாகிவிட்டது கொதிக்கிறார்கள் ரசிகர்கள்.

    ஆனாலும் கலைஞர் டிவியில் டாப் ஒன் புரோகிராம் 'மானாட மயிலாட' மட்டுமே..

    ஸோ.. நமீதா வாழ்க என்கிறார்கள் சேனலில்..

    ReplyDelete
  4. வாங்க உண்மை தமிழன்! பாத்தீங்கலாவா? அந்த கொடுமையை இன்னும் விலாவாரியா ஜொல்லியிருக்கலாம், ஆனால் நேரமின்மையால் கொஞ்சமா எழுதினேன்!!

    ReplyDelete
  5. வாங்க டாக்டர், பாவம் அந்த பச்ச மண்ணு நமீதா பேசும் தமிழ் அழகு கிட்டதட்ட நான் தமிழ் எழுதும் அழகுக்கு சமமா இருந்துச்சு!

    ReplyDelete
  6. //ஒட்டு மொத்த நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இனி டிவியை ஜட்டி காயப்போடும் உபகரணமாக மட்டுமே பயன் படுத்த வேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டது.///

    இதுக்காக எல்லாம் எதுக்கு புது பழக்கம்:))) பின் தேவை இல்லாத செலவு வேற:))) வேற முடிவு எடுங்க அபிஅப்பா!!!

    ReplyDelete
  7. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...;)

    ReplyDelete
  8. வீ டோண்ட் சீ டமில் சேனல்ஸ், ஒன்லி இங்க்கிலீஷ் சேனல்...

    கார்ட்டூன்...கார்ட்டூன்...கார்டூன்....என் கஷ்டம் எனக்கு...ஹி..ஹி..

    ஆமா கொலதெய்வம் நமீதா எப்டியிருக்காக...

    -ஒரு எபிசோட் கூட பார்க்காத அப்பாவி...

    ReplyDelete
  9. //நானும் பார்த்து தொலைச்சேன் தொல்ஸ்... மழைன்னு சொல்ற ஒரு செட்.. .. நமீதாவ மிஞ்சிட்டாங்க நம்ப பெண்கள்.
    //

    ரிப்பீட்டேய்..;)

    டிவி குள்ள அடிச்ச மழைல ரூமே கூலூர்ல நடுங்குச்சி ...
    நா கூட போர்வைய தூக்கி மேல போட்டுக்கிட்டு தான் பாக்கவே முடிஞ்சிதுனா பாத்துகோங்களேன் :)

    ReplyDelete
  10. //எனக்கு நச்சுன்னு நடு மண்டையில் அடிவாங்கின மாதிரி இருந்துச்சு!//

    குழந்தைகள் எப்போதும் குழந்தைகள்தான்.....தேவையான அடிதான்!!!!
    அன்புடன் அருணா

    ReplyDelete
  11. நான் மிஸ் பண்ணிட்டேன்... ஆமா, எந்த ரெண்டு ஜோடிய கழட்டி விட்டாங்க?

    ReplyDelete
  12. //ஒட்டு மொத்த நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இனி டிவியை ஜட்டி காயப்போடும் உபகரணமாக மட்டுமே பயன் படுத்த வேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டது.///
    அது சரிதான் :)))

    ReplyDelete
  13. நல்லவேளை...
    நானின்னும் அந்த நிகழ்ச்சி பார்த்ததில்ல..
    தப்பிச்சேன்...!

    ஆமா..இந்த 'அடங்கொய்யால' வார்த்தைக்கு என்ன அர்த்தமுங்க?
    தமிழ் சினிமால சொல்றாங்க.
    இப்போ நீங்க சொல்றீங்க.

    கொஞ்சம் சொல்லிக்குடுங்களேன்..
    புண்ணியமாப் போகும்... :)

    ReplyDelete
  14. இந்த மாதிரி ப்ரோகிராம்களுக்கு நடுவுல இவய்ங்க போடுற நாடகம் பெரிய கொடுமடா சாமீய்ய்....

    தெரியாதனமா விஜய் டீவில சிம்பு போட்ட டிராமாவ பாத்துட்டேன்... அவ்வ்வ்....

    ReplyDelete
  15. //ஒட்டு மொத்த நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இனி டிவியை ஜட்டி காயப்போடும் உபகரணமாக மட்டுமே பயன் படுத்த வேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டது//

    புண்ணாக்கு கோணியில விழுந்து விழுந்து சிரிச்சேன்.

    ReplyDelete
  16. இதெல்லாமா பார்த்துட்டு இருக்கீங்க? பொதிகை வருதா இல்லையா அங்கே? அது சரி, உங்களைப் பாராட்டி ஒரு பதிவு போட்டிருக்கேனே, கொஞ்சம் வந்து வாழ்த்துச் சொல்லிட்டுப் போகலாமில்ல?:P

    ReplyDelete
  17. //கொடுமையை இன்னும் விலாவாரியா ஜொல்லியிருக்கலாம்,//

    "ஜொள்ளி இருக்கீங்க"னு தான் தெரியுதே, அதிலேயும் இன்னும் விலாவாரியா ஜொள்ளலைனு குறை வேறேயா? :P

    ReplyDelete
  18. ஹா..ஹா... அபிஅப்பா.. ரொம்ப நாளைக்கு அப்புறம் மறுபடியும் ரொம்ப சிரிச்சேன்.. பதிவுக்கு நன்றி...
    அந்த கடைசி வரி,ஒரு சென்டிமெண்ட் டச் ரொம்பவே யோசிக்க வைச்சுது:).கலக்கலா இருக்குங்க...

    ReplyDelete
  19. எது எதற்கெல்லாம் பதிவு போடுறதுன்னு உங்க கிட்டேதாயா கத்துக்கனும்..,இருந்தாலும் முடித்த விதம் அசத்தல்..

    ReplyDelete
  20. அடங்கொய்யாலா !!! எத்தனை தடவை!!! மீள் பதிவு,

    நாயாட நரியாட...

    ReplyDelete
  21. அடங்கொய்யால...

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))