பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 25, 2008

'விட்'நாம் வீடு!!! பாகம் # 02

போனா போவுது எனக்காக இதன் முதல் பாகத்தை இங்கே போய் படிச்சிட்டு வந்து இதை படிங்க!

***********************

நம்ம ஊர் பசங்களுக்கு ஒரு நல்ல பழக்கம் உண்டு. எவனுமே ராத்திரி தூங்க மாட்டான். வைத்தா கடை, பஸ்ட்டாண்டு, ரயில்வேஸ்டேஷன், அல்லது எந்த தொழிலதிபர்(?) கடையிலோ உக்காந்து உலகமயமாக்கல் முதல் புஷ் பொண்ணுக்கு எத்தினி சீர் செஞ்சாங்க,அந்த கல்யாணத்தின் கட்டுசாத கூடை வெரைட்டி என்ன, AVC காலேஜ்ல அடுத்த சேர்மனா யாரை போடலாம்(அடப்பாவமே),பாதாள சாக்கடை, செல்ல கொசுக்கள், நல்ல பன்னிகள், ATS க்கு எத்தன சொத்து இன்னி தேதிக்கு தேரும், டாட்டா வர வர மோசம் இப்படியாக உருப்படியா விவாதிச்சுட்டு வந்து படுத்தா டாண்னு 5 மணிக்கு கீ கொடுத்த பொம்மை மாதிரி எழுந்துடுவானுங்க. இந்த குப்புற அடிச்சு தூங்கின நம்ம ஊர் பசங்கன்னு யாரையும் பார்க்க முடியாது. காலை எழுந்த உடனே இப்பல்லாம் எல்லாருமே சொல்லி வச்சமாதிரி டவுசர்,ஆக்ஷன் ஷு மாட்டிகிட்டு வண்டி எடுத்துகிட்டு என்னவோ 5.15க்கு எல்லாம் முதல் கேம் ஸ்டார்ட் பண்ணுவது போல பறந்து அடிச்சுகிட்டு (ஒவ்வொறு குரூப்புக்கும் தனி தனி இண்டோர் ஸ்டேடியம் வச்சிருக்கானுவ) போய் நைட் விட்ட கதையிலே இருந்து தொடருவானுங்க. அப்படியே முதல் கேம் ஆரம்பிக்க எட்டு மணி ஆகிடும்.

அன்றைக்கு அப்படித்தான் எல்லாம் முடிஞ்சு அப்படியே அரை தொடையோடு, ஷெட்டில் பேட்டை வண்டியில் சொருகி கொண்டு மகளிர் கல்லூரி வழியா ஒரு ஏழெட்டு பேரா வரும் போது "இங்க பாருடீ இந்த அங்கிள் அய்யன் திருவள்ளுவர் சிலை மாதிரி கோணிகிட்டு வண்டி ஓட்டுறார்" என்னும் எகத்தாளம் பிடிச்சதுங்க சொன்னதை எல்லாம் நான் காதில் வாங்கி கொண்டிருந்தால் மூட் அவட்டாகிவிடும் அபாயம் இருந்ததால் "விடுறா கைப்புள்ள" ரேஞ்சுக்கு வீடு வந்து சேர்ந்த போது தான் எங்க வீட்டு குழம்பு ருசிக்கான விஷயம் நடந்து கொண்டிருந்தது. அனேகமாக நான் கிளைமாக்ஸ்ல் போன போது முப்பது ரூபாய்க்கு பேரம் முடிந்து மணியடிக்கும் தருவாயில் உரிமைக்குரல் எம்ஜியார் மாதிரி வந்து "நிறுத்து யாவாரத்தை"ன்னு பிளிற தங்கமணிக்கு சந்தோஷம் தாங்கலை. "இந்தா பாரு அபிஅப்பா வந்தாச்சு. இப்ப வச்சிக்க உன் வாய் சவடால. கேக்க ஆள் இல்லன்னு உனக்கு நெனப்பு"ன்னு மீன்காரிய பார்த்து ஒரு சிக்ஸர் அடிக்க நான் வண்டிய ஸ்டைலா நிப்பாட்டறேன்ன்னு நிப்பாட்டி (அது கீழே விழுந்தது தெருவின் குற்றம் என்னுடையது அல்ல) மெதுவா வந்து "என்ன ஆத்தா இது எத்தினி ரூவா"

"முப்பது ரூவாய்ங்க"

"அது மத்தவங்களுக்கு, ஆமா பூம்புகார்ல இப்ப யாரு எம்மெல்லே" (10 ரூவா குறைக்க MLA வை கூப்பிடுவது அதிகம் தான்)

"ஆமா எனக்கு எங்க ஆம்பள பேரே தெரியாது"

"ஆமா பூம்புகார் கணேசன தெரியுமா?"

"எம் மொவந்தான் பால்வாடி படிக்கிறான்"

"நா அவன கேக்கல. சரி வுடு. இது எத்தினி ரூவா"

"முப்பது"

"எனக்கு"

"பத்து"

"சரி குடுத்துட்டு போ, இனி நீ எத்தினி ரூவாய்க்கு கொடுத்தாலும் பத்து ரூவாத்தான் வாங்கிகணும் சரியா"

"சரிங்க"

அடுத்த பத்து நிமிஷத்துல எங்க நகர் அல்லோகலபட்டு போச்சு. "என்னங்க இப்படி எலச்சு போயிட்டீங்களே, இஞ்சி தட்டி போட்டு நல்லெண்ணெய் காச்சி வச்சிருக்கேன் தலயிலே தேச்சுக்கோங்க, மதியத்துக்கு அன்னாசிக்காய் மோர்குழம்பும் பண்ணிடவா, நல்லதா நாலு டி ஷர்ட் எடுக்கணும் இன்னிக்கு உங்களுக்கு...... இப்படியாக நான் சந்தோஷத்தில் மிதந்து மதியம் சாப்பிட்டு படுத்தவுடன் எப்போதும் போல மகளிர் மாநாடு வீட்டு வாசலில் நடந்தது. கேக்கணுமா தங்கமணி தான் ஈரோயின். பின்னே இருக்காதா முப்பது ரூவா மீனை பத்துக்கு வாங்கினவர் பொண்டாட்டியாச்சே.

அடுத்த நாள் "என்னங்க பக்கத்து வீட்டு அக்காவுக்கும் நீங்க தான் வாங்கி தரனுமாம், ஒரே அடம்"ன்னு சொன்னபோது கொஞ்சம் ஜெர்காகி போனேன். சரின்னு ஒத்துகிட்டு வாங்கும் போது அந்த அக்கா எப்போதும் வாங்குவது போல இல்லாம ஐந்து மடங்கு வாங்கியது. கேட்டதுக்கு "அபிஅப்பாதான் மலிசா வாங்குவாங்களேன்னு என் தம்பி வூட்டுக்கும் சேத்து வாங்கினேன். அவன் வந்து அவன் பங்கை எடுத்துட்டு போவான். பட்டணத்திகிட்டே பத்துக்கு இருவதா கொடுத்தா போச்சு என்னங்க அபிஅப்பா"ன்னு சொன்ன போது எனக்கு மயக்கம் வராத குறை தான்.

பட்டணத்தி என்னிடம் "இத எத்தினிக்கு தரலாம் சாமீ"ன்னு கேட்ட போது மஞ்சக்காவே அவசரகுடுக்கை மாதிரி "இருவது ரூவா"ன்னு சொல்ல நான் சின்னமாரியம்மன் கோவிலில் தீமிதித்த எஃபக்டிலே இருந்தேன். அதை விட கொடுமை அவங்க தம்பி வந்த போது "இந்தா இது அம்பது ரூவா அபிஅப்பா மலிசா வாங்கி குடுத்தாங்க நீயும் தான் உள்ளூர்ல குப்ப கொட்டுற அவர பாரு எப்பவாவது வந்தா கூட பட்டணத்தி எல்லாம் பயந்துகிட்டு கேட்ட ரூவாய்க்கு குடுக்குறா"ன்னு சொல்லி லாபம் பார்க்க, அன்றைய மதிய மகளிர் மாநாட்டில் இன்னும் ஐந்து பேர் அடுத்த நாள் மீன் வாங்க வருவதாக என் தங்கமணி சொல்ல நான் கிராம நாடகத்தில் வில்லன் முகத்தில் ஆரம்பம் முதல் சிவப்பு லைட் அடிச்சாலும் கிளைமாக்ஸில் திடீரென பச்சைலைட் லைட் அடிப்பார்களே (திருந்திவிட்டானாமாம்) அது போல பலவழிகளில் மாப்பு கேட்டு நிசத்தை சொல்ல அவங்க கீதாம்மா மாதிரி கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு கத்த கதை இதோடு முடியலை இன்னும் கொஞ்சம் இருக்கு.

"எனக்கு தெரியுஞ்சாமீ நீங்க இப்படி எதுனா பண்ணுவீங்கன்னு. போய் 50 கிராம் பீபரி காபிபொடி வாங்கிட்டு சுருக்க வாங்க"

"நான் எலச்சி போகலையா"

"இல்ல நல்லா குண்டா லாலேட்டன் மாதிரித்தான் இருக்கீங்க"

"இஞ்சி தட்டி போட்ட ஜோதிகா இல்லியா தலை குளிக்க"

"இல்ல தேவையில்லை உங்களுக்கு"

"மதியத்துக்கு பருப்பு உருண்டை குழம்பும் வச்சிடுறியா"

"ஹல்லோ நான் என்ன மிஷினா"

"நேத்து ஏதோ டி ஷர்ட் வாங்கணும்ன்னு சொன்னியே சாயந்திரம் போலாமா"

"இல்ல இன்னிக்கு பிரதோஷத்துக்கு போகனும். இந்த சட்டைக்கு என்னா குறைச்சல் ராசா மாதிரி இருக்கு போங்க போய் காபி பொடி வாங்கிட்டு வாங்க"

"உனக்கு தெரியாதா சேதி. அந்த காபிபொடி கடை ஓனர்"

"போதும் போதும் மாமி ஏற்கனவே சொல்லியிருக்காங்க அந்த உங்க 8ம் வகுப்பு அட்டகாசத்தை. பதிவு பெருசா போயிடுச்சு. நாளை குசும்பன் கல்யாணத்துக்கு போய் வந்த கதை பதிவிலே ஆரம்பத்திலே ஒரு சின்ன கொசுவத்தியா அதை சுத்திடுங்க. இப்ப போய் காபிபொடி வாங்கிட்டு வாங்க"

தலையை வீட்டுகுள்ளே தொங்க போட்டுகிட்டா கூட வெளியே சிங்கம் மாதிரி வருவோம்ல. மெதுவா வண்டிய எடுத்துகிட்டு தெருமுனைக்கு வந்தா பட்டணத்தி "சாமீ சீக்கிரம் வாங்க இத்தோட உங்க கணக்கு நூத்து நாப்பது ஆச்சு. குடுத்தா நா வெரசா பஸ்ஸ புடிப்பேன்"

நல்ல வேளை நான் முதல்ல ஜூவல்லரி விளையாட்டையோ, எக்ஸ்சேஞ்ச் விளையாட்டையோ விளையாடலை. நூத்து நாப்பதோட போச்சு.

நாளை சந்திப்போமா!!

32 comments:

 1. //"சாமீ சீக்கிரம் வாங்க இத்தோட உங்க கணக்கு நூத்து நாப்பது ஆச்சு. குடுத்தா நா வெரசா பஸ்ஸ புடிப்பேன்"//

  அய்யோடாஆஆஆஆ! அண்ணாத்தே நானும் நீங்க நம்ம எமெல்யே பேரச்சொல்லி ரகளை பண்ணி யிருப்பீங்கன்னு பார்த்தேன்..!

  ReplyDelete
 2. அய்யோ கமெண்ட் கடைசியிலேர்ந்து ஆரம்பிச்சிட்டேனா சரி முதல் வரிக்குப்போறேன் :)

  ReplyDelete
 3. //எவனுமே ராத்திரி தூங்க மாட்டான். வைத்தா கடை, பஸ்ட்டாண்டு, ரயில்வேஸ்டேஷன்/

  நான் வைத்தா கடைப்பா!
  வேற எங்கயுமே போனதே இல்ல :)

  ReplyDelete
 4. //என்ன, AVC காலேஜ்ல அடுத்த சேர்மனா யாரை போடலாம்(அடப்பாவமே),பாதாள சாக்கடை, செல்ல கொசுக்கள், நல்ல பன்னிகள், ATS க்கு எத்தன சொத்து இன்னி தேதிக்கு தேரும்,//

  எல்லாமே இன்னிக்கு வரைக்கும் விடைதெரியாத கேள்விகள் :)

  ReplyDelete
 5. அடங்கொக்கமக்கா நான் கூட அபிஅப்பா புத்திசாலின்னு நினைச்சிட்டேனே! கடைசில பார்த்தா தானே தெரியுது லட்சணம். அட....(இங்க்ளிபீசுல மூணாவது எழுத்த போட்டுக்கோங்க)

  ReplyDelete
 6. //மகளிர் கல்லூரி வழியா ஒரு ஏழெட்டு பேரா வரும் போது "இங்க பாருடீ இந்த அங்கிள் அய்யன் திருவள்ளுவர் சிலை மாதிரி கோணிகிட்டு வண்டி ஓட்டுறார்" என்னும் எகத்தாளம் பிடிச்சதுங்க//

  நீங்க நல்லாவே கணக்கு பண்ணி வந்திருங்கீங்க போல :)))))))))))))))))

  ReplyDelete
 7. //"ஆமா பூம்புகார் கணேசன தெரியுமா?"
  //

  எவ்ளோ நல்ல மனுசன் அவரெல்லாமா உங்களுக்கு மீன் வாங்குறதுக்கு ஒத்தாசைக்கு வரணும்>?????????? :)))

  ReplyDelete
 8. அட பாவமே....
  நீங்க இவ்வளவு நல்லவரா...:)

  ReplyDelete
 9. ///"இங்க பாருடீ இந்த அங்கிள் அய்யன் திருவள்ளுவர் சிலை மாதிரி கோணிகிட்டு வண்டி ஓட்டுறார்" என்னும் எகத்தாளம் பிடிச்சதுங்க சொன்னதை எல்லாம் நான் காதில் வாங்கி கொண்டிருந்தால் மூட் அவட்டாகிவிடும் அபாயம் இருந்ததால் "விடுறா கைப்புள்ள" ரேஞ்சுக்கு வீடு வந்து சேர்ந்த போது தான்///


  :):)
  வேணாம் விடுங்க எதுக்கு வம்பு வயசாயிடுச்சுல்ல:):)

  ReplyDelete
 10. ஆஹா.....

  அப்படிப்போட்ட 'அறு'வாளா இது? :-)))))

  ReplyDelete
 11. /
  நல்ல வேளை நான் முதல்ல ஜூவல்லரி விளையாட்டையோ, எக்ஸ்சேஞ்ச் விளையாட்டையோ விளையாடலை. நூத்து நாப்பதோட போச்சு.
  /

  கலக்கல்!!

  ReplyDelete
 12. கடைசியில் ஹீரோ ஆனது இப்படித்தானா...... :))))))))))

  ReplyDelete
 13. \\\டாண்னு 5 மணிக்கு கீ கொடுத்த பொம்மை மாதிரி எழுந்துடுவானுங்க. \\

  ;-))

  அப்படின்னா நீங்க அந்த ஊர்ல பொறக்கல..சரி தானே ;))

  ReplyDelete
 14. //நாளை சந்திப்போமா!!//

  ஆவலா காத்துட்டு இருக்கோம்.. :)

  ReplyDelete
 15. //நான் கிராம நாடகத்தில் வில்லன் முகத்தில் ஆரம்பம் முதல் சிவப்பு லைட் அடிச்சாலும் கிளைமாக்ஸில் திடீரென பச்சைலைட் லைட் அடிப்பார்களே (திருந்திவிட்டானாமாம்)//

  :)))
  ஹஹா, மிகவும் ரசித்தேன்.

  ReplyDelete
 16. பாக்யராஜ் படம் பாத்தா மாதிரி இருக்கு

  ReplyDelete
 17. வாங்க ஆயில்யன்!நமக்கு எந்த எம்மெல் லேவை தெரியும். சும்மா உடான்ஸ் தான்!

  ஆஹா மாயவரம்னா பொங்கிடுறீங்களே, வாழ்க வளர்க!!

  ReplyDelete
 18. என்ன நி.ந. என்னை ச்சீன்னு திட்டிட்டு போயிட்டீங்க:-)))

  ReplyDelete
 19. கொத்ஸ்,நீங்க என்ன பாஸ்டன் பாபாவுக்கு வாரிசா???:-))

  ReplyDelete
 20. வாங்க தமிழன் வருகைக்கு நன்னி!!:-))

  ReplyDelete
 21. ரீச்சர்! உள்குத்துக்கு உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை வலையிலே:-)))

  ReplyDelete
 22. சிவா! கலக்கல் எல்லாம் முடிஞ்சு ரொம்ப நாள் ஆச்சு! நான் இப்போ சர்வசுத்தமாகிட்டேன்:-)))

  ReplyDelete
 23. கோபி! நீ என்ன கொத்தனாருக்கு வாரிசா ஆகிட்டியா, ஒத்த வரியிலே அவரை மாதிரி பதில் சொல்லிகிட்டு இருக்கே!!!

  ReplyDelete
 24. வாங்க தமிழ்பிரியன்! நாம வேற எப்படி ஹீரோவா ஆகமுடியும். இப்படி ஆனாத்தான் உண்டு!!!

  ReplyDelete
 25. கோபி!நான் எப்போதுமே 5க்கு எழுந்துடுவேன்.அது மட்டும் தான் ஒரே நல்ல பழக்கம் எனக்கு!!

  ReplyDelete
 26. வாங்க பொடியன் சாரே! கண்டிப்பா அடுத்த பாகம் போட்டிடலாம். வருகைக்கு நன்னி:-))

  ReplyDelete
 27. வாங்க அம்பி! நிஜமா கிராமத்து நாடகம் பார்த்து இருக்கீங்களா, அப்படித்தான் நடக்கும்:-))

  ReplyDelete
 28. வாங்க உமையணன், ஏற்கனவே உமாசங்கர்ன்னு ஒருத்தர் வலையுலக பாக்கியராஜ்ன்னு சொல்லிட்டு போனார் போன வருஷம். வருகைக்கு நன்றி!!!

  ReplyDelete
 29. // நாளை குசும்பன் கல்யாணத்துக்கு போய் வந்த கதை பதிவிலே ஆரம்பத்திலே ஒரு சின்ன கொசுவத்தியா அதை சுத்திடுங்க.//

  'விட்'நாமிலும் கொசுவத்தி:-)!(நன்றி.துளசி மேடம்)

  நானானி பதிவின் பின்னூட்டத்தில் என் கேள்வி://ப்ளாகர்ஸ் பாஷையிலே "ரங்கமணி & தங்கமணி"க்கு யாருக்குங்க காப்பிரைட்?//

  தங்கள் பதில்://ராமலெஷ்மி! தங்கமணி, ரங்கமணியின் சினிமா உலக காபிரைட் மணிரத்னம்(அக்னிநட்சத்திரத்திலே ஜனகராஜ் வசனம்) பின்னே வலையிலே அதன் முழுகாபிரைட் எங்க குரு "டுபுக்கு" அவர்களுடையது.பின்னாலே நாங்க எல்லாம் சேர்ந்து பயன்படுத்திகிட்டோம்!//

  சிந்து பைரவி ஜனகராஜ் போல தலை வெடித்து விடும் போலிருக்கையில் தக்க சமயத்தில் தகவல் தந்து காப்பாற்றி விட்டீர்கள்:-))), நன்றி அபி அப்பா!

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))