நான் 50 நாள் முன்னதாகவே இந்த பதிவை போட்டிருக்க வேண்டும். நான் நொந்து நூலாகி போனது அப்போதுதான். சரி ஏதாவது மிராக்கிள் நடந்து 50 நாளில் திருந்தியிருப்பானுங்கன்னு நெனச்சேன். மாறாக இன்னும் அதிகமா கெட்டு போயிட்டானுங்க. திருச்சி ஏர்போர்ட் ஆளுங்கதாங்க. மிக மட்டமான சர்வீஸ். படிச்சவன், படிக்காதவன்,நல்லவன்,(மாங்கொட்டை சிம்பு மாதிரி)கெட்டவன், ஏழை, பணக்காரன், ஊனமுற்றவன், அரசியல்வாதி, விஞ்ஞானி போன்ற எந்த பாகுபாடும் இல்லாத அதாவது கடவுளுக்கு சமமாக எல்லோரையும் பாவிக்கும் ஒரு இடம் எது என்றால் அது திருச்சி ஏர்போர்ட் தான்.
அந்த நாய் கருப்பா இருந்துச்சு. நெத்தியிலே அந்த விடிய காலை 4.30க்கே ஆஞ்சநேயர் செந்தூரம் வச்சிருந்துச்சு. இமிக்ரேஷன்ல உக்காந்து இருந்துச்சு. என்னை மாத்திரம் இல்லை, எல்லோரையும் திருடனை போலவே பார்த்துச்சு. ஒருமையில் விளித்தது. சகட்டுமேனிக்கு திட்டியது. யாரும் எதிர் கேள்வி கேட்க்கவில்லை. நாயை அடிப்பானேன் என எல்லோரும் விட்டிருக்கலாம். அது தன்னை தானே திட்டிக்கொண்டது. தான் ஏதோ கழுதை மேய்க்கும் வேலை பார்ப்பதாக. இந்த வேலை கிடைக்காவிட்ட்டால் அது சத்தியமாக சைக்கிளில் வெங்காய மூட்டை வைத்து கொண்டோ, அல்லது கோல பொடி வித்துகிட்டோ தான் வாழ நேரிடும்.
என்ன ஒரு திமிர். மெட்டிஒலி அப்பா மாதிரி ஒரு பெரியவரை "ந்தா பெருசு, உயிரை வாங்காதே ஒன் ஊரு என்னா,எம்பர்கேஷன் கார்டு பில்லப் பண்ண தெரியல பிளைட் ஏற வந்துட்டியா"ன்னு கேக்குது.
"ஆல் பிளடி இண்டியன்ஸ்" என்பது போல எங்களை பார்த்தது. இதோ இப்போது நான் கொழும்பில் இருக்கிறேன். ஏர்ப்போர்ட் கிளி கொஞ்சுது. டாய்லெட் அம்சமா இருக்கு. ஓக்கே இலங்கை இந்தியாவை விட பணக்கார நாடு தான். திருச்சி ஏர்போர்ட் வருமைக்கு பிறந்ததாக கூட இருக்கலாம். அதற்காக டாய்லெட்டில் அனடாமி பாடம் எடுக்கனுமா என்ன. அந்த எகத்தாலம் பிடிச்ச நாய் கூட அந்த டாய்லெட்குக்கு தான் போகும் போல இருக்கு. அதை எல்லாம் அழிச்சா தான் என்ன!
இந்த நாய் டூட்டி முடிச்சு வீட்டுக்கு போன பின்னே அதன் குழந்தைகள் அதன் காலை கட்டி கொள்ளுமே, அதுக்காகவாவது கொஞ்சம் தன்மையா நடந்துக்க கூடாதா! தலைவலித்தால் சூடா காபி கிடைக்குமே அதற்காகவாவது கொஞ்சம் பரிந்து பேசக்கூடாதா!இவன் சம்பளத்தில் பாதி கொடுத்தா கூட நான் நாய் மாதிரி சேவகம் பண்ணுவேன் அங்கே! நாதாறி பய அவனுக்கு தான் கொடுக்கும் இந்த அரசாங்கம் வேலை.
நான் சம்பாதிச்சு தரும் அன்னிய செலாவனி மாத்திரம் இனிக்குது. ஆனா எங்களை மாத்திரம் நாய் மாதிரி நடத்தனுமா? என்ன அனியாயம்டா இது! நான் சொல்வது தப்புன்னு பட்டுச்சுன்னா சொல்லுங்க மக்கா!
வ"ரு"மைக்கு பிறந்ததாக கூட இருக்கலாம். அதற்காக டாய்லெட்டில் அனடாமி பாடம் எடுக்க"னு"மா என்ன. அந்த எகத்தா"ல"ம் பிடிச்ச நாய் கூட அந்த டாய்லெட்"குக்கு" தான் போகும் போல இருக்கு. அதை எல்லாம் அழிச்சா தான் என்ன!
ReplyDeleteவ"று"மை
எடுக்க"ணு"மா
எகத்தா"ள"ம்
"குக்கு" =டாய்லெட்டுக்கு
ரொம்பக் கோபமா இருக்கீங்கனு ஆன்லைனிலேயே தெரிஞ்சது.ஆனால் அதுக்காகக் கமெண்ட்ஸ் கொடுக்கக் கூட இவ்வளவு கஷ்டமா இருக்கும்னு நினைக்கலை!
அமைதி, அமைதி, அமைதி, இது தான் இந்தியா! நம் இந்தியா, ஜெய்ஹிந்த்! வந்தேமாதரம். கொஞ்சம் அமைதியானதும் வரேன். வர்ட்டாஆஆஆஆஆஆ?????????
"நல்லா இருங்கடே!'
ReplyDeleteஇந்தத் தலைப்புக்கு ஆசீபுக்கு ராயல்டி கொடுக்கணும்னு நினைக்கிறேன், இல்லைனே கேட்டுட்டீங்களா அவர் கிட்டே அனுமதிக்கு?????
//நான் சம்பாதிச்சு தரும் அன்னிய செலாவனி மாத்திரம் இனிக்குது. ஆனா எங்களை மாத்திரம் நாய் மாதிரி நடத்தனுமா? என்ன அனியாயம்டா இது! நான் சொல்வது தப்புன்னு பட்டுச்சுன்னா சொல்லுங்க மக்கா!//
ReplyDeleteதப்பே இல்ல!?
அண்ணே இதே மாதிரிதான் சென்னை ஏர்போர்ட்ல பாத்தீங்கன்னா மிடில் ஈஸ்ட் போறவங்கள ஒரு மாதிரியும் யு.எஸ் & யு.கே போறவங்கள ஒரு மாதிரியும் ஹாண்டில் பண்ணுவாங்க நாதாரிங்க :(
சென்னை ஏர்ப்போர்ட் எவ்வளவோ பரவாயில்லை போல தெரிகிறதே:)
ReplyDelete//ஒருமையில் விளித்தது. சகட்டுமேனிக்கு திட்டியது. யாரும் எதிர் கேள்வி கேட்க்கவில்லை. நாயை அடிப்பானேன் என எல்லோரும் விட்டிருக்கலாம். அது தன்னை தானே திட்டிக்கொண்டது. தான் ஏதோ கழுதை மேய்க்கும் வேலை பார்ப்பதாக. இந்த வேலை கிடைக்காவிட்ட்டால் அது சத்தியமாக சைக்கிளில் வெங்காய மூட்டை வைத்து கொண்டோ, அல்லது கோல பொடி வித்துகிட்டோ தான் வாழ நேரிடும்//
ReplyDeleteஅபிஅப்பா.. கோவத்திலும் கூட ,வார்த்தைகளின் விளையாட்டு அருமையா இருக்கு:)
உங்களால வித்தியாசமான பதிவுகளை கொடுக்க முடியும்:)
//
ReplyDeleteநான் சம்பாதிச்சு தரும் அன்னிய செலாவனி மாத்திரம் இனிக்குது. ஆனா எங்களை மாத்திரம் நாய் மாதிரி நடத்தனுமா? என்ன அனியாயம்டா இது! நான் சொல்வது தப்புன்னு பட்டுச்சுன்னா சொல்லுங்க மக்கா!//
இது ஞாயமான கேள்வி.. நான் வர்ரேன் சப்போர்ட்டுக்கு:)
ஏலேய் கட்ரா வண்டிய, போய் என்னன்னு கேட்டுட்டு வந்துருவோம்:)
//இந்த நாய் டூட்டி முடிச்சு வீட்டுக்கு போன பின்னே அதன் குழந்தைகள் அதன் காலை கட்டி கொள்ளுமே, அதுக்காகவாவது கொஞ்சம் தன்மையா நடந்துக்க கூடாதா! தலைவலித்தால் சூடா காபி கிடைக்குமே அதற்காகவாவது கொஞ்சம் பரிந்து பேசக்கூடாதா!இவன் சம்பளத்தில் பாதி கொடுத்தா கூட நான் நாய் மாதிரி சேவகம் பண்ணுவேன் அங்கே! நாதாறி பய அவனுக்கு தான் கொடுக்கும் இந்த அரசாங்கம் வேலை.
ReplyDeleteநான் சம்பாதிச்சு தரும் அன்னிய செலாவனி மாத்திரம் இனிக்குது. ஆனா எங்களை மாத்திரம் நாய் மாதிரி நடத்தனுமா? என்ன அனியாயம்டா இது! நான் சொல்வது தப்புன்னு பட்டுச்சுன்னா சொல்லுங்க மக்கா!//
உங்கள் இயற்கை குணம் எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் இது போன்ற வார்த்தைகளை எல்லாம் உபயோகிப்பவர் இல்லை. இதிலிருந்து நன்றாகத் தெரிகிறது. அவர் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்திருப்பார் என்று. இலங்கயிலிருந்தாவது உங்கள் பயணம் இனிதே அமையட்டும்.
அண்ணே உங்க நியாயம் தான். வேற ஒண்ணும் சொல்லுறதுக்கு இல்ல எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டதால.
ReplyDeleteகம்ப்ளெண்ட் குடுத்தீங்களா அது மேல, சும்மா விடாதீரும்வே
ReplyDelete\\நான் சொல்வது தப்புன்னு பட்டுச்சுன்னா சொல்லுங்க மக்கா!
ReplyDelete\\ இன்னும் புகார் குடுக்காம இருந்தா அதுதான் தப்பு அபி அப்பா
தப்பில்லை...
ReplyDeleteநாயோட பேரு இல்லை? நெஞ்சில போட்டிருப்பாங்களே!!
கொடுமையப்பா..
??
ReplyDeleteஅவர் ஒருமையில் பேசினார் என்பதற்காக அவரை ஒருமையில் விளிப்பது சரியா?
அபிஅப்பா..
ReplyDeleteஉலகத்திலேயே வேலை செய்வதையே விருமபாத ஊழியர்களைக் கொண்டதுதான் நமது பரந்த பாரத தேசம்..
ரோட்டோர கக்கூஸ் நிர்வாகத்திலிருந்து கோட்டை வரையிலும் இப்படிப்பட்டவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். என்ன செய்ய?
தவறு எங்கே இருக்கிறது? நிர்வாக அமைப்பில்..
நிர்வாகிகளும் இந்த லட்சணத்தில்தான் இருக்கிறார்கள். பிறகு இவர்களை யார் தட்டிக் கேட்பது..
மூல காரணம் நமது ஆட்சி நிர்வாகங்கள் இந்தளவுக்கு தரம் தாழ்ந்து இருப்பதுதான்..
நீங்கள் சொல்வதைப் பார்த்தால், அந்த ஊழியரின் செயல் மற்ற ஊழியர்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்துதான் இருக்க வேண்டும். ஆனாலும் யாரும் கண்டிக்க மாட்டார்கள்.
அவர்களுக்கு அவர் சக ஊழியர்.. ஒரு நாள் அவர் மீது நடவடிக்கை எடுத்து பின்னர் தம்மீதும் நடவடிக்கை எடுப்பார்களே என்று பயந்து அவருக்குத்தான் ஆதரவளிப்பார்கள்.
இங்கே அரசு ஊழியர்களில் பெரும்பாலோருக்கு சிவிக்சென்ஸ் இல்லீங்க அபியப்பா..
நீங்க இனிமே இந்தியாவுக்கு வரவே வேண்டாம்.. இலங்கை வரைக்கும் வந்து முடிஞ்சா எங்களைக் கூப்பிடுங்க.. நாங்க முடிஞ்சா அங்கன வந்து பாத்துக்குறோம்..
நியாயமான கோவம்
ReplyDeleteஎன்னங்க அபி அப்பா! இவ்வளவு கோபமா? கூல் ஆகுங்க.... இதெல்லாம் பாத்து பாத்து மறத்துப் போச்சு.... :(
ReplyDelete//நான் 50 நாள் முன்னதாகவே இந்த பதிவை போட்டிருக்க வேண்டும். நான் நொந்து நூலாகி போனது அப்போதுதான். சரி ஏதாவது மிராக்கிள் நடந்து 50 நாளில் திருந்தியிருப்பானுங்கன்னு நெனச்சேன். மாறாக இன்னும் அதிகமா கெட்டு போயிட்டானுங்க. திருச்சி ஏர்போர்ட் ஆளுங்கதாங்க.//
ReplyDeleteநான் இதைப் படிச்சுட்டு,நீங்க ஏதோ நம்ம சஞ்சய்யைப் பத்தி எழுதப் போறீங்கன்னு நெனச்சிட்டேன். ஹி ஹி..
அது சரி,இப்போ நீங்க கொழும்பிலயா இருக்கீங்க?
சார் ,
ReplyDeleteஉங்கள் கோபம் மிகவும் நியாயமானது தான் .
ரயில்வே துறையில் இதை விட மோசம் பயணிகளை ட்ரீட் பண்ணுவது .
பஸ் துறையில் அதையும் விட கஷ்டம்.
அரசு பஸ் கண்டக்டர் அவருடைய சொந்த பஸ்சில் நாம் ஓசியில் பயணம் செய்வது போல் நம்மை மரியாதையை இன்றி நடத்துவார் . எங்களை போல் ஒன்று இரண்டு பேர்கள் தன் எதிர்த்து கேட்கிறோம் . மீதி அனைவரும் ஒன்றுமே சொல்வது இல்லை .அதனால் தான் இவர்கள் எவ்வளவு ஆடுகிறார்கள்.
உங்களுக்கே கோபம் வரும் படி செய்து விட்டார்களே !!!!!!!
ஆச்சர்யகுறி !!!!!!!!!!!!
அன்புடன்
பாஸ்கர்.தி
//இமிக்ரேஷன்ல உக்காந்து இருந்துச்சு. என்னை மாத்திரம் இல்லை, எல்லோரையும் திருடனை போலவே பார்த்துச்சு. ஒருமையில் விளித்தது. சகட்டுமேனிக்கு திட்டியது. யாரும் எதிர் கேள்வி கேட்க்கவில்லை.//
ReplyDeleteநியாமான கோவம் அபி அப்பா. நீங்க சொல்லுவது முழுவதும் ரொம்ப சரி. எனக்கும் இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது. சென்னை ஏர்போர்ட்ல. ஒரு வருடம் கழித்து சொந்த மண்ணை மிதித்த ஆனந்தத்தோடு இமிக்ரஷன் செய்ய போனா அங்க ஒரு பொண்ணு கவுண்டர்ல உட்காந்து இருந்தாங்க. நான் கிட்ட போயி ஒரு சின்ன சிரிப்போடு காலை வணக்கம் சொல்லிட்டு பாஸ்போர்ட் நீட்டினேன். எதோ வங்ககூடததை வாங்குவது போல அலட்சியமா வாங்கி ஒரு பெரிய கொட்டாவியுடன் ஸ்டாம்பிங் பண்ணாங்க. ஒரு பண்ணாட்டு விமான நிலையத்தில் வேலை செய்யும் போது அதற்குரிய ஒரு பணிவு, தூய்மை எதுவுமே இல்லை எனக்கு கோபம் வந்தது. நம்ம ஊரில் கூட நமக்கு மரியாதை இல்லை என்றால். நாம் போகும் இடத்தில் எப்படி மதிப்பாங்க.
சுமார் இரண்டாண்டுகளுக்கு முன், திருச்சி - இலங்கை வழியாக துபை வரும் போது
ReplyDeleteஅதிகாரி: (என் பாஸ்போர்ட்டை கையில் வாங்கிக் கொண்டு) ஹம் பேர் என்ன?
நான்: சுல்தான்
அதிகாரி: அம்மா பேர் சொல்லு
நான்: லாஸ்ட் பேஜ் பாருங்க
அதிகாரி: அது எனக்குத் தெரியும். நீ சொல்லு
நான்: இவ்வளவு நேரம் பாஸ்போட் என்ட்டதான் இருந்திச்சு.
அதிகாரி:இந்த பாஸ்போட் போட்டோ போர்ஜரி மாதிரித் தெரியிது
நான்: எனக்கு உங்கள் கண்ணுக்கு நல்ல டாக்டரைப் பாக்க சொல்லத் தோணுது
அதிகாரி:என்ன ஒரு மாதிரியா சொல்றீங்க
நான்: கேள்வி அப்டித்தான் கேக்றீங்க. இந்த விமான தளத்தை பயன்படுத்துறவர் உங்க கஸ்டமர். கஸ்டமர்ட இப்படித்தான் நடந்துக்கறதா
அதிகாரி:வரும் போது சென்னை வந்துட்டு போகும்போது திருச்சி வழியா ஏன் போறீங்க
நான்: தெரியாத்தனமா செஞ்சிட்டேன். இனிமே இப்படி செய்ய மாட்டேன். எனக்குத் தெரிந்தவர்களிடமும் இந்த மாதிரி தப்ப செய்யாதீங்கன்னு இனி சொல்லி வைக்கிறேன்.
அதற்குள் ஒரு மேலதிகாரி வந்து: என்ன சார் என்ன ப்ராப்ளம்
நான்: நான் எத்தனையோ விமான தளத்தை உபயோகித்திருக்கிறேன். ப்ராப்ளம் டைம்ல ஈராக் கூட போய்ட்டு வந்தேன். இந்த மாதிரி ஐந்து பேர் உட்கார்ந்து கிட்டு திருடனிடம் கேள்வி கேட்பது மாதிரி கேள்வி கேட்டதில்லை
அதிகாரி: எங்களுக்கு இந்த மாதிரி கேட்க சொல்லி உத்தரவு
நான்: சென்னை மாதிரி திருச்சியும் இந்தியாவில தானே இருக்கு. உங்களுக்கு மட்டும் தனியுத்திரவா?
அதிகாரி:எங்களுக்கு இடப்பட்ட கட்டளை நாங்க பாலோ பண்ண வேண்டியிருக்கு
நான்: ஹீம் சீக்கிரமே திருச்சி... ... ... . வேற ஏதாவது கேள்வி பாக்கி இருக்கா?
அதிகாரி:இல்ல. நீங்க உள்ள போலாம்.
நான்: ஓ. யூ மேட் மை டே. தேங்க்ஸ்.
இப்பல்லாம் ரொம்ப நன்றாக மாறி இருந்ததே. திரும்பவும் பழைய படி ஆகி விட்டதா?
வருத்தங்கள் அபி அப்பா.
\\இலவசக்கொத்தனார் said...
ReplyDelete??
அவர் ஒருமையில் பேசினார் என்பதற்காக அவரை ஒருமையில் விளிப்பது சரியா?//
வழிமொழிகிறேன்..
அவரைப்பற்றி கம்ப்ளெய்ண்ட் செய்யலாம்... அது ஒன்று தான் சரியானது.. இன்றைக்கு இல்லாவிட்டாலும் அதிகம் பேர் கம்ப்ளெய்ண்ட் செய்தால் ஒருவேளை எதாவது நடக்கலாம்.. தப்பு கண்டால் அதை சரி செய்ய எதாவது முயற்சி எடுக்கவேண்டும்..அபி அப்பா..
\\நான் சம்பாதிச்சு தரும் அன்னிய செலாவனி மாத்திரம் இனிக்குது. ஆனா எங்களை மாத்திரம் நாய் மாதிரி நடத்தனுமா? என்ன அனியாயம்டா இது! நான் சொல்வது தப்புன்னு பட்டுச்சுன்னா சொல்லுங்க மக்கா!\\
ReplyDeleteநியமான கேள்வி தான்...ஆனா ஒரு பயளும் பதில் சொல்லமாட்டான்...சரி எப்போ வந்திங்க..போன் பண்ணுங்க.
புகார் கொடுத்து இருக்கனுமே அபி அப்பா? ரொம்ப கோவம் வந்திருச்சோ? இல்லைனா பாத்துக்கொண்டு இருந்தவங்கள்ல நீங்களும்தானே சேத்தி?
ReplyDeleteஅனியாயங்களை பதிவு போடறதுல என்ன பிரயோசனம்? தகுந்த மேல் அதிகாரிங்களுக்கு புகார் இதுவரை அனுப்பலேன்னா இப்பவாவது அனுப்புங்க. அப்படியும் நடவடிக்கை இல்லேன்னா மேல் நடவடிக்கை எடுக்க அகில இந்திய அளவுல அமைப்பு இருக்கு.
சரிதான் அபிஅப்பா!
ReplyDeleteஇன்னும் இவர்களுக்கு மனிதம் கைவரவில்லை!
சரிதான் அபிஅப்பா!
ReplyDeleteஇன்னும் இவர்களுக்கு மனிதம் கைவரவில்லை!
சுல்தான் செஞ்ச மாதிரி எதிர் கேள்வி கேட்காதது உங்க தப்பு.
ReplyDeleteஏன் கேக்கலை?
செவுட்டுல ரெண்டு விடாம 50 நாள் கழிச்சு மேட்டர சொல்றிங்க.
ReplyDeleteசென்னை ஏர்போர்ட் போயிருக்கலாம்ல. அங்கதான் சேலை கட்டிய பெண்கள் மட்டும் உக்காந்திருக்காங்க.
சில நேரங்களில் ரெளத்ரம் பழகத்தான் வேணும். இதை விருச்சிக ராசி காரங்களுக்கு நான் சொல்லனுமா என்ன? :p
ReplyDeleteஇப்படிக்கு
இன்னொரு விருச்சிக ராசிக்காரன்.
பொறுமையின் சிகரம், எங்க அபிஅப்பாவையே இப்படி பதிவு எழுத வெச்சிருக்காங்க-ன்னா.. அந்த இமிக்ரேஷன் அதிகாரி ரொம்ப மோசமாத்தான் நடந்திருப்பாரு...
ReplyDeleteசாதாரணமா, நம்ம இந்திய இமிக்ரேஷன் அதிகாரிகள் இப்படி நடந்து நான் பார்த்ததில்லை. கடந்த 15 வ்ருடங்களாக சென்னை சென்று வரும் போதெல்லாம்.. ஒரு சிறிய புன்னகை.. 30 வினாடி பாஸ்போர்ட் செக்கிங்.. அப்புறம் புன்னகையுடன் கூடிய தலையாட்டல்.. இவ்வளவுதான்..
திருச்சி இமிக்ரேஷன் ரொம்ப மோசம் போலருக்கே.. அங்கே போனதில்லை..
அபிஅப்பா.. கவலைப் படாதீங்க.. பிரயாணத்தை எஞ்சாய் பண்ணுங்க.. இவங்கலெலாம்.. கண்ணுல் விழுற தூசு மாதிரி.. கொஞ்ச நேரம் எரிச்சல் வரும்.. அத்தோட மறந்துருங்க.. நம்க்கெல்லாம்.. கட்மை நிறைய இருக்கு..
அன்புடன்,
சீமாச்சு..
சொந்த காரணங்களை முன்னிட்டு (குறைந்த விடுமுறை நாட்களின் காரணமாக) வேறு வழியில்லாது 5 மாதங்களில் 6 முறை திருச்சி விமான நிலையத்தினை சந்த்தித்துச் சென்றேன்.
ReplyDeleteநீங்கள் பார்த்த நாய்தான என் குறுக்கே வந்த்தா தெரியாது ஆனால் அங்கே 80% வரை இதே வகையறாதான் என்று தெள்ளத்தெளிவாக புரிந்தது.
இப்போதைக்கு எவ்வளவு அவசரம் இருந்தாலும் சென்னை சென்று செல்வதாக மட்டுமே நினைத்திருக்கிறேன்.
நாய் வால்கள் நிமிராது!
இனனொறு விஷயமும் கூட..
ReplyDeleteதிருமணமாகி புது மனைவியை திருச்சி வழியாக துபாய் / அமீரகத்திற்குள் அழைத்துக்கொள்ளும் அனைவருக்கும் அறிந்த ஒரு விஷயம்..தனியாக பயணிக்கும் பெண்ணிடம் அந்த பெருந்தகையாளர்கள் காண்பிக்கும் அளப்பறிய அன்பு.!!
முறையான விசாவுடன் பயணம் செய்யவிருந்த என் நண்பரின் மனைவி சென்ற மாதம் அங்கிருந்த பணியாளர்களின் அசட்டை காரணமாக பெரும் துயரிட நேர்ந்தது.
இன்னும் இது போன்று பல கதைகள்.
நாய் வால்கள் நிமிர்த்த முடியாதவை!
/நான் சம்பாதிச்சு தரும் அன்னிய செலாவனி மாத்திரம் இனிக்குது. ஆனா எங்களை மாத்திரம் நாய் மாதிரி நடத்தனுமா/
ReplyDeleteI agree with you 100%.
Ramya
இன்னுமா கோபமா இருக்கீங்க????????
ReplyDeleteI can clearly understand your frustrations. I have experienced the same once in Trichy
ReplyDeleteBieng a fan of yours writings....impressed , inspired by your writngs.....You could have Avoided few wordings.....It might set wrong Example to new bloggers...
Lets vent out our Frustrations ...But not like this ...
Anbu
வாங்க கீதாம்மா! வருகைக்கு நன்றி, 4 பேருக்கு நல்லது செய்யணும்ன்னா பதிவிலே 4 தப்பு இருந்தா தப்பில்லைன்னு நாயகன் கமலே சொல்லியிருக்கார் தெரியும்ல:-))
ReplyDeleteஅமைதியாகியாச்சு, சொர்க்க பூமிக்கு வந்தாச்சுல்ல!!!
ஆமாம், இன்னிக்கு ஒரு நாலுக்கு ஆசீப் அண்ணாச்சி கிட்டே கடன் வாங்கியாச்சு நல்லா இருங்கடேவுக்கு!!!
ReplyDeleteஆமாம் ஆயில்யா! நீங்க சொல்வதும் சரிதான். அமரிக்காவுக்கு ஒரு நீதி, அரபிக்கு ஒரு நீதியா, ஆக மொத்தம் இந்தியனுக்கு அநீதி!!
ReplyDeleteரசிகன் வாங்க, சென்னை கொஞ்சம் பரவாயில்லைன்னு தான் சொல்றாங்க, ஆனா இந்தியாவிலே பெஸ்ட் கேரளா ஏர்ப்போர்ட்டுகள் தான் நல்ல மரியாதை தருதாம்.
ReplyDeleteவண்டிய கட்டிகிட்டு எங்கிட்டு போறது:-))
\\உங்கள் இயற்கை குணம் எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் இது போன்ற வார்த்தைகளை எல்லாம் உபயோகிப்பவர் இல்லை. இதிலிருந்து நன்றாகத் தெரிகிறது. அவர் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்திருப்பார் என்று. இலங்கயிலிருந்தாவது உங்கள் பயணம் இனிதே அமையட்டும்.\\
ReplyDeleteஆமாம் சஞ்சய், நான் கோவப்படவும் மாட்டேன். யாரையும் திட்டவும் மாட்டேன். சிரிக்க சிரிக்க பேசித்தான் பழக்கம். ஆனாலும் அந்த பெரியவரை மரியாதை கெட்டதனமாக பேசியது மனதுக்கு கஷ்டமாக இருந்தது!!இனி இப்படி பேச மாட்டேன்!
வாங்க நிஜமா நல்லவன்! உங்களுக்கு சிங்கை போகும் போது அப்படி அனுபவம் கிடைத்ததா???
ReplyDeleteவாங்க சின்னாம்மனி! நான் புகார் கொடுக்கவில்லை. காரணம் நான் அடுத்து இலங்கையிலிருந்து உடனே அடுத்த விமானம் பிடிக்க வேண்டி இருந்தது. மேலும் என் காலில் ஒரு சின்ன சர்ஜரி நடந்து(9 மணி நேரம் முன்னதாக) அதன் லோகல் அனஸ்தீஷியா குறைந்து, பெயின்கில்லரும் என் பக்கேஜில் போய்விட்டதால் நான் இயலாத சூழ்நிலையில் இருந்தேன்!!
ReplyDeleteவாங்க வடுவூராரே! பார்த்தேன் பெயரை, அவரின் மனைவி குழந்தைகள் நல்லவங்களா இருந்தாங்கன்னா, நம்ம புகாராலே அவங்களும் பாதிக்கப்பட்டா என்னா செய்வது அதான் பதிவில் கூட விட்டுவிட்டேன்!
ReplyDeleteகொத்ஸ், நான் அப்படி சொன்னது தப்புதான். இனி இப்படிப்பட்ட வார்த்தைகள் என்னிடம் வராது! அதிக பட்ச கோவம், வலி, பிரிவு எல்லாமா சேர்ந்து என்னை அப்படி செய்துவிட்டது!
ReplyDeleteவாங்க உண்மை தமிழன்! நீங்க சொல்வது முற்றிலும் சரி! ஒத்துக்கறேன். ஆனாலும் நீங்க இலங்கையை சுத்தி பார்க்க நான் இந்தியாவுக்கே வரக்கூடாதா:-))) வருகைக்கு நன்றி!
ReplyDelete