பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 30, 2008

அப்பாக்களுக்கான ஒரு டெம்பிளேட் பதிவு!!

நான் என் வயசுக்கும் இத்தன ஒரு விஷமத்தை பார்த்ததில்லை. அய்யோ என்னா விஷமம் என்னா விஷமம். அவனை பார்த்துகறத்துக்கே நாலு ஆளு வேணும்.

காலையிலே அவங்க அம்மா எழுந்திருக்கும் போதே எழுந்துடுவான். ஆனா பாருங்க அப்பத்திலே இருந்து என் கிட்டத்தான் விளையாடிகிட்டு இருப்பான். நான்னா அவனுக்கு உசிரு.

ராத்திரி தூக்கத்திலே எங்கே புரண்டு படுத்திருந்தாலும் முழிப்பு வந்துச்சுன்னா ஓடி வந்து என் நெஞ்சு மேலே ஏறித்தான் படுத்துப்பான். எத்தன வியர்வைன்னாலும் கவலைப்பட மாட்டான். நான் கை வலிக்க விசிறி விட்டா சுகமா தூங்குவான். சரி தூங்கிட்டானேன்னு கீழே போட்டா அடுத்த செகண்டு என் மேலே ஏறி படுத்துப்பான்.

நான் காலையிலே குளிக்கும் போது வரை பேசாம வெளையாடிகிட்டு இருப்பான். குளித்து முடிஞ்ச பின்னே சட்டை மாட்டினா போதும் நேரா வண்டிகிட்டே போயிடுவான். அவனை நகர்ல ஒரு ரவுண்டு அடிக்காம நாம வெளியே எங்கயும் போக முடியாது.

வெளியே போயிட்டு நான் தெரு முனைக்கு வருவது எப்படித்தான் அவனுக்கு தெரியுமோ டக்குன்னு வந்துடுவான் கேட்டுக்கு. என்ன திரும்பவும் அவனை வச்சு ஒரு ரவுண்டு அடிச்சாத்தான் நான் உள்ளே போக முடியும்.

தெருவிலே பசங்க விளையாட முடியாது இவனை சேர்த்துக்கலைன்னா. கத்தி தீர்த்துடுவான். வேற வழி பௌலிங் போடுறவனும், பேட்டிங் புடிக்கிறவனும்,கீப்பிங் பண்றவனும் அத்தன ஏன் பிட்ச் இஞ்சினியர் கூட அவன் தான்.

அது தவிர விளையாடி முடிச்ச பசங்க கொஞ்சம் ஜாலியா பேசிகிட்டு இருக்கும் போதும் இவன் தன்னை சேர்த்துகலைன்னா செம கடுப்பாகிடுவான். வேற வழி சேர்த்துகிட்டுதான் ஆகனும். இல்லாட்டி அவங்க அக்காகிட்டே சொல்லி அடுத்த நாள் தண்ணி குடிக்க விட மாட்டான் வீட்டு வாசலில்

அட்ரார்டா நாக்க மூக்க நாக்க மூக்க, மொழ மொழன்னு யம்மா யம்மா,கத்தாழ கண்ணால, போன்ற கருத்தாழமிக்க பாட்டுன்னா தூங்கிகிட்டு இருந்தாலும் டான்ஸ் ஆடுவான்.

சீரியல் பார்த்து அழுவதை விட சீரியலை நிறுத்த சொல்லி அழுவான். அதுக்கு பதிலா டேனி&டேடி அனிமேஷன் பார்த்து சப்புகொட்டி சிரிப்பான்.

கலைஞர் டிவியில் அவனுக்கு பிடிச்ச நிகழ்ச்சி கலைஞரை கடலில் தூக்கி போடுவது தான். (இதுவே அதிமுக வீட்டு பிள்ளைக்கு ஜெ டிவியில் “மைனாரிட்டி அரசு”ன்னு சொல்லும் போது பசங்க சிரிப்பதாக மாத்திக்கலாம். தவிர அப்படி சொல்லும் போது அந்த செய்தி வாசிப்பாளரே சில சமயம் சிரித்து விடுவதாக கேள்வி)

அக்கா ஸ்கூல் பேக்ன்னா அவனுக்கு அல்வா மாதிரி. எடுத்து கை பரபரன்னு பத்து பேஜ் கிழிச்சாத்தான் நிம்மதியா தூங்குவான். அது போல லேப்டாப்பிலே உச்சா போறதுன்னா ரொம்ப இஷ்டம்.

குக்கர் கத்தினா கொஞ்ச நாள் கத்திகிட்டு இருந்தான். ஆனா இப்ப அவனும் எசப்பாட்டு பாட ஆரம்பிச்சுட்டான். அதுக்கு நாம வேற கைத்தட்டனும்ன்னு எதிர்பார்ப்பான்.

அட இத்தினி ஏங்க! அவன் பிறந்து 2 நாள் ஆச்சு. அப்போ தங்கமணி என் கிட்டே 100 ரூவா கொடுத்து மருந்து மாத்திரை வாங்கிட்டு வர சொன்னாங்க. நானும் 99 ரூபாய்க்கு வாங்கிட்டு வந்துட்டேன். மீதி எத்தனைன்னு நாங்க கணக்கு பார்த்துகிட்டு இருக்கும் போது இவன் ரெண்டு கையையும் மூடிகிட்டு தூங்கினவன் திடீர்ன்னு ஒரு விரலை பிரிச்சு காமிச்சான் பாருங்க அப்படியே அசந்துட்டேன் போங்க!!!

52 comments:

  1. நட்டு ஸ்பெஷல் சூப்பரா இருக்கு... அந்த கருத்தாழமிக்க பாடல்கள் கண்டிப்பாக கேட்டால் பசங்கள் ஆட ஆரம்பித்து விடுகின்றனர்.... ;))

    ReplyDelete
  2. நல்ல டெம்ப்ளேட்தான். ஆமா என்னாச்சு ஊர் போன உடனே ஹோம்சிக்கா?

    ReplyDelete
  3. எல்லாம் சூப்பரா இருந்தாலும் கடைசி விட டபுள் சூப்பர். நட்டு வாழ்க. :-)

    ReplyDelete
  4. கண்ணு படப் போகுதய்யா. அபி அப்பா.:)

    ReplyDelete
  5. அட! அந்த ஆட்டுக்குட்டிக்குக் கணக்கெல்லாம் தெரியுதா? :-)))

    ReplyDelete
  6. //நந்து f/o நிலா said...
    நல்ல டெம்ப்ளேட்தான். ஆமா என்னாச்சு ஊர் போன உடனே ஹோம்சிக்கா?
    //
    என்னது அண்ணனுக்கு ஹோம் சிக்கா

    ஹய்யோ ஹய்யோ !

    அண்ணே லீவுக்கு போயிருந்தப்ப துபாய்தான் சிக்கு புடிச்சுப்போய் இருந்துச்சாம் அவ்ளோ ஃபிட்டு :)

    ReplyDelete
  7. //துளசி கோபால் said...
    அட! அந்த ஆட்டுக்குட்டிக்குக் கணக்கெல்லாம் தெரியுதா? :-)))
    ///

    அபி அப்பா இருந்தா நாளெல்லாம் ஆட்டுக்குட்டி
    கோழிக்குட்டி
    மீன் குட்டி கணக்குத்தான் போட்டு காமிச்சிக்கிட்டிருந்திருக்காரு :)))

    (டெய்லி மெனுவை சொன்னாங்க உளவுப்பிரிவிலேர்ந்து !)

    ReplyDelete
  8. அனுபவிங்க.. இதுவும் ஒருவகை சொர்க்கம்தான்..

    ReplyDelete
  9. //மீதி எத்தனைன்னு நாங்க கணக்கு பார்த்துகிட்டு இருக்கும் போது இவன் ரெண்டு கையையும் மூடிகிட்டு தூங்கினவன் திடீர்ன்னு ஒரு விரலை பிரிச்சு காமிச்சான் பாருங்க அப்படியே அசந்துட்டேன் போங்க!!!//

    அப்பாவும் புள்ளையும் அசத்திப் புட்டீங்க!

    ReplyDelete
  10. //அவனை பார்த்துகறத்துக்கே நாலு ஆளு வேணும்.//

    இப்பவே ரெண்டு ஆச்சு, இன்னும் 2 வேண்டும் என்று நைசா ஒரு பிட்டை போடுறீங்களா?? ம்ம்ம்ம்

    ReplyDelete
  11. அபி அப்பா இதெல்லாம் நாங்க நேர்ல பாத்தில பெருமைதான் எங்களுக்கு. நட்டுவுக்கு நாங்க எல்லாம் டெரெக்ட் ரிலேஷன் ல..

    ReplyDelete
  12. //ஆயில்யன் said...
    //துளசி கோபால் said...
    அட! அந்த ஆட்டுக்குட்டிக்குக் கணக்கெல்லாம் தெரியுதா? :-)))
    ///

    அபி அப்பா இருந்தா நாளெல்லாம் ஆட்டுக்குட்டி
    கோழிக்குட்டி
    மீன் குட்டி கணக்குத்தான் போட்டு காமிச்சிக்கிட்டிருந்திருக்காரு :)))

    (டெய்லி மெனுவை சொன்னாங்க உளவுப்பிரிவிலேர்ந்து !)
    //

    உங்க வரைக்கும் வந்திடுச்சா மேட்டர்

    ReplyDelete
  13. அடடா அபி அப்பாவ விட அபி தம்பி கலக்குறானே!

    ReplyDelete
  14. குழலினிது யாழினிது என்பர்தம்
    மக்கள் மழலைச்சொல் கேளாதவர்.

    அற்புதம் அபி அப்பா.

    ReplyDelete
  15. வாங்க தமிழ்பிரியன்! ஆமா இப்படி கருத்தாழமிக்க பாட்டு கேட்டா எனக்கே ஆட வருது, பசங்களுக்கு ஆட வராதா:-))

    ReplyDelete
  16. ஆமாம் இளா! மழலை என்பதே இன்பம் தானே:-))

    ReplyDelete
  17. ஸ்டார் கப்பி சாரே! புன்னகைக்கு நன்னி!!!

    ReplyDelete
  18. நந்து! நோ பீலிங்ஸ்ப்பா! சும்மா பதிவு போட மேட்டர் இல்லைன்னா மொக்கை போட வேண்டியதுதானே இப்படியெல்லாம், ஆனாலும் இது சுகமான மொக்கை:-))

    ReplyDelete
  19. \\ இலவசக்கொத்தனார் said...
    ;)\\

    வாங்க பாபா, நல்ல புன்னகை, நன்றி:-))))

    ReplyDelete
  20. வருகைக்கும் புன்சிரிப்புக்கும் நன்றி ஜெகதீசன்:-))

    ReplyDelete
  21. அனு, வாப்பா, பாட்டெல்லாம்ம் போட்டு முடிஞ்சுதா, குட் இப்பவாச்சும் வழி தெரிஞ்சுதே. இப்பல்லாம் மீ த பஸ்ட்ன்னு எங்கயும் போட காணுமே, என்ன ஆச்சு!!

    ReplyDelete
  22. \\ வல்லிசிம்ஹன் said...
    கண்ணு படப் போகுதய்யா. அபி அப்பா.:)\\

    சரியா சொன்னீங்க வல்லிம்மா, நான் கூட நெனச்சேன். நாளை முதல் ஆபீஸ்க்கு கன்னத்தில் கருப்பு பொட்டு வச்சிகிட்டு போறேன், எனக்கு ரொம்ப கண் பட்டுடுச்சுன்னு நெனைக்கிறேன்:-))))))))))

    ReplyDelete
  23. என்ன ரீச்சர்! என்னை ஆடுன்னு சொல்லிட்டீங்க:-))))

    ReplyDelete
  24. ஆயில்யா, நமக்கு தெரிஞ்சதெல்லாம் மீன்குட்டி தான். இந்த ஆடு, கோழி எல்லாம் கொலஸ்ட்ரால் ஆச்சே!!

    ஆமாம் நான் இந்தியா போன பின்னே துபாய்க்கு சிக் வந்துடுச்சாம் நானும் கேள்விபட்டேன். அதான் ஓடி வந்துட்டேன் சரி பண்ண:-)))

    ReplyDelete
  25. வாங்க உண்மைதமிழன்! ஆமாம் நீங்க சொல்வது போல இதுவும் ஒரு வகை சொர்க்கம் தான். வருகைக்கு நன்றி!!

    ReplyDelete
  26. வாங்க ராமலெஷ்மி! வருகைக்கு நன்றி! ஆமாம் இப்போ தலை வெடிக்காம இருக்கா, நானானிஅக்கா பதிவிலே ரொம்ப கஷ்ட்டப்பட்டீங்களே. இப்போ ஓக்கே தானே!!!

    ReplyDelete
  27. வாய்யா புதுமாப்பிள்ளை குசும்பா! அப்படி ஒண்ணு இருக்கா இதிலே! உன் கிட்டே ஜாக்கிரதையா பேசனும்ப்பா!!!இருக்குடீ உனக்கு 1 மாசத்திலே, அம்மனி இங்க வந்த பின்னே:-))

    ReplyDelete
  28. வாங்க டாக்டர்! ரொம்ப நாள் பின்னே வந்திருக்கீங்க! மிக்க நன்றி!அடிக்கடி வாங்க!!

    ReplyDelete
  29. வாங்க சிவா! இப்ப எந்த மட்டும் இருக்கு லவ்ஸ் எல்லாம், ரெண்டு வரி பின்னூட்டம் கூட போட நேரமில்லாம கடலை சாகுபடியா, நடத்துப்பா நடத்து:-)))

    ReplyDelete
  30. (தெளிவாச் சொல்லிடறேன்:) நட்டுவுக்கு திருஷ்டி சுத்திப் போட்டுடுங்க. பையனை மிஸ் பண்றீங்க போலிருக்கு....

    //தங்கமணி என் கிட்டே 100 ரூவா கொடுத்து மருந்து மாத்திரை வாங்கிட்டு வர சொன்னாங்க. நானும் 99 ரூபாய்க்கு வாங்கிட்டு வந்துட்டேன். மீதி எத்தனைன்னு நாங்க கணக்கு பார்த்துகிட்ட// இதுல பாயின்டு யாருமே பிடிக்கலையா? ஓ, கீதாம்மா இன்னும் வரலை, அதுனாலியா?! மீதி எத்தனைன்னு கணக்குச் சொல்லறதுக்கு ஒரு ஆள் போதாதா? நட்ராஜ்னு பையனுக்குப் பேர்? :-)

    ReplyDelete
  31. அபி அப்பா, தொல்ஸ்

    நல்ல பதிவு - நட்டு பத்தி.

    சூப்பர்

    ReplyDelete
  32. இளைய கவிஞரே! வாங்க. உளவு பிரிவு என்ன சொல்ரது நானே என் டெய்லி மனுவை சொல்லிடறேன்! காதிலே புகை வரட்டும்.

    காலை 5க்கு பில்ட்டர் காபி. பின்னே விளையாட போயிட்டு வந்த உடனே நாட்டுகோழி முட்டையை நன்கு அடித்து சூடான பசும்பாலில் கலந்து லைட்டா ஜீனி போட்டு பால் 1 டம்ளர். பின்னே 9.30க்கு குளித்து முடித்த பின்னே கொஞ்சம் பொங்கல், 3 இட்லி, 1 பூரியோ சப்பாத்தியோ. இட்லிக்கு தொட்டுக்க இட்லிபொடி வித் ஜோதிகா, மற்ரும் கொத்ஸோ அல்லது இட்லிசாம்பாரோ, மற்றும் வெங்கய கார சட்னியோ அல்லது தக்காளி காரமில்லாத சட்னியோ(அந்த சட்னிக்கு குப்புசாமி சட்னின்னு எங்க வீட்டிலே பேர்) அடுத்து முடிஞ்சா ஒரு முட்டை தோசை. அதன் பின்னே கொஞ்சமா காபி. பின்னே வெளியே போயிடுவேன். 11.45க்கு ஆட்டுக்கால் சூப் அல்லது எதாவது ஒரு பழ ஜூஸ், பின்னே மதியம் 2 மணிக்கு மீன்குழம்பு கண்டிப்பாக உண்டு. அது தவிர ஒரு வெஜிடேரியன் குழம்பு.(மோர்குழம்பு அல்லது பருப்பு உருண்டை குழம்பு அல்லது சாம்பார் அல்லது மிளகு குழம்பு அல்லது சில சமயம் பிசிபேலா பாத்) தொட்டுக்க கீரை வகை ஒண்ணு(கடைசலோ அல்லது பொறியலோ அல்லது கூட்டோ), ஒரே பீஸ் உப்புகண்டம், 1 கப் தயிர், ஏதாவது ஒரு ஊருகாய், சுட்ட அப்பளம், ஒரு மலைப்பழம்.

    5.30 மணிக்கு காபி அதன் கூட பஜ்ஜியோ, கொழுக்கட்டையோ, பக்கோடாவோ, மிளகு அடையோ, உரைப்படையோ உண்டு.

    இரவு 3 இட்லி மாத்திரம். பின்னே காம்பிளான்.

    அவ்வளவுதான். இந்த மட்டன், சிக்கன் அதல்லாம் கிடையாது. எப்பவாவது கோலா உருண்டை குழம்பு உண்டு.

    போதுமா வாத்தியாரே! நான் கொஞ்சமா சாப்பிட்டாலும் சுகவாசிய்யா நான்! எல்லாத்திலும் நல்ல ரசனை உள்ளவன் அய்யா நான்.

    காதில் புகை வந்துச்சா, ஹய்யா ஜாலி ஜாலி!!!!!:-))

    ReplyDelete
  33. இளைய கவிஞரே! வாங்க. உளவு பிரிவு என்ன சொல்ரது நானே என் டெய்லி மனுவை சொல்லிடறேன்! காதிலே புகை வரட்டும்.

  34. இளைய கவிஞரே! வாங்க. உளவு பிரிவு என்ன சொல்ரது நானே என் டெய்லி மனுவை சொல்லிடறேன்! காதிலே புகை வரட்டும்.

  35. நிஜமா நல்லவரே! வருகைக்கு நன்றி!!!

    ReplyDelete
  36. சாம் தாத்ஸ்! நல்லா இருக்கே இந்த குத்து பாட்டு எந்த படத்திலே இது வருது:-)))

    ReplyDelete
  37. வாங்க கெக்கேபிக்குனி! நல்ல பேர், இருக்காதா பின்னே, நட்டுவை மிஸ் பண்ணுவது உண்மைதான்!!

    ReplyDelete
  38. வாங்க கெக்கேபிக்குனி! நல்ல பேர், இருக்காதா பின்னே, நட்டுவை மிஸ் பண்ணுவது உண்மைதான்!!

    ReplyDelete
  39. வாங்க சீனா சார்! வருகைக்கு நன்றீ!!!!

    ReplyDelete
  40. கோபி உன் புன்சிரிப்பு கிடைத்தது. ஆனா பப்ளிஷ் பண்ண முடியலை. எங்கயோ போய் ஒட்டிகிச்சு. வருகைக்கு நன்றி!!!

    ReplyDelete
  41. புகையெல்லாம் இல்லை.

    ஆனா 'புஷ்' சொன்னது நெசந்தாம்போல!!!!

    ReplyDelete
  42. //சீரியல் பார்த்து அழுவதை விட சீரியலை நிறுத்த சொல்லி அழுவான். //

    எவ்ளோ நல்லது பண்றான் இப்பவே? :)
    அழகான படங்கள்.

    ReplyDelete
  43. //நல்ல பேர்// ஹிஹி, ஆனந்த தாண்டவமாடிய சிதம்பர நடராஜனின் தந்தையா ஒரு ரூபாய்க்குக் கணக்குச் சொல்லும் நிலையில்! உங்க ஊர் மாயவரம்னு நினைச்சிட்டிருந்தேன். சிதம்பரமும் இல்லை போலிருக்கு;-)

    அன்னிக்கே புள்ள பொறுப்பா, "யப்போய், நிறுத்து"ன்னு ஒத்த விரலை காண்பிச்சிருக்கான்.

    ReplyDelete
  44. இவ்வளவு பெரிய மெனு போட்டிருக்கீங்களே.. அதெல்லாம் சாப்பிட்டதும் பேசியே காலி பண்ணிடுவீங்க போல.. பாத்தா தெரியறதில்லையே...

    ReplyDelete
  45. நம்ம நட்டு போட்டோ கலக்கல்:)

    //மீதி எத்தனைன்னு நாங்க கணக்கு பார்த்துகிட்டு இருக்கும் போது இவன் ரெண்டு கையையும் மூடிகிட்டு தூங்கினவன் திடீர்ன்னு ஒரு விரலை பிரிச்சு காமிச்சான் பாருங்க அப்படியே அசந்துட்டேன் போங்க!!!//

    :))))))

    ReplyDelete
  46. /ரெண்டு கையையும் மூடிகிட்டு தூங்கினவன் திடீர்ன்னு ஒரு விரலை பிரிச்சு காமிச்சான் பாருங்க அப்படியே அசந்துட்டேன் போங்க!!! //

    அட உச்சா போப்போறேன்னு சொன்னா அத புரிஞ்சுக்க முடியலியா?
    :-))

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))