பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

June 2, 2008

உன்னை கரம் பிடித்தேன்... வாழ்க்கை ஒளிமயமானதடீ!!!!

அன்புள்ள உனக்கு!


எந்த பதிவு எழுதுவதாக இருந்தாலும் எனக்கு அதிக பட்சம் பதினைந்து நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும். ஆனால் இந்த கடிதம் எழுத ஆன நேரம் என சொல்வதை விட சில நாட்கள் என சொல்வது பொருத்தமாக இருக்கும். பதிமூன்று வருடங்கள் முன்பாக பார்த்தேன் உன்னை. அப்போது முதல் இப்போது வரை நான் உனக்காக செய்தது என்ன என நினைத்து நினைத்து பார்த்து அதை நினைவு கூர்ந்து எழுதலாமெனத்தான் கடந்த இரண்டு நாட்களாக சிந்தித்து கொண்டிருக்கிறேன். நினைவுக்கெட்டிய தூரம் வரை எதுவுமே இல்லை.

என் சந்தோஷமே உன் சந்தோஷமாய் மட்டுமே இருந்து விட்டாயா? அல்லது நான் தான் ஆணீயத்தனமாக இருந்து விட்டேனா எனவும் தெரிய வில்லை. எந்த தொலைகாட்சியிலும் ஒரு தம்பதிகளின் நேர்காணல் எனில் முதல் வினாவே "தாங்கள் திருமணத்துக்கு பின் பார்த்த முதல் திரைப்படம் எது" என்னும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி தான். என் அம்மா கூட தொலைக்காட்சியில் அந்த வினா எழும் போதெல்லாம் ஏதோ தன்னைதான் கேட்பதாக நினைத்து "பாலும் பழமும்" என சொல்லிக்கொள்வது வழக்கம். நமக்கு திருமணம் ஆகி நான்கு வருடம் ஆகியிருக்கும் அப்போது. நான் திரும்பி பார்த்து உன்னை கேட்டேன் "நாம் பார்த்த முதல் திரைப்படம் எது" என்று. பின்புதான் உணர்ந்தேன் நாம் அது வரை அப்படி ஒரு நிகழ்வையே நிகழ்த்திகொள்ளவில்லை என்று. எனக்குள் கொஞ்சம் வெட்கமும், குற்ற உணர்வும் எட்டி பார்த்தது. ஆனால் இன்றைய தேதி வரை அதை நான் சரி செய்யவோ இல்லை இனிமேலாவது சரி செய்ய வேண்டும் என்று நினைக்கவோ கூட இல்லை.

உன்னை நான் கோபப்படுத்திய தருணங்கள் ஏராளம். உன் கோபமே உலக நியதியில் இருந்து வித்யாசப்பட்டது. மௌனம் மௌனம் நீண்ட மௌனம். அந்த மௌனத்தின் உள்ளே எத்தனை அர்த்தங்கள் என நான் புரிந்து கொள்ளாதது மாதிரியே நடிப்பது இன்னும் இன்னும் உன்னை எந்த அளவு காயப்படுத்தி இருக்கும். அதே போல் உன் சந்தோஷத்தையும் கூட ஆர்ப்பரித்து கொண்டாட தெரியாத பிறவி நீ! ஒரு சிறு புன்னகையிலேயே அத்தனை சந்தோஷத்தையும் அடைக்க தெரிந்த வித்தை உனக்கு கை வந்த கலை.

நான் எதிலுமே உணர்ச்சிபூர்வ முடிவெடுப்பவன். நீயோ அறிவு பூர்வமாய் முடிவெடுப்பாய். ஆனால் என்னிடம் தர்க்கம் செய்தது எப்போதுமே கிடையாது. என் முடிவு எல்லாவற்றையும் முதலில் சந்தோஷமாக ஆமோதிப்பாய். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அதில் உள்ள தவறை சுட்டி காட்டி நான் அதிலிருந்து பின்வாங்கும் படி செய்துவிடுவாய். நீ முதலிலேயே அதை எதிர்த்து இருந்தாலோ என் முடிவு அதன் மேல் மிக உறுதியாகத்தானிருக்கும் என என்னை நன்கு உனக்கு தெரியும்.

எனக்காக புலால் சமைக்க தொடங்கினாய். உனக்காக நான் ஏன் அதை விடக்கூடாது என நான் கொஞ்சம் சிந்தித்திருக்கலாம். எனக்கு சம்பாதிக்க தெரிந்த அளவு செலவு செய்ய தெரியாது. உனக்கோ வீணாய் செலவு செய்ய கொஞ்சமும் தெரியாது. திட்டமிடுதலும், அதை செயல் படுத்துதலும் உனக்கான வரம். நம் வீடு புதுமனை புகுவிழாவுக்கு வரும் போதே கண்டேன். வீட்டை கட்டி முடிந்த பின் மீந்து போனது எட்டு தட்டு ஓடுகளும், நான்கு செங்கல்லும் தான். அத்தனை துல்லியமான ஒரு திட்டமிடல்.நம் வீடு உருவானது முழுவதுமே உன் எண்ணமும், இயக்கமும் தான் எனினும் என் பிரத்தியோக அறை கூலிக்கு ஆள் இல்லாமல் உன் ஒருத்தியால் மட்டுமே கட்டப்பட்டது பற்றி இப்பவும் சொல்லி சொல்லி மாய்ந்து போவார் கட்டிடத்தின் மேற்பார்வையாளர்.

ஆண்டவனிடம் எனக்கான மென்மையான வேண்டுதல்கள் மட்டுமே நான் தானாக நிறைவேற்றி வருகிறேன். அதாவது கையெடுத்து கும்பிடுவது போன்ற. கொஞ்சம் வன்மையானது எல்லாமே என் சார்பாக நீதானே இந்நாள் வரை நிறைவேற்றி வருகிறாய். இதற்காகவாவது நான் எதாவது ஒரு தருணத்தில் "உனக்கு என்ன பிடிக்கும்" எனவாவது கேட்டிருக்கலாம். வாங்கி கொடுப்பது அடுத்த நிகழ்வு. ஒப்புக்காகவேனும் கேட்டிருக்கலாம்.

உனக்கு பிடித்த ஒரு வகை உணவை கூட நான் சமீபத்தில் தானே அறிந்தேன். வாங்கி கொடுத்தேனா என்பது பற்றி நான் சொல்லி என்னை மேலும் மேலும் தரம் தாழ்த்தி கொள்வது உனக்கு பிடிக்காதென்பதால் அதை தவிர்க்கிறேன்.

ஆயிற்று பதிமூன்று வருடங்கள். ஆரம்பித்து விட்டது பதினான்காம் வருடம். நீ நீயாகத்தான் இருப்பாய். உன்னை மாற்ற முடியாது. நான் நானாகத்தான் இருப்பேன் என சொல்ல விரும்பாமல் திருந்த பார்க்கிறேன். கொஞ்சம் இரு "ஆணீயம் ஒழிக" என கோஷம் போட்டுவிட்டு வருகிறேன். தயாராய் இரு வியர்வை துடைக்க!

அன்புடன்
உன் நான்

72 comments:

  1. வழக்கம் போல ஏதோ நக்கலா எழுதுவீங்கன்னு நினைச்சு வந்தேன். ரொம்ப பீலிங்கா இருக்கு. அக்காக்கு போன் பண்ணி சொல்லிடுறேன்.

    ReplyDelete
  2. எழுத்துபிழைகள் இல்லாம இருக்கே. எப்படி?

    ReplyDelete
  3. திருமண தின நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் இல்லாளுக்கும்.

    //எழுதலாமெனத்தான் கடந்த இரண்டு நாட்களாக சிந்தித்து கொண்டிருக்கிறேன். //

    இதுதான் எனக்கு தெரியுமே :)

    பல விஷயங்களில் நானும் நீங்கள் உங்களைப் பற்றி சொல்லியிருப்பது போலதான்... இனியாவது மாறப் பார்ப்போம் :)

    ReplyDelete
  4. //ஒளிமயமானதடீ!!!!"//

    இதுக்கு பேர்தான் ஆணீயம்னு சொல்றது.

    அவ்வ்வ்வ்

    இந்த எலக்கியவாதிக்கு ஒரு சீட்ட்ட்டேய்ய்ய்ய்

    ReplyDelete
  5. அபி அப்பா, உணர்ந்து இட்ட இந்த ஒரு பதிவு போதும், தங்கமணியின் வாழ்க்கை 'இன்னும்' ஒளி மயமாவதற்கு! இருவருக்கும் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. உங்கள் கல்யாண நாளோ.. வாழ்த்துகள்.. கிருஷ்ணா க்ருஷ்ணா நல்லபடியா அமையட்டும் இவங்க வாழ்க்கை..

    ReplyDelete
  7. திருமண நாள் வாழ்த்துகள் அபி அம்மா & அபியப்பா!

    -மதி

    ReplyDelete
  8. திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
    அபி அப்பா அம்மாவிற்கு :)))

    ReplyDelete
  9. //எனக்காக புலால் சமைக்க தொடங்கினாய். உனக்காக நான் ஏன் அதை விடக்கூடாது என நான் கொஞ்சம் சிந்தித்திருக்கலாம். //

    இப்போது கூட வாய்ப்புக்கள் இருக்கிறது விட்டுதள்ளுங்களேன் :)

    ReplyDelete
  10. அபி அப்பா கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் எதுக்கும் ஒரு வாழ்த்தை சொல்லிக்கிறேன்.

    கல்யாணநாள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  11. //நான் எதிலுமே உணர்ச்சிபூர்வ முடிவெடுப்பவன். நீயோ அறிவு பூர்வமாய் முடிவெடுப்பாய். ///

    அவுங்க அவுங்களுக்கு எது எது இருக்கோ அதை வெச்சு யூஸ் செஞ்சு முடிவு எடுக்கிறாங்க!:))))

    ReplyDelete
  12. // நீ நீயாகத்தான் இருப்பாய். உன்னை மாற்ற முடியாது. நான் நானாகத்தான் இருப்பேன் என சொல்ல விரும்பாமல் திருந்த பார்க்கிறேன். கொஞ்சம் இரு //


    அபி அப்பா கீழே இருப்பதையும் எங்கோ படித்த நினைவு...

    ///ஊருக்கெல்லாம் குறி சொல்லுமாம் பல்லி தான் விழுமாம் கழனிப் பானையில தூள்ளி.

    இனி விழாது. நான் அபிஅப்பா ஜாக்கிரைதயா பார்த்துக்கறேன்!//

    ReplyDelete
  13. திருமணநாள் வாழ்த்துகள்! மனைவியைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களே, இதற்கே உங்கள் மனைவி பூரித்து விடுவார்கள், கவலை வேண்டாம்.

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் & Best Wishes.

    ReplyDelete
  15. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் கிருஷ்ணா அண்ணி.

    ReplyDelete
  16. தொல்ஸ் அண்ணே துபாய் போனதில இருந்து ரொம்ப பீலிங்ஸ் பதிவா போட்டு தாக்கிகிட்டிருக்கீங்க!?!?!?

    ReplyDelete
  17. ஓவர் பீலிங்க்ஸ் உடம்புக்கு ஆவாதாம்

    ReplyDelete
  18. அதனால பீல் பண்றத நிறுத்தீட்டு அண்ணிக்கு பிடிச்சதெல்லாம் செய்யுங்க , வாங்கிகுடுங்க செயல்புயலா மாறுங்க..

    ReplyDelete
  19. இப்பிடி பதிவு போட்டு ஓபி அடிச்சி ஓப்பேத்திடலாம்னு நினைக்காதீங்க.

    ReplyDelete
  20. உங்க blog ஐ அடிக்கடி படிச்சாலும் இதுவரைக்கும் comment போட்டதில்லை...இன்னிக்கு வாழ்த்து சொல்லணும்னு தோணுச்சு. அழகா எழுதி இருக்கீங்க :-)
    வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  21. வாங்க தமிழ்பிரியன்! நன்றி உங்கள் புன்னகைக்கு!!

    ReplyDelete
  22. நன்றி நிஜமா நல்லவன்! இதிலே என்ன பீலிங்...ஆனது ஆகிப்போச்சு விடுங்க:-))))

    அதான் முதல்லயே சொல்லிட்டனே, எல்லா பதிவுக்கும் 15 நிமிஷம் இதுக்கு கொஞ்சம் லேட்டுன்னு...ஸ்பெல் மிஸ்டேக் சரி பண்ணத்தான்:-))

    ReplyDelete
  23. வாங்க மதுரையம்பதி! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி! ஆமாம் அதான் உங்களுக்கு முன்னமே தெரியுமே! வீட்டுக்கு வீடு வாசப்படி:-)))

    ReplyDelete
  24. ஒண்ணும் புரியலை. பின்னூட்டங்களைப் படிச்சாக் கல்யாணம் ஆன நாள் எனத் தெரிகிறது. வாழ்த்துகள்.

    ReplyDelete
  25. நன்றி தம்பி! அது பாட்டுப்பா, சும்மா தலைப்புக்காக, மத்தபடி எனக்கு ஏது அத்தன தைரியம் வாடீ போடீன்னு சொல்ல:-)))))))

    குபீர் எலக்கியவாதின்னு குசும்பன் சொன்னது சரிதான் போல:-))

    ReplyDelete
  26. // ராமலக்ஷ்மி said...
    அபி அப்பா, உணர்ந்து இட்ட இந்த ஒரு பதிவு போதும், தங்கமணியின் வாழ்க்கை 'இன்னும்' ஒளி மயமாவதற்கு! இருவருக்கும் நல் வாழ்த்துக்கள்!//

    வாங்க ராமலெஷ்மி! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! மிக்க நன்றி!

    ReplyDelete
  27. // கயல்விழி முத்துலெட்சுமி said...
    உங்கள் கல்யாண நாளோ.. வாழ்த்துகள்.. கிருஷ்ணா க்ருஷ்ணா நல்லபடியா அமையட்டும் இவங்க வாழ்க்கை..//

    ஆமாம் முத்துலெஷ்மி! வாழ்த்துக்கு நன்றி நன்றி நன்றி! ஆமாம் இந்த பின்னூட்டத்திலே உள்ள உள்குத்து என்னன்னு கண்டுபிடிச்சுட்டேன். ஒரு கிருஷ்ணா சரியான ஸ்பெல்லிங் அடுத்து அதன் ஜோடி என்னைப்போல ....சரிதானே! :-))

    ReplyDelete
  28. // மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...
    திருமண நாள் வாழ்த்துகள் அபி அம்மா & அபியப்பா!

    -மதி//

    வாங்க மதி! வாழ்த்துக்கு நன்றி நன்றி நன்றி! ஆமாம் சுத்த தமிழ்ல எழுதினாத்தான் வருவேன்னு அடம் பிடிக்கிறீங்களே:-)))

    ReplyDelete
  29. நன்றி ஆயில்யன்! வருகைக்கும் வாழ்த்துக்கும்! ஆமாம் புலால் உண்பதை விட இப்போதும் வாய்ப்பு இருக்குத்தான். ஆனா எனக்கு மீன்குழம்பு இல்லாட்டி அந்த ஒரு கவளமும் இறங்காதே!:-)) முயற்சி பண்றேன்!!

    ReplyDelete
  30. // குசும்பன் said...
    அபி அப்பா கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் எதுக்கும் ஒரு வாழ்த்தை சொல்லிக்கிறேன்.

    கல்யாணநாள் என்று நினைக்கிறேன்.//

    நீ என்ன இன்னும் மொட்ட பையனா, ஒரு குடும்பஸ்தனா ஆகிட்டே இதை கூட புரிஞ்சுக்க தெரியலைய்யே!!

    //அவுங்க அவுங்களுக்கு எது எது இருக்கோ அதை வெச்சு யூஸ் செஞ்சு முடிவு எடுக்கிறாங்க!:))))//

    ரைட்டு!நீ எப்படின்னு பார்க்கத்தானே போறேன்! இன்னும் 1 மாசம் தானே இருக்கு! அப்ப இருக்கு என் கச்சேரி!

    //அபி அப்பா கீழே இருப்பதையும் எங்கோ படித்த நினைவு...

    ///ஊருக்கெல்லாம் குறி சொல்லுமாம் பல்லி தான் விழுமாம் கழனிப் பானையில தூள்ளி.

    இனி விழாது. நான் அபிஅப்பா ஜாக்கிரைதயா பார்த்துக்கறேன்!////

    இந்த ஞாபக சக்திய படிப்பிலே காட்டியிருந்தா இந்நேரம் அப்துல் கலாம் மாதிரி ஆகியிருப்பே! (வயசானவராவான்னு கேக்க பிடாது)

    ReplyDelete
  31. // கோகிலவாணி கார்த்திகேயன் said...
    திருமணநாள் வாழ்த்துகள்! மனைவியைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களே, இதற்கே உங்கள் மனைவி பூரித்து விடுவார்கள், கவலை வேண்டாம்.//

    வாங்க கோகிலவாணி! நன்றி வாழ்த்துக்களுக்கு! ஆமாம் பூரிச்சா இன்னும் வெயிட் போடுமாமே அப்படியா!அப்படீன்னா பூரிக்க வேண்டாம்ப்பா:-)))

    ReplyDelete
  32. // Alien said...
    வாழ்த்துக்கள் & Best Wishes//

    நன்றி அலியன். கேரளத்திலே அலியன்ன்னா மச்சான்ன்னு அர்த்தம் நீங்க சாதா மச்சானா, தங்க மச்சானா:-)))

    ReplyDelete
  33. // மங்களூர் சிவா said...
    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் கிருஷ்ணா அண்ணி.//

    அண்ணி சார்பா நன்றி சிவா!

    // மங்களூர் சிவா said...
    தொல்ஸ் அண்ணே துபாய் போனதில இருந்து ரொம்ப பீலிங்ஸ் பதிவா போட்டு தாக்கிகிட்டிருக்கீங்க!?!?!?

    June 2, 2008 12:36 PM


    மங்களூர் சிவா said...
    ஓவர் பீலிங்க்ஸ் உடம்புக்கு ஆவாதாம்

    June 2, 2008 12:36 PM


    மங்களூர் சிவா said...
    அதனால பீல் பண்றத நிறுத்தீட்டு அண்ணிக்கு பிடிச்சதெல்லாம் செய்யுங்க , வாங்கிகுடுங்க செயல்புயலா மாறுங்க//

    சிவா, அப்படி எல்லாம் இல்ல. சும்மா கொஞ்ச நாள் அப்படி இருக்கும். பின்னே மாறிடும். நீங்க சொன்ன மாதிரி அண்ணிக்கு பிடிச்சதை வாங்கி தரலாம். ஆனா என்ன பிடிக்கும்ன்னே தெரியாதே!:-))

    ReplyDelete
  34. // Heidi ~ The Angel said...
    உங்க blog ஐ அடிக்கடி படிச்சாலும் இதுவரைக்கும் comment போட்டதில்லை...இன்னிக்கு வாழ்த்து சொல்லணும்னு தோணுச்சு. அழகா எழுதி இருக்கீங்க :-)
    வாழ்த்துக்கள் :-)//

    நன்றி! நன்றி! வாங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க:-)))

    ReplyDelete
  35. திருமண நாள் வாழ்த்துக்கள் குமார் அண்ணா - கிருஷ்ணா அண்ணி.. :-)

    ReplyDelete
  36. அபி அப்பா said...

    // Alien said...
    வாழ்த்துக்கள் & Best Wishes//

    // நன்றி அலியன். கேரளத்திலே அலியன்ன்னா மச்சான்ன்னு அர்த்தம் நீங்க சாதா மச்சானா, தங்க மச்சானா:-)))//
    June 2, 2008 3:26 PM

    Alien = ஏலியன் (அன்னியன்) அலியன் அல்ல. :-)

    ReplyDelete
  37. உங்கள் வாழ்க்கையை இரண்டு நாட்கள் உடன் இருந்து பார்த்தவன் நான். கல்யாணம் ஆகி 13 வருடங்களா? நம்ப முடியவில்லை.. இன்னும் சிறுவர்களாய் தானே இருக்கிறீர்கள்.. உங்கள் இருவரிடமும் அழகான தோழமையை கண்டேன்.. எல்லா நல்லவைகளையும் பின்பற்றி வாழும் உங்களுக்கு புதிதாய் என்ன சொல்லி வாழ்த்துவது என்று தெரியவில்லை. வாழ்க பல்லாண்டு இதே நலமுடனும் வளமுடனும் தோழமையுடனும். அபிஅம்மாவுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்... மறக்கமுடியுமா அந்த கனிவான தாய்மை உள்ளத்துடனான கவனிப்பை....

    ReplyDelete
  38. வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  39. \\ .:: மை ஃபிரண்ட் ::. said...
    திருமண நாள் வாழ்த்துக்கள் குமார் அண்ணா - கிருஷ்ணா அண்ணி.. :-)\\
    வாம்மா அனு! மிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்!!! அடுத்து போஸ்ட்டர் ஒட்டினதுக்கும் நன்றிப்பா!!!

    ReplyDelete
  40. \\Alien = ஏலியன் (அன்னியன்) அலியன் அல்ல. :-)\\

    ஓ ஏலியனா, அப்படி ஒரு விளக்கம் இருக்கா, நன்றிப்பா விளக்கத்துக்கு!!!

    ReplyDelete
  41. \\ இலவசக்கொத்தனார் said...
    ஒண்ணும் புரியலை. பின்னூட்டங்களைப் படிச்சாக் கல்யாணம் ஆன நாள் எனத் தெரிகிறது. வாழ்த்துகள்.\\

    ஆஹா கொத்ஸ்க்கே புரியாம ஒரு பதிவு போட்டுட்டனா, ஆக இது புனைவு வகையிலே சேர்ந்துடுமோ, வேண்டாம்ப்பா இதல்லாம் குடும்ப பதிவு, புனைவிலே சேர்த்துடாதீங்க!!(சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்)

    வாழ்த்துக்கு நன்றி கொத்ஸ், சுவரொட்டியில் வாழ்த்தினதுக்கும் மிக்க நன்றி!!

    ReplyDelete
  42. \\ SanJai said...
    உங்கள் வாழ்க்கையை இரண்டு நாட்கள் உடன் இருந்து பார்த்தவன் நான். கல்யாணம் ஆகி 13 வருடங்களா? நம்ப முடியவில்லை.. இன்னும் சிறுவர்களாய் தானே இருக்கிறீர்கள்.. உங்கள் இருவரிடமும் அழகான தோழமையை கண்டேன்.. எல்லா நல்லவைகளையும் பின்பற்றி வாழும் உங்களுக்கு புதிதாய் என்ன சொல்லி வாழ்த்துவது என்று தெரியவில்லை. வாழ்க பல்லாண்டு இதே நலமுடனும் வளமுடனும் தோழமையுடனும். அபிஅம்மாவுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்... மறக்கமுடியுமா அந்த கனிவான தாய்மை உள்ளத்துடனான கவனிப்பை....\\

    மிக்க நன்றி சஞ்சய்! ஆமாம் நீங்க சொல்வது சரிதான். வீடே எப்போதும் கலகலன்னு தான் இருக்கும். நான் அடிக்கும் கூத்து அத்தனைக்கும் அமைதியா சிரிச்சுகிட்டே இருப்பாங்க. இப்போ எனக்கு கம்பெனி குடுக்க பாப்பாவும் தம்பியும் வேற இருக்காங்களா, லூட்டிக்கு கேக்கவா வேண்டும்!

    வாங்க அடுத்த தடவையும்! ஆனா 10 நாள் எல்லோரும் நம்ம வீட்டிலே தங்குவது போல வரணும்! ஓக்கே!!

    ReplyDelete
  43. கப்பி சாரே! வாங்க வணக்கம்! இங்கயும் சுவரொட்டியிலும் வாழ்த்தினதுக்கு மிக்க நன்றி மிக்க நன்றி!!!

    ReplyDelete
  44. //தொல்ஸ் என்ற குமார் என்ற அபி அப்பா என்ற நட்டப்பா

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்

    அலைபேசியில் தங்க்ஸை அழைத்து வாழ்த்துகளைத் தெரிவிக்கவும்

    அன்புடன் ..... சீனா//

    நன்றி சீனா சார்!! மிக்க நன்றி!!

    ReplyDelete
  45. திருமண நாள் நல்வாழ்த்துக்கள.I really enjoyed reading this post. Excellent job.

    Ramya

    ReplyDelete
  46. இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  47. மொதல்ல வாழ்த்துக்கள்! அப்புறமும் வாழ்த்துக்கள்தான்!

    தீபா மேட்டர் வீட்டுக்கு தெரியுங்களா?

    ReplyDelete
  48. திருமண நாள் நல்வாழ்த்துக்கள் அபிஅப்பா:)

    ReplyDelete
  49. இப்டி ஃபீல் பண்ண வைச்சுட்டிங்களே.அக்கா இதைப் படிச்சுட்டு என்ன சொன்னாங்க ? அதையும் அடுத்தப் பதிவா போட்டுடலாமே:)

    ReplyDelete
  50. Unga ezhuthu konja naal munnadi arimugam aachu.Indha Padhivu miga arumai.Vazhthukkal.
    -Anandhi

    ReplyDelete
  51. திருமண நாள் வாழ்த்துக்கள்!!!!!!!!!!
    அபி,நட்டு அம்மா,அப்பா.

    ReplyDelete
  52. எதுக்கு இம்புட்டு ஃபீலிங்ஸ் பதிவு??? எனிவே இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்... :)

    ReplyDelete
  53. வாழ்த்துகள்...

    அருமையா எழுதியிருக்கீங்க... ரொம்ப நாளைக்கு அப்பறம் உங்க பதிவை முழுசா படிக்கிறேன்...

    ReplyDelete
  54. இனிய மணநாள் வாழ்த்துகள் அபி அப்பா.அபி அம்மாகிட்டயும் சொல்லிடுங்க.:))

    இந்தப் பதிவ ஒரு பிரிண்ட் எடுத்து, வாழ்த்து அட்டையா, அபி அம்மாக்கு கொடுதுதீங்க தானே? :))))

    ReplyDelete
  55. பெருமூச்சுடனும் காதுநிறைய புகையுடனும் மணநாள் வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    முத்து

    ReplyDelete
  56. ஆமா இத அவங்களுக்கு நெசமா அனுப்பினீங்களா இல்லையா?
    வாழ்த்துக்கள்!
    :-)

    ReplyDelete
  57. இந்நாளுக்கான அன்பான இனிய வாழ்த்து(க்)கள்.

    எப்படி இந்தப் பதிவைத் தவறவிட்டேன்?......

    ஒரே டச்சிங்கா இருக்கு.

    நல்லா இருங்க ரெண்டுப்பேரும்.

    அன்பும் ஆசிகளும்.

    ReplyDelete
  58. என்னாச்சு?திருமணநாளா?
    எப்படியோ இப்பவாச்சும் தன்னை உணரும் தருணம் வந்ததே ஒரு ஆணியவாதிக்கு

    வாழ்த்துக்கள்:)))

    //என் முடிவு எல்லாவற்றையும் முதலில் சந்தோஷமாக ஆமோதிப்பாய். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அதில் உள்ள தவறை சுட்டி காட்டி நான் அதிலிருந்து பின்வாங்கும் படி செய்துவிடுவாய். நீ முதலிலேயே அதை எதிர்த்து இருந்தாலோ என் முடிவு அதன் மேல் மிக உறுதியாகத்தானிருக்கும//

    நல்ல சைக்காலஜி நானும் கடைபிடிக்கனும்.ஆனா அதுக்கு முன்ன முசுக்குனு கோபம் வருதே;((

    ReplyDelete
  59. பல முறை வரவேண்டும் என்று நினைத்து இன்று வந்து சேர்ந்து விட்டேன்...

    ReplyDelete
  60. ///வழக்கம் போல ஏதோ நக்கலா எழுதுவீங்கன்னு நினைச்சு வந்தேன். ரொம்ப பீலிங்கா இருக்கு. அக்காக்கு போன் பண்ணி சொல்லிடுறேன்.///

    நானும் அப்படித்தான் நினைத்தேன் மனதை சொல்லியிருக்கிறீர்கள்...

    ReplyDelete
  61. பின்னுட்டங்கள் படித்ததிலிருந்து தெரிகிறது...
    வாழ்த்துக்கள் காதலும் சந்தோசமும் பெருகிக்கொண்டே இருக்க...

    ReplyDelete
  62. பொதுவாவே இந்த ஆம்பிளைங்க இப்படித்தானோ?
    அன்பை வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில வெளிப்படுத்தாம அப்புறமா புலம்பித்தீக்குறது...:)

    ReplyDelete
  63. நிஜமா நல்லவன் சொன்னது...

    ///எழுத்துபிழைகள் இல்லாம இருக்கே. எப்படி?///

    அதான் ஆரம்பத்திலயே சொல்லிட்டாரே சில நாட்கள் எடுத்தக்கிட்டேன்னு சொல்லி...:)
    (நீ வேறப்பா இது அவர் உணர்வு பூர்வமா எழுதினது...)

    ReplyDelete
  64. வாழ்த்துக்கள் அபி அப்பா, அபி அம்மா

    ReplyDelete
  65. ada,அபி அப்பா, திருமண நாளா??? தாமதமான மணநாள் வாழ்த்துகள், இதுவரைக்கும் படிச்சதிலேயே இந்த ஒரு பதிவுதான் மனதையும், தொட்டது, அர்த்தமுள்ளதாயும் இருக்கு. வாழ்த்துகள் உங்கள் அனைவருக்குமே!

    ReplyDelete
  66. திருமண நாள் வாழ்த்துகள்.

    ஆணியம்னு எல்லாம் ஒத்துக்காதீங்க. அப்புறம் அதான் ஒத்துகிட்டேனேன்னு ஓவரா ரவுசு பண்ணுவீங்க. நீங்க அவங்கள பத்தி சொன்ன மாதிரி அவங்க உங்கள பத்தி சொல்ல வைங்களேன். :-)

    அண்ணியை ஒரு பதிவு எழுத சொல்லுங்களேன் ஒரு மாற்றத்துக்கு.

    13 வருடமாகிவிட்டதா? ரொம்ப சீனியர்தான் நீங்க. :-)) வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  67. ரொம்ப நல்லா இருக்கு :) அப்புறம் வாழ்த்துக்கள் :) நான் உங்க பதிவுகளை படிப்பேன் ஆனா இதுதான் முதல் பின்னூட்டம்

    ReplyDelete
  68. சூப்பர்

    இந்த ஒரு பதிவே போதும், அவர்களை நீங்கள் உணர்ந்து கொண்டதற்கு சாட்சியாக

    ReplyDelete
  69. நீங்க கொடுத்து வைத்தவர் அண்ணா:)

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))