கொஞ்சம் திண்ணையிலே உக்காந்து தேச்சுட்டு போங்க என்ற ஆயில்யனின் அழைப்பு வந்தவுடன் உடனே கொசுவத்தி சுற்றிவிடலாம் என எண்ணிய எனக்கு இரண்டு நாட்களாக அதிகபட்ச ஆணியாக போய்விட்டது. இப்போது கூட பீஷ்மரைப்போல ஆணிப்படுக்கை(இருக்கை)யில் இருந்து கொண்டே தான் எழுதுகிறேன்.
எனக்கு எப்போது திண்ணை பரிட்சயமானது என சரியாக சொல்லவேண்டுமெனில்... நல்ல மார்கழி குளிரில் தான். கலாச்சாரம்,சாமிகுத்தம் என்கிற பெயரில் கழிவிரக்கம் இல்லாமல் அந்த நாட்களில் 'பச்ச உடம்புக்காரி' என்றெல்லாம் கூட பார்க்காமல் திண்ணையில் படுக்கவைத்த மாமியார்த்தனம் நடந்து கொண்டிருந்த காலம் அது.அம்மாவை ஒண்றும் நிராயுதபாணியாக அவர்கள் அனுப்பிவிடவில்லை. கொஞ்சம் ஈரமனதோடு உலக்கை, துடைப்பம் போன்ற ஆயுதங்களோடுத்தான் அனுப்பி வைத்தனர்.ஆனந்தவிகடனையும், என்னையும் முந்தானையில் சுற்றி ஏதோ போருக்கு போவது போல அம்மா திண்ணைக்கு போனது தான் என் முதல் விஜயம். தார்ச்சாலை தெரியாமல் திண்ணையில் எரவானத்தில் சுருட்டியிருந்த பிரம்ப தட்டி மறைப்பாக ஆக ஒரு தற்காலிக அறை உருவாக்கப்பட்டு பல்லு போன பாட்டிகள் இரண்டு பேர், பல் முளைக்காத நான் ஆகியோர் காவல் இருக்க அம்மா சின்ன பெட்ரூமாக்ஸ் விளக்கின் வெளிச்சத்தில் ஆ.வி படிக்க ஆரம்பித்த அடுத்த நிமிடமே எட்டாய் மடிக்கப்பட்ட என் மெத்தையான சுங்கடிச்சேலையை மார்கழியின் குளிரால் நனைத்து விடுவேன். ஆனாலும் அப்போதிருந்தே எனக்கு என்னவோ திண்ணையை பிடித்து போய் விட்டதாக அம்மா பலமுறை சொன்னதுண்டு.
வீட்டுக்குள் காரணமே இல்லாமல் அழுது கொண்டிருக்கும் நான் திண்ணை வாசத்தின் போது மட்டும் எப்படி நிம்மதியாய் தூங்கினேன் என்பதற்கு அம்மா சொன்ன காரணம் ஏற்புடையதாகவே இருந்தது. என் வீடு நகரின் முக்கிய சாலையில் என்பதால் இரவு பகல் என வித்யாசமின்றி பேருந்து,மகிழுந்து(ச்சே சும்மா கிடைக்கிறதே என தமிழோசை படிக்காதீங்கப்பா)என போய் வந்து கொண்டிருக்கும் போதேல்லாம் திண்ணையில் ஒரு வித அதிர்வு வரும். அது தான் எனக்கு கிடைத்த இலவச தாலாட்டு. அன்னைக்கு கூட கை அசந்து போகும் என்னை திண்ணை தூளியில் தாலாட்ட, ஆனால் என் திண்ணைக்கு அசந்து போனதே கிடையாது.அந்த அதிர்வு தாலாட்டை(vibration) இன்றைக்கு நினைத்தாலும் ஒரு சின்ன மின்சாரம் பாயத்தான் செய்கிறது. மாதா மாதம் திண்ணைக்கு போய் வந்த நாள் வளர வளர திண்ணையை என் தாய் மாதிரியே பாவிக்க தொடங்கிவிட்டேன். நடக்க ஆரம்பித்த பின் போன முதல் இடமே திண்ணைக்குத்தான். என்னை நான் அங்கே பத்திரமாக உணர்ந்தேன். எங்கள் வீட்டு திண்ணை வலப்பக்கம் ஒரு ஆள் படுக்கும் அளவுக்கும், இடப்பக்கம் பத்து பேர் வரை படுத்து உறங்கும் விஸ்தாரமுடையதாவும் இருந்தது. ஆனால் சின்ன திண்ணையை மட்டும் என் சித்தப்பாவுக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டார்கள். சின்ன திண்ணையின் எரவானத்தில் சொருகப்பட்ட இரண்டு மூங்கில் பிலாச்சின் நடுவே வைக்கப்பட்டிருக்கும் ஒரு கோரைப்பாயும்,சுருட்டிய அதன் உள்ளே மம்பட்டியான் வகை சிகப்பு எல்லை கருப்பு வண்ண மொச மொச போர்வையும், எச்சில் ஒழுகிய தலையனையும், ஈயம் பூசிய பித்தளை செம்பும், ஒரு சாப்பாடு தட்டுமே அப்போதைக்கு சித்தப்பாவின் சொத்தாக இருந்தது. பிற்காலத்தில் எனக்கு அந்த சொத்துகள் வரப்போவது அப்போது எனக்கு தெரியாது. நான் வளர வளர அந்த பெரிய திண்ணை தான் எனக்கான சொத்து என பாகப்பிரிவினை தானாகவே நடந்துவிட்டது. நான் தவழ ஆரம்பித்ததுமே பெரிய திண்ணையின் எல்லை கோட்டை மண்டியிட்டு போன போதே டென்சிங் மாதிரி குதூகலித்ததாக அம்மா சொல்வதுண்டு. அந்த எல்லை கோட்டுக்கு யாரும் அடிக்கடி செல்வதில்லையானதால் எனக்கு கொடுக்கப்படும் பொரி உருண்டைகளுக்கும், வறுத்த அரிசிகளுக்குமான கிடங்காகவே நான் அதை பயன்படுத்தி கொண்டேன்.அந்த இடம் தான் கொள்ளையர்கள் கூட நுழைய முடியாத அளவிற்க்கான எனக்கு மட்டுமேயான பாதுகாப்பான இடமாக உணர்ந்தேன்.
யாரோ கட்டிபிடித்து கட்டிபிடித்து வழவழப்பான அந்த மத்தளம் மாதிரியான பர்மா தேக்கு தூண்களை என் கால்களுக்கு இடையே கட்டி கொண்டும், கைகளால் இருக்கிகொண்டும் என் கண்ணத்தை தூணில் ஒட்டி கொண்டு விரல் சூப்பி கொண்டும் கடைசி படியில் நின்று உருமி மேளம் வாசிக்கும் பூம்பூம் மாட்டுகாரனையும், "நாராயணா கோபாலா,வெங்கட்ராமா கோவிந்தா ...கோவிந்தா கோவிந்தா" என அரிசி கேட்கும் சிறுவர் சிறுமிகளையும், சார் போஸ்ட் என கத்தும் தபால்காரரையும், அமாவாசைக்கு அமாவாசைக்கு வடக்குவீதியை கடந்து போகும் உலக்கை சாமியையும், அதற்காகவே ஸ்பெஷல் நாதஸ்வரமாக திடு திடுவென ஓடிகொண்டே வாசிக்கும் சின்னசாமியையும், என் அன்பான பேருந்துகளையும், நேரம் போவது தெரியாமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
நன்றாக நடக்க தெரிந்து பின்னே நன்றாக ஓட தெரிந்த பிறகு என் சுட்டித்தனங்களால் அம்மாவிடமிருந்து தப்பித்து ஓடி அந்து அவசர அவசமாக திண்ணையில் ஏறி எல்லை கோட்டுக்கு ஓடின பின் அம்மா துரத்துவதை நிறுத்திவிட்டு திண்ணையின் கீழேயே நின்று கொண்டு அத்தனை தூரம் துரத்தி வந்தமைக்காவேணும் வந்து ஒரு அடி வாங்கி போக சொல்லி கெஞ்சும் போது தான் என் பாதுகாப்பு பிரதேசத்தின் பெருமையை முழுவதுமாக உணர்ந்தேன்.
இன்னும் கொஞ்சம் வளர்ந்து பள்ளி போக ஆரம்பித்தபின் ஒரு ஒரு ஆசிரியரை வைத்து மாலையில் எனக்கும் என் சகோதரிகளுக்கும் பாடம் சொல்லி கொடுக்க ஏற்பாடு நடந்தது. இப்படி எங்கள் மூவருக்குமான அந்த பாட வகுப்பு அக்கம் பக்க சக மாணவர்களுக்குமாக பல்கி பெருகி என் திண்ணை, திண்ணை பள்ளியாகியது. ஒருநாள் மாயூரநாதர் கோவிலின் அலுவலக திண்ணையில் (கோவிலின் கணக்கடி வினாயகர் அருகே உள்ளது) சாய்வு மேசையிட்டு ஐந்து பேர் ஏதோ எப்போதும் எழுதிக்கொண்டே இருப்பது மனதில் ஒரு சின்ன கிளர்ச்சியை தரவே நானும் அது போல நம் வீட்டு திண்ணையில் சாய்வு மேசை போட்டு படித்தால் என்ன என ஆசை வரவே நான் உயர்நிலைப்பள்ளி சென்ற பிறகே பரணில் இருந்து தாத்தா உபயோகப்படுத்திய மேசை எடுத்து தரப்படும் என சொல்லப்பட்டது. அப்போது அதற்கான நாள் வெகு தொலைவில் இல்லாமல் இருந்தது ஒரு சிறிய நிம்மதியையும் கொடுத்தது.
ஆறாம் வகுப்பு சென்ற பின்னே அந்த மேசையை இறக்கி, முற்றத்தில் வைத்து கழுவி துடைத்து அதற்கு பொட்டெல்லாம் வைத்து அழகாய் தூக்கி கொண்டு போய் என் திண்ணையின் மீது வைத்த போது என் திண்ணைக்கே ஒரு அழகு வந்தது.முதல் வேலையாக ஸ்வேன் மார்க் ஜியாமெண்ரி பெட்டியிலிருந்து காம்பஸ் எடுத்து என் பெயரை பொறித்தேன்.அடுத்த வேலையாக "அனுமதி பெறாமல் உள்ளே வராதீர்கள்" என என் திண்ணையின் சுவற்றில் பொறித்தேன். அது என் இடம் என்பதை உறுதி செய்யும் விதமாக. உடனே அடுத்த ஆசையும் வந்தது. சித்தப்பா மட்டும் திண்ணையில் படுத்துறங்கும் போது நான் மட்டும் என் திண்ணையை விட்டு உள்ளே படுக்க வேண்டிய அவசியம் என்ன என்பது பற்றி அம்மாவிடம் கேட்க மிகுந்த போராட்டத்துக்கிடையே எனக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. எனக்கும் ஒரு கோரைப்பாயும், மம்பட்டியான் போர்வையும், தலையனையும், தண்ணீருக்கான சொம்பும் கொடுத்து 'ஞானஸ்த்தானம்' செய்து வைத்து வெளியே அனுப்பினர். அதுவும் அப்பா வெளியூர் போயிருந்த காரணத்தால் 'ஒரு நாள் மட்டும்' என்ற நிபந்தனையோடு.
முதன் முதலாக சுதந்திரம் கிடைத்துவிட்ட மாதிரி ஒரு சந்தோஷத்தில் இரவு நீண்ட நேரம் எங்கள் சாலையின் போகுவரத்துகள், கடை முடிந்த்து வீட்டுக்கு போகும் முதலாளிகள் என பார்த்து கொண்டே என் பெரிய திண்ணையில் உறங்க எத்தனித்த போது என் சித்தப்பா சைக்கிளில் வேக வேகமாக கொஞ்சம் படபடப்போடு வந்தார். பத்து வயசிலேயே திண்ணை படுக்கை கேட்குதா என கேட்ட அவரின் தொணி எனக்கு கொஞ்சமும் பிடிக்க வில்லை. நான் பிறந்தது முதல் எனக்கு தாலாட்டிய தாய் போலவும், என் பாதுகாப்பு அரணகவும், பள்ளிகூடமாகவும், என் கேளிக்கை விடுதியாகவும், நல்ல தோழியாகவும், நான் நினைத்த என் பெரிய திண்ணையை அவரின் அந்த அப்படி கேட்ட தொணி முகம் சுளிக்கவே செய்தது. சிறிது நேரத்தில் அவரே என்னிடம் தனக்கு சிறிது வேலை இருப்பதாகவும் அதனால் வெளியே போக போவதாகவும் அதனால் தன் சின்ன திண்ணையில் உறங்கும்படியும் பின் ஒரு நல்ல நாள் பார்த்து பெரிய திண்ணையில் படுக்கலாம் எனவும் சொன்ன போது ஒரு வித மன சஞ்சலத்தோடு சரியென தலையாட்டினேன். நான் சின்ன திண்னையில் படுத்து கொண்டே என் திண்ணையை பார்த்து கொண்டிருந்த போது என் பெரிய திண்ணை என்னை முதன் முதலாக திட்டியது போல உணர்ந்தேன். அது ஏதோ விபரீதம் நடக்க இருப்பது போல எனக்கு சொல்வதாகவே உணர்ந்தேன். போர்வையை ஒதுக்கிவிட்டு போய் என் திண்ணைக்கு ஒரு முத்தம் கொடுத்து விட்டு "கவலைப்படாதே நாளை முதல் உன் கூடத்தான் என் படுக்கை" என சொல்லிவிட்டு வந்து படுத்தேன்.
அப்படியே அசந்து தூங்கின எனக்கு கனவுகளும் அத்தனை சுகமானதாக இல்லை. யாரோ சாட்டையால் என்னை அடிப்பது போலவும் நான் பகத்சிங் மாதிரி வீர வசனம் பேசுவது போலவும் கனவுகள். நமக்கு இந்த படுக்கை சரி வராது. நம் திண்ணைக்கு போகலாம் என நினைத்த போது ஏதோ விபரீதமாக சப்தங்கள். தட தடவென பூட்ஸ் கால் ஓட்டங்கள்... நான்கு காவலர்கள் என் போர்வையை விலக்கி விட்டு என்னை தூக்க வாசலில் ஒரு போலீஸ் வண்டியில் நிறைய ஆட்கள். கோஷங்கள், வாழ்க, ஒழிக கோஷங்கள், எனக்கு கண் இருட்டி கொண்டு வந்தது!
தொடரும்..........................
நமக்கு இப்படி இந்த ஸ்டைல்ல எழுதறது கஷ்ட்டமப்பா! சும்மா 10 நிமிஷத்திலே என் பாணியிலே கும்மாங்குத்து குத்தி திண்ணை பதிவு போடறேன்! ஆனா இதே பாணியிலே இதன் அடுத்த பாகமும் போட்ட பின்னே!
ReplyDeleteநமக்கு இப்படி இந்த ஸ்டைல்ல படிக்கிறது கஷ்ட்டமப்பா!
ReplyDeleteசும்மா 10 நிமிஷத்திலே உங்க பாணியிலே கும்மாங்குத்து குத்தி திண்ணை பதிவு போடுங்க!
இந்த ஸ்டைலில் அபிஅப்பாவின் பதிவு வித்தியாசமா இருக்கு... :)) கலாச்சார வெளியேற்றல்கள் இப்போதெல்லாம் இல்லையென்பது நல்ல விஷயம்... :)
ReplyDeleteதிண்ணை நினைவு சுகமா தான் இருக்கு... :) ஆனா கடைசியில் சன் சீரியல் மாதிரி போலிஸெல்லாம் வருதே... :))))
ReplyDeleteவாங்க சிவா! நம்ம கருத்து தான் உங்க கருத்தும்மா! சந்தோஷம்!!::-))
ReplyDeleteநல்லாவே தேய்ச்சிருக்கீங்க
ReplyDeleteவாங்க தமிழ்பிரியன்! வருகைக்கு நன்றி! சீரியலா?? நான் சீரியஸா சொல்லியிருக்கேனப்பா, 2ம் பாகத்திலே தெரியும் பாருங்க!!
ReplyDeleteநன்றி முரளி!! உங்க திண்ணை பதிவிலேயும் , முத்துலெஷ்மி பதிவிலேயும், ஆயில்யன் பதிவிலேயும் திண்ணை படம் நல்லா சூப்பரா இருந்துச்சு!!
ReplyDeleteபாக்கியராஜ் பட ரேஞ்சிற்கு இடை வேளை விட்டுருக்கிறீர்கள் .
ReplyDeleteமீதி படத்தை பார்க்க ( வாசிக்க ) ஆவலாய் உள்ளேன் .
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்
//நமக்கு இப்படி இந்த ஸ்டைல்ல படிக்கிறது கஷ்ட்டமப்பா! //
ReplyDeleteரிப்பீட்டேய்ய்!!
சஸ்பென்சா, கலக்குங்க. ஆனா அடுத்த வாரம்தான நீங்க இதோட பதிவுப்பக்கம் வருவீங்க. அதுக்குள்ள என் மண்டை வெடிச்சிடும் போலருக்கே. சும்மாதாங்க சொன்னேன் கோச்சுக்காதீங்க. உண்மைய சொல்லுங்க, உங்களுக்கு இன்னைக்கு எப்படி முடிக்கிரதுன்னு தெரியலையா? அதான் தொடரும்னு போட்டுட்டீங்களா? ஹி ஹி ஹி
ReplyDeleteஒரு மொக்கைக்கு ரெடியாகி வந்தா உள்ளே ஒரு திரில்லர் ஸ்டோரி ஓடுதே. ஆனா இதுவும் நல்லா இருக்குங்க அபி அப்பா. சஸ்பென்ஸை சீக்கிரம் உடைச்சுட்டு அடுத்த பாகம் எப்ப எழுத போறீங்க?
ReplyDeleteஅபி அப்பா .. வேணும்னா நீங்களும் கூகிளாண்டவர் கிட்ட கேட்டா நல்ல படமா குடுப்பாரே..
ReplyDeleteஇந்த ஸ்டைல் என்னா ஸ்டைல் அபி அப்பா.. உங்க கிட்ட ரஜினி மாதிரி நிறைய ஸ்டைல் இன்னும் இருக்கா?
அபி அப்பா கலக்கல் நான் எதிர்ப்பார்த்த - அனுபவித்த சங்கதிகளும் கூட உங்க திண்ணையிலும் இருக்கு!
ReplyDeleteம்ம் இப்ப எனக்கு மட்டும் அந்த உங்க வீட்டு திண்ணை இருந்தா அழகா உக்காந்துதிருப்பேன் காலை 8.30 மணி வரைக்கும் :))))))))))) (காலேஜ் பஸ் போனபின்னேதான் பல்லு விளக்குவோமாக்கும்! )
padikka padikka nalla irukku!oru thinnaiyai wechu athukku ivlo mukkiyathuvam kuduthu azhaga ezhuthi irukkeenga abi appa!seekkiramey thodaravum.....
ReplyDelete// ARUVAI BASKAR said...
ReplyDeleteபாக்கியராஜ் பட ரேஞ்சிற்கு இடை வேளை விட்டுருக்கிறீர்கள் .
மீதி படத்தை பார்க்க ( வாசிக்க ) ஆவலாய் உள்ளேன் .
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்//
வாங்க பாஸ்கர்! என்னது பாக்கியராஜ் பட ரேஞ்ஜா? எனக்கு வெக்க வெக்கமா வருது போங்க:-)))
// இலவசக்கொத்தனார் said...
ReplyDelete//நமக்கு இப்படி இந்த ஸ்டைல்ல படிக்கிறது கஷ்ட்டமப்பா! //
ரிப்பீட்டேய்ய்!!//
வாங்க கொத்ஸ்! அந்த ரொப்பீட்டேய்ல என்ன ஒரு சந்தோஷம் தெரியுது! நல்லா இருங்க சாமீ:-))
// rapp said...
ReplyDeleteசஸ்பென்சா, கலக்குங்க. ஆனா அடுத்த வாரம்தான நீங்க இதோட பதிவுப்பக்கம் வருவீங்க. அதுக்குள்ள என் மண்டை வெடிச்சிடும் போலருக்கே. சும்மாதாங்க சொன்னேன் கோச்சுக்காதீங்க. உண்மைய சொல்லுங்க, உங்களுக்கு இன்னைக்கு எப்படி முடிக்கிரதுன்னு தெரியலையா? அதான் தொடரும்னு போட்டுட்டீங்களா? ஹி ஹி ஹி//
வாங்க ராப்! எனக்கா முடிக்க தெரியல, திண்னையிலே இருந்து கீழே விழுந்து கையை உடைச்சுகிட்டேன்னு சொல்லி அதனால எழுத முடியலைன்னு முடிச்சுடலாமே:-))
/ தாரணி பிரியா said...
ReplyDeleteஒரு மொக்கைக்கு ரெடியாகி வந்தா உள்ளே ஒரு திரில்லர் ஸ்டோரி ஓடுதே. ஆனா இதுவும் நல்லா இருக்குங்க அபி அப்பா. சஸ்பென்ஸை சீக்கிரம் உடைச்சுட்டு அடுத்த பாகம் எப்ப எழுத போறீங்க?//
வாங்க தாரணிபிரியா, அபிஅப்பான்னாவே மொக்கைன்னு முடிவு பண்ணியாச்சா, நல்லா இருங்கப்பா:-))
// கயல்விழி முத்துலெட்சுமி said...
ReplyDeleteஅபி அப்பா .. வேணும்னா நீங்களும் கூகிளாண்டவர் கிட்ட கேட்டா நல்ல படமா குடுப்பாரே..
இந்த ஸ்டைல் என்னா ஸ்டைல் அபி அப்பா.. உங்க கிட்ட ரஜினி மாதிரி நிறைய ஸ்டைல் இன்னும் இருக்கா?//
வாங்க முத்துலெஷ்மியக்கா! அதாவது தப்பு தப்பா எழுதி கீதாம்மா, துளசி ரீச்சர் கிட்டே எல்லாம் வாங்கி கட்டிகிட்டு விட்ரா விட்ரா கைப்புள்ளன்னு போய் கிட்டே இருப்பது தானெ என் ஸ்டைல், நமக்கு இப்படி பொருமையா 1 மணி நேரம் எல்லாம் டைப்ப முடியல. அடி தூள் 10 நிமிஷம், பின்ன கமெந்த் வருதான்னு கண்னை கழுவிட்டு பார்த்துகிட்டே இருக்கனும் ஹி ஹி:-)))
// ஆயில்யன் said...
ReplyDeleteஅபி அப்பா கலக்கல் நான் எதிர்ப்பார்த்த - அனுபவித்த சங்கதிகளும் கூட உங்க திண்ணையிலும் இருக்கு!
ம்ம் இப்ப எனக்கு மட்டும் அந்த உங்க வீட்டு திண்ணை இருந்தா அழகா உக்காந்துதிருப்பேன் காலை 8.30 மணி வரைக்கும் :))))))))))) (காலேஜ் பஸ் போனபின்னேதான் பல்லு விளக்குவோமாக்கும்! )//
வாங்க ஆயில்யா! இப்பவும் அந்த திண்ணை இருக்கு ஆனா வேற ஒருத்தன் கிட்டே இருக்கு! அதான பார்த்தேன் காலேஜ் பஸ் பார்க்கத்தான் பல் விளக்காம இருப்பீங்களா, அது சரி:-)))
// jaseela said...
ReplyDeletepadikka padikka nalla irukku!oru thinnaiyai wechu athukku ivlo mukkiyathuvam kuduthu azhaga ezhuthi irukkeenga abi appa!seekkiramey thodaravum.....//
பார்ர்ரா பார்ரா, ஜஸீலா அக்கா வந்திருக்காக! நல்லா இருக்கீங்களா, எப்ப போன் பண்ணினாலும் தொடர்பு எல்லைக்கு 30 கி.மீ அப்பால இருப்பதாக ஆபீஸ்ல சொல்றாங்க, முடிஞ்சா போன் பண்ணுங்க!
அப்பாடி, பதிவு நல்லா இருக்குதா? நன்றி நன்றி!!
சூப்பர் திண்ணை அபி அப்பா.
ReplyDeleteஇப்படித் திண்ணையை நேசிப்பவரை இப்போதுதான் பார்க்கிறேன்.
இவ்வளவு விஷயத்தை எங்க வச்சிருந்தீங்க இத்தனை நாளா.
அருமையா இருந்ததும்மா.சத்தமில்லாத அறையைவிட சத்தமிடும் ரோட்டோரத்தில் நானும் நிம்மதியாகத் தூங்கி இருக்கிறேன்.
பள்ளிக்கூடத்தைவிட்டுச் சீக்கிரமாக வீடு வந்ததும் ஏறி உட்காரும் இடமும் திண்ணைதான்:)
பார்ர்ரா பார்ரா, ஜஸீலா அக்கா வந்திருக்காக! நல்லா இருக்கீங்களா, எப்ப போன் பண்ணினாலும் தொடர்பு எல்லைக்கு 30 கி.மீ அப்பால இருப்பதாக ஆபீஸ்ல சொல்றாங்க, முடிஞ்சா போன் பண்ணுங்க!//aaavoonna ellaraiyum akkannu kooppidureengaley!!naan kirukkalgal jazeela illai.:)
ReplyDelete//நமக்கு இப்படி இந்த ஸ்டைல்ல எழுதறது கஷ்ட்டமப்பா//
ReplyDeleteஆனா, படிக்க சுகமா இருக்கு இது.. இப்படியும் நீங்க நல்லா எழுதுவீங்களா.. வெய்ட்டிங் ஃபார் பார்ட் டூ
ஒரு நாள் லேட்டா வந்துட்டேனே!
ReplyDelete//கொஞ்சம் திண்ணையிலே உக்காந்து தேச்சுட்டு போங்க என்ற ஆயில்யனின் அழைப்பு வந்தவுடன் உடனே கொசுவத்தி சுற்றிவிடலாம் என எண்ணிய எனக்கு இரண்டு நாட்களாக அதிகபட்ச ஆணியாக போய்விட்டது.///
ReplyDeleteஆணி உங்களை விட்டபாடு இல்லை போலிருக்கிறது:)
//அபி அப்பா said...
ReplyDeleteநமக்கு இப்படி இந்த ஸ்டைல்ல எழுதறது கஷ்ட்டமப்பா! சும்மா 10 நிமிஷத்திலே என் பாணியிலே கும்மாங்குத்து குத்தி திண்ணை பதிவு போடறேன்! ஆனா இதே பாணியிலே இதன் அடுத்த பாகமும் போட்ட பின்னே!///
வெயிட்டிங்....
\ வல்லிசிம்ஹன் said...
ReplyDeleteசூப்பர் திண்ணை அபி அப்பா.
இப்படித் திண்ணையை நேசிப்பவரை இப்போதுதான் பார்க்கிறேன்.
இவ்வளவு விஷயத்தை எங்க வச்சிருந்தீங்க இத்தனை நாளா.
அருமையா இருந்ததும்மா.சத்தமில்லாத அறையைவிட சத்தமிடும் ரோட்டோரத்தில் நானும் நிம்மதியாகத் தூங்கி இருக்கிறேன்.
பள்ளிக்கூடத்தைவிட்டுச் சீக்கிரமாக வீடு வந்ததும் ஏறி உட்காரும் இடமும் திண்ணைதான்:)\\
வாங்க வல்லிம்மா! உங்க போன் நம்பர் என்கிட்டே இல்லை! எனக்கு போன் பண்ணுங்க!
ஆமா இப்படி சுத்தமா எழுதினா நல்லா இருக்கா??????
அடுத்த பார்ட் வருது நாளைக்கு:-))
ஹய் சின்ன ஜஸீலாக்கா! நீங்க யாருன்னு புரிஞ்சு போச்சு! வேகமா பந்து போடுவாரே அவர் தானே!!!!:-))
ReplyDeleteபு. பட்டியான்! வருகைக்கு நன்றி! அப்ப இது வரை எழுதினது வேஸ்ட்ன்னு சொல்ல வரீங்க:-)))
ReplyDeleteநிஜமா நல்லவரே வருகைக்கு நன்னி நன்னி நன்னி:-)))
ReplyDeleteநடை மாறியது ஏனோ?
ReplyDeleteHello Anna,
ReplyDeleteI am reading your blog for the past 2 months only. Now, I am reading all your older posts. Can you tell me where can I find the part 2 of this post? I am not able to find it.