பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

June 12, 2008

திண்ணை பதிவின் இரண்டாம் பாகம் என்று இதை சொல்ல முடியாது!!! (அல்லது) மிசா!!!

நம்புங்கள் அப்போது எனக்கு வயது பதினொன்று. தூக்கி நிறுத்திய காவலர்களுக்கு உடனே தெரிந்துவிட்டது தாங்கள் தேடி வந்த பட்சி இதுவல்ல என. அப்போதும் கூட என்னிடம் ஏக வசனங்கள், அடிக்காதது மட்டுமே ஒரே குறை. அதற்குள் அம்மா, பாட்டி எல்லோரும் கதவை திறக்க எத்தனித்ததை உணர்ந்தேன். வந்த காவலர்கள் பேசிய மொழியும் எனக்கு பரிட்சயம் இல்லாதது. எல்லோரும் வெளி மாநில காவலர்கள். அப்போது காவல் வண்டியில் பிடிக்கப்பட்டு உள்ளே கோஷமெழுப்பிய புண்ணியவான்கள் என் அம்மா பெயரை சொல்லி எது நடந்தாலும் கதவை திறக்க வேண்டாம் என ஒட்டு மொத்த கூக்குரலில் கூறவே அம்மாவும் கொஞ்சம் பின்வாங்கிய மாதிரி தெரிந்தது. அந்த பின்வாங்கள் என்னவோ ஒரு நிமிடம் தான் நீடித்தது. குபீரென கதவு திறக்கப்பட்டு என் பாட புத்தகங்களை எடுத்து என் அம்மா அந்த காவலர்களிடம் காண்பித்து ஆவேசமாக ஏதேதோ கூறிக்கொண்டே அவிழ்ந்த கூந்தலை முடிந்து கொண்டே அவர்கள் பிடியில் இருந்த என்னை பலம் கொண்ட மட்டும் இழுத்து வீட்டின் உள்ளே வீசி எறிய நான் போய் முற்றத்தில் விழுந்தேன். அம்மாவின் அந்த ஆவேசம் எனக்கு மிக புதியதாக இருந்தது. அந்த காவலர்களுக்கும் அம்மாவின் ஆவேச மொழி புரிந்திருக்க வேண்டும். படிக்கிற பையனடா, பாலகனடா பாவிகளா என அம்மா கூறியவைகள் அவர்களுக்கும் புரிந்திருக்க வேண்டும். போய் விட்டார்கள்.

அடுத்த நாள் முதல் வீட்டில் அப்பா, சித்தப்பா முதல் எல்லோருமே தலைமறைவு, என் வீட்டு கதவு பூட்டப்பட்டது பூட்டப்படது தான்.எந்த நேரத்தில் எது நடக்கும் என யாருக்கும் தெரியாது. மிசா மிசா என ஊரே போர்க்களம் மாதிரி இருந்தது. சிலர் மிசாவை சிலாகித்து பேசினாலும் அதாவது அரசு அலுவலர்கள் சரியான நேரத்துக்கு வரவேண்டும், லஞ்சம் கூடாது இதல்லாம் . ஆனால் அரசை விமர்சித்தால் 'இம்'என்றால் சிறை வாசம் 'ஏன்' என்றால் வனவாசம், இந்திய பெருந்தலைகள் ஜேப்பி உட்பட அனைவரும் சிறையில், கலைஞர் மட்டுமே வெளியே அய்யோ கொடுமையோ கொடுமை. அதை அந்த கொடுமையை அனுபவித்தால் மட்டுமே புரியும். சித்தப்பா எந்த சிறை என தெரியாது. இனும் சொல்லப்போனால் சிறையிலா அல்லது வெளியிலா அல்லது காவலர்கள் அடித்து கொன்று புதைத்து விட்டனரா என எதுவும் தெரியாது. அப்பாவிடம் இருந்து ஒரு துண்டு சீட்டில் எழுதி செய்தி மட்டும் வரும். சில சமயம் ஐந்து ரூபாய் பத்து ரூவாய் என வரும்.ஊர் ஊருக்கு சிலரை மட்டும் கலைஞர் அவரின் கருத்துகளை செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்ல சிறை செல்ல வேண்டாம் என பணித்திருந்த காரணத்தால் அப்பா அலுவலகத்தின் உள்ளேயே இருந்து அங்கேயே குளித்து அங்கேயே தூங்கி வேலைக்கு சென்றுகொண்டும் தொ.மு.ச வை இயக்கி கொண்டும் ஒரு மாதம் இருந்தது தெரிந்தது. உண்மையிலேயே மிசா கொடுமையை உணர வேண்டுமானால் பத்து நாள் சொல்லாமல் கொள்ளாமல் உங்கள் வீட்டை விட்டு வெளியே போய் பாருங்கள். பத்து நாள் வேண்டாம் இருபத்து நாலு மணி நேரம் போது அதை உணர.

(மன்னிக்கவும்.....திண்ணை பற்றி எழுத ஆரம்பித்து வேறு எங்கோ சென்று விட்டது பதிவு.இந்த ஓட்டத்தை நிறுத்த மனமில்லை. அதனால் திண்ணையை படிக்க ஆர்வமாக இருப்பவர்களுக்காக ஒண்றே ஒண்று சொல்லி கொள்கிறேன் "இன்று போய் நாளை வாருங்கள்")

அது போல் சித்தப்பாவுக்கு ஊர் ஊராக சென்று சிறையில் இருப்பவர்கள் வீட்டுக்கு உதவி நிதியாக நூறு ரூபாய் கொடுக்க வேண்டியது. அதிலும் சில சிக்கல்கள் இருந்தன. அனேகமாக எல்லோருக்குமே இரண்டு மனைவிகள் இருந்தனர். (நன்னிலம் நடராசன் கலைஞரிடம் சண்டை போட்டு இரு வீட்டுக்கும் தலா நூறு வாங்கியதாக பின்னால் பொதுகூட்டாங்களில் பேசினார். )

என் வீடோ என் பாட்டி அடிக்கடி சொல்வது போல் "ஒரு குருவி இறை தேடி ஒன்பது குருவி வாய் திறக்கனும்". காலையில் ரவை வாங்கி கஞ்சி வைத்து உப்பு போட்டு குடித்துவிட்டு பள்ளிக்கு போக வேண்டும். போனோம். ஆனால் கொஞ்சமும் கலங்கவில்லை. அம்மா ஒரு தைரியலெட்சுமி. பாட்டி ஒரு வீரலெட்சுமி. போராடும் குணம் எனக்கும் என் தம்பிக்கும் அப்போதே விதைக்கப்பட்டது. கூட படித்த பல சக மாணவர்களின் தந்தையர் மிசாவில் அடைக்கப்பட்டதால் திமுக வின் குலத்தொழிலான சைக்கிள் கம்பனிக்கு துரத்தப்பட்டனர். அந்த விதத்தில் நான் கொடுத்து வைத்தவன். இப்போது இருக்கும் பதிவர்களில் எத்தனை பேர் மிசா காலத்தை நேரில் பார்த்தவர்கள் என என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அதன் கொடுமைகளை எத்தனை பதிவர் அனுபவித்து இருப்பர் என பின்னூட்டத்தில் எழுதுங்கள்.

ஓரிரு மாதங்கள் கழித்து நிலமை கொஞ்சம் கட்டுக்கு வந்தது என சொல்வதை விட அது எங்களுக்கு பழகிவிட்டது என சொல்லலாம். அப்பா முரசொலியை ஏதோ கொக்கேக புத்தகங்கள் மாதிரி முதுகில் சொருகி கொண்டு வந்து பத்து இருவது பேராக என் வீட்டு மாட்டு கொட்டகைக்கு இரவு சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு வர சொல்லி நல்ல ஏற்ற இறக்கத்தோடு (கலைஞர் எந்த இடத்தில் தொண்டையை உயர்த்துவார் எந்த இடத்தில் கனைத்து கொள்வார் என அத்தனை திமுகவினருக்கும் அத்துப்படி) படித்து காட்டுவார். ஆனால் அப்பா படிப்பது நான்குநாட்கள் முந்தின முரசொலியாக இருக்கும்.

அப்படித்தான் ஒரு நாள் தளபதி ஸ்டாலினை உதைக்க வந்த காவலரின் உதையை தாங்கி கொண்ட மேயர் சிட்டிபாபு தன் மூத்திர பையில் வாங்கி கொண்டு சரிந்த செய்தியை படித்த அப்பா கலங்க அந்த ஒட்டு மொத்த மாட்டு கொட்டகையும் அழுதது. அப்பாவை கலைஞரே நேரில் பேசுவது போல பார்த்து பார்த்து எங்கள் மனதில் அப்பா அந்த செய்தியை படிக்கும் போது விம்மியது எங்கள் அத்தனை பேரையும் அழவைத்தது. அப்பா கண்ணாடியை கழட்டி வைத்து விட்டு சொன்னார். "அய்யோ இது நான்கு நாட்கள் முந்தின பேப்பராச்சே. இந்நேரம் என் சிட்டிபாபுவுக்கு என்ன ஆச்சோ"ன்னு சொல்லி அழ...... அப்போது உண்மையிலேயே சிட்டிபாபு இறந்துவிட்டிருந்தார்.

கோசி மணி, கிட்டப்பா, வரத கோபாலகிருஷ்ணன், செங்குட்டுவன், நன்னிலம் நடராசன், திருச்சி சிவா எல்லாரும் திருச்சி மத்திய சிறையில். அனேகமாக யார் யார் எந்தந்த சிறையில் இருக்கின்றனர் என அப்போது தெரிந்து விட்டது. ஆனாலும் தெரியாத ஒரு மர்மம் எப்போது விடுதலை என்பது. குங்கும சிமிழ் என்கிற படத்தில் ஒரு வசனம் வரும். நாளைக்கு சோறு கிடைக்கும் என தெரிந்தால் பசியோடு காத்து இருப்பதில் ஒரு அர்த்தம் இருக்கும். இல்லை உனக்கு ஒரு வாரம் கழித்து தான் சோறு அல்லது உனக்கு ஒரு மாதம் கழித்து தான் சோறு என்பதில் கூட காத்திருப்பதில் ஒரு அர்த்தம் இருக்கும். இல்லாவிடில் உனக்கு இனி வாழ்நாள் முழுக்க சோறு இல்லை என்றாவது கூறிவிட்டால் அதற்கு தக்கவாறு மனதை பக்குவ படுத்தி கொள்ளலாம். ஆனால் அந்த மிசா சிறை வாசம் எந்த வகை தொகைக்கும் அப்பாற்ப்பட்டதாக இருந்தது. அந்த சிறை காவலர்கள் திடீரென ஒரு நாள் எல்லோரிடமும் "உங்களுக்கு நாளை விடுதலை" என சொல்லுவாராம். எல்லோரும் புதிய மனைவியையும் தான் சிறைக்கு வந்த் பின் பிறந்த குழந்தையையும், சாக கிடக்கும் பெற்றோரையும் (இப்படி சொல்லி கொண்டே போகலாம் ஏனனில் எல்லா கேட்டகரியிலும் ஆள் இருந்தது) பார்க்க ஆசையாய் இருக்க அடுத்த நாள் தான் ஏமாற்றப்பட்டது தெரிந்து எப்படி மன உளைச்சளுக்கு ஆளாவார்கள் என அனுபவித்தால் மட்டுமே புரியும்.

ஒரு ஆறு மாதம் ஆனபின் ஒரு மாதிரியாக எல்லோரும் ஸ்திரமாக நன்றாக மிசா மிருகத்தை எதிர்க்க தொடங்கி விட்டோம். அப்போது கலைஞர் மாத்திரம் ஆயிரகணக்கில் திருமணம் நடத்தி வைத்தார். காரணம் அது தான் அப்போது அவருக்கான பிரச்சார மேடையாக இருந்தது. ஒலிபெறுக்கி கிடையாது. வைத்து கொள்ள அனுமதி இல்லை. கூம்பு வடிவ மெகா போன் ஒருவர் பிடித்து கொள்வார். இவர் தொண்டை கிழிய பேச வேண்டும். எதிரே ஆயிரகணக்கில் கூட்டம் இருக்கும். கடைசி வரிசைகாரனுக்கும் அவர் குரல் போய் சேர்ந்தது. தமிழகத்தின் கடைசி எல்லை வரை அவர் பிரச்சாரம் போய் சேர்ந்தது. அவரால் மிசா வரலாறு எழுதப்பட்டது. அந்த கூட்ட முடிவினிலே அவர் எடுத்த ரத்த வாந்திகள் வரலாற்றில் மறைந்து போயின.

மெதுவாக மாட்டு கொட்டகை கூட்டம் திண்ணைக்கு வர தொடங்கியது. கோவை மு.கண்ணப்பன் கலைஞருக்கு காரோட்டி கண்ணப்பனாக மாறியிருந்த முரசொலியை அப்பா படித்து சொல்லிவிட்டு "நான் இன்றைக்கு சொல்கிறேன். இந்த திண்ணையில் சத்தியம் அடித்து சொல்கிறேன், தலைவர் ஆட்சிக்கு வந்தது கண்ணப்பன் தான் போக்கு வரத்து அமைச்சர்". அடித்து சொன்னது என் திண்ணை ஆயிற்றே...பொய்க்குமா என்ன?

சிறையில் மேடைப்பேச்சு கற்று கொடுக்கப்படுவதாகவும், திருச்சி சிவா எல்லோருக்கும் ஆங்கில பாடம் எடுப்பதாகவும், பிரச்சார நாடகங்கள் நடத்தபடுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.அந்த நாள் வந்தது ஆமாம் விடுதலை நாள். அதை பற்றி எழுத வேண்டுமானால் பதிவு போய் கொண்டே இருக்கும்.

இந்த கூத்து அத்தனைக்கும் கலைஞர் மாத்திரம் கைது செய்யப்படவில்லை. அண்ணா சாலையில் போய் துண்டு பிரசுரம் வினியோகம் செய்கிறார். அவரை மட்டும் விட்டுவிட்டு மற்றவர்கள் கைது செய்யபடுகின்றனர்.சமீபத்தில் வடிவேலு சொன்னது போல் (லக்கி கூட அதை எடுத்து காட்டியிருந்தார் அவரது ஒரு பின்னூட்டத்தில்) "அமைச்சரே வரலாறு மிக முக்கியம்" . கலைஞர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால் இந்தியாவின் அந்த ஒரு வருட கருப்பு வரலாறு இருட்டடிக்கப்பட்டு இருந்திருக்கும்.

22 comments:

  1. மிசா பத்தி எனக்கு அவ்வளவா தெரியாது.. இப்போ கொஞ்சம் தெளிவு கிடைக்குது.

    பின்றீங்க.. தொடர்ந்து எழுதுங்க..

    ReplyDelete
  2. Hi, I'm reading your blog for the past 6+ months.
    //அந்த சிறை காவலர்கள் திடீரென ஒரு நாள் எல்லோரிடமும் "உங்களுக்கு நாளை விடுதலை" என சொல்லுவாராம். எல்லோரும் புதிய மனைவியையும் தான் சிறைக்கு வந்த் பின் பிறந்த குழந்தையையும், சாக கிடக்கும் பெற்றோரையும் (இப்படி சொல்லி கொண்டே போகலாம் ஏனனில் எல்லா கேட்டகரியிலும் ஆள் இருந்தது) பார்க்க ஆசையாய் இருக்க அடுத்த நாள் தான் ஏமாற்றப்பட்டது தெரிந்து எப்படி மன உளைச்சளுக்கு ஆளாவார்கள் என அனுபவித்தால் மட்டுமே புரியும்.//
    I don’t have any idea about MISA. But I can understand the pain and trauma faced by the people through your post.

    Good work.

    ReplyDelete
  3. போன பதிவே கொஞ்சம் சீரியசா இருந்தது ..இது முழுக்க சீரியசா இருக்கு.. நான் அப்பறம் வந்து பாக்கறேன்.. :))

    ReplyDelete
  4. கொடுமையாக இருக்கிறதே. பதிந்ததற்கு நன்றி அபி அப்பா.

    ReplyDelete
  5. தமிழ்நாட்டில் இதெல்லாம் நடந்தப்போ நாங்க ராஜஸ்தானில் இருந்தோம்!!! :(((( ரகசியமா பிபிசி, தமிழோசைச் செய்திகளைக் கேட்போம். ஒரே த்ரில்லிங்கா இருக்கும், அதுவே, அதுவும் நாங்க இருந்ததோ மிலிட்டரி கண்டோன்மெண்ட், அங்கே வச்சு, பிபிசி செய்திகளைக் கேட்கிறதுன்னா??? அது ஒரு காலம்!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  6. அண்ணே ரொம்ப ஆவலுடன் படித்தேன்!

    நம்ம ஊர் கலைஞர் பகுத்தறிவு மன்றத்தில் உள்ளே வைத்திருக்கும் படங்களெல்லாம் மிசாவில் இருந்தவர்கள்தான் என்று ஒரு முறை அங்கு சென்றிருந்தப்போது நான் தெரிந்துக்கொண்டேன்!

    ReplyDelete
  7. மிசா ஏற்படுத்திய தாக்கத்தை நேரடியாக அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். நெகிழ்ச்சியாக உள்ளது. இந்திய மக்களாட்சியில் நிகழ்ந்த ஒரு கருப்பு அத்தியாயம் அது. இந்திய ஜனநாயகத்தை வலுவுறச் செய்த நிகழ்வு.

    உங்கள் பதிவு மிசா பற்றி அறிந்தவர்களுக்கே நினைவுகளை மீட்கும்வண்ணம் உள்ளது. எமெர்ஜென்சி என்ற சொல் இன்னும் அதிகம் பேரை சென்றடைந்திருக்கும். தவிர ஒரு வரலாற்று பக்கமோ அல்லது சுட்டியோ இருந்தால் இளையவர்களுக்கு உதவியாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  8. சிவா! புரியாதவங்களுக்காக புரியும்படியான பதிவு இது!!!

    ReplyDelete
  9. பு.பட்டியான்! வாங்க! எப்பவாவதுதான் எனக்கு பொங்கும் அப்ப வாங்கிகிட்டாத்தான் உண்டு:-)))

    ReplyDelete
  10. பு.பட்டியான்! வாங்க! எப்பவாவதுதான் எனக்கு பொங்கும் அப்ப வாங்கிகிட்டாத்தான் உண்டு:-)))

    ReplyDelete
  11. மிஸ்டர் தியாகு! வருகைக்கு நன்றி!உணர்வுகளை பகிர்ந்தமைக்கு நன்றி!!!

    ReplyDelete
  12. முத்துலெஷ்மி! அரசியலும் நமக்கு தேவைதானேப்பா!!!

    ReplyDelete
  13. வல்லியம்மா, கீதாம்மா! மிக்க நன்றி! மிக்க நன்றி! மனதில் பட்டதை சொல்வது தானா நம் பிளாக்! சொல்லிட்டேன் என் பாரம் இன்னும் கூட இருக்கு....கொஞ்சம் கொஞ்சமா சொல்லலாம்.....எப்பவும் சிரிப்பும் கூத்துமா இருக்கும் என் வாழ்க்கையிலே இப்போ கொ ஜ்சம் சீரியசா சிந்திகலாமேன்னு இதல்லாம் ஒரு முயற்சி அத்தனையே!!!!!!

    ReplyDelete
  14. மணியன்! இது நான் சொல்லி உங்களுக்கு தெரியனுமா! ஜாம்பவான்கள் இருக்கின்றனர்!!! சரி தெரிஞ்சுகிட்டா சரீ!!!

    ReplyDelete
  15. நல்ல பதிவுக்கு நன்றி அண்ணே!

    மிசாக்கொடுமைகள் பற்றி யாரும் வலையில் எழுதுவதாக தெரியவில்லை. இப்பதிவில் முதன்முறையாக தொட்டிருக்கிறீர்கள். மிசா குறித்து நீங்கள் கேட்டவை, படித்தவை, அறிந்தவை பற்றியெல்லாம் இனியும் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.

    அன்புடன்
    லக்கி

    ReplyDelete
  16. மிசாவை பத்தி கேள்வி பட்டிருக்கேன். ஆனா இதை எழுத்தில படிக்கும்போது உடம்புல ஒரு நடுக்கம் வருது. நிஜமாவே நீங்க தியாகிதான் அபி அப்பா

    ReplyDelete
  17. இந்த மிசா வந்தப்ப இந்திராவின் ஆட்சிதானே?

    இப்போ அவுங்களோடு கூட்டு இருக்கு போல!!!!

    ReplyDelete
  18. \\ லக்கிலுக் said...
    நல்ல பதிவுக்கு நன்றி அண்ணே!

    மிசாக்கொடுமைகள் பற்றி யாரும் வலையில் எழுதுவதாக தெரியவில்லை. இப்பதிவில் முதன்முறையாக தொட்டிருக்கிறீர்கள். மிசா குறித்து நீங்கள் கேட்டவை, படித்தவை, அறிந்தவை பற்றியெல்லாம் இனியும் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.

    அன்புடன்
    லக்கி

    \\

    லக்கி! எழுத ஆசைதான்! கண்டிப்பாக எழுதுகிறேன்! ஆனால் யார் மனதும் புண்படாமல்!!

    தவிற எனக்கு எத்தனை தான் காங்கிரசோடு கூட்டு என்றாலும் என் தம்பி ஒத்துகொள்ளும் அளவு எனக்கும் என் வயதை மீறிய திமுகவினருக்கும் ஓட்டு போட மனசு வராது. நாங்கள் கூட்டனி தர்மத்துக்கு அப்பாற்பட்டவர்கள்! ஏனனில் நாங்க கஷ்டபட்டவங்கப்பா!!!

    தமிழக நலனுக்காக அவர் வேண்டுமானால் கூட்டு கறின்னு சமைக்கலாம் ஆனால் கல்யாணம் ஆன 21 நாளில் புருஷனை பறி கொடுக்க இருந்த துக்கா அக்கா இன்ரைக்கும் காங்கிரசுக்கு ஓட்டு போடுவார்களா என்பது சந்தேகமே!!!!

    நன்றி லக்கி வருகைக்கு!!

    ReplyDelete
  19. மிசா கொடுமைகள் பற்றி படித்திருக்கிறேன். இன்னும் தங்களுக்கு தெரிந்தவைகளை எழுதுங்களேன்.

    ReplyDelete
  20. first of all i apologise for writing in english but my translator iznt working frm this evening.
    i am very sorry for making fun of ur finishing in the last post. but i didnt expect this turn. this post z extraordinary. rlly gud. i evn read it to my dad(emergency veteran) over phone. he was rlly moved. i hav already heard everything abt emergency and the situation that prevailed during that dark era.
    i understand ur views abt congress. but generally, in life people start forgiving and forgetting. thatz wat z the substance of life and nature. no point in holding a grudge against anybody or anything. just put it this way, do u support indiaz views and stand regarding srilankan issues? do u support the grudge that z still being held against a whole community? it may take time to heal but therez no best medicine than time.

    ReplyDelete
  21. Abi appa, thanks a lot.
    Ennai pondror misa-vai pattri arindhu kolla,perudhavi ungal padhivu.

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))